PDA

View Full Version : உலகச்செய்திகள் 22-11-2008Pages : [1] 2

mgandhi
24-10-2007, 06:08 PM
01.பெனசிரை தீர்த்து கட்ட பெண் மனித வெடிகுண்டு

இஸ்லாமாபாத் :பெனசிரை தீர்த்துக் கட்ட, பெண் மனித வெடிகுண்டு அனுப்பப் பட்டுள்ளதாக அவருக்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளது.


02.பாதுகாப்பற்ற ஊசியால் 13 லட்சம் பேர் பலி
ஜெனிவா :பாதுகாப்பற்ற ஊசிகளால், ஆண்டுக்கு 13 லட்சம் பேர் பலியாவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.


03.புலிகளுடன் பேச்சு நடத்த தயார் இலங்கை அரசு மீண்டும் அறிவிப்பு

கொழும்பு :விடுதலைப் புலிகள் மீண்டும் விமான தாக்குதலில் ஈடுபட்டாலும், அவர்களுடன் அமைதிப் பேச்சுக்கு தயாராக இருப்பதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.04.பாரம்பரியம் மாறாமல் இருக்க வினோத முடிவு மருமகளுக்கு விந்தணு தானம் செய்கிறார் மாமனார்

லண்டன் :பிரிட்டனில், 75 வயது தந்தை ஒருவர், குடும்ப வாரிசுக்காக, சொந்த மருமகளுக்கு விந்தணு தானம் செய்ய உள்ளார்.05.இலங்கை விமான படைக்கு பெருத்த பின்னடைவு புலிகள் தாக்குதல் எதிரொலி

கொழும்பு :இலங்கையில் அனுராதபுரம் விமான நிலையம் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலால், விமானப் படைக்கு பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.06.விண்ணில் பாய்ந்தது டிஸ்கவரி

கேப் கெனரவல் :அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, டிஸ்கவரி விண்கலத்தை இந்திய நேரப்படி நேற்று இரவு 9.08 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

அக்னி
24-10-2007, 06:17 PM
உடனே செயற்படுத்திவிட்டீர்களே...
மிக்க நன்றி...
விரல் நுனியில் செய்திகளைத் தொகுத்துத் தரும் உங்கள் சேவை என்றும் தொடர..,
வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்...

mgandhi
25-10-2007, 06:25 PM
1.கலிபோர்னியாவில் காட்டுத்தீ

சான் டியாகோ: அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்ட காட்டு தீ தொடர்ந்து நான்காவது நாளாக தனது கோர தாண்டவத்தை காட்டி வருகிறது.2.அனுராதபுரம் விமான நிலையத் தாக்குதலை பெருமையாக கருதும் விடுதலைப்புலிகள்

கொழும்பு: இலங்கையில் அனுராதபுரம் விமான நிலையத்தின் மீது விடுதலை புலிகள் நடத்திய தாக்குதல் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.3.தேர்தலை ஒத்திவைக்க தேவையில்லை * சொல்கிறார் பெனசிர்

இஸ்லாமாபாத்: பாக்.,கில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தால், பொதுத்தேர்தல் ரத்து செய்யப்படவோ அல்லது ஒத்திவைக்கவோ தேவையில்லை என்று அந்நாட்டின் முன்னாள் பிரதமர் பெனசிர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.


4.விண்வெளியில் குஞ்சு பொரித்தது கரப்பான் பூச்சி

மாஸ்கோ: நடேஸ்டா என்று பெயர் சூட்டப்பட்டுள்ள ரஷ்ய கரப்பான் பூச்சி, விண்வெளியில் முதல் முறையாக குஞ்சு பொரித்துள்ளது.


5.தோரியத்தின் மூலம் இயங்கும் அணு உலைகள்: முன்னாள் ஜனாதிபதி கலாம் யோசனை

லண்டன்: "அணுசக்தி உற்பத்தியில் நாடு தன்னிறைவு பெறுவதற்கு தோரியத்தின் மூலம் இயங்கும் அணு உலைகளை அமைக்க வேண்டும்' என்று முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் யோசனை தெரிவித்தார்.

mgandhi
26-10-2007, 06:20 PM
1. பாகிஸ்தானுக்கு உள்நாட்டிலேயே அச்சுறுத்தல்: ஒப்புக் கொண்டார் அதிபர் முஷாரப்

இஸ்லாமாபாத்: "பாகிஸ்தானுக்கு உள்நாட்டிலேயே பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது' என்று அந்நாட்டு அதிபர் முஷாரப் கூறியுள்ளார்.


2. ராகுலுடன் சீனா சென்றார் சோனியா

பீஜிங்: காங்கிரஸ் தலைவர் சோனியாவும், அவரது மகனும், கட்சியின் பொதுச் செயலருமான ராகுல் காந்தியும் ஐந்து நாள் பயணமாக நேற்று சீனாவின் தலைநகர் பீஜிங் சென்றடைந்தனர்.


3. இந்தோனேசியாவில் நிலநடுக்கம் சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பீதி

ஜகர்த்தா: இந்தோனேசியாவில் நேற்று கடுமையான நில நடுக்கம் ஏற்பட்டது. சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.


4. கலிபோர்னியாவில் ஐந்தாவது நாளாக காட்டுத்தீ நீடிப்பு

சான் டியாகோ: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், தட்பவெப்ப நிலை மாற்றம் காரணமாக காட்டுத்தீ கட்டுக்குள் கொண்டு வரப்படுகிறது.


5. கராச்சி குண்டு வெடிப்பு விசாரணை அதிகாரியை மாற்றியது பாக்., அரசு

இஸ்லாமாபாத்: பெனசிரை குறிவைத்து நடத்தப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள தனிப்படை தலைவராக, பாக்., போலீஸ் டி.ஜ.ஜி., சவுத் மிர்சா நியமிக்கப்பட்டுள்ளார்.


6. புரோட்டா, தந்துரி விலை உயர்வு: எமிரேட் இந்தியர்கள் அதிருப்தி

துபாய்: கோதுமை, பால் மற்றும் சமையல் எண்ணெயின் விலை உயர்வால் ஐக்கிய அரபு எமிரேட்டில் புரோட்டா, தந்துரி ரொட்டியின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

சூரியன்
27-10-2007, 04:22 PM
நல்ல பணி தொடருங்கள் மோகன்காந்தி அண்ணா..

சூரியன்
29-10-2007, 04:27 PM
விளையாட்டு பொம்மைகள் என்றாலே நம் நினைவுக்கு உடனே வருவது சீனாதான். விதவிதமான விளையாட்டு பொருட்களை தயாரித்து குறைந்த விலையில் விற்பதில் அவர்களை மிஞ்ச முடியாது. அனால் சமீப காலமாக அந்நாட்டு பொம்மைகள்தான் அதிக அளவில் அமெரிக்காவால் திருப்பி அனுப்பப் பட்டிருக்கின்றன. காரணம் என்னவென்றால், சீன தயாரிப்பு பொம்மைகளில் அடித்திருக்கும் பெயின்ட்டில் காரீயம் என்ற நஞ்சு பொருள் அதிக அளவில் கலந்திருப்பதாலும், பொம்மைகளில் வைக்கப்பட்டிருக்கும் காந்தத்தாலும், குழந்தைகளின் உடல் நலத்திற்கு அது கேடு விளைவிக்கும் என்கிறார்கள். சமீபத்தில் உலகின் மிகப்பெரிய பொம்மை தயாரிப்பாளர்களான அமெரிக்காவின் மெட்டல் கம்பெனி, மூன்று தடவைகளில் 2 கோடியே 10 லட்சம் சீன பொம்மைகளை வேண்டாம் என்று சீனாவிற்கே திருப்பி அனுப்பி இருக்கிறது.

thanks: dinamalar

சூரியன்
29-10-2007, 04:28 PM
பிரான்சில் ஏர் பிரான்ஸ் விமான ஊழியர்கள் கடந்த நான்கு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் ஏராளமான ஏர் பிரான்ஸ் விமானங்கள், பாரீசில் உள்ள சார்லஸ் டி காலி மற்றும் ஆர்லி விமான நிலையங்களில் நிறுத்தி வைக்கப் பட்டிருக்கின்றன. ஊதிய உயர்வு, வேலை செய்யும் இடத்தில் உள்ள சூழ்நிலை போன்றவைகளை முன்வைத்து ஏர் பிரான்ஸ் ஊழியர்கள் கடந்த நான்கு நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். இப்போது பிரான்சில் விடுமுறை காலமாகவும் இருப்பதால் ஏராளமான பயணிகள் ஒழுங்கான விமான சேவை இல்லாமல் தவித்து வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஊழியர்களிடம், நிர்வாகம் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்து விட்டது. இதனால் விமானத்தில் ஏற விமான நிலையம் வரும் பயணிகள் முன்கூட்டியே விமானம் இருக்கிறதா என்று விசாரித்துவிட்டு வருமாறு ஏர் பிரான்ஸ் நிர்வாகம் பயணிகளை கேட்டுக்கொண்டுள்ளது.

mgandhi
29-10-2007, 05:44 PM
1. 13 வயதில் ஆயுள் தண்டனை : அமெரிக்காவில் கொடூரம்

வாஷிங்டன் : அமெரிக்காவில் ஆயுள் கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளவர்களில் 70 பேர், 14 வயதுக்கும் கீழ் உள்ளவர்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


2. "ஹலோ! நீங்க எங்க இருக்கீங்க இப்ப...? மொபைலில் இனி கேட்கவே வேணாம்!

நியூயார்க் : "ஹலோ! நீங்க எங்கேயிருந்து பேசறீங்க, இப்ப எங்கே இருக்கீங்க...?' என்று, மொபைல் போனில் கேட்காதவர்கள் இருக்க முடியாது.


3. பயங்கரவாதிகளுடன் பாக்., ராணுவம் சண்டை : மக்கள் வெளியேற்றம்

மிங்கோரா: பாக்.,கின் வடமேற்கு எல்லை மாகாணத்தில் தலிபானை போன்ற பயங்கரவாத அமைப்பினருக்கும், ராணுவத்தினருக்கும் இடையே கடுமையான சண்டை நடந்து வருகிறது.


4. சிகிச்சைக்காக இந்தியா வரும் பிரிட்டன் நாட்டினர்

லண்டன்: பிரிட்டனைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர், மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா செல்கின்றனர்.


5. "டெரகோட்டா' மியூசியத்தை பார்வையிட்டார் சோனியா

ஜியான் : ""சீன நாட்டின் தலைவர்களுடன் நடத்திய பேச்சு வார்த்தை நல்ல பலனை அளித்துள்ளது,'' என்று காங்., தலைவர் சோனியா கூறினார்

mgandhi
31-10-2007, 06:51 PM
1.தீபாவளியை கவுரவப்படுத்தி அமெரிக்க எம்.பிக்கள் தீர்மானம்

வாஷிங்டன்: அமெரிக்க பார்லிமென்ட்டின் பிரதிநிதிகள் சபையில், தீபாவளி பண்டிகையை கவுரவப்படுத்தி தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.


2.நைஜீரியாவில் கடத்தப்பட்ட மூன்று தமிழர்கள் விடுதலை

லாகோஸ்: நைஜீரியாவில் கச்சா எண்ணெய் நிறுவனத்தில் பணியாற்றி வந்த மூன்று தமிழர்கள் உட்பட ஆறு வெளிநாட்டு ஊழியர்கள், பயங்கரவாதிகளால் நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.


3. ஷேக் ஹசீனாவிடம் விசாரணை

தாகா: ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள, வங்கதேச முன்னாள் பிரதமரிடம், ஊழல் ஒழிப்பு குழுவினர் முதல் முறையாக நேற்று விசாரணை நடத்தினர்.


4.முகர்ஜியுடன் பேசினார் ரைஸ்

வாஷிங்டன்: வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியுடன், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கண்டலிசா ரைஸ் டெலிபோனில் பேசினார். இருவரும் அணுசக்தி ஒப்பந்தத்தின் நிலை குறித்து பேசியுள்ளனர்.


5.நவாஸ் பாக்., திரும்ப அனுமதி: அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு

இஸ்லாமாபாத்: நவாஸ் ஷெரிப் நாடு திரும்புவது குறித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை அமல்படுத்த வேண்டும்


6.வேலை நிறுத்தத்தால் துபாய் அதிரடி: 4 ஆயிரம் பேரை நாடு கடத்த முடிவு

துபாய்: சம்பள உயர்வு கேட்டு, துபாயில் போராட்டம் நடத்திய கட்டுமானத் தொழிலில் ஈடுபட்ட இந்திய கட்டுமானத் தொழிலாளர்களை நாடு கடத்த துபாய் அரசு முடிவு செய்துள்ளது.

mgandhi
01-11-2007, 06:58 PM
1. துபாய் போராட்டத்தில் வன்முறை 90 இந்தியர் உட்பட 159 பேர் கைது

துபாய்: துபாயில், கூடுதல் சம்பளம் கோரியும், தொழிலாளர்கள் முகாம்களில் கூடுதல் வசதி கோரியும் நடந்த போராட்டத்தில், வன்முறையில் ஈடுபட்ட 159 பேர் கைது செய்யப்பட்டனர்.


2. மியான்மரில் புத்ததுறவிகள் மீண்டும் பேரணி

யாங்கூன்: மியான்மரில் உள்ள பகோக்கு நகரில், புத்த துறவிகள் 100 பேர், ஜனநாயக ஆட்சியை வலியுறுத்தி கோஷம் எழுப்பியபடி ஒரு மணி நேரம் பேரணி நடத்தினர்.


3. கியூபா மீது பொருளாதார தடையை நீக்க அமெரிக்காவுக்கு வலியுறுத்தல்

ஐ.நா: கியூபா மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடையை விலக்கிக் கொள்ளும் படி ஐ.நா., வலியுறுத்தி உள்ளது. கியூபா மீதான வர்த்தக தடை ஏற்கத்தக்கதல்ல என்று இந்தியாவும் கூறியுள்ளது.


4. இந்தியாவுடனான உறவு எங்களுக்கு முக்கியம் சொல்கிறது அமெரிக்கா

வாஷிங்டன்: "பாகிஸ்தானை விட இந்தியாவுடனான உறவு தான் எங்களுக்கு முக்கியமானது' என, அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.

5. கலிபோர்னியாவில் நிலநடுக்கம்

ஆக்லாந்து: அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் நேற்று ஏற்பட்ட நில நடுக்கம் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.


6. இலங்கை மோதலில் 21 பேர் பலி

கொழும்பு: இலங்கையில் கடந்த இரண்டு நாட்களாக வடக்கு பகுதியில் நடந்த பல்வேறு மோதல்களில் 16 விடுதலைப் புலிகள் உட்பட 21 பேர் கொல்லப்பட்டனர்.


7. சாலையை பெருக்க சீனாவில் நவீன இயந்திரம்

சீனா: சாலையை சுத்தப்படுத்த புதிய இயந்திரத்தை சீனர்கள் கண்டுபிடித்துள்ளனர்.


8. கம்போடிய பிரதமர் ஹுன் சென்னுக்கு மனித உரிமை அமைப்பு கண்டனம்

நாம் பென்: கம்போடிய பிரதமர் ஹுன் சென், தனது வளர்ப்பு மகள் லெஸ்பியன் என்பதை அறிந்து வேதனை அடைந்துள்ளார்.


9. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.84 பிரிட்டனில் தான்

லண்டன்: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதால், பிரிட்டனில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.84 என்ற அளவுக்கு உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

mgandhi
02-11-2007, 06:31 PM
1. தாய் உடல்நிலை கவலைக்கிடம் : அவசரமாக துபாய் சென்றார் பெனசிர்
கராச்சி : முஷாரப் அதிபராக தேர்வு செய்யப்பட்டதை செல்லாது என்று சுப்ரீம் கோர்ட் அறிவித்தால், அவர் பாக்.,கில் அவசர நிலையை பிரகடனப்படுத்தலாம் என்ற அச்சத்தில்...

2. விடுதலைப் புலிகளின் பயிற்சி தளம் மீது தாக்குதல்
கொழும்பு : இலங்கையில் முல்லைத்தீவு மாகாணத்தில் செயல்பட்டு வந்த விடுதலைப் புலிகளின் பயிற்சி தளத்தை, போர் விமானங்கள் குண்டு வீசி தகர்த்தன.


3. இந்திய வம்சாவளி பெண் மீது இன பாகுபாடு : அமெரிக்க நிறுவனம் நஷ்ட ஈடு வழங்க உத்தரவு
சான்பிரான்சிஸ்கோ : அமெரிக்காவில் உள்ள செவ்ரோன் நிறுவனம், அந்நாட்டைச் சேர்ந்த இந்திய வம்சாவளி பெண் இன்ஜினியர் மீது இனப் பாகுபாடுடன் நடந்து கொண்டதால்...

4. ஓட்டு போடும் போது முஸ்லிம் பெண்கள் பர்தா அணிய தடை
ஓடாவா : ஓட்டுப் போடும் போது முஸ்லிம் பெண்கள் பர்தா அணிய கனடா கோர்ட் தடை விதித்துள்ளது.


5. "உம்ரா' பயணிகளை காணவில்லை : சவுதி புகாருக்கு பாகிஸ்தான் மறுப்பு
இஸ்லாமாபாத் : சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவுக்கு பாகிஸ்தானில் இருந்து புனித பயணம் வந்த 1.21 லட்சம் பாகிஸ்தானியர்கள் அதன் பிறகு எங்கு சென்றனர் என்பது தெரியவில்லை.


6. கியூபா மீது பொருளாதார தடையை நீக்க அமெரிக்காவுக்கு வலியுறுத்தல்
ஐ.நா., : கியூபா மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடையை விலக்கிக் கொள்ளும் படி ஐ.நா., வலியுறுத்தி உள்ளது. கியூபா மீதான வர்த்தக தடை ஏற்கத்தக்கதல்ல என்று இந்தியாவும் கூறியுள்ளது.


7. பாக்., ராணுவத்தில் முதல் சீக்கியர்
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் ராணுவத்தில், முதன் முதலாக, சீக்கிய மதத்தை சேர்ந்த ஒருவர், அதிகாரியாக பதவி உயர்த்தப் பட்டுள்ளார்.


8. பிரிட்டனில் அதிகம் சம்பாதிப்பது வெளிநாட்டவர் தான்!
லண்டன் : பிரிட்டன் நாட்டில், அதிகம் சம்பாதிப்பது பிரிட்டீஷ் மக்கள் அல்ல; இந்தியர் உட்பட வெளிநாட்டு தொழிலாளர்கள் தான்.பிரிட்டன் அரசு சமீபத்தில் நடத்திய சர்வேயில் இது தெரியவந்துள்ளது.


9. "கம்ப்யூட்டர் கேம்' விளையாடினால் மன அழுத்தம் போய்விடுமாம்
டொரன்டோ : "கம்ப்யூட்டர் கேம்' விளையாடினால், மன அழுத்தம் போய்விடும் என்று, கம்ப் யூட்டர் "வீடியோ கேம்' வல்லுனர்கள் கண்டு பிடித் துள்ளனர்.


10. இந்தோனேசியாவில் எரிமலை வெடிக்கும் அபாயம்
ஜகர்த்தா : இந்தோனேசியாவில் உள்ள கெலுத் எரிமலை கடுமையான அதிர்வுகளுடன் புகையத் துவங்கியுள்ளது. அங்கு வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

mgandhi
04-11-2007, 05:02 PM
1."கந்தல் கரன்சி வியாபாரம்' வங்கதேசத்தில் இதுவும் பிழைப்பு தாகா
:பழைய பேப்பர்களை வாங்கி வியாபாரம் செய்வதைத் தான் பார்த்திருப்பீர்கள்... பழைய ரூபாய் நோட்டுக்களை வைத்து வியாபாரம் செய்பவர்களை பார்த்துண்டா?

2.திருட்டுத்தனமாக "டிரக்'கில் பயணம் பிரான்ஸ் எல்லையில் 30 இந்தியர் கைது

கிரீனோபிள் :சட்டவிரோதமாக பிரான்ஸ் நாட்டுக்குள் ஊடுருவ முயன்ற இந்தியர்கள் 30 பேர் பிடிபட்டனர். அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

3.டிராபிக் போலீஸ் லஞ்சத்தை எதிர்த்து ரஷ்யர்கள் போர்க்கொடி!முதல் குரல் கொடுத்தவர் அடி வாங்கி மூளை கலங்கி கவலைக்கிடம்

மாஸ்கோ : போக்குவரத்து போலீஸ் லஞ்சம், இந்தியாவில் மட்டுமல்ல... ரஷ்யாவிலும் அதிகரித்துள்ளது. இதை எதிர்த்து, ரஷ்ய மக்கள் எதிர்ப்பு குரல் கொடுக்க ஆரம்பித்துவிட்டனர்.


4. முதுகு தண்டுவட முறிவு: "பயோ சிமென்ட்' கண்டுபிடிப்பு

வாஷிங்டன் :"முதுகு தண்டுவட முறிவை சரி செய்ய, "பயோ சிமென்ட்' பயன்படுத்தலாம்; அறுவை சிகிச்சை செய்யாமல் ஊசி மூலம் திரவமாக இதை செலுத்தி, எலும்புகளைச் சேர்க்கலாம்' என்று, அமெரிக்க மருத்துவ நிபுணர்கள், ஆய்வில் கண்டு பிடித்துள்ளனர்.


5.போலி பாஸ்போர்ட் மோசடியில் லண்டனில் சிக்கினார் கருணா

கொழும்பு :விடுதலைப் புலிகளின் அமைப்பில் இருந்து பிரிந்து சென்று தனி அமைப்பாக செயல்பட்டு வந்த கருணா, நேற்று முன்தினம் லண்டனில் கைது செய்யப்பட்டார். மோசடியாக போலி பாஸ்போர்ட் தயாரித்து பயணம் செய்த குற்றத்திற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


6.பயங்கரவாதிகளின் கைக்கு ஆட்சி செல்லும் அபாயம் சொல்கிறார் பெனசிர்

இஸ்லாமாபாத் :பாக்.,கில் பயங்கரவாதிகளின் கைக்கு ஆட்சி மாறும் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாக பெனசிர் புட்டோ கூறியுள்ளார்.


7.மேற்கு வங்க மாநில அரிசியில் புற்றுநோய் உருவாக்கும் விஷம்

மான்செஸ்டர் : மேற்கு வங்க மாநிலத்தின் சில பகுதிகளில் விளையும் அரிசியில் புற்றுநோய் உருவாக்கும் விஷம் கலந்திருப்பதாக இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


8.ஐரோப்பிய நாடுகளில் விவாகரத்துக்கள் அதிகரிப்பு

லண்டன் :ஐரோப்பிய நாடுகளில் திருமண உறவு மிக விரைவில் கசந்து மணமுறிவுகள் அதிகம் ஏற்படுவதாக ஓர் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


9.கலிபோர்னியாவில் ஏற்பட்ட காட்டு தீக்கு சிறுவன் கொளுத்திய தீக்குச்சியே காரணம்

லாஸ்ஏஞ்சலஸ் :அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் சமீபத்தில் பெரும் நாசத்தை ஏற்படுத்திய காட்டு தீ உருவாக, ஒரு சிறுவன் தான் காரணம் என்பதை அதிகாரிகள் கண்டு பிடித்துள்ளனர்.


10.ஆப்ரிக்காவில் இப்படியும் ஒரு தத்தெடுப்பு பயங்கரம்! மிட்டாய் தந்து குழந்தைகளை விமானத்தில் ஏற்ற முயற்சி முறியடிப்பு

அபேசி, சாட் நாடு : ஐரோப்பிய நாடுகளில், குழந்தை தத்தெடுப்போரிடம் விற்பதற்காக, ஆப்ரிக்க "சாட்' நாட்டில் இருந்து 103 குழந்தைகள் கடத்த நடந்த முயற்சி, கடைசி நேரத்தில் முறியடிக்கப்பட்டுள்ளது.

mgandhi
05-11-2007, 05:39 PM
01. பாகிஸ்தானில் புதிய தலைமை நீதிபதி பதவியேற்பு
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் அவசரநிலை பிரகடனப்படுத்திய பிறகு, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக அப்துல் ஹமீது தோகார் பொறுப்பேற்றுக் கொண்டார்.


02. பத்திரிகை செய்திகளை காட்டி பல கோடி மோசடி செய்த இந்தியர்
லண்டன் : "மிகச்சிறந்த இளம் இந்திய தொழிலதிபர்; 20 வயதுக்குள்ளேயே, முன்னணி கோடீஸ்வரர்களில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டவர்...


03. மினி ராணுவ சட்டம் அமல் : முஷாரப் மீது பெனசிர் சாடல்
கராச்சி : "பாகிஸ்தானில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்படவில்லை. அதிபர் முஷாரப், மினி ராணுவ சட்டத்தை அமல்படுத்தியுள்ளார்'...


04. நீதித்துறையின் தீவிர செயல்பாட்டை தடுக்கவே அவசர நிலை பிரகடனம்: முஷாரப் விளக்கம்
இஸ்லாமாபாத் : " நீதித்துறையின் தீவிர செயல்பாடு, பயங்கரவாதம் அதிகரிப்பு ஆகிய காரணங்களால் தான் பாகிஸ்தானில் அவசர நிலை பிரகடனப்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விட்டது..


05. பத்திரிகை, "டிவி' சேனல்களுக்கு எதிராக பிறப்பித்த 2 அவசர சட்டம்
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் அவசர நிலை பிரகடனப்படுத்திய சில மணி நேரங்களில் பத்திரிகைகள், "டிவி' சேனல்கள் ஆகியவை பயங்கரவாதத்தை துண்டும்...


06. பாக்.,கின் ஐ.எஸ்.ஐ., முன்னாள் தலைவர் ஹமீத் குல் கைது இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.,யின் முன்னாள் தலைவர் ஹமீத் குல் கைது செய்யப்பட்டார்.


07. வீட்டுப்பணி, டிரைவர் வேலைக்கு சவுதி அரேபியாவில் புது நிபந்தனை
துபாய் : வீட்டுப்பணி மற்றும் டிரைவர் வேலைக்கு ஆள் அமர்த்திக்கொள்ள, சவுதி மக்களுக்கு புது நிபந்தனைகளை அந்த நாட்டு அரசு பிறப்பித்துள்ளது.


08. ஐ.எஸ்.ஐ., முன்னாள் தலைவர் கைது
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.,யின் முன்னாள் தலைவர் ஹமீத் குல் கைது செய்யப்பட்டார்.


09. முடிவெடுக்க பூவா, தலையா : அமெரிக்க நீதிபதி பணி நீக்கம்
ரிச்மாண்டு(விர்ஜினியா) : வழக்கில் முடிவு எடுப்பதற்காக பூவா, தலையா போட்டுப் பார்த்த நீதிபதி, பணியில் இருந்து நீக்கப்பட்டார்.


10. முழு குடிகாரராக மாறினார் பிரிட்டன் இளவரசர் ஹாரி
லண்டன் : பிரிட்டன் இளவரசர் ஹாரி, முழு குடிகாரராக மாறிவிட்டார். பிரிட்டனில், அனைவரும் குறிப் பிட்ட காலம் ராணுவத்தில் பணியாற்ற வேண்டும்.11. இலங்கை அரசுக்கு எதிராக போராட்டம் தொடரும் : புலிகள் தலைவர் பிரபாகரன் அறிவிப்பு
கொழும்பு : "இலங்கை அரசுக்கு எதிரான போராட்டம் தொடரும்' என விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

mgandhi
06-11-2007, 05:58 PM
01. ஆர்ப்பாட்டம் செய்த வக்கீல்களுக்கு அடி,உதை
இஸ்லாமாபாத்: பாக்.,கில், "எமர்ஜென்சி' பிரகடனப்படுத்தப்பட்டு இருப்பதற்கு தொடர்ந்து எதிர்ப்பு நீடிக்கிறது.
02. மனித வெடிகுண்டாக குழந்தை வந்ததா? : புதிய சந்தேகத்தை கிளப்புகிறார் பெனசிர்
வாஷிங்டன்: நிலைமை விபரீதமாவதை தடுக்க, அரசியலமைப்பு சட்டத்தை திரும்ப கொண்டு வரவேண்டும் என்று பாக்., சர்வாதிகாரி முஷாரப்பை வலியுறுத்தி உள்ள பெனசிர், தன்னை கொல்ல குழந்தையை மனித வெடிகுண்டாக பயன்படுத்தி இருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும் கூறியுள்ளார்.03. ராணுவ வீரர்களை மீட்க 25 பயங்கரவாதிகள் விடுவிப்பு

இஸ்லாமாபாத்: பிணைக் கைதிகளாக இருந்த 211 ராணுவத்தினரை மீட்க, பயங்கரவாத ஒழிப்பு கோர்ட்டுகளில் தண்டனை பெற்ற 25 பயங்கரவாதிகளை பாக்., அரசு விடுவித்தது.04. விடுதலைப் புலிகள் மீது தாக்குதல் தொடரும்: இலங்கை பிரதமர் அறிவிப்பு

கொழும்பு: ""விடுதலைப் புலி அமைப்பின் தலைவர்கள் பதுங்கியுள்ள இடங்கள் மீது விமானப் படை தொடர்ந்து தாக்குதல் நடத்தும்,'' என இலங்கை பிரதமர் ரத்னஸ்ரீ விக்கிரமநாயகா கூறினார்.05. மக்களையும் ராணுவ கோர்ட் விசாரிக்கும்: பாகிஸ்தான் அதிரடி உத்தரவு
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில், பயங்கரவாதத்துக்கு துணை போகும், பொதுமக்களையும், ராணுவ கோர்ட் இனி விசாரிக்கும். இதன் மூலம், ராணுவ கோர்ட்டுகளுக்கும், ராணுவத்தினருக்கும் பல மடங்கு அதிகாரம் அதிகரிக்கும்.

mgandhi
07-11-2007, 05:11 PM
01."புளூ பிலிம்' புகழ் அமெரிக்க பஞ்சாபி அழகிக்கு "டும்டும்': ஜோடியாக நடித்தவர் கணவன் ஆகிறார்
நியூயார்க்: அமெரிக்காவில், "புளூ பிலிம்'களில் நடித்து பிரபலம் அடைந் துள்ள, பஞ்சாபி அழகிக்கு "டும் டும்' நடக்கிறது. அவரை மணக்கப் போவது யார் தெரியுமா...?


02.தினமும் "வாக்கிங்' போனால் "ஹச்... ஹச்' போயேபோச்!
நியூயார்க்: தினமும், "வாக்கிங்' போனால், இருதய, சர்க்கரை நோய் வராது என்பது தெரிந்த விஷயம் தான். ஆனால், "ஹாச்... ஹாச்' என்று தும்மல் முதல் ஜலதோஷம் வரை எதுவும் வராமல் இருக்கவும் "வாக்கிங்' இலவச மருந்தாக இருக்கிறது.


03.ஆப்ரிக்காவில் இப்படியும் ஒரு தத்தெடுப்பு பயங்கரம்!
அபேசி, சாட் நாடு: ஐரோப்பிய நாடுகளில், குழந்தை தத்தெடுப்போரிடம் விற்பதற்காக, ஆப்ரிக்க "சாட்' நாட்டில் இருந்து 103 குழந்தைகள் கடத்த நடந்த முயற்சி, கடைசி நேரத்தில் முறியடிக்கப்பட்டுள்ளது. ர்.


04.டிராபிக் போலீஸ் லஞ்சத்தை எதிர்த்து ரஷ்யர்கள் போர்க்கொடி
மாஸ்கோ: போக்குவரத்து போலீஸ் லஞ்சம், இந்தியாவில் மட்டுமல்ல... ரஷ்யாவிலும் அதிகரித்துள்ளது.


05.தமிழ்ச்செல்வனின் உடல் அடக்கம்
கொழும்பு: இலங்கை விமானப் படையின் குண்டு வீச்சில் பலியான விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச் செல்வனின் உடல், நேற்று முன்தினம் அடக்கம் செய்யப்பட்டது.

mgandhi
08-11-2007, 05:06 PM
01. மிரட்டினார் அதிபர் புஷ் * கெஞ்சுகிறார் முஷாரப்
வாஷிங்டன்: பாகிஸ்தானில் அவசரநிலை பிரகடனப்படுத்தி இருப்பதால், அமெரிக்கா அளித்து வரும் நிதியுதவிக்கு தடை ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் அதிபர் முஷாரப்புக்கு ஏற்பட்டுள்ளது.


02. ஜொலிக்கும் தங்கத்தில் ஆடை அணிந்து பேஷன் ஷோவில் கலக்கிய மாடல் அழகி
டோக்கியோ: தங்கத்தில் உடையை வடிவமைத்து, ஜப்பான் ஆடையலங்காரக் கல்லுரி மாணவர்கள், ஆடையலங்கார அணிவகுப்பில் அசத்திவிட்டனர்.


03. புதிய சூரிய குடும்பம் கண்டுபிடிப்பு
வாஷிங்டன்: சூரிய குடும்பத்துக்கு வெளியே, புதிய சூரிய குடும்பம் ஒன்றை விண்வெளி விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.


04. சீன புத்தர் சிலை புதுப்பிப்பு
பீஜிங் : உலகிலேயே மிக உயரமான புத்தர் சிலை புதுப்பிக்கப்பட்டு வருகிறது. சீனாவின் வடமேற்கில் உள்ள சிசுவான் மாகாணத்தில், உலகிலேயே மிக உயரமான புத்தர் சிலை உள்ளது.


05. 2020ல் விண்வெளி மையம் நிறுவ சீன அரசு முடிவு
பீஜிங்: வரும் 2020ம் ஆண்டில் விண்வெளியில் மையம் நிறுவ, சீனா திட்டமிட்டுள்ளது.

mgandhi
09-11-2007, 05:14 PM
01. புலிகள் ராணுவம் கடும் மோதல் : யாழ்ப்பாணத்தில் 80 பேர் பலி
கொழும்பு : இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள முகமாலை பகுதியில் நேற்று முன்தினம் விடுதலை புலிகள் மற்றும் ராணுவத்தினரிடையே நடந்த மோதலில் ...02. பாகிஸ்தானில் பிப்ரவரியில் பொதுத் தேர்தல் : புஷ்ஷின் மிரட்டலுக்கு பணிந்தார் முஷாரப்

இஸ்லாமாபாத் : ""பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் பொதுத் தேர்தல் நடத்தப்படும்.03. பின்லாந்து பள்ளியில் மாணவன் வெறித்தனம் : சரமாரியாக சுட்டதில் எட்டு பேர் பரிதாப பலி

ஹெல்சின்கி : பின்லாந்து நாட்டின் உயர்நிலைப்பள்ளி ஒன்றில் 18 வயது மாணவர் ஒருவர் கைத்துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் எட்டு பேர் பலியாயினர்.


04. பிரான்சில் தீ விபத்து : இந்தியர்கள் மூவர் பலி?

பாரீஸ் : பிரான்சில் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது.

mgandhi
11-11-2007, 05:02 PM
01.முகம் பார்க்கும் கண்ணாடி அது பெண்களுக்கு உயிர்நாடி?
லண்டன் :மனிதர்கள், தங்கள் முக அழகை தாங்களே பார்த்து ரசித்துக்கொள்ளும் தன்மை உள்ளவர்கள்.02.இந்திய டிசைனருக்கு ரூ. 8 கோடி ஜாமீன்!

லாஸ் ஏஞ்சலஸ் : அமெரிக்காவில் , மாடல் அழகிகளை மானபங்கம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட, இந்திய "மாடல் டிசைனர்' ஆனந்த் ஜானுக்கு, எட்டு கோடி ரூபாய் கட்டச்சொல்லி , நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.03.பாகிஸ்தானில் எமர்ஜென்சி ஜெயில்

இஸ்லாமாபாத் :நெருக்கடி நிலையை பிரகடனம் செய்த பாக்., அதிபர் முஷாரப், தன்னை எதிர்ப்பவர்களை காவலில் வைக்க, "எமர்ஜென்சி' சிறைகளை அமைக்க உத்தரவிட்டுள்ளார்.04.முஷாரப்புக்கு எதிராக குரல் கொடுக்க இம்ரான் அழைப்பு

கராச்சி :"இரண்டாவது முறையாக நீதித்துறை மீது "தாக்குதல்' நடத்தி, அவசரநிலையை பிரகடனப்படுத்திய முஷாரப்புக்கு எதிராக மக்கள் குரல் கொடுக்க வேண்டும்' என்று இம்ரான் கான் அழைப்பு விடுத்துள்ளார்.05.23 விடுதலை புலிகள் பலி

கொழும்பு :இலங்கையில், நேற்று முன்தினம் நடந்த மோதலில் 23 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்.06.ராணுவத்தினருக்கு இலங்கை அரசு பொது மன்னிப்பு

கொழும்பு :இலங்கையில் விடுதலைப் புலிகள் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தும் வகையில், ராணுவத்தில் இருந்து விலகியோர், பணிக்கு வராதோருக்கு அந்நாட்டு அரசு பொது மன்னிப்பு அறிவித்துள்ளது.07.இலங்கையில் ராணுவத்திற்கு கூடுதலாக 20 சதவீதம் ஒதுக்கீடு

கொழும்பு :இலங்கை பட்ஜெட்டில் ராணுவத்துக்கு 20 சதவீத கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.08.துபாயில் இந்திய சினிமா விழா

துபாய் :துபாயில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவின் ஒரு பகுதியாக டிசம்பர் 9ம் தேதி முதல் 16ம் தேதி வரை இந்திய திரைப்பட விழா நடக்கிறது.09.தேர்தல் தேதியை அறிவிக்க பாக்.,கிற்கு அமெரிக்கா நெருக்கடி

வாஷிங்டன் :பாக்.,கில் தேர்தல் தேதியை அறிவிக்கும் படியும், ராணுவ தளபதி பதவியில் இருந்து விலகும் படியும் முஷாரப்புக்கு அமெரிக்கா நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.10.இந்திய டாக்டர்களுக்கு அதிர்ஷ்டம் :பிரிட்டனில் பணிபுரிய கெடுபிடி தளர்வு

லண்டன் :பிரிட்டனில் இந்தியாவைச் சேர்ந்த டாக்டர்கள் பணிபுரிவதற்கு, வேலை செய்வதற்கான, "பெர்மிட்' பெற வேண்டும் என்ற அரசு உத்தரவை அந்நாட்டின் தலைமை கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.

mgandhi
12-11-2007, 05:15 PM
1.முஷாரப்பை எதிர்த்து பேரணி லாகூரில் பெனசிர் முகாம்
இஸ்லாமாபாத் :பாக்., சர்வாதிகாரி முஷாரப், அவசர நிலையை பிரகடனப்படுத்தியதை எதிர்த்தும், ராணுவ தளபதி பதவியில் இருந்து விலக வலியுறுத்தியும், லாகூரில் இருந்து இஸ்லாமாபாத் நோக்கி பெனசிரின் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் பேரணி நாளை துவங்குகிறது.


2.பிரபாகரனுக்கு இலங்கை ராணுவம் குறிவைப்பு
கொழும்பு :"விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பின் தலைவர் பிரபாகரனின் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன' என்று இலங்கை விமானப்படை கமாண்டர் ஏர் மார்ஷல் ரோஷன் குணதிலகே கூறியுள்ளார்.


3."இலங்கை பிரச்னைக்கு தீர்வு காண்பதில் இந்தியாவின் நிலையில் மாற்றமில்லை'

கொழும்பு :""இலங்கையில் நீண்ட நாளாக நடந்து வரும் இனச்சண்டைக்கு அரசியல் ரீதியாக பேச்சுவார்த்தை நடத்துவதோடு, அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டு பிரச்னைக்கு தீர்வு காணப்பட வேண்டும்'' என்று மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


4.பெருவில் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கோவில் கண்டுபிடிப்பு
லிமா :பெரு நாட்டில் புதைந்திருந்த நான்காயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கோவில் தொல் பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


5.காயத்தால் கடும் வலியா? மிளகாய் துள் போதும்
வாஷிங்டன் :அறுவை சிகிச்சையின் போது, வலி நிவாரணியாக மிளகாயை பயன்படுத்துகின்றனர் டாக்டர்கள். காயத்தின் மீது நேரடியாக மிளகாய் துள் பூசப்படுவதால், வலி தெரியாது. வீட்டில் இதை செய்ய முடியாது.


6.பிரமாண்டமாகிறது கூடங்குளம் அணுமின் நிலையம் நான்கு உலைகள் அமைக்க ரஷ்யாவுடன் இன்று ஒப்பந்தம்
மாஸ்கோ :நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையம் மேலும் பிரமாண்டமாகிறது. கூடங்குளத்தில் மின்சார உற்பத்திக்காக மேலும் நான்கு அணு உலைகள் ஏற்படுத்த இந்தியா மற்றும் ரஷ்யா இடையே இன்று ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.

7.டி.பி., நோய்க்கு 2 புதிய மருந்துகள் கண்டுபிடிப்பு

கேப்டவுன் :எலும்புருக்கி நோயால் (டி.பி.,) பாதிக்கப்பட்டவர்களுக்கு குறுகிய கால சிகிச்சையில் குணமடையும் வகையில் இரண்டு புதிய மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.


8.பாகிஸ்தானில் ஜனவரி 9ம் தேதி தேர்தல்: முஷாரப் அறிவிப்பு
இஸ்லாமாபாத் :"அவசர நிலை அறிவிக்கப் பட்டுள்ள பாகிஸ்தானில் அடுத்தாண்டு ஜனவரி மாதம் 9ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும்' என்று முஷாரப் தெரிவித்துள்ளார்.

mgandhi
13-11-2007, 05:26 PM
01.அமெரிக்காவில் மேல் படிப்பு: இந்திய மாணவர்கள் முதலிடம்
ஹூஸ்டன்: அமெரிக்காவுக்கு மாணவர்களை அனுப்புவதில் தொடர்ந்து ஏழாவது ஆண்டாக இந்தியாவே முதல் இடத்தில் இருந்து வருகிறது.02.துபாயில் பால விபத்து: 3 இந்தியர்கள் கைது
துபாய்: துபாயில் பாலம் இடிந்து விழுந்து ஐந்து தமிழர்கள் உட்பட ஏழு இந்தியர்கள் இறந்த வழக்கு தொடர்பாக, மூன்று இந்தியர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


03.ஒவ்வொரு குழந்தைக்கும் "லேப்டாப்': செயல்பாட்டுக்கு வரும் கனவு திட்டம்
சான் பிரான்சிஸ்கோ: கல்வி மேம்பாட்டுக்காக, ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு "லேப்டாப் கம்ப்யூட்டர்' என்ற கனவு திட்டம் செயல்பாட்டுக்கு வர உள்ளது.


04.இறால்கள் நண்டுக்கும் வலி தெரியும்
லண்டன்: இறால் மீன்கள் மற்றும் நண்டுகளுக்கும் வலி உணரும் திறன் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.


05.தேர்தல் புறக்கணிப்பு: பாக்.,கில் போர்க்கொடி
இஸ்லாமாபாத்: அவசர நிலை பிரகடனத்தின் மூலம் தலைவர்கள் கைது செய்யப்பட்டால், தேர்தலை புறக்கணிக்கப் போவதாக பாக்., எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன.


06.துபாயில் விபசாரம்: இந்தியர்கள் இருவர் கைது
துபாய்: துபாயில், வீட்டு வேலைக்காக வந்த பெண்களை, விபசாரத்துக்கு பயன்படுத்தி, அவர்களை ரூ. ஒரு லட்சத்துக்கு விற்க முயன்ற இந்தியர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

mgandhi
14-11-2007, 05:13 PM
1-ஏலத்திற்கு வருகிறது ஹிட்லரின் "உலக உருண்டை'

ஆக்லாண்டு : ஜெர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லர் வைத்திருந்த உலக உருண்டை, 62 ஆண்டுகளுக்கு பிறகு ஏலத்துக்கு வரப் போகிறது.


2. சிறந்த தொழில் நுட்ப பட்டியலில் இந்தியா

லண்டன் : சர்வதேச அளவில் சிறந்த தொழில் நுட்பக் கழகங்களில், முதல் 50 இடங்கள் பட்டியலில் டில்லி ஐ.ஐ.டி., மற்றும் மும்பை ஐ.ஐ.டி.,க்கள் இடம் பிடித்துள்ளன.
3. ஈராக், ஆப்கன் போரால் தண்டச் செலவு : அமெரிக்க பார்லி., கூட்டு குழு புகார்

வாஷிங்டன் : ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா போர் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதால், ஏற்பட்டுள்ள செலவு, மறைமுக செலவுகளால் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது என...
4. "ஆப்கன் அனுப்பாவிட்டால் ராஜினாமா' : பிரிட்டன் ராணுவத்துக்கு ஹாரி எச்சரிக்கை

லண்டன் : "ஆப்கனுக்கு அனுப்பாவிட்டால், ராணுவத்தில் இருந்து ராஜினாமா செய்து விடுவேன்' என்று, பிரிட்டன் இளவரசர் ஹாரி அதிகாரிகளை எச்சரித்துள்ளார்.
5. புறாக்களுக்கு தீனி போட்டால் "பைன்' : நியூயார்க் நகர கவுன்சிலர் யோசனை

நியூயார்க் : நியூயார்க்கில் பல்கி பெருகி வரும் புறாக்களை விரட்டி அடிக்க வேண்டும், புறாக்களுக்கு தீனி போடுபவர்களுக்கு ஆயிரம் அமெரிக்க டாலர் அபராதம் விதிக்க வேண்டும் என...6. கிட்னி தானம் செய்தால் ரத்த சோகை ஏற்படும் அபாயம்

டொராண்டோ : கிட்னி தானம் செய்தால் ரத்த சோகை நோய் தாக்கும் அபாயம் உள்ளதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.7. காமன்வெல்த் அமைப்பு எச்சரிக்கை: உதாசீனப்படுத்தியது பாகிஸ்தான்

லண்டன் : "பாகிஸ்தானில், அரசியல் சட்டம் முடக்கப்பட்டதை நீக்க வேண்டும், அவசர நிலை பிரகடனப்படுத்தியதை வாபஸ் பெற வேண்டும், சுதந்திரமான நீதித்துறை ஏற்படுத்த வேண்டும். இல்லாவிடில்8. இரும்பு தாது ஏற்றிய சரக்கு ரயில் மாயம்

கியோன்ஜார் : சட்டவிரோதமாக வெட்டியெடுக்கப்பட்ட இரும்புத் தாது மண் ஏற்றிய சரக்கு ரயில், பலர் கண்ணில் மண்ணை துவி தப்பிவிட்டது

mgandhi
15-11-2007, 05:10 PM
01. காடுகளில் உணவு தட்டுப்பாட்டால் பாண்டா கரடிகள் அழியும் அபாயம்

செங்டு, (சீனா) : அரிய வகை இனமான பாண்டா கரடிகள், உணவு பற்றாக்குறையால் அழியும் நிலை உருவாகி உள்ளது.


