PDA

View Full Version : மன்ற சந்தேகங்கள், பிரச்சினைகள்

mgandhi
24-10-2007, 06:47 PM
Join Date: 05 Aug 2006
Location: கும்பகோணம்
Posts: 1,778
Downloads: 2
Uploads: 0
iCash Credits: 10,690.3

Downloads: 2
Uploads: 0
iCash Credits: 10,690.3

இதன் அர்த்தம் என்ன?

எனக்கு விளங்கவில்லை?

அக்னி
24-10-2007, 06:47 PM
மன்றம் தொடர்பாக எழும் சிறிய சந்தேகங்களையும், பிரச்சினைகளையும் இங்கே எழுப்புவோம்.
தெரிந்த உறவுகள் தாராளமாக உதவிடுவார்கள்.

நன்றி!

~நிர்வாகக்குழு

.

அக்னி
24-10-2007, 06:55 PM
நீங்கள் மன்றத்தில் ஏற்றி இறக்கிய மின்புத்தகங்களின் தகவல்கள் அவை என்று நினைக்கின்றேன். (சரியாகத் தெரியவில்லை)
iCash இல் சிற்சில பிரச்சினைகள் இருக்கலாம்.
மன்ற மேம்படுத்தல் பணிகள் முடியும் போது பூரணமாக்கப்படும். அத்தோடு, மாற்றங்கள் தொடர்பாக விளக்கத் திரியும் கொடுக்கப்படும்.
ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் தெரிவியுங்கள் நண்பர்களே....

பூமகள்
24-10-2007, 06:58 PM
எனக்கும் ஐ-கேஸ் இப்படி வருகிறது அக்னி அண்ணா.

iCash Credits: 24,445.5 [Check]
தளப்பணிகள் முடிந்தால் எல்லாம் சரியாகும் என்று தோன்றுகிறது.

அமரன்
25-10-2007, 07:01 AM
அன்பர்களே...!
ஐகேஷ் மேம்படுத்தல் நடைபெற்றுக்கொண்டு இருப்பதால் இப்படித்தோன்றுகிறது. மேம்படுத்தல் பூர்த்தியானதும் உங்கள் சந்தேகங்கள் நிவர்த்தியாகும்/நிவர்த்தியாக்கும் பதிவு நிர்வாகத்தினரால் கொடுக்கப்படும்.
நன்றி

தென்னவன்
25-10-2007, 02:55 PM
வணக்கம் நண்பரே....
என்னுடைய profile ல் மாற்றம் ஏற்பட்டு உள்ளதே...
மன்றத்தில் மாற்றங்கள் நடப்பதால் மாறி உள்ளதா..??
எனக்கு விளக்கம் தாருங்கள்...

அமரன்
25-10-2007, 02:57 PM
தென்னவன்...!
எப்படிப்பட்ட மாற்றங்கள் என்பதை இங்கே(தெரிவிக்ககூடியதாயின்) அல்லது தனிமடலில் சொல்லமுடியுமா?

தென்னவன்
25-10-2007, 03:06 PM
Biography n Interest ல் மாற்றம் ஏற்பட்டு உள்ளது...

அமரன்
25-10-2007, 03:13 PM
Biography n Interest மாற்றம் சாத்தியமில்லை..
மேம்படுத்தும் குழுவின் கவனத்துக்கு கொண்டு செல்கின்றேன்.
நன்றி.

தென்னவன்
25-10-2007, 03:15 PM
நன்றிகள் நண்பரே....

சூரியன்
25-10-2007, 03:49 PM
நண்பரே இ-பணத்தில் டெபாசிட் என்று ஒரு பகுதி இருக்கிறாதே அது என்ன என்று கூற முடியுமா?

அமரன்
25-10-2007, 03:57 PM
இ - பண மேம்படுத்தல் நிகழ்ந்துகொண்டு இருக்கிறது. முடிந்ததும் இ பணம் தொடர்பான பொது அற்விப்பு கொடுக்கப்படும். அதுவரை காத்திருங்கள் அன்பர்களே..!
நன்றி.

அறிஞர்
25-10-2007, 08:08 PM
Biography n Interest ல் மாற்றம் ஏற்பட்டு உள்ளது...

பொதுவாக தனிப்பட்ட ப்ரோபைலில் மாற்றம் ஏற்படுவதில்லை. தங்களுக்கு எப்படி ஏற்பட்டது எனத்தெரியவில்லை. வார்த்தைகள் எண்ணிக்கை குறைந்து இருப்பதால் மாற்ற ஏற்பட்டிருக்க வாய்ப்புண்டு. தவறுக்கு வருந்துகிறோம். மீண்டும் திருத்திக்கொள்ளுங்கள்..

praveen
27-10-2007, 06:59 AM
தமிழ் மன்றத்தில் தமிழில் பெயர் (லாகின் பெயர்) வைத்திருப்பவர்கள் வெளியே பிரவுசிங் செண்டரில் லாகின் ஆக unicode converter முகப்பு பக்கத்தில் இல்லாததால் ஒரு நண்பர் லாகின் ஆகவே முடியவில்லை என்று மெயில் கொடுத்திருந்தார். தயவு செய்து அதை (unicode converter) முதல் பக்கத்தில் இருந்தால் தமிழில் பெயரை மாற்றி லாகின் ஆக இயலும்.

அன்புரசிகன்
27-10-2007, 09:31 AM
தயவு செய்து அதை (unicode converter) முதல் பக்கத்தில் இருந்தால் தமிழில் பெயரை மாற்றி லாகின் ஆக இயலும்.

இருக்கிறது தானே.... login page ல் unicode converter உண்டு.... அதன்மூலம் தமிழால் உள்நுழையமுடியும்...

praveen
27-10-2007, 10:11 AM
இருக்கிறது தானே.... login page ல் unicode converter உண்டு.... அதன்மூலம் தமிழால் உள்நுழையமுடியும்...

நல்லது நண்பரே, அந்த நண்பர் கானுகையில் (நிர்வாக பணியினால்)அது அங்கு இல்லாமலிருந்திருக்க வேண்டும். நான் தற்போது லாக்-அவுட் ஆகி சோதித்து பார்த்தேன்.

சரி தான் உங்கள் கூற்று.

தென்னவன்
27-10-2007, 11:23 AM
பொதுவாக தனிப்பட்ட ப்ரோபைலில் மாற்றம் ஏற்படுவதில்லை. தங்களுக்கு எப்படி ஏற்பட்டது எனத்தெரியவில்லை. வார்த்தைகள் எண்ணிக்கை குறைந்து இருப்பதால் மாற்ற ஏற்பட்டிருக்க வாய்ப்புண்டு. தவறுக்கு வருந்துகிறோம். மீண்டும் திருத்திக்கொள்ளுங்கள்..

நன்றி அறிஞரே.. மாற்றிகொள்கிறேன்!!

தீபன்
17-01-2008, 02:05 PM
வணக்கம் நிர்வாகிகளே,
அண்மைய சில நாட்களாக என்னால் மன்றம் வரமுடியவில்லை. என் விடுப்பு முடிந்து மீண்டும் பணிக்கு திரும்பியபின் இங்கு வந்து பார்த்தபோது இறுதியாக நான் பதிந்த சில பதிவுகளை காணவில்லை. என்ன காரணம்...? (இறுதியாக நான் ப்திவிலிட்ட தமிழக சுற்றுப்பயணத்திற்கு உதவுங்களேன் என்ற திரியைகூட காணவில்லை..!)

