PDA

View Full Version : ஏன் அப்டேட் உடனடியாக ஆகுவதில்லை



நேசம்
28-10-2007, 06:51 PM
காலையில் ஒரு குறிப்பிட்ட தளத்தை பார்த்தேன்.ஆனால மாலையில் எனது அறையில் அந்த தளத்தை பார்த்த போது நேற்று உள்ள செய்தி தான் இருந்தது.வேறு கணீணீயில் பார்த்த போது அப்டேட் செய்யப்பட்ட தாக இருந்தது. ஏன் இது மாதிரி நடக்கிறது.நண்பர்களே சொல்லுங்கள்

அன்புரசிகன்
28-10-2007, 07:18 PM
உலாவியை ஒருதடவை refresh செய்து பாருங்கள். சிலவேளை உங்கள் உலாவி work offline நிலையில் இருந்தாலும் அப்படி வரும். அது Internet temp files இலிருந்து load ஆகும். உங்கள் Int.temp கோப்புக்களை நீக்கி விட்டு முயன்று பாருங்கள்.

நேசம்
28-10-2007, 07:34 PM
நன்றி அன்பு அவர்களே

ஆனால் எனது கணிணி ஆன்லைன் தான் உள்ளது.நிங்கள் குறிப்பிடும் கோப்புக்களை எப்படி நிக்க வேண்டும். அது எங்கே உள்ளது

அன்புரசிகன்
28-10-2007, 07:55 PM
உங்களது உலாவி Internet Explorer எனின் Tools>Internet option ல் general tab ல் Temp கோப்புக்களை நீக்கும் தெரிவுகள் இருக்கும்.

praveen
29-10-2007, 05:38 AM
கேள்வி கேட்பவர் சற்று விளக்கத்துடல் கேள்வி கேட்டால் தான், சரியான பதில் பெற இயலும்.

நான் இண்டர்நெட் எக்ஸ்புளோரருக்கும்/ஒபேராவிற்கும் பதில் சொல்லியுள்ளேன். கேள்வி கேட்டவர் பயர்பாக்ஸ் என்று சொல்லாமல் இருக்க வேண்டும். :)

http://i207.photobucket.com/albums/bb170/ashoohsa/pagerefresh.jpg

அமரன்
29-10-2007, 09:42 AM
அய்யா நேசம்.. உங்கள் சந்தேகங்களை கேட்கின்றீர்கள். மகிழ்ச்சியுடன் அன்பர்கள் உதவுகின்றார்கள். சந்தேகம் தீர்க்கப்பட்டதா? பிரச்சினைக்கு தீர்வு எட்டப்பட்டதா? என்பதை சொல்லி அக்கறையுடன் கஷ்டப்பட்டு உதவியவர்கள் உள்ளப்பரிதவிப்பை தீர்க்கலாம் அல்லவா?
உங்கள் புரிதலுக்கும் ஒத்துழைப்புக்கும் நன்றி.

உங்கள் நண்பன்,

நேசம்
29-10-2007, 09:49 AM
அன்பு அவர்கள் சொன்ன மாதிரி செய்து விட்டேன்.ஆனால் நான் சொன்ன தளத்தில் இன்னும் புது செய்தி அப்டேட் செய்யவில்லை. செய்தபிறது சொல்லுகிறேன் அமரன் ஜீ
பிரவின் மற்றும் அன்பு ஆகியோர்க்கு எனது மனபூர்வமான நன்றி

அமரன்
29-10-2007, 09:52 AM
அன்பு அவர்கள் சொன்ன மாதிரி செய்து விட்டேன்.ஆனால் நான் சொன்ன தளத்தில் இன்னும் புது செய்தி அப்டேட் செய்யவில்லை. செய்தபிறது சொல்லுகிறேன் அமரன் ஜீ
பிரவின் மற்றும் அன்பு ஆகியோர்க்கு எனது மனபூர்வமான நன்றி

அட என் முதலெழுத்து உங்களுக்கு எப்படித் தெரிந்தது..நல்லது நடக்க மனப்பூர்வமாக வாழ்த்துகின்றேன். (எது எதுக்கெல்லாம் விவஸ்தையே இல்லாமல் வாழ்த்துறாங்கப்பான்னு யாரோ முணு முணுப்பது கேட்கின்றது)

அன்புரசிகன்
29-10-2007, 10:56 AM
உங்கள் உலாவியின் cookies ஐ நீக்கிவிட்டு முயன்று பாருங்கள். ஆனால் அதற்கும் உங்கள் பிரச்சனைக்கும் என்ன தொடர்பு என்று தெரியவில்லை. உண்மையில் மேற்கூறிய விடைகளுடன் உங்கள் பிரச்சனை தீர்ந்திருக்க வேண்டும்.

எதற்கும் settings ல் Every time visit to the page ஐயும் தெரிவுசெய்துவிட்டு பாருங்கள்.

நேசம்
29-10-2007, 11:32 AM
நன்றி அன்புன்னா
நிங்கள் முதலில் சொன்ன மாதிரி செய்து விட்டேன்.புதிதாக ஏதும் அந்த தளத்தில் அப்டேட் செய்த பிறது எனது கம்ப்யூட்டரில் ஆகுகிறோதா என்று பார்த்து சொல்கிறேன்.அப்புறம் எல்லாம் ஆண்டவன் விட்ட வழி

நேசம்
03-11-2007, 08:02 PM
நண்பர்களே எனக்கு இந்த பிரச்சனை இன்னும் தொடர்கிறது.வேறு இதும் வழியுண்டா..?

praveen
04-11-2007, 02:43 AM
நண்பரே, நீங்கள் ஒரு வரியில் பிரச்சினையை மட்டும் சொல்கிறீர்கள், அதை விரிவாக சொன்னால் தான் சரியான பதில் கொடுக்க இயலும்..
1) உங்கள் OS / Browser இந்த இரண்டின் பதிப்பு எண் என்ன?
2) எந்த தளம் அப்படி அப்டேட் ஆகாமல் போகிறது (பொதுவிலே தர முடியாதென்றால் தனிமடலில் தெரிவியுங்கள்)
3) எனது 5வது பதிவில் கூறியபடி செய்தீர்களா?, வெறுமனே நன்றி என்று மட்டும் போட்டிருந்தீர்கள். (செய்தீர்கள் என்றால் உங்கள் பிரவுசர் இரண்டில் ஒன்று) இல்லை என்றால் உங்களது என்ன பிரவுசர்.

praveen
04-11-2007, 04:07 AM
நன்றி நண்பரே, உங்கள் இயங்கு தளம் விண்டோஸ் 2000 மற்றும் பிரவுசர் இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் என்று தெரிந்து கொண்டேன்..

உங்கள் பிரவுசர் i.e 6 தகுந்த அப்டேட் இல்லாமலிருக்கலாம்.
ஜாவா மற்றும் ப்ளாஸ் அப்டேட் செய்து கொள்ளுங்கள்

internet explorer 6 update
http://www.softwarepatch.com/windows/internet-explorer-update.html

ஜாவாவிற்கு
http://www.softwarepatch.com/windows/sunjava.html
or
http://javadl.sun.com/webapps/download/AutoDL?BundleId=12797

ப்ளாஸிற்கு
http://www.softwarepatch.com/internet/flash.html

shockwave player update
http://www.softwarepatch.com/internet/shockwave.html

நேசம்
04-11-2007, 04:12 AM
நன்றி பிரவிண் அவர்களே.செய்து பார்க்கிறென்.பிறகு உரிமையுடன் என்ன நடந்தது என்று சொல்கிறென்

noorul
04-11-2008, 03:33 PM
விண்டோஸ் xp தமிழில் எங்கே கிடைக்கும்

அன்புரசிகன்
04-11-2008, 05:28 PM
அதற்கு ஒரு ஊக்க மென்பொருள் சேர்க்கவேண்டும் என்று நினைக்கிறேன்.... அது இங்கே (http://www.mediafire.com/?1crdy2lzne4)...

http://sukumar4a.free.fr/ScreenShot001.jpg

http://sukumar4a.free.fr/ScreenShot002.jpg

வெற்றி
05-11-2008, 09:02 AM
அதற்கு ஒரு ஊக்க மென்பொருள் சேர்க்கவேண்டும் என்று நினைக்கிறேன்.... அது இங்கே (http://www.mediafire.com/?1crdy2lzne4)...
[
மிக்க நன்றி ..இப்போது நன்றாக தமிழில் தெரிகிறது...ஆனால் ஒரு சின்ன (பெரிய) சந்தேகம்..பழைய படி எப்படி ஆங்கில மொழியில் மாற்றுவது ? கண்ட்ரோல் பேனில் போய் பார்த்தால் ஒன்றும் புரியவில்லை ....உதவுங்களேன்.....

அன்புரசிகன்
05-11-2008, 10:05 AM
மிக்க நன்றி ..இப்போது நன்றாக தமிழில் தெரிகிறது...ஆனால் ஒரு சின்ன (பெரிய) சந்தேகம்..பழைய படி எப்படி ஆங்கில மொழியில் மாற்றுவது ? கண்ட்ரோல் பேனில் போய் பார்த்தால் ஒன்றும் புரியவில்லை ....உதவுங்களேன்.....

அதை add remove program ல் நீக்க முடியாதா என்று பாருங்கள்... இல்லாவிட்டால் பிரவீன் தான் வரவேண்டும். என்னிடம் தற்சமயம் xp இல்லை. விஸ்டா தான் இருக்கு....

பிரவீன்... உதவி ப்ளீ.................ஸ்... :)

வெற்றி
05-11-2008, 11:11 AM
அதை add remove program ல் நீக்க முடியாதா என்று பாருங்கள்... இல்லாவிட்டால் பிரவீன் தான் வரவேண்டும். என்னிடம் தற்சமயம் xp இல்லை. விஸ்டா தான் இருக்கு....
பிரவீன்... உதவி ப்ளீ.................ஸ்... :)

உங்கள் பதிவு கண்டவுடன் போய் பார்த்தேன்...ஆனால் வேலை ஆகவில்லை
http://www.microsoft.com/genuine/downloads/nonGenuine.aspx?displaylang=en&cCode=IND&Error=8&sGuid=84fdaef8-5c85-47f5-9b5d-1f2a43c33b86&submit=1 இது போல் ஒரு பிழைச்செய்தி தான் வருகிறது...
பிரவீன்... உதவி ப்ளீ.................ஸ்... :)

பின்னர் சேர்த்தது :
பிரச்சனை தீர்ந்தது .....
முதலில் வேறு ஒரு அன் -இண்ஸ்டாரலில் போய் ஃபோர்சபிள் ரிமுவ் கொடுத்தேன்..அதன் பின் நீங்கள் கொடுத்த அந்த தமிழ் XB சாப்ட்வேரை மூண்டும் இயக்கினேன்...அப்போது ரிமூவ் ஆர் ரிப்பேர் என கேட்டது ..நான் ரிமூவ் என கொடுத்தேன்...
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் போய் விட்டது மிக்க நன்றி உங்கள் பதிலுக்கு ....

அன்புரசிகன்
05-11-2008, 05:26 PM
நல்லதொரு பகிர்வு மொ.சாமி

anna
07-11-2008, 04:29 PM
பிரவுசரை ஒரு முறை ரிப்றேஷ் செய்யுங்கள் சரியாகி விடும்