PDA

View Full Version : நெஞ்சுகுள்ள காதல்

சுகந்தப்ரீதன்
29-10-2007, 05:38 AM
ஒண்ணாம்ப்புல எங்கூட ஒண்ணாபடிச்ச
எங்கத்த மொவள கட்டி புடிச்சி
என்ன கட்டிகிறியாடின்னு கேட்டேன்!
உங்கூட்டுக்கும் எங்கூட்டுக்கும் சண்ட
உன்னநா கட்டிக்க மாட்டண்டா மண்டன்னு
சொல்லி இடிச்சி தள்ளிபுட்டு ஓடிபுட்டா!

அஞ்சுவருசம் கழிச்சி அடுத்தூர்ல
ஆறாம்ப்பு படிக்கையில அங்கொருத்திகிட்ட
உன்ன எனக்கு புடிச்சிருக்குன்னு சொன்னேன்!
உலகமகா குத்தம் செஞ்சுபுட்டதா
'ஓ'ன்னு அழுது ஊரகூட்டி
என்ன ஒதவாங்க வச்சுபுட்டா!

பின்னால பாத்தாம்பு படிக்கிறப்ப
பக்குவமில்லாம பக்கத்து வகுப்பு
பொண்ணுகிட்ட கண்ணால பேசுனேன்!
ஒன்னும் தெரியாத பாப்பாவாட்டம்
என்னபாத்து கண்ணடிக்கிறான் சார்னு
வாத்தியார்ட்ட வசமா மாட்டிவுட்டுட்டா!

அப்புறம் அரும்புமீச அரும்புனப்ப
பக்கதுட்டு பருவ பொண்ணுக்கு
பலவிதமா யோசிச்சு ஒருவிதமா
கொடுத்துட்டேன் ஒருகாதல் கடுதாசி!
வாங்கிட்டு போனவ வழக்கம்போல அவ
அப்பங்கிட்ட ஒப்படைக்க அன்னிக்கு
நடந்த சண்டயில எங்கப்பன் என்ன
எட்டுநாளு வூட்டுகுள்ள வுடல!

அத்தோடசரி இனிஎவளையும் நேசிக்கபுடாதுன்னு
நினைச்சுட்டுதான் கல்லூரிக்கே போனேன்!
அங்கேயும் ஊர்வசி மாதுரிருந்த ஒருத்திய
பாத்துட்டு வேதாளாம் மறுபுடியும் மரமேறிச்சி!
இந்தமுற ஏமாறப்புடாதுன்னு எஞ்சோககத
பூராத்தியும் சொன்னேன் அவகிட்ட?!
எல்லாத்தியும் கேட்டுபுட்டு அய்யோபாவம்
நேத்துதான்டா எனக்கும் தேவந்திரனுக்கும்
நிச்சயமாச்சின்னு சொல்லிட்டு போய்ட்டா!

இதுக்குமேல என்னத்த சொல்ல...?
யாருமே எடுத்துபடிக்காத நூலகத்து
புத்தகமா இன்னைக்கும் இருக்குதுங்க
என் நெஞ்சுகுள்ள காதல்!

அமரன்
29-10-2007, 09:18 AM
சந்தைக்கு வந்த சரக்கு
கிளிகளால் புறக்கணிப்பு.
தவறாகப் போனது கணிப்பு.

உணர்ச்சிகளைச் சொல்ல வார்த்தைகள் இல்லை
உணர்ச்சியால் சொல்லாதது காதலே இல்லை.
காதலை இன்னும் செழிப்பான உணர்ச்சியில்
உச்ச வீச்சில் வெளிப்"படுத்தி" இருக்கலாம்..

நெஞ்சுக்குள் நெருஞ்சியாக காதல்.
இறக்கி வைக்க முடியாமல் காதலன்.

வழக்கமான பாணியில் -எனக்கு
பழக்கமில்லாத பாசையில்
பச்சைக் காதலை பச்சையாக....
மனதில் பதிவதில் பசையாக..

