PDA

View Full Version : தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் உதவிதங்கவேல்
26-10-2007, 03:03 PM
காலைபொழுது. என் மனைவி ஏங்க தண்ணீர் இல்லைங்க என்று தூங்கி கொண்டு இருந்த என்னை எழுப்பி சொன்னார்கள். வீட்டு ஓனரிடம் கேட்டேன். சார் போர் கெட்டு விட்டது என்றார். சரி மாநகராட்சி தண்ணீர் என்னாச்சு என்றேன். பதினைந்து நாட்களுக்கு ஒரு முறைதான் வருகின்றது என்றார் அவர்.

பையன் பள்ளிக்கு செல்ல வேண்டும். வீட்டுப் பயன்பாட்டுக்கு தண்ணீர் வேண்டும். மனைவி கையை பிசைந்து கொண்டு இருந்தார். அவருக்கு ஒரே டென்சன். கோவையில் தண்ணீர் இன்றி ஒரு நிமிடம் கூட இருக்க முடியாது. என்ன செய்வது ? யோசித்து விட்டு,

இணையத்தை இணைத்து, தமிழ்நாடு தண்ணீர் நிலையத்துக்கு ஒரு ஆன்லைன் கம்ப்ளைன்ட் பதிவு செய்தேன். அப்போது மணி காலை 7.40.

தொகுதி பிரசிடென் ட் அவர்களுக்கு போன் போட்டு ஏரியா கவுன்சிலர் தொலைபேசி வாங்கி வீட்டு ஓனரை பேச வைத்தேன். மாலையில் தான் தண்ணீர் வரும் என்று கவுன்சிலர் சொன்னதாக இவர் சொன்னார். அப்போது மணி 7.50.

அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்து, மாண்புமிகு உள்ளாட்சிதுறை அமைச்சர் உயர்திரு மு.க.ஸ்டாலின் அவர்களின் வீட்டுக்கு பேசினேன். விபரம் கேட்டார்கள். சொன்னேன். சார் ஒரு கம்ப்ளெயின்ட் அனுப்பி வையுங்கள் என்றார்கள். முகவரி தெரியுமா என்று கேட்டு அன்பாக பேசினார்கள். நன்றி என்று சொல்லி விட்டு இணைப்பை துண்டித்தேன். அப்போது மணி 8.00.

சிறிது நேரத்தில் ஏரியா கவுன்சிலரின் தொலைபேசி அழைப்பு வர வீட்டு ஓனரின் மனைவி அவரிடம் பேசினார். பேசி முடித்ததும் தண்ணீர் வந்தது.
தண்ணீர் வந்தது சரியாக 8.10க்கு.

குளியல் அறையில் தண்ணீரை உடம்பின் மீது கொட்டியபோது மனது நெகிழ்ந்து தளபதி அவர்களின் மீது சொல்லொண்ணா பிரியம் பொங்கியது.
ஒரு சாதாரண குடிமகன் ஒருவனின் குறையினை கேட்டு அதை அரை மணி நேரத்துக்குள் தீர்த்து வைத்த தளபதியும், ஏரியா கவுன்சிலரையும் எண்ணி மகிழ்ந்தேன்.

அரை மணி நேரத்தில் எனது பிரச்சனையினை தீர்த்து, மகிழ வைத்த,
ஏரியா கவுன்சிலர் அவர்களுக்கும், மாண்புமிகு உள்ளாட்சித்துறை அமைச்சர் அவர்களும் எனது உள்ளம் கனிந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன். தளபதியினை உலகுக்கு தந்த தமிழ் தாத்தா, மாண்புமிகு தமிழக முதல்வர், தமிழின் தலைவர், தமிழனின் தலைவர் கலைஞர் அவர்களுக்கும் எனது உள்ளம் நிறைந்த நன்றியினை சமர்ப்பிக்கின்றேன்.


ஆகவே நண்பர்களே, சரியான முறையில் சரியானவரை அணுகினால் எல்லாப் பிரச்சனைக்கும் தீர்வு கிடைக்கும்.

ஜெயாஸ்தா
26-10-2007, 03:41 PM
உண்மையா தங்கவேல் நம்பவே முடியல....! இப்படி எல்லோரும் உடனுக்குடன் குறைகள் தீர்க்கப்பட்டால் மிகுந்த சந்தோசம். ஜனநாயகத்தின் வெற்றியும் கூட அதுதான்.