02. மலை மீது ஏற ஸ்பைடர் மேனுக்கு அழைப்பு

பீஜிங் : உலகின் பல பகுதிகளில் உள்ள உயரமான கட்டடங்களில் வெறுங் கைகளினால் ஏறி பிரபலமடைந்துள்ள, "பிரெஞ்ச் ஸ்பைடர் மேன்' அலாயின் ராபர்ட்டுக்கு, மலை ஒன்றின் மீது ஏற சீன அரசு அழைப்பு விடுத்துள்ளது.

03. வியட்நாமில் முதலை வேட்டை : ராணுவ வீரர்கள் தீவிரம்

ஹனோய் : வியட்நாமில், முதலை பண்ணையில் இருந்து தப்பிய நுற்றுக்கணக்கான முதலைகளால் பீதி ஏற்பட்டுள்ளது. ராணுவ வீரர்களும், வன பாதுகாவலர்களும் முதலை வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

04. பாக்., இந்து நீதிபதிக்கு ஆதரவாக முஸ்லிம்கள் தீபாவளி பிரார்த்தனை

இஸ்லாமாபாத் : வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு இருக்கும், பாக்., சுப்ரீம் கோர்ட்டின் ஒரே ஒரு இந்து மத நீதிபதி ரானா பகவான்தாசுக்கு, தங்களின் வலுவான ஆதரவை தெரிவிக்கும் வகையில்...


05. வீட்டு சிறையிலிருந்து தப்பிய இம்ரான்கான் லாகூரில் கைது

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் வீட்டு சிறையில் இருந்து தப்பிய இம்ரான் கான், லாகூரில் நேற்று பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் பங்கேற்க வந்த போது கைது செய்யப்பட்டார்.


06. மீசையால் வேலைக்கு ஆபத்து: கோர்ட்டுக்கு போன போலீஸ்காரர்

சியோல் : மீசை மீதுள்ள ஆசையால், போலீஸ்காரரின் வேலை பறிபோனது.

07. சீக்கிய மாணவி மீண்டும் வெளியேற்றம்

லண்டன்: பிரிட்டனில் சவுத் வேல்ஸ் பகுதியில் அபிர்டேர் பெண்கள் பள்ளியில் சரிகா சிங்(14) என்ற மாணவி படித்து வருகிறார்

mgandhi
17-11-2007, 05:17 PM
01. விடுதலை புலிகள் ஆதரவு அமைப்பின்சொத்துக்களை முடக்கியது அமெரிக்கா

கொழும்பு : விடுதலைப் புலிகளுக்கு கிடைத்து வரும் நிதியுதவியை தடுத்து நிறுத்தி பொருளாதார ரீதியாக தனிமைப்படுத்தும் நோக்கில் அமெரிக்கா அதிரடி முடிவை எடுத்துள்ளது.02. வங்கதேசத்தை தாக்கியது "சிதர்' புயல்: 450 பேர் பலி

தாகா : வங்கதேசத்தை மணிக்கு 240 கி.மீ.,வேகத்தில் தாக்கிய "சிதர்' புயலினால் 450 பேர் பலியாயினர். ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர். மேலும், மூன்றாயிரம் மீனவர்கள் காணாமல் போயுள்ளனர்.03. நீதிபதி இப்திகார் சவுத்ரிக்கு சுதந்திரத்திற்கான பதக்கம்

நியூயார்க் : பாகிஸ்தானில் அதிபர் முஷாரப்பிற்கு எதிராக கடும் தீர்ப்புகளை வழங்கிய பாக்., முன்னாள் தலைமை நீதிபதி இப்திகார் சவுத்ரியின் சிறப்பான பணியை பாராட்டி...04. பம்முகிறார் முஷாரப்: அடுத்தடுத்து அவசர நடவடிக்கை : அமெரிக்க நெருக்கடி உச்சகட்டம்

இஸ்லாமாபாத் : அமெரிக்க வெளியுறவு துணை அமைச்சர் நெக்ரோ பான்டே பாகிஸ்தானுக்கு வருவதற்கு முன், அங்கு பல திருப்பங்கள் ஏற்பட் டன.05. கோர்ட்டில் விசாரணைக்கு ஆஜராக கால்பந்து வீரர் சிம்சனுக்கு உத்தரவு

லாஸ் ஏஞ்சலெஸ் : அமெரிக்காவில் பிரபலமான கால்பந்து வீரராக உருவெடுத்தவர் சிம்சன். இவர் திரைப்படங்களிலும் நடிக்க தொடங்கினார்.

mgandhi
18-11-2007, 05:35 PM
01.செக்ஸ் வழக்கில் சிக்கினார் அமெரிக்க கன்னியாஸ்திரி

மில்வாக்கி :அமெரிக்காவை சேர்ந்த 79 வயது கன்னியாஸ்திரி ஒருவர் செக்ஸ் குற்றச்சாட்டில் சிக்கியுள்ளார். அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், 20 ஆண்டு சிறை தண்டனை கிடைக்கலாம்.02.பயன்படுத்தப்பட்ட காண்டம்களில் தயாராகிறது அபாயமான "ஹேர் பேண்டு'

பீஜிங் :பாலுறவு நோய்களை தடுப்பதற்காக கொண்டு வரப்பட்ட காண்டம்கள், இப்போது அந்த நோயை பரப்பும் வகையில் பயன்படுத்தப்படுகின்றன.03.புயல் தாக்கிய வங்கதேசத்தில் மீட்புப்பணிகள்

தாகா :புயல் தாக்கிய வங்கதேசத்தில் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.04.அமெரிக்க மந்திரி ராணுவ தளபதியுடன் ஆலோசனை "நான் மனநோயாளியா' என அதிபர் முஷாரப் புலம்பல்

இஸ்லாமாபாத் :அமெரிக்க வெளியுறவு துணை அமைச்சர் நெக்ரோ பான்டே, பாகிஸ்தானில் முகாமிட்டுள்ளார்.05.இலங்கையில் 20 புலிகள் பலி

கொழும்பு :இலங்கையில் ராணுவம் பல்வேறு இடங்களில் நடத்திய தாக்குதலில் 20 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்.

mgandhi
19-11-2007, 05:25 PM
01.நடிகர் மாதவன் நடித்த தமிழ் படம் நியூயார்க்கில் பெரும் வரவேற்பு

நியூயார்க் :தமிழ் திரைப்பட நடிகர் மாதவனின், "எவனோ ஒருவன்' படம் நியூயார்க் நகரில் வித்தியாசமான முறையில் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றது.02. காஸ் பைப் லைன் வெடித்ததில் இந்தியர் உட்பட 28 பேர் பலி
துபாய் :சவுதியில் எரிவாயு குழாய் பராமரிப்பு பணியின் போது ஏற்பட்ட விபத்தில் இந்தியர் உட்பட 28 தொழிலாளர்கள் பலியாயினர். மேலும், 12 பேரை காணவில்லை.


03.."சிதர்' புயலுக்கு 1,860 பேர் பலி வங்கதேச அரசு அறிவிப்பு

தாகா :வங்கதேசத்தில் "சிதர்' புயல் ஏற்படுத்திய சேதத்தில், பலியானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 860 ஆக உயர்ந்துள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.04.ஆங்கிலம் கற்று கொடுத்ததால் மாணவன் சுட்டு கொலை தலிபான்கள் வெறிச்செயல்

கோஸ்ட்,(ஆப்கன்) :சக மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்றுக் கொடுத்த மாணவனை, தலிபான் பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.


05.முதுமையில் தனிமை பெண்களுக்கு சந்தோஷமே
லண்டன் :தனிமையில் முதுமைக் காலத்தை கழிப்பவர்களில், ஆண்களை விட பெண்கள் மகிழ்ச்சியாகவே உள்ளனர்.


06.காது கேளாமைக்கு மரபணுக்களே முக்கிய காரணம்
நியூயார்க் :காதுகளின் கேட்கும் திறனுக்கு, அவர்களின் மரபணுக்கள் தான் காரணம் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


07.இலங்கை அரசுக்கு நெருக்கடி புலிகள் அதிரடி வியூகம்
கொழும்பு :இலங்கை பார்லிமென்ட்டில் இன்று நடைபெற இருக்கும் பட்ஜெட் தாக்கலை, தமிழ் தேசிய கூட்டணி கட்சிகள் மூலம் முறியடிக்க விடுதலைப் புலிகள் திட்டம் வகுத்துள்ளதாக இலங்கை அரசு கூறியுள்ளது.


08.எவரெஸ்ட்டில் சீனா அமைத்தது மொபைல் ஸ்டேஷன்
பிஜீங் :சீனாவின் பிரபல மொபைல் போன் இணைப்பு நிறுவனம், எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில்,மொபைல் டிரான்ஸ்மிஷன் கோபுரத்தை நிறுவி, வெற்றிகரமாக சோதனையும் செய்துள்ளது.

09.சிங்கப்பூரில் செக்ஸ் வீடியோ விளையாட்டுக்குத் தடை
சிங்கப்பூர் :சிங்கப்பூரில் செக்ஸ் காட்சியுடன் இருக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வீடியோ கேமுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

mgandhi
20-11-2007, 05:17 PM
01.குண்டாக இருக்கிறீர்களா? நியூசி., செல்ல முடியாது

லண்டன் :பிரிட்டனை சேர்ந்த தொழில் நுட்ப வல்லுநர், தனது மனைவியுடன் நியூசிலாந்து செல்ல விரும்பினார்.02. பாக்.,கில் ஜனவரி 8ம் தேதி பொதுத்தேர்தல் அதிபர் தேர்வை எதிர்த்த மனுக்கள் "டிஸ்மிஸ்'
இஸ்லாமாபாத் :"பாக்.,கில் ஜனவரி 8ம் தேதி பொதுத்தேர்தல் நடத்தப்படும்' என்று, பாக்., சர்வாதிகாரி முஷாரப் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.


03.வங்கதேசத்தில் புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டும்
தாகா :வங்கதேசத்தில் வீசிய "சிதர்' புயலால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டும் என்று கூறப்படுகிறது.


04.உடல் ஈர்ப்புமிக்க மிஸ்டர் மேக்னட் ருமேனியாவில் குவியும் நோயாளிகள்
ருமேனியா :உடலில் காந்த சக்தி இருப்பதாக நம்பி ருமேனியாவைச் சேர்ந்த ஒருவரிடம் சிகிச்சை பெற குவிந்து வருகின்றனர் நோயாளிகள்.


05.எலிசபெத் டெய்லர் ஓவியம் ரூ. 93 கோடிக்கு விற்பனை
லண்டன் :ஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லரின் ஓவியம் ஏல விற்பனையில் கோடிகளை தாண்டி சாதனை படைத்துள்ளது.

mgandhi
21-11-2007, 05:21 PM
01. கோடீஸ்வரர்களின் பெண் வாரிசுகளும் சாதனை பட்டியலில் முதல் இடம் பிடித்தார் வனிஷா
நியூயார்க்: உலக கோடீஸ்வரர்களின் பெண் வாரிசுகளும், தத்தமது துறைகளில் முன்னணியில் உள்ளனர்.


02. அப்பாக்களின் பராமரிப்பில் வளரும் குழந்தைகளின் எதிர்காலம் பாழ்?
லண்டன் : "அப்பாக்களின் பராமரிப்பில் வளரும் குழந்தைகளின் எதிர்காலம் பாழாகும் நிலை ஏற்படக்கூடும்' என்று, ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.


03. தரம் குறைந்த செக்ஸ் மாத்திரைகள் பயன்படுத்த பிரிட்டனில் தடை
லண்டன் : செக்ஸ் ஊக்க மாத்திரையான "வயாக்ரா' போல, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தரம் குறைந்த செக்ஸ் ஊக்க மாத்திரைகளின் விற்பனை பிரிட்டனில் சக்கை போடு போடுகிறது.


04. சவுதி சென்றார் முஷாரப்
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் அதிபர் முஷாரப், இரண்டு நாள் பயணமாக நேற்று சவுதி அரேபியா புறப்பட்டார்.


05. வங்கதேசத்துக்கு ஐ.நா.,வின் உணவு பொட்டலங்கள்
ஐக்கிய நாடுகள்: வங்கதேசத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் வங்கதேச விமானப் படை விமானங்கள் மூலம், அவசர உணவு சப்ளைக்கு ஐ.நா., உணவு திட்டம் அமைப்பு முடிவு செய்துள்ளது.

mgandhi
22-11-2007, 05:29 PM
01. ஓவியத்தில் லயித்து முத்தமிட்ட பெண் நீதிபதி : அபராதம் விதித்து தண்டித்ததால் பரபரப்பு
பாரீஸ் : ஓவியத்தில் லயித்துப்போய், லிப்ஸ்டிக் உதட்டால் முத்தமிட்டு பரபரப்பை ஏற்படுத்திய பெண் நீதிபதிக்கு அபராதம் விதிக்கப்பட்டது.


02. இடநெருக்கடிக்கு ஏற்ப மடிப்பு கார் வடிவமைப்பு
வாஷிங்டன் : போக்குவரத்து நெரிசல், இடப் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, இயக்கிய பின் மடக்கி வைத்துக் கொள்ளும் வகையில் வித்தியாசமான குட்டிக் கார் அமெரிக்காவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.


03. 10 நிமிடத்தில் வலியில்லாமல் கு.க., ஆண்களுக்கு புது அறுவை சிகிச்சை
பீஜிங் : ஆண்களுக்கு பத்தே நிமிடத்தில், வலியில்லாமல் குடும்பக் கட்டுப்பாடு செய்யும் புதிய முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


04. இந்து மதத்தை பின்பற்றுபவர்கள் யார்? பிரிட்டன் பள்ளி விளக்கம்
லண்டன் : பிரிட்டனில் அரசு நிதியுதவியுடன் செயல்பட உள்ள இந்து பள்ளி ஒன்று, "இந்து மதத்தை பின்பற்றுபவர்கள்' யார் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளது.


05. உடல் பருமனால் பிரிட்டனில் 2000 பேர் வேலைஇழப்பு * நிதி பெறுவதற்காக நாடகம்?
லண்டன் : பிரிட்டனில் அதிக பருமன் உள்ள இரண்டாயிரம் பேர் வேலை பார்க்க முடியாததால், அவர்கள் தங்கள் எஞ்சிய வாழ்க்கையை நடத்த ரூ. 35 கோடி இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது.


06. இந்திய அணு உலைகளை கண்காணிக்க ஒப்பந்தம்: பேச்சுவார்த்தை துவங்கியது
வியன்னா : இந்தியாவில் மின் உற்பத்தி நடக்கும் அணு உலைகளை, சர்வதேச அணுசக்தி ஏஜென்சியின் தொடர் கண்காணிப்புக்கு உட்படுத்தும் ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தை நேற்று துவங்கியது.


07. பிரான்ஸ் வேலை நிறுத்தம் : எட்டாவது நாளாக தொடர்கிறது
பாரிஸ் : பிரான்சில் தொடர்ந்து நடந்து வரும் போக்குவரத்து வேலை நிறுத்த போராட்டம், எட்டாவது நாளாக நேற்றும் தொடர்ந்தது.


08. தேர்தலில் போட்டியா? இரண்டு நாட்களில் பெனசிர் முடிவு
இஸ்லாமாபாத் : "தேர்தலில் போட்டியிடுவது குறித்து இரண்டொரு நாட்களில் முடிவு செய்யப்படும்' என்று பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் பெனசிர் கூறியுள்ளார்.


09. "அதிகாரத்தை பகிர்ந்து கொடுங்கள்' இலங்கைக்கு இந்தியா அறிவுரை
கம்பாலா : தமிழர்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்து அளிக்கும் ஒப்பந்தத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என இலங்கைக்கு இந்தியா அறிவுறுத்தியுள்ளது.


10. ஆசியான் நாடுகளுக்கு செல்ல ஒரே நாளில் விசா? : பிரதமர் புது தகவல்
சிங்கப்பூர் : இந்தியாவுடன் சர்வதேச அணுசக்தி ஒத்துழைப்புக்கு ஆதரவு அளிக்க சீனாவும் முன்வந்துள்ளது.


11. நாலந்தா பல்கலை கழகத்தை மீண்டும் ஏற்படுத்த அழைப்பு
சிங்கப்பூர் : பீகாரில் பல நுற்றாண்டுகளுக்கு முன் சிறந்த சர்வதேச பல்கலைக் கழகமாக செயல் பட்ட நாலந்தா பல்கலைக் கழகத்தை மீண்டும் ஏற்படுத்த வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங் அழைப்பு விடுத்துள்ளார்.


12.இலங்கையில் பத்திரிகை அலுவலகம் எரிப்பு
கொழும்பு: இலங்கையில் ஆளுங்கட்சிக்கு எதிராக கருத்துக்கள் வெளியிட்ட பத்திரிகை அலுவலகம், மர்ம கும்பலால் தீ வைத்து கொளுத்தப்பட்டது.

mgandhi
23-11-2007, 06:08 PM
லண்டன்: போர்ட் நிறுவனத்திடம் இருந்து ஜாகுவார், லேண்ட்ரோவர் ஆகிய கார்கள் தயாரிப்புப் பிரிவுகளை டாடா நிறுவனம் வாங்க திட்டமிட்டுள்ளது.

டாடாவின் இந்த முயற்சிக்கு போர்ட் நிறுவனத்தின் முக்கிய ெதாழிற்சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.

ஜாகுவார், லேண்ட் ரோவர் ஆகியவை மிக அதிக விலை கொண்ட ...

அமெரிக்க சர்ச்சில் முழங்கிய சமஸ்கிருத மந்திரம்!
வாஷிங்டன்: அமெரிக்காவில் நடந்த தேங்க்ஸ் கிவிங் நிகழ்ச்சியில், நிவேதா மாநிலத்தில் உள்ள ஒரு கிறிஸ்தவ பேராலயத்தில் சமஸ்கிருத மந்திரங்கள் முழங்கப்பட்டன. அமெரிக்காவில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்று ...

பறவைக் காய்ச்சல் பீதி: செளதியில் கொல்லப்பட்ட 30 லட்சம் கோழிகள்!
ரியாத்: செளதி அரேபியாவில் பறவைக் காய்ச்சல் பீதி காரணமாக 30.2 லட்சம் கோழிகள் கொல்லப்பட்டுள்ளன. எச்.5என்1 வகை ஏவியான் ப்ளூ காய்ச்சல் பரவுவதைத் தடுக்க செளதி அரேபிய ...

ஜாகுவார், லேண்ட் ரோவரை வாங்கும் டாடா
லண்டன்: போர்ட் நிறுவனத்திடம் இருந்து ஜாகுவார், லேண்ட்ரோவர் ஆகிய கார்கள் தயாரிப்புப் பிரிவுகளை டாடா நிறுவனம் வாங்க திட்டமிட்டுள்ளது. டாடாவின் இந்த முயற்சிக்கு போர்ட் நிறுவனத்தின் முக்கிய ெதாழிற்சங்கம் ...

துபாயில் அதிகரிக்கும் பிக்பாக்கெட்!!
துபாய்: துபாயில் பிக்பாக்கெட் உட்பட பல்வேறு பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன. துபாயில் தொழில், வேலை வாய்ப்பு மற்றும் சுற்றுலா தொடர்பாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டினர் வருகிறார்கள். இவர்களின் ...

இந்தோனேஷியா: சுமத்ரா தீவில் கடும் நிலநடுக்கம்
ஜகார்தா: இந்தோனேஷியா நாட்டின் சுமத்ரா தீவு அருகே இன்று காலையில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. சுமத்ரா தீவின் தென்மேற்கு பகுதியில் உள்ள பண்டா அச்சே என்ற இடத்திலிருந்து ...

காமன்வெல்த் அமைப்பிலிருந்து பாகிஸ்தான் சஸ்பெண்ட்
கம்பாலா: காமன்வெல்த் அமைப்பிலிருந்து பாகிஸ்தான் தற்காலிகமாக நீக்கி வைக்கப்பட்டிருக்கிறது. உகாண்டா தலைநகர் கம்பாலாவில் இன்று காமன்வெல்த் அமைப்பின் உச்சி மாநாடு நடைபெறுகிறது.

துபாய்: கைதிகள் மோதல்-ஆணுறுப்பு துண்டிப்பு
துபாய்: துபாயில் உள்ள சிறையில், கைதிகளுக்கிடையே நடந்த மோதலில் ஒரு கைதியின் ஆணுறுப்பு துண்டிக்கப்பட்டது. ரஸ் அல் காமா என்ற இடத்தில் உள்ள சிறையில்தான் இந்த பயங்கரச் சம்பவம் ...

துபாயில் முமுக சார்பில் இலவச மருத்துவ முகாம்
துபாய்: துபாய் முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் கராமா மெடிக்கல் செண்டர் ஆகியவை இணைந்து நாளை (23ம் தேதி) துபாயில் இலவச மருத்துவ முகாமை நடத்தவுள்ளன. அல்-கூஸ் ...

இம்ரான்கான் சிறையிலிருந்து விடுதலை
இஸ்லாமாபாத்: சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாகிஸ்தான் நீதிக் கட்சித் தலைவரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான்கான் நேற்று திடீரென விடுவிக்கப்பட்டார். கடந்த வாரம் மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் இம்ரான் கான் ...

முஷாரப் செளதி பயணம்: ஷெரீப்புடன் பேச்சு?
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் இரண்டு நாள் பயணமாக செளதி சென்றார். அங்கு முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை முஷாரப் சந்திக்கக் கூடும் என்று ...

இந்திய கோழி இறைசிக்கு ஓமனில் தடை நீக்கம்
மஸ்கட்: இந்தியாவில் பறவை காய்ச்சல் நோய் இல்லையென்று உலக விலங்குகள் அமைப்பு கொடுத்த அறிக்கையையடுத்து ந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கோழிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை ஓமன் நாட்டு அரசு விலக்கியுள்ளது. ...

mgandhi
25-11-2007, 05:28 PM
01. தற்கொலைப்படை தாக்குதல் :25 பேர் பலி
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் ராவல்பிண்டி நகரில் நேற்று காலை அடுத்தடுத்து நடந்த இரண்டு தற்கொலை படை தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டனர்.


02. நாடு திரும்புகிறார் நவாஸ் : தேர்தலிலும் போட்டி?
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் இன்று மாலை லாகூர் வருகிறார். இந்த தகவலை அவரது பாகிஸ்தான் முஸ்லிம் லீக்(நவாஸ்) கட்சி தெரிவித்துள்ளது.


03. கையெழுத்தில் தெரியுமா தலையெழுத்து
லண்டன் : மாரடைப்பு நோய் வருவதை ஒருவரின் கையெழுத்து வடிவத்தைக் கொண்டு கண்டுபிடிக்க முடியுமா என்ற ஆய்வில், லண்டன் டாக்டர் ஒருவர் தீவிரமாக ஆராய்ச்சி செய்து வருகிறார்.


04. காமன்வெல்த் அமைப்பின் பொதுச் செயலராக கமலேஷ் சர்மா தேர்வு
கம்பாலா : காமன்வெல்த் அமைப்பின் புதிய பொதுச் செயலராக இந்தியாவைச் சேர்ந்த கமலேஷ் சர்மா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.


05. 14 விடுதலை புலிகள் பலி
கொழும்பு : இலங்கையில் நடந்த சண்டையில், 14 விடுதலைப் புலிகள் உட்பட 16 பேர் கொல்லப்பட்டனர்.


06. உரிமை கோரி மலேசிய இந்துக்கள் பேரணி : "ராஜதுரோகம்' என்று பிரதமர் படாவி கோபம்
கோலாலம்பூர் : மலேசியப் பிரதமர் அப்துல்லா படாவி வேண்டுகோளை நிராகரித்து எதிர்ப்பு பேரணியை இன்று நடத்த மலேசிய இந்திய இந்துக்கள் முடிவு செய்துள்ளனர்.07. செக்சை விட ஷாப்பிங் செல்வதில் பிரிட்டன் பெண்களுக்கு அதிக ஆர்வம்
லண்டன் : பிரிட்டன் பெண்களில் பெரும்பான்மையானவர்கள் செக்சில் ஈடுபடுவதைவிட ஷாப்பிங் செல்வதில் தான் மிகவும் ஆர்வம் காட்டுகின்றனர்.08. விளையாட்டாகி விட்டது மது, போதை, செக்ஸ், கர்ப்பம் விபரீத மொபைல் கேம்: பெற்றோர் பீதி
மெல்போர்ன் : ஓகே! ஆரம்பிக்கலாமா? முதல்ல மது குடிங்க, அத்தோடு சிகரெட்டையும் பற்ற வையுங்க.09. கடற்கரையில் காதல் சல்லாபம் : கண்காணிக்க நவீன கேமராக்கள்
ஜென்சென் பீச் : கடற்கரையில் இனி காதல் சல்லாபங்கள் செய்ய முடியாது. இதை தடுக்கும் வகையில் நவீன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.10. இந்தியா வந்தார் ஏசு? தயாராகிறது சினிமா
லண்டன் : இந்தியாவிலும் ஏசு இருந்ததாக சித்தரித்து, புதிதாக தயாராகிறது ஹாலிவுட் சினிமா. ஏசுவின் 13வது வயது முதல் 30 வயது வரை, அவரைப் பற்றி பெரியளவில் தகவல்கள் இல்லை.

mgandhi
26-11-2007, 06:24 PM
27-11-2007

01. ஆறு நிமிடத்துக்கு ஒரு "டைவர்ஸ்' * இங்கல்ல, எகிப்தில்...!
கெய்ரோ: ஆறு நிமிடத்துக்கு ஒரு விவாகரத்து நடக்கிறது; திருமணம் ஆன முதலாண்டில், மூன்றில் ஒரு திருமணம் முறிகிறது. எகிப்து புள்ளிவிவர துறை, இப்படி திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது.


02. மலேசியாவில் மூன்று தமிழர்கள் விடுதலை
கோலாலம்பூர்: மலேசியாவில் அரசை எதிர்த்து போராட்டத்தை துண்டும் வகையில் பேசியதாக கைது செய்யப்பட்ட இந்து இனத் தலைவர்கள் மூன்று பேர், அவர்கள் பேசிய தமிழின் மொழியாக்கம் புரியாததால் தற்காலிகமாக விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டது.


03. அப்பா "துறுதுறு' என இருந்தால் மகன் படு சுறுசுறுப்பு தான்!
பாரிஸ்: "தாயை விட, தந்தையை போலத்தான் மகன் வளர்வான்; தந்தை சுறுசுறுப்பாக இருந்தால், கண்டிப்பாக மகனும் மிகவும் "துறுதுறு' என்று இருப்பான்!'


04. கட்டட தொழிலாளர் துபாயில் சம்பள உயர்வு
ஷார்ஜா: அரபு நாடுகளில் பணியாற்றும் கட்டட தொழிலாளர்களுக்கு 20 சதவீதம் வரை சம்பள உயர்வு அளிக்க கட்டுமான நிறுவனங்கள்முடிவு செய்துள்ளன.


05. காதல் வலைவிரிக்கும் புன்னகை * பல் பராமரிப்பில் பெண்கள் ஆர்வம்
லண்டன்: இளைஞர்களை காதல் வலையில் சிக்க வைக்க, பல் டாக்டரை தேடி ஓடும் பெண்கள் அதிகரித்து வருவதாக பிரிட்டனில் நடந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

mgandhi
27-11-2007, 04:36 PM
பின்லேடன் மீண்டும் எச்சரிக்கை

ரூ.46 கோடிக்கு ஏலம் போன ஒவியம்

நவாஸ் ஷெரீப் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படும்: அரசாங்க வக்கீல் அறிவிப்ப

மெக்சிகோவில் 2 தடவை நிலநடுக்கம்; வீடுகள் குலுங்கின

தமிழர் பகுதியில் இலங்கை ராணுவ விமானம் சரமாரி குண்டு வீச்சு

பிலிப்பைன்ஸ்-மெக்சிகோவில் நிலநடுக்கம்: வீடுகள் குலுங்கின ரெயில்கள் ரத்து
ஜப்பானில் பூமி அதிர்ச்சி

ராணுவ தளபதி பதவியில் முஷரப் நாளை பதவி விலகுகிறார்

mgandhi
29-11-2007, 04:46 PM
01.ராணுவ தளபதி பதவியில் இருந்து விலகினார் முஷாரப் கியானியிடம் பொறுப்பை ஒப்படைத்து உருக்கமான பேச்சு
இஸ்லாமாபாத் :உள்நாட்டு மற்றும் சர்வதேச நிர்பந்தத்துக்கு பணிந்து, ராணுவ தலைமை தளபதி பதவியில் இருந்து பாக்., சர்வாதிகாரி முஷாரப் விலகினார்.


02.கருணாநிதி மீது மலேசிய மந்திரி கோபம்
சிங்கப்பூர் :""எங்கள் நாட்டின் அரசியல் விவகாரங்களில் தமிழக முதல்வர் கருணாநிதி தலையிட வேண்டாம்,'' என மலேசிய அமைச்சர் முகமது நஸ்ரி அப்துல் அஜீஸ் ஆவேசப்பட்டுள்ளார்.


03.ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக 80 இந்துக்கள் மீது வழக்கு பதிவு
கோலாலம்பூர் :மலேசியாவில் சட்ட விரோதமானது என அறிவிக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றதாக 80 இந்துக்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

mgandhi
30-11-2007, 05:57 PM
01. அமெரிக்காவுக்கு உதவும் ஐரோப்பியர்களுக்கு மிரட்டல் *மீண்டும் ஒசாமா பின்லாடன் குரல்
துபாய்: அமெரிக்காவுடனான தொடர்பை துண்டித்து கொண்டு, ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த போர் வீரர்கள், ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற வேண்டும்.


02. நவாஸ் ஷெரீப், இம்ரான் அணி சேர்ந்து முஷாரப் நடத்தும் தேர்தல் புறக்கணிப்பு
லாகூர்: பாகிஸ்தானில் அனைத்து கட்சிகள் ஜனநாயக முன்னணி என்ற அமைப்பில் இடம் பெற்றுள்ள கட்சிகள், ஜனவரியில் நடக்க உள்ள பார்லிமென்ட் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளன.


03. திருடிய காரில் சிரித்த குழந்தையால் மனம் மாறிய பெர்லின் திருடன்
பெர்லின்: திருடிச் சென்ற காரில் குழந்தை துங்கிக் கொண்டிருந்ததால் மனிதநேயம் மிக்கத் திருடன் காரை மீண்டும் அதே இடத்தில் கொண்டு நிறுத்தி விட்டு தப்பினான்.


04. ஈரானில் அதிகரிக்கிறது ஜோதிட நம்பிக்கை
டெஹ்ரான்: ஈரானில் ஜோதிட நம்பிக்கை அதிகரித்து வருகிறது. ஜோதிடர்களின், பின்னால் ஓடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.


05. ரூ.240 கோடியில் முஷாரப்புக்கு புது "ஜெட்'
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அதிபர் முஷாரப் பயணம் செய்வதற்காக ரூ.240 கோடி செலவில் புது ஜெட் விமானத்தை பாகிஸ்தான் அரசு விலைக்கு வாங்கியுள்ளது.

mgandhi
01-12-2007, 05:57 PM
01. ஹிலாரி கிளின்டன் அலுவலகத்தில் மர்ம ஆசாமியால் பீதி : ஐந்து மணி நேர பரபரப்புக்குப் பின் சரண்
நியுயார்க் : அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக பிரசாரம் மேற்கொண்டு வரும் ஹிலாரி கிளின்டனின் பிரசார அலுவலகத்தில் புகுந்து, குண்டு மிரட்டல் விடுத்த ஆசாமி...02. ரஷ்யாவின் "சோனியா'வாக உருவெடுப்பாரா புடின்? : இன்று நடக்கும் பார்லி., தேர்தலில் முடிவு தெரியும்

மாஸ்கோ : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் எதிர்காலத்தை நிர்ணயம் செய்யும், பொது தேர்தல் இன்று நடக்கிறது

mgandhi
04-12-2007, 06:51 AM
01. ரஷ்ய பார்லிமென்ட் தேர்தல் : புடினுக்கு வெற்றி வாய்ப்பு
விளாடிவாஸ்டாக்(ரஷ்யா) : ரஷ்ய பார்லிமென்ட்டுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. இதில், நாடு முழுவதும் உள்ள 96 ஆயிரம் ஓட்டுச் சாவடிகளுக்கு சென்று மக்கள் ஓட்டு போட்டனர்.


02. ஏழைகள் நலனுக்கு நிதி திரட்ட விபசார பெண் நுதன திட்டம்

சான்டியாகோ : ஏழை மற்றும் ஊனமுற்ற குழந்தைகளுக்காக நிதி திரட்டும் பணியில் ஒரு அறக்கட்டளை ஈடுபட்டுள்ளது.


03. இந்தோனேசியாவில் மீண்டும் நிலநடுக்கம்

ஜகார்த்தா : இந்தோனேசியாவின் ஜாவா தீவில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.0 என பதிவாகியிருந்தது.


04. "இந்துராப்' அமைப்பு புகார் : மலேசிய பிரதமர் கோபம்
சிங்கப்பூர் : மலேசியாவில் இந்துக்கள் மீது இன அழிப்பு நடத்தப்படுகிறது என்ற, "இந்துராப்' அமைப்பின் குற்றச்சாட்டு அந்நாட்டு பிரதமர் படாவிக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.


05 பாக்.,கில் அழியும் இந்திய சின்னங்கள்

இஸ்லாமாபாத் : பாக்.,கில் உள்ள இந்திய நினைவுச் சின்னங்கள் அந்நாடு பிரிந்த பின் பராமரிக்கப்படவில்லை.


06. வீட்டு வேலைக்காரர் எண்ணிக்கையை கட்டுப்படுத்த எமிரேட்டில் புது சட்டம்

துபாய் : ஐக்கிய அரபு எமிரேட்டில் ஒவ்வொரு வீட்டிலும் பணிபுரியும் வேலைக்காரர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் வகையிலும் அவர்களுக்கு வசதி அளிக்க புதிய சட்டம் கொண்டுவரப்படுகிறது.


07. வெள்ளைக்கார பாட்டிகளுக்கு ஆப்ரிக்கர் மீது மோகம்

மொம்பாசா (கென்யா) : பிரிட்டனின் தென்பகுதியைச் சேர்ந்த 56 வயது பெண்ணும், அவரது நெருக்கமான 64 வயது தோழியும் முதல் முறையாக சேர்ந்து விடுமுறையை கழிக்க கென்யா வந்தனர்;


08 அமெரிக்காவில் பிறநாட்டவர்கள் இந்தியர்களுக்கு மூன்றாவது இடம்

வாஷிங்டன் : அமெரிக்காவில் சட்டப்பூர்வமாக குடியேறிய பிறநாட்டவர்கள் எண்ணிக்கையில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.

mgandhi
04-12-2007, 05:41 PM
01.ஷெரீப் வேட்பு மனு நிராகரிப்பு
இஸ்லாமாபாத்: பாக்., பொதுத் தேர்தலில் பங்கேற்பதா, புறக்கணிப்பதா என்பது குறித்து பெனசிரும், நவாஸ் ஷெரீப்பும் நேற்று ஆலோசனை நடத்தினர். இதனிடையில், தேர்தலில் போட்டியிட ஷெரீப் செய்திருந்த மனுவை தேர்தல் ஆணையம் நிராகரித்து விட்டது.02. இரண்டு வார சிகிச்சையில் இளமைக்கு திரும்பலாம் * விஞ்ஞானிகளின் பரிசோதனை வெற்றி
சிகாகோ: வயதான எலியின் தோலை மீண்டும் இளமையாக மாற்றி விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். இரண்டு வார சிகிச்சையில், குறிப்பிட்ட ஒரு மரபணுவை செயல்படவிடாமல் தடுத்தால், மீண்டும் இளமை திரும்பிவிடுகிறது.
03. ஆஸ்திரேலிய புதிய பிரதமர் பொறுப்பேற்பு
மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராக கெவின் ரெட் நேற்று பதவியேற்றார். ஆஸ்திரேலியாவில் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றது.04. இடி அமின் துரத்திய இந்தியர்கள் இன்று "கை'கொடுக்கின்றனர்!'* கட்டமைப்பு உட்பட பல் துறைகளில் பிரபலம்

கம்பாலா,: சொந்த நாட்டில் பல லட்சம் மக்களை கொன்ற கொடூர சர்வாதிகாரி இடி அமினால் வெளியேற்றப்பட்ட இந்தியர்கள், 35 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இப்போது, உகாண்டாவில் கால் பதிக்கின்றனர்.05. பிரிட்டனிலும் இந்திய பெற்றோர் பெண் குழந்தையை விரும்புவது இல்லை
லண்டன்: இந்தியாவில் மட்டும் தான் பெண் குழந்தைகளை விரும்பாத பெற்றோர் இருப்பதாக கருதினால், அது தவறு. பிரிட்டனில் வசிக்கும் இந்திய வம்சாவளி பெண்களும், பெண் சிசுக்களை கண்டறிந்து, கருக்கலைப்பு செய்து வருகின்றனர்.06. கணவரால் பெண்கள் கொலை ரஷ்யாவில் அதிகரிப்பதாக தகவல்

நியூயார்க்: கணவரால் கொல்லப்படும் பெண்கள் எண்ணிக்கை ரஷ்யாவில் அதிகரித்து வருவதாக ஐக்கிய நாடுகள் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:07. "அடிப்படை இல்லாத குற்றச்சாட்டு கூறி பிரச்னை எழுப்புவதை அனுமதிக்க முடியாது'
கோலாலம்பூர்: "பல்வேறு இனத்தவர்கள் வாழும் மலேசியாவில், அடிப்படை இல்லாத குற்றச் சாட்டுகளை கூறி பிரச்னை எழுப்பும் முயற்சி அனுமதிக்கப்படாது'08. இலங்கையில் தொடர் சண்டை 39 புலிகள், 6 ராணுவத்தினர் பலி

கொழும்பு: இலங்கையின் வடக்கே புலிகளுக்கும் , ராணுவத்துக் கும் நடந்த கடும் சண்டையில் 39 புலிகளும், ஆறு ராணுவ வீரர்களும் பலியாயினர்.09. கொழும்புவில் அப்பாவி தமிழ் இளைஞர்கள் கைது * இலங்கை அரசுக்கு தமிழ் அமைப்புகள் கண்டனம்

கொழும்பு: கொழும்புவில் பாதுகாப்பு படையினர் நடத்தி வரும் தேடுதல் வேட்டையில் ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதற்கு தமிழ் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

mgandhi
05-12-2007, 05:11 PM
01. முன்னேற்ற நடவடிக்கைகளை வைத்து நாட்டை எடை போடுங்கள்: படாவி
சிங்கப்பூர்: "மலேசிய அரசு பற்றி, நாட்டின் முன்னேற்றத்துக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை வைத்து தான் எடை போட வேண்டும்' என, அந்நாட்டு பிரதமர் அப்துல்லா ஹமாத் படாவி தெரிவித்துள்ளார்.02. மலேசியாவில் 26 தமிழர்கள் மீது கொலை முயற்சி வழக்கு
கோலாலம்பூர்: மலேசியாவில் வாழும் தமிழர்கள் மீது அந்நாட்டு அரசு கெடுபிடி காட்ட தொடங்கியுள்ளது. 26 தமிழர்கள் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
03. ஓரின சேர்க்கையாளரா கண்டலிசா ரைஸ்? *அமெரிக்காவில் வேகமாக பரவுது வதந்தி
நியூயார்க்: அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் கண்டலிசா ரைஸ், அதிபர் புஷ்ஷின் நம்பிக்கை யை பெற்றவர்களில் ஒருவர்.04. அதிகமாய் துங்கினாலும் ஆபத்து * குறைவாய் துங்கினாலும் ஆபத்து

லண்டன்: தினமும் குறிப்பிட்ட நேரம் வரை தான் துங்க வேண்டும். இந்த துக்க நேரம் குறைந்தாலும், அதிகமானாலும் ஆபத்து என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது05. அணுசக்தி ஒப்பந்தத்தை திருத்த வாய்ப்பு இல்லை
வாஷிங்டன்: அமெரிக்க வெளியுறவுத்துறை துணை அமைச்சர் நிகோலஸ் பர்ன்ஸ் சிங்கப்பூரில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:
06. "எடி' மனிதனின் காலடி தடம் கண்டுபிடிப்பு
காத்மாண்டு: இமயமலைப் பகுதியில் ஒரு அதிசய விஷயமாக கருதப்படும் "எடி' என அழைக்கப்படும் பனி மனிதனின் காலடி தடத்தை கண்டுபிடித்துள்ளனர்.07. ஜேம்ஸ் பாண்ட் படங்களால் "எம் 16'க்கு புது தலைவலி
லண்டன்: "ஜேம்ஸ் பாண்ட்' படங்களால் , பிரிட்டீஷ் "எம் 16' உளவுப்படைக்கு பெரும் தலைவலி ஏற்பட்டுள்ளது.

mgandhi
06-12-2007, 05:10 PM
1. . அதிகாலையில் சேவல் கூவுவது "நியூசன்ஸ்'வளர்த்த விவசாயிக்கு கோர்ட் அபராதம்
ஹட்லி: அதிகாலையில் சேவல் கூவியதை "நியூசன்ஸ்' என்று கூறி இத்தாலி கோர்ட் விவசாயிக்கு அபராதம் விதித்தது.இத்தாலி,மால்ஸ் மலை கிராமத்தைச் சேர்ந்தவர் ஆடம்ஸ்.
2. மெகா' கூட்டணி அமைக்க பெனசிர் முயற்சி
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அரசியலில் நாளுக்கு நாள் பல திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒன்று திரட்டி, "மெகா' கூட்டணியை ஏற்படுத்த பெனசிர் புட்டோ முயற்சித்து வருகிறார்.3. காதலரின் கர்ப்பிணி மனைவி வயிற்றிலேயே குத்தி கொன்ற இந்திய மாணவிக்கு ஆயுள்

லண்டன்: பிரிட்டனில், தனது காதலரின் கர்ப்பிணி மனைவியை சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்த, பல் மருத்துவ இந்திய மாணவிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.4. . செக்ஸ் தொழிலாளர்கள் 170 பேர் கைது
துபாய்: துபாயில் இதுவரை இல்லாத அளவு, ஒரே நேரத்தில் 170 செக்ஸ் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


5. இலங்கையில் கண்ணி வெடி தாக்குதல் பஸ்சில் பயணம் செய்த 15 பேர் பலி
கொழும்பு: இலங்கையில் புலிகள் மறைத்து வைத்திருந்த கண்ணி வெடியில் சிக்கி, பஸ் வெடித்துச் சிதறியது.


6. ஜேம்ஸ்பாண்ட் படங்களால் "எம் 16'க்கு புது தலைவலி
லண்டன்: "ஜேம்ஸ் பாண்ட்' படங்களால் , பிரிட்டீஷ் "எம் 16' உளவுப்படைக்கு பெரும் தலைவலி ஏற்பட்டுள்ளது.

mgandhi
07-12-2007, 04:58 PM
01. ஊழலில் அரசியல்வாதிகள் முதலிடம்: போலீசுக்கு அடுத்த இடம்
பெர்லின்: ஊழலில் அரசியல்வாதிகள் முதலிடத்தில் உள்ளனர். போலீசாரும், நீதித் துறையினரும் லஞ்சம் வாங்குவதில் சளைத்தவர்கள் அல்ல.

02. காண்டம் வழங்க பள்ளிகளில் இயந்திரம்
ரியோடி ஜெனிரோ: இளம் வயதினரிடையே எச்.ஐ.வி., பரவுவதை தடுப்பதற்காக, அனைத்து அரசு பள்ளிகளிலும் தானியங்கி காண்டம் வழங்கும் இயந்திரங்களை நிறுவ பிரேசில் அரசு உத்தரவிட்டுள்ளது.

03. இலங்கை பஸ்சில் குண்டு வெடிப்பு
கொழும்பு: இலங்கையின் வடபகுதியில், கபிதிகொலேவாவை நோக்கி பயணிகள் பஸ் சென்று கொண்டு இருந்தது.

04. அமெரிக்காவில் துப்பாக்கி சூடு: எட்டு பேர் பலி
நியூயார்க்: அமெரிக்காவில் டிபார்ட் மென்ட் ஸ்டோரில் 20 வயது வாலிபன் நடத்திய வெறித்தனமான துப்பாக்கி சூட்டில் எட்டு பேர் கொல்லப்பட்டனர்.

05. தமிழர்களுக்கு ஜாமீன் மறுப்பு
கோலாலம்பூர்: மலேசியாவில் நவம்பர் 25ம் தேதி நடந்த பேரணியில், போலீஸ் அதிகாரியை கொல்ல முயன்றதாக 31 தமிழர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

06. துபாய் செல்ல பெனசிருக்கு தடை
இஸ்லாமாபாத்: துபாய் செல்வதற்காக விமானத்தில் புறப்பட தயாராக இருந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனசிர் புட்டோவை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

mgandhi
09-12-2007, 03:55 AM
9-12-2007

01.பாகிஸ்தானில் அவசர நிலை: 15ம் தேதி வாபஸ்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் அறிவிக்கப்பட்டதற்கு ஒரு நாளைக்கு முன்னதாகவே அதாவது டிசம்பர் 15ம் தேதி அவசர நிலை பிரகடனம் வாபஸ் பெறப்படுகிறது.

02.இலங்கையில் 24 புலிகள் பலி
கொழும்பு: இலங்கையில் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 24 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்.

03.தேவைப்பட்டால் "ஆள் துக்கி சட்டம்' அமலாகும்: மலேசிய பிரதமர் படாவி மிரட்டல்
கோலாலம்பூர்: மலேசியாவில் வசித்து வரும் இந்திய வம்சாவளியினரின் செயல்கள், தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் அமைந்தால், "ஆள் துக்கி சட்டம் 'அமல்படுத்தப்படும் என அந்நாட்டு பிரதமர் அப்துல்லா அகமது படாவி மிரட்டல் விடுத்துள்ளார்.

