PDA

View Full Version : அக்கரை அக்கறை...!



அமரன்
26-10-2007, 05:35 PM
அக்கரை வயல் அன்னத்துக்கு
இக்கரை தோகை மயிலிடமிருந்து
அக்கறையில் ஓர் கடிதம்...!

உச்சக்கட்ட பாதுகாப்புடன்
மனைக் கிணறுகள் பல உங்கே....!
எச்சம்தொட்ட பாதுகைபோல்
சுனை ஊற்றுகள் சில இங்கே ..!

பயிர்களுக்கு நடுவில்
உயிர்க்கும் களைகள் உங்கே..!
பசுமை முகடுகளில்
பாசிகளும் படர்ந்துள்ளன இங்கே...!

மலர்ந்து களிக்க
திரைகள் பலவுண்டு உங்கே...!
குளிர்ச்சியில் குளிக்க
தடையாக பனிப்புகார் இங்கே...!

மயில்களும் கிளிகளும்
கொஞ்சிகுலாவும் மலைகளில்
கரடிகளும் அரிகளும்
வஞ்சகத்துடன் உலவுகின்றன...!

புலிகளுக்கும் கிலிகிளப்பும்
விதிகள் உண்டு -அவை
பாய்ச்சலுக்கு முட்டான
தடைகளை தாண்டுவதுமுண்டு....!

ஏறுவோரை தோற்கடிக்கும்
மண்சரிவுகள் மட்டுமல்ல
ஆறுகளை தோற்றுவிக்கும்
அருவிகளும் உள்ளதிங்கே.....!

கரை கட்டிபாயும்
ஆற்றின் பெறுதி கனதியன்றோ
அணையின் அணைப்பை
தடங்கலாக எண்ணலாமோ...!

இக்கரைப் பச்சையில்
நாட்டம் கொள்வதேனோ.
அக்கரைப் பிறப்பின்
வாட்டம் கொல்லல் நலமே...!

ஓவியன்
26-10-2007, 06:48 PM
புலத்திலிருந்து களத்திற்கு ஒரு கவிதை....

களத்தின் பெருமை
புலத்திலுள்ளவனுக்கு
கொஞ்சம் அதிகமாகவே
தெரியும், புரியும்...
அந்த தெரிதலும் புரிதலும்
தெளிவான வரிகளாக......

பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அமரா...

சுகந்தப்ரீதன்
28-10-2007, 04:22 AM
எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை...! உணர்வு பூர்வமாக படைத்திருக்கிறீர்கள் இந்த கவிதையை... வாழ்த்துக்கள் அமர் அண்ணா..!

அமரன்
29-10-2007, 11:00 AM
இக்கரைத் தோகை மயிலை
பல்லாண்டுக்கு ஒரு முறை
அக்கரை சென்று பருகி வரும்
இக்கரை ஒட்டகத்துடன்
பொருத்திப்பார்த்து கருத்திட்டமைக்கு
நன்றி நண்பர்களே.....!

சாம்பவி
29-10-2007, 11:33 AM
இக்கரைத் தோகை மயிலை
பல்லாண்டுக்கு ஒரு முறை
அக்கரை சென்று பருகி வரும்
இக்கரை ஒட்டகத்துடன்
பொருத்திப்பார்த்து கருத்திட்டமைக்கு
நன்றி நண்பர்களே.....!

கரை இடிக்கிறதே..... !!! :confused:
பழுது பார்த்தல் நலமோ... ! :rolleyes:

யவனிகா
29-10-2007, 11:47 AM
இரண்டு முறை படித்த பின் தான் புரிந்தது...அக்கரை பச்சையில் ஆசை கொள்வது இயல்புதானே...அக்கரை இன்னும் பச்சையாகத் தெரிவதால் தான் வாழ்க்கையில் இன்னும் எதோ எச்சமுள்ளது என்று நினைக்கின்றனர் இரு கரை உள்ளோரும்...அக்கரைப் பச்சையைப் பற்றி அக்கறை கொண்டமையோடு,அக்கறையாய் அழகுத்தமிழில் கவி படைத்தமைக்கு வாழ்த்துக்கள்.

அமரன்
29-10-2007, 11:48 AM
கரை இடிக்கிறதே..... !!! :confused:
பழுது பார்த்தல் நலமோ... ! :rolleyes:

இக்கழுதை (ஹி..ஹி..நான் தானுங்க)
ரொம்பக் கெட்டுவிட்டது.
அதுதான் முட்டித் தள்ளுகிறது போலும்...

அவசரத்தில் அள்ளித்தெளித்தது
அலங்கோலமாக அமைந்துவிட்டது..
இடிக்கும் இடத்தை இடித்துரைக்கும்போது
அ(த)டித்து காட்டினால்தான்
இந்த மரமண்டைக்கு புரியும்..!

மன்னிக்கவும்....
அவசர அழைப்பு
அதனால் தொடரமுடியவில்லை..
ஓரளவு தெளிவாகி(!) மாற்றியுள்ளேன்.

இக்கரைத் தோகை மயிலை
பல்லாண்டுக்கு ஒரு முறை
அக்கரை சென்று அன்புப்பானம் பருகி
தாகம் தணிக்கும் உயிரியாக நினைத்து
பொருத்திப்பார்த்து கருத்திட்டமைக்கு
நன்றி நண்பர்களே.....!

ஷீ-நிசி
31-10-2007, 07:35 AM
முதல் மூன்று வரிகளும் டாப்...

அது மேலே இருப்பதால் அல்ல....
அர்த்தம் பொதிந்து இருப்பதால்...

உங்கே என்றால் என்ன அர்த்தம் அமரன்?

அக்கரையிலிருந்து, அக்கறையாய், இக்கரையிலிருப்பவர்களுக்கு எழுதிய கவிதை அழகுதான்....

அமரன்
31-10-2007, 07:40 AM
உங்கே என்பது உவ்விடம் என்பதன் பேச்சு வழக்கு என்று நினைத்து இருந்தேன். ஐரோப்பிய தமிழர் கல்வி மேம்பாட்டுப்பேரவை தமிழ் தெரியாத தமிழ்ச் சிறாருக்காக வெளியிட்ட தமிழ் நூலில் உங்கே என்னும் பதம் இருந்தது கண்டு கவிதையில் பயன்படுத்தினேன்.

யவனிகா, ஷீ இருவரும் தந்த முத்தான ஊக்கத்துக்கு நன்றி.