பூமகள்
29-10-2007, 10:14 AM
நம்ம கிராமத்து
மண் வாசனைய... மன்றத்தில்
காதல் மூலம் தூவியது அழகு..!!
வாசம் நுகர வார்த்தை வட்டார வழக்காடல் தெரிந்திருந்தால்
நுகர்வு சுவை கூடும்..!!
நானும் இம்மாதிரி வழக்காடலில் கவி எழுத முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். ஆனாலும் உங்க முயற்சி அருமையோ அருமை.
வாழ்த்துகள் ப்ரீதன்..!!
நெஞ்சில் உறங்கும் காதல்.. விரைவில் தகுந்த இடத்தில் தகுதியானவளிடம் வெளிப்பட வாழ்த்துகள்..!!

அமரன்
29-10-2007, 10:18 AM
வாசம் நுகர வார்த்தை வட்டார வழக்காடல் தெரிந்திருந்தால்
நுகர்வு சுவை கூடும்..!!

அதுக்காக நுகர்வோர் சட்டத்தை கையில் எடுக்காதீங்க.

சுகந்தப்ரீதன்
29-10-2007, 10:35 AM
காதலை இன்னும் செழிப்பான உணர்ச்சியில்
உச்ச வீச்சில் வெளிப்"படுத்தி" இருக்கலாம்..
..
மாறுபட்ட முயற்சி... நீண்டநாள் எண்ணம் வழக்காடல் நடையில் எழுதவேண்டுமென்று... என்னால் இவ்வளவுதான் முடிந்தது அண்ணா.. வீச்சு குறைவாகத்தான் தெரிகிறது எனக்கும்.. முதல் முயற்சி.. அதனால்தானோ என்னவோ.. வாழ்த்தியமைக்கு எனது நன்றிகள்..!

சுகந்தப்ரீதன்
29-10-2007, 10:39 AM
நெஞ்சில் உறங்கும் காதல்.. விரைவில் தகுந்த இடத்தில் தகுதியானவளிடம் வெளிப்பட வாழ்த்துகள்..!!

மிக்க நன்றி சகோதரி... தங்களின் அடுத்த படைப்பே அப்படி அமைய எனது வாழ்த்துக்கள்... நெஞ்சில் உறங்கும் காதலை வாழ்த்தியமைக்கு நன்றி.. இதில் சில உண்மைகளையும் பல பொய்களையும் கலந்தே எழுதியுள்ளேன்...! எது உண்மை எது பொய்யென்று தயவு செய்து கேட்க வேண்டாம்..?:mini023:

பூமகள்
29-10-2007, 10:40 AM
அதுக்காக நுகர்வோர் சட்டத்தை கையில் எடுக்காதீங்க.
நுகர்தலுக்கு சட்டமிட்டது யார் அண்ணா? :confused:
அதைக் கையில் எப்படி எடுப்பது?? :icon_ush::icon_ush:
கொஞ்சம் சொல்லுங்களேன்..!! :icon_rollout:

அமரன்
29-10-2007, 10:43 AM
நுகர்தலுக்கு சட்டமிட்டது யார் அண்ணா? :confused:
அதைக் கையில் எப்படி எடுப்பது?? :icon_ush::icon_ush:
கொஞ்சம் சொல்லுங்களேன்..!! :icon_rollout:
நுகர்தல்=நுகர்வோர்????!!!!:icon_p::icon_p::icon_p:

பூமகள்
29-10-2007, 10:47 AM
இதில் சில உண்மைகளையும் பல பொய்களையும் கலந்தே எழுதியுள்ளேன்...! எது உண்மை எது பொய்யென்று தயவு செய்து கேட்க வேண்டாம்..?:mini023:
ஆஹா..... ப்ரீதன்...
தாங்கள் சில உண்மை என்று சொல்லிவிட்டு பின்பு கேட்க வேண்டாம் என்று கூறிவிட்டு தப்பிக்கலாம் என்று பார்த்தால் அது தான் முடியாது. :icon_b: (தனிமடலில் கட்டாயம் சொல்லுங்க..!! பூவுக்கு சொல்லுவீங்கன்னு நம்பறேன்... ஹீ ஹீ..!! :D:D)

பூமகள்
29-10-2007, 10:50 AM
நுகர்தல்=நுகர்வோர்????!!!!:icon_p::icon_p:

அப்பச்சரி..!! :rolleyes:
நுகர்வோர் சட்டம் பத்தி சொல்லுங்க....அமர் அண்ணா.:icon_b:

சுகந்தப்ரீதன்
29-10-2007, 11:04 AM
ஆஹா..... ப்ரீதன் அண்ணா...
தாங்கள் சில உண்மை என்று சொல்லிவிட்டு பின்பு கேட்க வேண்டாம் என்று கூறிவிட்டு தப்பிக்கலாம் என்று பார்த்தால் அது தான் முடியாது. :icon_b: (தனிமடலில் கட்டாயம் சொல்லுங்க..!! பூவுக்கு சொல்லுவீங்கன்னு நம்பறேன்... ஹீ ஹீ..!! :D:D)
அக்காகிட்ட எல்லாத்தையும் சொல்ல முடியாது அக்கா.. உங்களுக்கு பதில் சொல்லவே தனியா உட்காந்து யோசிக்கனும் போலிருக்கே அக்கா..!

அமரன்
29-10-2007, 11:06 AM
அப்பச்சரி..!! :rolleyes:

நுகர்வோர் சட்டம் பத்தி சொல்லுங்க....அமர் அண்ணா.:icon_b:

பிரீதனுக்கு இம்சை கொடுக்க நான் உடந்தையாக இருக்க விரும்பவில்லை.:D:icon_rollout:

பூமகள்
29-10-2007, 11:08 AM
அக்காகிட்ட எல்லாத்தையும் சொல்ல முடியாது அக்கா.. உங்களுக்கு பதில் சொல்லவே தனியா உட்காந்து யோசிக்கனும் போலிருக்கே அக்கா..!
:waffen093::waffen093::waffen093::waffen093:

சுகந்தப்ரீதன்
29-10-2007, 11:09 AM
பிரீதனுக்கு இம்சை கொடுக்க நான் உடந்தையாக இருக்க விரும்பவில்லை.:D:icon_rollout:
எனக்கு இம்சை ஒன்றும் இல்லை அண்ணா.. என்னை சாட்டி தப்பிக்க வேண்டாம்..கண்ணா..!

பூமகள்
29-10-2007, 11:09 AM
பிரீதனுக்கு இம்சை கொடுக்க நான் உடந்தையாக இருக்க விரும்பவில்லை.:D:icon_rollout:
தப்பிச்சிட்டீங்க.. பொழச்சி போங்க...!! உங்களை பாவம்னு பூவு விட்டுட்டா..!! :rolleyes: :aetsch013: :lachen001:

யவனிகா
29-10-2007, 11:14 AM
சொந்தக் கவிதை சோகக் கவிதையாப் போச்சே சுகந்தா!காதல் புத்தகத்தை பழைய மார்க்கெட்டில எடைக்குப் போட்டுப் பாரு, எக்குத் தப்பா யாராவது எடுத்துப் படித்து காதல் பூ கப்புன்னு மலருதான்னு பாக்கலாம்...காதலை போற்றித் துதித்து உணர்ச்சிகரமாய் வெளிப்படுத்தும் கவிதைகளுக்கு மத்தியில் உனது கவிதை எனக்கு உடன்பாடாகவே உள்ளது.

அமரன்
29-10-2007, 11:30 AM
தம்பி உணமை போட்டு உடைச்சதும் அக்காவுக்கு உற்சாகம் கரைபுரண்டு பாயுது..
ஏற்றுக்கொளக்கூடியதுதான் யவனிகா.
செம்மை செமையானது செழுமையை செமையாக்கலாம் என்பது என்கருத்து.

சுகந்தப்ரீதன்
29-10-2007, 11:31 AM
.காதலை போற்றித் துதித்து உணர்ச்சிகரமாய் வெளிப்படுத்தும் கவிதைகளுக்கு மத்தியில் உனது கவிதை எனக்கு உடன்பாடாகவே உள்ளது.
யக்கா இதெல்லாம் கொஞ்சம் அதிகமா தெரியல உங்களுக்கு... பழைய பஞ்சாங்கமாக்கிட்டீங்களே நம்பள.. அப்புறம் பாராட்டியமைக்கு எனது நன்றிகள்...!