அறிஞர்
17-01-2008, 02:09 PM

மன்னிக்கவும் தீபன். மன்றத்தில் புது வருடத்திற்காக சில மாற்றங்களை செய்யும்பொழுது... ஏற்பட்ட குழப்பத்தால் 25/12/2007-01/01/2008 பதிந்த பதிவுகள்... அழிந்துவிட்டன. மீட்க இயலவில்லை.

ஓவியன்
17-01-2008, 02:10 PM
வணக்கம் நிர்வாகிகளே,
அண்மைய சில நாட்களாக என்னால் மன்றம் வரமுடியவில்லை. என் விடுப்பு முடிந்து மீண்டும் பணிக்கு திரும்பியபின் இங்கு வந்து பார்த்தபோது இறுதியாக நான் பதிந்த சில பதிவுகளை காணவில்லை. என்ன காரணம்...? (இறுதியாக நான் ப்திவிலிட்ட தமிழக சுற்றுப்பயணத்திற்கு உதவுங்களேன் என்ற திரியைகூட காணவில்லை..!)

இந்த திரி உங்களுக்கு பிரச்சினையின் காரணத்தை விளக்கும் தீபன்...

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13949

தீபன்
17-01-2008, 03:59 PM
நன்றி அறிஞர், ஓவியன். இப்பதான் என்ன நடந்திச்சின்னே பாத்தன். சரி சரி, விட்டுத்தள்ளுங்க.

srisha
26-02-2008, 08:32 AM
:confused:you are subscribed to this thread என்றால் என்ன?

praveen
26-02-2008, 11:51 AM
:confused:you are subscribed to this thread என்றால் என்ன?

ஒருவரது புரைபைலில் சப்ஸ்கிரைப் என்ற செட்டிங்கில் பதில் போடும் திரிகள் எல்லாம் என்று டீபால்ட்டாக ஆவது போல இருந்தால், அவர் ஆரம்பித்த, பதில் போடும் திரிகளை எல்லாம் எளிதாக இனம் கான அப்படி தோன்றுகிறது. வேண்டாம் என்றால் திரி மேலே உள்ள டூல்ஸ் என்று அவர் அன் - சப்ஸ்கிரைப் செய்து கொள்ளலாம்.

மேலும் கீழே உள்ளது சென்றால் இன்னும் தெரியவரும்
http://www.tamilmantram.com/vb/profile.php?do=editoptions

சென்று பார்த்தால் Messaging & Notification என்ற தலைப்பில்

When you post a new thread, or reply to a topic, you can choose to automatically add that thread to your list of subscribed threads, with the option to receive email notification of new replies to that thread.

அதில்
Default Thread Subscription Mode: don't subscribe என்று கொடுத்தால் சப்ஸ்கிரிப்சன் ஆகாது.

மேலும் இதுவரை சப்ஸ்கிரிப்ட் ஆனவைகளை பார்வையிட இங்கே சென்று பார்க்கலாம், நீக்கலாம்
http://www.tamilmantram.com/vb/subscription.php

srisha
01-03-2008, 06:04 AM
எனக்கு திரியில் கணினியில் உள்ள படத்தை எப்படி ஏற்றுவது என்று தெரியபடுத்தவும்

அமரன்
01-03-2008, 06:40 AM
சாந்தி!
இங்கே சென்று இதுதொடர்பான விளக்கத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.

http://www.tamilmantram.com/vb/showpost.php?p=269982&postcount=11

srisha
03-03-2008, 06:46 AM
நன்றி அமரன் அவர்களே

srisha
16-03-2008, 12:17 PM
நேற்றிலிருந்து தமிழ் மன்றம் பக்கங்களை save செய்ய முடியவில்லை. ஏன்?.

srisha
16-03-2008, 12:28 PM
upload செய்வதற்க்கும் download செய்வதற்க்கும் அளவு உள்ளதா

அக்னி
16-03-2008, 12:52 PM
upload செய்வதற்க்கும் download செய்வதற்க்கும் அளவு உள்ளதா
படங்கள் பதிவேற்றுதல் தொடர்பான சுட்டி:
படங்கள் ஏற்றும் வசதி (Gallery) - விதிமுறைகள். (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6470)

மின்னிதழ்கள் பதிவிறக்குவதில் எந்தவிதக் கட்டுப்பாடுகளும் இல்லை. ஆனால், ஆனால் நீங்கள் பதிவேற்றும் மின்னிதழ்கள் உரிய பரிசோதனைகளின் பின்னரே அனுமதிக்கப்படும்.

பி.கு:
உங்கள் திரிகள்
மன்றம் மாற்றங்கள் - சந்தேகங்கள் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=12976)
திரியோடு இணைக்கப்படுகின்றது.

srisha
17-03-2008, 06:02 AM
குறிப்பிட்ட பதிவை(part of reply) Quote செய்வதை எப்படி

அன்புரசிகன்
17-03-2008, 05:37 PM
தமிழ் மன்ற வழிகாட்டி. (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=12198) படியுங்கள் ஸ்ரீஷா...

kavitha
20-03-2008, 10:55 AM
பழைய திஸ்கி மன்ற பதிவுகளைப் படிப்பது எப்படி? தயவுசெய்து உதவுங்கள்.

அமரன்
20-03-2008, 11:18 AM
TheneUniTx.ttf (http://www.ezilnila.com/downloads/TheneeUniTx.ttf)
இந்த எழுத்துருவை கணினியின் நிறுவினீர்களானால் திஸ்கிகாலப் பதிவுகளையும் பார்க்கலாம். விஸ்டா பயன்படுத்துவோருக்கு சிக்கல் இருப்பதாக அறிகின்றேன்..

அன்புரசிகன்
20-03-2008, 11:23 AM
பழைய திஸ்கி மன்ற பதிவுகளைப் படிப்பது எப்படி? தயவுசெய்து உதவுங்கள்.

உங்களின் திஸ்கி பதிவுகளை படிக்கவேண்டுமாயின் முதலில் உங்கள் கணினி உலாவியின் என்கோடிங் ஐ western european (ISO) ற்கு மாற்றி பின்னர் அந்த பதிவை copy செய்து கீழே உள்ள மாற்றிமூலம் மாற்றி பின்னர் உங்கள் பதிவை edit செய்து save செய்யுங்கள்.

mgandhi
03-04-2008, 05:42 PM
தமிழ் மன்ற எழுத்துக்கள் மிகச் சிரியவையாக தெரிகிறதே ஏன் ?

அமரன்
03-04-2008, 05:51 PM
எழுத்துரு அளவில் மாற்றம் ஏற்படும் நிகழ்வுகள் நடைபெறவில்லை. இன்னும் விபரித்தால் புரிந்து செயலாற்ற வசதியாக இருக்கும் காந்தி அண்ணா.

அக்னி
03-04-2008, 05:52 PM
தமிழ் மன்ற எழுத்துக்கள் மிகச் சிரியவையாக தெரிகிறதே ஏன் ?
எனக்கு சாதாரணமாகத்தான் உள்ளதே.
வேறு யாருக்கேனும் இப்பிரச்சினை உள்ளதா?

அன்புரசிகன்
03-04-2008, 06:50 PM
தமிழ் மன்ற எழுத்துக்கள் மிகச் சிரியவையாக தெரிகிறதே ஏன் ?

Screen shot ஒன்று தாருங்கள்.

