PDA

View Full Version : தமிழிற்கும் transliteration சேவை கூகிளால் அறிமுகம்மயூ
26-10-2007, 07:02 AM
http://www.google.com/transliterate/indic/img/logo.gif
இது வரைகாலமும் ஹிந்தி மொழிக்கு மட்டுமே இந்த சேவை கூகிளினால் வழங்கப்பட்டுக்கொண்டு இருந்தது. இப்போது தமிழ் உட்பட மேலும் சில மொழிகளுக்கு இந்த வசதி வழங்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் ஓர்குட், ஜிமெயில், பிளாக்கர் போன்ற சேவைகளில் இது உள்ளடக்கப்பட்டால் இ-கலப்பை இல்லாமல் தட்டச்சு செய்யலாம். ஆனால் இது பொனட்டிக் முறையே!!!

Tamil : http://www.google.com/transliterate/indic/Tamil
Telugu : http://www.google.com/transliterate/indic/Telugu
Kannada : http://www.google.com/transliterate/indic/Kannada
Malayalam : http://www.google.com/transliterate/indic/Malayalam

இது இயங்க நீங்கள் இணையத்துடன் இணைந்திருக்க வேண்டும். அத்துடன் சில தட்டச்சு உதவிகளையும் இது செய்கின்றது. தமிழிற்கு என்னுமொரு படிக்கட்டாக இது அமையட்டும்.

மேலும் அறிய

அன்புடன்,
மயூரேசன்

praveen
26-10-2007, 07:20 AM
மயூரேசா ! (இப்படி உரிமையுடன் அழைக்கலாமில்லையா) உண்மையிலே நல்ல தகவல்.

எல்லோரும் இப்படி தயாரிப்பதை வேலையாக கொண்டிருந்தால், நீங்கள் இப்படி தமிழுக்கு என்னென்ன அணிகலன் வந்து கொண்டு இருக்கிறது என்று எங்களுக்கு அறிய தருவதையே வேலையாக கொண்டிருக்கிறீர்களே. வாழ்த்துக்கள்.

நமது தளத்தை மென்பொருளால் நிர்வாகிக்கும், மன்ற ஆலோசகர், ராசகுமாரன் இதனை கண்டால் மிக்க மகிழ்ச்சி அடைவார். இந்த டெக்னிக்கை நமது தளத்தில் இட்டால் மிகவும் உதவியாக இருக்கும். பிழை திருத்தமும் இதில் உள்ளது.

ஆனால் நான் உபயோகிக்கும் ஒபேரா பிரவுசரில் இயங்காது என்று தெரிவிக்கிறது.

இன்னும் இம்மாதிரி தகவலை தந்து எங்கள் உள்ளங்களை கொள்ளை கொள்ளுங்கள்.

நண்பர் (எழுத்துப்பிழையாளர்) லொள்ளுவாத்தியார் அவசியம் பார்க்க வேண்டிய திரி இது.

மயூ
26-10-2007, 07:25 AM
நிச்சயமாக அழைக்கலாம் நண்பரே... அப்படித்தான் பலர் அன்பாக அழைப்பர்!!

கூகிள் காரர் ஏதாவது API வழங்கினால் நம் மன்றம் போன்றவற்றுடன் ஒருங்கிணைக்கலாம்...!!! :)

தமிழில் கணனியியலில் புகுந்து விளையாடப்போகும் காலத்தைக் காண மிக ஆர்வத்துடன் இருப்பதால் இப்படியான தகவல் தரும் தளங்களிற்கு அடிக்கடி சென்று பார்த்து வருவேன்!!! அதனால்தான் இப்படியான விடயஙங்களை அறியக் கூடியதாக உள்ளது. :)

ஓவியன்
26-10-2007, 07:26 AM
தமிழ் மொழிக்கு இணையத்தில் இன்னும் ஒரு முன்னேற்றப்படி தான். கிட்டத்தட்ட இ-கலப்பை போலவே உள்ளது. இ-கலப்பை கிடைக்காதவர்களுக்கும் அவசர காலங்களுக்கு மிகவும் உதவும்.

மயூ என்றாலே எப்போது தமிழை இணையத்தில் முன்னேற்றகரமாக கொண்டு செல்வது பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பார், இந்த பகுதியில் அவர் இதுவரை தொடங்கியுள்ள திரிகளைப் பார்த்தாலே அது விளங்கும்.

