PDA

View Full Version : விண்வெளியில் குஞ்சு பொரித்தது கரப்பான் ப



mgandhi
25-10-2007, 06:31 PM
விண்வெளியில் குஞ்சு பொரித்தது கரப்பான் பூச்சி

மாஸ்கோ: நடேஸ்டா என்று பெயர் சூட்டப்பட்டுள்ள ரஷ்ய கரப்பான் பூச்சி, விண்வெளியில் முதல் முறையாக குஞ்சு பொரித்துள்ளது. விண்வெளியில் உயிரியல் மாற்றத்தை ஆய்வு செய்து வரும் ரஷ்யாவின் உயிரி மருத்துவ பிரச்னைகள் கழகம், போடோன் ரக செயற்கைக் கோள்களை தொடர்ந்து அனுப்பி வருகிறது. இதுவரை இந்த ரகத்தைச் சேர்ந்த 12 உயிரி செயற்கைக் கோள்கள் ஏவப்பட்டுள்ளன. கடந்த மாதம் 14ம் தேதி ஏவப்பட்ட போடோன்எம் செயற்கைக் கோளில் சீலிடப்பட்ட பெட்டியில், கர்ப்பம் தரித்த இரண்டு பெண் கரப்பான் பூச்சிகள் அனுப்பப்பட்டன. அந்த பெட்டியில் வீடியோ கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இரண்டு கரப்பான் பூச்சிகளில், நடேஸ்டா (நம்பிக்கை) என்ற கரப்பான் பூச்சி குஞ்சு பொரித்துள்ளது. சாதாரணமாக கரப்பான் குஞ்சுகள் பிறக்கும் போது, உள்ளுறுப்புகள் தெரியும் வகையில் கண்ணாடி தோற்றத்தைக் கொண்டிருக்கும். பின்னர், படிப்படியாக பிரவுன் நிறம் பெறும். ஆனால், விண்வெளியில் பிறந்துள்ள 33 கரப்பான் பூச்சிகளும் விரைவிலேயே பிரவுன் நிறத்தைப் பெற்று விட்டன. சாதாரணமாக உணவு உட்கொள்கின்றன; தண்ணீர் குடிக்கின்றன.

இன்னொரு கரப்பான் பூச்சியும் குஞ்சு பொரித்த பின், ஆராய்ச்சியின் இறுதி முடிவு தெரிய வரும்.

ஓவியன்
25-10-2007, 06:42 PM
விந்தையான தகவல்தான் பகிர்வுக்கு நன்றிகள் அண்ணா!

ஒரு கொசுறுத்தகவல் உலகம் தோன்றி பல கோடி ஆண்டுகளானாலும் பரிணாம வளர்ச்சி அடையாத ஒரே ஒரு உயிரினம் இந்த கரப்பான் பூச்சிதானாம்.

ஜோய்ஸ்
26-10-2007, 02:31 PM
விசித்திரமான சம்பவம்தான்.கரப்பான்கள் அனுவீச்சையே எதிர் கொள்பவையாக்கும்.

சூரியன்
26-10-2007, 03:27 PM
வித்தியாசமான தகவலாய் இருக்கிறது.

ஜெயாஸ்தா
26-10-2007, 04:07 PM
விசித்திரமான சம்பவம்தான்.கரப்பான்கள் அனுவீச்சையே எதிர் கொள்பவையாக்கும்.

ஆமாங்க அணுகுண்டு வீசப்பட்டு அனைத்தும் அழிந்தாலும் அழியாத ஒரே உயிரினம் கரப்பான் பூச்சிதானாம்.

அன்புரசிகன்
26-10-2007, 04:14 PM
விந்தையான ஒரு தகவல் தான்... நன்றீங்க...

பூமகள்
02-11-2007, 10:54 AM
நல்ல பகிர்வு..!
விண்வெளியில் கூட கரப்பான் பூச்சியின் ராஜ்ஜியம் இனி நடக்கும் போல் உள்ளதே,....!! :D:D
கரப்பான் பூச்சிகள் தான் எத்தனை அணுகுண்டு தாக்குதல் நிகழ்ந்தாலும் தனது சந்ததியை முற்றிலும் அழிக்கவே முடியாத இனமாம்.

நன்றிகள் அன்பர் காந்தி.

மன்மதன்
02-11-2007, 12:50 PM
செய்தி பகிர்தலுக்கு நன்றி காந்தி..

அறிஞர்
02-11-2007, 12:56 PM
தகவலுக்கு நன்றி நண்பரே...

அடுத்து... எலி குஞ்சு பொறித்த செய்தி வருமா...

பூமகள்
02-11-2007, 02:29 PM
தகவலுக்கு நன்றி நண்பரே...
அடுத்து... எலி குஞ்சு பொறித்த செய்தி வருமா...
அறிஞர் அண்ணா,
எனக்கு தெரிந்து எலி குஞ்சு பொறிக்காது.... குட்டி தான் போடும்..!!:lachen001: ஹி ஹி..!! :D:D:D:D

யவனிகா
02-11-2007, 03:33 PM
அறிஞர் அண்ணா,
எனக்கு தெரிந்து எலி குஞ்சு பொறிக்காது.... குட்டி தான் போடும்..!!:lachen001: ஹி ஹி..!! :D:D:D:D

விவசாயிகள் எலியைப் பொறித்து சாப்பிட்டார்கள் என்ற செய்தியில் அறிஞர் அய்யா குழம்பி விட்டார் என்று நினைக்கிறேன் பூ.