04.வேலைக்கு போகும் பெண்களுக்கு பாக்.,கில் பாலியல் துன்புறுத்தல்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில், வேலைக்கு செல்லும் பெண்களில் 80 சதவீதத்தினர், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர். 20 சதவீதம் பேர் கருத்துக் கூற மறுத்துவிட்டனர்.

05.சிகிச்சையில் மன்னர் அணிந்த உடை தாய்லாந்தியர்கள் அமோக வரவேற்பு
பாங்காக்: தாய்லாந்தியர்களை விநோத உடைமோகம் பிடித்து ஆட்டி வருகிறது. மருத்துவ சிகிச்சைக்காக மன்னர் அணிந்த உடையைப் போல் உடுத்த விரும்பி போட்டி போட்டுக்கொண்டு அந்த உடையை வாங்க அலைந்து திரிகின்றனர்.

06.திருமணம் செய்ய ஆசையில்லை: பிரிவதிலும் தயக்கமில்லை
பீஜிங்: கணவன்மனைவி உறவின் அவசியம் பற்றிய புரிதல் இன்மையால் சீனாவில் விவாகரத்து அதிகரித்து வருகிறது.

07.கெட்ட வார்த்தை பேசிய மைனா: கூண்டில் அடைத்து தண்டனை
சீனா: பூங்காவில் வைக்கப் பட்டிருந்த மைனா அங்கு வந்தவரை கெட்ட வார்த்தை சொல்லி திட்டியதால், கூண்டில் அடைத்து அதற்கு தண்டனை தரப்பட்டது.

08.மோடிக்கு எதிராக விசாரணை: மனித உரிமை குழு வலியுறுத்தல்
நியூயார்க்: "குஜராத்தில் நடந்த போலி என்கவுன்டர் வழக்கில் முதல்வர் நரேந்திர மோடியின் பங்கு என்ன என்பது பற்றி விசாரணை நடத்த வேண்டும்' என அமெரிக்காவைச் சேர்ந்த மனித உரிமை கண்காணிப்பு குழு வலியுறுத்தியுள்ளது.

mgandhi
09-12-2007, 04:40 PM
1. ஈராக்கில் கார் வெடிகுண்டு தாக்குதலில் ராணுவ வீரர்கள் 7 பேர் பலி 15 வீடுகள் பலத்த சேதம்


2. போலி என்கவுண்ட்டர் சம்பவம்: நரேந்திர மோடி பேச்சு பற்றி இந்திய அரசு விசாரிக்க வேண்டும் உலக மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு கோரிக்கை


3. உரிமைகள் கேட்டு போராட்டத்தில் ஈடுபடும் தமிழர்களுக்கு மலேசிய பிரதமர் மிரட்டல் `உள்நாட்டு பாதுகாப்பு சட்டம் பாயும்'


4. பிஜித் தீவை கடும் புயல் தாக்கியது 2 கிராமங்கள் அடியோடு நாசம்


5. பாகிஸ்தானில் பெனாசிர் ஆதரவாளர்கள் 3 பேர் சுட்டுக் கொலை


6. பாகிஸ்தானில் 15-ந் தேதி நெருக்கடி நிலை ரத்து அட்டர்னி ஜெனரல் தகவல்

mgandhi
10-12-2007, 05:40 PM
11-12-2007

01. அம்மாவை நேசிக்கும் குழந்தைகள் பிரிட்டனில் அதிகரிப்பதாக தகவல்
லண்டன்: அம்மாவை நேசிக்கும் குழந்தைகள் பிரிட்டனில் அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. பல குடும்பங்களில் அப்பாவை குடும்ப உறுப்பினராக பார்ப்பதே குறைந்து விட்டது என்றும் ஆய்வு கூறுகிறது

02. 2,000 ஆண்டு பழமையான அரண்மனை கண்டுபிடிப்பு!
ஜெருசலம்: இஸ்ரேல் நாட்டில், 2,000 ஆண்டு பழமையான கோட்டை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

03. அழுக்கு நகரங்கள் பட்டியலில் இந்திய நகரங்களுக்கு இடம்!
நியூயார்க்: உலகில், அழுக்கு நகரமாக தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களின் பட்டியலில் முதல் பத்தில், இரண்டு இந்திய நகரங்கள் இடம்பெற்றுள்ளன

04. பிரிட்டனில் வசிப்பவரை திருமணம் செய்ய ஆங்கில தேர்வு எழுத வேண்டியது கட்டாயம்
லண்டன்: பிரிட்டனில் குடியேறியவரை திருமணம் செய்து கொள்ள வேண்டுமா? ஆங்கில தேர்வு எழுதினால் தான் இனி முடியும்.

05. உலகின் ஏழு இயற்கை அதிசயம் * அடுத்தாக ஒரு கருத்துக்கணிப்பு
ஜெனீவா: உலகின் புதிய அதிசயங்கள் பட்டியலால் ஏற்பட்ட பரபரப்பு ஓய்ந்துள்ள நிலையில், அடுத்ததாக துவக்கப்பட்டு விட்டது
உள்ளே

06. இந்திய வம்சாவளியினர் லண்டனில் அதிகம்
லண்டன்: பிரிட்டன் தலைநகர் லண்டனில் பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இதில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் தான் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.

07. இலங்கையில் தமிழர் பகுதிகளில் அதிகார பகிர்வு * மன்மோகன் வருகைக்கு முன்பாக அறிவிக்க திட்டம்
கொழும்பு: வரும் பிப்ரவரி மாதம் பிரதமர் மன்மோகன் சிங்கின் வருகைக்கு முன், இலங்கையில் தமிழர் பகுதிகளில் அதிகாரப்பகிர்வு திட்டம் அறிவிக்கப்பட உள்ளது.

08. பாக்.,கில் தற்கொலை படை தாக்குதல்: 11 பேர் பலி
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 11 பேர் பலியாயினர்; மேலும் ஆறு பேர் படுகாயமடைந்தனர்

mgandhi
11-12-2007, 05:07 PM
12-12-2007

01.சுதந்திரமான தேர்தல் நடத்துவோம் மீண்டும் சொல்கிறார் முஷாரப்
வாஷிங்டன் :பாகிஸ்தானில் நேர்மையான, சுதந்திரமான தேர்தல் நடத்துவது உறுதி என்று அந்நாட்டு அதிபர் முஷாரப் கூறியுள்ளார்.


02.கிறிஸ்துமஸ் விழாவுக்கு "ஸ்பெஷல் சரக்கு' ஒரு கோப்பையின் விலை ரூ. 28 லட்சம்
லண்டன் :கிறிஸ்துமஸ் விழாவுக்கு உலகமே உற்சாகமாக தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில், ஒரு கோப்பை மது ரூ. 28 லட்சம் என்ற விலையில் பரிமாற தயாராகி வருகிறது,


03.அரபுநாடுகளில் வசிக்கும் வெளிநாட்டவர் அதிகரிப்பு
தோகா :அரபு நாடுகளில் சொந்தநாட்டு வாசிகளை விட, வெளிநாட்டவர் நான்கு மடங்கு அதிகமாக வசிப்பதாக தெரியவந்துள்ளது.


04.கார் மோதி 118 அடி துரம் வீசப்பட்டவர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்து சாதனை

கான்னெல்ஸ்வில்லி :விபத்தில் சிக்கினால் கூட, அதன் மூலம் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்று விடலாம். வாகனம் மோதி 118 அடி துரம் துக்கி வீசப்பட்டவர் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.


05.பொது சுதந்திரத்தை தியாகம்செய்ய தயங்கமாட்டேன்: மலேசிய பிரதமர்
கோலாலம்பூர் :""நாட்டின் பாதுகாப்பை நிலைநாட்டுவதற்காக பொதுச் சுதந்திரத்தை தியாகம் செய்ய தயங்கமாட்டேன்,''என மலேசிய பிரதமர் அப்துல்லா அகமது படாவி கூறினார்.

mgandhi
17-12-2007, 05:16 PM
01. அமெரிக்காவில் ஆந்திர மாணவர்கள் கொலை போலீஸ் விசாரணையில் துப்பு துலங்கவில்லை
நியூயார்க்: அமெரிக்காவில் ஆந்திர மாணவர்கள் இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான போலீஸ் விசாரணையில் இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.02. ஆன்லைனில் "வயாக்ரா' விற்ற இந்தியருக்கு 30 ஆண்டு சிறை

பிலடெல்பியா: அமெரிக்காவில் சட்டவிரோதமாக ஆன்லைனில் மருந்தகம் நடத்தி, "வயாக்ரா' உள்ளிட்ட மருந்துகளை விற்ற இந்தியருக்கு 30 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.03. தற்காலிக விசா வழங்குவதில் பிரிட்டன் புதிய கட்டுப்பாடு
லண்டன்: பிரிட்டனுக்கு தற்காலிக விசா பெற்று செல்பவர்களுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.04. பிரிட்டனில் வசிக்கிறார் ஹிட்லரின் மகன்?

லண்டன்: சர்வாதிகாரி ஹிட்லரின் மகன் பிரிட்டனில் வசிப்பது, தற்போது தெரியவந்துள்ளது.05. வந்துவிட்டது செயற்கை சிறுநீரகம்

லண்டன்: சிறுநீரகம் பழுதுபட்டவர்கள், உடலில் அணிந்து கொள்ளும் வகையில், செயற்கை சிறுநீரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.06. தவறான சிகிச்சை ரூ.10 கோடி நஷ்ட ஈடு தர டாக்டருக்கு உத்தரவு

பாஸ்டன்: எச்.ஐ.வி., தாக்காத பெண்ணுக்கு, அந்நோய்க்கு ஒன்பது ஆண்டாக சிகிச்சை அளித்து வந்த டாக்டர், ரூ.10 கோடி நஷ்ட ஈடு அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.07. பரிசோதித்த இந்திய டாக்டரை சரமாரியாக தாக்கிய நோயாளி

லண்டன்: பிரிட்டனில், பரிசோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இந்திய டாக்டரை கடுமையாக தாக்கினார் அந்நாட்டு நோயாளி. படுகாயமடைந்த டாக்டர், சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட் டுள்ளார்.

mgandhi
18-12-2007, 04:54 PM
19-12-2007

01. தற்கொலை படை தாக்குதலில் பாக்., ராணுவ வீரர்கள் 9 பேர் பலி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் ஒன்பது ராணுவ வீரர்கள் பலியாயினர்; ஐந்து பேர் காயமடைந்தனர்.


02. பிரபாகரன் காயமா? * புலிகள் மறுப்பு

கொழும்பு: "இலங்கை விமான தாக்குதலில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் லேசான காயமடைந்துள்ளார்' என்று இலங்கை பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.


03. கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு சவுதி மன்னர் அப்துல்லா மன்னிப்பு

ரியாத்: எந்த தொடர்பும் இல்லாதவருடன் காரில் தனியாக இருந்த போது, ஏழு பேரால் கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு, சவுதி அரேபியா மன்னர் அப்துல்லா மன்னிப்பு அளித்துள்ளார்.


04. மலேயா இனத்தவரை மிஞ்சும் மலேசிய இந்தியர்கள்

கோலாலம்பூர்: மலேசிய இந்திய வம்சாவளியினர் அங்குள்ள மலேயா இனத்தினரை விட வசதி படைத்தவர்களாக உள்ளனர் என்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.05. பிரிட்டனில் இருந்து ஓட்டம் பிடித்த இந்திய பெண் டாக்டர் அமெரிக்காவில் கைது

லண்டன்: பிரிட்டனில் பணி செய்த போது தவறான ஊசி போட்டதால், நோயாளி உயிர் இழந்த விவகாரத்தில், அமெரிக்காவில் இந்திய பெண் டாக்டர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


06. கடும் சண்டை : 26 புலிகள் பலி
கொழும்பு: இலங்கையில் ராணுவத்துக்கும், புலிகளுக்கும் இடையே நடந்த கடும் சண்டையில் 26 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர். ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார்.


07. ஹஜ் யாத்திரை: 20 லட்சம் பேர் குவிந்தனர்

மெக்கா: ஹஜ் யாத்திரையின் இறுதிக் கட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக 20 லட்சம் பேர் மெக்காவிலிருந்து மினாவுக்கு நேற்று புறப்பட்டுச் சென்றனர்.


08. மலேசிய அரசு இறங்கியது: 31 தமிழர்கள் விடுவிப்பு

கோலாலம்பூர்: மலேசியாவில் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்ட 31 தமிழர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்திய வம்சாவளியினரை கைவிட மாட்டேன் என பிரதமர் படாவியும் உறுதி அளித்துள்ளார்.

mgandhi
21-12-2007, 02:05 AM
21-12-2007

01. மலேசிய தமிழர்கள் மொட்டை போட்டு போராட்டம்

கோலாலம்பூர்: மலேசியாவில் உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இண்ட்ராப் அமைப்பை சேர்ந்த ஐந்து பேரை உடனே விடுவிக்கக் கோரி, தமிழர்கள் மொட்டை போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


02. பிணம் போல நாற்றமெடுக்கிறது "நேட்டோ' : பெரியண்ணன் அமெரிக்கா மீது புடின் பாய்ச்சல்
நியூயார்க்: சர்வதேச விவகாரங்களில் அமெரிக்கா தலையிட்டு, தனது கருத்துக் களை திணிக்க முயற்சித்தால், கடும் எதிர்ப்பை சந்திக்க நேரிடும் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

03. அன்டார்டிகாவில் டைனோசர் கண்டுபிடிப்பு
மெல்போர்ன்: அன்டார்டிகா பனிமலையில் மிகப்பெரிய டைனோசரின் படிவம் கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


04. இந்திய மாணவர்களை சுட்டவர்கள் பற்றி துப்பு கொடுத்தால் ரூ. இரண்டு லட்சம் பரிசு
ஹூஸ்டன்: அமெரிக்காவில் ஆந்திர மாணவர்கள் இருவரை சுட்டுக் கொன்றவர்கள் பற்றிய ஆதாரம் கொடுத்தாலோ, துப்பு தெரிவித்தாலோ ரூ. இரண்டு லட்சம் பரிசு தரப்படும் என போலீஸ் துறை அறிவித்துள்ளது.


05. மூச்சு விட கார்பன் வரி : டாக்டர்கள் சிபாரிசு
சிட்னி: மூச்சு விட வேண்டுமானால் இனி கார்பன் வரி செலுத்தினால் தான் முடியும் என்ற நிலை வந்தாச்சு.

mgandhi
03-01-2008, 05:06 PM
4-1-2008

01. மகள் திருமணத்தை எதிர்த்த தந்தை : குடும்பத்தையே கொலை செய்தார்

மார்காம் : அமெரிக்காவில் வசித்து வரும் இந்திய தந்தை ஒருவர் தனது கர்ப்பிணி மகள், மருமகன் மற்றும் மூன்று வயது பேரனை தீயிட்டு கொளுத்தி கொன்று விட்டார்.

02. பெனசிர் கொலை எப்படி நிகழ்ந்தது? : இன்னொரு புதுக் கதை கிளம்புகிறது

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனசிர் புட்டோவை தாக்கியது துப்பாக்கி தோட்டாக்கள் அல்ல, "லேசர் பீம்' தொழில்நுட்பம் கொண்ட ஆயுதத்தால் அவர் தாக்கப்பட்டுள்ளார் என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது.

03. அரண்மனையிலிருந்து வெளியேற நேபாள மன்னருக்கு எச்சரிக்கை

காத்மாண்டு : "அரண்மனையை காலி செய்யுங்கள்; அல்லது வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட நேரிடும்' என்று நேபாள மன்னருக்கு மாவோயிஸ்ட் அமைச்சர் தேவ் பிரசாத் குருங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


04. பிரிட்டன்வாசிகள் கோபப்படும் நேரம் : ஆய்வில் சுவாரசியமான தகவல்கள்

லண்டன் : குழந்தைகள் கத்தி அழுதால் பிரிட்டன்வாசிகள் கோபத்தின் உச்சிக்கு மலை ஏறிவிடுகின்றனர் என்று ஓர் ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.05. போர்க்களத்தில் ராணுவ வீரர்கள் ரத்தம் சிந்துவதைத் தடுக்க புதிய ஆடை

ரிச்மண்ட் : போர்க்களத்தில் காயம் ஏற்பட்டு ரத்தம் அதிகமாக வெளியேறுவதை தடுக்கும் வகையில் ராணுவ வீரர்களுக்காக புதிய உடையை அமெரிக்க நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

06. வலுவிழக்கிறது மலேசிய போராட்டம்

லண்டன் : மலேசிய இந்திய வம்சாவளியினரின் போராட்டம் வலுவிழந்து வருகிறது என்றும், இப்போராட்டம் விரைவில் செயல் இழக்கும் என்று "இண்ட்ராப்' இயக்கத்தின் தலைவரான வைத்திய மூர்த்தி தெரிவித்துள்ளார்.

07. கென்யாவில் குஜராத்தியர் தவிப்பு : பிரதமருக்கு முதல்வர் மோடி கடிதம்

நைரோபி : கென்யாவில் அதிபர் முவாய் கிபாகி, தேர்தலில் வெற்றி பெற்று இருப்பது பெரும் கலவரத்தை ஏற்படுத்தியுள்ளது.

08. துபாய் சென்றார் பிலாவல்

துபாய் : பெனசிரின் மகன் பிலாவல், பாகிஸ்தான் மக்கள் கட் சித் தலைவர்களுடன் துபாய் வந்தார்.

09. ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் : இலங்கையில் நான்கு பேர் பலி

கொழும்பு : இலங்கை தலைநகர் கொழும் பில், நேற்று ராணுவ வீரர்கள் சென்ற பஸ் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப் பட்டது. இதில் நான்கு பேர் கொல்லப்பட்டனர்.

10 பெனசிர் படுகொலை விசாரணையில் ஸ்காட்லாந்து யார்டு போலீஸ் உதவி

இஸ்லாமாபாத் : ""பெனசிர் படுகொலை குறித்த விசாரணைக்கு பிரிட்டனின் ஸ்காட்லாந்து யார்டு போலீசார் உதவி அளிப்பர்'' என்று, பாக்., அதிபர் முஷாரப் கூறியுள்ளார்.11. அமைதி ஒப்பந்தம் ரத்து : இலங்கை அரசு முடிவு

கொழும்பு : இலங்கை ராணுவம் மற்றும் விடுதலைப் புலிகள் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக இலங்கை அரசு நேற்றிரவு தெரிவித்துள்ளது.

mgandhi
04-01-2008, 05:21 PM
5-1-2008

1- இந்திய வம்சாவளியினருக்கு மேலும் ஒரு அமைப்பு ஆதரவு
கோலாலம்பூர் : மலேசியாவில் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளியினருக்கு அனைத்துத் துறைகளிலும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என...
உள்ளே

2- "எமிரேட் ஆப் வசீர்ஸ்தான்': பயங்கரவாதத்தின் புதிய முகவரி
பெனசிர் படுகொலையில் பாகிஸ்தானில் வசீர்ஸ்தான் பகுதியில் உள்ள பயங்கரவாதிகளுக்கும் தொடர் புள்ளதாக பாக்., உள்துறை அமைச்சகம் உறுதிப் படுத்தியுள்ளது.

3-ஆஸ்திரேலிய தீ விபத்தில் 3 இந்திய மாணவர்கள் பலி
மெல்போர்ன், ஆஸ்திரேலியாவின் மேற்கு மெல்போர்ன் மாவட்டத்தில் இன்று காலை நடந்த பயங்கர தீவிபத்தில் 3 இந்திய மாணவர்கள் தீயில் கருகி பலியானார்கள்.

4- பிரதமர் மன்மோகன் சிங் 3 நாள் சுற்றுப்பயணமாக னா செல்கிறார் -
பெய்ஜிங், பிரதமர் மன்மோகன் சிங் 3 நாள் சுற்றுப்பயணமாக னாவுக்கு செல்கிறார். இதற்காக அவர் வரும் 13-ந்தேதி புறப்பட்டு செல்வார்.

5- ஆப்கானிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதலில் இந்திய போலீஸ் அதிகாரிகள் 2 பேர் பலி -
காபூல், ஜ ஆப்கானிஸ்தானில் மனித வெடிகுண்டு தாக்கியதில் இந்திய போலீஸ் அதிகாரிகள் இருவரும், தொழிலாளி ஒருவரும் பலியானார்கள். இந்தச் சம்பவத்தில் ஆப்கானிஸ்தான் போலீசார் 4 பேரும் கொல்லப்பட்டனர்.

6- பாகிஸ்தான் அரசுக்கு தலீபான் மதகுரு கெடு -
இஸ்லாமாபாத், மசூத் பாகிஸ்தான் அரசுக்கு கெடு விதித்து இருக்கிறார். ராணுவத்தை பாகிஸ்தான் அரசு 2 நாட்களுக்குள் திரும்பப்பெற வேண்டும். இல்லாவிட்டால் நாடு முழுவதும் தீவிரவாத தாக்குதல் நடத்தப்படும் என்று அவர் எச்சரித்து இருக்கிறார்.

mgandhi
05-01-2008, 04:05 PM
01.ஸ்காட்லாந்து போலீஸ் பாகிஸ்தான் வருகை
இஸ்லாமாபாத் :பெனசிர் படுகொலை வழக்கு புலன் விசாரணையில் பாக்., போலீசாருக்கு உதவுவதற்காக ஸ்காட் லாந்து போலீஸ் குழுவினர் இஸ்லாமாபாத் வந்துள்ளனர்.

02.பெனசிர் ஊழியர் மீது கிளம்புது சந்தேகம்
இஸ்லாமாபாத் :பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனசிர் புட்டோவின் ஊழியரை போலீசார் தேடி வருகின்றனர்.

03.இந்திய வம்சாவளியினர் மீது வழக்கு கூட்டாக விசாரிக்க அனுமதி

கோலாலம்பூர் :சட்ட விரோதமாக நடந்த பேரணியில் பங்கேற்றது தொடர்பாக 54 இந்திய வம்சாவளியினர் மீதான வழக்கை ஒன்றாக விசாரிக்க, மலேசிய கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது.

"04.இண்ட்ராப்' தலைவர் அதிரடி

கோலாலம்பூர் :பயங்கரவாதி என அவதுறாக குற்றம் சாட்டியதற்காக, மலேசிய அரசு மற்றும் உயர் அதிகாரிகளுக்கு எதிராக ரூ.100 கோடி 40 லட்சம் கேட்டு, இண்ட்ராப் தலைவர் பி.உதயகுமார் மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.

mgandhi
06-01-2008, 04:44 PM
7-1-2008

1-.பெனசிர் மகன், மகள்களுக்காக பாக்., குழந்தைகள் அனுதாபம்

இஸ்லாமாபாத்: பெனசிர் படுகொலையால், தாயை இழந்த அவரின் குழந்தைகள் மீது, பாக்., குழந்தைகளுக்கு பெரும் அனுதாபம் ஏற்பட்டுள்ளது.


2-.விவாகரத்து கிடைத்தாலும் பிரிந்து வாழ வீடு இல்லை

ஹவானா: கியூபாவில் விவாகரத்தை சுலபமாக வாங்கிவிடும் தம்பதிகள், தனித் தனியே வசிப்பதற்கு வீடு கிடைப்பதில் சிரமம் ஏற்படுவதால், மீண்டும் சேர்ந்து வாழ வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

3-.சந்தோஷ மண வாழ்க்கையா?பெண்ணுக்கு "ஸ்ட்ரெஸ்' போச்!

லண்டன்: மணவாழ்க்கை சந்தோஷமாக அமைந்து விட் டால், ஒரு பெண்ணுக்கு மனஅழுத்தம் வெகுவாக குறைந்துவிடுகிறது! அமெரிக்க மருத்துவ நிபுணர்கள் மேற்கொண்ட ஆய்வில் , இந்த தகவல் தெரியவந்துள்ளது.


4- .ஜோதிடர்கள் கணித்து கொடுத்த படி நடக்கிறது பூடான் நாட்டு தேர்தல்

திம்பு: பூடானில் தேர்தல் தேதியும் ஜோதிடர்களால் தான், கணித்து முடிவு செய்யப்பட்டது. பூடானில் ஜனநாயக அரசு ஏற்படுத்த மன்னர் குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.


5-.குற்றவாளிகள் பற்றி தகவல் சொல்ல பொதுமக்களுக்கு இலவச மொபைல்

6-மோன்ரோவியா: குற்றவாளிகளைப் பற்றிய தகவல் தர, அனைத்து பொது மக்களுக்கும் அரசே இலவச மொபைல் போன்களை வழங்கியுள்ளது.


7-.விடுதலைப் புலிகள் 34 பேர் பலி

கொழும்பு: இலங்கையில் ராணுவம் மற்றும் விடுதலைப் புலிகள் இடையே இரண்டு நாட்களாக நடந்து வரும் சண்டையில் 34 புலிகள் கொல்லப்பட்டனர்.

8-.விமான விபத்து: 18 பேர் பலி

9-காரகாஸ்: வெனிசுலாவில் உள்ள லாஸ் ரோக்ஸ் தீவுகளில் இருந்து காரகாசுக்கு 18 பயணிகளுடன் விமானம் ஒன்று புறப்பட்டுச் சென்றது.

10-."குளோஸ்' பண்ணிடுவோம்: பாக்., தலைவர்களுக்கு மிரட்டல்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அதிபர் முஷாரப், நவாஸ் ஷெரீப் உள்ளிட்ட பல தலைவர்களுக்கு பயங்கரவாதிகளிடம் இருந்து மிரட்டல் உள்ளதாக அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

11-.மலேசிய அமைச்சரின் செக்ஸ் "டிவிடி':விற்ற இந்தியர்கள் கைது

சிங்கப்பூர்: மலேசிய சுகாதார அமைச்சர் சுவா விவகாரத்தில் தொடர்புடைய பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.12-.சினிமா படமாகிறது பெனசிரின் வாழ்க்கை

இஸ்லாமாபாத்: இந்திய சினிமா தயாரிப்பாளர் மகேஷ் பட்டின் உதவியுடன், பெனசிர் குறித்த சினிமாவை தயாரிக்கிறது


13-.47வது மாடியில் இருந்து விழுந்தவர் உயிர் பிழைத்தார்

நியூயார்க்: அமெரிக்காவில் ஜன்னல் சுத்தம் செய்யும் போது 47வது மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி ஒருவர், அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்.

mgandhi
07-01-2008, 05:00 PM
8-1-2008

01. டைட்லரை சிக்க வைத்தவருக்கு சி.பி.ஐ., கடும் நெருக்கடி
சான் பிரான்சிஸ்கோ: டில்லியில் சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகதீஷ் டைட்லருக்கும் பங்கு உண்டு என கூறிய நபருக்கு சி.பி.ஐ., கடும் நெருக்கடி கொடுப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

02. சொந்த கிராமத்தின் தாகத்தை தீர்க்க அமெரிக்காவில் வேலை செய்யும் சிறுவன்
நியூஜெர்சி: இந்தியாவில் சொந்த கிராமத்துக்கு குடிநீர் வசதி ஏற்படுத்த, அமெரிக்காவில் பள்ளியில் படித்துக் கொண்டே பகுதி நேரம் வேலை செய்து பணம் சேமிக்கிறார் சமூக ஆர்வ சிறுவன் ஒருவர்.

03. ஐரோப்பாவின் பெரிய பணக்காரர் புடின்
மாஸ்கோ: "ரஷ்ய அதிபர் விளாடிமர் புடின், எட்டு ஆண்டு கால ஆட்சி காலத்தில் ஐரோப்பாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராகி விட்டார்.

04. அமெரிக்க அதிபரை கொல்ல முயன்ற பெண்: 32 ஆண்டுகளுக்கு பின் விடுதலை
சான்பிரான்சிஸ்கோ: மறைந்த அமெரிக்க அதிபர் ஜெரால்டு போர்டை கொல்ல முயன்றதாக ஆயுள் சிறை அனுபவித்து வந்த பெண், 32 ஆண்டுக்கு பின் , பரோலில் இப்போது விடுதலை செய்யப் பட்டார்.

05. பெனசிர் பரிசோதனை அறிக்கை : ஏராளமான குளறுபடிகள் அம்பலம்
இஸ்லாமாபாத்: படுகொலை செய்யப் பட்ட பெனசிர் புட்டோவின் பரிசோதனை அறிக்கை, பல் வேறு சந்தேகங்களுக்கு விடை இல்லாமல் உள்ளது. தெரிந்தே இந்த அறிக்கையை, நிர்ப்பந்தத்துக்காக டாக்டர்கள் தயாரித்து இருப்பதும் தெரிய வந்துள்ளது.


06. குழந்தைகளோடு வர்றீங்களா? : ரெண்டுக்கு மேல் கிடையாது
லண்டன்: குழந்தைகளுடன் மது அருந்தும் விடுதிக்கு வருபவர்களுக்கு இரண்டு "லார்ஜு'க்கு மேல் சப்ளை செய்ய முடியாது, என லண்டனின் பிரபல நிறுவனம் அறிவித்துள்ளது.

07. ஸ்கேட்டிங்கில் அசத்தும் இந்திய சிறுவன்
லண்டன்: இந்தியாவை சேர்ந்தவர் அங்கித் ரமேஷ் சின்டாக். ஆறு வயது சிறுவன். பிரிட்டனில் வசிக்கிறார்.

mgandhi
08-01-2008, 05:16 PM
9-1-2008

1-புலிகளுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்க வேண்டும்: ஐரோப்பிய ஒன்றியம்

ஐரோப்பா, -இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணும் முகமாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

2- இரவில் தேடுதல் நடத்தக்கூடாது: கோத்தபாயவுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு,
- கொழும்பு -சிறிலங்கா தலைநகர் கொழும்பில் இரவு 9:00 மணியிலிருந்து காலை 6:00 மணிவரை வீடுகளுக்குள் புகுந்து தேடுதல் நடத்தக்கூடாது என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு (Gotabhaya Rajapakse ) உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கின்றது. எனினும் அத்தியாவசிய தேவைகள் இருப்பின் மட்டுமே வீடுகளுக்குள் நுழைந்து தேடுதல் நடத்த முடியும் என்றும் உயர்நீதிமன்றம் அந்த உத்தரவில் தெரிவித்திருக்கின்றது.

3- பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா, மலேசியா தீவிரம்
- கோலாலம்பூர், - இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் இந்தியாவும் மலேசியாவும் தீவிரம் காட்டிவருகின்றன.

4-சமரசப்பேச்சுவார்த்தை நடத்திய பழங்குடி இன மூத்த தலைவர்கள் 8 பேர் பலி
- இஸ்லாமாபாத்,-பாகிஸ்தானில் வடமேற்கு பகுதியில் பழங்குடி இன மூத்த தலைவர்கள் சார்பில் பைத்துல் மெசூத் தலைமையிலான தலீபான் தீவிரவாதிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே சமரசம் ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த முயற்சியை மேற் கொண்ட தலைவர்கள் 8 பேர் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

5- கென்யாவில் போராட்டம் வாபஸ்,
- நைரோபி -கென்யா நாட்டில் ஜனாதிபதி தேர்தலில் நடந்த மோசடியை எதிர்த்து எதிர்க்கட்சி தலைவர் ஒடிங்கா போராட்டத்தில் ஈடுபட்டார். இது கலவரமாக வெடித்தது. இந்த கலவரத்தில் 500 பேர் பலியானார்கள். கிட்டத்தட்ட 2 லட்சத்து 55 ஆயிரம் பேர் வீடுகளை இழந்தனர்.

aren
08-01-2008, 05:19 PM
அதிகாரத்தை பகிர்ந்தளிப்பதில்தானே இத்தனை பிரச்சனைகளும். இலங்கை அரசாங்கம் இதை எப்படி ஒப்புக்கொள்ளப்போகிறது. கொடுக்கும் நிதிகள் அனைத்தையும் நிறுத்தினால் நிச்சயம் இறங்கிவருவார்கள் என்று நினைக்கிறேன்.

mgandhi
08-01-2008, 05:57 PM
அதிகாரத்தை பகிர்ந்தளிப்பதில்தானே இத்தனை பிரச்சனைகளும். இலங்கை அரசாங்கம் இதை எப்படி ஒப்புக்கொள்ளப்போகிறது. கொடுக்கும் நிதிகள் அனைத்தையும் நிறுத்தினால் நிச்சயம் இறங்கிவருவார்கள் என்று நினைக்கிறேன்.

எரிவதை புடிங்கினால்
கொதிப்பது அடங்கும்

mgandhi
09-01-2008, 05:58 PM
10-1-2008

01. நேபாள மன்னரின் சொத்துக்கள் நாட்டுடமை சட்ட மசோதா நிறைவேறியது

காத்மாண்டு: நேபாள மன்னரின் சொத்துக்களை நாட்டுடமையாக்கும் சட்ட மசோதா அந்நாட்டு பார்லிமென்ட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது.02. இலங்கையில் 33 பேர் பலி

கொழும்பு: இலங்கையில் புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே நடந்த கடும் சண்டையில் 19 புலிகள் உட்பட 33 பேர் பலியாயினர்; 70 பேர் படுகாயமடைந்தனர்.03. அமெரிக்காவில் திவாலானது இந்து கோவில் : பூசாரி குடும்பத்தினர் திடீர் வெளியேற்றம்

வாஷிங்டன்: அமெரிக்காவில் உள்ள இந்து கோவில், வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தததால், திவாலானதாக அறிவிக்கப்பட்டு, அங்கிருந்த குருக்களும், நான்கு குடும்பத்தை சேர்ந்த 12 பேரும் திடீரென்று வெளியேற்றப்பட்டனர்.04. குற்றவாளிகளை அடையாளம் காணவில்லை : சொல்கிறது பாக்., உள்துறை

இஸ்லாமாபாத்: "முன்னாள் பிரதமர் பெனசிர் புட்டோ படுகொலை வழக்கில் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்ற செய்தி அர்த்தமற்றது' என்று பாக்., உள்துறை மறுத்துள்ளது.05. இலங்கை அமைச்சர் படுகொலை எதிரொலி : எம்.பி.,க்களுக்கான பாதுகாப்பு அதிகரிப்பு

கொழும்பு: இலங்கை தேசிய வளர்ச்சி துறை அமைச்சர் தசநாயகே கண்ணிவெடி தாக்குதலில் கொல்லப்பட்டதை அடுத்து, எம்.பி.,க்களுக்கான பாதுகாப்பை அந்நாட்டு அரசு அதிகரித்துள்ளது.

mgandhi
10-01-2008, 05:02 PM
11-1-2008

திபெத் மலைப் பகுதியில் பயங்கர பூகம்பம்
- பீஜிங்,னாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஐ.நா. மனித உரிமை சபையில் வாக்களிக்கும் உரிமையை இழந்த சிறிலங்கா
- கொழும்பு, ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையில் வாக்களிக்கும் உரிமையை சிறிலங்கா இழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அமெரிக்க கப்பலைத் தாக்கினால் கடும் விளைவு: ஈரானுக்கு புஷ் எச்சரிக்கை
- ஜெருசலேம், அமெரிக்க விமானம் தாங்கி போர்க் கப்பல் 2 நாட்களுக்கு முன்பு ஈரான் கடற்பகுதியில் சென்றது. அப்போது ஈரான் கடற்படை படகுகள் அங்கு வந்து வழி மறித்து எச்சரிக்கை விடுத்தன. எங்கள் நாட்டு கடல் எல்லைக்குள் நீங்கள் செல்கிறீர்கள். இதை அனுமதிக்க முடியாது என்று கூறினார்கள்.

நியாயமான முறையில் தேர்தல் நடக்காவிட்டால் பாக். சிதறி விடும்: பிலாவல்
- லண்டன், அடுத்த மாதம் நடக்க இருக்கும் பாராளுமன்ற தேர்தல் நியாயமான முறையில் நடக்காவிட்டால் பாகிஸ்தான் உடைந்து சிதறி விடும் என்று பெனாசிர் கட்சியின் தலைவரான பிலாவல் எச்சரித்து இருக்கிறார்.

இந்தியர்களை வேலைக்கு எடுக்கத் தடையில்லை: மலேசிய அரசு
- கோலாலம்பூர், இந்தியர்களை வேலைக்கு எடுக்கத் தடை எதுவும் விதிக்கவில்லை என்று, மலேசிய அரசு விளக்கம் அளித்து உள்ளது

mgandhi
11-01-2008, 04:57 PM
12-1-2008

01.அறிவிக்கப்பட்ட தேதியில் தேர்தல்: முஷாரப் உறுதி
இஸ்லாமாபாத்: ""அறிவிக்கப்பட்ட தேதியில் பாகிஸ்தான் தேர்தல் நடைபெறும் என்றும் தேர்தலின் போது முறைகேடுகளை நடத்த திட்டமிட்டுள்ளனர் என கூறப்படும் குற்றச்சாட்டு அர்த்தமற்றது,'' என்று பாக்., அதிபர் முஷாரப் கூறினார்.


02.சிறிதளவு மதுவும்,உடற்பயிற்சியும் ஆயுளை அதிகரிக்கும்
லண்டன்: தினமும் சிறிதளவு மதுவும், உடற்பயிற்சியும் ஆயுளை அதிகரிக்கும் என்பது நீண்ட கால ஆராய்ச்சிக்கு பிறகு தெரியவந்துள்ளது.

03.சிறுவன் ஓட்டிய கார் மோதி இந்தியச் சிறுமி பலி
துபாய்: சவுதியில் 14 வயது சிறுவன் ஓட்டி சென்ற கார் மோதியதில் இந்தியாவை சேர்ந்த ஆறு வயது சிறுமி பரிதாபமாக பலியானாள்.

04.பாக்., மதரசாக்களில் சீர்திருத்தம் ஆலோசகராக இந்து அதிகாரி நியமனம்
இஸ்லாமாபாத்: மதரசாக்கள் பதிவு மற்றும் அதன் சீர்திருத்தங்கள் பற்றி பாக்., பிரதமருக்கு ஆலோசனை வழங்க இந்து அதிகாரி ஒருவர் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

05.வங்கதேச மாஜி அமைச்சருக்கு ஏழு ஆண்டுகள் சிறை
தாகா: ஊழல் வழக்கில் வங்கதேசத்தைச் சேர்ந்த மாஜி அமைச்சருக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

mgandhi
12-01-2008, 05:50 PM
13-1-2008

01..சிகரெட் விளம்பரம் ரஷ்யாவில் தடை

மாஸ்கோ :ரஷ்யாவில் சிகரெட் விளம்பரத்துக்கு ஒட்டு மொத்த தடை கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.

02.ஹிலாரி மீது முஷாரப் கோபம்

இஸ்லாமாபாத் :"ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு எதிராக போரிட்டு வரும் அமெரிக்கபிரிட்டன் கூட்டுப் படையினர், தன்னிச்சையாக பாக்.,கில் சாகசம் செய்ய எந்தவித முயற்சியும் எடுக்கக் கூடாது' என்று முஷாரப் எச்சரித்துள்ளார்.

03.மலேசிய தமிழ் எம்.பி., சுட்டு கொலை

கோலாலம்பூர் :மலேசியாவைச் சேர்ந்த தமிழ் எம்.பி., கிருஷ்ணசாமி சுட்டுக் கொல்லப்பட்டார்.

04.பெனசிர் உடலை பரிசோதனை செய்ய ஸ்காட்லாந்து போலீசார் வலியுறுத்தல்

இஸ்லாமாபாத் :சுட்டுக் கொல்லப்பட்ட பெனசிர் புட்டோவின் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என, ஸ்காட்லாந்து யார்டு போலீசார் வற்புறுத்தி வருகின்றனர்.

05."இண்ட்ராப்' தலைவர்கள் கதி என்ன?

கோலாலம்பூர் :மலேசியாவில் ஆள் துக்கி சட்டமாக கருதப்படும் உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள "இண்ட்ராப்' தலைவர்கள் ஐந்து பேரின் தலைவிதி வரும் திங்கட்கிழமை நிர்ணயிக்கப்படுகிறது.

mgandhi
13-01-2008, 04:32 PM
14-1-2008

01. ஈபிள் டவரை தகர்க்க சதி முறியடிப்பு
லண்டன் : பிரான்சில் உள்ள உலகப் புகழ் பெற்ற ஈபிள் டவரை தகர்க்க திட்டமிட்டிருந்த பயங்கரவாதிகளின் சதி முறியடிக்கப்பட்டது.

02. இரட்டையராக பிறந்தவர்கள் தங்களை அறியாமலேயே "டும் டும்!'

லண்டன் : இருவரும் இரட்டையர்களாக பிறந்தவர்கள். குழந்தையாக இருக்கும் போதே பிரிந்து விட்டனர். வளர்ந்த பிறகு, ஒருவர் மீது ஒருவர் காதல் கொண்டு திருமணம் செய்து கொண்டனர்.

03. எச்சரிக்கையாக இருங்கள் : கட்சிக்காரர்களுக்கு சாமிவேலு அறிவுரை

கோலாலம்பூர் : மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சி, தனது எம்.பி.,க்களை எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளது.

04. நேபாளத்திலும் குடி புகுந்தது வாரிசு அரசியல்
காத்மாண்டு : தெற்கு ஆசிய நாடுகளில் பரவலாக காணப்படும் வாரிசு அரசியல் நடைமுறை, நேபாளத்திலும் குடி புகுந்து விட்டது.

05. பிரான்சுக்கு "அட்வைசராக' அமர்த்தியா சென் அழைப்பு

பாரிஸ் : பிரான்ஸ் நாட்டின் பொருளாதார வளர்ச்சி தொடர்பாக ஆலோசனை வழங்க, இந்தியாவின் பொருளாதார நிபுணரும்...

மனோஜ்
13-01-2008, 07:05 PM
உலகத்தகவல்களுக்கு நன்றி காந்தி அண்ணா

mgandhi
14-01-2008, 06:47 PM
15-1-2008

1-பாகிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் 50 பேர் சுட்டுக்கொலை

இஸ்லாமாபாத்- பாகிஸ்தானில் அல்கொய்தா மற்றும் தலிபான் தீவிரவாதிகள் அரசுக்கு எதிராக தங்கள் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறார்கள்.

2-பெனாசிரின் மகன் பிலாவல் தன் தாயின் ரத்தத்தில் லாபம் தேடப்பார்க்கிறார்: பாத்திமா

லண்டன், -"பெனாசிரின் மகன் பிலாவல் தன் தாயின் ரத்தத்தில் லாபம் தேடப்பார்க்கிறார்' என்று பெனாசிரின் தம்பி மகள் பாத்திமா குற்றஞ்சாட்டி இருக்கிறார்.

3-எல்லைப் பிரச்சினை குறித்து ன பிரதமருடன் மன்மோகன் சிங் பேச்சு

பீஜிங்,-மூன்று நாள் பயணமாக நேற்று சினா சென்ற பிரதமர் மன்மோகன் சிங்குக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பயணத்தின் முதல் கட்டமாக ஒலிம்பிக் கிராமத்தை சுற்றி பார்த்தார். பின்னர் அவர், எல்லை பிரச்சினை குறித்து சின பிரதமர் வென் ஜியாபோவை சந்தித்து பேசினார்.

4-பெனசிர் சடலத்தை தோண்டியெடுத்து பரிசோதிக்கலாம் : முஷாரப் யோசனை

நியூயார்க் : பெனசிர் கொலை குறித்து ஐ.நா., விசாரணைக்கு அனுமதிக்க முடியாது.


5- அச்சுறுத்தி பணம் பறித்ததாக ஹசீனா மீது வழக்கு

தாகா : வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீது, தொழில் அதிபரை அச்சுறுத்தி பணம் பறித்த வழக் கில் குற்றச்சாட்டு பதிவு செய்யப் பட்டது.

mgandhi
15-01-2008, 05:33 PM
16-1-2008

1. அமெரிக்க கர்ப்பிணி மாணவிகளுக்கு பேறுகால விடுமுறை தர கோரிக்கை
டென்வர் : அமெரிக்காவில் உள்ள கொலராடோ மாகாணம் டென்வரில், பள்ளி சிறுமிகள் தங்களுக்கு பேறு கால விடுமுறை அளிக்கும் படி கோரிக்கை வைத்துள்ளனர்.

2. அமைதி பேச்சை துவக்க இலங்கை வந்துள்ளது ஜப்பான் குழு

கொழும்பு : அமைதிப் பேச்சை மீண்டும் துவக்கும் வகையில், ஜப்பான் குழு இலங்கை வந்துள்ள நிலையில், அங்கு சண்டை கடுமையடைந்துள்ளது.

3. அரசியலிலிருந்து விலக பாக்., ராணுவ வீரர்களுக்கு உத்தரவு

இஸ்லாமாபாத் : ராணுவத்தைச் சேர்ந்த அனைத்து அதிகாரிகளும், விதிமுறைகளின் படி, அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்குமாறு பாக்., ராணுவ தளபதி அஷ்பக் பர்வேஸ் கயானி உத்தரவிட்டுள்ளார்.

4. லண்டனில் வசிக்க விசா: ஒசாமா மகன் மனு

லண்டன் : தனது இரண்டாவது மனைவியுடன் லண்டனில் வசிக்க அனுமதி கோரி விசாவுக்கு விண்ணப்பித்துள்ளார் ஒசாமாவின் மகன் ஓமர்.


5. துபாயில் இந்தியர்களுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

துபாய் : துபாயில் பெண்களை விற்க முயன்ற இந்தியர்கள் இரண்டு பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

mgandhi
16-01-2008, 04:53 PM
17-1-2008

01. இந்திய மீனவர்கள் கைது

கராச்சி: பாகிஸ்தான் கடலோரப் பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த இந்திய மீனவர்கள் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

02. முஷாரப்பை கொல்ல சதி : மூன்று பேருக்கு ஆயுள்

இஸ்லாமாபாத் : பாக்., அதிபர் முஷாரப்பை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து அந்நாட்டு பயங்கரவாத தடுப்பு கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

03. இலங்கையில் உக்கிரமான சண்டை : புலிகளின் உளவுத்தளம் அழிப்பு

கொழும்பு : இலங்கையில், ராணுவம் மற்றும் புலிகள் இடையேயான மோதல் வலுத்து வருகிறது.

04. "புகைப்பிடிப்பவருக்குத் தான் வேலை' : ஜெர்மனி ஐ.டி., கம்பெனியில் புதுமை

பெர்லின் : "அலுவலகத்தில் புகை பிடிப்பவர்களை மட்டுமே வேலையில் வைத்துக் கொள்வோம்' என்று ஜெர்மன் நிறுவனம் ஒன்று அறிவித்து, புகைபிடிக்கும் பழக்கம் இல்லாத மூன்று பேரை வேலை நீக்கம் செய்துவிட்டது.

05. ஆப்கானிஸ்தானில் தலிபான் தாக்குதல் : ஆறு பேர் பலி

காபூல் : ஆப்கானிஸ்தானில் நார்வே நாட்டு வெளியுறவு அமைச்சர் தங்கியிருந்த ஓட்டலில் தலிபான் தற்கொலை படையினர் நேற்று தாக்குதல் நடத்தினர்.

mgandhi
17-01-2008, 04:50 PM
18-1-2008

01. பெனசிர் மகனுக்கு பாதுகாப்பு : ஓராண்டு செலவு ரூ.எட்டு கோடி
லண்டன் : பெனசிர் மகன் பிலாவலுக்கு பாதுகாப்பு அளிக்க பிரிட்டன் அரசு முடிவு செய்துள்ளது.

02. பிரிட்டன் செல்வோருக்கு கைரேகை பதிவு கட்டாயம்

லண்டன் : இந்தியர்கள் உள்ளிட்ட எந்த நாட்டை சேர்ந்தவர்களாக இருந்தாலும், பிரிட்டன் செல்ல வேண்டுமானால், கைரேகை பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

03. 30 ராணுவ வீரர்களை கொன்று பாக்., கோட்டையை பிடித்தது தலிபான்
இஸ்லாமாபாத் : ஆப்கன் எல்லையில் உள்ள வாசிரிஸ்தான் தெற்கு பழங்குடியினர் பகுதியில், பாக்., பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பில் இருந்த சரரோகா கோட்டை மீது தாக்குதல் நடத்திய தலிபான் பயங்கரவாதிகள்...

04. பெனசிர் கொலை குறித்து விசாரிக்க ஐ.நா.,விடம் மனு

இஸ்லாமாபாத் : பெனசிர் படுகொலை குறித்து, விசாரணை நடத்தக் கோரி, அவரது பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில் ஐ.நா.,வில் மனு செய்யப்பட்டுள்ளது.

05. எல்லை பாதுகாப்பு பிரச்னை குறித்து இந்திய சீன அதிகாரிகள் பேச்சு
பீஜிங்: இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் மற்றும் சீன வெளியுறவு துணை அமைச்சர் டால் பிங்கோவ் ஆகியோர் இரு நாட்டு எல்லை பிரச்னை குறித்து நேற்று பேச்சு நடத்தினர்.

06. "ஜொள்ளு' கணவர் எங்கு இருக்கிறார் : மொபைல் போன் காட்டிக் கொடுக்கும்
ஹாங்காங்: மொபைல் போன் மூலம் தங்கள் கணவர் அல்லது மனைவியை கண்காணிப்பது அதிகரித்து வருகிறது.


07. 10 சதவீத ஆசிப் சர்தாரி கட்சி தலைவரா? குல்தீப் நய்யார்
பாகிஸ்தான் அரசியல் நாளுக்கு நாள் வியப்பை ஏற்படுத்துகிறது. அங்கே வாரிசு அரசியல் வருவதைப் பற்றி பேசவில்லை.


08. மாஜி பிரதமர் பிளேருக்கு திரும்பி வந்த எஸ்.எம்.எஸ்.,
பாரிஸ் : மொபைல் போனுக்கு தெரியுமா என்ன, இவர் மாஜி பிரதமர் என்று...? ஆம், பிரிட்டனில் மாஜி பிரதமர் டோனி பிளேர், தன் நண்பருக்கு அனுப்பிய எஸ்.எம்.எஸ்., தகவலை, அவருக்கே திருப்பி அனுப்பி விட்டது!

mgandhi
22-01-2008, 06:06 PM
23-1-2008

1. தூத்துக்குடி நடுக்கடலில் மீனவர்கள் மோதல்

2. திருப்புடைமருதூரில் தைப்பூச தீர்த்தவாரி

3. ஆஸி.,யில் அசத்திய பதான்

4. நெல்லை அருகே மீனவர்கள் இடையே கோஷ்டி மோதல்: ஒருவர் கொலை: பலர் காயம்

5. சிறுத்தைகள் ஜாமீன் மனு செஷன்ஸ் கோர்ட் தள்ளுபடி

6. கர்நாடக லாரிகள் ஸ்டிரைக் வாபஸ்

7. திருச்செந்தூ ரில் தைப்பூசம்

8. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் நாடல் ஷரபோவா, ஜான்கோவிக

9. ஹரியானாவைச் சேர்ந்த ஆறு குழந்தைகளுக்கு தேசிய விருது

10. தேசிய ஜனநாயக கூட்டணித் தலைவராக வாஜ்பாய் நீடிப்பார்

11. கடவுள் விரும்பும் வரையில் பதவியில் இருப்பேன் : கோவா முதல்வர் காமத்

12. டில்லி தமிழ்ச்சங்கத்தின் சார்பில் டைட்டானிக் கண்காட்சி

13. ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர்கைது

14. ராமநாதபுரம் அருகே 2 பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து : இருவர் பலி ; 51 பேர் காயம்

15. பிரதமர் மன்மோகன்சிங் பிப். 9 ம் தேதி விதர்பா செல்கிறார்

16. சத்யமங்கலம் பகுதியில் 3 நாட்களாக உயிருக்கு போராடிய குட்டி யானை இறந்தது


தோன்றும்போது தாயில்லாமல் தோன்றவில்லையே
சொல்லில்லாமல் மொழியில்லாமல் பேசவில்லையே

mgandhi
24-01-2008, 05:06 PM
25-1-2008

பிரபாகரன் முகாம் மீது குண்டு வீச்சு

விடுதலைப்புலி தலைவர் பிரபாக
ரன் ஆலோசனைநடத்தும் முகாம் மீது இலங்கை போர் விமானங்
கள் குண்டு வீசித் தாக்குதல்.


செவ்வாய் கிரகத்தில் மனித உருவமா?

செவ்வாய்க்கிரகத்தில் மனிதர்கள் இருப்பதற்கு வலுசேர்க்கும் விதத்
தில் ஆதாரம் ஒன்று கிடைத்து உள்ளது.


பின்லேடனை தேடிக்கண்டுபிடிக்க நாங்கள் முயற்சி எதுவும் செய்யவில்லை பாகிஸ்தான் அதிபர் முஷரப் ஒப்புக்கொண்டார்


பிரபாகரனை இந்தியாவிடம் ஒப்படைப்போம் இலங்கை அதிபர் பேட்டி


அமெரிக்காவில் ஜனாதிபதி போட்டியில் இருந்து ஆலிவுட் நடிகர் விலகினார்


தைப்பூசம் திருவிழாவை புறக்கணித்த மலேசிய இந்து உரிமைக் குழுவினர்


இந்தோனேஷியாவில் பூகம்பத்துக்கு ஒரு குழந்தை பலி-4 பேர் காயம்


ஆஸ்திரேலியாவில் பிறந்த ஆலிவுட் நடிகர் ஹீத் லெட்ஜர் மர்ம மரணம்


பாகிஸ்தானுடன் நீண்ட கால உறவு தான் எங்கள் விருப்பம் அமெரிக்க மந்திரி பேட்டி

mgandhi
25-01-2008, 05:03 PM
26-1-2008

1- வடக்கு-கிழக்கு மீண்டும் இணைப்பு இல்லை: சிறிலங்கா அரசு உறுதி - கொழும்பு,
வடக்கு-கிழக்கு மாகாணங்கள் எந்த காரணத்தைக் கொண்டும் மீண்டும் இணைக்கப்பட மாட்டாது என்று சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம (Srilankan Foreign Minister Rohitha Bogollagama ) தெரிவித்துள்ளார்.

2-இந்தியாவிலிருந்து கோழி இறக்குமதி செய்ய இலங்கை தடை - கொழும்பு
இந்தியாவிலிருந்து கோழி முட்டை பவுடரையும், பொரித்து ஒரு நாள் ஆன கோழிக் குஞ்சுகளையும் இலங்கை இறக்குமதி செய்து வருகிறது. அண்மையில், மேற்கு வங்க மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் பரவியதைத் தொடர்ந்து இதற்கு இலங்கை அரசு தடை விதித்திருக்கிறது.

3-எகிப்து-காஸா எல்லைச் சுவர் குண்டு வைத்து தகர்ப்பு - காஸா,
பாலஸ்தீனத்தின் காஸா பகுதிக்கும் எகிப்துக்கும் இடையே கட்டப்பட்டிருக்கும் எல்லைச் சுவரின் ஒரு பகுதியை தீவிரவாதிகள் குண்டுவைத்துத் தகர்த்தனர். இதையடுத்து, ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் எகிப்து எல்லைக்குள் நுழைந்து தங்களுக்குத் தேவையான உணவு மற்றும் எரிபொருள்களை வாங்கிச் சென்றனர். இவர்களை எகிப்து பாதுகாப்புப் படையினர் தடுக்கவில்லை.

4-அமைதியை ஏற்படுத்த கென்ய தலைவர்களுக்கு கோஃபி அன்னான் அழைப்பு - நைரோபி,
கென்யாவில் அமைதியை ஏற்படுத்த ஒத்துழைப்புத் தருமாறு அந்நாட்டு அரசியல் தலைவர்களை ஐ.நா. சபையின் முன்னாள் பொதுச் செயலாளர் கோஃபி அன்னான் (Kofi Annan ) கேட்டுக் கொண்டுள்ளார்.

5-வங்கதேசத்துடன் இந்திய எல்லை பாதுகாப்புப் படை ஒப்பந்தம் - டாக்கா,
வங்கதேசத்துடன் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

6-விடுதலைப் புலிகளின் தலைமையகம் மீது தாக்குதல்: இளந்திரையன் மறுப்பு - தமிழீழம்,
சிறிலங்கா வான் படையினர் இன்று நடத்திய தாக்குதல் குறித்து வெளியிடப்படும் தகவல்களை மலிவுப் பிரச்சாரம் என்று வர்ணித்திருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் (LTTE Military spokesman Irasaiya Ilanthirayan ), இந்த தகவல்களில் எதுவித உண்மையும் இல்லை என்று தெரிவித்துள்ளார்

mgandhi
27-01-2008, 04:02 PM
28-1-2008

1.மார்பக புற்றுநோய் அதிகரிப்பது ஏன்?
லண்டன் :பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கு, வசதி வாய்ப்பு மற்றும் மேற்கத்திய கலாசாரத்தை பின்பற்றுவது ஆகியவை காரணங்கள் என கண்டறியப்பட்டுள்ளது.

2.மகாத்மா காந்தி பேரன் ராஜினாமா
நியூயார்க் :நியூயார்க்கில் செயல்பட்டு வந்த எம்.கே.காந்தி அகிம்சை நிறுவனத்தில் இருந்து மகாத்மா காந்தியின் பேரன் அருண் காந்தி ராஜினாமா செய்து விட்டார்.

3.இந்திய துதரை தாக்க பாக்., பயங்கரவாதிகள் சதி
இஸ்லாமாபாத் :பாகிஸ்தானில் உள்ள இந்திய ஹைகமிஷன் அலுவலகத்தின் மீது தற்கொலைப் படையினர் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக வந்த தகவலையடுத்து அங்கு பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

4.இலங்கை சண்டை 20 பேர் பலி

கொழும்பு :இலங்கை அரசுக்கும், புலிகளுக்கும் கடும் சண்டை நடந்து வருகிறது.

5.வங்கிக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுத்திய "ரோக் டிரேடர்'

பாரீஸ் :"போக்கிரி வர்த்தகர்' என்ற நிலையில் செயல்பட்ட ஒரு ஊழியர், தான் பணிபுரிந்த வங்கிக்கு தெரியாமல் பல ஆயிரம் கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட காரணமாக இருந் துள்ளார் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.

mgandhi
03-02-2008, 04:59 AM
3-2-2008

01. ரஷ்ய அரசியலை கலக்கும் புடினின் "கவர்ச்சி பெண்கள்'


மாஸ்கோ : "கவர்ச்சி அரசியல்' என்பது தேவை என்பதை ரஷ்ய அதிபர் புடினும் உணர்த்திவிட்டார். அந்நாட்டில் கடந்த மாதம் பார்லிமென்ட் தேர்தல் நடந்தது.

உள்ளே

02. போருக்கு சிறுவர்கள் தேர்வு : கருணா மீது ஐ.நா., புகார்

கொழும்பு : இலங்கையில், மோதலில் சிறுவர் களை ஈடுபடுத்தும் பணியில் கருணா அமைப்பு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது என ஐ.நா., குற்றம் சாட்டியுள்ளது.

உள்ளே

03. கல்பனா சாவ்லா உட்பட விஞ்ஞானிகளுக்கு அஞ்சலி


ஹூஸ்டன் : கொலம்பியா விண்கலம் நொறுங்கியதில் பலியான கல்பனா சாவ்லா உட்பட ஏழு விஞ்ஞானிகளுக்கு, நாசா விண்வெளி மையத்தில் நேற்று நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

உள்ளே

04. மருத்துவமனையில் அடைக்கலமான வி.ஐ.பி.,க்களுக்கு சிறை

தாகா : கம்பி எண்ணுவதை தவிர்க்க, மார்பை பிடித்துக் கொண்டு மருத்துவமனையில் தஞ்சம் புகுந்திருக்கும் ஊழல் அரசியல் வி.ஐ.பி.,க்களை, மீண்டும் சிறையில் அடைக்க வங்கதேச அரசு ஒரு வார கெடு விதித்துள் ளது.

உள்ளே

05. ஐம்பதில் செக்ஸ் நிச்சயம் தேவையாம்! : ஆனா, காண்டம் பயன்படுத்தணுமாம்

லண்டன் : ஐம்பது வயதை தாண்டியவர்கள், செக்ஸ் வைத்துக்கொள்ள விரும்புவதில் தவறே இல்லை; ஆனால், காண்டம் பயன்படுத்தாமல் இருந்தா ஆபத்து!

உள்ளே

06. குஜராத் மாலுமிகள் மீட்பு

துபாய் : அரிசி கொண்டு செல்லப்பட்ட சிறு கப்பல் மூழ்கி, பக்ரைன் கடலில் தத்தளித்த குஜராத் மாலுமிகள் 17 பேர் மீட்கப்பட்டனர்.

உள்ளே

07. இலங்கை பஸ்சில் குண்டு வெடிப்பு : 20 பேர் பலி

கொழும்பு : இலங்கையில், "தாமரை பூஜை'யில் பங்கேற்க சென்று கொண்டிருந்த பயணிகள் பஸ்சில் குண்டு வெடித்து 20 பேர் கொல்லப்பட்டனர்; 50 பேர் படுகாயம் அடைந்தனர்.

mgandhi
03-02-2008, 04:52 PM
4-2-2008

1-யாகூ இணையதளத்தை மைக்ரோசாப்ட் வாங்குகிறது - சான் பிரான்சிஸ்கோ,
உலகின் மிகப் பெரிய இன்டர்நெட் நிறுவனமான யாகூவை 44. 6 பில்லியன் டாலர்களுக்கு (ரூ. 1,73,940 கோடிகள்) மைக்ரோசாப்ட் நிறுவனம் வாங்குகிறது.

2- அணு ஏவுகணையை பரிசோதித்த பாகிஸ்தான் - இஸ்லாமாபாத்,
அணு ஆயுதங்களை ஏந்திச் சென்று தாக்கக் கூடிய திறன் படைத்த காவ்ரி (ஹதீப்5) நடுத்தர ரக ஏவுகணையை பாகிஸ்தான் நேற்று வெற்றிகரமாக ஏவி பரிசோதித்தது.

3- ஈராக்கில் தற்கொலை தாக்குதலில் 64 பேர் பலி - பாக்தாத்,
ஈராக்கில் தலைநகர் பாக்தாத்தில் மார்க்கெட் பகுதியில் பெண் தீவிரவாதி ஒருவர் நடத்திய தற்கொலை தாக்குதலில் 64 பேர் பலியானார்கள். 107 பேர் காயம் அடைந்தனர்.

4- யாழில் குண்டுவெடிப்பு: 4 பொதுமக்கள் பலி- 15 பேர் படுகாயம் - யாழ்ப்பாணம்,
யாழ். திருநெல்வேலியில் நேற்று காலை இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 4 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். 15 பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளனர்.

5- தமிழீழ விடுதலைப்புலிகளை தடை செய்ய முடியாது: ஜப்பான் - கொழும்பு,
இலங்கையில் வன்முறைகள் தொடர்ந்தால் சிறிலங்கா அரசாங்கத்திற்கான ஐப்பானின் நிதியுதவிகள் நிறுத்தப்படும் என்று இலங்கைக்கான ஐப்பானிய சிறப்பு சமாதானத் தூதுவர் யசூசி அகாசி (Japans special envoy to Sri Lanka Yasushi Akashi ) தெரிவித்துள்ளார்

mgandhi
11-02-2008, 05:03 PM
12-2-2008

01.பாக்.,கில் தொடர்கிறது பயங்கரம் : மனித வெடிகுண்டுக்கு 400 பேர் பலி

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் மனித வெடிகுண்டு தாக்குதலில், அவாமி தேசிய கட்சியை சேர்ந்த 25 பேர் கொல்லப்பட்டனர்.


02. இந்திய நட்பு : ரஷ்யப் பிரதமர் பெருமிதம்

மாஸ்கோ : "எங்களின் நம்பிக்கைக்குரிய நாடு, இந்தியா'என ரஷ்யா பிரதமர் விக்டர் ஜுப்கோவ் கூறியுள்ளார்.

03. பாக்., அரசுக்கு ஆபத்து : அமெரிக்கா எச்சரிக்கை

முனிச் : பாகிஸ்தான் எல்லையில் முகாமிட்டுள்ள அல் குவைதா மற்றும் தலிபான் பயங்கரவாதிகளால் அந்நாட்டு அரசுக்கு ஆபத்து காத்திருக்கிறது, என அமெரிக்க ராணுவ அமைச்சர் ராபர்ட் கேட்ஸ் எச்சரித்துள்ளார்.04. பிணத்துடன் எட்டு ஆண்டு வசித்துவந்த முதியவர்

லண்டன் : எட்டு ஆண்டுகளாக பிணத்துடன் வசித்திருக்கிறார் பிரிட்டன் முதியவர்.


05.உடல் உறுப்பு அனைத்தும் தெரியும் கண்ணாடி மீன்

பாஸ்டன் : ஒளி ஊடுருவக்கூடிய கண்ணாடி மீனை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை படைத் துள்ளனர்.


06. குழந்தைகள் துங்கினால் குண்டாகாது * இதுவும் ஒரு ஆராய்ச்சி

நியூயார்க் : அதிகம் சாப்பிட்டால் தான் எடை கூடுவதாக நினைத்துக்கொண்டிருக்கிறோம்.


07. இந்திய சினிமா புகழை உலகளவில் பரப்புவேன்: ஜெர்மனியில் ஷாருக் பேச்சு

பெர்லின் : ""ஹாலிவுட்டிலோ அல்லது ஐரோப்பிய சினிமா உலகிலோ எனக்கு இடமில்லை என்றாலும் இந்திய சினிமாவின் புகழை உலக அளவில் கொண்டு செல்வேன்,'' என்று பாலிவுட் நடிகர் ஷாருக்கான் கூறினார்.

mgandhi
12-02-2008, 04:24 PM
13-2-2008

01. விமானத்தில் வெடிகுண்டும் கடத்த முடியும் :நிரூபித்து காண்பித்தார் புலனாய்வு நிருபர்

ஆம்ஸ்டர்டாம் :ஐரோப்பாவில் மிக அதிகமான விமானங்கள், பயணிகள் குவியும் நான்காவது விமான நிலையம் ஆம்ஸ்டர்டாமின் ஸ்கிபோல். இங்கு, பயணிகளின் சுமைகளை கையாளும் பணியாளர்கள் நினைத்தால், எதை வேண்டுமானாலும் விமானத்தில் கடத்தி செல்ல முடியும் என்ற பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது.

02. அடுத்த அமெரிக்க அதிபராக ஒபாமா...! கணிப்பு
சந்தையில் பரபரப்பு...!

மிசிசிப்பி :அமெரிக்காவின் அடுத்த அதிபராக பராக் ஒபாமா வருவார் என்ற கணிப்புக்கு சாதகமாக பெட்டிங் அதிகரித்து வருகிறது.

03. ஹிலாரியின் மேனேஜர் திடீர் மாற்றம்

வாஷிங்டன் :அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சி வேட்பாளர் தேர்தலில் போட்டியிடும் ஹிலாரி, தனது பிரசார திட்ட மேனேஜரை திடீரென்று மாற்றியுள்ளார்.

04. நடிகை நீச்சல் உடையால் இந்திய விவசாயிகளுக்கு மாடு உதவி! சுவீடன் அறக்கட்டளை புதுமை

ஸ்டாக்ஹோம் : ஆஸ்திரேலிய நடிகை நிக்கோல் கிட்மன் நீச்சல் உடையை ஏலம் விட்டு, அதில் கிடைத்த பணத்தில், இந்திய ஏழை விவசாயிகளுக்கு பசுக்களை வாங்கி அளிக்க சுவீடன் அறக்கட்டளை முடிவு செய்துள்ளது.

05. ஈராக் சிறுவர்களுக்கு பயங்கரவாத பயிற்சி :ஆதாரம் வெளியிட்டது அமெரிக்கா

பாக்தாத் :அல்குவைதா அமைப்பினர், ஈராக்கைச் சேர்ந்த சிறுவர்களுக்கு பயங்கரவாத பயிற்சி அளிக்கும் காட்சிகள் இடம் பெற்ற "வீடியோ'வை அமெரிக்க ராணுவம் வெளியிட்டுள்ளது.

06. அகலமான மூக்கா உங்களுக்கு? அப்ப நீங்க, "அதில்' கில்லாடியாம்!

சிட்னி :"கைரேகையில் மட்டுமல்ல; மூக்கை வைத்தும் ஒருவரின் குண நலன்களை அறியலாம்' என உடலியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

07. சூதாட்டத்தில் மகளை இழந்த தந்தை

காத்மாண்டு : தந்தை சூதாட்டத்தில் தோற்றதால், ஒன்பது வயது பெண், 30 வயது நபருக்கு திருமணம் முடிக்க கடத்தி செல்லப்பட்டாள்.

08. பக்ரைன் ஊழியர்கள் துதரகம் படையெடுப்பு

துபாய் :பக்ரைனில் பணிபுரிந்து வரும் 250க்கும் மேற்பட்ட இந்திய தொழிலாளர்கள், போதிய சம்பளம் தரப்படவில்லை என வலியுறுத்தி, இந்திய துதரகத்துக்கு ஊர்வலமாக சென்று புகார் அளித்தனர்.

09. தலிபான் கமாண்டர் பாக்.,கில் கைது

குயெட்டா :தலிபான் பயங்கரவாத அமைப்பின் முக்கிய கமாண்டர் முல்லா மன்சூர் ததுல்லா கைது செய்யப்பட்டார்.

mgandhi
14-02-2008, 04:46 PM
15-2-2008

01.பூர்வீகக் குடிகளிடம் மன்னிப்பு கேட்டு ஆஸ்திரேலிய பார்லி.,யில் பிரதமர் கதறல்

மெல்போர்ன் : பூர்வீகக் குடிகளுக்கு கடந்த காலத்தில் இழைக்கப்பட்ட தீமைகளுக்கு ஆஸ்திரேலிய பார்லிமென்டில், அந்நாட்டு பிரதமர் கெவின் ரூட் மன்னிப்பு கேட்டுக் கதறினார்.

02.முஷாரப் செல்வாக்கு சரிகிறது : சொல்கிறது கருத்து கணிப்பு

வாஷிங்டன் : பாகிஸ்தானில் முஷாரப்பின் செல்வாக்கு சரிந்து வருவது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

03.நெப்போலியன் மரணத்துக்கு காரணம் உணவு, பசியால் ஏற்பட்ட புற்றுநோய்


லண்டன் : மாவீரன் நெப்போலியன் மரணுத்துக்கு, வயிற்று புற்று நோய் தான் காரணம் என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர

04.மலேசியாவில் விரைவில் தேர்தல் : பார்லி.,யை கலைத்தார் பிரதமர்

கோலாலம்பூர் : மலேசிய பார்லிமென்ட்டை கலைக்க, அந்நாட்டு மன்னர் நேற்று கையெழுத்திட்டதை அடுத்து, பிரதமர் அப்துல்லா அமாத் படாவி, பார்லி.,யைக் கலைத்து அறிவித்துள்ளார்.

05.எங்கள் திருமணம் அவசரமாக நடக்கவில்லை : வாய் திறந்தார் கர்லா புரூனி

பாரிஸ் : பிரான்ஸ் அதிபர் நிகோலஸ் சர்கோசியுடன் தனக்கு அவசர திருமணம் நடக்கவில்லை என்றும், நிதானமாக, கவனமாகத் தான் திருமணம் நடந்தது என்றும், புது மனைவி கர்லா புரூனி கூறியுள்ளார்.

06.நவாஸ் சர்தாரி கைகோர்ப்பு

லாகூர் : பாகிஸ்தானில் இரண்டு முக்கிய எதிர்க்கட்சிகளான பாகிஸ்தான் மக்கள் கட்சி(பி.பி.பி.,) மற்றும் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்(நவாஸ்) கட்சி ஆகியவை கைகோர்த்துள்ளன

அக்னி
15-02-2008, 02:28 AM
உலகத் தினச் செய்திகளைத் திரட்டித் தரும்
மோகன் காந்தி அவர்களின் சேவைக்கு மிக்க நன்றி...
என்றும் எதிர்பார்க்கின்றோம்...

mgandhi
15-02-2008, 05:05 PM
01. வெளிநாட்டு பணியாளர்கள் பிரிட்டனில் பெரிதும் அதிகரிப்பு


லண்டன் : பிரிட்டனில் வெளிநாட்டு பணியாளர்கள் ஆறு ஆண்டுகளில் 75 சதவீதம் அதிகரித்துள்ளது. .

02. கனடாவில் பஞ்சாபியின் ஆதிக்கம் : அதிகம் பேசப்படும் 4வது மொழி


வான்கூவர் : கனடாவில், பஞ்சாபியர்கள் எண்ணிக்கை பெரிதும் அதிகரித்து வருகிறது. அங்கு பேசப்படும் மொழிகளில், ஆறாவது இடத்தில் உள்ளது பஞ்சாபி.


03. நாய்களுடன் சினிமா பார்க்கலாம் : தியேட்டர்களின் புது திட்டம்


வியன்னா : ரசிகர்களை மேலும் அதிகளவில் ஈர்ப்பதற்காக, தங்களின் செல்லப்பிராணிகளுடன் படம் பார்க்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது

04. ஆண், பெண் முத்தத்தில் வித்தியாசம் இருக்கு!
வாஷிங்டன் : "ஆண், பெண் தரும் முத்தத்தில் வித்தியாசம் இருக்கிறது' என்று, அமெரிக்க மருத்துவ நிபுணர்கள், தங்கள் புது ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர்

05. தாந்திரீக செக்ஸ்: பிரிட்டனில் கிராக்கி
லண்டன் : இந்திய கலையான "தாந்திரீக செக்ஸ்' மீதான மோகம், பிரிட்டனில் அதிகரித்து வருகிறது.

06. அடுத்த அமெரிக்க அதிபராக ஒபாமா...! கணிப்பு சந்தையில் பரபரப்பு...!

அமெரிக்காவின் அடுத்த அதிபராக பராக் ஒபாமா வருவார் என்ற கணிப்புக்கு சாதகமாக பெட்டிங் அதிகரித்து வருகிறது.

mgandhi
16-02-2008, 05:05 PM
17-2-2008


1. வகுப்பு நடந்த போது பயங்கரம் அமெரிக்க பல்கலைக்கழகத்தில் 7 மாணவர்கள் சுட்டுக்கொலை வெறிச்செயலில் ஈடுபட்ட மாணவர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை


2. தண்ணீருக்கு அடியில் பயணிக்கும் கார்


3. உலகின் உயரமான கட்டிடத்தில் 94-வது மாடி ரூ.48 கோடிக்கு விற்பனை


4. சீனாவில் ஓட்டலில் தீ பிடித்ததில் 11 பேர் பலி


5. வங்காளதேசத்தில் படகு விபத்தில் 5 பேர் பலி


6. பெனாசிர் கொலையில் மேலும் ஒருவர் கைது


7. 8 குழந்தைகளை கொன்ற ஜெர்மானிய தாய்


8. மலேசியாவில் இந்தியர்கள் ஓட்டு ஆளும் கூட்டணிக்கு கிடைக்குமா?

9. 8 முறை தொடர்ந்து தோல்வி அடைந்த ஹிலாரி, நி மெக்சிகோ மாநிலத்தில் வெற்றி பெற்றார் 1700 ஓட்டு வித்தியாசத்தில் ஒபாமா தோல்வி அடைந்தார்


10 70 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றப்பட்ட குண்டு

ஜெயாஸ்தா
17-02-2008, 02:28 AM
17-2-2008
1. வகுப்பு நடந்த போது பயங்கரம் அமெரிக்க பல்கலைக்கழகத்தில் 7 மாணவர்கள் சுட்டுக்கொலை வெறிச்செயலில் ஈடுபட்ட மாணவர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை

மீண்டும் ஒரு துயரசம்பவம். முன்னேறிய மேற்கத்திய கலாச்சாரத்திற்கு மீண்டும் ஒரு மரணஅடி


2. தண்ணீருக்கு அடியில் பயணிக்கும் கார்
குறிப்பிடத்தக்க அறிவியல் முன்னேற்றம்தான். நாங்கதான் ஏற்கெனவே இதை பல 007 படங்களில் பார்த்துட்டோமே..! (நம்ம மக்கள் தண்ணியடித்தாலும் ஸ்டெடியாக ஓட்டக்கூடிய கார் கண்டுபிடிச்சா நல்லாயிருக்குமுன்னு சொல்றாங்க..!)


8. மலேசியாவில் இந்தியர்கள் ஓட்டு ஆளும் கூட்டணிக்கு கிடைக்குமா?

கிடைக்கும்தான் நினைக்கிறேன். இந்தியவம்சாவழியினருக்கு பல சலுகைகளை அள்ளிக் கொடுத்திருக்கிறதாம் படாவி அரசு


9. 8 முறை தொடர்ந்து தோல்வி அடைந்த ஹிலாரி, நி மெக்சிகோ மாநிலத்தில் வெற்றி பெற்றார் 1700 ஓட்டு வித்தியாசத்தில் ஒபாமா தோல்வி அடைந்தார்
அங்கேயும் ஒரு கஜினியா?

mgandhi
17-02-2008, 04:38 PM
18-2-2008

01. "இண்ட்ராப்' அமைப்பினர் மீண்டும் கைது
கோலாலம்பூர்: மலேசியாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர், சம உரிமை கேட்டு போராட்டம் நடத்திவருகின்றனர். "இண்ட்ராப்' அமைப்பு சார்பில் போராட்டங்கள் நடத்தப் பட்டு வருகிறது.


02. குரங்குகளும் பேசிக்கொள்ளும் ஆய்வில் தெரியவந்த அதிசயம்
லண்டன்: குரங்குகளும் மனிதர்களைப் போல, ஒன்றுக் கொன்று பேசிக்கொள்வதும், குரல் வித்தியாசத்தை உணர் ந்து கொள்வதும் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

03. கரை ஒதுங்கும் கால் பாதங்கள் : கனடாவில் பரபரப்பு

வான்கூவர் (கனடா): கனடா நாட்டு கடற்கரைப் பகுதிகளில் துண்டிக்கப்பட்ட நிலையில் மனித கால் பாதங்கள் ஒதுங்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

04. இன துவேஷத்துடன் நடத்தப்பட்ட இந்தியர் ஹோண்டா நிறுவனம் ரூ.52 லட்சம் இழப்பீடு

லண்டன்: பிரிட்டனில், இன துவேஷத்துடன், கடுமையாக நடத்தப்பட்டதால், வேறு வழியின்றி வேலையில் இருந்து விலக நேரிட்ட இந்தியருக்கு, ரூ. 52 லட்சம் இழப்பீடு அளிக்க, ஹோண்டா நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

05. கட்டுப்பாடு இழந்த செயற்கைகோளை தகர்க்க அமெரிக்கா முயற்சி

வாஷிங்டன்: பூமியின் சுற்று வட்ட பாதையில் இருந்து விலகி, தரைக்கட்டுப்பாட்டை இழந்த செயற்கைகோளை, ஏவுகணையை செலுத்தி, அழிக்க அமெரிக்க ராணுவம் முடிவு செய்துள்ளது.

06. பாகிஸ்தானில் பிரசாரம் ஓய்ந்தது
இஸ்லாமாபாத்: பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே, பாகிஸ்தானில் நாளை(பிப்.18) பொதுத் தேர்தல் நடக்கிறது. அரசியல் கட்சிகளின் பிரசாரம் நேற்றோடு ஓய்ந்தது.

07. பயங்கரவாதிகள் பிடியில் பாக்., அணுகுண்டு நிபுணர்கள்!: ஆப்கன் எல்லையில் கடத்தல்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அணு சக்தி கமிஷன் நிபுணர்கள் இருவரை, அல் கொய்தா பயங்கரவாதிகள் கடத்திச் சென்று விட்டனர்.

mgandhi
18-02-2008, 04:52 PM
19-2-2008

1-பாகிஸ்தானில் இன்று பொதுதேர்தல்: 50 பேர் பலி

வன்முறைகளுக்கு இடையே பாகிஸ்தான் பாராளுமன்றத்துக்கு பொது தேர்தல் நடக்கிறது. 2 தற்கொலைதாக்குதலில் 50பேர்பலி.


2-செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வசிக்க இயலாது நாசா விஞ்ஞானி தகவல்

3-கார் நம்பர் பிளேட் எண் ரூ.55 கோடிக்கு ஏலம் விடப்பட்டது

அபுதாபி நகரில் ஒரு தொழில்அதிபர் நம்பர் பிளேட்டில் ஒன்றாம் எண்ணை மட்டும் பெறுவதற்கு விரும்பினார். இதற்கான ஏலத்தில் அவர் கலந்து கொண்டார். மற்ற சிலரும் இந்த எண்ணை பெறுவதற்காக போட்டி போட்டனர். இதனால் நடந்த போட்டியில் ஏலத்தொகை உயர்ந்து போய்விட்டது. கடைசியில் அவர் 55 கோடி ரூபாய் செலுத்தி அந்த எண்ணை பெற்றார். இவ்வளவு தொகை செலுத்தி 1-ம் எண்ணை பெற்ற தொழில் அதிபரின் பெயர் சயீத் அல் கோரி. வயது 25.

4-ஆப்கானிஸ்தானில் நாய்ச்சண்டையில் குண்டு வெடித்து 80 பேர் பலி

5-சிகரெட் வாங்குவதற்கு பெர்மிட் வேண்டும் (இங்கிலாந்து நாட்டில்)

6-ஐரோப்பாவில் புதிய நாடு உதயம் செர்பியாவில் இருந்து கொசோவா பிரிந்தது

7-ஆப்கானிஸ்தானில் பனிப்புயலுக்கு 1000 பேர் பலி

8-பிரபாகரனை யாரும்நெருங்க முடியாது-விடுதலைப்புலிகள்

குண்டுவீச்சில் பிரபாகரன் காயம் அடையவில்லை அவரை யாருமநெருங்க முடியாது என்று விடுதலைப்புலிகள் அறிவிப்பு.


9-நிசிலாந்தில் ஹெலிகாப்டருடன் விமானம் மோதியதில் 2 பேர் பலி

10-லெனின் உடல் மேலும் 100 ஆண்டுகளுக்கு காட்சிக்கு வைக்கப்படும்

11-40 அடி உயர பாலத்தில் இருந்து பஸ் விழுந்ததில் 13 பேர் பலி

mgandhi
20-02-2008, 04:47 PM
21-2-2008

01. "தேர்தலில் போட்டியிடமாட்டேன் ' : அமைச்சர் டத்தோ சாமிவேலு பேட்டி
கோலாலம்பூர்: மலேசியாவில் வாழும் இந்தியர்களின் நலனுக்கு, போதுமான உதவிகள் செய்யவில்லை என்ற பரவலான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான அமைச்சர் டத்தோ சாமிவேலு,


02. பிரபாகரனை வெளியேற்ற "இடி அமீன் திட்டம்'
கொழும்பு: விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன், நாட்டை விட்டு பாதுகாப்பாக வெளியேற, "இடிஅமீன் திட்டம்' ஒன்றை சில காலத்துக்கு முன், இலங்கை அரசு முன் வைத்தது.

03. அதிபர் பதவியிலிருந்து பிடல் காஸ்ட்ரோ ஓய்வு
ஹவானா: கியூபா அதிபர் பதவியிலிருந்து ஓய்வு பெறப்போவதாகவும், அந்த பதவிக்கு, மீண்டும் வரப்போவதில்லை எனவும், பிடல் காஸ்ட்ரோ(81) தெரிவித்துள்ளார்.

04. அளவோடு ஒயின் அருந்தினால் இதயத்துக்கு நல்லது
டொரன்டோ,: தினமும் ஒரு கிளாஸ் ஒயின் குடித்தால் இதய நோய்கள் வராது என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

aren
20-02-2008, 11:34 PM
சாமிவேலு போட்டியிட்டால் தோற்றுவிடுவோம் என்ற பயத்தினால் போட்டியிடவில்லையா? புதிராக இருக்கிறதே.

மனோ.ஜி அவர்கள் வந்துதான் இதற்கு பதில் தரவேண்டும்

mgandhi
21-02-2008, 05:14 PM
22-2-2008

பாகிஸ்தான் புதிய பிரதமர் யார்?- 5 பேர் பெயர் அடிபடுகிறது
இஸ்லாமாபாத், -பாகிஸ்தான் தேர்தலில் பெனாசிர் கட்சியும், நவாஸ் செரீப்பின் முஸ்லிம் லீக் கட்சியும் அதிக இடங் களை பிடித்துள்ளன. இந்த இரு கட்சிகளும் வேறு சில கட்சிகளையும் சேர்த்துக் கொண்டு கூட்டணி ஆட்சி

அமெரிக்காவின் 2 போர் விமானங்கள் நடுவானில் மோதி சிதறின
வாஷிங்டன், -அமெரிக்கா விமானப் படையில் உள்ள எப்-15சி என்ற போர் விமானங்கள் மெக்சிகோ கடல்பகுதிகளில் போர் பயிற்சியில் ஈடுபட்டன. அப்போது 2 விமானங்கள் ஒன்றோடு ஒன்று மோதி வெடித்து சிதறின. விமானங்கள் மோதிக் கொண்டால் ...


மேலும் 2 மாநிலங்களில் ஒபாமா வெற்றி ஹிலாரி தோல்வியை தழுவினார்
வாஷிங்டன், -அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போகும் வேட்பாளர்களை தேர்ந்து எடுப்பதற்கான தேர்தலில் மேலும் 2 மாநிலங்களில் ஒபாமா வெற்றி பெற்றார். ஹிலாரி தோல்வியை தழுவினார்.9-வது வெற்றிஅமெரிக்காவில் வருகிற நவம்பர் 4-ந்தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற ...

செர்பியாவில் இருந்து தூதரை திரும்பப்பெற மாட்டோம் அமெரிக்கா அறிவிப்பு
வாஷிங்டன், -செர்பியாவில் இருந்து கொசோவா தனிநாடாக சுதந்தரம் அடைந்ததாக பிரகடனம் செய்ததை தொடர்ந்து அந்த புதிய நாட்டை அமெரிக்கா அங்கீகரித்தது. இதனால் கோபம் அடைந்த செர்பியா அமெரிக்காவுக்கான தன் நாட்டு தூதரை திரும்ப பெற்றது. ..


இந்தோனேஷியாவில், அடுத்தடுத்து 3 முறை பயங்கர நில நடுக்கம் 3 பேர் பலி; 25 பேர் படுகாயம்
பண்டா ஏஸ், பிப்.21-இந்தோனேஷியாவில் நேற்று அடுத்தடுத்து பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. இதில் இடிபாடுகளில் சிக்கி 3 பேர் பலியானார்கள். 25 பேர் படுகாயமடைந்தனர்.

mgandhi
22-02-2008, 05:52 PM
23-2-2008

01. கிழக்கு தைமூர் அதிபர் ரமோஸ் "கோமா' வில் இருந்து மீண்டார்
திலி: கிளர்ச்சியாளர்களால் பத்து நாட்களுக்கு முன் சுடப்பட்ட கிழக்கு தைமூரின் அதிபர் ஜோஸ் ரமோஸ் ஹோர்தா, "கோமா' நிலையில் இருந்து நினைவு திரும்பினார்.

02. முஷாரப்பை பதவியிலிருந்து நீக்குவதா தயங்குகிறார் பெனசிர் கணவர் சர்தாரி
இஸ்லாமாபாத்: முஷாரப்பின் ஆதரவு பெற்ற பாகிஸ்தான் முஸ்லீம் லீக்(க்யூ)குடன் இணைந்து ஆட்சி அமைக்கும் எண்ணம் இல்லை, என பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் ஆசிப் அலி சர்தாரி தெரிவித்துள்ளார்.

03. சர்தாரி மீதான ஊழல் வழக்கு உயிர்ப்பிப்பு
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் புதிய அரசு அமைவது தொடர்பாக நிச்சயமற்ற சூழல் நீடித்து வரும் நிலையில், பாக்., மக்கள் கட்சி துணைத் தலைவர் ஆசிப் சர்தாரிக்கு நிர்பந்தம் கொடுக்கும் வகையில்...

04. தலைப்பாகை அவிழாது: 110 கி.மீ., வேகத்தில் பைக் ஓட்டி நிரூபித்தார் சீக்கியர்!
டொரான்டோ: கனடாவில், ஹெல்மெட் அணியாததற்காக அபராதம் விதிக்கப்பட்ட சீக்கியர், "தலைப் பாகை அணிவதை தடுப்பது "மதவாத ஒடுக்குமுறை' என்ற, சட்டப் போராட்டத்தில் இறங்கியுள்ளார்.

mgandhi
25-02-2008, 05:09 PM
26-2-2008

01. அமெரிக்க அரசில் உயர் பதவி: ஆசைப்படுகிறார் இந்திரா நுயி
நியூயார்க் : "அமெரிக்க அரசில் உயர் பதவி ஒன்றை பெற வேண்டும்' என ஆசைப்படுகிறார் பெப்சி நிறுவனத்தின் தலைவரான வெளிநாட்டு வாழ் இந்திய பெண்மணி இந்திரா நுயி.

உள்ளே

02. "இண்ட்ராப்' சிவநேசன் போட்டி
கோலாலம்பூர் : மலேசியாவில் நடக்கவுள்ள பொதுத்தேர்தலில், "இண்ட்ராப்' அமைப்பைச் சேர்ந்த இருவர் போட்டியிடுகின்றனர்.

03. இந்தியர்களை சித்ரவதை செய்த அமெரிக்க கம்பெனிக்கு கெடு! : ரூ. 52 லட்சம் இழப்பீடு அளிக்க உத்தரவு
நியூயார்க் : வேலை தந்து, கிரீன் கார்டு வாங்கித் தருவதாக ஆசை காட்டி, 52 இந்திய தொழிலாளர்களைச் சித்ரவதை செய்த அமெரிக்கக் கம்பெனிக்கு, அந்த நாட்டின் கோர்ட் கெடு விதித்துள்ளது.

04. இரவு நேர, வார இறுதி "அட்டாக்' ஆபத்து! : வார நாட்களில் தப்பலாம்
நியூயார்க் : இரவு, வார இறுதியில் ஏற்படும் மாரடைப்புக்கு உள்ளாவோர் தான் அதிகம் இறக்கின்றனர்; வார நாட்களில் "அட்டாக்' வருவோர் பிழைத்துக்கொள்கின்றனர்

05. இறைச்சிக்கு வெட்டப்பட்ட 6.5 கோடி கிலோ பன்றிகள் வாபஸ்
வாஷிங்டன் : நோய்வாய்ப்பட்ட பன்றிகள், இறைச்சியாக விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கலிபோர்னியா நிறுவனம், 6.5 கோடி கிலோ இறைச்சியை திரும்பப் பெற சம்மதித்துள்ளது.

06. லண்டனில் வீட்டுச் சந்தை : ரஷ்யர்களை மிஞ்சும் இந்தியர்கள்
லண்டன் : லண்டனில் வீடுகள் வாங்கும் இந்தியர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், அங்கு ரியல் எஸ்டேட் சந்தை களை கட்டியுள்ளது. இந்தியர்களுக்கு போட்டியாக ரஷ்யர்களும் களம் இறங்கியுள்ளனர்.

mgandhi
26-02-2008, 05:46 PM
27-2-2008

01. கியூபாவின் புதிய அதிபராக ரவுல் காஸ்ட்ரோ பதவி ஏற்பு
ஹவானா: கியூபா அதிபராக பிடல் காஸ்ட்ரோவின் சகோதரர் ரவுல் காஸ்ட்ரோ நேற்று பதவி ஏற்றுக் கொண்டார்.

02. மலேசியாவில் தேர்தல் பிரசாரம் : துவக்கம்
கோளாளம்பூர்: மலேசியாவில் பார்லிமென்ட் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் முடிவடைந்துள்ளதை அடுத்து, அரசியல் கட்சிகள் தங்களது பிரசாரத்தை துவக்கியுள்ளன.

03. முஷாரப் தானாக பதவி விலக வேண்டும் : அமெரிக்க செனட்டர்கள் அறிவுரை
வாஷிங்டன்: பாகிஸ்தான் அதிபர் பதவியிலிருந்து முஷாரப் நீக்கப்படுவதை விட, அவராகவே பதவி விலகுவது நல்லது, என அமெரிக்க செனட்டர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

04. இந்தோனேசியாவில் சுனாமி எச்சரிக்கை
ஜகர்த்தா: இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் நேற்று கடுமையான நில நடுக்கம் ஏற்பட்டதை அடுத்து, அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

05. ஒசாமாவின் நெருங்கிய கூட்டாளி பாகிஸ்தானில் கைது
இஸ்லாமாபாத்: தலிபான் பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவரும், அல்குவைதா தலைவர் ஒசாமாவின் நெருங்கிய கூட்டாளியுமான முல்லா உபைதுல்லாவை, பாகிஸ்தான் போலீசார் கைது செய்துள்ளனர்.

mgandhi
01-03-2008, 05:21 PM
2-3-2008

பாகிஸ்தானில் மனித வெடிகுண்டு தாக்குதல்: 38 பேர் பலி - இஸ்லாமாபாத்,
பாகிஸ்தானில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை நடத்தப்பட்ட மனிதக் வெடிகுண்டுத் தாக்குதலில் 38 பேர் பலியாகினர். 50 பேர் காயமடைந்தனர்.

இந்தியா துணிச்சலாக முடிவெடுக்க வேண்டும்: நிகோலஸ் பர்ன்ஸ் - வாஷங்டன்,
அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் இந்தியா துணிச்சலான முடிவை எடுக்க வேண்டும் என அமெரிக்கத் தரப்பில் அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தைக் கவனித்துக்கொள்ளும் நிகோலஸ் பர்ன்ஸ் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் புதிய பாராளுமன்றம் 5-ந் தேதி கூடுகிறது - இஸ்லாமாபாத்,
பாகிஸ்தானில் புதிய பாராளுமன்றம் வருகிற 5-ந் தேதி கூடுகிறது. முஷரப் தன் ஆட்சியின் கடைசி ஆண்டில் நெருக்கடிநிலை காலத்தில் கொண்டுவந்த அரசியல் சட்டதிருத்தங்கள் ரத்து செய்யவேண்டும் என்று முஸ்லிம் லீக் கட்சி கோரி வருகிறது. அதன்படி அவை ரத்தாகுமா என்ற கேள்வி எழுந்து உள்ளது.

தென்னிந்திய மத்திய மின் தொகுப்பில் சிறிலங்காவை இணைக்க இந்தியா முடிவு - கொழும்பு,
சிறிலங்காவில் இந்தியா உற்பத்தி செய்யும் மின்சாரத்தினை தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் தென் மாநிலங்களுக்காக நடைமுறையில் உள்ள தென் மத்திய மின் தொகுப்புடன் இணைத்து அதிலிருந்து தென் இந்திய மாநிலங்களுக்கு வழங்குவது போல் சிறிலங்காவுக்கும் மின்சாரத்தை பகிர்ந்து வழங்க இந்தியா முடிவு செய்துள்ளது. இதற்கான ஒப்பந்தம் புதுடில்லியில் அடுத்த மாதம் கையெழுத்தாகவுள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலீபான்களுக்கு எதிரான யுத்தத்தில் இளவரசர் ஹாரி - லண்டன்,
இங்கிலாந்து இளவரசர் ஹாரி, கடந்த 10 வாரங்களாக ஆப்கானிஸ்தானில் தங்கி இருந்து தலீபான்களுக்கு எதிரான யுத்தத்தில் பங்கு கொண்டு வருகிறார்.

mgandhi
02-03-2008, 04:42 PM
3-3-2008

01. தேங்காய் எண்ணெயில் விமானம் பறந்தது
லண்டன் : உலகளவில்,முன்னணி விமான நிறுவனமான "வெர்ஜின் அட்லாண்டிக்' நிறுவனம், தேங்காய் எண்ணெயை எரிபொருளாக கொண்டு விமானத்தை இயக்கி உள்ளது.

02. ரெஸ்டாரன்ட்களில் "இவெயிட்டர்கள்' : தொடு திரையில் உணவு ஆர்டர் செய்யலாம்
டெல் அவிவ் : இனி ரெஸ்டாரன்ட் செல்லும் போது, உணவு வகைகளை ஆர்டர் எடுக்க அதை பரிமாறும் வெயிட்டர்களுக்காக காத்திருக்க தேவையில்லை.

03. இதுவரை 20 முறை; இன்னும் தீர வில்லை ஆசை : ஒவ்வொரு மாதமும் ரத்த தானம் செய்யும் நாய்

வாஷிங்டன் : இதுவரை 20 முறை ரத்ததானம் செய்ததற்காக, அமெரிக்க செஞ்சிலுவை சங்கம் சார்பில் கவுரவிக்கப்பட்டது.

04. சீக்கிய மாணவர் "டர்பன்' : ஆஸி., பள்ளியிலும் தடை
மெல்போர்ன் : பிரிட்டனை தொடர்ந்து, ஆஸ்திரேலியாவிலும், சீக்கிய மாணவர், பள்ளியில் "டர்பன்' (தலைப்பாகை) அணிந்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

05. "இன்டர்நெட்'டில் சட்டவிரோத பார்மசி : இந்தியருக்கு 30 ஆண்டு சிறை தண்டனை
நியூயார்க் : அமெரிக்காவில், "இன்டர்நெட்'டில் சட்டவிரோத மருந்துக்கடை நடத்திய இந்தியருக்கு 30 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

mgandhi
03-03-2008, 04:41 PM
4-3-2008
01. ஆப்கன் ராணுவ பணியிலிருந்து லண்டன் திரும்பினார் ஹாரி
லண்டன் :தலிபான்களுக்கு எதிராக பிரிட்டன் இளவரசர் ஹாரி போரிட்டு வருவதாக இணைய தளங்களில் செய்தி வெளியானது. இதையடுத்து, ஆப்கனில் ராணுவப் பணியில் ஈடுபட்டிருந்த ஹாரி, நேற்று லண்டன் திரும்பினார்.

02. மீண்டும் கார்கில் விவகாரம் துசி தட்டுகிறார் நவாஸ்
இஸ்லாமாபாத் :"பாகிஸ்தானில் புதிய அரசு பதவியேற்ற பிறகு, கார்கில் போர் தொடர்பாக அதிபர் முஷாரப்பின் பங்கு உள்ளிட்ட அனைத்தும் ஆராயப்படும்' என, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.

03. இந்திய வம்சாவளியினருக்கு அநீதி டத்தோ சாமுவேல் வாய்திறக்கிறார்
கோலாலம்பூர் :"மலேசியாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினருக்கு,போதிய வசதிகளை,அரசு செய்து தரவில்லை என்பது உண்மை தான்'என மலேசிய அமைச்சர் டத்தோ சாமுவேல் ஒப்புக் கொண்டுள்ளார்.

04. இந்தியாவின் நீலம் நதியை, பாக்., ஜீலத்தில் திருப்ப சீனா உதவிசீன கம்பெனிகளுக்கு ரூ. 600 கோடி கான்ட்ராக்ட்
பிஜிங் :இந்தியாவில் இருந்து, பாக்.,ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாயும் நீலம் நதிநீரை, பாகிஸ்தானில் ஓடும் ஜீலம் நதிக்கு திருப்பும், ரூ. 600 கோடி கான்ட்ராக்ட், இரு சீன நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

05. மனித வெடிகுண்டு தாக்குதலில் 40 பேர் பலி
இஸ்லாமாபாத் :பாகிஸ்தானில் பழங்குடியினர் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில், மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், 40 பேர் கொல்லப்பட்டனர்; ஏராளமானோர் படுகாயமடைந்தனர்.

mgandhi
04-03-2008, 04:45 PM
5-3-2008

01. சீக்கிய கடைசி மன்னரின் வாரிசு வெள்ளைக்காரர்: ரத்தத்தை பரிசோதித்த போது அபூர்வம் அம்பலம்
லண்டன்: பிரிட்டனில் வசிக்கும் 64 வயது வெள்ளைக்காரர், சீக்கிய கடைசி மன்னரின் வாரிசு என்ற திடுக்கிடும் தகவல் தெரிய வந்துள்ளது..

02. "சுதந்திரம் வேண்டும்!' ஸ்காட்லாந்து கேட்கிறது
லண்டன்: "எங்களுக்கு சுதந்திரம் வேண்டும்; அமைதியான முறையில் போராடி அதைப்பெறுவோம்' என்று, ஸ்காட்லாந்து பிரதமர் அலெக்ஸ் சால்மோன்ட் கூறியுள்ளார்.

03. சிரிப்பை அளக்க வருது டிஜிட்டல் கருவி
டோக்கியோ: "வாய் விட்டு சிரித்தால், நோய் விட்டு போகும்' என்று பெரியவர்கள் சொல்லி விட்டனர். ஆனால், எத்தனை பேர் சிரிக்கின்றனர்... அப்படியே சிரித்தாலும் வாயார, வயிறு குலுங்க சிரிக்கின்றனரா?

04. குழந்தைகளுக்கு செக்ஸ் கல்வி எந்த வயதில் துவக்கலாம்?
நியூயார்க்: குழந்தைகளுக்கு எந்த வயதில், "செக்ஸ் கல்வி' துவக்க வேண்டும் என்பது தொடர்பாக டாக்குமென்டரி சினிமா தயாரிக்கப்பட்டுள்ளது.

05. இரவில் மட்டும் பேய் நடமாடுவது ஏன்?
லண்டன்: பேய், ஆவி இருக்கிறதா என்ற வாதம் ஒருபுறம் தொடர்ந்து கொண்டிருக்க, இரவில் மட்டும் ஆவிகளையும், பேய்களையும் உணர முடிவது ஏன் என்பது தெரியவந்துள்ளது

06. வாழும் தெய்வமான சிறுமி பாதை மாறி ஓய்வு பெற்றார்
காத்மாண்டு: வாழும் தெய்வமாக, புத்த மத குருக்களாலும், இந்துக்களாலும் வழிபாடு செய்யப்பட்டு வந்த நேபாள சிறுமி, தனது குடும்பத்தினர் கோரிக்கையை ஏற்று, ஓய்வு பெற்றார்.

07. அமெரிக்கர்களை பின்னுக்கு தள்ளினர் இந்துக்கள்
நியூயார்க்: அமெரிக்காவில் உள்ள இந்துக்கள், கல்வி, வருமானத்தில், அமெரிக்கர்களை பின்னுக்கு தள்ளி விட்டனர்.

08. வளைகுடா மோகம் கலைகிறது: மாற்று வேலை தேடும் இந்தியர்கள்
துபாய்: வளைகுடா நாடுகளுக்கு சென்று வேலை செய்தால், கை நிறைய சம்பாதிக்கலாம் என்ற மோகம் கலைந்து வருகிறது.

09. பாக்.,கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு 35 ஆண்டு சிறைவாசம் உளவாளி என்று
சந்தேகிக்கப்பட்ட அப்பாவி இந்தியர் விடுவிப்பு
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக மரண தண்டனை விதிக்கப்பட்டு, 35 ஆண்டுகளாக சிறையில் இருந்த இந்தியர், காஷ்மீர் சிங் என்பவர் இன்று நாடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

mgandhi
02-04-2008, 05:56 PM
2-4-2008

01.குவைத்தில் வேலைக்கு போனால் அதிக பாதுகாப்பு தர புதிய ஏற்பாடு
துபாய் :குவைத்தில், சிக்கலின்றி வேலை பார்க்க, புதிய கான்டிராக்ட் நடைமுறைகள் அமலுக்கு வருகின்றன. குவைத்தும் இந்திய அரசும் இதற்கான ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக் கொண்டுள்ளன.

02. ஷாஜகான் உடைவாள் லண்டனில் ஏலம்!
லண்டன் : முகலாய சாம்ராஜ்ஜியத்தின் கடைசி மன்னனும், தாஜ் மகாலை கட்டியவருமான ஷாஜகான் உடைவாளை ஏலத்தில் விற்க லண்டன் ஏல நிறுவனம் முடிவு செய்துள்ளது.

03.லெனினின் சொந்த ஊரில் ஆங்கிலம் கற்பது கட்டாயம்
மாஸ்கோ :ரஷ்ய முன்னாள் அதிபரும், உலகளவில், கம்யூனிசம் பரவ காரணமாக இருந்தவருமான விளாடிமிர் லெனினின் சொந்த ஊர், ஆங்கில மயமாகிறது.

04.டாக்டரிடம் காட்டாமல், பிரார்த்தனை செய்ததால் சிறுமி பலி! சர்க்கரை நோய்க்கு மருந்து தராமல் ஜபம் செய்த தாய்
வெஸ்டன், அமெரிக்கா : சர்க்கரை நோயால் படுத்தபடுக்கையாகி விட்ட சிறுமியை டாக்டரிடம் அழைத்து செல்லாமல், ஜபம் செய்து கொண்டிருந்தார் தாய்; ஒரு மாத போராட்டத்துக்கு பின், ஆம்புலன்ஸ் வர ஒரு மணி நேரத்துக்கு முன், சிறுமி உயிர் பிரிந்தது.

05.ரிமோட் வேலையை செய்யும் ரோபோ ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் புதுமை

டோக்கியோ :"டிவி' ரிமோட்டை அமுக்கி, அமுக்கி அலுத்து விட்டீர்களா? இனி அதனுடன் சண்டை போட அவசியம் இல்லை.

06.பயங்கரவாதிகளை கண்டதும் ஓட்டம்; 50 பாக்.,போலீஸ் டிஸ்மிஸ்!

இஸ்லாமாபாத் :பயங்கரவாதிகளை கண்டதும் ஓட்டம் பிடித்து, பணிக்கே வராமல் இருக்கும் 50 போலீசாரை பாகிஸ்தான் அரசு "டிஸ்மிஸ்' செய்துள்ளது.

mgandhi
03-04-2008, 05:38 PM
4-4-2008

01. விலங்குகளை கொல்லும் பூங்கா;: ஜர்மனி பெண் எம்.பி.,புகார்
பெர்லின்: "வனவிலங்குப் பூங்காவில் இருந்து நுõற்றுக்கணக்கான விலங்குகள் கொல்லப்பட்டு, அவற்றின் தோல்கள் வெளிநாடுகளுக்கு கடத்தப்படுகின்றன'

02. இளம் பெண் துறவியாகிறார் இத்தாலி பெண்
வாட்டிகன் நகர்: எலும்பு புற்றுநோயால் உயிரிழந்த, ஆறரை வயது பெண் குழந்தை, உலகிலேயே மிகச் சிறிய பெண் துறவியாக அறிவிக்கப்பட உள்ளார்.

03. ஜாக் வேண்டாம்; ஜேம்ஸ் "ஓகே!'
லண்டன்: "ஒருவரின் பெயரைப் பொறுத்தே, அவரது அதிர்ஷ்டமும், துரதிர்ஷ்டமும் அமைகின்றன' என பிரிட்டன் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

04. கள்ளக்காதலில் ஈடுபட்டவர்கள் கல்லால் அடித்து கொலை
இஸ்லாமாபாத்: கள்ளக்காதலில் ஈடுபட்ட ஜோடியை, பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமிய பழங்குடி மக்கள், கல்லால் அடித்து கொன்றனர்

mgandhi
04-04-2008, 05:18 PM
5-4-2008

1- ஸ்கார்லெட் உடலில் 3வது முறையாக பிரேத பரிசோதனை
லண்டன்: கோவாவில், கற்பழித்து கொல்லப்பட்ட பிரிட்டன் இளம் பெண் ஸ்கார்லெட் உடலில், மூன்றாவது முறையாக நேற்று பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது.


2- மலேசிய தமிழர்களை விடுவிக்க எதிர்ப்பு
கோலாலம்பூர்: மலேசிய சிறையில் அடைக்கப்பட்டுள்ள, "இண்ட்ராப்' அமைப்பை சேர்ந்த தமிழர்கள் ஐந்து பேரை, விடுவிக்க கூடாது என, அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டில், அட்டர்னி ஜெனரல் தெரிவித்துள்ளார்.

3- போலி மத குரு மருத்துவமனையில் அனுமதி
பெக்காவோவ்: உலகம் அழியப் போகிறது எனக் கூறி, சீடர்களுடன், ஐந்து மாதங்களாக பதுங்கு குழியில் தங்கிருந்த போலி மத குரு, தலையில் ஏற்பட்ட கடுமையான காயத்தின் காரணமாக, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

4- கத்தோலிக்க கிறிஸ்துவர்களை விட முஸ்லிம் மக்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
ரோம்: உலகளவில், கத்தோலிக்க கிறிஸ்துவர்களை விட, முஸ்லிம் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என, வாட்டிகன் தெரிவித்துள்ளது.

5- ஆசிரியையை தாக்க திட்டம் : 9 வயது சிறுவர்கள் கைது
அட்லான்டா: வகுப்பு ஆசிரியரை தாக்க திட்டமிட்ட மாணவர்கள் ஒன்பது பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மூன்று பேர் சிறுவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்கள் அனைவரும் ஒன்பது வயதுக்கு <உட்பட்டவர்கள்.

6- அந்தஸ்து பட்டியலில் ரிலையன்ஸ், ஓ.என். ஜி.சி
நியூயார்க்: இந்தியாவின் ரிலையன்ஸ், ஓ.என்.ஜி.சி., உள்ளிட்ட 48 நிறுவனங்கள், உலகின் மிகச் சிறந்த நிறுவனங்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளன.

7- இந்தியாவுக்கு சீனா பாராட்டு

பீஜிங்: "தலாய்லாமாவை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம்' என, வலியுறுத்திய இந்தியாவுக்கு சீனா பாராட்டு தெரிவித்துள்ளது. .

mgandhi
05-04-2008, 05:32 PM
6-4-2008

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் நவாஸ் செரீப் காஷ்மீர் வருகிறார் - இஸ்லாமாபாத்,
காஷ்மீரில் செயல்படும் மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி, பாகிஸ்தான் சென்று இருக்கிறார்.


புனிதத்தலத்தை போர்க்களமாக்கும் சிங்கள அரசு: பா.நடேசன் குற்றச்சாட்டு - தமிழீழம்,
கிறிஸ்தவ மக்களின் புனிதத்தலமான மடு தேவாலயம் அமைந்துள்ள பகுதியை சிங்கள அரசு ஒரு போர்ப் பூமியாக மாற்றி வருகின்றது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் குற்றம் சாட்டியுள்ளார்.


எம்.பி.க்கள் விரும்பினால் முஷாரபை அதிபர் பதவியில் இருந்து நீக்கலாம்: சபாநாயகர் - இஸ்லாமாபாத்,
பெரும்பாலான எம்.பி.க்கள் விரும்பினால், அதிபர் முஷாரபை பதவி நீக்கம் செய்யலாம் என்று பாகிஸ்தான் தேசிய சபைத் தலைவர் ஃபெமிடா மிர்சா கூறினார்.


அடுத்த கட்ட பேச்சு குறித்து பாகிஸ்தானுடன் பிரணாப் ஆலோசனை - இஸ்லாமாபாத்,
மீண்டும் எந்தத் தேதியில் பேச்சுவார்த்தையைத் தொடரலாம் என்பது குறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குரேசியுடன் (Pakistan Foreign Minister Shah Mehmood Qureshi ) இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினார்.


திபெத் விவகாரத்தில் žனாவுக்கு ஆதரவு: அமெரிக்க மந்திரியிடம் கோரிக்கை - பீஜிங்,
திபெத் விவகாரத்தில் žனாவுக்கு ஆதரவு தரவேண்டும் அமெரிக்க மந்திரியிடம் žனா கோரிக்கை விடுத்தது.


இலங்கைக்கு 1 லட்சம் டன் அரிசி ஏற்றுமதி செய்ய இந்தியா ஒப்புதல் - கொழும்பு,
அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ள போதிலும், இலங்கைக்கு மட்டும் ஒரு லட்சம் டன் அரிசியை ஏற்றுமதி செய்ய இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது.


பாகிஸ்தான் அதிபர் முஷரப் žனாவில் 6 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் - இஸ்லாமாபாத், பாகிஸ்தான் அதிபர் முஷரப், புதிய அரசு பதவி ஏற்ற பிறகு முதல் முறையாக žனா செல்கிறார்.

mgandhi
06-04-2008, 06:15 PM
7-4-2008

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பெண்
தென் அமெரிக்காவில் உள்ள பராகுவே நாட்டு ஜனாதிபதி தேர்தல் வருகிற 20ந்தேதி நடக்கிறது. ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் பெண் வேட்பாளர் பலாங்கா ஒவெலர் மக்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்


113 வயது பாட்டி மரணம்
ஜப்பானின் அதிக வயதான பாட்டி ககுயமனதகா. 113 வயது வரை வாழ்ந்த இவர் நேற்று மரணம் அடைந்தார் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன் பொக்கை வாயுடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்தார் ..

லண்டனில் ரூ.16 கோடி ஹெராயன் பறிமுதல்: இந்தியர் உள்பட 3 பேர் கைது
லண்டன், கிழக்கு லண்டன் பகுதியில் இங்கிலாந்து போலீசார் நடத் திய சோதனையில் 350 கிலோ ஹெராயன் பறிமுதல் செய் யப்பட்டது. இது தொடர்பாக இந்தியாவைச் சேர்ந்த ஹர்மிந் தர் சானா மற்றும் பாகிஸ் ..சுதிப்கான், ஆலந்தை சேர்ந்த பேட்ரிக் ஆகியோர் கைதானார்கள்.

பிரான்சு அதிபர் மனைவியின் நிர்வாணப் படம் 10ந் தேதி ஏலம்
நிஹீயார்க்,பிரான்சு அதிபர் நிக்கோலஸ் சர்கோசி, கடந்த பிப்ரவரி மாதம் கர்லா புருனி என்ற மாடல் அழகியை திருமணம் செய்து கொண்டார். கர்லா புருனி, மாடலிங் தொழிலின் ஆரம்ப கட்டத்தில், 1993ம் ஆண்டு நிர்வாணமாக புகைப்படத்தை ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த கெர்ட் எல்பெரிங் என்பவர், தன்வசம் வைத்துள்ளார்.

இங்கிலாந்து ராணியின் கணவர் ஆஸ்பத்திரியில் அனுமதி
லண்டன், இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப், லண்டனில் உள்ள மன்னர் 7வது எட்வர்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு வயது 86. அவர் மார்பு தொற்று நோயால் அவதிப்பட்டு வருகிறார்.

கத்தார் நாட்டில் அமெரிக்க குண்டு வீச்சு விமானம் தீப்பற்றி கொண்டது
கத்தார், அமெரிக்காவின் பி1 ரக குண்டு வீச்சு விமானம், கத்தார் நாட்டில் உள்ள விமான தளத்தில் தரை இறங்கியது. அப்போது அது திடீரென தீப்பிடித்துக் கொண்டது. உடனடியாக அதில் இருந்த சிப்பந்திகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். ..

சீனாவில் நடைபெறும் ஒலிம்பிக் தொடக்க விழாவை புறக்கணிப்பேன் கனடா பிரதமர் அறிவிப்பு
டொரண்டோ, ஏப்.6சீனாவில் இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்நிலையில், சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டி தொடக்க விழாவில் கலந்து கொள்ள மாட்டேன் என்று கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் அறிவித்துள்ளார். ...

mgandhi
07-04-2008, 05:43 PM
8-4-2008

1-ஆப்கனில் நேட்டோ படை தாக்குதல்: 15 தாலிபான்கள் சாவு - காபூல்,
ஆப்கானிஸ்தானின் இருவேறு இடங்களில் ஆப்கானிஸ்தான் படைகளுடன் சேர்ந்து நேட்டோ படைகள் நடத்திய தாக்குதலில் தாலிபான் தீவிரவாதிகள் 15 பேர் கொல்லப்பட்டனர்.

2- அமெரிக்காவுடன் பனிப்போர் இல்லை புதின் அறிவிப்பு - புக்காரெஸ்ட்,
"அமெரிக்காவுடன் பனிப்போர் எதுவும் இல்லை' என்று ரஷ’ய அதிபர் புதின் அறிவித்தார்.

3- அணு ஆயுதத் தாக்குதல் நடத்த அல் கொய்தா திட்டம்: யு.எஸ். தகவல் - வாஷ’ங்டன்,
அமெரிக்காவை தாக்குவதற்காக, அணு ஆயுதத் தொழில் நுட்பத்தை அல் கொய்தா பயங்கரவாத அமைப்பு வாங்க விரும்பியது என்ற தகவலை அமெரிக்க உளவுத்துறை வெளியிட்டுள்ளது.

4- ஈராக்கில் 42 மாணவர்கள் கடத்தப்பட்டனர்
பாக்தாத்,
ஈராக்கில் மோசூல் அருகே உள்ள ஒரு கிராமத்தில் அந்த வழியாக சென்ற 2 பஸ்களை தீவிரவாதிகள் மறித்து நிறுத்த முயன்றனர்.

5- முஷாரபின் அதிகாரத்தைத் குறைக்க அரசியல் சட்டத்தில் திருத்தம் –
இஸ்லாமாபாத்,
பாகிஸ்தான் அதிபர் முஷாரபிடம் உள்ள பல முக்கிய அதிகாரங்களை குறைக்கும் வகையில் அரசியல் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டு வர அந்த நாட்டில் புதிதாக பொறுப்பேற்றுள்ள கூட்டணி அரசு முடிவு செய்துள்ளது.

6- திபெத் வளமாக இல்லை: žனா மீது தலாய் லாமா தாக்கு - தர்மசாலா,
திபெத்தில் மக்கள் வளமாக வாழ்வதாக žனா கூறுவது உண்மையல்ல என்பதை அங்கு நடக்கும் எதிர்ப்பு போராட்டங்கள் மூலம் தெளிவாகிறது என திபெத்தியர்களின் ஆன்மிகத் தலைவர் தலாய்லாமா கூறியுள்ளார்

mgandhi
08-04-2008, 05:13 PM
9-4-2008

01. பெனசிர் படுகொலை குறித்து விசாரிக்க புதிய விசாரணை கமிஷன் அமைக்க முடிவு
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனசிர் புட்டோ படுகொலை செய்யப்பட்டது குறித்து விசாரிக்க, புதிய விசாரணை குழுவை அமைக்க பாகிஸ்தான் மக்கள் கட்சி முடிவு செய்துள்ளது.02. பள்ளி குளியலறையில் குழந்தையை பெற்றெடுத்த மாணவி
ஹூஸ்டன் : பள்ளி மாணவிகள் கர்ப்பமாவதும், பெற்றொருக்கு தெரியாமல், குழந்தையை அழித்து விடுவதும், அமெரிக்காவில் அதிகரித்து வருகிறது.03. விடுதலை புலிகள் முகாம் மீது தாக்குதல்
கொழும்பு : நெடுஞ்சாலை துறை அமைச்சர் கொல்லப்பட்டதை அடுத்து, விடுதலைப் புலிகளின் தற்கொலை படை முகாம் மீது, இலங்கை போர் விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தின.04. ஹிலாரியின் உதவியாளர் பதவி விலகினார்
நியுயார்க் : அமெரிக்காவில், ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளரின் போட்டியில் இடம் பெற்றுள்ள ஹிலாரி கிளின்டனின் பிரசார அமைப்பாளர், அப்பதவியில் இருந்து விலகினார்.05." நாசா'விலும் ஆட்குறைப்பு : இந்தியர்கள் வேலை பறிபோகும்
நியூயார்க் : அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான "நாசா'விலும் ஆட்குறைப்பு அமலாகிறது.06. குடிகார தந்தைக்கு "கம்பெனி' கொடுத்தால் சம்பளம் * பாச மகனின் வினோத விளம்பரம்
லண்டன் : " பாருக்கு செல்லும் எனது தந்தைக்கு, "கம்பெனி' கொடுத்தால், மணிக்கு ஏழு பவுண்ட் ( ரூ.480) கொடுக்கப்படும்.07. இந்திய குழந்தையை தத்தெடுக்க பாப் இசை பாடகி மடோனா முடிவு
லண்டன் : பிரபல பாப் இசைப் பாடகி மடோனா, இந்திய குழந்தையை தத்தெடுக்க திட்டமிட்டுள்ளார்.உலக புகழ் பெற்ற பாப் இசைப் பாடகி மடோனா(49).08. அமெரிக்காவில் தளம் அமைத்துள்ள விடுதலைப் புலிகள்
வாஷிங்டன் : நிதி திரட்ட, விமான எதிர்ப்பு ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுதங்கள் வாங்க, விடுதலைப் புலிகள் அமைப்பினர், அமெரிக்காவில் தளம் அமைத்துள்ளது தெரிய வந்துள்ளது.09. ஹாலிவுட் "லவ் குரு' படம் : இந்து அமைப்புகள் எதிர்ப்பு
வாஷிங்டன் : இந்து மதத்தை கிண்டல் அடிக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட, ஹாலிவுட் படம்"லவ் குரு'வுக்கு, அமெரிக்காவில் உள்ள இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.10. சுற்றுலா பயணிகளால் அன்டார்டிகாவுக்கு ஆபத்து
லண்டன் : தென் துருவமான அன்டார்டிகாவுக்கு, சுற்றுலா பயணிகள் செல்வது, அதிகரித்துள்ளது.

mgandhi
09-04-2008, 05:42 PM
10-4-2008

01. பிரிட்டன் வீரர்களுக்கு மகாபாரதம் போதனை
லண்டன் : ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் செல்லும் பிரிட்டன் வீரர்களுக்கு, மகாபாரதம் கற்றுத் தரப்படுகிறது.02. புஷ்ஷுக்கு அடித்த "சல்யூட்' : சர்ச்சையில் ஆஸி., பிரதமர்
கேன்பெர்ரா : அமெரிக்க அதிபர் புஷ்ஷுக்கு அடித்த சல்யூட்டால் சர்ச்சையில் சிக்கியுள்ளார் ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ரூட்.03. விபத்தை காட்டிக்கொடுத்தது "கருப்பு பெட்டி' : சிக்கினார் இந்திய கோட்டீஸ்வரர் மகன்
லண்டன் : சிறுமியை நினைவிழந்த நிலைக்கு செல்ல காரணமான கார் விபத்தை ஏற்படுத்திய இந்திய கோட்டீஸ்வரர் மகனுக்கு, முதல் முறையாக கருப்புப்பெட்டி ஆதாரம் மூலம் தண்டனை வழங்கப்பட உள்ளது.04. இதோ ஒரு அதிசய கேமரா மனிதர் : ஒரே முறை பார்த்து வரைந்து தள்ளுகிறார்
லண்டன் : ஹெலிகாப்டரில் தேம்ஸ் நதியின் மீது ஒரு ரவுண்டு சுற்றி விட்டு தரை இறங்குகிறார் ஸ்டீபன் வில்ட்ஷைர். இறங்கியதும் ஓவியம் வரைய துவங்குகிறார். ஐந்து நாளில் முழு ஓவியம் தயாராகிறது.05. மனைவியை இழந்தால் மனம் உடையும் ஆண்கள்
லண்டன் : ஆண்களை விட பெண்கள் தான் விரைவில் இதயம் உடைந்து போய்விடுவார்கள் என்று கூறுவது உண்டு.06. அழிந்து வரும் அரிய வகை ஆமை : "வயாகராவுக்காக' அறுத்து கொலை
காசா : அழிந்து வரும் அரிய வகை ராட்சத கடல் ஆமையை பிடித்த பாலஸ்தீன மீனவர்கள், அதன் ரத்தம் மற்றும் இறைச் சிக்காக அதை கொன்றனர்.

mgandhi
10-04-2008, 06:20 PM
11-4-2008

01. நேபாள தேர்தல் பிரசாரத்தில் கலவரம்
காத்மாண்டு : நேபாள தேர்தல் பிரசாரத்தில் ஏற்பட்ட கலவரத்தில், கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.02. இந்தியா பாகிஸ்தான் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை?
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் புதிய ஆட்சி பதவியேற்றுள்ளதால், இந்தியாபாகிஸ்தான் இடையே நடைபெற்று வந்த நல்லுறவு பேச்சுவார்த்தைகள் மீண்டும் துவங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.03. "பிரிட்டனில் குடியேறியவர்களால் பலன் இல்லை' : இந்தியர்களை குறிவைத்து அறிக்கை
லண்டன் : "வெளிநாடுகளில் இருந்து பிரிட்டனில் குடியேறியவர்களால் எந்த பலனும் இல்லை; குடியேறுபவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும்' என்ற...04. 5,000 ஆண்டுக்கு முன் பூமியை தாக்கிய ராட்சத விண்கல் : கி.மு., 700வது நுõற்றாண்டு களிமண் சித்திர குறிப்பில் தகவல்
லண்டன் : பூமியில் 5,000 ஆண்டுக்கு முன் ராட்சத விண்கல் மோதியதற்கு, களிமண் சித்திர குறிப்பை ஆதாரமாக கண்டுபிடித்துள்ளனர் பிரிட்டன் விஞ்ஞானிகள்.05. ரூ. 28 கோடி செலவழித்தும் ஆஸி., போலீஸ் கோபம் அடங்கவில்லை! : ஹனீப் நடவடிக்கை பற்றி மீண்டும் விசாரணை
மெல்போர்ன் : பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக கைது செய்யப்பட்டு, குற்றம் நிரூபிக்கப்படாததால் விடுவிக்கப்பட்ட பெங்களூரு டாக்டர் முகமது ஹனீப் தொடர்பான விசாரணையில்...

mgandhi
11-04-2008, 05:45 PM
12-4-2008

01.சீனா சென்றார் முஷாரப்
இஸ்லாமாபாத் :பாகிஸ்தான் அதிபர் முஷாரப், ஆறு நாள் பயணமாக நேற்று சீனா புறப்பட்டுச் சென்றார்.02.மலேசிய இந்திய காங்., கட்சியில் அதிரடி மாற்றம்
சிங்கப்பூர் :தேர்தல் தோல்வியை அடுத்து, மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.03.குழந்தைகளை தனியே தவிக்கவிடும் பெற்றோருக்கு சிறை
சிட்னி :குழந்தைகளை கவனிக்காமல் நீண்ட நேரம் தவிக்க விடும் பெற்றோருக்கு இனி மூன்று ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்பட உள்ளது. இது இங்கல்ல; குவின்ஸ்லாந்தில்


04.இளவரசர் ஹாரியின் திருமண திட்டம் :காதலியின் பெற்றோருடன் பேச்சு
லண்டன் :பிரிட்டன் இளவரசர் ஹாரி, திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளார். இது குறித்து காதலியின் பெற்றோரிடம் அவர், நேரடியாக பேசியுள்ளார்05.ஸ்பூன்களை வைத்து சிறுவன் உலக சாதனை!
லண்டன் :ஸ்பூன்களை வைத்து உலக சாதனையை முறியடித்துள்ளான், பிரிட்டனை சேர்ந்த ஒன்பது வயது ஜோ அலிசான்.06.அமெரிக்க கண்டத்தில்4,000 ஆண்டு பழமையான நெக்லஸ் கண்டெடுப்பு
வாஷிங்டன் :பெரு நாட்டில், நான்காயிரம் ஆண்டு பழமையான தங்க நெக்லசை, அகழ்வாராய்ச்சியினர் கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்க கண்டத்தில், தங்கத்தை கவுரவ சின்னமாக கருதுவது என்ற பழக்கம், பல ஆண்டுகளுக்கு முன்பே இருந்துள்ளது இதன் மூலம் தெரிய வந்துள்ளது.

mgandhi
12-04-2008, 06:00 PM
13-4-2008

1* நேபாள காங்கிரசுக்கு முதல் வெற்றி - காத்மாண்டு,
நேபாள அரசியல் நிர்ணய சபைத் தேர்தலில் நேபாள காங்கிரஸ் கட்சிக்கு முதல் வெற்றிக் கிடைத்துள்ளது.


2*ஈரான் எரிவாயு திட்டம்: இந்தியா-பாகிஸ்தான் ஏப். 16-ல் பேச்சு - இஸ்லாமாபாத்,
ஈரானில் இருந்து பாகிஸ்தான் வழியாக குழாய் மூலம் எரிவாயு கொண்டுவரும் திட்டத்தில் இருநாடுகளுக்கிடையே நிலவும் கருத்து வேறுபாடு குறித்து மீண்டும் பேச்சு நடத்த இந்தியாவும் பாகிஸ்தானும் முடிவு செய்துள்ளன.


3*தலாய்லாமா அமெரிக்கா சென்றார் - வாஷ’ங்டன்,
திபெத்திய தலைவர் தலாய்லாமா 13 நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றார்.


4*வங்காளதேசத்தில் போலீசாருடன் நடந்த மோதலில் 100 பேர் காயம் - டாக்கா,
வங்காளதேசத்தில் பெண்களுக்கும் சொத்தில் சம உரிமை வழங்கும் சட்டம் கொண்டுவரப்பட இருக்கிறது.


5* ஸ்லோவோக்கியா நாடு சிறிலங்காவுக்கு 10 ஆயிரம் ஏவுகணைகள் விற்பனை - கொழும்பு,
சிறிலங்காவுக்கு 10,000 இராணுவ ஏவுகணைகளை ஸ்லோவோக்கியா விற்பனை செய்துள்ளதாக "உலகப் பாதுகாப்பு" அமைப்பின் ஆயுத வர்த்தக கண்காணிப்புக் குழு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது

mgandhi
14-04-2008, 06:10 PM
15-4-2007

1-ஈரான் மசூதியில் குண்டு வெடித்ததில் 9 பேர் பலி
டெக்ரான்,

ஈரான் நாட்டின் தெற்கு பகுதியில் ஷிராஸ் நகரில் உள்ள ஒரு மசூதியில் குண்டு வெடித்தது. இதில் 9 பேர் பலியானார்கள். 100க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.

2-குண்டு வைத்ததாக திபெத்தில் 6 புத்த சாமியார்கள் கைது
பீஜிங்,

திபெத்தியர்கள் மீது சீனா அடக்குமுறையை கையாண்டதால் இதை எதிர்த்து திபெத்தியர்கள் போராட்டத்தில் குதித்தனர். புத்த சாமியார்களும் இதில் பங்கேற்றனர்.திபெத்தில் சில இடங் களில் குண்டு வெடிப்புகளும் நடந்தன. இந்த


3-கென்யாவில் எதிர்கட்சிகளுடன் கூட்டணி ஆட்சி
நைரோபி,

கென்யாவில் எதிர் கட்சிகளுடன் கூட்டணி ஆட்சி அமைக்க ஆளுங் கட்சி முடிவு செய்துள்ளது. கென்யாவில் சமீபத்தில் அதிபர் தேர்தல் நடந்தது. இதில் எதிர்க்கட்சி வெற்றி பெற்றது.ஆனால் இதை ஆளுங் கட்சி ஏற்கவில்லை

4-தீவிரவாதிகளுக்கு ஆதரவு: ஈராக்கில் 1300 ராணுவ வீரர்கள் டிஸ்மிஸ்'
பாக்தாத்,

ஈராக்கில் புதிய அரசு ஏற்படுத்தப்பட்ட பிறகு சதாம் உசேன் ராணுவம் கலைக்கப்பட்டு புதிய ராணுவ படை, போலீஸ் படை உருவாக்கப்பட்டது. சதாம் உசேன் ராணுவத் தில் இருந்தவர்களும் இந்த படையில் இடம் இடம் பெற்று இருந்தனர்

5-பிரேசில் நாட்டில் பிரதீபா பட்டீலுடன் போட்டோ எடுக்க ஆர்வம்
சாபோலே,

ஜனாதிபதி பிரதீபா பட்டீல் லத்தீன், அமெரிக்க நாடுகளில் சுற்றுப் பயணம் செய்து வருகிறார்.அவர் தற்போது பிரேசில் நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு 5 நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்த விழாவில் ... ஊ

6-பாகிஸ்தானில் இருந்து காஷ்மீருக்குள் நுழைய 400 தீவிரவாதிகள் தயார் நிலை திடுக்கிடும் தகவல் ஜம்மு,

பாகிஸ்தானில் இருந்து காஷ்மீருக்குள் நுழைய 400 தீவிரவாதிகள் தயார் நிலையில் இருப்பதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.லஸ்கர்இதொய்பா, ஹிஸ்புல் முஜாகிதீன் உள்ளிட்ட தீவிரவாத இயக்கங்கள் காஷ்மீருக்கு சுதந்திரம் கோரி வன்செயல்களில் ஈடுபட்டு வருகின்றன.

mgandhi
16-04-2008, 06:16 PM
17-4-2008

1. சீனா நடத்தும் 'கலாசார படுகொலை': தலாய்லாமா கேட்கிறார் சுயாட்சி

வாஷிங்டன்: "திபெத்திற்கு அர்த்தமுள்ள சுயாட்சி தேவை' என்று திபெத்திய புத்தமதத் தலைவர் தலாய் லாமா கூறியுள்ளார். கடந்த சில நாட்களாக, உலகம் முழுவதும் திபெத்தியர் உரிமைப் போராட்டம் பற்றி பரவலாகக் கருத்து பேசப்படும் சூழ்நிலையில், திபெத் குறித்த தன் ...


2. சீட்டுக்கட்டில் வேதியியல் பாடம்: சிறுவன் திரட்டுகிறார் ரூ. 20 கோடி

நியூயார்க்: அமெரிக்காவில் வசிக்கும் இந்திய சிறுவன், தனது 14வது வயதிலேயே தொழிலதிபராகி உள்ளான். தனது வியாபாரத்துக்காக ரூ. 20 கோடி நிதி திரட்ட திட்டமிட்டுள்ளான். சிறுவன் அன்சுல் சமரின் பெற்றோர் அமெரிக்காவில் குடியேறி 21 ஆண்டுகளாகிறது. அன்சுல் சமர் ...


3. அர்ச்சகர்களுக்கு விசா நீட்டிப்பு: மலேசியாவின் அடுத்த மனமாற்றம்

கோலாலம்பூர்: மலேசியாவில் உள்ள இந்தியாவைச் சேர்ந்த அர்ச்சகர்கள், இசைக் கலைஞர்கள் மற்றும் சிற்பிகளின் விசாக்களை, அந்நாட்டு அரசு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. தேர்தல் தோல்விக்குப் பின் நடைபெறும் மனமாற்றங்களில் இதுவும் ஒன்று. மலேசியாவில் ...

4. ஸ்பெயின் அரசில் : ஆண்களை மிஞ்சிய பெண்கள்

மேட்ரிட்: ஸ்பெயின் நாட்டு அரசில் ஆண்களை மிஞ்சி விட்டனர் பெண்கள். ஆம்... ஆண் அமைச்சர்களை விட, பெண் அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஸ்பெயின் நாட்டில் சமீபத்தில் பொதுத் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில், ஏற்கனவே பிரதமராக இருந்த ஜோஸ் லூயிஸ் ...

5. இலங்கை அமைதி நடவடிக்கை: இந்தியாவுக்கு நார்வே அழைப்பு

ஓஸ்லோ: "இலங்கையில் அமைதி திரும்புவதற்கு இந்தியாவால் மிக முக்கிய பங்காற்ற முடியும்' என்று நார்வே கூறியுள்ளது. இது தொடர்பாக இலங்கைக்கான நார்வேயின் சிறப்பு தூதர் ஜான் ஷன்சென் பவுர் கூறியதாவது: எதிர்காலத்தில் இலங்கைக்கு இந்தியாவே மிக முக்கிய ...


6. விமானம் விழுந்து நொறுங்கியது: 70 பேர் பலி
ஏப்ரல் 16,2008,00:00 IST

கின்ஷாசா: காங்கோ நாட்டில், பயணிகள் விமானம் ஒன்று, மார்க்கெட் பகுதிக்குள் விழுந்து நொறுங்கியது. இதில், 70 பேர் உயிரிழந்தனர். ஆப்ரிக்க நாடான காங்கோவில் உள்ள கோமா என்ற இடத்தில் இருந்து அந்நாட்டின் தலைநகரான கின்ஷாசாவுக்கு, 70க்கும் மேற்பட்ட ...

mgandhi
17-04-2008, 06:02 PM
18-4-2008

1. மடோனா பாணி தத்தெடுப்பால் புது தலைவலி: ஆதரவற்றோர் காப்பகங்கள் அதிகரிப்பு


லண்டன்: மடோனா போன்ற பிரபலங்கள், ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுப்பதால், ஆதரவற்றோர் பிரச்னை முடிவுக்கு வராது; காப்பகங்கள் இன்னும் அதிகரிக்கத்தான் செய்யும். "பப்ளிசிட்டி'க்காக இப்படி தத்தெடுப்பது குறித்து மனோதத்துவ நிபுணர்கள் கவலை ...


2. கடன் வாங்கி கூலிப்படைக்கு கொடுத்து: கணவரை கொல்ல முயன்ற பெண் கைது


லண்டன்: வீட்டுக் கடன் வாங்கி, அந்தப் பணத்தை கூலிப்படைக்கு கொடுத்து, கணவனை கொல்ல முற்பட்ட பெண் கைது செய்யப்பட்டார். லண்டனின் தென்பகுதியில் உள்ள கென்லே மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜோ கெனிலி (வயது 44). இவரது கணவர் திமோதி. இருவருக்கும் கருத்து வேறுபாடு ...


3. அமெரிக்காவில் படிப்பு: மாணவர் தங்க கூடுதல் அனுமதி


வாஷிங்டன்: அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் அறிவியல், தொழில்நுட்பம், இன்ஜினியரிங், கணிதம் படிக்கும் இந்திய, வெளிநாட்டு மாணவர்கள், அங்கேயே தொடர்ந்து தங்கியிருந்து வேலை பார்க்கும் காலம் 12 மாதங்களில் இருந்து 29 மாதங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ...


4. முஸ்லிமாக மாற விரும்பினால் தகவல் கட்டாயம்: மாறுகிறது மலேசியா


கோலாலம்பூர்: மலேசியாவில், முஸ்லிமாக மதம் மாறும் முன், சம்பந்தப்பட்ட நபர், தனது குடும்பத்தினரிடம், அத்தகவலை தெரிவிக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்கி புது விதிமுறை கொண்டு வரப்பட உள்ளது. மலேசியாவில், முஸ்லிம் மக்களே பெரும்பான்மையினராக உள்ளனர். ...

mgandhi
18-04-2008, 05:41 PM
19-4-2008


1. வீராங்கனையை மணக்கிறார் அதிபர் புடின்

லண்டன் : ரஷ்ய அதிபர் புடின், பிரபல ஜிம்னாஸ்டிக் வீராங்கனையை திருமணம் செய்து கொள்ளப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ரஷ்ய அதிபர் புடினுக்கு (56), ஏற்கனவே திருமணமாகி விட்டது. அவரது மனைவி பெயர் லுட்மில்லா. வரும் மே மாதம்,அதிபர் பதவியில் ...