மயூவின் இந்த சேவை தொடர என் வாழ்த்துகள்........!!! :)

அன்புரசிகன்
26-10-2007, 07:28 AM
சூப்பர் அக இருக்கு. திருத்தும் வசதி கூட இருக்கு. Romanished இலும் பார்க்க இலகு. இவ்வகை சேவை நம் மன்றத்தில் வந்தால் நலமே...

அமரன்
26-10-2007, 07:29 AM
நல்ல பயனுள்ள தகவல் மயூ. மிக்க நன்றி.
முன்னேற்றம் தட்டச்ச முடியவிலையே..

பூமகள்
26-10-2007, 07:30 AM
மிக மிக பயனுள்ள தகவல் மயூ அண்ணா.
இனி கூகில் இருக்கும் இடமெங்கும் தமிழ் மணம் பரவும்.
நன்றிகள் மயூ அண்ணா.

அன்புரசிகன்
26-10-2007, 07:34 AM
எதிர்காலத்தில் ஓர்குட், ஜிமெயில், பிளாக்கர் போன்ற சேவைகளில் இது உள்ளடக்கப்பட்டால் இ-கலப்பை இல்லாமல் தட்டச்சு செய்யலாம். ஆனால் இது பொனட்டிக் முறையே!!!

நீங்கள் தந்த சுட்டியில் சென்றுதான் பார்த்தேன். ஓர்குட், பிளாக்கர் ஆகியவற்றில் அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டதாமே...

இங்கே (http://www.google.com/transliterate/indic/about_ta.html) சென்று 9வது குறிப்பைப்பாருங்கள்.

அமரன்
26-10-2007, 07:37 AM
இணையத்தில் தமிழின் முன்னேற்றத்தை நுணுக்கமாக கண்காணித்து எமக்கு தகவல்களை உடனுக்குடன் தரும் மயுவின் சேவை தொடர எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
இது மயூ சொன்ன முறையில் தட்டச்சு செய்தது.

அக்னி
26-10-2007, 10:29 AM
மிகவும் பயனுள்ள தகவல்.
அத்தோடு பயன்படுத்திப் பார்க்கையில், எழுத்துக்கள் தமிழில் மாற்றமடையும்போது, மனதில் பெரும் மகிழ்ச்சி பொங்குகின்றது.
பகிர்ந்து கொண்ட மயூரேசருக்கு மிக்க நன்றி...

மீனாகுமார்
26-10-2007, 01:06 PM
இந்த சுட்டியை முன்னரே அறிந்திருப்பீர்களானால் மன்னிக்கவும்-

http://www.google.com/transliterate/indic/Tamil

மீனாகுமார்
26-10-2007, 01:07 PM
ஆ.. இப்போது தான் பார்க்கிறேன்.. இதே செய்தி ஏற்கனவே உள்ளது... நண்பர்கள் மன்னிக்கவும்.. பொறுப்பாளர்கள் முடிந்தால் இந்த திரியை அகற்றிவிடவும். நன்றி.

ஓவியன்
26-10-2007, 01:11 PM
ஆ.. இப்போது தான் பார்க்கிறேன்.. இதே செய்தி ஏற்கனவே உள்ளது... நண்பர்கள் மன்னிக்கவும்.. பொறுப்பாளர்கள் முடிந்தால் இந்த திரியை அகற்றிவிடவும். நன்றி.

அண்ணா!

உங்கள் திரியினை "மயூ" ஆரம்பித்த திரியுடன் இணைக்கின்றேன்.

மனோஜ்
27-10-2007, 08:24 AM
மயூ அருமை நன்றி

நேசம்
27-10-2007, 09:46 AM
மிகவும் உபயகமான தகவல். தொடர்ந்து இது போன்று தகவலை தரும் மயூ அவர்களுக்கு நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்

பட்டாம்பூச்சி
27-10-2007, 09:56 AM
எந்த காரணத்தாலோ என்னால் சில நாட்களாக மன்றத்திற்குள் நுழைய முடியவில்லை. நுழைவாயிலில் பெயரை தட்டச்சு செய்யமுடியாமல் போனது.. (என் பெயர் தமிழில் இருப்பதால்). எவ்வளவு முயன்றும் முடியாமல் தவித்தேன். வேறு இடங்களில் தமிழ் தட்டச்சு வேலை செய்கிறது இங்கே மட்டும் வரமுடியாமல் சிக்கல். ஒரு நல்ல நண்பர் உதவியுடன் திரும்ப உள்ளே வந்திருக்கிறேன். அந்த நண்பரும் இந்தத் திரியில் உள்ள பதிவின் தகவலை எனக்களித்து என் கவலையை போக்கினார்.