பூமகள்
02-11-2007, 03:40 PM
விவசாயிகள் எலியைப் பொறித்து சாப்பிட்டார்கள் என்ற செய்தியில் அறிஞர் அய்யா குழம்பி விட்டார் என்று நினைக்கிறேன் பூ.
சரியா சொன்னீங்க அக்கா..! அறிஞர் அண்ணா விவசாயிகளின் துயர் பற்றி எப்படி கவலைப் படுகிறார் பாருங்க..!! :icon_b:
அறிஞர் அண்ணாவை நினைச்சா எனக்கு பெருமையா இருக்கு..!! :traurig001:

praveen
02-11-2007, 03:48 PM
அறிஞர் அண்ணா,
எனக்கு தெரிந்து எலி குஞ்சு பொறிக்காது.... குட்டி தான் போடும்..!!:lachen001: ஹி ஹி..!! :D:D:D:D

தங்கையே, இளம் எலியை எலிக்குஞ்சு என்று சொல்வீர்களா? அல்லது எலிக்குட்டி என்று சொல்வீர்களா?.

அறிஞர் பேச்சு வாக்கில் உள்ளதை சொல்லியிருக்கிறார். அவர் கூற்று சரி தான்.

அறிஞர்
02-11-2007, 04:05 PM
அட மக்கா அவசத்தில் அளித்த பதிலில் கூட குற்றம் கண்டு பிடிக்கிறாங்கப்பா...

வடிவேலு போல.. கொஞ்சம் எச்சரிக்கையாதான் இருக்கனும் போல..

பூமகள்
02-11-2007, 04:09 PM
தங்கையே, இளம் எலியை எலிக்குஞ்சு என்று சொல்வீர்களா? அல்லது எலிக்குட்டி என்று சொல்வீர்களா?.

அறிஞர் அண்ணாவுக்காக நல்லாவே வாதாடுறீங்க ப்ரவீண் அண்ணா. ஆனாலும் எலி குஞ்சு பொறிக்கும்னு சொன்னது எப்படி உண்மையாகும்?? :icon_p:
ஹ ஹ ஹா...!! :lachen001::lachen001:

மன்மதன்
02-11-2007, 06:03 PM
ஆஹா.. மகளிரணி தலைவரையே நல்லா கலாய்க்கிறாங்களே.:D

விகடன்
03-11-2007, 05:15 AM
விந்தையான தகவல்தான். சாதாரணமாக வீட்டில் கரப்பான் பூச்சியை கண்டால் வெருளுவதும், அடித்து சம்பளாக்குவதுமே தொழிலாக இருக்கும் எங்களுக்கு, இரண்டு கரப்பான் பூச்சிகளை இராஜ மரியாதையுடன் அவற்றிற்கென பிரத்தியேக ஒளிப்பதிவுக் கருவிகளுடன் எதுவித செலவினங்களும் விதிக்காமல் விண்வெளிக்கனுப்பி அங்கே சந்ததியை பெருப்பிக்கும் செயற்பாடு ஆச்சரியம் தரக்கூடியதுதான்.

இன்னொன்றையும் சிந்தித்துப் பார்த்துக்கொள்ள வேண்டியிருக்கும்.
அந்த குஞ்சு கரப்பாங்களையும் ஆராச்சியாளர்கள் பிடித்து அதற்கு பிறப்புச் சான்றிதல்கள் வழங்கி அவற்றின் வளர்ச்சிப் பரிமானங்களையும் காண முடிவெடுத்துருப்பர்.

அதேவேளை அந்த குன்சுகள் அண்டத்தில் பிறந்ததால் அபார வளர்ச்சி கொண்டு பெரிதாக வளர்ந்துவிட்டால்...... பயப்படாதீர்கள். எல்லாம் ஒரு கற்பனைதான்.
ஹி...ஹி....ஹி...

நேசம்
03-11-2007, 05:20 AM
அதேவேளை அந்த குன்சுகள் அண்டத்தில் பிறந்ததால் அபார வளர்ச்சி கொண்டு பெரிதாக வளர்ந்துவிட்டால்...... பயப்படாதீர்கள். எல்லாம் ஒரு கற்பனைதான்.
ஹி...ஹி....ஹி...

நிங்கள் சொல்வதை பார்த்தால் காலிவுட் படம் வரும் போலிருக்கு..!!

பூமகள்
03-11-2007, 05:31 AM
நிங்கள் சொல்வதை பார்த்தால் காலிவுட் படம் வரும் போலிருக்கு..!!
ஹைய்... நல்ல கதையா இருக்கே?? :D:D

சரி...

ஸ்டீபன் ஸ்பீல்பர்க்குக்கு அடுத்த படத்தின் ஸ்கிரிப்ட் தயாராகிவிட்டது..!! :wuerg019:

படத்தின் பெயர் - "காக்ரோச் பார்க் இன் மில்கிவே..." :icon_b:

விகடன்
03-11-2007, 06:10 AM
நிங்கள் சொல்வதை பார்த்தால் காலிவுட் படம் வரும் போலிருக்கு..!!

கட்டாயமாக..
கரப்பான் பூச்சி விண்வெளிக்குப்போனதால் இனிமேல் அதுபற்றிய தகவல்கள் பொதுவாக செய்தித்தாள்களிலும் சஞ்சிகைகளிலும் வந்துவிடும். ஆகையால் ஹொலிவூட் படத்தில் அதைவிடச் சிறிய உயிரினம் ஏதாவது (உதாரணத்திற்கு நுண்ணங்கிகள்) வைத்து எடுப்பார்கள். :D

அமரன்
03-11-2007, 08:57 AM
ஆஹா.. மகளிரணி தலைவரையே நல்லா கலாய்க்கிறாங்களே.:D
ஏதும் சிலேடையாக சொன்னீர்களோ..:confused::confused::confused: