PDA

View Full Version : அ.முதலீடுகள்:ப.கொள்ளை-நிறைவுபகுதி



பூமகள்
25-10-2007, 11:09 AM
அந்நிய முதலீடுகள்:பகற்கொள்ளையின் மறுபெயர் - பாகம் 1 (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=12927)

அந்நிய முதலீடுகள்:பகற்கொள்ளையின் மறுபெயர் - நிறைவு பகுதி

அந்நியச் செலாவணி இருப்பைப் பலவழிகளில் அபகரிப்பதோடு அந்நிய நேரடி முதலீடுகள் நின்று விடுவதில்லை. மோசடிக் கணக்கு வழக்குகள் மூலம் ஒரு நாட்டில் முதலீடு செய்த முலதனத்தையே அவை படிப்படியாகக் கடத்திச் சென்று விடுகின்றன. மேலும், இத்தகைய மோசடி கணக்கு வழக்குகளால் உலகெங்கும் பல நாடுகளில் கோடிகோடியாய் வரி இழப்பையும் ஏற்படுத்துகின்றன. பன்னாட்டு ஏகபோகக் கம்பெனிகளின் மோசடி - தில்லுமுல்லு கணக்கு வழக்குகளால் அமெரிக்காவுக்கு மட்டும் ஆண்டுக்கு ரூ. 1,20,000 கோடிக்கு மேல் வரி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு புலம்புகிறது.

பன்னாட்டு நிறுவனங்கள் எந்த நாட்டில் முதலீடு செய்தாலும், அந்நாட்டு அரசுக்குச் செலுத்த வேண்டிய வரியைக்குறைக்கவும் ஏய்க்கவும் தாங்கள் அடைந்த இலாபத்தைக் குறைத்துக் காட்டுவதென்பது இன்னுமொரு மோசடி உத்தி. உலகின் மிகப் பெரிய எண்ணெய் ஏகபோக நிறுவனமான எக்சான், தென்னமெரிக்காவிலுள்ள சிலி நாட்டில் கடந்த 20 ஆண்டுகளாக வரியே செலுத்தியதில்லை. ஏனென்றால், அந்நிறுவனத்துக்கு அங்கே சல்லிக் காசு கூட இலாபம் கிடைக்கவில்லையாம்! அப்புறம் எதற்காக எக்சான் நிறுவனம் பல்லாயிரம் கோடிகளைக் கொட்டி தொழில் நடத்திக் கொண்டிருக்கிறது என்று நீங்கள் அதிகப்பிரசங்கித்தனமாக கேள்வி கேட்கக் கூடாது. அது, சிலி நாடு தொழில் வளர்ச்சியில் முன்னேறி வல்லரசாவதைத் தடுத்து விடும்!

இவை ஒருபுறமிருக்கட்டும், நேரடி அந்நிய முதலீடுகள் புதிதாக எந்தத் தொழிலையும் உருவாக்காமல், ஏற்கெனவே இரு நாட்டில் இயங்கிக் கொண்டிருக்கும் நிறுவனங்களைக் கைப்பற்றி பெயரை மட்டும் மாற்றிக் கொள்கின்றன. அல்லது ஒரு நாட்டில் ஏற்கனவே உள்ள தொழில் நிறுவனங்களை முற்றாக அழித்து விட்டு தனது தொழில் ஆதிக்கத்தை நிறுவுகின்றன. தமிழகத்தில் காளிமார்க், மாப்பிள்ளை விநாயகர் முதலான உள்ளூர் குளிர்பான நிறுவனங்களை ஒழித்துக் கட்டிவிட்டு ஆதிக்கம் செய்யும் கோக்கும் பெப்சியுமே இதற்குச் சான்று கூறப் போதுமானது.

அந்நிய முதலீடுகளால் வேலை வாய்ப்புப் பெருகும் என்பது அப்பட்டமான புளுகைத் தவிர வேறில்லை. ஏனெனில், இவ்வகை முதலீடுகள் பெரும்பாலும் நிதி நிறுவன முதலீடுகளாக - பங்குச் சந்தை சூதாட்ட முதலீடுகளாகவே இருப்பதால், பெருமளவில் வேலைவாய்ப்பை உருவாக்க அடிப்படையே இல்லை. அடுத்து, சேவைத் துறையிலும் உற்பத்தித் துறையிலும் கணிசமாக நுழைந்துள்ள அந்நிய முதலீடுகள் நேரடி வேலை வாய்ப்பை உருவாக்காமல், ஒப்பந்தக்காரர்கள் மூலமே வேலைகளை முடித்துக் கொள்கின்றன. வேலை வாய்ப்பை உருவாக்குவதைவிட, தொழில் நிறுவனங்களைக் கைப்பற்றியும் கைமாற்றியும், அட்குறைப்பு செய்தும் இலாபத்தைச் சுருட்டுவதிலேயே அந்நிய நிறுவனங்கள் குறியாக உள்ளன. கடந்த 15 ஆண்டுகளாக தனியார்மயம் - தாராளமயம் என்ற பெயரில் நடைமுறைப்படுத்தப்பட்ட கொள்கையால், ப்ல்லாயிரம் கோடிக்கும் மேல் அந்நிய முதலீடுகள் வெள்ளமெனப் பாய்ந்தும் கூட, அவை உருவாக்கியுள்ள வேலை வாய்ப்பு மிக அற்பமானதுதான் என்ற நடைமுறை உண்மையே இதை நிரூபித்துக் காட்டுகிறது.

"அதெல்லாம் இருக்கட்டும்; மும்பை பங்குச் சந்தை 15,000 புள்ளிகளைத் தாண்டி புதிய உயரத்துக்குத் தாவுகிறது பாருங்கள். அந்நிய முதலீடுகளால் இந்தியப் பொருளாதாரம் நாலு கால் பாய்ச்சலில் முன்னேறுகிறது பாருங்கள்" என்று ஏகாதிபத்திய எடுபிடிகள் உபதேசிக்கின்றனர்.

ஆனால், அதே மும்பை நகர் அமைந்துள்ள மகாராஷ்டிரா மாநிலத்தின் விதர்பா பிராந்தியத்திலும் ஆந்திராவிலும் கடன்சுமை தாளாமல் தற்கொலை செய்து கொண்ட சிறு விவசாயிகளின் எண்ணிக்கை 500 -ஐத் தாண்டிக் கொண்டிருக்கிறது. மும்பை நகரில் மூடப்பட்ட சிறு தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 3000 -க்கும் மேல் சென்று விட்டது.

இந்த உண்மை நிலவரங்களையெல்லாம் மூடிமறைத்து விட்டு, போலி கம்யூனிஸ்டுகள் உள்ளிட்டு எல்லா ஓட்டுப் பொறுக்கி அரசாங்கங்களும் அந்நிய முதலீடுகளை போட்டி போட்டுக் கொண்டு வரவேற்கின்றன. அந்நிய முதலீடுகளால் வளர்ச்சி பெருகிறது; கேழ்வரகில் நெய் வடிகிறது
என்று கோயபல்சு பாணியில் புளுகி வருகின்றன. நாட்டைப் பேரழிவுக்குள் தள்ளி விட்டுள்ள அந்நிய முதலீடுகளையும் அதன் எடுபிடி ஆட்சியாளர்களையும் இன்னமும் சகித்துக் கொண்டிருந்தால், நாளைய வரலாறு நம்மைத்தான் இகழும்.

(முற்றும்)

நன்றிகள்: புதிய ஜனநாயகம் மாத இதழ் (செப்டம்பர் 2007)

எனது கருத்து:

எனக்கு அதிக ஞானம் இம்மாதிரியான விடயங்களில் இல்லை என்பதை தெளிவாகச் சொல்லிக் கொள்கிறேன். ஆனால் உண்மைகளை ஆதாரப் பூர்வமாக சுட்டியிருக்கும் இக்கட்டுரை படிக்கையில் என் மனம் இதில் கூறிய எல்லா கருத்துக்களையும் வழிமொழிகிறது.

மாற்றுக் கருத்து என்று எனக்கு எதுவும் தோன்றவில்லை என்பதே உண்மை.

அன்புரசிகன்
25-10-2007, 11:21 AM
தட்டிக்கேட்க்கவேண்டிய நிபுணர்கள் முட்டாள்கள் போல் நடிக்கும் போது கஷ்டம் தான்....

இவற்றிற்கு விடிவு வரவேண்டும்...

பூமகள்
25-10-2007, 12:18 PM
தட்டிக்கேட்கவேண்டிய நிபுணர்கள் முட்டாள்கள் போல் நடிக்கும் போது கஷ்டம் தான்....
இவற்றிற்கு விடிவு வரவேண்டும்...
விடிவு வருவது நம் கையில் தான் இருக்கு அன்பு அண்ணா.
உங்களின் உடன் பின்னூட்ட ஊக்கத்திற்கு நன்றிகள்.:icon_rollout:

karikaalan
26-10-2007, 06:55 PM
நண்பர்களே

சில அடிப்படைத் தவறுகள் தெரிந்தேயோ, அறியாமலோ இந்தக் கட்டுரையில் இடம் பெற்றிருக்கின்றன.

இந்தியப் பொருளாதார வளர்ச்சி மெய்யாலுமே மேன்மேலும் பெருகிக்கொண்டுதான் இருக்கிறது. இதற்கு அந்நிய நேரடி முதலீடுகள் ஒரு பங்குதான்.

இந்தியர்கள், இந்தியத் தொழிலதிபர்கள், அரசாங்கம் செய்யும் முதலீடுகள் ஏராளம். இப்போது கைவசம் புள்ளி விவரங்கள் இல்லை. பிறகு தெளிவாக எழுதுகிறேன்.

