PDA

View Full Version : காவல்துறையின் லட்சணமும் நீதித்துறையின்xavier_raja
27-10-2007, 12:17 PM
ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த 12 வயதுச் சிறுமியைக் கடத்திக் கொண்டு போனவனை என்ன செய்யலாம்?

கட்டி வைத்துப் பட்டை எடுக்கலாம். அப்படித்தான் செய்தது தொண்டி நகர போலீஸ்.

சிறுமியைக் கடத்திப் போன கார்மேகத்தை நன்றாகக் கவனித்ததில் அந்தச் சிறுவன், கிருஷ்ணமூர்த்தி, பழனி என்கிற வேறு இரு இளைஞர்களைக் கை காட்ட...

கிருஷ்ணமூர்த்தியை கொத்தாக அள்ளி வந்து விசாரித்த தில் அவரும் பழனியும் அச்சிறுமி யை மாறி மாறி பாலியல் வல்லுறவு கொண்டதாகவும்......பிறகு கதறக் கதற கொலை செய்ததாகவும் ஒப்புக் கொண்டார்.

முட்டிக்கு முட்டி தட்டியதில் சிறுமி சுஜாதாவை உயிரோடு எரித்த 5 லிட்டர் பெட்ரோல் கேனையும், இடத்தையும் அடையாளம் காட்டி ஒப்புதல் வாக்குமூலமும் கொடுக்கிறார் கிருஷ்ணமூர்த்தி. (கொலைகாரப் பயல்களுக்கு எதற்கு ர் மரியாதை? என்று நீங்கள் குமுறுவது காதில் விழுகிறது)

இது நடந்தது 1997ல். ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு. ஆனால் மதுரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு எண்ணி மூன்றே மாதத்தில் ஜாமீனில் வெளியே வந்துவிட்டார் கிருஷ்ணமூர்த்தி.

இதற்கு என்ன சொல்வீர்கள்?

இந்த மாதிரி கொலைகார நாய்களிடம் எல்லாம் ஈவிரக்கம் காட்டக் கூடாது. துபாய் மாதிரி சரக்......என்றுதானே சொல்வீர்கள்?

சரிதான்.

இன்னமும் மதுரை நீதி மன்றத்தில் நடந்து கொண்டிருக் கிறது வழக்கு.

இதற்கு என்ன சொல்வீர்கள்?

கோர்ட்டு...... கேசுன்னு இழுத்துகிட்டுக் கெடக்காம அப்பவே இவனுகளை என்கவுண்ட்டர்ல போட்டுத் தள்ளீ ருக்கணும்... என்று தானே?

ஆனால் 9 ஆண்டுகளுக்குப் பிறகு...... எரித்துக் கொல்லப்பட்ட அதே சுஜாதா தனது கணவர் மற்றும் கைக்குழந்தையோடு நீதி மன்றத்தில் வந்து நின்றால்......?

ஆம். அதுதான் நடந்தது.

போலீசும், நீதித்துறையும் அவமானத்தால் தலை கவிழ்ந்து நின்றது அன்று.

இவள் என் மகள் சுஜாதாவேதான் என்று அப்பா சேவகன் அடையாளம் காட்ட......

இப்போது மரபணு சோதனைக்கு உத்தரவிட்டிருக்கிறார் நீதிபதி.

விசாரணையில் பட்ட ரணங்கள்......

நீதி விசாரணைக்காக விற்ற வீடு......வயல்......

ஆண்டுக்கணக்கில் சுமந்த ஊராரின் அவமானம்......

நமது கேள்வியெல்லாம் ஒன்றே ஒன்றுதான்:

ஒருவேளை......

விசாரணையும் விரைவாக நடந்து தூக்குதண்டனையும் விதிக்கப்பட்டு அதுவும் உடனடி யாக நிறைவேற்றப்பட்டு

அதன் பிறகு சுஜாதா வந்து நின்றிருந்தால்......?

எப்படியோ பள்ளிகளில் செல்போனை இப்போதாவது தடை செய்தது அரசு.

அக்னி
27-10-2007, 12:31 PM
முடிக்க வேண்டிய விசாரணைகள் ஆயிரக்கணக்கில் தூங்க,
தூக்குக்குப் போகவேண்டியவரெல்லாம் நிரூபணமானபின்னரும் வெளித்தங்க,
அவர்களையெல்லாம் கண்டுகொள்ளாத காவல்துறை,
இப்படி சாதாரண பொதுமக்கள், அகப்படும்போது, மூன்றாம்தர சித்திரவதைகளினால், செய்யாத குற்றத்தை ஒப்புக்கொள்ள வைக்கும், செயற்பாடுகள் இனியாவது குறையுமா?
குறையவேண்டும்.

பகிர்தலுக்கு நன்றி...

ஷீ-நிசி
27-10-2007, 12:41 PM
முடிக்க வேண்டிய விசாரணைகள் ஆயிரக்கணக்கில் தூங்க,
தூக்குக்குப் போகவேண்டியவரெல்லாம் நிரூபணமானபின்னரும் வெளித்தங்க,
அவர்களையெல்லாம் கண்டுகொள்ளாத காவல்துறை,
இப்படி சாதாரண பொதுமக்கள், அகப்படும்போது, மூன்றாம்தர சித்திரவதைகளினால், செய்யாத குற்றத்தை ஒப்புக்கொள்ள வைக்கும், செயற்பாடுகள் இனியாவது குறையுமா?குறையவேண்டும்.