புதிய தகவல்களைக் கொடுத்து உதவிய நண்பருக்கு என் நன்றி!

சூரியன்
27-10-2007, 04:10 PM
இந்த திரி மிகவும் பயனுள்ளதாக உள்ளது..
தகவலை தந்தமைக்கு நன்றி மயூ அண்ணா..
தொடர்ந்து இது போன்ற தகவல்களை கொடுங்கள்..

ஷீ-நிசி
27-10-2007, 04:53 PM
மிக பயனுள்ள மற்றுமொரு சேவை கூகிள் தளத்தினால்...

நன்றி மயூ!

franklinraja
30-10-2007, 04:01 PM
நிறைய பேருக்கு முன்னமே தெரிந்திருக்கலாம்
எனினும், நான் இப்பொழுதுதான் கண்டேன்...
மற்ற புதியவர்களுக்காக...

http://www.google.com/transliterate/indic/Tamil#

Hindi, Tamil, Telugu, Kannada, Malayalam தட்டச்சு பக்கம்...

நன்றாக உள்ளது... :)

franklinraja
31-10-2007, 06:16 PM
திரியில் இணைத்தமைக்கு, மிக்க நன்றி அன்பு ரசிகா :)

alaguraj
02-12-2007, 09:30 AM
ஈகலப்பை , பயர்பாக்ஸ் தமிழ் ஒருங்குறி தட்டச்சு பிரச்சினை இருந்தால் கூகிள் Indic டிரன்சிலடோர் முயன்று பாருங்கள் ..பல்வேறு சிறிய குறைகள் இருந்தாலும் நன்றாக வேலை செய்கிறது.. ஒரு முழு வார்த்தை டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டினால் தமிழில் மாறுகிறது, அதுமட்டுமல்ல வார்த்தைகளையும் சஜெஸ்ட் செய்கிறது.

http://www.google.com/transliterate/indic/Tamil

மேலதிக உதவிக்கு
http://www.google.com/transliterate/indic/about_ta.html

மயூ
02-12-2007, 12:52 PM
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=12997
இங்கே காண்க ஏற்கனவேவ இந்தத் தகவல் பதியப் பட்டுள்ளது. :)

தீபன்
02-12-2007, 12:54 PM
ஈகலப்பை , பயர்பாக்ஸ் தமிழ் ஒருங்குறி தட்டச்சு பிரச்சினை இருந்தால் கூகிள் Indic டிரன்சிலடோர் முயன்று பாருங்கள் ..பல்வேறு சிறிய குறைகள் இருந்தாலும் நன்றாக வேலை செய்கிறது.. ஒரு முழு வார்த்தை டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டினால் தமிழில் மாறுகிறது, அதுமட்டுமல்ல வார்த்தைகளையும் சஜெஸ்ட் செய்கிறது.

http://www.google.com/transliterate/indic/Tamil

மேலதிக உதவிக்கு
http://www.google.com/transliterate/indic/about_ta.html

பயன்படுத்திப் பார்த்தேன். ரொம்ப அருமை. தகவலுக்கு நன்றி நண்பரே.

சூரியன்
02-12-2007, 02:17 PM
நண்பரே இந்த தகவல் முன்பே தரப்பட்டுள்ளது,.

நேசம்
02-12-2007, 06:38 PM
அண்ணன் சூரியன் சொல்வது போல இது ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளது.மற்றவர்கள் தெரிந்து கொள்ளனும் என்று உங்கள்
ஆர்வத்துக்கு பாரட்டுக்கள்

அமரன்
02-12-2007, 07:38 PM
இரு திரிகளும் இணைக்கப்படுள்ளன.

நாகரா
11-02-2008, 07:07 AM
பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி மயூ