விகடன்
16-04-2008, 04:36 AM
அனைவருக்கும் வணக்கம்.
ஒருங்கிணைப்பாளர் கவனத்திற்கு,

மன்றத்தில் ஓர் சிறு மேம்பாட்டை செய்தால் என்ன?
அதாவது, நம்மில் பெரும்பாலோனோர் அலுவலகங்களிலிருந்துதான் மன்றத்திற்கு வருகிறோம். இல்லையா???

அப்போது நான் எதிர்நோக்கும் பிரச்சினை ஒன்று பெரும்பாலோனோர் மத்தியிலும் இருக்கலாம் என்ற ஓர் யூகத்தில்த்தானிந்த மேம்பாடுத்தலுக்கான வித்திடல்.

அதாவது,
ஒவ்வொரு பக்கத்திலும் மேற்பகுதியில் படங்களுடன் கூடிய தலைப்பு தென்படுகிறது, இது பல் நாட்டவர்களுடன் பணி புரியும் போது அவர்கள் பார்வைக்கு தப்பாகவே தன்படும். அதாவது, இணையத்தில் படங்களை பார்த்து காலம் போக்குவதாகவே முத்திரை குத்திவிடுவர்.

அதுவே,
அந்தத்தலைப்பை தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ மறைத்து வைக்க வசதியேற்படுத்தியிருப்பின் எம்போன்ற பலரிற்கு பிரியோசனமாக இருக்கும்!!!

இந்த விடயத்தை நன்கு ஆலோசித்து நல்லதொரு முடிவுக்கு வரவும்.

அமரன்
16-04-2008, 11:52 AM
விராடன்!
மன்ற லோகோவையும், தற்போதுள்ள புத்தாண்டு வாழ்த்தையும் சொல்கின்றீர்களா? சுழற்சி முறையில் படங்கள் வரும்போது, இணையத்தில் படம் பார்த்து காலம் கழி(ளி)க்கிறார் என்று தப்பர்த்தம் கொள்ள நிகழ்தகவு அதிகம். நிலையான இரு படங்கள் இருக்கும்போது மிகக்குறைவு. எனினும் உங்கள் கருத்து நிர்வாகக் கூட்டாலோசனைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.

நன்றி.

SathyaThirunavukkarasu
16-04-2008, 12:22 PM
என்னிடம் சில நல்ல தகவல்கள் powerpoint, exel fomat-ல் உள்ளது.அதை எப்படி மன்றத்தின் பார்வைக்கு கொண்டுவருவது,மன்ற நண்பர்களே சகோதரரகளே என் சிறு அய்யத்திற்கு பதில் தாருங்களேன்

அன்புரசிகன்
16-04-2008, 02:00 PM
என்னிடம் சில நல்ல தகவல்கள் powerpoint, exel fomat-ல் உள்ளது.அதை எப்படி மன்றத்தின் பார்வைக்கு கொண்டுவருவது,மன்ற நண்பர்களே சகோதரரகளே என் சிறு அய்யத்திற்கு பதில் தாருங்களேன்

அவற்றை ஏதாவது இணையத்தில் ஏற்றி நம் மன்னிறில் ஒரு திரி ஆரம்பித்து அங்கே உங்கள் சுட்டிகளை தரலாம். உங்களின் கோப்புக்கள் எவ்வகையானது???

நீங்கள் megashare.com mediafire.com போன்ற இணையங்களில் ஏற்றி பகிரலாம்.

விகடன்
17-04-2008, 11:10 AM
விராடன்!
மன்ற லோகோவையும், தற்போதுள்ள புத்தாண்டு வாழ்த்தையும் சொல்கின்றீர்களா? சுழற்சி முறையில் படங்கள் வரும்போது, இணையத்தில் படம் பார்த்து காலம் கழி(ளி)க்கிறார் என்று தப்பர்த்தம் கொள்ள நிகழ்தகவு அதிகம். நிலையான இரு படங்கள் இருக்கும்போது மிகக்குறைவு. எனினும் உங்கள் கருத்து நிர்வாகக் கூட்டாலோசனைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.

நன்றி.

படங்களை அப்பட்டமாக அகற்றிவிடச் சொல்லவில்லை அமரன்.
அவற்றை சுருக்கி தற்காலிகமாக மறைக்க ஏதுவாக்க முடியும். அதை முடிந்தால் செய்யச் சொன்னேன்.

படங்களை பார்க்க விரும்புவோர் அவற்றை அப்படியே விடலாம். நானும் அலுவலகத்திலில்லாதபோது அவற்றை தென்படும் வகையில் வழிசெய்திட முடியும்.

SathyaThirunavukkarasu
17-04-2008, 11:17 AM
அவற்றை ஏதாவது இணையத்தில் ஏற்றி நம் மன்னிறில் ஒரு திரி ஆரம்பித்து அங்கே உங்கள் சுட்டிகளை தரலாம். உங்களின் கோப்புக்கள் எவ்வகையானது???

நீங்கள் megashare.com mediafire.com போன்ற இணையங்களில் ஏற்றி பகிரலாம்.
எப்படி ஏற்ற சொல்கிறீர்கள் அண்ணா?!!!!!!!!!தயவுசெய்து கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்களேன்
என்னிடம் பழங்களின் உபயோகம், உடல்நலம் குறித்து உள்ளது

SathyaThirunavukkarasu
17-04-2008, 11:23 AM
எனக்கு ஒரு மின்னிதழ் வந்துள்ளது from aringar@gmail.com என்ற நபரிடம் இருந்து அதில் with regards tamilmantram னு போட்டிருக்கு யார் அனுப்பியுள்ளார்கள் என்று தெரியவில்லையே, மற்றும் அது தமிழில் உள்ளது ஆனால் எனக்கு அந்த எழுத்தும் எனக்கு தமிழில் வரவில்லை
தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்

அமரன்
17-04-2008, 11:34 AM
காலாண்டுக்கு ஒருமுறை மன்றத்தில் மலரும் நந்தவனம் மின்னிதழ் பற்றிய மடல் அது. நிர்வாகியால் அனைத்து உறுப்பினருக்கும் அனுப்பப்பட்டது. உங்கள் மின்னஞ்சலின் என்கோடிங்கை மாற்றிப் பாருங்கள் படிக்கக்கூடியதாக இருக்கும்.

praveen
17-04-2008, 12:39 PM
படங்களை அப்பட்டமாக அகற்றிவிடச் சொல்லவில்லை அமரன்.
அவற்றை சுருக்கி தற்காலிகமாக மறைக்க ஏதுவாக்க முடியும். அதை முடிந்தால் செய்யச் சொன்னேன்.

படங்களை பார்க்க விரும்புவோர் அவற்றை அப்படியே விடலாம். நானும் அலுவலகத்திலில்லாதபோது அவற்றை தென்படும் வகையில் வழிசெய்திட முடியும்.

பொது இடத்தில் தளம் வலம் வருபவர்கள் தலைப்பை சுருக்க ஒரு சிறு ஆரோ அங்கே அமைக்கப்பட வேண்டும் என்கிறார்.

நான் பிறிதொரு இடத்தில் இதை பார்த்திருக்கிறேன். (பொது இட தலைப்பு சுருக்கி என்று இருக்கும்)

அன்புரசிகன்
17-04-2008, 02:20 PM
படங்களை அப்பட்டமாக அகற்றிவிடச் சொல்லவில்லை அமரன்.
அவற்றை சுருக்கி தற்காலிகமாக மறைக்க ஏதுவாக்க முடியும். அதை முடிந்தால் செய்யச் சொன்னேன்.