பகிர்தலுக்கு நன்றி...


இதற்காகவே ஸ்பெஷல் ஜோக் கூட எங்கேயோ படித்த ஞாபகம்..

ஸ்காட்லாந்து, அமெரிக்கா, இந்தியா மூன்று நாட்டு போலீஸ்காரர்களுக்கும் காட்டில் சிங்கத்தை பிடிக்கும் போட்டி..

ஸ்காட்லாந்து போலீஸ் ஒரு மணி நேரத்தில் பிடித்துவிட்டானாம்.

அமெரிக்கா போலீஸ் 2 மணி நேரத்தில் பிடித்துவிட்டானாம்.

இந்தியா போலீஸ் போனாராம்.. போனாராம், வரவேயில்லை.... ஒரு 6 மணிநேரம் கழித்து வெளியே வந்தாராம். கையில், மண்டையெல்லாம் ரத்தம் வழிந்துகொண்டிருந்த குரங்கொன்றை பிடித்துக்கொண்டு வந்தாராம். இந்தாங்க சிங்கம் என்று சொன்னாராம். அவர்கள் சிரித்துவிட்டு இது குரங்கு என்றார்களாம். சந்தேகம் என்றால் கேட்டுப்பாருங்க என்றாராம். அந்த குரங்கும் ஈனஸ்வரத்தில் பேசமுடியாமல் நான் தான் சிங்கம் என்றதாம்..

நம்ம போலீஸ் யாரு...

(இதன் மூலக்கதை எனக்கு மறந்துபோச்சு.. ஞாபகம் இருந்தவரையில் பகிர்ந்திருக்கிறேன்)

அக்னி
27-10-2007, 12:54 PM
நகைச்சுவையாக இருந்தாலும் உண்மையான நிகழ்வுகளின் பிரதிபலிப்பு என்பதை மறுக்க முடியவில்லையே...
இலங்கையில் பொதுவாக, அரச காவல்துறை, இராணுவம் என்றாலே, கதிகலங்குவது வழமை.
சந்தேகத்தில் கைது செய்தால், அந்த வினாடியிலிருந்து, எவ்வளவு விரைவாக, எம்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு தலையாட்டுகின்றோமோ,
அவ்வளவிற்கு, சித்திரவதைகள் குறையும்.
ஒப்புக்கொண்டால் மட்டும் விட்டுவிடுவார்களா என்றால், அதுவுமில்லை.
உண்மையாக தெரியாதவற்றை எப்படி வெளிப்படுத்துவது?
ஆக எப்படியிருந்தாலும், குற்றுயிரும் குலையுயிருமாய் ஆக்கிவிடுவார்கள்.
மனித உடல்களில் விளையாடி, இரத்தத்தில் குதூக்கலிக்கும் இரத்தக்காட்டேரிகள்...

lolluvathiyar
27-10-2007, 02:29 PM
முதலில் சட்டமே தவறாக இருகிறது.
பாலிய வரதட்சனை குற்றசாட்டு இரண்டுமே விசாரிக்காமல் கைது செய்யும் வகையில் இருகிறது.
99 சதவீத பாலிய வரதட்சனை குற்றங்கள் புகார் செய்ய படுவதில்லை.
புகார் செய்யபட்ட பாலிய வரதட்சனை குற்றங்களில் 99 சதவீதம் போலியானவை.

நேசம்
27-10-2007, 02:36 PM
இந்த வழக்கு மட்டுமில்லை. இது போன்று எத்தனையோ வழக்குகள் காவல்துறையினால் பொய்யாக புனையப்பட்டுள்ளது.தகுந்த சாட்சிகள் இருக்கணும். அதே சமயம் விரைவாக நடத்தி வழக்குகள் முடிக்கப்படவேண்டும்

சூரியன்
27-10-2007, 02:49 PM
இது போல் என்னற்ற வழக்குகள் நீதிமன்றாத்தில் தேங்கியிருக்கின்றன..
அதெல்லாம் எப்போழுது முடிவிக்கு வருமோ?

ஜெயாஸ்தா
27-10-2007, 03:08 PM
ஓஹோ.... இத மாதிரி வேறு யாரும் பாதிக்கப்பட்டுவிடக்கூடாதுன்னுதான் ஒவ்வொரு கேசையும் இப்படி பல வருடங்களாக இழுத்தடித்து நடத்துகிறார்கள்...!

எங்கள் வீட்டு
மதில்சுவர் பிரச்சனை...!
நீதிமன்றத்தில்
வழக்கு தொடர்ந்தார்
என் கொள்ளுத்தாத்தா...!
ஆண்டுகள் பல கழிந்தன...
இப்போது வாதியும் உயிரோடில்லை...
பிரதிவாதியும் உயிரோடில்லை....
வழக்கு மட்டும் இன்னும்
சாகாமல்....!

அன்புரசிகன்
27-10-2007, 04:12 PM
இதைத்தான் அரச பயங்கரவாதம் என்பர். இதுபோல்பல உதாரணங்கள் தமிழீப்பகுதியில் நடந்தேறிக்கொண்டிருக்கிறது....

மணிகட்டின மாடுகள்... தட்டிக்கேட்பது சற்றுக்கடினமே......