நேசம்
26-10-2007, 03:58 PM
போங்க முதலவன் தோத்து போச்சு.

உடனுக்குடன் நடவடிக்கை எடுத்த மு.க.ஸ்டாலின் மேலும் பணி சிறக்க
வாழ்த்துக்கிறேன்

ஓவியன்
26-10-2007, 06:52 PM
உடனுக்குடன் குறை தீர்க்கப் பட்டது கண்டு மெத்த மகிழ்ச்சி!, இந்த நிலமை தொடரட்டும் மக்கள் குறைகள் நீங்கட்டும்.

அறிஞர்
26-10-2007, 09:30 PM
உண்மையிலே நெகிழ வைக்கிறது.

இது மாதிரி எல்லாத்துறைகளும் செயல்பட்டாம்.. நாடு செழிக்குமே....

தங்கவேல்
27-10-2007, 03:06 AM
ஆமாங்க... என்னாலே நம்ப முடியவில்லை. உண்மை... உண்மை... நடந்தது உண்மையிலும் உண்மை. இன்னும் கம்ப்ளையின்ட் அனுப்பவில்லை. இன்றுதான் அனுப்ப வேண்டும்

மாதவர்
27-10-2007, 03:36 AM
மிகவும் ஆச்சர்யமான உண்மை
பாராட்டுக்கள்

lolluvathiyar
27-10-2007, 06:34 AM
நம்ப முடியவில்லை. ஆனால் உன்மை. எப்போதாவது நடந்திருக்கும்

இதயம்
27-10-2007, 07:29 AM
இதில் பெருமைப்பட ஒன்றுமிருப்பதாக தெரியவில்லை. தன் கடமையை சில அதிகாரிகள் சரியாக செய்ததால் அந்த செயல் இங்கு அதிகம் பெரிதுபடுத்தப்பட்டிருக்கிறது. அப்படியென்றால், அடிப்படையில் அரசு இயந்திரம் பெரும்பாலும் உறங்குவதை தான் சுட்டிக்காட்டுகிறது. இது உண்மையில் வெட்கத்திற்குரியது. இது போல் அவ்வப்போது அதிசயங்கள் நடப்பதுண்டு. இதில் ஸ்டாலின் எங்கு வந்தார் என்று தெரியவில்லை. ஒரு வீட்டில் தண்ணீர் வராத பிரச்சினையில் உள்ளாட்சித்துறை அமைச்சர் தலையிட்டு தீர்ப்பார் என்பது எதிர்ப்பார்க்க வேண்டியதில்லை. அதே போல் அதிகாரிகள் செய்யும் தவறுக்கும் அவர் பொறுப்பில்லை. எனவே இதை உடனடியாக தங்கள் கடமையை உணர்ந்து சரி செய்த அதிகாரிகள் தான் பாராட்டுக்குரியவர்கள். அவர்களுக்கு என் பாராட்டுக்கள்..!

தங்கவேல் அவர்கள் நம் உள்ளாட்சித்துறை அமைச்சர் ஸ்டாலின் மேல் இருக்கும் அபிமானத்தை காட்ட இந்த திரியை பயன்படுத்தியிருக்கிறார் என்பது இன்னொரு உண்மை.!

xavier_raja
27-10-2007, 08:35 AM
இது என்னவோ Americaவில் நடந்த மாதிரி இருக்கு நீங்க சொல்றபோது பாத்தா, அதுவும் இந்தியாவில், தமிழ்நாட்டில் என்றால் உண்மையிலேயே பாராட்டவேண்டிய விஷயம்.

இதயம்
27-10-2007, 08:40 AM
இது என்னவோ Americaவில் நடந்த மாதிரி இருக்கு நீங்க சொல்றபோது பாத்தா, அதுவும் இந்தியாவில், தமிழ்நாட்டில் என்றால் உண்மையிலேயே பாராட்டவேண்டிய விஷயம்.

இதைத்தான் நான் அதிசயம் என்றும் அதற்கு சரியான காரணகர்த்தாக்களான அதிகாரிகளுக்கு என் பாராட்டுக்களையும் தெரிவித்திருக்கிறேனே..!!