படங்களை பார்க்க விரும்புவோர் அவற்றை அப்படியே விடலாம். நானும் அலுவலகத்திலில்லாதபோது அவற்றை தென்படும் வகையில் வழிசெய்திட முடியும்.

http://img36.picoodle.com/img/img36/4/4/17/f_pllm_2ca27d8.jpg http://img32.picoodle.com/img/img32/4/4/17/f_plm_9ab9f3e.jpg

இவற்றை தானே சொல்கிறீர்கள்??? ஆனால் இது மன்ற மென்பொருளுக்கு உட்பட்டது.

இராசகுமாரன் அண்ணாவின் பதிலுக்காக காத்திருப்போம்.

SathyaThirunavukkarasu
17-04-2008, 02:40 PM
காலாண்டுக்கு ஒருமுறை மன்றத்தில் மலரும் நந்தவனம் மின்னிதழ் பற்றிய மடல் அது. நிர்வாகியால் அனைத்து உறுப்பினருக்கும் அனுப்பப்பட்டது. உங்கள் மின்னஞ்சலின் என்கோடிங்கை மாற்றிப் பாருங்கள் படிக்கக்கூடியதாக இருக்கும்.

மிக்க நன்றி

அனுராகவன்
18-04-2008, 06:50 AM
எனக்கு ஒரு மின்னிதழ் வந்துள்ளது from aringar@gmail.com என்ற நபரிடம் இருந்து அதில் with regards tamilmantram னு போட்டிருக்கு யார் அனுப்பியுள்ளார்கள் என்று தெரியவில்லையே, மற்றும் அது தமிழில் உள்ளது ஆனால் எனக்கு அந்த எழுத்தும் எனக்கு தமிழில் வரவில்லை
தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்
எனக்கும் வந்தது தங்கை அவர்களே!!
அதனை நம் மன்றத்திலிருந்து அனுப்பியதுதான்..
தமிழில் வரவில்லையா..

SathyaThirunavukkarasu
19-04-2008, 12:22 PM
எனக்கும் வந்தது தங்கை அவர்களே!!
அதனை நம் மன்றத்திலிருந்து அனுப்பியதுதான்..
தமிழில் வரவில்லையா..

ஆமாம் அக்கா நானும் எவ்வள்வோ முயர்ச்சி செய்துவிடேன்

விகடன்
22-04-2008, 07:28 PM
நான் பிறிதொரு இடத்தில் இதை பார்த்திருக்கிறேன். (பொது இட தலைப்பு சுருக்கி என்று இருக்கும்)

பிறிதொரு இடத்திலிருக்கிறதோ இல்லையோ எனக்குத்தெரியாது,

ஆனால் நம் மன்றத்தில் இருக்கிறது.
அதில் தாங்கள் குறிப்பிட்டது போன்று எழுத்து வடிவில் எந்த அறிவித்தலுமில்லை. பார்ப்பவர் இலகுவில் அதன் பயன்பாட்டை அறிந்துகொள்ளும் வகையில் இருக்கிறது.

ஓவியா
24-04-2008, 10:19 AM
அவை சான்றோர்களுக்கு வணக்கம்.

ஏன் எனக்கு வெளியில் இருந்து பார்த்தால் மன்றத்தில் எத்தனை மக்கள் 'ஆன்லினில்' இருக்கிறார்கள் என்ற விசயம் தெரிய மாட்டேன் என்கிறது??

முன்பு முகப்பு அட்டையில் தெரிந்ததே!!

எத்தனை உறுப்பினர்கள் வந்து சென்றுள்ளனர் என்றும் தெரிந்ததே, அது இப்பொழுது மறைக்கப்பட்டுல்லதா?

எத்தனை மக்கள் இன்று எழுதியுள்ளனர்கள் என்றும் தெரியும், அதுவும் தெரியவில்லை!!

நன்றி வணக்கம்.

அறிஞர்
24-04-2008, 01:49 PM
#53 - மன்றத்தின் வேகத்திற்கு இந்த மாறுதல்களை செய்து இருக்கிறோம்.

அன்புரசிகன்
24-04-2008, 02:21 PM
அவை சான்றோர்களுக்கு வணக்கம்.

ஏன் எனக்கு வெளியில் இருந்து பார்த்தால் மன்றத்தில் எத்தனை மக்கள் 'ஆன்லினில்' இருக்கிறார்கள் என்ற விசயம் தெரிய மாட்டேன் என்கிறது??

அன்பு அக்காவுக்கு... உங்கள் கேள்விக்கு அறிஞரின் பதிலுக்கு அப்பால்.... ஏன் இந்த அன்னியத்தனம்... மன்றத்தில் உங்கள் கை பிடித்து வளர்ந்த நான்... சொல்லப்போனால் இன்று பொறுப்பாளர் ஆக காரணியாக இருந்தவர் என்று சொல்லலாம்... நீங்கள் எதற்கு வெளியிலிருந்து பார்க்கவேண்டும்... உரிமையுடன் உள்ளே வாருங்கள்.... மனது கனக்கிறது. அந்த வார்த்தை பார்த்து....

ஓவியா
24-04-2008, 03:54 PM

இல்லாபா,
எனக்கு ஒரு முக்கியமான சபதம் இருக்கு, (படிப்பு அல்ல) அதை நினைவேற்றியபின் வருவேன். அதற்க்கு கொஞ்சம் உழைக்க வேண்டும். அதனால் கடினமாக உழைக்கிறேன்.

என் செல்போனை கூட அத்தனை முறை நான் பார்க்க மாட்டேன். ஆனால் மணிக்கு 2 முறை மன்றத்தில் எட்டி பார்த்து விடுவேன்.நான் உள்ளே வரேனோ இல்லையோ, மன்றத்தை பார்த்தாலே எனக்கு சந்தோஷம். :D:D:D

ஏலே உன் மனம் கனத்தால் பூமியில் குழி விழும், (உன்னையும் மனதையும் சேர்த்தால்) :redface::redface: மக்கள் நலன் கருதி அந்த உணர்வை விட்டு விடு. :lachen001::lachen001:

*************************************************************************

அறிஞர் சார் இது எப்பொழுது சுபமாகும்?

ஓவியா
25-04-2008, 07:44 AM
நண்பர்களே...
வாக்களிப்பு இன்றுடன் நிறைவடைய இருப்பதனால், வாக்களிக்காதோர் தங்கள் பங்களிப்பை நல்க அன்புடன் அழைக்கின்றோம்.

நன்றி!

~நிர்வாகக்குழு

அக்னியரே,
நானும் ஷீயும் முன்பே ஒரு ஆலோசனை சொன்னோம், முக்கியமான தகவல்களை முகப்பு அட்டையில் 'போப்-ஆப்' மேனு ஒன்று வைத்து அதில் உள்ளே வரும் பொழுது பதிவாளர்களைன் கவனத்திற்க்கு கொண்டு செல்லுங்கள் என்று.

சில திரிகளின் கிழே சென்று ஒவ்வொரு நபரின் பெயர்களையும் காணுங்கள். பலர் ஒரு பின்னூட்டம் போடதோடு சரி, மீண்டும் வருவதில்லை. அதனால் இதுபோழ் தகவல்கள் சென்று சேர்வது கொஞ்சம் கடினம். அதற்க்கு போப்-ஆப் தான் சாலச்சிறந்தது.

தற்ப்பொழுது நடைபெரும் மாறுதல் செயல்ப்பாட்டில் இதையும் இணைக்க முயலுங்களேன்.

நன்றி.

அமரன்
25-04-2008, 07:49 AM
அக்கா..