FII என்று சொல்லப்படும் Foreign Institutional Investors-தான், பங்குச்சந்தையில் முதலீடு செய்கிறார்கள். இன்றைய அந்நியச் செலாவணி கையிருப்பு சுமார் $261 பில்லியன். இதில் இவர்களால் உள்ளே வந்தது அதிகம் இல்லை.

சொல்லப்போனால், வெளிநாடுவாழ் இந்தியர்களால் சென்ற வருடம் உள்ளே வந்த டாலர்கள் $26.5 பில்லியன். அனுப்பியவர்கள் சாதாரண வேலை செய்பவர்கள் -- எஞ்சினியர்களோ, டாக்டர்களோ, மற்ற MBAக்களோ அல்ல.

FIIகளைப் பொறுத்தவரை, அவர்களை நாம் வரவேற்ற போதே அவர்களுடைய நடைமுறைகள் நன்கு தெரிந்திருந்தது. அதாவது, அவர்களுக்கு நம் நாட்டின் மீது எந்தவிதமான பிடிப்பும் கிடையாது. இன்றையதினம் இந்தியாவில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கிறது. நாளை மார்க்கெட் சரிந்தால், சுருட்டிக் கொண்டு ஒடுவார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.

அவர்கள் ஏன் ஒடுவார்கள்? நாட்டின் தலைமைபீடம் சரியாக இல்லை, தொழில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது அல்லது எதிர்பார்க்கப் படுகிறது, இன்னும் இன்ன பிற.. இது போன்ற நிலை ஏற்படுமானால் அந்நியர்கள் ஓடத்தான் செய்வார்கள். வேறு ஒரு ஏரி தேடி.

இவ்வளவு தூரம் போவானேன்.

இன்றைய நிலையில், நம்மில் யாராவது, ஒரிஸ்ஸா, சத்தீஸ்கட், ஆந்திரா மாநில எல்லைகளில் வீடுகட்ட முதலீடு செய்வோமா? பைத்தியம் பிடித்த நாய் கடித்திருந்தால் ஒழிய, அடியேன் அங்கு செல்லவே மாட்டேன்... முதலீடு பிறகுதானே... அவ்வாறிருக்க, அந்நியர்களைக் குற்றம் சொல்லிப் பயனில்லை.

மலரில் தேன் இருந்தால் வண்டுகள் சூழும்.

===கரிகாலன்

தங்கவேல்
27-10-2007, 03:16 AM
நாட்டின் மீது அக்கறை கொண்டவர்களால் ஆட்சி அமைக்கப்பட்டால் ஐந்து வருடத்தில் இந்தியாவின் வளர்ச்சி எங்கோ சென்று விடும். ஆனால் கொள்கைகள், கோட்பாடுகள் என்று சண்டையிட்டுக்கொள்ளும் அரசியல் கட்சிகளால் நாட்டின் வளர்ச்சி தடுக்கப்படுகின்றது.

மாதவர்
04-11-2007, 03:39 PM
இன்னும் சிலர் திருந்த மறுக்கிறார்கள்
மாற்றம் அவர்கள் கொள்கைகளுக்கு
ஏமாற்றம்

பென்ஸ்
12-11-2007, 02:55 AM
அருமையான கட்டுரை எழுதி கரிகாலன்ஜியை மீண்டும் எழுத தூண்டிய பூவுக்கு நன்றி...
அருமையான தன் கருத்துகளை கொடுத்த கரிகாலன்ஜிக்கும் நன்றி....
பூ, கரிகாலன்ஜி, இராசகுமாரன் போன்ற ஜம்பவான்கள் இருக்கும் போது நான் வாய் மூடி இருப்பது நலம் என்பது என்கருத்து...

சிவா.ஜி
12-11-2007, 03:59 AM
எது எப்படியோ கரிகாலன்ஜியின் எழுத்துப்படி நாங்களும், (அதாவது வெளிநாட்டில் சம்பாதிக்கும் மொத்த பணத்தையும் தாய்நாட்டுக்கே அனுப்பும்..விவரம் போதாதவர்கள்)அனிலாக இருக்கிறோம் என்பதில் பெருமையாக இருக்கிறது.மற்றபடி ஹிந்தியில் ஒரு பழமொழி சொல்வார்கள்...யானைக்கு இரண்டு பற்கள்...ஒன்று வெளியே தெரிவது, மற்றொன்று மெல்லுவது...என்று.அதுபோலத்தான் இந்தியாவின் வளர்ச்சியும் இருக்கிறது.சந்திரபாபு நாயுடு ஹைதராபாத்துக்கு மட்டும் அரிதாரம் பூசிவிட்டு ஆந்திரத்தை அம்போவென விட்டதைப் போல...பங்கு சந்தை மட்டும் வளர்கிறது....பட்டினித் தற்கொலைகள் தொடர்கிறது. ஜெய்ஹிந்த்.