2. மலேசியாவில் தமிழ்பத்திரிகைக்கு தடை

கோலாலம்பூர் : மலேசியாவில், "மக்கள் ஓசை' தமிழ் நாளிதழ் வெளியிட, அந்நாட்டு அரசு தடை வித்துள்ளது. மலேசியாவில், " மக்கள் ஓசை' தமிழ் நாளிதழ், துவக்கத்தில், 15 ஆண்டுகளாக வார பத்திரிகையாக தான் வெளிவந்தது. பின் 2005ம் ஆண்டில், தினசரி நாளிதழாக ...

3-கத்தோலிக்க பள்ளிகளில் கிறிஸ்தவ விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்; போப் ஆண்டவர் வற்புறுத்தல்

வாஷிங்டன், போப் ஆண்டவர் பெனடிக் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வரு கிறார். வாஷிங்டனில் அவர் கத்தோலிக்க பல்கலைக்கழ கத்தில் உரையாற்றினார்.அப்போது அவர் கூறியதா வது:-ரோமன் கத்தோலிக்க பள்ளிகள் மற்றும் பல்கலைக் கழகங்கள்


4-ஈராக்கில் தற்கொலை தாக்குதல் ; சவ ஊர்வலத்தில் குண்டு வெடித்து 45 பேர் பலி

பாக்தாத், ஈராக்கில் அமெரிக்க படையை எதிர்த்து தீவிரவாதி கள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தி வருகிறார் கள். சன்னி, ஜியா முஸ்லிம் கள் இடையிலும் மோதல் உள்ளது.

5-9,550 ஆண்டுகளாக வளரும் உலகிலேயே வயதான மரம் சுவீடன் நாட்டில் உள்ளது.

வாஷிங்டன், உலகிலேயே மிகவும் வயதான மரம் சுவீடன் நாட்டில் தலர்னா மாகாணத்தில் உள்ள மலைப்பகுதியில் உள்ளது. இது ஒரு வகையான ஊசி இலை மரம் ஆகும்.

6-ஐக்கிய அரபு நாட்டுக்கு புதிய தலைநகரம்

துபாய், ஐக்கிய அரபு நாட்டின் தலைநகரான அபுதாபியில் மக்கள் நெருக்கடி, போக்குவரத்து நெருக்கடி அதிகம் இருப்பதால், புதிய தலைநகரம் உருவாக்கப்பட இருக்கிறது. இப்போது உள்ள அபுதாபி நகருக்கு அருகில் இருந்து 15 கி.மீ. தொலைவில் இது அமையும்

7-லாகூர் தொகுதியில் நவாஸ் ஷெரீப் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார்

இஸ்லாமாபாத், பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், முஸ்லிம் லீக் கட்சி தலைவருமான நவாஸ் ஷெரீப் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை. அவர்கள் மீது வழக்கு இருப்பதாக கூறி அதிபர் முஷரப் தடைபோட்டு உள்ளது

mgandhi
19-04-2008, 05:54 PM
20-4-2008

1. இந்தியாவின் உதவி : பிரசாண்டா ஆவல்

காத்மாண்டு : "நேபாள மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை, இந்தியா தொடர்ந்து வழங்க வேண்டும்'என நேபாள மாவோயிஸ்ட் தலைவர் பிரசாண்டா கூறினார். நேபாள பார்லிமென்ட் தேர்தலில், மாவோயிஸ்ட் அமைப்பு, பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றது. ...


2. ஈராக்கில் அமெரிக்காவுக்கு தோல்வி : அல் - குவைதா

துபாய் : ஈராக்கில், அமெரிக்கா படையெடுத்து ஐந்து ஆண்டுகள் நிறைவானதை, நினைவூட்டும் வகையில், அல்-குவைதா தலைவர் அய்மான் அல் - ஜவாகிரி ஆடியோ டேப்பை வெளியிட்டுள்ளார். அதில், " ஈராக் போரில், அமெரிக்காவுக்கு தோல்வியை தவிர வேறு எதுவும் ...


3. இந்தியா - மெக்சிகோ ஒப்பந்தம்

மெக்சிகோ சிட்டி : விமான போக்குவரத்து, எரிசக்தி ஆகிய துறைகள் தொடர்பாக, இந்தியா-மெக்சிகோ நாடுகளுக்கு இடையே, ஒப்பந்தம் கையெழுத்தானது. ஜனாதிபதி பிரதிபா, வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். மெக்சிகோ சென்ற அவருக்கு, சிறப்பான ...


4. புடின் மறுமணம் ஒரே நாளில் 'புஸ்'

மாஸ்கோ : ஜிம்னாஸ்டிக் வீராங்கனையை திருமணம் செய்து கொள்ளப் போவதாக வெளியான செய்தியை, ரஷ்ய அதிபர் புடின் மறுத்துள்ளார். ரஷ்ய அதிபர் புடின், ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற, ஜிம்னாஸ்டிக் வீராங்கனை அலினாவை, காதலித்து வருவதாக செய்திகள் ...

5. குலுக்கல் மூலம் எச் -1 பி விசா விண்ணப்பங்கள் தேர்வு

வாஷிங்டன் : இந்தியாவில் இருந்து எச்-1 பி விசாவுக்கு விண்ணப்பித்து இருப்போர், குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். அமெரிக்காவில் உள்ள பல்வேறு கம்ப்யூட்டர் நிறுவனங்கள், திறமை வாய்ந்தவர்கள் போதுமான எண்ணிக்கையில் இல்லாமல் ...

6. 10,000 மடங்கு வேகம் கொண்ட புது இன்டர்நெட் கண்டுபிடிப்பு

ஜெனீவா : இப்போதுள்ள பிராட் பேண்ட் இணைப்பை விட, 10 ஆயிரம் மடங்கு அதிவேகம் கொண்ட புது இன்டர் நெட் முறை கண்டுபிடிக் கப் பட்டுள்ளது; நொடிப் பொழுதில், சினிமா படத்தை "டவுண் லோடு' செய்யும். இன்டர்நெட்டில் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள பயன்படுவது ...

7. மெக்சிகோவில் ஜனாதிபதி பரபரப்பு

மெக்சிகோ : மெக்சிகோவில் நடந்த சம்பிரதாய வரவேற்பின்போது, கவனக்குறைவு காரணமாக ஜனாதிபதி பிரதிபா, தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தாமல் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பின், சுதாரித்துக் கொண்ட ஜனாதிபதி, மீண்டும் திரும்பி வந்து கொடிக்கு ...

mgandhi
20-04-2008, 05:30 PM
21-4-20081. ஜெட் விமான தயாரிப்பு: டாடாவின் அடுத்த இலக்கு

ரியோ- டி- ஜெனிரோ : இந்தியாவின் மிகப்பெரிய தொழில் நிறுவனமான, டாடா குழுமம், ஜெட் விமான தயாரிப்பில் ஈடுபட உள்ளது. இதற்காக, பிரேசிலை சேர்ந்த, எம்பரெர் நிறுவனத்துடன் பேசப்படுகிறது.


2. கிரண் பேடிக்கு கட்சிகள் அழைப்பு

டொரன்டோ : இந்தியாவின் முதல் பெண் போலீஸ் அதிகாரி கிரண் பேடிக்கு பல அரசியல் கட்சிகள், தங்கள் கட்சியில் சேரும்படி அழைப்பு விடுத் துள் ளன. பல பொறுப்புகளில் இருந்த கிரண் பேடி, பல சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்தார்.


3. 'அசிங்க' காபிக்கு விலை ரூ. 4,000

லண்டன் : காட்டுப் பூனை மலத்திலிருந்து தயாரிக்கப்படும், காபிக்கு, பிரிட்டனில் கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. ஒரு கப் காபியின் விலை, நான் காயிரம் ரூபாய் என் றாலும், ஏராளமானோர் அதை, ஆர்வத்துடன் குடிக்கின்றனர்.

4. அமெரிக்க பாதிரியார்கள் 'செக்ஸ்' மோசடியால் வருத்தமடைந்த போப்

வாஷிங்டன் : அமெரிக்காவில், கிறிஸ்துவ பாதிரியார்களின் "செக்ஸ்' மோசடியில் பாதிக்கப்பட்டவர்களை, போப் ஆண்டவர் 16ம் பெனடிக், நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களுக்காக பிராத்தனை செய்வதாகவும் உறுதி அளித்தார்.


5. ஊழியர்கள் இ-மெயிலை 'பாஸ்' பார்க்கலாம் : ஆஸ்திரேலியாவில் அமலுக்கு வருது சட்டம்

சிட்னி : ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர் களுக்கு வரும் தனிப்பட்ட இ-மெயிலை, அந்த நிறுவனத்தின், "பாஸ்' பார்க்கும் வசதியை அளிக்க ஆஸ்திரேலிய அரசு முடிவு செய்துள்ளது. ஆஸ்திரேலிய துணை பிரதமர் ஜூலியா கில்லார்டு கூறியதாவது


6. விவாகரத்தால் ஆண்டுக்கு ரூ.4.50 லட்சம் கோடி செலவு : இங்கல்ல அமெரிக்காவில்

நியூயார்க் : விவாகரத்து பெற்ற பெண் கள் மற்றும், திருமணமாகாமலேயே பிறக்கும் குழந்தைகளின் நலனுக்காக, அமெரிக் காவில் ஆண்டுதோறும் ரூ.4.50 லட்சம் கோடியை அரசு செலவிடுகிறது என, ஆய்வில் தெரிய வந்துள்ளது.


7. அணு ஆயுத ஏவுகணை : சோதித்தது பாகிஸ்தான்


இஸ்லாமாபாத் : அணு ஆயுதத்தை ஏந்திச் சென்று, 2,000 கி.மீ., தூரத்தில் உள்ள இலக்கை தாக்கும், ஷாகீன்-2 ஏவுகணை சோதனையை, பாகிஸ்தான் நேற்று நடத்தியது. ரகசியமான இடத்தில் நடந்த இந்த சோதனையில், ஷாகீன் ஏவுகணை, குறிப்பிட்ட தூரத்தில் உள்ள இலக்கை, தாக்கும்...


8. பழம் பெருமை பேசும் சீனாவில் கொடி கட்டி பறக்குது விபசாரம்

பீஜிங் : சீன தலைநகர் பீஜிங்கிலும், ஷாங்காய் நகரிலும், விபசார தொழில் கொடி கட்டி பறக்கிறது. இத்தொழிலில் பெண்கள் ஈடுபட, வறுமை காரணம் இல்லை; ஆடம்பர வாழ்க்கைக்கு தேவையான பணத்தை சம்பாதிப்பது தான் நோக்கம்

9. மகளை பார்க்க அனுமதியுங்கள் : சரப்ஜித் சிங் உருக்கமான கோரிக்கை

இஸ்லாமாபாத் : "எனது இளைய மகளை, இதுவரை பார்த்தது இல்லை; அவளை பார்க்க, எனக்கு அனுமதி அளிக்க வேண்டும்' என, தூக்கு தண்டனையை எதிர்நோக்கியுள்ள சரப்ஜித் சிங், பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். கராச்சி, லாகூர் ...


10. நோயாளி வயிற்றுக்குள் 'கிடுக்கி' : ரூ.80 லட்சம் கேட்டு வழக்கு

பெர்லின் : அறுவைச் சிகிச்சை மேற்கொண்ட போது, வயிற்றியில் 15 அங்குல கிடுக்கிகளை வைத்து தைத்த டாக்டர் மற்றும் மருத்துவமனை மீது பாதிக்கப்பட்டவர் 80 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு, வழக்குத் தொடர்ந்துள்ளார். ஜெர்மன் டியூஸ்பர்க் நகரை சேர்ந்தவர் ...

mgandhi
21-04-2008, 05:30 PM
22-4-2008

1. பிரதமர் பதவியேற்க சர்தாரி விருப்பம்

இஸ்லாமாபாத் : "அவசியம் ஏற்பட்டால், பிரதமராக பதவியேற்பேன்' என, பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் ஆசிப் அலி சர்தாரி கூறினார். பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இணைத் தலைவரும், முன்னாள் பிரதமர் பெனசிரின் கணவருமான ஆசிப் அலி சர்தாரி கூறியதாவது: ...


2. பாக்., தூதரை விடுவிக்க தலிபான்கள் நிபந்தனை

இஸ்லாமாபாத் : "ஆப்கானிஸ்தானுக்கான பாகிஸ்தான் தூதரை விடுவிக்க வேண்டும் எனில், தங்களின் தலைவர் ஒருவரையும் மற்றும் சில பயங்கரவாதிகளையும் விடுவிக்க வேண்டும்' என, தலிபான்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


3. நீர்வரத்து அதிகரித்து காணாமல் போன ஏரி

வால்டிவியா : திடீரென நீர்வரத்து அதிகரித்து, ஒரு கட்டத்தில் ஏரியே காணாமல் போகுமா? - இப்படி ஒரு அதிசய சம்பவம் சிலி நாட்டில் நடந்துள்ளது. தென் அமெரிக்காவில் உள்ள சிலி நாட்டின் தெற்கு பகுதியில், வால்டிவியா நகரையொட்டி, காசெட் ஏரி உள்ளது....


4. மது விடுதியில் போதையில் கும்மாளம் : வில்லியமின் பேன்ட் அவிழ்ந்தது

லண்டன் : மதுவிடுதியில் அளவுக்கு அதிகமான குடிபோதையில் இருந்த பிரிட்டன் இளவரசர் வில்லியமின் கால் சட்டை அவிழ்ந்து விழுந்து, அங்கிருந்தோரை திகைக்க வைத்தது. உறவினர் பீட்டரின் பிறந்த நாளுக்காக, பிரபல மதுவிடுதிக்கு இளவரசர்கள் வில்லியமும், ...


5. சர்க்கரை மூலம் காரையும் இயக்கலாம் : அமெரிக்க விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு

நியூயார்க் : காபியில் போடும் சர்க்கரை மூலம் காரை ஓட்டலாம்! என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? உண்மை தான். காரை இயக்க தேவைப்படும் ஹைட்ரஜன் எரிபொருளை, சர்க்கரையில் இருந்து உருவாக்கி, அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை புரிந்துள்ளனர். அமெரிக்காவில், ...


6. ஈராக்கில் அமெரிக்க படை தேர்தலுக்கு பின் வாபஸ் ஆகுமா?

: ஈராக்கில் இருந்து அமெரிக்கப்படை, அந்த நாட்டின் அதிபர் தேர்தலுக்கு பின் முழுமையாக வாபஸ் பெறப்படுமா? தேர்தல் பிரசாரத்தில் இந்த விவகாரம் கொடிகட்டிப் பறக்கிறது.அமெரிக்க அதிபர் தேர்தலில், ஆளும் குடியரசு கட்சி சார்பில் ஜான் ...7. தெருவில் கிடந்த 60 லட்சம் பணம்; உரியவரிடம் ஒப்படைத்த நல்லவர்

லாஸ்ஏஞ்சலஸ் : தெருவில் 60 லட்சம் ரூபாய் பணம் கிடப்பதை கண்டால், நீங்கள் என்ன செய்வீர்கள்? அதை எடுத்து வைத்துக் கொள்வீர்களா அல்லது போலீசிடம் ஒப்படைப்பீர்களா? இதே போன்ற ஒரு குழப்பம் அமெரிக்காவில் வசிக்கும் ஒருவருக்கும் ஏற்பட்டது.


8. காயமடையும் ராணுவ வீரர்களுக்கு செயற்கை காது, தோல் வளர்ப்பு

வாஷிங்டன் : போர்க்களங்களில் காயமடையும் ராணுவ வீரர்களுக்காக, செயற்கையாக காது, தோல் போன்ற உறுப் புகளை வளர்க்கும் ஆராய்ச்சி தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. விரைவில் இதில் வெற்றி கிடைக் கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள் ளது.


9. ஸ்பெயின் அரசில் ஆண்களை மிஞ்சிய பெண்கள்

மேட்ரிட் : ஸ்பெயின் நாட்டு அரசில் ஆண்களை மிஞ்சி விட்டனர் பெண்கள். ஆம்... ஆண் அமைச்சர்களை விட, பெண் அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஸ்பெயின் நாட்டில் சமீபத்தில் பொதுத் தேர்தல் நடந்தது.


10 வாரத்தில் 9 பேருக்கு மரண தண்டனை : முன்னிலை வகிக்கிறது கம்யூனிச சீனா


லண்டன் : "கடந்த ஆண்டில், உலகம் முழுவதும் உள்ள நாடுகளில், ஒவ்வொரு வாரமும் 24 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. 64 பேருக்கு தண்டனை அறிவிக்கப்பட்டது' என, சர்வதேச பொதுமன்னிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

mgandhi
22-04-2008, 05:06 PM
23-4-2008

1. 12 வயதில் ஆரம்பம்; 13ல், 4 பாட்டில் ஒயின்; 14ல் கல்லீரல் 'போச்ச்' : பள்ளி சிறுமியின் கதை

லண்டன்: லண்டன் பள்ளிச்சிறுமிக்கு "தண்ணி'யில் ஆர்வம்; 12 வயதில் "அடிக்க' ஆரம்பித்தாள்; 13 வயதில், ஒரு நாளைக்கு நான்கு பாட்டில் ஒயின் குடித்தாள்; 14 வயதில், அவர் கல்லீரல் செயலிழந்துவிட்டது; "இனி குடித்தால் சாவு தான்' என்று டாக்டர் கள் சொல்லி விட்டனர்...


2. உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை மூடும் நீச்சல் உடை

ஜகார்த்தா: உச்சந்தலை முதல், உள்ளங் கால் வரை மூடும், பெண் களுக்கான நீச்சல் உடை, இந்தோனேசியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் சிறுமிகள் மட்டுமே குளத்தில் நீச்சல் அடிக்கலாம். வயதுக்கு வந்து விட்டால் நீச்சலுக்கு போகஎஊடாது ...


3. பீச்களில் நாளுக்கு 30 லட்சம் கிலோ குப்பை குவிகிறதுவாஷிங்டன்: உலகம் முழுவதும் உள்ள கடற்கரைகளில் உணவுத் துகள்கள், சிகரெட் துண்டுகள் உட்பட, குப்பைகள் தேக்கம் அதிகரித்து வருகிறது; ஒரு நாளைக்கு 30 லட்சம் கிலோ குப்பைகள் தேங்குகின்றன

4. காட்டுத்தீயை அணைக்க 'வண்டு' ரோபோக்கள்

புதுடில்லி: ஜெர்மனி நாட்டில் காட்டுத்தீயை அணைக்க, ராட்சத வண்டு போன்ற தோற்றத் தில் உள்ள "ரோபோக்'களை பயன்படுத்த விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். ஆறு கால் ராட்சத வண்டு போன்ற தோற்றத்துடன் "ரோபோ'க்களை விஞ்ஞானிகள் வடிவமைத் துள்ளனர்.

5. காது கேளாதோருக்கு விமான பயணம் 'நோ': தனியார் நிறுவன செயல்பாட்டால் சர்ச்சை

கேன்பெரா: ஆஸ்திரேலியாவில் உள்நாட்டு விமான போக்குவரத்து சேவையில் ஈடுபட்டுள்ள ஒரு விமான நிறுவனம், காது கேளாதோரை தனியாக விமானத்தில் அனுமதிக்க முடியாது என்ற விதிமுறையை பின்பற்றி வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

mgandhi
24-04-2008, 05:27 PM
25-4-2008

1. உலகின் பழமையான மரம் கண்டுபிடிப்பு


ஸ்டாக்ஹோம் : நார்வேயையும், சுவீடனையும் பிரிக்கும் மலைபிரதேசங்களில் "ஸ்ப்ரூஸ்' என்ற மரங்கள் உள்ளன. இதிலுள்ள, ஒரு மரத்தின் வயது 8000 ஆண்டுகள் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதுவே, உலகின் மிக பழமையான மரமாக கருதப்படுகிறது. அமெரிக்காவின் ...

2. ஸ்பெயின் ராணுவ அமைச்சராக கர்ப்பிணிப்பெண்


மேட்ரிட் : ஸ்பெயின் நாட்டின் ராணுவ அமைச்சராக ஒரு கர்ப்பிணிப்பெண் நியமிக்கப் பட்டுள்ளார். இங்கு சமீபத்தில் நடந்த தேர்தலை அடுத்து, சோஷலிச அரசு பதவியேற்றுள்ளது; பிரதமராக ஜோஸ் லூயிஸ் ரோட்ரிக்ஸ் சபாடெரோ பதவியேற்றார். அவருடன் எட்டு ...

3. ரஷ்யாவில் மீண்டும் யோகாவுக்கு மவுசு!


மாஸ்கோ : கம்யூனிச அரசால் தடை செய்யப்பட்ட இந்திய யோகா பயிற்சி, ரஷ்யாவில் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்து விட்டது. ரஷ்யாவின் அதிபராக, லியோனித் பிரஷ்னேவ் இருந்தபோது, இந்திய யோகாவுக்கு தடை போட்டார். அப்போது, மாஸ்கோவில் உடல் கல்வி ஆய்வு நிலையம் ...

4. நீதிபதிகளை மீண்டும் சேர்க்க மசோதா ரெடி


இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில், அவசர நிலை பிரகடனப்படுத்தப் பட்ட போது, அனைத்து நீதிபதிகளும், அதிபர் முஷாரப் முன்னிலையில், மீண்டும் உறுதிமொழி எடுத்து கொண்டனர். இவ்வாறு உறுதிமொழி எடுக்காத சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி இப்திகார் சவுத்ரி உட்பட ...


5. கடல்நீர் மட்டம் 20 செ.மீ., உயர்வு


லிவர்பூல் : "கடந்த 2 ஆயிரம் ஆண்டுகளில் கடலின் நீர்மட்டம் 20 செ.மீ., உயர்ந்துள்ளது. இந்த நூற்றாண்டின் முடிவில், 0.8 முதல் 1.5 மீட்டர் வரை உயரலாம்' என, லிவர்பூல் நகரைச் சேர்ந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அவர்கள் மேலும் கூறியதாவது: கடல் மட்டம் ...

mgandhi
25-04-2008, 05:45 PM
26-4-2008

1- ஈரான் விஷயத்தில் இந்தியாவை வற்புறுத்தவில்லை: அமெரிக்கா
வாஷ’ங்டன், ஈரான் விஷயத்தில் இந்தியாவை வற்புறுத்தவில்லை என மத்திய மற்றும் தெற்காசிய பிராந்தியத்துக்கான அமெரிக்க அமைச்சர் ரிச்சர்ட் பவுச்சர் தெரிவித்தார்.

2-பாகிஸ்தான் ஜெயிலில் சரப்ஜித்சிங்கை, மனைவி மகள்கள் சந்தித்தனர்
லாகூர், பாகிஸ்தான் ஜெயிலில் இருக்கும் தூக்கு தண்டனை கைதியான சரப்ஜித்சிங்கை, அவருடைய மனைவி, மகள்கள் நேற்று சந்தித்து பேசினார்கள். 18 ஆண்டுகளுக்குப் பிறகு, சரப்ஜித்சிங்குடன் குடும்பத்தினர் சந்தித்த காட்சி மிகவும் உருக்கமாக அமைந்தது.

3-பாகிஸ்தானில் போர் நிறுத்தம் செய்ய தீவிரவாதிகள் தலைவர் உத்தரவு
பெஷாவர், பாகிஸ்தான் புதிய அரசாங்கம் பேச்சுவார்த்தை தொடங்கி இருப்பதால், அந்த நாட்டில் தாக்குதல் நடத்துவதை கைவிட்டு, போர் நிறுத்தம் செய்யும்படி பாகிஸ்தான் தலீபான் இயக்கத்தலைவர் பைதுல்லா மெசூத் தன் இயக்கத்தினரை கேட்டுக்கொண்டு இருக்கிறார்.

4-இலங்கையில் பலியான சிங்கள படையினரின் எண்ணிக்கை 176 ஆக அதிகரிப்பு
தமிழீழம், இலங்கையில் பலியான சிங்கள படையினர் 176 பேர் கொல்லப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

5- ஐ.நா.பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு இடம்: இங்கிலாந்து பிரதமர்
லண்டன், ஐ.நா.பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து வழங்கவேண்டும் என்றும் ஜி-8 எனப்படும் பணக்கார நாடுகள் குழுவிலும் இந்தியா சேர்த்துக்கொள்ளப்படவேண்டும் என்றும் இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரவுன் வலியுறுத்தி இருக்கிறார்.

6- தலாய்லாமாவுடன் பேச்சு நடத்த தவறினால் மோசமான விளைவுகள் ஏற்படும்: žசினாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
வாஷ’ங்டன், திபெத் பிரச்சினை தொடர்பாக தலாய்லாமாவுடன் žசினா பேச்சுவார்த்தை நடத்த தவறினால் மோசமான விளைவுகள் ஏற்படும் என்று žசினாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்து உள்ளது

mgandhi
26-04-2008, 06:57 PM
27-4-2008

1. கொழும்பில் குண்டுவெடிப்பு 16 பேர் பலி


கொழும்பு : இலங்கை தலைநகர் கொழும்பில் நேற்று பஸ்சில் குண்டு வெடித்தது. இதில் 16 பேர் பலியாயினர். 40 பேர் படுகாயமடைந்தனர். கொழும்பில் மாலை நேர கூட்ட நெரிசலின் போது இந்த சம்பவம் நிகழ்ந்தது


2. தமிழர்களின் அப்பீல் மனுவை நிராகரித்தார் மலேசிய மன்னர்கோலாலம்பூர் : மலேசியாவில், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, தமிழர்கள் ஐந்து பேரின், அப்பீல் மனுக்களை அந்நாட்டு மன்னர் நிராகரித்து விட்டார்.


3. சரப்ஜித் சிங்குக்கு கருணை கிடைக்க வாய்ப்புஇஸ்லாமாபாத் : பாகிஸ்தானில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்தியர் சரப்ஜித் சிங்குக்கு, கருணை கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தூக்கு தண் டனை விதிக்கப்பட்ட கைதிகள் அனைவருக்கும், ஆயுள் தண்டனையாகக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது ...4. தனிப்பெரும்பான்மையில் மாவோயிஸ்டுகள் வெற்றி

காத்மாண்டு : நேபாள தேர்தலில் மாவோயிஸ்டுட்கள் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றனர். நேபாளத்தில் 240 ஆண்டு மன்னராட்சியை முடிவுக்கு கொண்டு வர, 10 ஆண்டுகளாக, மாவோயிஸ்டுகள் பயங்கரவாதத்தில் ஈடுபட்டனர்.


5. ஜனாதிபதியின் பாதுகாப்பு அதிகாரியிடம் திருட்டு


கேப் டவுன் : ஜனாதிபதி பிரதிபா பாட்டீலின் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின் போது சென்றிருந்த மூத்த போலீஸ் அதிகாரியிடமிருந்த பணப்பை திருட்டு போனது. இதில் ரூ.40 ஆயிரம் இருந்தது.

mgandhi
27-04-2008, 05:48 PM
28-4-2008

1. விண்வெளியில் உயிரினம் இருக்கலாம்; புத்திசாலித்தனம் இருக்காது

வாஷிங்டன் : விண்வெளியில் உயிரினங்கள் உண்டா? - இந்த கேள்வியை பல நூற் றாண்டகளாக மனிதன் கேட்டு வருகிறான். பிரபல விண்வெளி விஞ்ஞானி ஸ்டீபன் ஹாகிங்கிடம் இந்த கேள்வியை கேட்ட போது, "விண்வெளியில், முதிர்ச்சி பெறாத உயிரினம் இருக்கலாம்; ஆனால், அந்த உயிரினத்திர்குகு புத்திசாலித்தனம் இருக்காது ...


2. மடோனா பாணி தத்தெடுப்பால் புது தலைவலி : ஆதரவற்றோர் காப்பகங்கள் அதிகரிப்பு


லண்டன் : மடோனா போன்ற பிரபலங்கள், ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுப்பதால், ஆதரவற்றோர் பிரச்னை முடிவுக்கு வராது; காப்பகங்கள் இன்னும் அதிகரிக்கத்தான் செய்யும். "பப்ளிசிட்டி'க்காக இப்படி தத்தெடுப்பது குறித்து மனோதத்துவ நிபுணர்கள் கவலை தெறிவித்தார் ...3. காது கேளாதோருக்கு மறுப்பு : விமான நிறுவனத்தால் சர்ச்சை


கேன்பெரா : ஆஸ்திரேலியாவில் உள்நாட்டு விமான போக்குவரத்து சேவையில் ஈடுபட்டுள்ள ஒரு விமான நிறுவனம், காது கேளாதோரை தனியாக விமானத்தில் அனுமதிக்க முடியாது என்ற விதிமுறையை பின்பற்றி வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
4. பயனுள்ள ராட்சத 'ட்ரெட்மில்' : விஞ்ஞானிகள் வடிவமைப்புலண்டன் : பல வகையிலும் பயன்தரும் வகையில் 25 "டிரெட்மில்'களை ஒன்றாக சேர்த்து, ராட்சத "ட்ரெட்மில்'லை ஐரோப்பிய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இதற்கு, "சைபர் கார்பெட்' என்று பெயர். இப்போது உள்ள "டிரெட்மில்'களை இணைத்து, 15 க்கு , 18 அடி உள்ள வகையில் பிர்மான்ட டிரேட்மில் அமைக்கப் பட்டுள்ளது ஒரே நேரத்தில் பலர் இதில் நடக்கலாம்


5. 43 வயது காதலியை கரம் பிடிக்கிறார் ஜெர்மன் மாஜி பிரதமர்


பெர்லின் : ஜெர்மன் முன்னாள் பிரதமர் ஹெல்மட் கோல், மைக் ரிச்டர் என்ற பெண்ணை காதலித்து வருகிறார். இருவரும், விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளனர். ஜெர்மன் நாட்டின் முன்னாள் பிரதமர் ஹெல்மட் கோல். தற்போது இவருக்கு வயது 78. இவரது மனைவி, 2001ல் இறந்தார்6. ஒரே பிரசவத்தில் 4 குழந்தை :மூன்றுக்கு ஒரே உருவ அமைப்பு


டவுசன் (மேரிலாந்து) : குழந்தை இல்லாத தம்பதிக்கு ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் பிறந்தன. அவற்றில் மூன்று ஒரே முக, உருவ ஒற்றுமையுடன் உள்ளன.
7. திபெத் ரயில் பாதை : நேபாளம் வரை நீட்டிக்க முடிவு

காத்மாண்டு : உலகின் மிக உயரமான ரயில்பாதையான சீனா-திபெத் ரயில் பாதையை, நேபாள எல்லை வரை நீட்டிக்க, சீன அரசு முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்தை நேபாளம் வரவேற்றுள்ளது.


8. துபாயில் காயமடைந்த இந்திய மாடல் அழகிக்கு இலவச சிகிச்சை


துபாய் : துபாயில், மோட்டார் சைக்கிள் விபத்தில் கடும் தீக்காயம் அடைந்த இந்திய பெண்ணுக்கு, இலவச சிகிச்சை அளிக்க அமெரிக்க முகச் சீரமைப்பு அகடமி மருத்துவமனை முன்வந்துள்ளது. இந்தியாவை சேர்ந்தவர் நிர்மலா(25).இந்தியாவில் மாடல் அழகியாக உள்ளார்.


9. துபாயில் வாடகை அதிகரிப்பு : நிறுவனங்கள் தவிப்பு


துபாய் : துபாயில் வர்த்தக வளாக கட்டடங்களின் வாடகை 54 சதவீதம் அதிகரித்திருப்பதால், பல்வேறு நிறுவனங்களும் அங்கிருந்து வெளியேறும் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.


10. பள்ளி வேன் பூட்டப்பட்டதால் இந்திய குழந்தை மரணம்


துபாய் : ஐக்கிய அரபு எமிரேட்டில், பள்ளி வேனுக்குள் பூட்டப்பட்ட, கேரளாவைச் சேர்ந்த, நான்கு வயது ஆண் குழந்தை, மூச்சு திணறி உயிரிழந்தது. கேரளாவைச் சேர்ந்தவர் ஷெபின் ஸ்ரீதர். அபுதாபியில் பணிபுரிந்து வருகிறார். இவரது நான்கு வயது ஆண் குழந்தைக்கு இப்படி நடந்ந்து


11. பாகிஸ்தானில் இந்து மக்கள் பீதி


கராச்சி : பாகிஸ்தானில் முஸ்லிம் மதத்தை அவமதிக்கும் வகையில் பேசியதாக, இந்து மதத்தை சேர்ந்த இளைஞர் கொலை செய்யப்பட்டார். இதனால், அவரது குடும்பத்தினர் மற்றும் இந்து மதத்தினரிடையே பீதி நிலவுகிறது.

பென்ஸ்
27-04-2008, 06:03 PM
13-4-2008

1* நேபாள காங்கிரசுக்கு முதல் வெற்றி - காத்மாண்டு,
நேபாள அரசியல் நிர்ணய சபைத் தேர்தலில் நேபாள காங்கிரஸ் கட்சிக்கு முதல் வெற்றிக் கிடைத்துள்ளது.


20-4-2008

1. இந்தியாவின் உதவி : பிரசாண்டா ஆவல்

காத்மாண்டு : "நேபாள மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை, இந்தியா தொடர்ந்து வழங்க வேண்டும்'என நேபாள மாவோயிஸ்ட் தலைவர் பிரசாண்டா கூறினார். நேபாள பார்லிமென்ட் தேர்தலில், மாவோயிஸ்ட் அமைப்பு, பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றது. ...


27-4-2008
4. தனிப்பெரும்பான்மையில் மாவோயிஸ்டுகள் வெற்றி

காத்மாண்டு : நேபாள தேர்தலில் மாவோயிஸ்டுட்கள் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றனர். நேபாளத்தில் 240 ஆண்டு மன்னராட்சியை முடிவுக்கு கொண்டு வர, 10 ஆண்டுகளாக, மாவோயிஸ்டுகள் பயங்கரவாதத்தில் ஈடுபட்டனர்.


28-4-2008
7. திபெத் ரயில் பாதை : நேபாளம் வரை நீட்டிக்க முடிவு

காத்மாண்டு : உலகின் மிக உயரமான ரயில்பாதையான சீனா-திபெத் ரயில் பாதையை, நேபாள எல்லை வரை நீட்டிக்க, சீன அரசு முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்தை நேபாளம் வரவேற்றுள்ளது.


பார்த்தீர்களா காந்தி...
நேப்பாள் , நிலத்தால் சூழ்ந்த நாடு, அது இந்தியாவை நம்பி இருந்தது... உறவு நல்லா இருந்தது.. மாவோயிஸ்டுட்கள் வந்தவுடன் கதை மாறுவதை... சீனா இதில் ஆதாயம் தேடுகிறது.... அவர்களுக்கு கிடைக்கும்... இந்தியாவுக்கு தொந்தரவுதான்...

mgandhi
27-04-2008, 07:45 PM
பார்த்தீர்களா காந்தி...
நேப்பாள் , நிலத்தால் சூழ்ந்த நாடு, அது இந்தியாவை நம்பி இருந்தது... உறவு நல்லா இருந்தது.. மாவோயிஸ்டுட்கள் வந்தவுடன் கதை மாறுவதை... சீனா இதில் ஆதாயம் தேடுகிறது.... அவர்களுக்கு கிடைக்கும்... இந்தியாவுக்கு தொந்தரவுதான்...

தகவலுக்கு நன்றி பென்ஸ்

mgandhi
28-04-2008, 05:59 PM
29-4-2008


2*தென்கொரியாவில் ஒலிம்பிக் ஜோதி: வடகொரியர் எதிர்ப்பு

சியோல், தென்கொரியாவுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை ஒலிம்பிக் ஜோதி கொண்டு செல்லப்பட்டது. இதற்கு தென்கொரியாவில் வசிக்கும் வடகொரிய அகதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

2*சென்னை கம்ப்யூட்டர் என்ஜினீயர் அமெரிக்காவில் தற்கொலை

நியூஜெர்சி, சென்னையைச் சேர்ந்த கம்ப்யூட்டர் என்ஜினீயர் வேலை இழந்து, தங்க இடமும் இல்லாததால் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் அமெரிக்காவில் பாலத்திலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

3* முகமாலை களத்தில் அடிவாங்கிய 53 ஆவது படையணியின் தளபதி பதவி நீக்கம்

கொழும்பு, வட போர்முனையான முகமாலை களமுனையில் கடந்த புதன்கிழமை சிறிலங்கா இராணுவம் சந்தித்த பேரிழப்பைத் தொடர்ந்து 53 ஆவது படையணியின் கட்டளை அதிகாரி பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

4* பெரும் பணக்காரர் பட்டியலில் லட்சுமி மிட்டல் முதலிடம்

லண்டன் : பிரிட்டனின் மிகப் பெரிய கோடீஸ்வரர்கள் பட்டியலில், பிரபல உருக்காலை அதிபர் லட்சுமி மிட்டல், தொடர்ந்து நான்காவது ஆண்டாக முதல் இடத்தில் உள்ளார்.

5*'குளோனிங்'கில் பிறந்த நாய்களுக்கு மோப்ப பயிற்சி

சியோல் : உலகில் முதன் முறையாக, சுங்கத்துறையில் "குளோனிங்' நாய் களை தென் கொரியா சேர்க்க உள் ளது. இந்த நாய்களுக்கு இப்போது மோப்ப பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. உடலில் உள்ள "செல்'லில் இருந்து செயற்கையாக உருவாக்குவது தான், "குளோனிங்' முறை.


6* நேபாளத்தில் இனி காபிடலிசம் : மவோயிஸ்ட் தலைவர் உறுதி

காத்மாண்டு : நேபாளத்தில் மாவோயிஸ்டுகள் தலைமையிலான ஆட்சி முடிவாகி விட்டது. ஆட்சி துவங்கும் போதே , "காபிடலிசம்' எனும் முதலாளித்துவக் கொள்கையைப் பின்பற்ற முடிவு செய்து விட்டனர்.


7* ஆடையை ஊடுருவி, உரித்து காட்டும் ஸ்கேனர்

நியூயார்க் : ஆடையை ஊடுருவி, உடலின் வளைவு, நெளிவுகளை அப்பட்டமாக காட்டும் நவீன ஸ்கேனர்கள், அமெரிக்க விமான நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ளன. பயங்கரவாதிகளின் கொடூர செயல்களால், விமான பயணம் பாதுகாப்பாற்றதாகி வருகிறது. இதை தடுக்க, நவீன ஸ்கேனர்கள், அமெரிக்க விமான நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ளன


8* 27 பாட்டில் ஒயின் விலை 2 கோடி ரூபாய்

லண்டன் : அபூர்வமாக கிடைக்கும் பழமையான ஒயின் வாங்குவதற்கு இரண்டு கோடி ரூபாய் செலவு செய்துள்ளார் லண்டன் கோடீஸ்வரர்! பல ஆண்டுக்கு முன் தயாரிக்கப்பட்டு, சேமித்து வைத்து, பின்னர் விற்கப்படுவது, "ஆன்டிக் ஒயின்' என, அழைக் கப்படுகிறது.9* இண்ட்ராப் தலைவர்கள் கைது: மலேசிய அரசு பிடிவாதம்

கோலாலம்பூர் : "இண்ட்ராப் தலைவர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள, உள்நாட்டு தேசிய பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்ய முடியாது' என, மலேசிய அரசு தெரிவித்துள்ளது.

mgandhi
02-05-2008, 05:29 PM
3-5-2008

1. உலகின் வயது குறைந்த பேராசிரியை அமெரிக்காவின் 19 வயது அலியா!


நியூயார்க் : உலகின் மிக வயது குறைந்த கல்லூரி பேராசிரியையாக, அமெரிக்காவை சேர்ந்த 19 வயது அலியா சாபுர் தேர்வு செய்யப்பட்டு, கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.


2. ரயில் டிக்கெட் வாங்க பணம் இல்லை : மாஜி பிரதமர் பிளேருக்கு தர்மசங்கடம்


லண்டன் : பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டோனி பிளேர், ரயில் பயணத்தின் போது டிக்கெட் வாங்க பணம் இல்லாமல் தர்மசங்கடத்துக்கு ஆளானார்.

3. 'மலேசியா மதச்சார்பற்ற நாடு' என்ற இந்திய பிரமுகருக்கு கொலை மிரட்டல்!


கோலாலம்பூர் : "மலேசியா மதச்சார்பற்ற நாடு என்று சொன்ன இந்திய அரசியல் தலைவர் ஒருவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.


4. நேபாளத்தில் கூட்டணி ஆட்சி : ஆலோசனை கூறுகிறார் யெச்சூரி


காத்மாண்டு : நேபாளத்தில் மாவோயிஸ்டுகளின் தலைமையில் புதிய கூட்டணி அரசு பதவி யேற்கிறது. இதற்காக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி காத்மாண்டு சென்றுள்ளார்.
மேலும்
5. பாகிஸ்தானில் வலுவாக வளர்கிறது அல்-குவைதா


வாஷிங்டன் : "பாகிஸ்தானில், 2007ம் ஆண்டு ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின் போது, அங்கு தனது ஆயுத பலத்தை மீண்டும் அல்-குவைதா பெருக்கிக் கொண்டது.


6. செல்வாக்கு மிக்க தலைவர்களில் சோனியா, டாடா, தலாய் லாமா


நியூயார்க் : உலகில், அதிக செல்வாக்கு மிக்க 100 தலைவர்கள் பட்டியலை, "டைம்' பத்திரிகை வெளியிட்டுள்ளது. இதில், காங்கிரஸ் தலைவர் சோனியா, டாடா குழும தலைவர் ரத்தன் டாடா, திபெத் மத தலைவர் தலாய் லாமா உள்ளிட்டவர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.


7. நேபாளத்தில் உணவு பற்றாக்குறை : அரிசி, கோதுமை ஏற்றுமதிக்கு தடை


காத்மாண்டு : உணவு பற்றாக்குறை அபாயத்தை கருத்தில் கொண்டு, அரிசி மற்றும் கோதுமை ஏற்றுமதிக்கு நேபாள அரசு தடை விதித்துள்ளது.

8. ஈரானில் நிலநடுக்கம் : 100 பேர் காயம்


டெக்ரான் : ஈரானில் நேற்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. தலைநகர் டெக்ரானிலிருந்து 320 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள போரோஜர்ட் பகுதியில், 4.7 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் காணப்பட்டது. இந்த நிலநடுக்க பாதிப்பால், 100 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.


9. குண்டு வெடிப்பில் இருவர் பலி


கொழும்பு : இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பில் இரண்டு ராணுவ வீரர்கள் பலியானார்கள்.


10 பிரிட்டனில் அரிசிக்கு தட்டுப்பாடு : ரேஷன் கியூவில் வாங்கும் பரிதாபம்


லண்டன் : சர்வதேச அளவில் கடுமையான பற்றாக்குறை ஏற்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், பிரிட்டனில் வர்த்தகர்கள் அதிக கையிருப்பு வைப்பதைத் தடுக்கவும், பற்றாக்குறை பீதியைத் தடுக்கும் வகையில், ரேஷன் முறையில் அரிசி விற்பனை

mgandhi
03-05-2008, 06:08 PM
4-5-2008

1. விமான விபத்தில் சூடான் ராணுவ அமைச்சர் பலி

கார்ட்டூம் : விமான விபத்தில் தெற்கு சூடான் நாட்டின் ராணுவ அமைச்சர் உட்பட 23 பேர் பலியாயினர்.

2. ஜனநாயக குடியரசாகும் நேபாளம்: யெச்சூரி பேட்டி

காத்மாண்டு : புதிய அரசியலமைப்புச் சட்டத்தை விரைவாக உருவாக்குவதன் மூலம், நேபாளம் விரைவில் ஜனநாயக குடியரசு நாடாக வேண்டும் என இந்தியா விரும்புவதாக, மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி கூறியுள்ளார்.

3. செக்சியான பிரா வடிவமைப்பு திருட்டு சொத்தா? : அமெரிக்க கோர்ட்டில் வழக்கு

நியுயார்க் : அமெரிக்காவில், "மிகவும் செக்சியான பிரா' என்று விளம்பரப்படுத்தி, விற்பனை செய்யப்படும் பிராவின் வடிவமைப்பு, தனது சொத்துரிமை என, பெண் ஒருவர், வழக்கு தொடுத்துள்ளார்.

4. மற்றவர்களை புகழ்ந்து பேசுவது ஏன்? : ஜப்பான் ஆய்வில் புது தகவல்

டோக்கியோ : "நமக்கு நற்பெயர் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே, மற்றவர்களை புகழ்ந்து பேசுகிறோம்'என, ஜப்பான் நாட்டில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5. முஷாரப் ஆதிக்கம் குறைகிறது : நீதிபதிகள் மீண்டும் நியமனம்

இஸ்லாமாபாத் : "பதவி நீக்கம் செய்யப்பட்ட நீதிபதிகளை, மீண்டும் பதவியில் அமர்த்த, பாகிஸ்தான் அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அரசின் இந்த முயற்சிக்கு முட்டுக் கட்டை போட, அதிபர் முஷாரப் முயற்சிகள் பலிக்கவில்லை.

6. கொலையில் முடிந்த கிரிக்கெட் : இந்திய வாலிபருக்கு 7 ஆண்டு ஜெயில்

துபாய் : கிரிக்கெட் விளையாட்டில் ஏற்பட்ட பிரச்னையால், வாலிபரைக் கொலை செய்த இந்தியருக்கு குவைத் கோர்ட்டில் ஏழு ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.

7. இந்திய கைதி சரப்ஜித் சிங்கின் தூக்கு தண்டனை திடீர் நிறுத்தம்

லாகூர் : "பாகிஸ்தான் சிறையில் உள்ள இந்திய தூக்கு தண்டனை கைதி சரப்ஜித் சிங்கை தூக்கில் போடுவதை, மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்குமாறு அரசு உத்தரவிட்டுள்ளதாக' சிறைத்துறை அதிகாரி தெரிவித்தார்

mgandhi
05-05-2008, 12:22 PM
5-5-2008

1- வேறு கிரகத்துப் பெண் பூமிக்கு வருகையா?