தங்கவேல்
28-10-2007, 10:21 PM
அதிசயம் தான். ஆனால் உண்மை. அனுபவித்தவன் நான். அட்டகாசம் போங்கள்.

lolluvathiyar
29-10-2007, 08:12 AM
இது போன்ற அதிசியங்கள் அவ்வபோது நடந்து மனிதனுக்கு ஹார்ட் அட்டாக் வரவைக்கிறது. 5 ஆண்டுகளுக்கு முன் நான் ஒரு வேலையாக ஆடியோ அலுவலகம் சென்றேன். என் வாழ் நாளிலேயே நடந்திராத சம்பவம் அன்று நடந்தது. என் வேலைகளை முடித்து கொடுத்த அதிகாரி அதற்க்கு ஒரு பணமும் பெற்று கொள்ளவில்லை.
(அதற்க்கு முந்தின நாள் லஞ்ச ஒழிப்பு துரை ரெய்ட் நடந்ததாம்)

அன்புரசிகன்
29-10-2007, 08:22 AM
நல்லது நடந்தால் நன்மையே....

தமிழகம் இன்னும் செழியட்டும்...

அமரன்
29-10-2007, 08:30 AM
குடிமக்கள் எலோருக்கும் அமைச்சர்களுடன் பேச வசதிவாய்ப்புக் குறைவு. அதனால் இதேபோல எல்லா இடங்களிலும் இருக்கலாம் எனக் கருதி, முயன்று, அறிந்து, தீர்க்கப்படும்போது அமைச்சுத்துறைக்கு எனது கைதட்டல் பலமாக கிடைக்கும். இது ஒரு ஆரம்பம் என்று எண்ணி இப்போது கண்ணசைவுக்கு ஒத்திசைக்கும் இதழசைவுடனான மென்மையான பாராட்டு கட்டளைத்தளபதிகளுக்கும் கள வீரர்களுக்கும்..

xavier_raja
30-10-2007, 09:28 AM
இதில் பெருமைப்பட ஒன்றுமிருப்பதாக தெரியவில்லை. தன் கடமையை சில அதிகாரிகள் சரியாக செய்ததால் அந்த செயல் இங்கு அதிகம் பெரிதுபடுத்தப்பட்டிருக்கிறது. அப்படியென்றால், அடிப்படையில் அரசு இயந்திரம் பெரும்பாலும் உறங்குவதை தான் சுட்டிக்காட்டுகிறது. இது உண்மையில் வெட்கத்திற்குரியது. இது போல் அவ்வப்போது அதிசயங்கள் நடப்பதுண்டு. இதில் ஸ்டாலின் எங்கு வந்தார் என்று தெரியவில்லை. ஒரு வீட்டில் தண்ணீர் வராத பிரச்சினையில் உள்ளாட்சித்துறை அமைச்சர் தலையிட்டு தீர்ப்பார் என்பது எதிர்ப்பார்க்க வேண்டியதில்லை. அதே போல் அதிகாரிகள் செய்யும் தவறுக்கும் அவர் பொறுப்பில்லை. எனவே இதை உடனடியாக தங்கள் கடமையை உணர்ந்து சரி செய்த அதிகாரிகள் தான் பாராட்டுக்குரியவர்கள். அவர்களுக்கு என் பாராட்டுக்கள்..!

தங்கவேல் அவர்கள் நம் உள்ளாட்சித்துறை அமைச்சர் ஸ்டாலின் மேல் இருக்கும் அபிமானத்தை காட்ட இந்த திரியை பயன்படுத்தியிருக்கிறார் என்பது இன்னொரு உண்மை.!


முதல்வனில் அர்ஜுன் ஒருநாள் முதல்வரான பின்பு ஒரு Dialogue சொல்வார்..

ஒரு முதலமைச்சர் என்ன செய்யனுமோ அதைதான் செய்தேன், நான் ஒருநாளில் செய்ததை நீங்கள் 5 வருடமும் செய்த்தால் நம் நாட்டில் வறுமை என்பதே இருக்காது...

எல்லருக்கும் தெரிந்ததுதான் என்றாலும் அது ஏன் அவர்கள் செய்யும் கடமையை கூட பெரிதாக விளம்பரபடுத்துகிறார்கள் என்று தெரியவில்லை.