ஷீ-நிசி
31-10-2007, 07:41 AM
எத்தனதபா நூலுவுட்டும்
ஒன் நெஞ்சுகூட்டு
காதல் பட்டம் மட்டும்
பறக்கலியேப்பு...

மனசுக்குள்ளருந்து
மறக்கலியேப்பு!!!

கவலபடாத ராசா..

உனக்காக இனிம ராசகுமாரி பொறக்கபோறது இல்ல....

ஏற்கெனவே பொறந்திருப்பா...
பக்குவமா வளர்ந்திருப்பா...

இப்பவே சொல்றேன்...
உனக்கு என்னோட வாழ்த்துக்கள்!

கவித சூப்பர் சுகந்தா!

கஜினி
31-10-2007, 07:46 AM
உண்மைக் கதை போல இருக்கு.!. பேச்சுவழக்கு கவிதை அருமை சுகு.

சுகந்தப்ரீதன்
01-11-2007, 07:54 AM
ஏற்கெனவே பொறந்திருப்பா...
பக்குவமா வளர்ந்திருப்பா...

இப்பவே சொல்றேன்...
உனக்கு என்னோட வாழ்த்துக்கள்!

கவித சூப்பர் சுகந்தா!
மிக்க நன்றி கவிஞரே... எங்களோட வட்டார வழக்கவிட உங்களோடது கல்க்கலாயிருக்குது கவிஞரே... வாழ்த்துக்கள்..!

சுகந்தப்ரீதன்
01-11-2007, 07:55 AM
உண்மைக் கதை போல இருக்கு.!. பேச்சுவழக்கு கவிதை அருமை சுகு.
மிக்க நன்றி கஜினி கண்ணா...!:lachen001:

வசீகரன்
01-11-2007, 08:07 AM
படிக்கும்போதே இதழோரம் புன்னகை அரும்பிய நகைச்சுவை பாங்கில்
அமைந்த அருமையான கிராமிய மனம் கமழ்ந்த கவி....
நன்றாக இருக்கிறது.... பாராட்டுக்கள்

வசீகரன்

சுகந்தப்ரீதன்
01-11-2007, 10:18 AM
படிக்கும்போதே இதழோரம் புன்னகை அரும்பிய நகைச்சுவை பாங்கில்
அமைந்த அருமையான கிராமிய மனம் கமழ்ந்த கவி....
நன்றாக இருக்கிறது.... பாராட்டுக்கள்

வசீகரன்
மிக்க நன்றி வசிகரா...!

யவனிகா
01-11-2007, 11:29 AM
கவலபடாத ராசா..

உனக்காக இனிம ராசகுமாரி பொறக்கபோறது இல்ல....

ஏற்கெனவே பொறந்திருப்பா...
பக்குவமா வளர்ந்திருப்பா...

எங்க பொறந்தா?எப்பிடி இருப்பா?எப்ப பாப்போம்?அதுதானே ப்ரச்சனை.எங்காவது தேடி கண்டுபுடிச்சா சொல்லுங்க ஷீநிசி ...அப்படியே கிஃப்ட் ரேப் பண்ணி தம்பிக்கி பரிசளிக்கலாம்.

ஷீ-நிசி
01-11-2007, 12:26 PM
எங்க பொறந்தா?எப்பிடி இருப்பா?எப்ப பாப்போம்?அதுதானே ப்ரச்சனை.எங்காவது தேடி கண்டுபுடிச்சா சொல்லுங்க ஷீநிசி ...அப்படியே கிஃப்ட் ரேப் பண்ணி தம்பிக்கி பரிசளிக்கலாம்.