மெக்சிகோசிட்டி, பறந்து செல்லும் பெண் உருவம் ஒன்று மெக்சிகோ நாட்டில் படம் பிடிக்கப்பட்டுள்ளது. இதனால் வேறு கிரகத்துப் பெண் பூமியில் நடமாடுவதாக பீதி ஏற்பட்டுள்ளது.

2- மியான்மரில் நர்கீஸ் புயல் தாக்குதல்: 400 பேர் பலி

யங்கூன், மியான்மர் நாட்டில் நர்கீஸ் புயல் தாக்கியது. இதில் 400 பேர் பலியானார்கள். 2 முக்கிய நகரங்களில் 75 சதவீத கட்டிடங்கள் தரைமட்டமாகின.


3-துருக்கி விமானத் தாக்குதலில் 150 குர்திஷ் தீவிரவாதிகள் பலி - அங்காரா,

துருக்கி நாட்டு போர் விமானங்கள், ஈராக்கில் குர்திஷ் பகுதிக்குள் ஊடுருவி, அந்த நாட்டில் மறைந்து இருந்த குர்திஷ் தீவிரவாதிகளின் மறைவிடங்கள் மீது குண்டுகளை வீசி தாக்கின. இதில் 150 தீவிரவாதிகள் பலியானார்கள்.

4-வேகத்தில் முடிந்தது தலாய்லாமா - žனா பேச்சு - பெய்ஜிங்,

தலாய் லாமாவின் பிரதிநிதிகளுடன் சீன அதிகாரிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்திய பேச்சு எந்த முடிவும் எட்டப்படாமல் சில மணி நேரத்தில் முடிவுக்கு வந்தது.

5-குவாம் தீவில் ஓபாமா வெற்றி - ஹகாந்தா (குவாம்)

குவாம் தீவில் நடந்த அதிபர் தேர்தல் வேட்பாளருக்கான பிரைமரி வாக்கெடுப்பில் பராக் ஓபாமா, 7 வாக்குகள் வித்தியாசத்தில் ஹ’ல்லாரி கிளிண்டனை தோற்கடித்தார்.

6- குண்டு வெடிப்பில் ஈராக் அதிபர் மனைவி உயிர் தப்பினார்

பாக்தாத், ஈராக் அதிபர் ஜலால் தலாபானியின் மனைவி ஹெரோ இப்ராகிம் அகமது.உயிர் தப்பினார்

7- கருணாரத்னம் அடிகளாரின் படுகொலையைக் கண்டித்து கனடாவில் ஆர்ப்பாட்டம்

கனடா, சிறிலங்காப் படையினரின் படுகொலை செய்யப்பட்ட வடக்கு - கிழக்கு மனித உரிமைகள் செயலகத்தின் இயக்குநர் கருணாரத்னம் அடிகளாரின் படுகொலையினைக் கண்டித்து கனடாவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

8- சிறிலங்காவின் கவசப்படையை எமது கவசப்படையாக மாற்றுவோம்: கேணல் தீபன்

தமிழீழம்,சிறிலங்காவின் கவசப்படையை எமது கவசப்படையாக மாற்றுவோம் என்று கேணல் தீபன் கூறியுள்ளார்

mgandhi
05-05-2008, 05:28 PM
6-5-2008

1. போதை கடத்தல் ஆசாமி கொலம்பியாவில் வேட்டை

பக்கோடா : கொலம்பிய தலைநகரமாகிய பக்கோடாவில் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த சகோதரர்களில் ஒருவரை போலீசார் சுட்டுக் கொன்றனர்.


2. பெண் எம்.பி., உட்கார்ந்த நாற்காலியை முகர்ந்து பார்த்த எதிர்க்கட்சி தலைவர்

மெல்போர்ன் : சக பெண் எம்.பி., உட்கார்ந்த நாற்காலியை முகர்ந்து பார்த்ததாக, ஆஸ்திரேலிய எதிர்க்கட்சித் தலைவர் டிரோய் பஸ்வெல் ஒப்புக்கொண்டுள்ளார்.

3. நேபாளத்தில் முதன் முறையாக 'ஹோமோ' எம்.பி., தேர்வு

காத்மாண்டு : இந்து நாடு என்று பிரகடனப் படுத்தப்பட்ட நேபாளத்தில், மன்னராட்சி நடந்து வந்தது. ஆனால், இடதுசாரி மாவோ கட்சி உட்பட சில கட்சிகள், ஜனநாயக ஆட்சி கோரி போராடி வந்தன. இதையடுத்து, மன்னராட்சி நீக்கப்பட்டு, தேர்தல் நடந்தது.


4. போதை கடத்தலுக்கு மர்ம ரேடியோவில் விளம்பரம்

கவுதமாலா சிட்டி : போதை கடத்தலுக்கு மர்ம ரேடியோவை போதை கடத்தல் கும்பல்கள் பயன்படுத்தி வருகின்றன; போதை கடத்தலுக்கு மாஜி ராணுவத்தினருக்கு ரேடியோ மூலம் அழைப்பும் விடுக் கப்படுகிறது.


5. பெண்ணுரிமை பேசியவருக்கு ஈரானில் கசையடி

டெஹ்ரான் : பெண்ணுரிமைக்காக போராடிய ஒரு பெண்ணுக்கு ஈரானில் கசையடியும், ஆறு மாத சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.ஈரான் நாட்டில், பெண்களுக்கு பல கட்டுப்பாடுகள் உள்ளன.

7. ஆபாச வெப்சைட் பார்த்தவருக்கு பதவி இறக்கம்

டோக்கியோ : ஜப்பானை சேர்ந்த அரசு ஊழியர், அலுவலக கம்ப்யூட்டரில் ஆபாச இணைய தளங்களை பார்த்ததால், பதவி இறக்கம் செய்யப்பட்டார்.

8. பாக்., பிச்சைக்காரர்கள் நூதனமாக பணம் பறிப்பு

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் பிச்சைக்காரர்கள் பணம் பெறுவதற்கு நூதன வழியை பின்பற்றத் துவங்கி உள்ளனர். கடவுளின் பெயரால் மொபைல் போன்களில் தர்மம் கேட்கின்றனர். இதை தவிர்க்க முடியாமல், அத்தொகையை மற்றவர்கள் செலுத்துகின்றனர்.

mgandhi
06-05-2008, 05:40 PM
7-5-20081. பாகிஸ்தான் இடைத்தேர்தலில் சர்தாரி போட்டியிடவில்லை

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இணை தலைவரும், படுகொலை செய்யப் பட்ட பெனாசிர் பூட்டோவின் கணவருமான ஆசிப் அலி சர்தாரி அந்த நாட்டில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் போட்டியிட மாட்டார் என்று கூறப்படுகிறது.

2. 560 கோடி மோசடி முயற்சி: லண்டனில் இந்தியர் கைது

லண்டன்: வங்கியில் 560 கோடி ரூபாய் மெகா மோசடி முயற்சியில், இந்தியாவை சேர்ந்த ஒரு ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். பிரிட்டனில் எசெக்ஸ் பகுதியில் உள்ள எச்.எஸ்.பி.சி.,வங்கியில் ஊழியராக இருப்பவர் ஜக்மீத் சன்னா; வயது 25.

3. ஆட்டோ ஓர்க் ஷாப்பாக மாறிவிட்டது: பாகிஸ்தானில் புராதன இந்து கோயில்

கராச்சி: பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரில் உள்ள பழமை வாய்ந்த, கட்டடக் கலை சிறப்பு வாய்ந்த "ரட்டன் டால்கா' என்ற இந்து கோவில், இப்போது ஆட்டோ ரிப்பேர் செய்யும் பட்டறையாக மாறியுள்ளது.

4. பெண்களுக்கு கட்டுப்பாடு: மலேசிய அரசு பணிந்தது

கோலாலம்பூர்: வெளிநாடுகளுக்கு செல்லும் மலேசிய பெண்களுக்கு, கட்டுப்பாடுகள் விதிக்கப் போவதாக செய்திகள் வெளியானது. பெண்கள் அமைப்புகள், எதிர்ப்பு தெரிவித்ததால், அந்த திட்டத்தை மலேசிய அரசு கைவிட்டுள்ளது.

5. கிறிஸ்தவரான எழுத்தாளருக்கு ஆபத்து

வாடிகன் சிட்டி: எகிப்து நாட்டை சேர்ந்த சர்ச்சைக்கிடமான, எழுத்தாளர் மாக்தி ஆலம். முஸ்லிம் மதவாதத்தை எதிர்த்து, 55 வயதான இவர் எழுதி வந்தார்; இதனால், பலரின் எதிர்ப்புக்கு ஆளானார். சமீபத்தில் இவர் கிறிஸ்தவராக மதம் மாறினார்;

6-நேபாளத்தில் மாவோயிஸ்ட் தலைவர் மகள் எம்.பி.யாக நியமனம்

காத்மாண்டு, நேபாள நாட்டில் மாவோயிஸ்டு கட்சி தலைவர் பிரசாந்தாவின் 2-வது மகள் ரேணு தகால் எம்.பி.யாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

7- எதிர்க்கட்சி தலைவர்களை கொல்ல சதி: ஜிம்பாப்வே ஆளும் கட்சி மீது புகார்

டர்பன், தமது உயர்தலைவர்களை கொல்ல அதிபர் ராபர்ட் முகாபே தலைமையிலான ஆளும் கட்சி (ஜானு பிஎப்) சதி செய்வதாக ஜிம்பாப்வே நாட்டின் முக்கிய எதிர்க்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

அனுராகவன்
07-05-2008, 12:44 AM
நன்றி மோகன் காந்தி அவர்களே!!

mgandhi
07-05-2008, 06:17 PM
நன்றி மோகன் காந்தி அவர்களே!!
மிக்க நன்றி அனு

mgandhi
07-05-2008, 06:17 PM
8-5-2008

1- அமெரிக்கா - ரஷ’ய அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம்

மாஸ்கோ-அமெரிக்கா-ரஷ’யா நாடுகள் இடையே அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் நேற்று கையெழுத்தாகின.

2- இந்தோனேசியாவில் நிலச்சரிவில் சிக்கி 12 பேர் சாவு

ஜகார்தா- இந்தோனேசியாவில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர்.

3- சிறிலங்காவின் நாடாளுமன்றம் ஒத்திவைப்பு

கொழும்பு- சிறிலங்காவின் நாடாளுமன்றத்தினை அந்நாட்டின் அதிபர் மகிந்த ராஜபக்ச ஒரு மாத காலத்திற்கு ஒத்திவைத்துள்ளார்.

4- பெட்ரோல் விலை உயர்வுக்கும் இந்தியா தான் காரணம்: அமெரிக்கா

வாஷ’ங்டன்- உலக அளவில் உணவுப் பொருட்களின் விலை ஏற்றத்துக்கு இந்தியா தான் காரணம் என்று சொன்ன அமெரிக்கா, பெட்ரோல் விலை உயர்வுக்கும் இந்தியா தான் காரணம் என்று கூறி உள்ளது.

5 மன்னாரில் படையினரின் முன்நகர்வுகள் முறியடிப்பு: 9 படையினர் பலி

சிறிலங்கா- மன்னாரில் சிறிலங்காப் படையினரின் இரு முன்நகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளன.

6- நவாஸ் ஷெரீப் இடைத்தேர்தலில் போட்டியிட மாட்டார்

இஸ்லாமாபாத்-பாகிஸ்தானில் விரைவில் நடக்க இருக்கிற இடைத்தேர்தலில் முஸ்லிம்லீக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரீப் போட்டியிடுவதில்லை என்று முடிவு எடுத்து இருக்கிறார்.

mgandhi
08-05-2008, 06:57 PM
9-5-2008

1. ரஷ்யாவின் பிரதமராக புடின் பதவியேற்புமாஸ்கோ : ரஷ்யாவின் பிரதமராக,விளாடிமிர் புடின், நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். ரஷ்ய அதிபராக இருந்த, புடினின் பதவிக்காலம் முடிவுக்கு வந்தது. இதையடுத்து, புடினின் ஆதரவாளர் மெட்வதேவ், அடுத்த அதிபராக தேர்வானார்....2. 'ஹட்ப் - 8' ஏவுகணை : சோதித்தது பாகிஸ்தான்இஸ்லாமாபாத் : அணு ஆயுதங்களை தாங்கி சென்று, 350 கி.மீ., தூரத்தில் உள்ள இலக்கை தாக்கும், "ஹட்ப்-8' ஏவுகணை சோதனையை, பாகிஸ்தான் நேற்று நடத்தியது. கடந்த சில மாதங்களாகவே, பாகிஸ்தான், தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.3. பிரிட்டனில் இந்திய மாணவி படுகொலையில் ஒருவர் கைது : உயிருக்கு போராடிய மற்றொரு மாணவருக்கு தீவிர சிகிச்சைலண்டன் : பிரிட்டனில், இந்திய மாணவி கொலை செய்யப்பட்டது தொடர்பாக, ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆந்திரா, விஜயவாடாவைச் சேர்ந்தவர் ஜோதிர்மயி (23). பிரிட்டனில் உள்ள வோல்வர்ஹேம்டன் பல்கலையில், சுகாதார அறிவியல் பாடப் பிரிவில், முதுகலை பட்டதாரி4. புலி ஆதரவாளர்கள் நான்கு பேர் பிரிட்டனில் கைதுலண்டன் : விடுதலைப் புலி ஆதரவாளர்கள் நான்கு பேர், பிரிட்டனில் கைது செய்யப்பட்டுள்ளனர். விடுதலைப் புலிகளுக்காக, லேப்-டாப், கம்ப்யூட்டர், டார்ச் லைட், ரேடியோ சாதனங்கள் உள்ளிட்ட கருவிகளை வாங்கத் திட்டமிட்ட, நான்கு பேரை, பிரிட்டன் போலீசார் கைது செய்தனர்

அனுராகவன்
08-05-2008, 11:49 PM
நன்றி மோகன் காந்தி அவர்களே!!

mgandhi
09-05-2008, 06:31 PM
நன்றி மோகன் காந்தி அவர்களே!!
மிக்க நன்றி அனு

mgandhi
09-05-2008, 06:36 PM
10-5-2008


பாகிஸ்தான் ஹட்ப்-8 ஏவுகணை சோதனை நடத்தியது -

இஸ்லாமாபாத், நேற்று நிலத்திலும், கடலிலும் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்கக்கூடிய ஹட்ப்-8 என்ற ஏவுகணையை சோதனை நடத்தியது. இது 350 கி.மீ.தூரம் சென்று தாக்கக்கூடியது ஆகும்.

ஐசிசி பதவியை தூக்கியெறிந்தார் காவஸ்கர்

துபாய், ஐசிசி கிரிக்கெட் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து இந்திய முன்னாள் கேப்டன் காவஸ்கர் விலகியுள்ளார்.

சர்தாரியை, நவாஸ் ஷெரீப் லண்டனில் சந்தித்து பேசினார்

லண்டன், பாகிஸ்தான் ஆளும் கூட்டணியை சேர்ந்த மக்கள் கட்சி தலைவர் ஆசிப் சர்தாரியும், முஸ்லிம்லீக் கட்சி தலைவர் நவாஸ் ஷெரீப்பும் லண்டனில் சந்தித்தார்கள்.

இங்கிலாந்தில் ஆந்திர பெண் கொலையில் இந்திய வாலிபர் கைது

- லண்டன், மே. இங்கிலாந்தில் ஆந்திர பெண் கொலையில் இந்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

சிறிலங்கா இராணுவத் தளபதியின் பாகிஸ்தான் பயணம் வெற்றிகரமாக முடிந்ததாம் -

இஸ்லாமாபாத், மே. பாகிஸ்தானுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா இராணுவத்தின் தளபதி சரத் பொன்சேகா பாகிஸ்த்தான் அரசுடன் மேற்கொண்டு வரும் பேச்சுக்கள் வெற்றியளித்துள்ளதாக கொழும்பிலிருந்து வெளிவரும் "டெய்லி மிரர்" ஆங்கில நாளேடு தெரிவித்துள்ளது.

mgandhi
11-05-2008, 05:39 PM
12-5-2008

1. பில்லினர்கள் நிறைந்த நகரங்களில் மும்பைக்கு 7வது இடம்

நியூயார்க் : உலகில்,100 கோடி டாலருக்கு அதிகமான சொத்து உள்ளோர் வசிக்கும் நகரங்களில், மும்பைக்கு ஏழாவது இடம் கிடைத்துள்ளது. அமெரிக்காவின் வர்த்தக பத்திரிகையான போர்ப்ஸ்,

2. மியான்மருக்கு அமெரிக்கா உதவி

யாங்கூன் : "நர்கீஸ்' புயலால் பாதிக்கப்பட்ட மியான்மருக்கு, அமெரிக்க ராணுவ விமானம் நிவாரணப் பொருட்கள் கொண்டு செல்ல, அந்நாட்டு ராணுவ அரசு அனுமதி அளித்துள்ளது. உலக நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி,

3. நடன மாதுக்கள் நடத்தும் கூட்டுறவு நடன விடுதி

சான்பிரான்சிஸ்கோ : அமெரிக்காவில், பல்வேறு விடுதிகளில், ஆடை அவிழ்த்து, கவர்ச்சி நடனமாடும் பெண்கள் ஒன்று சேர்ந்து, கூட்டுறவு முறையில், புதிய கிளப் உருவாக்கி உள்ளனர். அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில்,

4. முஸ்லிமாக மாறிய பவுத்த பெண் : மீண்டும் மதம் மாற அனுமதி

கோலாலம்பூர் : முஸ்லிம் மதத்துக்கு மாறிய பெண், மீண்டும் தனது தாய் மதத்துக்கு செல்ல மலேசிய மத கோர்ட் அனுமதி அளித்துள்ளது. முஸ்லிம்கள் நாடான மலேசியாவில், முஸ்லிம்கள் வேறு மதத்துக்கு மாறுவது மிக அரிதாகவே அனுமதிக்கப்படுகிறது.

5-நேபாள பிரதமருடன் மாவோயிஸ்டுகள் சந்திப்பு

காத்மாண்டு, :நேபாள பிரதமரும், நேபாள காங்கிரஸ் கட்சித் தலைவருமான கிரிஜா பிரசாத் கொய்ராலாவை மாவோயிஸ்ட் தலைவர்கள் நேற்று வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினர்.

6- திருகோணமலை துறைமுகத்தில் சிங்கள ராணுவத்தின் கப்பல் மூழ்கடிப்பு

திருகோணமலை, :திருகேணமலை துறைமுகத்தில் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் ஏற்றப்பட்ட நிலையில் சிறிலங்காப் படையினரின் வழங்கல் கப்பல் இன்று அதிகாலை 2:23 மணியளவில் தாக்கி மூழ்கடிக்கப்பட்டுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

7-மண்டேலா மீதான தடையை அகற்ற யு. எஸ்.ல் ஓட்டெடுப்பு

வாஷ’ங்டன்:தென்னாப்பிரிக்காவில் இனவெறி ஆட்சி இருந்தபோது அதை எதிர்த்து போராடிய ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி பயங்கரவாத இயக்கமாக அமெரிக்காவால் அறிவிக்கப்பட்டது.

mgandhi
12-05-2008, 06:10 PM
13-5-2008

1-ஒபாமாவுக்கு மேலும் ஒரு வெற்றி

வாஷ’ங்டன்-அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக்கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை தேர்ந்து எடுப்பதற்கான தேர்தலில் ஒபாமா வெற்றி பெற்று வருகிறார்.

2- அமெரிக்காவில் சாலை விபத்தில் 6 இந்தியர்கள் பலி

வாஷ’ங்டன்-அமெரிக்காவில் சுற்றுலா சென்ற இந்தியர்கள் 6 பேர் சாலை விபத்தில் பலியானார்கள்.

3-நேபாள மாவோயிஸ்ட் தலைவருடன் இந்திய தூதர் பேச்சு

காத்மாண்டு, மே-நேபாளத்தில் ஆட்சியைப் பிடித்துள்ள மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பிரசந்தாவை அந் நாட்டுக்கான இந்தியத் தூதர் ராகேஷ் சூத் சந்தித்துப் பேசினார்.

4-இலங்கை தேர்தலில் ராஜபக்சே கூட்டணி தில்லுமுல்லு வெற்றி

மட்டக்களப்பு - இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் நடைபெற்ற தேர்தலில் அதிபர் ராஜபக்சே கட்சி தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

5- அமெரிக்காவில் பலத்த சூறாவளி காற்றுக்கு 18 பேர் பலி

ஓக்லஹாமா - அமெரிக்காவில் ஓக்லஹாமா, மிசோரி ஆகிய மாநிலங்களில் பலத்த சூறாவளி காற்று வீசியது. இந்த சூறாவளிக்கு 18 பேர் பலியானார்கள்.

6-யு.எஸ். ராணுவம் துப்பாக்கிச் சூடு: தாய், குழந்தை பலி

பாக்தாத்- ஈராக்கில் அல்-கொய்தா தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்க ராணுவம் சனிக்கிழமை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தாயும், குழந்தையும் உயிரிழந்தனர்.

7- இந்திய வம்சாவளியினர் மலேசியாவில் போராட்டம்

கோலாலம்பூர்- மலேசியாவில் உள்ள இந்திய வம்சாவளியினர் திடீரென ஞாயிற்றுக்கிழமை பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர்.

8-மனித உரிமை சபையில் மீண்டும் இடம்பிடிக்கும் இறுதி முயற்சியில் சிறிலங்கா

கொழும்பு, மே- ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை சபையின் மீண்டும் தேர்வாவதற்கான இறுதி முயற்சிகளில் சிறிலங்கா அரசாங்கம் இன்று செவ்வாய்க்கிழமை (13. 05. 08) தீவிரமாக இறங்க உள்ளது

mgandhi
13-05-2008, 06:05 PM
14-5-2008

1- எஸ்.ஆர்.எம்., பல்கலை நுழைவுத் தேர்வு: இன்று ரிசல்ட்


சென்னை: எஸ்.ஆர்.எம்., பல்கலைக் கழகத்தில், மாணவர்களை சேர்ப் பதற்கான நுழைவுத் தேர்வு முடிவுகள் இன்று வெளி யிடப்படுகின்றன. எஸ்.ஆர்.எம்., பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "எஸ்.ஆர்.எம்., பல்கலைக் கழகத் தில், மாணவர்களை சேர்ப்பதற்கான நுழைவுத் தேர்வு (எஸ்.ஆர்.எம்.இ.இ.இ.,) முடிவுகள் 14ம் தேதி(இன்று) வெளியிடப்படுகின்றன. இம்முடிவுகள் தினமலர் டாட்காம், கல்விமலர் டாட்காம், எஸ்ஆர்எம்யுனிவ்டாட்ஏசிடாட்இன் ஆகிய இணைய தளங்களில் வெளியிடப்படுகிறது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.


2- ஆசிய கோப்பையுடன் பெண்கள் கிரிக்கெட் அணி நாடு திரும்பியது


சென்னை: ""ஆசிய கோப்பையை பெற்றது அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் உலக கோப்பை போட்டிகளில் வெற்றி பெற படிக்கல்லாக இருக்கும்,'' என்று இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலிராஜ் கூறியுள்ளார்.

நான்காவது முறையாக ஆசிய கோப்பையை தட்டிச் சென்ற இந்திய பெண்கள் கிரிக்கெட் அணிகொழும்புவில் இருந்து சென்னை வந்தது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் பங்கேற்ற ஆசிய கோப்பை பெண்கள் கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடந்தது. லீக் சுற்றுப் போட்டிகள் முடிந்த நிலையில் முதலிரண்டு இடங்களை பிடித்த இந்தியா, இலங்கை அணிகள் பைனலுக்கு தகுதி பெற்றன. குர்னேகலாவில் நடந்த பைனலில் இந்த இரு அணிகளும் மோதின. இதில் இந்தியா அபாரமாக வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய பெண்கள் அணி தொடர்ந்து நான்காவது முறையாக ஆசிய கோப்பையை வென்று சாதனை படைத்தது. வெற்றிக் கோப்பையுடன் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி கொழும்புவில் இருந்து ஜெட் ஏர்வேஸ் விமானம் மூலம் சென்னை வந்தது. விமான நிலையத்தில் அணிக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.


3- ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடர் போட்டி:டில்லி டேர் டெவில்ஸ் அணி 105/9

ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடரில் கோல்கட்டாவில் நடைபெறும் போட்டியில் கங்குலிதலைமையிலான கோல் கட்டா நைட் ரைடர்ஸ் அணியும் சேவக் தலைமையிலான டில்லி டேர் டெவில்ஸ் அணியும் மோதுகின்றன. போட்டியில் டாஸ் வென்ற கோல்கட்டா நைட் ரைடர்ஸ்அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதனைதொடர்ந்து களம் இறங்கிய கோல்கட்டாநைட்ரைடர்ஸ் அணி 20 ஓவரில்6விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்துள்ளது.அடுத்து களம் இறங்கிய டில்லி டேர் டெவில்ஸ் அணி 17.3-வது ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 105 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.


4- ஜெய்ப்பூரில் 7 இடங்களில் குண்டு வெடித்தது: 50 பேர் பலி: 150 பேர் காயம்

ஜெய்ப்பூர்: ஜெய்ப்பூரில் 7 இடங்களில் குண்டு வெடித்தது இதில் 50 பேர் பலியாகினர் . ராஜாஸ்தான் மாநிலம் ஜோகிர்பஜார் மற்றும் மார்கெட் பகுதி மற்றும் அனுமான் கோயில் அருகே உள்ளிட்ட 7 இடங்களில் ஒரே நேரத்தில் குண்டு வெடித்தது. 12 நிமிடத்தில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்து முடிந்து போனது. கார் மற்றும் சைக்கிள்,உள்ளிட்ட குண்டு வெடித்துள்ளது. சம்பவம் நடந்த இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர் .காயமடந்த 150க்கும் மேற்பட்ட பலர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். குண்டு வெடிப்புக்கான காரணம் , சதி செயலில் ஈடுபட்டவர்கள் யார் இன்னும் அறியப்படவில்லை.இதனையடுத்து டில்லி,மும்பை சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.


5- விலைவாசி உயர்வை கண்டித்து ஆக - 20 ல் நாடு தழுவிய பந்த்

புதுடில்லி: விலைவாசி உயர்வை கண்டித்து ஆக - 20 ல் நாடு தழுவிய பந்த் நடத்தப்படும் என தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. டில்லியில் அனைத்து இந்திய தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் விலைவாசி உயர்வு கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் , விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தும் விதமாக வரும் ஆகஸ்ட் மாதம் 20 ம்தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்நாளில் வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்படும், பாங்குகள் இயங்காது . இத்தகவலை ஏ.ஐ.டி.யூ., சி., பொதுசெயலர் குருதாஸ்குப்தா தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்திய கம்யூ., செயலர் டி.ராஜா நிருபர்களிடம் கூறுகையில் வரும் ஜூன்மாதம் 6 ம் தேதி நாடு முழுவதும் விலைவாசி உயர்வை கண்டித்து பேரணி, பொதுக்கூட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.


6- மீன் பிடிக்க சென்ற ராமேஸ்வரம் 19 மீனவர்களை காணவில்லை

ராமநாதபுரம்: மீன் பிடிக்க சென்ற ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தை சேர்ந்த 19 மீனவர்கள் மீன் பிடிக்க சென்று கரை திரும்பாததால் பதட்டம் ஏற்பட்டுள்ளது. ஜாண்சன், ஜஸ்டின், சகாயம், அந்தோணி, ஆரேக்கியம், ஸ்விஸ்டன் உள்ளிட்ட 19 பேர் 4 படகில் மீன் பிடிக்கும் பொருட்டு கடந்த 5 ம் தேதி கடலுக்கு சென்றனர். இவர்கள் ஒரு வாரம் வரை கடலில் இருந்து மீன்பிடித்து கரை திரும்புவது வழக்கம். இதே போல் மீனவர்கள் 11 ம் தேதி கரை திரும்பியிருக்க வேண்டும். ஆனால் ஆனால் செவ்வாய்கிழமை வரை கரை திரும்பாததால் மீனவர்களின் உறவினர்கள் பதட்டம் அடைந்துள்ளனர். இவர்கள் இலங்கை கடல் எல்லையில் மீன் பிடிக்க சென்றபோது இலங்கை படையினர் பிடித்து சென்று இருப்பார்களோ என மீனவர்கள் அஞ்சுகின்றனர்.


7- ஹோட்டலை காலி செய்யுங்கள் : கோல்கட்டா அணி நிர்வாகம்

கோல்கட்டா: ஐ.பி.எல் கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணியின் பராமரிப்பு செலவை கட்டுப்படுத்தும் முயற்சியில், போட்டிகளில் பங்கேற்காத ஐந்து வீரர்கள் ஹோட்டல் அறையை காலி செய்யவேண்டும் என்று அணி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.ஐ.பி.எல் கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணியை பாலிவுட் நட்சத்திரம் ஷாருகான் ஏலத்தில் எடுத்தார். தற்போது இரண்டாவது சுற்று ஐ.பி.எல் "டுவென்டி20' போட்டிகள் நடைபெற்று வருகின்றன. கோல்கட்டா அணியின் வீரர்கள் புஜாரா, போஸ், லஹிரி, யஸ்பால் சிங், ஹோக்கய்டோ இது வரை நடைபெற்ற ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடவில்லை. இது குறித்து கோல்கட்டா அணி வீரர் ஒருவர் பேசிய போது, ஐ.பி.எல் போட்டிகளில் பங்கேற்று வரும் கோல்கட்டா அணி சிறப்பாக விளையாடி வருகிறது. அணி பயிற்சியாளர் ஜான் புக்கனன் அணியில் எந்த மாற்றமும் செய்ய விரும்பவில்லை. ஐ.பி.எல் போட்டியில் பங்கேற்காத ஐந்து வீரர்கள், ஹோட்டலை காலி செய்யவேண்டும் அல்லது வீட்டிற்கு செல்லவேண்டும், என்று அணி நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளதாக என கோல்கட்டா வீரர் ஒருவர் கூறினார்.


8- மத்தியபிரதேச பா.ஜ., உயர்மட்ட குழு கூட்டம் துவக்கம்போபால் : மத்தியபிரதேச பா.ஜ., கட்சி உயர் மட்ட குழுவின் இரண்டு நாள் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தை பா.ஜ., துணை தலைவரும், கட்சியின் தேர்தல் விவகாரங்கள் துறை நிரர்வாகியுமான வெங்கைய்யநாயுடு குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

9- சியா முஸ்லீம்களின் மதகுரு ஆகாகான் ஜனாதிபதி பிரதிபாபாட்டீலை சந்தித்தார்


புதுடில்லி : சியா முஸ்லீம்களின் மதகுரு ஆகாகான் ஜனாதிபதி பிரதிபாபாட்டீலை இன்று சந்தித்தார். அவருக்கு அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தனது பிறந்தநாளை ஒட்டி இந்தியா வந்துள்ள ஆகாகான் ஐதராபாத்தில் உள்ள ஆகாகான் அகடெமிக்கும் செல்லவிருக்கிறார். ஒரு வாரகாலம் இந்தியாவில் தங்கும் அவர் பல்வேறு நிகழ்சிகளில் பங்கேற்கிறார். அதன் பிறகு இந்தியாவிலிருந்து வங்கதேசத்துக்கு செல்கிறார்.


10- மும்பை பங்குசந்தை பேர் மாற்றம் செய்ய கோரி சிவசேனா தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்


மும்பை : மும்பையில் சிவசேனா தொண்டர்கள், பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேஞ் என்ற *பெயரை மும்பை ஸ்டாக் எக்ஸ்சேஞ் என பெயர் மாற்றம் செய்ய கோரி இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மும்பை பங்குசந்தை முன் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் போலீசுக்கும் சிவசேனா தொண்டர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் இருந்த கடைகள் அடைக்கப்பட்டன. பரபரப்பாக இருக்கும் பங்குசந்தை பகுதி இந்த சம்பவத்தால் பதற்றத்துடன் காணப்பட்டது.

mgandhi
15-05-2008, 02:23 AM
15-5-2008

1- வளதேசத்தில் படகு கவிழ்ந்து 41 பேர் பலி
- டாக்கா, வங்காளதேசத்தில் கோராத்ரா ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 41 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் கிஷோர்கஞ்ச் மாவட்டத்தில் நடந்தது.

2- நவாஸ் செரீப் கட்சி அமைச்சர்கள் கூண்டோடு ராஜிநாமா
- இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் கூட்டணி ஆட்சியிலிருந்து நவாஸ் ஷரீப் கட்சி விலகியது. அவரது கட்சியைச் சேர்ந்த 9 அமைச்சர்களும் பிரதமர் கிலானியிடம் தங்களது ராஜிநாமா கடிதங்களை சமர்ப்பித்தனர்.
3- லண்டனிலிருந்து கருணா, இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுகிறார்
- லண்டன், போலி பாஸ்போர்ட் வழக்கில் லண்டனில் கைதாகி சிறைவாசம் அனுபவித்த கருணா, அங்கிருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுகிற
4- சர்வதேச உதவியை ஏற்கத் தயார்: žனா அறிவிப்பு
- பெய்ஜிங், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள
சர்வதேச சமூகம் உதவினால், அதனை ஏற்றுக் கொள்ள தயார் என žனா அறிவித்துள்ளது.
5- அம்பாறை குண்டுவெடிப்பு அரசாங்கத்தின் கைவரிசை: ஐ.தேக.
- கொழும்பு, அம்பாறையில் இடம்பெற்ற குண்டுவெடிப்பை அரசாங்கமே நடத்தியதாக ஐக்கிய
6- தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
நிவாரணப்பணிகளில் மியான்மார் அரசு காட்டும் மெத்தனம்: ஐ.நா. கண்டனம்
- நியூயார்க், மியான்மார் நாட்டில் புயலுக்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதில் அந்த நாட்டு ராணுவ அரசு மெத்தனம் காட்டுவதற்கு ஐ.நா.பொதுச்செயலாளர் பான் கி மூன் கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.
7- ராணுவ ஒத்துழைப்பு பற்றி ஐக்கிய அரபு எமிரேட்டுடன் இந்தியா பேச்சு
- அபுதாபி, ராணுவ ஒத்துழைப்பு தொடர்பாக இந்தியாவும் ஐக்கிய அரபு எமிரேட்டும் பேச்சு நடத்தியுள்ளன.

mgandhi
15-05-2008, 06:11 PM
16-5-2008


1. நான் தான் அடுத்த அமெரிக்க அதிபர் : ஹிலாரி கிளின்டன்

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பரில் நடைபெறவுள்ளது. இதில் முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளின்டன் மனைவி ஹிலாரி மற்றும் கறுப்பர் இனத்தை சேர்ந்த ஒபாமா ஆகியோருக்குமிடையே பலத்த போட்டி நிலவுகிறது.


2. உலக நாடுகள் ஆதரவு தேவை : லண்டனில் ராஜபக்சே பேச்சு

லண்டன் : விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு, அரசு முயற்சித்து வருகிறது; ஆனால், பேச்சுவார்த்தையில் பங்கேற்பதில் புலிகள் அதிக ஆர்வம் காட்டவில்லை என்று இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே குற்றம் சாட்டினார்.


3. பிரிட்டன் நகரில் முதல் இந்திய பெண் மேயர்

லண்டன் : பிரிட்டன் நகர மேயராக, முதல் முறையாக, இந்திய பெண் ஒருவர் பதவியேற்க உள்ளார். பிரிட்டனில் உள்ள நகரங்களின், மேயர்களாக, ஆசிய நாடுகளை சேர்ந்த ஆண்கள் மேயராக இருந்தது உண்டு. ஆனால், இந்திய பெண் ஒருவர் இப்பதவியை ஏற்பது இதுவே முதல் முறை.


4. இடைத்தேர்தலில் போட்டியிடும் 'மிஸ் பிரிட்டன்' : பிரதமர் கார்டன் பிரவுனுக்கு தர்மசங்கடம்
லண்டன் : பிரிட்டனில் நடக்க உள்ள இடைத்தேர்தலில், அந்நாட்டு அழகி போட்டியிடுகிறார். இது, பிரதமர் கார்டன் பிரவுனுக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில், தொழிலாளர் கட்சி அரசில், பிரதமராக கார்டன் பிரவுன் இருந்து வருகிறார்.

5. 17 குழந்தை பெற்ற பெண்ணின்தொடரும் சாதனை

டான்டி டவுன் : ஆர்கன்சாசை சேர்ந்த பெண், இதுவரை 17 குழந்தைகள் பெற்று, தற்போது 18வது முறையாக கர்ப்பம் தரித் துள்ளார். ஆர்கன்சாசின் வடமேற்கு பகுதியில் உள்ளது டான்டிடவுன். இங்கு வசிப்பர் மிச்லே; வயது 41. இவரது கணவர் டுகார்.

அனுராகவன்
16-05-2008, 02:59 AM
நன்றி மோகன் காந்தி அவர்களே!!

mgandhi
16-05-2008, 05:21 PM
நன்றி மோகன் காந்தி அவர்களே!!

நன்றி அனு

mgandhi
16-05-2008, 05:22 PM
17-5-2008

1- நவாஸ் ஷெரீப் வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது

- லாகூர், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ்ஷெரீப்பும் அவர் தம்பி ஷாபாஸ் ஷெரீப்பும் அடுத்தமாத இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார்கள்.


2- மலேசியாவில் எதிர்க்கட்சி அலுவலகத்தில் குண்டு வீச்சு

- கோலாலம்பூர், மலேசியாவில் எதிர்க்கட்சி அலுவலகம் மீது புதன்கிழமை இரவு பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.


3- பாகிஸ்தானில் அமெரிக்க ஏவுகணை தாக்கியதில் 12 பேர் பலி

- இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் பழங்குடிஇன மக்கள் வசிக்கும் பிரதேசத்தில் 2 வீடுகள் மீது அமெரிக்க ஏவுகணைகள் தாக்கியதில் 3 குழந்தைகள் உள்பட 12 பேர் பலியானார்கள்.

4- குவைத் தேர்தலில் 27 பெண்கள் போட்டி

- குவைத், குவைத் நாட்டில் பாராளுமன்றத்துக்கு நாளை தேர்தல் நடக்கிறது.


5- இராக்கில் மோதல்: 7 பேர் பலி

- பாக்தாத், இராக்கில் அமெரிக்க ராணுவத்தினருக்கும் ஷ’யா முஸ்லிம் தீவிரவாதிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 7 பேர் பலியானார்கள்.

mgandhi
17-05-2008, 05:57 PM
18-5-2008
1. உணவுக்காக கையேந்தி நிற்கும் மக்கள் : நர்கீஸ் பாதிப்பால் மியான்மரில் துயரம்குங்யாங்கூன் : நர்கீஸ் புயலால் பாதிக்கப்பட்ட மியான்மர் மக்களின், எதிர்காலம் கேள்விக் குறியாகியுள்ளது. வழிநெடுகிலும், உணவுப் பொருட்களை எதிர்பார்த்து, ஏராளமானோர் கையேந்தி நிற்கும் காட்சி, காண்போரின் கண்களை குளமாக்குகிறது.2. மந்திரிகள் ராஜினாமா : ஏற்க மறுக்கிறார் சர்தாரிஇஸ்லாமாபாத் : முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கட்சி அமைச்சர்களின் ராஜினாமாவை, பாக்., மக்கள் கட்சி தலைவர் ஆசிப் அலி சர்தாரி, ஏற்க மறுத்து விட்டார்.3. யூதர்களுக்கு எதிரான போர் தொடரும் : ஒசாமா கொக்கரிப்புதுபாய் : பாலஸ்தீனத்தின் ஒரு அங்குல நிலத்தை கூட இஸ்ரேலுக்கு விட்டு கொடுக்க மாட்டோம், என சர்வதேச பயங்கரவாதி ஒசாமா எச்சரித்துள்ளான். இஸ்ரேல் நாடு உருவான 60ம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது.


4. 'பூடான் நாட்டின் புதிய அரசுக்கு இந்தியா முழு ஆதரவளிக்கும்'திம்பு : "ஜனநாயக முறைப்படி புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பூடான் அரசுக்கு இந்தியா முழு ஆதரவு அளிக்கும் ' என்று பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்தார். இமயமலையில் உள்ள நாடான பூடானில் மன்னராட்சி நடந்து வந்தது.


5. விண்வெளி விதைகளால் ராட்சத காய்கறிகள் உற்பத்தி: சீனாவில் புரட்சிபிஜீங் : விண்வெளி விதைகளை விதைத்து, வழக்கத்தை விட, மிகப்பெரிய அளவில் பூசணி, கத்தரிக்காய், கோஸ் போன்ற காய்கறிகளையும், ஆரஞ்சு, வாழை போன்ற பழங்களையும் சீன விவசாயிகள் உற்பத்தி செய்கின்றனர். மரபணுவில் மாற்றம் செய்து,

mgandhi
18-05-2008, 05:36 PM
19-5-2008

1- நவாஸ் ஷெரீப் வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது

லாகூர், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ்ஷெரீப்பும் அவர் தம்பி ஷாபாஸ் ஷெரீப்பும் அடுத்தமாத இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார்கள்.


2- மலேசியாவில் எதிர்க்கட்சி அலுவலகத்தில் குண்டு வீச்சு

கோலாலம்பூர், மலேசியாவில் எதிர்க்கட்சி அலுவலகம் மீது புதன்கிழமை இரவு பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

3- கடலுக்கு அடியில் கல்லறை தோட்டம்

மியாமி : கடலுக்கு அடியில், 45 அடி ஆழத்தில், கதவுகள், நடைபாதை, பெஞ்சுகளுடன் கூடிய கல்லறைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. தி நெப்டியூன் மெமோரியல் ரீப் என்ற நிறுவனம் இந்த கல்லறைகளை அமைத்துத் தருகிறது.

4- பயணத்தில் மது அருந்த தடை : லண்டன் மேயர் அதிரடி

லண்டன் : அடுத்த மாதத்தில் இருந்து நகரின் போக்குவரத்து வாகனங்களில் மது அருந்த தடை விதித்து, லண்டனின் புதிய மேயர் போரிஸ் ஜான்சன் உத்தரவிட்டுள்ளார். லண்டனின் புதிய மேயராக போரிஸ் ஜான்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

5- 'எய்ட்சை பரப்பி விடுவார்களோ?' : சதாமிடம் இருந்த அச்சம்

கெய்ரோ : ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேன், அமெரிக்க படையின் சிறையில் இருந்த போது, பல ஆயிரம் பக்கங்கள் கொண்ட டைரியை எழுதியுள்ளார். டைரி மூலம் இந்த தகவல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

6- . 3 குழந்தைகளை கொன்று 'பிரீசரில்' அடைத்த கொடூர தாய்


பெர்லின் : மூன்று குழந்தைகளை கொன்று, அவற்றின் உடல்களை, 20 ஆண்டுகளாக, "பிரீசரில்' அடைத்து வைத்த பெண்ணை ஜெர்மன் போலீசார் கைது செய்துள்ளனர். ஜெர்மனியில், நார்த் ரைன்-வெஸ்ட்பாலியா மாநிலத்தில் ஓல்ப் பகுதியில், 47 வயதுடைய பெண்,


7- சோனியா வாழ்க்கை குறித்த திரைப்படம்


கேன்ஸ் : காங்கிரஸ் தலைவர் சோனியாவின் வாழ்க்கை வரலாற்று படத்துக்கு அவர் பச்சைக் கொடி காட்டிவிட்டதாக பாலிவுட் இயக்குனர் ஜக்மோகன் முந்த்ரா தெரிவித்தார்.

அனுராகவன்
21-05-2008, 10:57 AM
நன்றி காந்தி!!

சூரியன்
21-05-2008, 11:16 AM
நன்றி காந்தி!!

அனு அவர்களே இது 19.தேதி செய்தி.

mgandhi
21-05-2008, 06:04 PM
21-5-2008

1-ஆளும் கட்சி எம்.பி.க்கள் பிரதமருக்கு ஆதரவு

கோலாலம்பூர் மலேசியாவின் முன்னாள் பிரதமரும் ஆளும் கட்சியான ஐக்கிய மலாய் தேசியக்கட்சி (உம்னோ) தலைவர்களில் ஒருவருமான மகாதிர் கட்சியில் இருந்து விலகினார்.

2- எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன் இந்தியா திரும்ப முடிவு

பாரீஸ் சர்ச்சைக்குரிய வங்கதேச பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன் ஆகஸ்ட் மாதம் இந்தியா திரும்ப முடிவு செய்துள்ளார்.

3- முஷாரப் அதிகாரத்தைப் பறிக்க சட்டத் திருத்தம்

இஸ்லாமாபாத் பாகிஸ்தான் அதிபர் முஷாரபின் அதிகாரங்களைப் பறிக்க நாடாளுமன்றத்தில் விரைவில் சட்டத் திருத்த மசோதாவை தாக்கல் செய்ய அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.

4- சீனாவில் இடிபாடுகளில் சிக்கியிருந்தவர் 8 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டார்

பீஜ“ங் சீனாவில் கடந்த 12-ந் தேதி பூகம்பம் ஏற்பட்டதில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள்.

5- இந்தியா-பாகிஸ்தான் இடையே 5-வது கட்ட பேச்சு தொடங்கியது

இஸ்லாமாபாத்இஸ்லாமாபாத்தில் இந்தியா-பாகிஸ்தான் இடையே 5-வது கட்ட பேச்சுவார்த்தை தொசெய்திகள் விடங்கியது.

6- இலங்கை சிறைகளில் உள்ள இந்திய கைதிகள் தம்மை விடுவிக்க கோரிக்கை

கொழும்பு சிறிலங்கா சிறைகளில் உள்ள சுமார் 43 இந்திய கைதிகள் தம்மை விடுவிக்க உடன் நடவடிக்கை எடுக்குமாறு இந்தியப் பிரதமரிடமும் தமிழ்நாடு மற்றும் கேரள முதலமைச்சர்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

mgandhi
22-05-2008, 06:27 PM
23-5-2008


அமெரிக்க அதிபர் தேர்தல்: ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஒபாமாவுக்கு அதிக வாய்ப்பு


.நேபாளத்தில் மாவோயிஸ்டுக்கு எதிராக பெரும் கலவரம்


.வரலாறு படைத்திட்ட பொலிசாரியோ ராணுவம்!


