PDA

View Full Version : நிலா..



yaarokartik
27-10-2007, 07:26 PM
நிலா...
குழந்தைகளுக்கு சோறூட்ட
வானத்தில் பொறிக்கப்பட்ட
அப்பளம்.

ஓவியன்
28-10-2007, 03:01 AM
அப்போது குழந்தைகளை ஏமாற்றி சோறூட்டத்தான் நிலா படைக்கப்பட்டதா...??? :rolleyes:


அன்பான கார்த்திக்!!

உங்களைப் பற்றி இங்கே (http://www.tamilmantram.com/vb/forumdisplay.php?f=38) ஒரு சுய அறிமுகம் தரலாமே. :)

அமரன்
28-10-2007, 07:36 AM
அப்போது குழந்தைகளை ஏமாற்றி சோறூட்டத்தான் நிலா படைக்கப்பட்டதா...??? :rolleyes:

அப்போ ஏமாற்ற/ஏமாற முதலாவது பாடம் இதுதானா...


அன்பரே (யாரோ) கார்த்திக்...!
உங்கள் இக்கவிதையை குறுங்கவிதைகள் பகுதிக்கு மாற்றி உள்ளேன்.

ஓவியன்
28-10-2007, 02:08 PM
அப்போ ஏமாற்ற/ஏமாற முதலாவது பாடம் இதுதானா.

ஏம்பா இப்படி என்னை வில்லங்கத்தில் மாட்டி விடுகிறீர்...??
நானே சந்தேகத்தில் தானே கேட்டேன்...!!! :icon_rollout:

சாராகுமார்
28-10-2007, 02:23 PM
கவிதைக்கு வாழ்த்துக்கள்.

நிலா நிலா
ஓடி வா...
சுற்றாமல்
ஓடி வா.

சூரியன்
28-10-2007, 02:32 PM
மூன்று வரியி அழகான கவிதை..
நண்பரே தங்களை பற்றி அறிமுகம் செய்து கொள்ளலாமே..

yaarokartik
28-10-2007, 02:45 PM
அப்போ ஏமாற்ற/ஏமாற முதலாவது பாடம் இதுதானா...


அன்பரே (யாரோ) கார்த்திக்...!
உங்கள் இக்கவிதையை குறுங்கவிதைகள் பகுதிக்கு மாற்றி உள்ளேன்.
மாற்றியமைக்கு நன்றி அமரன் அவர்களே

மாதவர்
28-10-2007, 05:05 PM
எந்த கம்பெனி அப்பளம் சார்

பாரதி
28-10-2007, 05:14 PM
அருமை நண்பரே...! மிக நன்றாக இருக்கிறது. பாராட்டுக்கள்.

அமரன்
28-10-2007, 07:28 PM
கொதிக்கும் எண்ணெயில் போட்ட
அப்பளத்தின் பொருமலாக
நிலாவில் காணப்படும் நிழல்கள்...!:icon_b:

அப்பளம் தருகிறேன் சாப்பிடு என்று
அன்னை கெஞ்சி கொஞ்சி உணவூட்டியதை
கார்த்திக்கின் இக்கவிதை நினைவூட்டியது..:icon_rollout: