PDA

View Full Version : இதயத்தின் விசும்பல்கள்



இனியவள்
26-10-2007, 07:28 PM
http://img508.imageshack.us/img508/8331/180628j6vhi4lz6pckfcptocc3.jpg

மணலிலே வரைந்திட்ட ஓவியம்
காற்றாலே கலைவதைப் போல்
கலைந்து போனது கனவுகள்
நீயும் நிழலாய் போனதால்....

தரையை முத்தமிட மீண்டும் மீண்டும்
அலைகள் வருவதைப்போல் - என்
அன்பைப் பெற சுற்றிச் சுற்றி
நீ வந்த காலங்கள்
கரைந்தோடிப் போகின்றது
இதழ் நனைக்கும் கண்ணீரிலே.....

இதயத்தின் விசும்பல்கள்
உயிர் வரை சென்று
உயிர் தொலைத்து வருகின்றது...

மணித்தியாலங்களின் நிமிடங்கள்
கரைந்தோடிச் செல்ல -
நிமிடங்களில் கரைந்தோடுகின்றது
நிஜங்களோடு கலந்தோடும் நினைவுகள்...

ஓவியன்
27-10-2007, 02:50 AM
உயிரைத் தொட்டு
தாலாட்ட வேண்டிய
காதல்,
விசும்பல்களாகி
உயிரைத் துளைத்து
உயிரைத் தொலைத்து
வருவதும் காதலின்
கொடுமை தானோ......?

உயிர் தருவதும்
உயிர் கொல்வதுமென
இரண்டும் செய்யத்
தெரிந்த காதலை
அணைப்பதா இல்லை
அறுப்பதா......?

ஓ காதல் உயிரோடு
அணைத்து விட்டுத்தானே
உயிரை ஊதி
அணைக்கிறது.....???

ஆனால் எல்லாவற்றுக்கும்
ஒரே மருந்து "காலம்"
அது ஆற்றும் காயங்களை
கவலை வேண்டாம் தோழி!

யவனிகா
27-10-2007, 04:39 AM
நல்ல கவலை தோழி, காதலின் காயத்தை கண்ணீர்த்துளிகள் ஆற்றுவதில்லை, அவை பெட்ரோல் துளிகளாய் நெருப்பை அதிகமாய்த்தான் ஆக்கும், காயங்களை காலத்தின் கையில் விட்டு விடுவது நல்லது. வாழ்த்துக்கள்.

சுகந்தப்ரீதன்
27-10-2007, 08:04 AM
சுட்டும்விழி சுடரென்று
சுற்றி சுற்றி வந்ததும்
நீர்சொட்டும் விழியோடு
விட்டுவிட்டு சென்றதும்
நெஞ்சம் வலிக்கும்
நிகழ்வுகள்தான் தோழி!

காலங்கள் மாறும்
காயங்களும் ஆறும்
நின் விசும்பல்களின்
நிகழ்தகவுகள் நாளை
நிகழாதவைகள் ஆகும்!

நீண்ட நாளைக்கு பிறகு உங்களின் கவிதையை கண்டதில் மிக்க மகிழ்ச்சி தோழி.. தொடர்ந்து எழுதுங்கள் துக்கங்கள் குறையும்.. வாழ்த்துக்கள்..!

அக்னி
27-10-2007, 01:11 PM
மணல் ஓவியத்தை
தென்றல் கலைத்தபோது
திட்டினேன்...
கடலலை வந்து முத்தமிட
காத்திருந்தேன்...

வந்த கடலலை முத்தமிட்டது...
வந்த வேகத்திலேயே
கவர்ந்து சென்றுவிட்டது....
கலைந்தது..,
நான் வரைந்த மணலோவியமும்..,
நான் கொண்ட மனவோவியமும்...

கவரப்பட்ட போதிலும்
கரையவில்லை...
கடற்கரை மணலும்..,
என் மன நினைவும்...

பாராட்டுக்கள் இனியவள்...
மற்றும் ஓவியன், சுகந்தப்ரீதன் அவர்களுக்கும்...

ஜெயாஸ்தா
27-10-2007, 03:15 PM
இதயத்தின் விசும்பல்கள்
உயிர் வரை சென்று
உயிர் தொலைத்து வருகின்றது...


காதல்வலியை நன்றாக உணர்த்தியுள்ளீர்கள். கவிதையை மனதிற்கு உணர்த்தி உருக வைத்த கனமான வரிகள் இவை. (பரிசாக பத்து இணையகாசுகள்....!)

சூரியன்
27-10-2007, 03:55 PM
கவிதை நல்ல கருத்தை தெரிவிக்கிறது.
படத்துடன் கவிதையும் அருமை..
வாழ்த்துக்கள் இனியவள் அக்கா..

அமரன்
28-10-2007, 08:17 PM
மணலோவியத்தில் காற்றுக்கு காதல்.
காலோவியத்தில் கடலலைக்கு காதல்.
மறைத்தாலும் அணைத்தாலும்
மறுபடியும் மறுபடியும் மாறியும் மாறாமலும்..

களங்கள் மாறலாம்.
காதல் மாறுவதில்லை.
தொடருங்கள் இனியவள்..