PDA

View Full Version : உங்கள் கணினி இயங்கு தளத்தை தமிழில் மாற்ற



ஷீ-நிசி
26-10-2007, 04:05 PM
உங்கள் கணினி இயங்கு தளத்தை தமிழில் மாற்ற

http://www.friendsbuster.com/tamilxp/

உதவிக்கு: j.ramanan82@gmail.com

http://www.friendsbuster.com/tamilxp/printscreen/startmenu.jpg

http://www.friendsbuster.com/tamilxp/printscreen/mycomputer.jpg

http://www.friendsbuster.com/tamilxp/printscreen/controlpanel.jpg

http://www.friendsbuster.com/tamilxp/printscreen/rightClick.jpg

http://www.friendsbuster.com/tamilxp/printscreen/notepad.jpg

சூரியன்
26-10-2007, 04:07 PM
நல்ல பயனுள்ள மென்பொருள் நண்பரே.
சொந்த கணினி வைத்திருப்பவர்களுக்கு இது ஒரு பொக்கிசம்..

அன்புரசிகன்
26-10-2007, 04:12 PM
நல்ல விடையம். ஆனால் சில காலத்திற்கு பிரச்சனை வரலாம். வழமையான கட்டளைகளை பார்த்துப்பழகியதற்கு இது சற்று கடினம் ஏற்படலாம்...

பகிர்ந்துகொண்ட நிஷிக்கு நன்றிகள்.

ஷீ-நிசி
26-10-2007, 04:17 PM
நானும் உபயோகித்தேன்... ரொம்ப அட்டகாசமாக்கீதே...

என்ன கொடுமை சார்.. தமிழ் புரியவே மாட்டுது...

control panel க்கு கட்டுபாட்டு அறை... கொஞ்ச நேரம் குழம்பித்தான் போயிட்டேன். :)

leomohan
26-10-2007, 04:25 PM
நான் தமிழில் XPயும் தமிழில் Microsoft Office இன் இடைமுகமும் பயன்படுத்தி வந்தேன்.

அருமையான அனுபவம்.

ஆனால் பிரச்சனை என்னவென்றால் நம்முடயை மின்னஞ்சல் செல்லும் இடமெல்லாம் தமிழில் தேதி, நேரம், அனுப்புனர் போன்றவை வந்து பெறுபவர்களுக்கு பிரச்சனை ஏற்படுத்தி விடுகின்றன.

காரணம் அவர்கள் தமிழ் லதா யூனிகோட் எழுத்துரு அமைத்திராவிட்டால் அவர்களுக்கு தமிழ் எழுத்துக்கள் ?????? தெரிகின்றன.

ஓவியன்
26-10-2007, 04:30 PM
சூப்பராகீது நைனா...!!

யாரும் நம்ம கம்பியூட்டரை இஸ்துகினு போனா கொளம்பிடுவான்...!!! :D:D:D

பாரதி
26-10-2007, 04:47 PM
நல்ல தகவல் ஷீ−நிசி. பகிர்ந்தமைக்கு மிகவும் நன்றி.
இதே போன்ற விபரத்தை சகோ.முத்து சில வருடங்களுக்கு முன்னர் நமது மன்றத்தில் பகிர்ந்திருந்தார். நானும் உபயோகித்தேன். கோப்பின் பெயர்களை தமிழில் வைத்திருந்தேன். கணினியில் பழுது ஏற்பட்ட போது மீளவும் எக்ஸ்−பியை நிறுவிய போது, கோப்புகளை மீட்கும் போது சிக்கல் ஏற்பட்டது! மற்றபடி அனைவரும் கணினியைக் கையாள உதவும்.

மனோஜ்
26-10-2007, 05:01 PM
நன்றி ஷி அருமையாக இருக்கி்றது

yaarokartik
27-10-2007, 06:47 PM
தகவலுக்கு நன்றி.... பயனுள்ள விடயம்...

இதை விஸ்டாவிற்கு உபயோகப்படுதலாமா

ஷீ-நிசி
28-10-2007, 02:31 AM
தகவலுக்கு நன்றி.... பயனுள்ள விடயம்...

இதை விஸ்டாவிற்கு உபயோகப்படுதலாமா

இது வின் xp க்காக மட்டும்தான் நண்பரே!;)

மாதவர்
28-10-2007, 11:20 AM
நல்ல முயற்சி

suraj
30-10-2007, 02:55 PM
நான் தமிழ் XP -ன் சந்தாதாரர் இப்போது.

சிறு சந்தேகம்:
"இயக்கமற்ற சூழல்" எனும் ஒரு பிராசஸ் தமிழ்-XP போட்ட பிறகு ஓடுகிறது. இது எனக்கு மட்டுமா..
அல்லது
இது வேறு பிரச்சனையா?

http://i83.photobucket.com/albums/j313/suraj_pic/tamilmantram.jpg

நன்றி

ஷீ-நிசி
30-10-2007, 02:59 PM
நான் தமிழ் XP -ன் சந்தாதாரர் இப்போது.

சிறு சந்தேகம்:
"இயக்கமற்ற சூழல்" எனும் ஒரு பிராசஸ் தமிழ்-XP போட்ட பிறகு ஓடுகிறது. இது எனக்கு மட்டுமா..
அல்லது
இது வேறு பிரச்சனையா?

http://i83.photobucket.com/albums/j313/suraj_pic/tamilmantram.jpg

நன்றி

உதவிக்கு: j.ramanan82@gmail.com

இவருக்கு மெயில் அனுப்புங்க..

praveen
30-10-2007, 03:08 PM
இதற்கு எதற்கு ஒருவருக்கு மெயில் அனுப்பி கேட்க வேண்டும். system Idle Process என்பது எல்லா கம்ப்யூட்டரிலும் இருக்கும் ஒன்று தான், அந்த ப்ராசஸின் சிபியூ எடுத்துக்கொள்ளும் அளவை வைத்து சிஸ்டம் எவ்வளவு தூரம் ஐடிலாக உள்ளது என்று தெரிந்து சில புரோகிராம்கள்(தானியங்கி பேக்கப், இண்டெக்ஸ், கூகிள் டெஸ்க்டாப் சேர்ச் இண்டெக்ஸ் இப்படி இன்னும் சில ) இயங்கும்.

அந்த ப்ராசசை end task கொடுக்கவும் இயலாது. அது விண்டோஸில் அடிப்படை கூறு

ஷீ-நிசி
30-10-2007, 03:14 PM
இதற்கு எதற்கு ஒருவருக்கு மெயில் அனுப்பி கேட்க வேண்டும். system Idle Process என்பது எல்லா கம்ப்யூட்டரிலும் இருக்கும் ஒன்று தான், அந்த ப்ராசஸின் சிபியூ எடுத்துக்கொள்ளும் அளவை வைத்து சிஸ்டம் எவ்வளவு தூரம் ஐடிலாக உள்ளது என்று தெரிந்து சில புரோகிராம்கள்(தானியங்கி பேக்கப், இண்டெக்ஸ், கூகிள் டெஸ்க்டாப் சேர்ச் இண்டெக்ஸ் இப்படி இன்னும் சில ) இயங்கும்.

அந்த ப்ராசசை end task கொடுக்கவும் இயலாது. அது விண்டோஸில் அடிப்படை கூறு

நன்றி ப்ரவீன்...

ஒருவேளை நீங்க சொல்லலைன்னா, அந்த நபருக்கு மெயில் அனுப்பி இந்த விஷயத்த தெரிஞ்சிக்கலாம்ல.. அதுக்குத்தான் மெயில் அனுப்பி கேட்க சொன்னது.

நன்றி!

praveen
30-10-2007, 03:18 PM
நன்றி நண்பரே, மெயில் கொடுத்து கேட்டால் அவர் மட்டுமே அதை அறிவாரே, பொதுவிலே இதை படிக்கும் மற்றவரும் அறிய வேண்டுமே என்று தான் அப்படி ஒரு வார்த்தை பதிந்தேன். மற்றபடி ஏதும் இல்லை.

உங்கள் தகவலுக்கும் நன்றி.

மீனாகுமார்
31-10-2007, 11:06 AM
மிகவும் அத்தியாவசியமான தேவைக்கு உதவுகிறது நண்பரே... மிக்க நன்றி....

suraj
31-10-2007, 02:04 PM
அப்படியா சங்கதி.

பிரவீன் அண்ணே.. ஏன் தமிழ் XP போடுவதற்கு முன் இப்பிரச்சனையில்லை.

நன்றி

மீனாகுமார்
31-10-2007, 04:47 PM
அப்படியா சங்கதி.

பிரவீன் அண்ணே.. ஏன் தமிழ் XP போடுவதற்கு முன் இப்பிரச்சனையில்லை.

நன்றி

இது ஒரு பிரச்சனையில்லை தோழரே. சாதாரண இயக்கத்தில் இருப்பது தான். ஆங்கிலத்தில் இது System Idle Process என்று ஓடிக்கொண்டிருக்கும். CPU வில் வேறு வேலையில்லாத போது இந்த திரிதான் ஒடிக்கொண்டிருக்கும். மற்றபடி இதனால் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை.

suraj
01-11-2007, 06:37 AM
அது சரி.. நாம் மீண்டும் சந்திப்ப்ப்போம் ;)