PDA

View Full Version : உன் தீண்டலுக்காய்



இனியவள்
25-10-2007, 08:57 PM
என் மனதின் எண்ணங்களை
நீ படிப்பதற்காய் வரைகின்றேன்
கவிதைகள் பல...

என் கவிதையின் பிரதிபலிப்பு
உன் கண்கள் தீண்டா என் கண்கள்
உன் இதயம் கண்ட என் இதயம்
என் உயிருக்குள் வசிக்க
மறுக்கின்றது...

உனக்காய் நான் படைத்திட்ட
காவியங்கள் காத்துக் கிடக்கின்றன
உன் தீண்டலுக்காய்..

ஓரு முறை நோக்கி உயிர்
கொடுத்துச் சென்று விடு என்
கவிதைப் பூக்களுக்கு....

ஓவியன்
26-10-2007, 10:18 AM
நானும் என் கவிதைகளும்
காவியங்களுக் உன்
வான் வழி சுரக்கும்
ஒரு துளி மழைக்காகக்
காத்திருக்கின்றோம்
மழை கண்டு பூக்கக்
காத்திருக்கும் விதைகளாக.......

பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் இனியவள்....!

ஜெயாஸ்தா
26-10-2007, 04:57 PM
கருப்பொருளை மையமாக வைத்து எழுதப்படும் கவிதையை, கருப்பொருளே காண வேண்டும் எனச்சொல்கிறீர்கள்...! ம்.... எல்லாம் காதல் செய்யும் மாயம்...! இன்னும் கொஞ்சம் வலிமையாக கவிதையை தந்திருக்கலாமோ?

அன்புரசிகன்
26-10-2007, 05:13 PM
உனக்காய் நான் படைத்திட்ட
காவியங்கள் காத்துக் கிடக்கின்றன
உன் தீண்டலுக்காய்..


காத்திருப்பதில் தானே சுகம் உண்டு... காத்திருங்கள் காவலனாய்.... தாண்டிவரும் அனைத்தும்...

பாராட்டுக்கள் இனியவளே...

சுகந்தப்ரீதன்
28-10-2007, 08:16 AM
காத்திருத்தலே வாழ்க்கையாய்
பிறப்பு முதல் இறப்பு வரை...!
இதில் தங்களின் காத்திருப்பு கடந்து போன காதலுக்கு தாங்கள் தீட்டிய காவியத்தை மீண்டும் ஒருமுறை தீண்ட சொல்லி... வேதனையோடு விடுக்கும் வேண்டுகோளாய்... உணர்வுகளை வார்த்தை கோர்வைகளில் கொண்டுவந்த முயற்சிக்கு எனது வாழ்த்துக்களும் பாராட்டுகளும் இனியா..!

அமரன்
28-10-2007, 07:35 PM
சமைத்த உணவு
சுவைக்கப்படாத நிலை..!
சமைத்தவளின் மனது
குமையும் தவிப்பு நிலை...!

இரசத்தில் போடியாக்கிப் போட்ட
பெருங்காயத்தை தேடும்
பெருங்காரியமாக கவிதை...!