PDA

View Full Version : பாரம்பரியம் மாறாமல் இருக்க வினோத முடிவு



mgandhi
24-10-2007, 06:13 PM
பாரம்பரியம் மாறாமல் இருக்க வினோத முடிவு மருமகளுக்கு விந்தணு தானம் செய்கிறார் மாமனார்

லண்டன் :பிரிட்டனில், 75 வயது தந்தை ஒருவர், குடும்ப வாரிசுக்காக, சொந்த மருமகளுக்கு விந்தணு தானம் செய்ய உள்ளார்.

பிரிட்டனை சேர்ந்த தம்பதிக்கு குழந்தை பேறு இல்லை. இதற்காக மருத்துவ சிகிச்சை பெற்றும் பலன் இல்லை. கணவரின் விந்தணு தரமிக்கதாக இல்லை என்பதே இதற்கு காரணம். இந்த தம்பதி லண்டன் பெண்கள் கிளினிக் என்ற மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குடும்ப வாரிசுக்காக இந்த தம்பதி செயற்கை கருவுற்றல் முறையில் குழந்தை பெற முடிவு செய்துள்ளனர். இதற்கான விந்தை கணவரின் 75 வயது தந்தை தான் தானம் செய்ய உள்ளார்.இது குறித்து பிரிட்டன் மனித கருவுற்றல் மற்றும் கருவியல் ஆணையத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், "விந்து தானம் செய்பவர் 45 வயதுக்குள் இருக்க வேண்டும் என்ற நடைமுறை உள்ளது. எனவே 75 வயது முதியவர் ஒருவர் விந்து தானம் செய்வது அசாதாரணமான விஷயம்' என்றார்.லண்டன் பெண்கள் கிளினிக் இயக்குனர் டாக்டர் பீட்டர் போவன் சிம்கின்ஸ் கூறுகையில்," அசாதாரண முறையில் குழந்தை பெற்றுக் கொள்வதை எதிர்கொள்வதற்காக அந்த தம்பதிக்கும், கணவரின் பெற்றோருக்கும் கவுன்சிலிங் அளிக்கப்படுகிறது. இதுபோன்ற சம்பவம் இதற்கு முன் நடந்துள்ளதா என்பது தெரியவில்லை. குடும்ப பராம்பரியம் விட்டு விட கூடாது என்பதற்காகவே 75 வயது தந்தையிடம் இருந்து விந்து பெறப்படுகிறது. கணவருக்கு சகோதரர் இல்லை. எனவே தான் தந்தையிடம் இருந்து பெற முடிவு செய்துள்ளோம்' என்றார்.ஷெப்பீல்டு பல்கலைக் கழகத்தை சேர்ந்த டாக்டர்ஆலன் பசே கூறுகையில்," 75 வயது முதியவரின் விந்து எந்த அளவுக்கு தரமாக இருக்கும் என்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக பிறக்க போகும் குழந்தை எந்த அளவுக்கு மரபணு சிக்கல்களை சந்திக்க உள்ளது என்பது தெரியவில்லை' என்றார்.

அக்னி
24-10-2007, 06:32 PM
உலகம் எங்கோ போகின்றது...
இப்படி பிறக்கும் குழந்தைக்குத் தந்தை யார்..?
தாம்பத்திய உறவில்லாமல், செயற்கை கருத்தரிப்பு முறையில் குழந்தை கருத்தரிக்க வைக்கப்பட்டாலும்,
என்னைப் பொறுத்தவரை இந்த விடயம், ஒரு சமுதாய சீர்கேடு, விஞ்ஞான அழிவுகளில் ஒன்று என்றே கருதமுடிகிறது.
வாடகைத்தாய் எனும்போது, தம்பதியரின் உயிரணுக்களை சுமப்பவள் என்பதனால் ஓரளவு ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்தாலும்,
இந்த விடயத்தை சற்றேனும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை...
இது பாரம்பரிய காப்பு அல்ல... பாரம்ப்பரிய சிதைப்பு...

தகவலுக்கு நன்றி...