அவங்க அப்பா அம்மா பார்த்து இதாண்டா பொன்னுன்னு சொல்லுவாங்க யவனி!:icon_b:

சுகந்தப்ரீதன்
01-11-2007, 12:26 PM
எங்க பொறந்தா?எப்பிடி இருப்பா?எப்ப பாப்போம்?அதுதானே ப்ரச்சனை.எங்காவது தேடி கண்டுபுடிச்சா சொல்லுங்க ஷீநிசி ...அப்படியே கிஃப்ட் ரேப் பண்ணி தம்பிக்கி பரிசளிக்கலாம்.
யக்கா உன்னதான் இன்னும் கானுமுன்னு நினைச்சிகிட்டு இருந்தேன்.. வந்துட்டீங்களா.. இனி கூட்டணி போட்டு என்னையும் குந்தவைக்கிரது முடிவு பண்ணிட்டீங்க போலிருக்கு... எப்படியோ கிடைச்சா சந்தோசம்தான் எங்களுக்கும்..! சீக்கிரம் கண்டு புடிச்சி கொடுங்க என் தேவதைய என்கிட்ட...!

ஆதவா
06-01-2008, 04:23 AM
ஏதும் நிறைவேறாமல் மணக்குளத்தில் இறக்கும் மனிதர்களின் நெஞ்சினுள் தூளியிட்டு அமர்ந்திருக்கும் இவ்வகை ஞாபகக் குமுறல்கள். கவிதை அமைந்த பாணி, அந்த வழக்குச் சொல்லாடல் ரசிக்க வைக்கிறது என்பதைவிட என்னுள் வெகு எளிதிலும் வேகத்திலும் கவிதையின் மையத்தை பதியவைக்கிறது.. அதற்கு ஒரு சபாஷ்.

பத்தாம் வகுப்பு படிக்கும் போதே மீசை முளைத்துவிட்டது எனக்கு.. உங்களுக்கு கொஞ்சம் தாமசமோ? ஒவ்வொரு முறையும் பெண்களிடம் நீங்கள் கோரிக்கை எழுப்பும் போதெல்லாம் எதிர்ப்பாகவே முடிகிறதா? எனக்கெல்லாம் அவ்விதம் அமையவில்லை. ஒரே ஒரு கோரிக்கை, அது நிராகரிக்கப் பட்டுவிட, பின்னர் தானாக அமர்ந்து சிறகை அடித்தது வேறு ஒரு பறவை. அவ்வளவே! நீங்களோ ஒன்றாம் வகுப்பு முதல் கல்லூரி வரை முயன்றிருக்கிறீர்கள்....

சில சொந்த அனுபவங்கள் கலந்திருப்பதாக பின்னூட்டத்தின் வாயிலாக அறிகிறேன். எல்லாருக்கும் இப்படி ஒரு அனுபவம் நிச்சயம் இருக்கும்..

எல்லாவற்றையும் மீறி "யாருமே எடுத்துப் படிக்காத புத்தகமாக " உருவகித்த உம் நெஞ்சத்துக் காதல் வரிகள் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது... உமது கவிதைகள் கற்பனைகளை அள்ளித் தருவதைக் காட்டிலும் இவ்வளவுதான் என்று தோலுரித்துக் காட்டிவிடுகின்றன. அதிலும் சில உவமைகள் வெகுவாக ரசிக்க வைக்கிறது...

பின்னூட்டங்களில் வீணாராய்ச்சியைத் தவிர்த்திருக்கலாம்.

வாழ்த்துகள்

சுகந்தப்ரீதன்
06-01-2008, 05:09 AM

மிக்க நன்றி ஆதவா... மீண்டும் ஒருமுறை உன் கையால் குட்டுபட்டதில் மகிழ்ச்சி..! நீங்கள் சொல்வதுபோல் பின்னூட்டத்தில் சிலவற்றை தவிர்த்திருக்கலாம்.. இனிவரும் காலங்களில் அப்படி நிகழாமல் பார்த்துக் கொள்கிறேன்.. அப்படியே உங்கள் காதலுக்கும் வாழ்த்து சொல்ல விழைகிறேன்.. வாழ்த்துக்கள் நண்பரே...!

ஆதவா
06-01-2008, 05:17 AM

அக்காதல் கருகிவிட்டது சுகந்தப்ரீதன்... நாங்களாகவே சிதை மூட்டி எரித்துவிட்டோம்..

இதயம்
06-01-2008, 05:22 AM
இது இன்னதென்று அறியத்தொடங்கும் சிறு பிராயம் முதலே பெண்கள் மீதான ஈர்ப்பு ஆண்களுக்கு இருந்து கொண்டே இருக்கிறது. சிறு வயதில் ஏற்படும் அந்த ஈர்ப்பை காதல் என்று சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. விடலைப்பருவத்தில் ஏற்படும் உணர்வை இனக்கவர்ச்சி என்று சொல்லலாம். காதல் என்பதை இரு பாலினரும் தங்கள் இதயத்தில் சொந்தமாக வைத்திருக்கும் சொத்து என்பது போல் நீங்கள் சொல்லியிருப்பது முரண்படுகிறது. இரு மனங்களும், அவரவர்களின் எதிர் பாலின விருப்பும் ஒரு புள்ளியில் சந்திக்கும் மாயாஜாலம் தான் காதல் என்பது என் கணிப்பு.

அந்த வகையில் காதல் இதுவரை இல்லையென்பவர்களை அதற்கான வழியைக்கூட திறந்து வைக்காதவர்கள் என்பேன். வாழ்வின் தேடல் போல் தான் காதலுக்கான தேடலும். உள்ளறையில் இருந்து கொண்டு உள்ளத்தில் காதல் இல்லையென்று சொல்வது காதல் பொருள் புரியாதவர்களின் கருத்து. இதயம் திறந்து, வெளியில் வந்து தேடும் பொழுது, அதே தேடலுடன் இருக்கும் இன்னொரு இதயமும் அங்கு வந்தால் அவர்களின் உணர்வுகள் ஒரு புள்ளியில் சந்திக்கும் வேளை காதலாய் முகிழ்த்து வர்ணஜாலமாய் விரியும்.!

ஆதலால் சுபி.. காதல் கொள்ள வேண்டுமென்றால் காற்றாய் எங்கும் சுற்றித்திரிய வேண்டும். இதயத்தை விசாலமாய் திறந்து வைக்க வேண்டும். எதையும் இரசிக்கும் இரசனை வேண்டும். இன்னும் சில தியாகங்கள் செய்ய தயாராக வேண்டும். இவை எல்லாம் செய்தால் அதற்கு பரிசாய் காதல் நிச்சயம் கிடைக்கும்..!!

இரசனையான பதிவை அளித்த சுபிக்கு என் பாராட்டுக்கள்..!!

சுகந்தப்ரீதன்
06-01-2008, 06:52 AM
ஆதலால் சுபி.. காதல் கொள்ள வேண்டுமென்றால் காற்றாய் எங்கும் சுற்றித்திரிய வேண்டும். இதயத்தை விசாலமாய் திறந்து வைக்க வேண்டும். எதையும் இரசிக்கும் இரசனை வேண்டும். இன்னும் சில தியாகங்கள் செய்ய தயாராக வேண்டும். இவை எல்லாம் செய்தால் அதற்கு பரிசாய் காதல் நிச்சயம் கிடைக்கும்..!!

இரசனையான பதிவை அளித்த சுபிக்கு என் பாராட்டுக்கள்..!!
பாராட்டியமைக்கு மிக்க நன்றி இதயம் அண்ணா..! அருமையான பின்னூட்டம்.. அதில் தங்களின் காதல் பற்றிய பார்வை அற்புதம்.. ஒன்றை பெற ஒன்றை இழந்துதான் ஆகவேண்டும்.. இது இயற்கையின் விதி.. அது காதலுக்கும் பொருந்தும் என்பது என் கருத்து..! இதில் எதை இழந்து எதை பெறுகிறோம் என்பதில்தான் இருக்கிறது காதலின் வெற்றியும் தோல்வியும்..! திருமணத்தில் முடிந்த காதல் மட்டுமே வெற்றி பெற்றதாகவும் மற்றவை தோற்றதாகவும் நாம் உறுதியாக கூறிக்கொள்ள முடியாது... முழுமையை எட்டாமல் முடிந்து போனதாக கூறலாமே தவிர தோற்றதாக தோற்றம் கொள்ளக்கூடாது என்றே நான் நினைக்கிறேன்.. இது என் விவாதம் அல்ல.. என் கருத்து அவ்வளவே அண்ணா..!