PDA

View Full Version : முதலாம் சந்திப்பு



கஜினி
12-10-2007, 10:44 AM
முதலாம் சந்திப்பு

இப்பொழுதும் மறையவில்லை
அந்தக் காட்சி
கண்ணில் நிழலாக நிற்கிறது!

என் முதல் சந்திப்பு
மனதிற்குள் பதற்றம்
எங்கே நீ என்னோடு
பேசிவிடுவாயோ என்று!

பதற்றத்தில் என் கால்கள்
முன்னோக்கிப் பயணிக்க
பின்னால் உன் குரல் மட்டும்
பயத்தோடு நான் திரும்ப
அங்கே உன் முகத்தைத் தொலைத்தேன்!

நீ என்னைப் பின்தொடரும்
அந்தக் காட்சி மட்டும்
என் மனதிற்குள்!

கடைசியில் வந்துவிட்டாய் என் அருகே
கூட்டத்தில் தொலைந்தேன் நான்
தேடிக்கொண்டிருந்தாய் என்னை
நீ அந்தக் கூட்டத்தில்!

உன் கண்ணில்
முதல் முறையாய்
என் மனதைப் பார்த்தேன்..!
உன் கண்ணிலோ நீர்
அந்தக் கண்ணீர்
உன் காதலைச் சொன்னது...!