நீங்கள் குறிப்பிட்ட இந்த நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டு, நடைமுறைச் சிக்கல்கள் சிலவால் கைவிடப்பட்டது. நிர்வாகக் கூட்டாலோசனையின் பின்னர் இது தொடர்பாக இறுதி செய்கின்றோம்..

ஓவியன்
25-04-2008, 07:53 AM
அக்கா, முன்னர் மன்றத்தில் சில திரிகளை கட்டாயம் வாசிக்கும் முறையை அமுல் படுத்தினோம், ஆனால் அப்போது மன்றத்தில் இதனை வாசியுங்கள் என்று திணிக்கிறீர்களே என்ற குற்றச்சாட்டு மன்ற உறவுகளால் எழுப்பப்பட்டு அந்த முயற்சி கைவிடப்பட்டது...!! :frown:

இப்போது, நீங்கள் கூறுவதும் அதே போன்ற ஒன்று.......!! :cool:

ஓவியா
25-04-2008, 07:56 AM
நீங்கள் குறிப்பிட்ட இந்த நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டு, நடைமுறைச் சிக்கல்கள் சிலவால் கைவிடப்பட்டது. நிர்வாகக் கூட்டாலோசனையின் பின்னர் இது தொடர்பாக இறுதி செய்கின்றோம்..

நன்றி அமரன்.

இந்த சலுகை மன்றத்தை சிறக்கச்செய்யும்.
மீண்டும் அமல் படுத்துவது நல்லது.

முயற்ச்சி செய்யுங்கள். கடினம் என்றால் விட்டு விடுவோம். :)

ஓவியா
25-04-2008, 07:59 AM
அக்கா, முன்னர் மன்றத்தில் சில திரிகளை கட்டாயம் வாசிக்கும் முறையை அமுல் படுத்தினோம், ஆனால் அப்போது மன்றத்தில் இதனை வாசியுங்கள் என்று திணிக்கிறீர்களே என்ற குற்றச்சாட்டு மன்ற உறவுகளால் எழுப்பப்பட்டு அந்த முயற்சி கைவிடப்பட்டது...!! :frown:

இப்போது, நீங்கள் கூறுவதும் அதே போன்ற ஒன்று.......!! :cool:

கட்டாயம் ஆகாதீர்கள், அது தவறு. :cool:

முகப்பு அட்டயில் நடுபக்கத்தில் ஒரு போப்-ஆப்பில் லிங்கை கொடுங்கள் போதும். விரும்பினால் அவர்கள் தட்டி காணட்டும்.

லோக்-இன் செய்தால் மட்டுமே ஒரு முறை போப்-ஆப் வந்து போவது போல் செய்யுங்கள்.

இராஜேஷ்
04-05-2008, 12:41 PM
i am not able to download e books from mandram, could anybody help me????????

i do not know tamil typing, thats why i am typing in english

ஓவியன்
04-05-2008, 02:50 PM
i am not able to download e books from mandram, could anybody help me????????

i do not know tamil typing, thats why i am typing in english

இந்த திரியைச் சொடுக்கிப் பாருங்கள்

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=12198

உங்களுக்கு வேண்டியதெல்லாம் கிடைக்கும்...!! :)

santhan
17-05-2008, 08:06 PM
திரி என்ரு சொல்லுரின்கலெ . அப்படி என்ட்ரல் என்ன.

அமரன்
17-05-2008, 08:11 PM
thread என்பதன் தமிழ்ப் பதம் திரி.. புதிய விடயத்தை, புதிய தாளில் எழுதத் தொடங்குவது போல, புதிய விடயத்தை புதிய திரியில் தட்டச்சலாம். சுருக்கமாக சொன்னால், ஈழத்தில் கொப்பி என்பார்களே.. அதன் புதிய பக்கம் போன்றது.

சுகந்தப்ரீதன்
26-05-2008, 12:15 PM
Strict Standards: Assigning the return value of new by reference is deprecated in /home/tamilman/public_html/vb/showthread.php on line 606

Strict Standards: Assigning the return value of new by reference is deprecated in /home/tamilman/public_html/vb/showthread.php on line 1004

Strict Standards: Assigning the return value of new by reference is deprecated in /home/tamilman/public_html/vb/showthread.php on line 1009

Strict Standards: Assigning the return value of new by reference is deprecated in /home/tamilman/public_html/vb/showthread.php on line 1472

Strict Standards: Assigning the return value of new by reference is deprecated in /home/tamilman/public_html/vb/showthread.php on line 1477
http://www.tamilmantram.com/vb/tmlogonew.gif (http://www.tamilmantram.com/vb/index.php)http://www.tamilmantram.com/pic/nanthavanam2.gif (http://www.mediafire.com/?jdrb1dddzdn)

எனக்கு ஒவ்வொரு திரியை திறக்கும்போதும் திரியின் மேல்புறத்தில் இதுபோன்ற பிரச்சனை வருகிறதே ஏன்..?? யாருக்கேனும் இதுபற்றி விவரம் தெரிந்தால் நான் என்ன செய்யவேண்டுமென கூறுங்களேன்..!!

பூமகள்
26-05-2008, 12:31 PM
சுகந்தா..
எனக்கும் இதே எரர் வந்து கொண்டே இருக்கிறது.. அநேகமாக மன்ற உறுப்பினர் அனைவருக்கும் வருமென நம்புகிறேன்..!

நான் ஓரளவு PHPயில் வேலை செய்திருக்கிறேன் என்ற முறையில்..இங்கு பதில் சொல்லலாமென நம்புகிறேன்.:icon_ush:
எரர் ஹேண்டலிங்கில் E_STRICT என்பதை டர்ன் ஆஃப் செய்தால் சரியாகுமென நினைக்கிறேன்..! கட்டாயம் சரியாகும்..!:icon_b:

இதைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள..
http://www.php.net/manual/en/ref.errorfunc.php#ini.error-reporting
இந்த சுட்டியில் இப்பிரச்சனைக்கான தீர்வு இருக்கிறது.

அதை கோட் லெவலில் செய்ய வேண்டும்.. இந்த தளம் PHP மூலம் வடிவமைக்கப்பட்டிருப்பதால்.. யார் அதன் தற்போதைய கோப்புகளை பராமரிக்கிறார்களோ..அவர்களிடம் முறையிடுங்கள்..அல்லது உங்களால் செய்ய முடியுமெனில் மேற்கூறிய படி செய்து பாருங்கள்.

சுகந்தப்ரீதன்
26-05-2008, 12:44 PM

மிக்கமிக்க நன்றி பூ.. உடனடி தகவல் தந்தமைக்கு..!!

நீ சொன்ன லிங்கில் சென்று பார்த்தேன்.. எனக்கு ஒன்றும் புரிந்தமாதிரி இல்லை.. ஆகையால் நிர்வாகத்திற்க்குதான் நான் செல்லவேண்டும் இனி..!!

நிர்வாகம் இந்த பிரச்சனையை விரைவில் சரி செய்யும் என்று நான் நம்புகிறேன்..!!

பூமகள்
26-05-2008, 12:55 PM
நான் இதில் பதித்து விட்டு பார்த்ததில்.. நிலைமை சரியாகியிருக்கிறது சுபி...!!

நீயும் மேலே பாரேன்.. இப்போது எரர் வரவில்லை தானே?? :)

சுகந்தப்ரீதன்
26-05-2008, 01:08 PM
நான் இதில் பதித்து விட்டு பார்த்ததில்.. நிலைமை சரியாகியிருக்கிறது சுபி...!!

நீயும் மேலே பாரேன்.. இப்போது எரர் வரவில்லை தானே?? :)
ஆமாம்..பூ..ஆமாம்..இப்ப பிரச்சனை வரவேயில்லையே..ஏன்..??!!

அமரன்
26-05-2008, 04:24 PM
ஐரோப்பிய நேரம் இரவு எட்டிலிருந்து இந்தப்பிரச்சினை இருந்தது. இராசகுமாரன் அண்ணா வந்து சரிசெய்துவிட்டார்.

சூரியன்
26-05-2008, 04:28 PM
எனக்கு இதுபோன்ற சிக்கல் ஏதும் வரவில்லை.

பூமகள்
26-05-2008, 05:21 PM
மிகச் சிறிய தொழில்நுட்ப கோளாறு தான் தம்பி..!!
தளத்தினை உருவாக்கிய PHP கோப்புகளில் எரர் ஹேண்டலிங்கில் தான் பிரச்சனை..!

அதை ராஜகுமாரன் அண்ணா வந்ததுமே சரிசெய்திருப்பார்.. பொதுவாக.. ஏதேனும் மாற்றங்கள் சின்ன சின்ன மாற்றங்கள் என்றாலும் php கோப்புகளில் செய்கையில் இப்படியான எரர்கள் வருவது இயற்கையே..அதை எளிதில் சரி செய்துவிட முடியும்..!!

ஆகவே.. பெரிய தொழில் நுட்ப பிரச்சனை என்ற அளவிற்கு இது பெரிதெனக் கருதி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை சகோதரர்களே..! :)

சூரியன்
29-05-2008, 04:51 PM
மிகச் சிறிய தொழில்நுட்ப கோளாறு தான் தம்பி..!!
ஆகவே.. பெரிய தொழில் நுட்ப பிரச்சனை என்ற அளவிற்கு இது பெரிதெனக் கருதி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை சகோதரர்களே..! :)

விளக்கத்திற்கு நன்றி அக்கா.

சூரியன்
06-06-2008, 04:04 PM
குறிஞ்சி மன்றத்தில் புதிகாக ஒரு பகுதி சேர்க்கப்பட்டுளதே அதை பற்றிய தகவல்களை தரவும்.

அறிஞர்
06-06-2008, 05:20 PM
குறிஞ்சி மன்றத்தில் புதிகாக ஒரு பகுதி சேர்க்கப்பட்டுளதே அதை பற்றிய தகவள்களை தரவும்.
புதிய பகுதி பெயரிலே கண்டுபிடிக்கலாமே....

பூமகள்
06-06-2008, 06:07 PM
மன்றத்தில் காலாண்டுக்கு ஒரு முறை நந்தவனம் பூக்கச் செய்யும் முயற்சி ஆரம்பிக்கப்பட்டிருப்பதால் இந்த ஆலோசனை எனது நெஞ்சில் வந்தது..

இந்த பகுதியில் இந்த பதிவு இடக் கூடாது எனில்.. தகுந்த இடத்துக்கு மாற்றுமாறு பொறுப்பாளர்களை கேட்டுக் கொள்கிறேன்..

பதிவுகளை பரிந்துரை செய்வதற்கு... இலகுவான வசதியாக ஒரு உத்தி தோன்றியது..

வெகுவான அவசரத்தில்.. பணிகளுக்கு இடையில் மன்றம் வரும் பலர்.. நல்ல பதிவுகளைப் படித்து அதனை பரிந்துரைக்க மறந்தோ.. அல்லது பரிந்துரைச் சுட்டியை தேடியோ ஓடாமல் இருக்க... ஒவ்வொரு திரியிலும் அதன் ஆரம்பத்தில்.. 'ரிப்போர்ட் போஸ்' க்கு பக்கத்தில் ஒரு சின்ன லிங்குள்ள ஐகான் கொடுத்து அதை கிளிக் செய்தால் அந்த பதிவு.. பரிந்துரைக்கும் பகுதியில் சென்று புதிய திரியை உருவாக்கி அமர்ந்து கொள்ளுமாறு செய்யலாமே.. அதனால்.. நேரம் மிச்சமாவதோடு.. எளிதில் நல்ல பதிவுகளை அடையாளமும் காண முடியுமே...!! அல்லது இதை விட நல்ல வழிமுறை இருப்பினும் சொல்லுங்கள்.

இதை செய்ய இயலுமா என்று தொழில்நுட்ப ரீதியில் முயற்சித்துவிட்டு சொல்லுங்களேன்..

சூரியன்
07-06-2008, 12:51 PM
”நிர்வாகத்தினர் கலந்துரையாடி, இயலுமானால் நடைமுறைப்படுத்துவார்கள். அதற்குப் பரிந்துரைக்கின்றேன்”

sownthar
12-06-2008, 03:52 AM
நல்ல பயனுள்ள தகவல், நன்றிகள் பல...

தீபன்
01-07-2008, 12:25 AM
மன்றத்தில் கடிகாரம்...

நம் மன்றத்துடன் உலகில் பல பாகங்களிலிருந்தும் நண்பர்கள் இணைந்து கொள்கிறார்கள். இவர்கள் கலந்துரையாடும் பொழுதும் பதிவுகளை மேற்கொள்ளும் பொழுதும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நேரத்திலும் சிலவேளை வெவ்வேறு திகதியிலும் ஒரே நேரத்தில் இயங்கிகொண்டிருப்பர்...

இந்நிலையில், மன்றத்தளம் எந்த நேரத்தை காட்டுகிறதென தெரிந்தால் பதிவுகளை அதனடிப்படையில் மேற்கொள்ள இலகுவாக இருக்கும்.

கிறீன் விச் நேரத்தை அடிப்படையாக கொண்டே தளத்தின் நேரம் சுட்டப்படுகிறதென நினைக்கிறேன். இதையே மன்ற முகப்பு பக்கத்தில் அல்லது மேல் மூலையில் தலைப்போடு சேர்த்து நேரம், திகதி, கிழமை என்பவற்றை சுட்டக்கூடியதாக காண்பித்தால் பயனாளர்களுக்கு பல்வேறு வசதிகளை தரும்.
ஆவன செய்வார்களா நிர்வாகத்தினர்...?

நேரம் மட்டும் தளத்தின் அடியில் காட்டப்படுகிறது. ஆனால், கிழமை, திகதி இருந்தால்தான் இதன் பயன் பூரணமாகுமென நினைக்கிறேன்.

அன்புரசிகன்
01-07-2008, 02:35 AM
User CP > Edit Option ல் சென்றால் Date & Time Options என இருப்பதில் உங்களுக்கு ஏற்றாற் போல் மாற்றிக்கொள்ளலாம். எல்லோரும் ஒரே நேரத்தில் வைத்திருக்கவேண்டும் என்பது கடினம். தவிர அது நமக்கும் பல அசௌகரியங்களை உருவாக்கும்...

மன்றம் இந்த நேர அடிப்படையில் தான் இயங்குகிறது என்று இல்லை. மாறாக நீங்கள் மாற்றாத வரை அது GMT ஐ தான் காட்டும். நீங்கள் உறுப்பினராக பதியும் போதே இது கேட்டிருக்கும். மன்றம் vBulletin எனும் மென்பொருளால் உருவாக்கப்பட்டிருப்பது உங்களுக்கு தெரிந்திருக்கும்... அதில் நீங்கள் கூறிய கிழமைகள் வசதி இருந்தால் அது கிடைக்கும். நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டுவருகிறேன்...

அறிஞர்
01-07-2008, 01:34 PM
தீபன்...

ஒவ்வொருத்தருக்கும்.. அவரவர் மணி இருந்தால் தான் நன்றாக இருக்கும். அதற்கான் தேர்வு.. அன்புரசிகன் சொன்ன இடத்தில் இருக்கிறது.

போட்டிகள் நடத்தும்பொழுது மட்டும் தான், நேரத்தை வரையறுக்கிறோம் (பொதுவாக தமிழக/இந்திய நேரத்தை குறிப்பிடுகிறோம்).

தீபன்
04-07-2008, 04:14 AM
நேரத்தை மட்டுமல்ல, திகதி கிழமை போன்றனவும் தெரிந்தால் நன்றாக இருக்குமென சொன்னேன். உங்கள் விளக்கங்களிற்கு நன்றி நண்பர்களே.

சுகந்தப்ரீதன்
28-07-2008, 04:46 AM
என்னோட திரியை யார் யார் படிச்சாங்கன்னு இப்பல்லாம் எனக்கு தெரியமாட்டேங்குதே... அது ஏன்னு தெரிஞ்சவங்க கொஞ்சம் சொல்லுங்களேன்..??

யவனிகா
28-07-2008, 08:34 AM
என்னோட திரியை யார் யார் படிச்சாங்கன்னு இப்பல்லாம் எனக்கு தெரியமாட்டேங்குதே... அது ஏன்னு தெரிஞ்சவங்க கொஞ்சம் சொல்லுங்களேன்..??
ஆமாம் சுகந்தா...திரிக்குள்ள யார் யார் இருக்கறாங்க அப்படீப்க்கறதும் தெரியலை அக்கா...அப்படின்னு ஒரு ஜீவன் போன் பண்ணி புலம்புது...ஆளைப்பாத்து...சேர் போட்டு திரிக்குள்ள உக்காந்து அடாவடி பண்ணிண ஆளு அது....இப்ப மனசொடிஞ்சு போச்சு...கொஞ்சம் போட்டு விடுங்க மாண்புக்குரிய பச்சைச்சட்டை பெருந்தலைகளே.!!!

அமரன்
28-07-2008, 11:35 AM
அந்த வசதி தற்போது நீக்கப்பட்டுள்ளது. யார் படித்தார்கள் என்ற பட்டியலில் உள்ள பெயரைத் தட்டினால் அவர் படித்த திரிகளை மட்டுமல்லாது அவருடைய ஐ.பி அட்ரசையும் தருகிறது. ஒருவருடைய ஐ.பி அட்ரசை பகிரங்கப்படுத்துவது பாதிப்பை ஏற்படுத்தலாம் எனக்கருதி வசதி ரத்துச்செய்யப்படது. யார் யார் படித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பது மன்றத்துன் வேகத்தின் பொருட்டு ரத்துச் செய்யப்பட்டது..

நன்றி.

ஓவியா
28-07-2008, 12:09 PM
ஐபி பார்வைக்கு வருகின்றது என்று பல மாதங்களுக்கு முன்பே நான் அறிஞரிடம் சொல்லியிருந்தேன்.

அதை நிவர்த்தி செய்வது மிகவும் சரியே.

ஆனால் நமது திரியை யார்-யார் பார்வையிட்டனர் என்பதும் தற்ப்பொழுது யார் பார்த்துக்கொண்டிருக்கின்றனர் என்பதும் ஒரு தேவையான விசயமாக இருப்பதால் அதை வெகு விரைவில் நிவர்த்தி செய்யுங்கள் என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.

சுகந்தப்ரீதன்
28-07-2008, 01:16 PM
பின்னூட்டம் போடலைன்னாலும் யார்யார் படிச்சிருக்காங்கன்னு பார்த்து சந்தோசப்பட்டுக்குற என்னை மாதிரி ஆளுங்களுக்கு நிர்வாக நடவடிக்கை சற்று வருத்தமாத்தான் இருக்கும்.. ஆனா ஒரு வகையில பார்த்தா அதுவும் நல்லதுக்குதான்.. இனி படிச்சிட்டு பின்னூட்டம் போடலையேன்னு யாருமேலயும் வருத்தம் வராதில்ல எனக்கு..!!

மிக்க நன்றி நிர்வாகிகளே..!!

அறிஞர்
28-07-2008, 02:07 PM

எப்பொழுது இருந்து தெரியவில்லை...

அனைவருக்கும் தெரிகிறது என்றே எண்ணியிருந்தேன்.. விரைவில் கவனிக்கிறேன் சுகந்தப்ரீதன்

ஓவியா
28-07-2008, 02:12 PM
எனக்கு கடந்த 3-4 தினங்களாக இது நடக்கிறது. யார் வந்தா, யார் போனா'னு தெரியவில்லை.

அறிஞர்
28-07-2008, 02:13 PM
எனக்கு கடந்த 3-4 தினங்களாக இது நடக்கிறது. யார் வந்தா, யார் போனா'னு தெரியவில்லை.
இன்னும் ஒரு சில நாளில் இது சரியாகும்.

ஓவியா
28-07-2008, 02:19 PM
நன்றி தலை(வா)வரே. :)

அறிஞர்
28-07-2008, 04:19 PM
கேட்ட வசதி கிடைத்ததா.. சுகந்தப்ரீதன்

சுகந்தப்ரீதன்
29-07-2008, 04:25 AM
கேட்ட வசதி கிடைத்ததா.. சுகந்தப்ரீதன்
கேட்டதும் கிடைத்தது... மிக்க நன்றியண்ணா..:icon_b:

கூடவே வேறொரு பிரச்சனை உருவாகியுள்ளதே அறிஞரண்ணா.. ஒரு திரிக்கு உள்ளே செல்லவும் பதிவுகள் இடவும் பயனாளர் பெயரையும் கடவுச்சொல்லையும் கேட்கிறதே.. அதையும் கொஞ்சம் தீர்த்து வையுங்களேன்...!!

இப்போது இதைக்கூட "சேவ் சேஞ்சஸ்" கொடுத்துவிட்டு நான் பயனாளர் பெயரையும் கடவுசொல்லையும் அடிக்க வேண்டும்..!!

சுகந்தப்ரீதன்
29-07-2008, 01:44 PM
இப்போது இதைக்கூட "சேவ் சேஞ்சஸ்" கொடுத்துவிட்டு நான் பயனாளர் பெயரையும் கடவுசொல்லையும் அடிக்க வேண்டும்..!!இப்போது எனக்கு இந்த பிரச்சனை நீங்கிவிட்டது... தீர்த்துவைத்த நிர்வாகத்திற்க்கு நன்றி..!!:icon_b:

ஓவியா
29-07-2008, 02:37 PM
எனக்கும் பிரச்சனை தீர்ந்தது. மிக்க நன்றி.

சுகந்தப்ரீதன்
02-08-2008, 01:05 PM
ஒரு திரிக்கு உள்ளே செல்லவும் பதிவுகள் இடவும் பயனாளர் பெயரையும் கடவுச்சொல்லையும் கேட்கிறதே.. அதையும் கொஞ்சம் தீர்த்து வையுங்களேன்...!!
இப்போது இதைக்கூட "சேவ் சேஞ்சஸ்" கொடுத்துவிட்டு நான் பயனாளர் பெயரையும் கடவுசொல்லையும் அடிக்க வேண்டும்..!!
மறுபடியும் எனக்கு இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது.. இது மன்றத்தில் ஏற்படும் கோளாறா..? இல்லை எனது இணைய தொடர்பில் ஏற்படும் கோளாறா..?? எனக்கு ஒரே குழப்பமாய் இருக்கிறது.. தெரிந்தவர்கள் கொஞ்சம் விளக்கமாக கூறி எனக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்...!!

அறிஞர்
03-08-2008, 01:11 AM

தங்களுடைய இணைய பிரச்சனையாக இருக்கும் என எண்ணுகிறேன்.

வேறு யாருக்கும் இந்த பிரச்சனையில்லையே..

Muthuvijayan
04-08-2008, 09:09 AM
நிர்வாக உறுப்பினர் யாரேனும் இருந்தால் தயவு செய்து தளத்தை எப்படி உபயோகப்படுத்துவது மற்றும் விதிமுறைகளை கூறவும்.

பல இடங்களில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.. ஏன்...?...

செல்வா
04-08-2008, 10:36 AM
நிர்வாக உறுப்பினர் யாரேனும் இருந்தால் தயவு செய்து தளத்தை எப்படி உபயோகப்படுத்துவது மற்றும் விதிமுறைகளை கூறவும்.

பல இடங்களில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.. ஏன்...?...
வாருங்கள் முத்து விஜயன் அவர்களே...
இங்கேச் சுட்டி (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11843) விதிமுறைகளைத் தெரிந்துக் கொள்ளுங்கள்.

rajatemp
16-08-2008, 06:35 PM
மென்பொருள் மாற்றத்திற்கு பிறகு
கடைசி 15 போஸ்ட் பார்க்க முடியவில்லையே ஏன்?
இந்த வசதி மீண்டும் எப்போது வரும்

அமரன்
16-08-2008, 06:42 PM
மென்பொருள் மாற்றத்திற்கு பிறகு
கடைசி 15 போஸ்ட் பார்க்க முடியவில்லையே ஏன்?
இந்த வசதி மீண்டும் எப்போது வரும்
வேலை, சொந்த வாழ்க்கை அத்தனையும் தாண்டி ஒரே நாளில் மேம்படுத்தல் என்பது இயலாத காரியம். அதிலும் இம்முறை செய்யப்பட்ட மேம்படுத்தல், மேம்படுத்தலின் பின்னர் எல்லாம் முதல்ல இருந்து வரவேண்டியதான மேம்படுத்தல். அதனால் சற்றுத் தாமதமாக ஆனால் தரமாக எல்லா வசதியும் கிடைக்கும். அதுவரை பொருத்துக்கொள்ளுங்கள்.

சூரியன்
22-08-2008, 02:53 PM
http://i231.photobucket.com/albums/ee11/suuriyan/problem-1.jpg

புதிய பொறுப்பாளர்களின் பெயரில் இது போன்ற பிழை தெரிகின்றது நிர்வாகி இதை கவனித்து சரிசெய்ய வேண்டுகின்றேன்.

அக்னி
22-08-2008, 02:55 PM
இப்பொழுது சரி செய்யப்பட்டு விட்டதாகத் தெரிகின்றதே சூரியன்...
இப்பொழுதும் அப்படித்தான் தங்களுக்குத் தெரிகின்றதா..?

praveen
22-08-2008, 03:46 PM
புதிய பொறுப்பாளர்களின் பெயரில் இது போன்ற பிழை தெரிகின்றது நிர்வாகி இதை கவனித்து சரிசெய்ய வேண்டுகின்றேன்.

உங்கள் குறை சரி செய்யப்பட்டு விட்டது, இருந்தாலும் நான், உங்கள் ஸ்கிரின் சாட் படி பார்த்தால், நீங்கள் உங்கள் கணினியில் indic சப்போர்ட் பைல்கள் பதியவில்லை என்று தெரிகிறது. உங்கள் விண்டோஸ் எக்ஸ்பி பதிந்த CDயை கம்ப்யூட்டரில் CD ட்ரைவில் வைத்தத கொண்டு. கண்ட்ரோல் பேனலில் ரிஜனல் அண்ட் லாங்குவேஜ் செட்டிங்க்ஸ் சென்று

http://thatstamil.oneindia.in/Pictures/images_01/winXPa.gif
இது போல டிக் செய்து வைத்தால் உங்கள் இண்டர்நெட் எக்ஸ்புளோரரில் அப்படி கட்டம் கட்டமாக தலைப்பில் எழுத்து தோன்றாது.

நீங்கள் வெறுமனே லதா அல்லது தேனியுனி எழுத்துரு மட்டும் காப்பி செய்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

அறிஞர்
24-08-2008, 03:51 AM
பிரவீன் சொல்வது... பயனுள்ள தகவல்...

மேலும் பிரச்சனையை நாங்கள் சரி செய்ய முயற்சிக்கிறோம்.

ஆர்.ஈஸ்வரன்
24-08-2008, 12:06 PM
நான் எழுதிய கவிதைகளை எப்படி பார்ப்பது?

சூரியன்
24-08-2008, 01:54 PM
நான் எழுதிய கவிதைகளை எப்படி பார்ப்பது?

உங்களுடைய யூசர் ப்ரோபைலில் சென்று Statistics என்று இருக்கும் அதை சொடுக்கி பின்பு (Find all threads started by ஆர்.ஈஸ்வரன் ) என்பதை சொடுக்கினால் உங்களால் தொடங்கப்பட்ட திரிகளின் விபரம் வரும்.

மேலும் விபரங்களுக்கு படம் இணைக்கப்பட்டுள்ளது.

http://i231.photobucket.com/albums/ee11/suuriyan/su.jpg

அருள்
20-11-2008, 12:38 PM
எப்படி புதிய தகவல்களை பதிப்பது முத்தவர்களே

அன்புரசிகன்
20-11-2008, 01:35 PM
எப்படி புதிய தகவல்களை பதிப்பது முத்தவர்களே

புதிய திரிகளை ஆரம்பிப்பது எப்படி?

உங்கள் திரி ஆரம்பிக்கப்படவேண்டிய மன்றப்பிரிவைத் தெரிவு செய்யுங்கள்.(உ+ம்- காதல் கவிதை எனில் செவ்வந்தி மன்றத்தில் உள்ள புதிய கவிதைகளின் காதல் கவிதைகள் பகுதி) http://www.tamilmantram.com/vb/images/styles/vbblue/buttons/newthread.gif என்பதை கிளிக் செய்து புதிய திரியை தொடங்கலாம்.

திரிகள் தொடங்கும்போது கவனிக்கவேண்டியவை யாவை?

நீங்கள் பதிக்க நினைக்கும் தகவலின் உள்ளீடுகொண்ட வேறு திரிகள் இல்லை
சரியான இடத்தில் தொடங்குகின்றீர்கள் .
மன்றவிதிகளுக்கு அமைவானதா
என்பவற்றை உறுதிசெய்துகொள்ளுங்கள்

ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட உங்கள் திரியை காணாதுவிட்டால் புதிதாக தொடங்காதீர்கள். மன்றத்தில் நன்றாகத் தேடிப்பார்த்தும் அத்திரி அகப்படவில்லை என்றால் பொறுப்பாளர்களை தொடர்புகொள்ளுங்கள்.

தமிழில் எப்படிப் பதிவது என்பதை அறிய கீழே உள்ள லிங்குகளை கிளிக்குங்கள்.
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8627
http://www.tamilmantram.com/vb/forumdisplay.php?f=2

:icon_b::icon_b::icon_b:

அருள்
20-11-2008, 11:03 PM
ரொம்ப ரொம்ப நன்றி.....