.முஷாரப், கிலானியுடன் பிரணாப் முகர்ஜி பேச்சு காஷ்மீர்ப் பிரச்னையை தீர்க்க பாகிஸ்தான் விருப்பம்


.சீனாவில் இடிபாடுகளில் சிக்கி 196 மணி நேரம் போராடிய மூதாட்டி மீட்பு


.தடை நீக்கத்துக்குப்பின் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் குழு


.சீனாவுக்கு எதிரான போராட்டத்தை நிறுத்த தலாய்லாமா வேண்டுகோள்


.தீவிரவாதத்துக்கு எதிராக இணைந்து போர் : பாகிஸ்தானிடம் பிரணாப் முகர்ஜி வலியுறுத்தல்


.முஷாரப் அதிகாரத்தைப் பறிக்க சட்டத் திருத்தம்


.எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன் இந்தியா திரும்ப முடிவு


.99 இந்தியர்களை விடுவிக்க பாகிஸ்தான் முடிவு


.ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவ ஆக்ஸ்போர்டு பல்கலை. புதிய திட்டம்


.நேபாளத்திற்கு கூடுதல் மின்சாரம் வழங்க இந்தியா முடிவு


.சீனாவில் மீண்டும் நிலநடுக்க பீதி: மக்கள் அலறியடித்து ஓட்டம்


.காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வுகாண காலம் கனிந்து விட்டது: அதிபர் புஷ்


.ஆளும் கட்சியிலிருந்து வெளியேறினார் மகாதிர்


.பிலிப்பின்ஸில் 8 பேர் சுட்டுக்கொலை: மனநிலை பாதித்தவர் வெறிச் செயல்


.இடிபாடுகளுக்குள் சிக்கிய 63 பேர் 5 நாள்களுக்குப் பின் உயிரோடு மீட்பு


.புயல் பாதித்த மியான்மரில் ஆயிரக்கணக்கான சிறார்கள் பட்டினியால் மடியும் அபாயம்


.ஜூன் 2-ல் மாவோயிஸ்ட் தலைமையில் அரசு

mgandhi
23-05-2008, 05:50 PM
24-5-2008

1-தலீபான் தீவிரவாதிகளுடன் பாகிஸ்தான் அரசு அமைதி ஒப்பந்தம்

பெஷாவர்,பாகிஸ்தான் அரசு தலீபான் ஆதரவு தீவிரவாதிகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு உள்ளது. இந்த ஒப்பந்தத்தில் பாகிஸ்தான் அரசு கையெழுத்திட்டு உள்ளது.

2-எத்தகைய தடை வரினும் போர் தொடரும்: சிறிலங்கா அமைச்சர்

கொழும்பு, அனைத்துலகம் எத்தகைய தடைகளை விதித்தாலும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் தொடரும் என்று சிறிலங்கா அமைச்சர் அனுரா பிரயதர்சன யாப்பா தெரிவித்துள்ளார்.

3-சவூதிக்கு புதிய இந்தியத் தூதர்

ஜெட்டா, சவூதி அரேபியாவின் ஜெட்டாவுக்கான இந்தியத் தூதராக சயீத் அகமது பாபா நியமிக்கப்பட்டுள்ளார்.

4- லெபனான் அரசியல் உடன்பாடு: ரஷ்யா வரவேற்பு

, லெபனான் அரசியல் ஸ்திரத்தன்மை தொடர்பாக அந்நாட்டு அரசியல் கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள உடன்பாட்டை ரஷ்யா வரவேற்றுள்ளது.

5- மியான்மாரில் ஐ.நா.பொதுச்செயலாளர் புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்டார

யாங்கோன், மியான்மார் நாட்டை நர்கிஸ் புயல் தாக்கியதால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக ஐ.நா.பொதுச்செயலாளர் பான் கி மூன் அந்த நாட்டுக்கு சென்றார்.

mgandhi
24-05-2008, 06:04 PM
25-5-2008

1-முஷரப் பதவி விலகுவதைத் தவிர வேறு வழி இல்லை: சர்தாரி

இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற மக்கள் கட்சி, நவாஸ் ஷெரீப்பின் முஸ்லிம் லீக் கட்சியுடன் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைத்து உள்ளது.

2-செவ்வாய் கிரகத்தில், அமெரிக்க செயற்கைகோள் நாளை இறங்கும்

கலிபோர்னியா, மே. செவ்வாய் கிரகத்துக்கு அமெரிக்கா அனுப்பிய செயற்கைகோள் நாளை அங்கு இறங்குகிறது.

3-99 இந்திய மீனவர்களை விடுவித்தது பாகிஸ்தான்
கராச்சி, பாகிஸ்தான் பகுதியில் மீன்பிடித்ததாக ஓராண்டுக்கு முன் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 99 பேரை பாகிஸ்தான் அரசு நேற்று வெள்ளிக்கிழமை விடுவித்தது.

4-சிறிலங்கா வெளியேற்றம்: ஐக்கிய நாடுகள் சபையின் வெற்றி: ம.உ.க

நியூயார்க், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையில் சிறிலங்கா உறுப்புரிமை இழந்தமையானது ஐக்கிய நாடுகள் சபையின் வெற்றியாகும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.

5-நிவாரணக் குழுவினர் அனைவருக்கும் அனுமதி அளிக்க மியான்மார் சம்மதம்

யாங்கோன், மியான்மார் நாட்டை நர்கீஸ் புயல் தாக்கியதில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள்.

mgandhi
25-05-2008, 05:57 PM
25-5-2008

1-.இலங்கையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு

2-இந்தியாவுடன் நல்லுறவு : பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு

3- சீன நிலநடுக்கம் : பலி எண்ணிக்கை 90 ஆயிரமாக உயர்வு

4- இந்திய மீனவர்கள் விடுதலை : பாகிஸ்தான் அரசு நல்லெண்ண நடவடிக்கை

ஐ.நா.சபை பொதுச்செயலாளர் வேண்டுகோள் : மியான்மர் அரசு ஒப்புதல்


5-.ஈழக் கோரிக்கையை பிரபாகரன் கைவிட வேண்டும்: அமெரிக்கா அறிவுரை


6-.பஹ்ரைனில் இந்திய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


7-.மலேசிய கோடீஸ்வரர்களில் இந்தியருக்கு 2-வது இடம்

mgandhi
26-05-2008, 05:18 PM
26-5-2008

1-சீனாவில் ஐ.நா. பொதுச்செயலாளர் பூகம்ப பாதிப்பை பார்வையிட்டார்

பெய்ஜிங், ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன், பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட சீனாவின் தென்மேற்கு பகுதிக்கு நேற்று சென்றார்.

முஷரப் பதவி விலகுவதைத் தவிர வேறு வழி இல்லை: சர்தாரி

இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற மக்கள் கட்சி, நவாஸ் ஷெரீப்பின் முஸ்லிம் லீக் கட்சியுடன் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைத்து உள்ளது.

3-செவ்வாய் கிரகத்தில், அமெரிக்க செயற்கைகோள் நாளை இறங்கும்

கலிபோர்னியா, செவ்வாய் கிரகத்துக்கு அமெரிக்கா அனுப்பிய செயற்கைகோள் நாளை அங்கு இறங்குகிறது.

4- 99 இந்திய மீனவர்களை விடுவித்தது பாகிஸ்தான்

கராச்சி, பாகிஸ்தான் பகுதியில் மீன்பிடித்ததாக ஓராண்டுக்கு முன் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 99 பேரை பாகிஸ்தான் அரசு நேற்று வெள்ளிக்கிழமை விடுவித்தது.

2-

mgandhi
27-05-2008, 06:26 PM
28-5-2008

.

1-மியான்மர் தூதரகத்தில் தீ விபத்து
தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காக்கில் மியான்மர் நாட்டு தூதரகம் உள்ளது.இங்கு தீ விபத்து எற்பட்டது

2-- வங்காள தேசத்தில் முன்னாள் ராணுவ தளபதி திடீர் கைது
வங்காள தேசத்தில் முன்னாள் ராணுவ தளபதி ஒருவரை போலீசரர் கைது செய்தனர்.


3-. 'சோனியா' திரைப்படத்துக்கு லோக்சபா தேர்தலால் சிக்கல்

கேன்ஸ் : "காங்கிரஸ் தலைவர் சோனியாவின் வாழ்க்கை யை மையமாக வைத்து எடுக்கப்படும் திரைப்படத்தை, லோக்சபா தேர்தல் முடியும் வரை வெளியிடும் எண்ணம் இல்லை'என, அப்படத்தின் இயக்குனர் ஜக்மோகன் முந்த்ரா கூறினார்.

4- சர்தாரி, நவாஸ், முஷாரப் பனிப்போர் :ஆளாளுக்கு கவிழ்க்கும் முயற்சி தீவிரம்

இஸ்லாமாபாத் : ""அதிபர் முஷாரப் மீது பார்லிமென்ட்டில் கண்டனத் தீர்மானத்தை நிறைவேற்றும் அளவுக்கு, எம்.பி.,க்களின் ஆதரவை எங்களால் திரட்ட முடியும். ஆனால், தற்போதைய நிலையில் மோதல் அரசியலை விரும்பவில்லை,'' என்று, பெனசிர் புட்டோவின் கணவர் தெரிவித்தார்.

5-. எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதிக்கப் போகிறார் அமீலியா

காத்மாண்டு : எவரெஸ்ட் சிகரத்தில், முதன் முதலாக ஏறி சாதனை படைத்தவர் எட்மண்ட் ஹிலாரி. அவரைப் போலவே அவரின் பேத்தியும் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைக்க உள்ளார்.


6-. தற்கொலை படை பயிற்சி :அல்-குவைதாவின் அட்டூழியம்

லண்டன் : "பாகிஸ்தானில் உள்ள அரசு பள்ளியில், 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு மனித வெடிகுண்டாக செயல்படுவது பற்றிய பயிற்சியை அல்-குவைதா பயங்கரவாதிகள் அளித்து வருகின்றனர்' என, பிரிட்டன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

7- அடுத்தடுத்த நில அதிர்வுகளால் சீன அணைகளுக்கு ஆபத்து

பீஜிங் : சீனாவில் தொடர்ந்து நில அதிர்வுகள் ஏற்படுவதால், முக்கிய அணைகள் உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அணைகளில் இருந்து தண்ணீரை வெளியேற்ற அதிகாரிகள் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

mgandhi
28-05-2008, 05:20 PM
29-5-2008

1. .அரசியல் நிர்ணய சபை நேபாளத்தில் பொறுப்பேற்றது


2. .அணுசக்தி ஆராய்ச்சி பற்றி முழு விவரங்களையும் ஈரான் தரவில்லை: சர்வதேச அணுசக்தி ஏஜென்சி அறிக்கை


3. .எமிரேட் அரசு விசா கட்டணத்தை உயர்த்தியது


4. .சீனாவில் மேலும் இரு முறை நில அதிர்வு


5. .ஆப்கன் குண்டுவெடிப்பில் 8 பேர் பலி


6. .ஈரானில் மிதமான நிலநடுக்கம்


7. .பாகிஸ்தான்- சீன எல்லையில் மலையில் மறைந்திருக்கிறார் ஒசாமா பின்லேடன்


8. .ஆங் சான் சூ கி வீட்டுக்காவல் நீட்டிப்பு


9. .சீனாவில் மீண்டும் நிலநடுக்கம்: 6 பேர் பலி


10. ."இந்தியாவுடனான உறவை மேற்கத்திய நாடுகள் வலுப்படுத்த வேண்டும்'- டோனி பிளேர்


11. .பாகிஸ்தான் நாடகத் திருவிழாவில் பங்கேற்க இயலாத இந்திய குழுக்கள்


12. .சர்வதேச விண்வெளி மையத்துக்கு ஆய்வகம் அனுப்புகிறது ஜப்பான்


13. .தென்ஆப்பிரிக்க கலவரத்தில் இதுவரை 50 பேர் பலி


14. .எத்தியோப்பியாவின் முன்னாள் சர்வாதிகாரிக்கு மரண தண்டனை


15. .கொலம்பியாவில் நிலநடுக்கம்: 7 பேர் பலி


16. .ஹாரி பாட்டர் நடிகர் கொலை


17. .மலேசிய கோடீஸ்வரர்களில் இந்தியருக்கு 2-வது இடம்


18. .பிரான்ஸ் மக்களைக் கவர்ந்த இந்திய உணவு வகைகள்


19. .சீனாவில் மீண்டும் நில நடுக்கம்: 2.70 லட்சம் வீடுகள் சேதம்


20. .இந்தியாவுடன் நல்லுறவு: பாகிஸ்தான் பிரதமர் ஆர்வம்


21. .மே 28-ல் குடியரசு நாடாக அறிவிக்கப்படுகிறது நேபாளம்?


22. .அமெரிக்காவின் பீனிக்ஸ் விண்கலம் செவ்வாய் கிரகத்தை இன்று அடைகிறது


23. .மியான்மரில் புயல் பாதித்த பகுதிகளில் வாக்கெடுப்பு


24. .பாகிஸ்தானில் 2 இடங்களில் குண்டுவெடிப்பு: 3 பேர் சாவு

mgandhi
29-05-2008, 05:40 PM
30-5-2008


1-அரசாங்க இரகசியங்கள் கொண்ட ஆவணங்களை காதலியின் வீட்டில் வைத்திருந்ததால், கண்டாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் ராஜினாமா:

2-ஜெர்மனியில் நடக்கும் வானூர்தி காட்சியில் இந்திய விமானப் படையின் சாரங் சாகசம்:

3-இரண்டாடாண்டுகளுக்கொரு முறை நடக்கும் பெர்லின் வான்காட்சியில் இந்த வருடம் இந்தியாவிற்கு முக்கிய பங்கு

.4-நேபாளத்தில் மக்களாட்சி மலர்ந்தது: மாளிகையில் இருந்து வெளியேற மன்னருக்கு 15 நாள் கெடு

5-.தொழிலாளர்களை துன்புறுத்தும் முதலாளிகள் மீது நடவடிக்கை: சவூதி அரசு முடிவு

6-.பின்லேடனை பிடிக்க அமெரிக்கா புது யுக்தி

7-.குண்டுவெடிப்பில் 6 தலிபான்கள் பலி

8-.பாகிஸ்தான் பிரதமருக்கு ஐஸ்வர்யா ராய் படங்கள்: பரிசாகக் கொடுத்து அசத்தினார் பிரணாப்

9-.சீனாவில் பூகம்பத்தால் உருவான ஏரிகளால் வெள்ள அபாயம்: ஒன்றரை லட்சம் பேர் மீட்பு

10-.ராணுவ இல்லத்தை முஷாரப் காலி செய்ய உச்சநீதிமன்றத்தில் மனு

11-.முஷாரபை நீக்க ஆளும் கூட்டணி சம்மதம்: நவாஸ் ஷரீப் தகவல்

mgandhi
30-05-2008, 05:59 PM
31-5-2008

1-ஜூன் 4 முதல் சீனாவில் பிரணாப் சுற்றுப்பயணம்

பெய்ஜிங், மே. வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, ஜூன் 4 முதல் நான்கு நாள் சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.


2- ஐஸ்லாந்து நாட்டில் நிலநடுக்கம்: 100க்கும் மேற்பட்டோர் காயம்

செல்போஸ், ஐஸ்லாந்து நாட்டின் தலைநகர் ரெய்க்ஜவிக்கில் இருந்து 50 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள செல்போஸ் நகரில், நேற்று மாலை திடீர் என்று பூமி அதிர்ச்சி ஏற்பட்டது.

3-அபாயம் காரணமாக žனாவில் 11/2 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டனர்

பீஜிங், சீனாவில் பூகம்பத்துக்கு 70ஆயிரம் பேர் பலியான நிலையில் žசீனாவின் துயரம் விட்டபாடில்லை. பூகம்பத்தால் ஏற்பட்ட பள்ளத்தாக்கில் உருவான ராட்சத ஏரி உடைந்து விடும் அபாயநிலை ஏற்பட்டது.

4- நேபாள நாட்டுக்கு ஐ.நா.பொதுச்செயலாளர் பாராட்டு

நியூயார்க், நேபாளத்தை குடியரசு நாடாக பிரகடனப்படுத்தி இருப்பது வரலாற்று சிறப்பு மிக்கது என்று ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் பாராட்டினார்

5-முதல்நாள் ஜனநாயக சுவாசம் : மன்னர் கொடி அகற்றப்பட்டது

காத்மாண்டு : நேபாளம் ஜனநாயக நாடாக மாறுவதற்கு, அந்நாட்டு பார்லிமென்ட், முறைப்படி ஒப்புதல் அளித்ததை அடுத்து மன்னர் மாளிகையின் முகப்பில் இருந்த ராஜகுடும்பத்துக் கொடி அகற்றப்பட்டது.


6- நேபாளத்துக்கு சட்டர்ஜி வாழ்த்து

காத்மண்டு : மன்னராட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, புதிய ஜனநாயக நாடாக உருவெடுத்துள்ள நேபாள நாட்டிற்கு லோக்சபா சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

mgandhi
03-06-2008, 07:27 PM
4-6-2008

1-žசீனாவில் 1.5 கோடி இளைஞர்களுக்கு புகையிலை பழக்கம்

பெய்ஜிங், சீனாவில் 1. 5 கோடி இளைஞர்கள் புகையிலை பொருள்கள் உபயோகிக்கும் பழக்கத்துக்கு ஆளாகியுள்ளதாக, அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.


2-பாக். டென்மார்க் தூதரகம் அருகே கார்குண்டு வெடிப்பு: 8 பேர் சாவு

இஸ்லாமாபாத், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள டென்மார்க் நாட்டு தூதரகத்தின் வெளிப்புறத்தில் திங்கள்கிழமை பிற்பகல் 1 மணியளவில் கார்குண்டு வெடித்தது.

3- பிலிப்பைன்ஸ், தைவானில் கடும் நிலநடுக்கம்

மணிலா, பிலிப்பைன்ஸ் நாட்டில் ஞாயிற்றுக்கிழமை கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

4-பொன்னி அரிசிக்கு காப்புரிமை பெற்ற மலேசிய நிறுவனம்

கோலாலம்பூர், தமிழ்நாட்டில் விளையும் பொன்னி அரிசியை மலேசியாவில் உள்ள சியரிகாட் பைசா என்ற நிறுவனம் இறக்குமதி செய்து வருகிறது.

5-அம்மா வழியில் மக்களுக்கு சேவை செய்வேன்: பெனாசிரின் மகள்

இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் பெனாசிரின் மகள் பக்தாவர் (Bakhtawar ). 17 வயதான அவர் துபாயில் தங்கி பள்ளிக்கூடத்தில் படித்து வருகிறார்.

6-žசீனாவில் நிவாரணப் பணியில் ஈடுபட்ட ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது

பெய்ஜிங், சீனாவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களை ஏற்றிச் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளானது.

mgandhi
04-06-2008, 06:12 PM
5-6-2008

1-.சீனாவின் அத்துமீறல்களை சர்வதேச ஊடகங்கள் வெளிப்படுத்த வேண்டும்: திபெத் தலைவர்கள் வேண்டுகோள்


.2-"கார்கில் போருக்கு முஷாரபே காரணம்'


.3-எல்லைப் பிரச்னைக்கு நியாயமான தீர்வு அவசியம்: சீனா கருத்து


.4-ஒலிம்பிக் போட்டியை காணவரும் வெளிநாட்டினர் சட்டத்தை மீறக்கூடாது: சீனா எச்சரிக்கை


.5-ஐக்கிய அரபு அமீரகத்தில் கட்டடம் இடிந்து 6 ஆசிய தொழிலாளர்கள் பலி


.6-துபையில் வீடு வாங்கினார் ஐஸ்வர்யா ராய்


.7-சீனாவில் ராம்தேவின் முதல் யோகா மையம்


.8-பாகிஸ்தானில் டென்மார்க் தூதரகம் அருகே கார்குண்டு வெடிப்பு: 8 பேர் சாவு


.9-போர் அறிவிக்கும் அதிகாரம் பாக். பிரதமருக்கு வழங்கப்படும்

mgandhi
05-06-2008, 07:25 PM
6-6-2008

1-பாகிஸ்தானுக்கு எஃப் 16 ரக போர் விமானங்கள்: அமெரிக்கா அறிவிப்பு

இஸ்லாமாபாத், பாகிஸ்தானுக்கு புதுப்பிக்கப்பட்ட 10 எஃப்-16 ரக போர் விமானங்களை அளிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. அதற்கான அறிவிப்பை அமெரிக்க நாடாளுமன்றம் வெளியிட்டுள்ளது.

2-பாக். குண்டுவெடிப்பு: அல்கய்டா பொறுப்பேற்பு

பாகிஸ்தான் தலை நகர் இஸ்லாமாபாதில், டென்மார்க் தூதரகம் அருகே நடத்தப்பட்ட தற்கொலை வெடி குண்டுத் தாக்குதலுக்கு அல் கய்டா பயங்கரவாத அமைப்பு பொறுப்பெற்றுள்ளது.இந்த தாக்குதலில் சுமார் 8 பேர் பலியானதோடு, பலர் காயமடைந்தனர்.

3-ஒபாமா தேர்வு: கென்யாவில் கறுப்பர்கள் கொண்டாட்டம்

நைரோபி, அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளராக பராக் ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கறுப்பர் இனத்தவரான ஒபாமாவின் தந்தை கென்யாவை சேர்ந்தவர். தாய் அமெரிக்கர்.

4-இணைய தளத்தில் ஆபாச படங்களை வெளியிட்ட கும்பல் கைது

ஆஸ்திரேலியாவில் ஒரு கும்பல் சிறுவர், சிறுமிகளின் ஆபாச படங்களை எடுத்து அதை இணைய தளத்தில் வெளியிட்டு வந்தது. 170-க் கும் மேற்பட்ட நாடுகளில் இது இணைய தளம் மூலம் பரவியது.

5-பாக்தாத்தில் தற்கொலை படை தாக்குதல்: குண்டு வெடித்து 18 பேர் பலி

பாக்தாத், ஈராக்கில் போலீசார் மீதும், அமெரிக்க ராணுவத்தினர் மீதும் தீவிரவாதிகள் தொடர்ந்து தற்கொலை படை தாக்குதல் நடத்தி வருகிறார்கள். தீவிரவாதிகளின் கார் குண்டு தாக்குதலில் இதுவரை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் இறந்தனர்

mgandhi
06-06-2008, 06:22 PM
7-6-2008

1- ஜனாதிபதி தேர்தலில் ஒபாமா வெற்றிபெற ஆதரவு அளிப்பேன்: ஹ’லாரி

நியூயார்க், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக்கட்சி சார்பில் போட்டியிடும் ஒபாமா வெற்றி பெறுவதற்கு ஆதரவு அளிப்பேன் என்று ஹ’லாரி அறிவித்து இருக்கிறார்.

2- டென்மார்க்கின் தூதரகம் மீதான தாக்குதலை நாங்கள் தான் நடத்தினோம்: அல்கொய்தா

கெய்ரோ, பாகிஸ்தானில் உள்ள டென்மார்க் நாட்டு தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு நாங்கள் தான் பொறுப்பு என்று அல்கொய்தா அறிவித்து உள்ளது.

3-பிரணாப்-பிரதமர் சந்திப்பு ரத்து

பெய்ஜிங், இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, žன பிரதமர் வென்ஜியாபோ இடையேயான சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.
4-பாகிஸ்தானில் ரெயில் தண்டவாளம் குண்டு வைத்து தகர்ப்பு: 2 சிறுவர்கள் பலி

குவெட்டா, பாகிஸ்தானில் பலுச்சிஸ்தான் மாநிலத்தில் குவெட்டா நகர் அருகே தீவிரவாதிகள் ரெயில் பாதையில் குண்டு வைத்து அதை தகர்த்தனர்.

5-கொழும்பு அருகே ரயில்பாதையில் குண்டுவெடிப்பு: 18 பேர் காயம்

கொழும்பு, சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு தெகிவளைப் பகுதியில் தொடருந்துப் பாதையில் நேற்று புதன்கிழமை காலை 7:10 மணியளவில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 18 பேர் காயமடைந்துள்ளனர்.

mgandhi
07-06-2008, 05:12 PM
8-6-2008

1. இலங்கையில் குண்டு வெடிப்பு : 20 பேர் பலி

கொழும்பு : இலங்கையில் நேற்று நடந்த குண்டு வெடிப்பில், 20 பேர் கொல்லப்பட்டனர். 47 பேர் காயமடைந்தனர். இலங்கையில் கொழும்பு அருகே உள்ள மொரத்துவா என்ற இடத்தில் சாலையோரத்தில் வைக்கப்பட்டிருந்த குண்டு, பயங்கர சத்தத்துடன் வெடித்தது.

2. மாம்பழ இறக்குமதி விதி : தளர்த்த அமெரிக்காவுக்கு கோரிக்கை

நியூயார்க் : "இந்திய மாம்பழங்கள் இறக்குமதிக்கு விதித்துள்ள கடுமையான விதிமுறைகளை தளர்த்த வேண்டும்' என, அமெரிக்காவை இந்திய ஏற்றுமதியாளர்கள் கேட்டு கொண்டுள்ளனர்.

3. 'உணவுப்பஞ்சத்துக்கு காரணம் அமெரிக்கர்கள் தான்'

ரோம் : இந்தியாவின் உணவுப்பஞ்சத்துக்கு அங்குள்ள மக்கள் அதிக உணவு சாப்பிடுவதால் தான் என்று அமெரிக்க அதிபர் புஷ் சொன்ன நிலையில், "உலக உணவுப்பஞ்சத்துக்கு காரணம், மேற்கத்திய நாடுகளில் உள்ள குண்டான மக்கள் அதிக அளவில் சாப்பிடுவது தான்'


4-ஜனாதிபதி தேர்தலில் ஒபாமா வெற்றிபெற ஆதரவு அளிப்பேன் ஹிலாரி அறிவிப்பு

நிUயார்க், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக்கட்சி சார்பில் போட்டியிடும் ஒபாமா வெற்றி பெறுவதற்கு ஆதரவு அளிப்பேன் என்று அவரை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்த ஹிலாரி அறிவித்து இருக்கிறார்.

5-பாகிஸ்தானில் உள்ள டென்மார்க்கின் தூதரகம் மீதான தாக்குதலை நாங்கள் தான் நடத்தினோம் அல்கொய்தா அறிவிப்பு

கெய்ரோ, பாகிஸ்தானில் உள்ள டென்மார்க் நாட்டு தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு நாங்கள் தான் பொறுப்பு என்று அல்கொய்தா அறிவித்து உள்ளது.8 பேர் பலிபாகிஸ்தானில் தலைநகர் இஸ்லாமாபாத்தில் டென்மார்க் நாட்டு தூதரகம் உள்ளது.

6--பாகிஸ்தானில் ரெயில் தண்டவாளம் குண்டு வைத்து தகர்ப்பு 2 சிறுவர்கள் பலி

குவெட்டா, பாகிஸ்தானில் பலுச்சிஸ்தான் மாநிலத்தில் குவெட்டா நகர் அருகே தீவிரவாதிகள் ரெயில் பாதையில் குண்டு வைத்து அதை தகர்த்தனர். இந்த தாக்குதலில் 2 சிறுவர்கள் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு யார் காரணம் என்பதை போலீசார்

mgandhi
08-06-2008, 07:07 PM
9-6-2008

1-கச்சா எண்ணெய் விலையை குறைக்க வேண்டும்


2-.நேபாள அதிபர் பதவிக்கு கொய்ராலா பெயர் பரிந்துரை


.3-கள்ள நோட்டு மாற்ற முயன்ற இந்தியர் மீது வழக்கு


.4-சட்ட விரோதமாக தங்கிய 16 இந்தியர்கள் கைது


.5-சீனாவுக்கு நிவாரணப் பொருள் வழங்கினார் பிரணாப்


.6-தீவிரவாதிகள் பலர் சுட்டுக்கொலை


.7-பிரதமரின் வீடு மீது தாக்குதல்


.8-திபெத்திய கலாசாரத்தை பாதுகாக்க ரூ.280 கோடி


.9-அல்ஜீரியாவில் நிலநடுக்கம்10-.அமைதி ஒப்பந்தத்தை உருவாக்கும் முயற்சியில் இஸ்ரேல், பாலஸ்தீனம்


.11-போட்டியிலிருந்து விலகினார் ஹிலாரி

mgandhi
10-06-2008, 06:37 PM
11-6-2008


1. அதிபர் முஷாரப் பதவி விலக இறுதி கெடு: கண்டன தீர்மானத்தில் வெளியேற்ற திட்டம்

இஸ்லாமாபாத்: "தவறான வழியில் அதிபர் பதவியை பிடித்தவர் முஷாரப். அவரை அரசியல் சட்ட ரீதியான ஒரு அதிபராக, பாகிஸ்தான் மக்கள் கட்சி அங்கீகரிக்காது' என, அந்தக் கட்சியின் தலைவர் ஆசிப் அலி சர்தாரி கூறியுள்ளார்.

2. நேபாள மன்னர் கிரீடம் பாதுகாப்பது எங்கே?

காத்மாண்டு: "நேபாள மன்னரின் கிரீடம், செங்கோல் ஆகியவற்றை பாதுகாப்பாக வைத்திருப்பதாக உறுதி அளித்தால், அவை அரசாங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும்' என, மன்னர் ஞானேந்திராவின் உதவியாளர் கூறியுள்ளார்.


3. இதய ஆபரேஷனுக்கு பின் கோபக்காரராகிவிட்டாரா கிளின்டன்

வாஷிங்டன்: இதய அறுவை சிகிச்சை செய்துகொண்டவுடன், அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளின்டன், கோபக்காரராக மாறிவிட்டார். இப்படி ஒரு அமெரிக்க இதழ் கட்டுரை வெளியிட்டுள்ளது. இதனால், கிளின்டன் கடுங்கோபத்தில் உள்ளார். மேலும்


4. முதல் உலகப்போர் வீரருக்கு 112வது பிறந்த நாள் விழா

லண்டன்: முதலாவது உலகப்போர் வீரரும், பிரிட்டனின் மிக அதிக வயதுடையவருமான ஹென்ரி ஆலிங்காம், தனது 112வது பிறந்தநாளை கொண்டாடி உள்ளார். பிரிட்டனின் ராயல் விமான, கடற்படையிலும், முதல் ராயல் விமானப்படை நிறுவனர் உறுப்பினராகவும் இருந்தவர்களில் இவரும் ஓருவர்.


5. பிரிட்டன் பணக்கார இந்தியர் 3 ஆயிரம் கோடி மோசடியில் சிறை

லண்டன்: பிரிட்டனில் பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்த இந்தியர் மூன்றாயிரம் கோடி மோசடி புகாரில் சிக்கி தற்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார். இவரால், அமெரிக்க மற்றும் பிரிட்டன் வங்கிகளுக்கு ஏராளமான அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது.


6. இறந்தவர்களிடம் உறுப்பு எடுக்க தனி ஆம்புலன்ஸ் வசதி

நியூயார்க்: இறந்தவர்களிடம் இருந்து உடல் உறுப்புகளை பெறுவதற்காக, தனி ஆம்புலன்ஸ் சேவை நியூயார்க்கில் துவக்கப்பட்டுள்ளது. இறந்தவர்களிடம் இருந்து எடுக்கப்படும் உடல் உறுப்புகள், மற்றவர்களுக்கு பொருத்தப்படுவதன் மூலம், பலரது உயிர்கள் .காப்பாற்றப்படும்.

7. அணுகுண்டு தயாரிப்பு ரகசியம் கள்ளமார்க்கெட்டில் விற்பனை?

நியூயார்க்: அணுகுண்டு தயாரிக்கும் தொழில்நுட்ப ரகசிய ப்ளூபிரின்ட் உட்பட முக்கிய தகவல்கள், சர்வதேச அளவில் கள்ளமார்க்கெட்டில் வலம் வரலாம் என திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளன.

8. 'மரண தண்டனை அளியுங்கள்' அல்குவைதா பயங்கரவாதி ஆவேசம்

நியூயார்க்: "கொள்கைக்காக உயிரை தியாகம் செய்ய விரும்புகிறேன். எனக்கு மரண தண்டனை அளியுங்கள்'என, அமெரிக்க உலக வர்த்தக மைய தாக்குதலில் தொடர்புடைய, முக்கிய குற்றவாளி காலித் ஷேக் முகமது கூறியுள்ளான்.

9. 20 வயதுக்கு பிறகு எடை குறையாது

கலிபோர்னியா: ஒருவர் 20 வயதை கடந்துவிட்டால், எடையை குறைக்கும் முயற்சிகள் பெரியளவில் கைகொடுக்காது. என்ன தான் உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி செய்தாலும், எடை குறையாது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம், லிவர்மோரில் உள்ள தேசிய பரிசோதனைக் கூடம் அறிவுப்பு.

mgandhi
12-06-2008, 07:05 PM
13-6-2008


1-அரிசி ஏற்றுமதிக்குத் தடை: இந்தியாவுக்கு அமெரிக்கா கண்டனம்

வாஷிங்டன், அரிசி ஏற்றுமதிக்கு இந்தியா தடை செய்துள்ளதை அமெரிக்கா கடுமையாகக் குறை கூறியுள்ளது. அரிசி உள்ளிட்ட உணவுதானிய பொருள்கள் ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்திருப்பது சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்

2-துபையில் உண்ணாவிரதம் இருந்த காசநோயாளி இந்தியா வந்தார்

துபை, காசநோயாளி என்று தெரிந்ததால், துபையில் இருந்து இந்தியா செல்லவிருந்த இந்தியரை கத்தார் ஏர்வேஸ் விமான நிறுவனம் விமானத்தில் ஏற்ற அனுமதிக்கவில்லை. ஒரு மாத போராட்டத்துக்குப் பிறகு அவர் இந்தியா வந்தார்.

3-எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரசாரம்: 3 இந்திய அமைப்புக்கு ஐ.நா. விருது

நியூயார்க், எய்ட்ஸ் மற்றும் எச்.ஐ.வி.க்கு எதிராக சிறப்பாக பங்காற்றி வரும் 3 இந்திய அமைப்புகளுக்கு ஐ.நா.வின் ரெட் ரிப்பன் விருது கிடைத்துள்ளது.

4-இடிபாடுகளில் சிக்கியவர்களை எளிதில் கண்டறிய உதவும் நவீன ரேடார் கருவி: இஸ்ரேல் நிறுவனம் கண்டுபிடிப்பு

5-ஜெருசலம், மீட்புப் பணிக்கு உதவும் அதிநவீன ரேடார் கருவியை இஸ்ரேலிய நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. இதன்மூலம் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை எளிதில் மீட்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

mgandhi
14-06-2008, 07:10 PM
15-6-2008

ஜப்பான் நிலநடுக்கம் : மூன்று பேர் பலி

டோக்கியோ : ஜப்பானின் வடக்கு பகுதியில் இன்று காலை நிகழ்ந்த பயங்கர நிலநடுக்கத்தில் மூவர் பலியானதாகவும், 65 பேர் காயமடைந்ததாகவும் அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஜப்பானின் வடக்கு பகுதியில் இன்று காலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 7.2 புள்ளிகளாக பதிவாகியிருந்தது. வடக்கு ஜப்பானின் வாட் பகுதியில் இந்நிலநடுக்கத்தின் மையப்புள்ளி அமைந்திருந்தது.

ஊக்கமருந்து விவகாரத்தில் பாக்., வீரர்களுக்கு இனி உதவி கிடையாது: பாக்.,போர்டு

கராச்சி: ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு எதிர்காலத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு உதவ முன்வராது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தலைவர் நசீம் அஸ்ரப் தெரிவித்துள்ளார்.


அமெரிக்காவில், உலக குஜராத்தியர் கருத்தரங்கு : பிரம்மாண்டமாக நடத்த முடிவுநியூயார்க் : வெளிநாடு வாழ் குஜராத்தியர்களின் நலன் குறித்து விவாதிப்பதற்காக, வருகிற ஆகஸ்ட் மாதம் குஜராத்தியர்கள் கருத்தரங்கு அமெரிக்காவில் நடைபெறவிருக்கிறது. இந்த நிகழ்ச்சியை, ஏ.ஏ.ஐ.என்.ஏ., (வட அமெரிக்காவில் வாழும் இந்தியர்களுக்கான சங்கம் ) ஏற்பாடு செய்துள்ளது.

சீன நிலக்கரி சுரங்க விபத்தில் 27 பேர் பலி


பீஜிங் : சீன நிலக்கரி சுரங்கத்தில் நடைபெற்ற வெடிவிபத்தில் 27 பேர் பலியானார்கள். சீனாவில் அன்சின் நிலக்கரி சுரங்கத்தில் 58 பேர் பணியாற்றி கொண்டிருந்தனர். திடீரென நடந்த வெடி விபத்தில் சுரங்கத்தில் பணியாற்றி கொண்டிருந்த 27 பேர் பலியானார்கள்.

தெற்காசிய கால்பந்து : மாலத்தீவு சாம்பியன்


கொழும்பு: கிரிக்கெட்டில் மட்டுமல்ல தெற்காசிய கால்பந்து தொடரிலும் இந்தியா ஏமாற்றியது. பைனலில் மாலத்தீவு அணி, இந்தியாவை 10 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, கோப்பையை கைப்பற்றியது.

mgandhi
15-06-2008, 07:44 PM
16-6-2008

1-கிரிக்கெட் சுற்றுலா வளர்ச்சியில் இலங்கை வீரர்கள்


கொழும்பு: இந்திய கிரிக்கெட் அணி இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொள்வதை முன்னிட்டு இலங்கை அணியின் முன்னனி வீரர்கள் முத்தையா முரளிதரன், மகீலா ஜெயவர்தனே போன்றவர்கள் இன்று இந்தியாவில் சுற்றுலா வளர்ச்சி பணியில் ஈடுபட உள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணி இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 5 ஓரு நாள் போட்டிகளில் பங்கேற்க உள்ளது. இந்த தொடர் ஜூலை 23ம் தோதி துவங்கி ஆகஸ்ட் 29 ம் தேதி வரை நடைபெற உள்ளது.

2-அணுஆயுதங்கள் தீவிரவாதிகள் கைகளில் சிக்க வாய்ப்பு


வாஷிங்டன் : ரவுடி நாடுகள் மற்றும் தீவிரவாத குழுக்கள் ஆகியவற்றிற்கு கைகளில் அணுஆயுதங்கள் விற்கப்படும் சூழ்நிலை தற்போது நிலவுவதாக அமெரிக்க ஆய்வுத்தகவல் ஒன்று தெரிவிக்கிறது. முன்னாள் பாகிஸ்தான் அணு விஞ்ஞானி அப்துல் காதிர் கானிடம் விசாரணை நடத்திய அணு ஆயுத ஆய்வாளர்கள் அளித்த அறிக்கையின் படி, மிகச்சிறிய அணுஆயுதங்கள் தயாரிக்கக்கூடிய புளூபிரிண்ட் தீவிரவாதிகள் கைகளில் சிக்கியிருப்பதாகவும், இதனைக் கொண்டு அணுஆயுதங்கள் தயாரித்து, அதனை ஈரான் போன்ற நாடுகள் தங்களது ஏவுகணைகள் மூலம் செலுத்த வாய்ப்புகள் உள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

3-"டுவென்டி20' ஒரு நாள் போட்டியை ஆக்கிரமித்துவிடும்: பீட்டர்சன்

லண்டன் : இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் கிரிக்கெட் விளையாட்டின் புதிய வடிவமான "டுவென்டி20' போட்டிகள் ஒரு நாள் போட்டியின் முக்கியத்துவத்தை குறைத்துவிடும் என்று தெரிவித்துள்ளார். ஒரு நாள் போட்டிகள் ஒன்றிரண்டு ஆண்டுகளில் வரலாற்றில் மட்டுமே இடம்பெறும் நிலைக்கு "டுவென்டி20' கிரிக்கெட் ஆதிக்கம் செலுத்தம் என்று பீட்டர்சன் கருதுகிறார்.


4-நேபாளில் குண்டு வெடித்தது : 2 பேர் பலிகாத்மாண்டு : நேபாளில் (15-6-2008) சாலை ஓரத்தில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. இதில் இந்தியர் உட்பட 2 *பேர் உயிரிழந்தனர். 18 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இறந்த இந்தியர், லீலாதேவி கயஸ்தா என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துக்கு டெராய் ஆர்மி எனும் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. நேபாளில் ஜனநாயக ஆட்சி அமைந்த பிறகு நடைபெற்றுள்ள முதல் வன்முறை சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

5-தாய்வானில் நிலநடுக்கம்தாய்பேய் : தாய்வானில் (15-6-2008) மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்கடர் அளவுகோலில் 5.2 புள்ளிகளாக பதிவாகிய இந்த நிலநடுக்கத்தால் சேதம் ஏதும் ஏற்படவில்லை. தாய்வான், நிலநடுக்க மையத்தில் அமைந்துள்ளதால், அங்கு இதுமாதிரியான நிலஅதிர்வுகள் அடிக்கடி ஏற்பட்டு வருகின்றன.

6-துருக்கியில் குர்தீஷ் போராளிகள் வெடிகுண்டு தாக்குதல் : 3 பேர் காயம்


அங்காரா : குர்தீஷ் போராளிகள் துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இதில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 3 ராணுவ வீர்கள் படுகாயமடைந்தனர். கடந்த 1984ம் ஆண்டு முதல், தென்கிழக்கு துருக்கியில் சுயாட்சி கோரி, குர்தீஷ் ஆதரவாளர்கள் போராடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இம்மாதிரியான தாக்குதல் துருக்கியில் தொடர்ந்து நடந்து வருகிறது,. பொதுவாக குர்தீஷ் ஆதரவாளர்கள் துருக்கி ராணுவத்தினருக்கு ஆயதங்கள் கொண்டு வரும் வாகனங்களை குறி வைத்து தாக்குதுல் நடத்துவார்கள்.

இளசு
15-06-2008, 11:21 PM
தொடரும் உங்கள் அரும்பணிக்கு நன்றி நண்பர் காந்தி அவர்களே!

இடிபாடுகளில் சிக்கியவர்களைக் கண்டறியும் ராடர் கருவி ஒரு வரப்பிரசாதம்!

mgandhi
16-06-2008, 06:26 PM
தொடரும் உங்கள் அரும்பணிக்கு நன்றி நண்பர் காந்தி அவர்களே!

இடிபாடுகளில் சிக்கியவர்களைக் கண்டறியும் ராடர் கருவி ஒரு வரப்பிரசாதம்!

மிக்க நன்றி இளசு

mgandhi
16-06-2008, 06:27 PM
17-6-2008

1*ஜப்பான் நிலநடுக்கம் : பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு


டோக்கியோ : அண்மையில் ஜப்பானின் பல இடங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவாகியிருந்தது. சம்பவம் நிகழ்ந்த நாளன்று 3 பேர் பலியானதாக நாடு தெரிவித்தது. இந்நிலையில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட மீட்புக் குழுவினர் மேலும் பலரது சடலங்களை கண்டுபிடித்தனர். இந்நிலையில் பலியானோரின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்தது. 12 பேரை காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


2*யூரோ கால்பந்து: ஆஸ்திரியாஜெர்மனி, போலந்துகுரோஷியா இன்று மோதல்


வியன்னா : யூரோ கோப்பை கால்பந்து தொடரின் இன்றைய போட்டியில் ஆஸ்திரியாஜெர்மனி, போலந்துகுரோஷியா அணிகள் இன்று மோதுகின்றன. ஐரோப்பிய அணிகள் பங்கேற்கும் யூரோ கோப்பை கால்பந்து தொடரை ஆஸ்திரியா மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகள் இணைந்து நடத்துகின்றன. மொத்தம் 16 நாடுகள் 4 பிரிவுகளாக விளையாடுகின்றன.

3*இந்திய சுற்றுபயணத்தில் வாய்ப்பு கிடைக்காது: ஆஸி., வீரர் காடிச்

மெல்போர்ன்: இந்திய சுற்றுப்பயணத்திற்கான ஆஸ்திரேலிய அணியில் தனக்கு வாய்ப்பு கிடைக்காது என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் காடிச் தெரிவித்துள்ளார்.

4*இலங்கையில் மனித வெடிகுண்டு தாக்குதல் : 12 பேர் பலி


கொழும்பு : இலங்கையின் வடக்கு பகுதியில், வவுனியா நகரத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடந்துள்ளது. இதில் 12 காவலர்கள் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சில பெண் காவலர்களும் இந்த வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தனர். பள்ளி குழந்தை உட்பட 23 பேர் படுகாயமடைந்துள்ளனர்.


5*ஒலிம்பிக் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்காக விளையாடும் இந்தியர்


மெல்போர்ன் : இந்திய வம்சாவழியை சேர்ந்த சந்திப்குமார் எனும் இளைஞர், ஆஸ்திரேலியாவுக்காக பீஜிங் ஒலிம்பிக் போட்டியில் விளையாடுகிறார். இவர் மல்யுத்த வீரர். தற்சமயம் , சந்திப் ஆஸ்திரேலியாவில் கார் டிரைவராக பணி புரிகிறார்.

6*துருக்கியில் நடந்த குண்டு வெடிப்பில் 8 பேர் காயம்

இஸ்தான்புல் : துருக்கியில் நடந்த குண்டு வெடிப்பில் 8 பேர் படுகாயமடைந்தனர். துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் உள்ள பிரவுசிங் சென்டரில் திடீரென குண்டு வெடித்தது. இதில் அங்கிருந்த 8 பேர் படுகாயமடைந்தனர். குண்டு வெடிப்பிற்கான காரணம் தெரியவில்லை.

கலைவேந்தன்
16-06-2008, 07:14 PM
இன்றைய (17.06.2008) உலகச் செய்திகளுக்கு நன்றி அண்ணா!

mgandhi
16-06-2008, 07:19 PM
இன்றைய (17.06.2008) உலகச் செய்திகளுக்கு நன்றி அண்ணா!

நன்றி கலைவேந்தன்

mgandhi
17-06-2008, 06:49 PM
18-6-2008

1. புலிகள் தாக்குதலில் 12 போலீசார் பலி

கொழும்பு : இலங்கையில் விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படை தாக்குதலில் 12 போலீசார் பலியாயினர்; மேலும், 23 பேர் காயமடைந்தனர்.

2. பெண் மனித வெடிகுண்டுகளால் அமெரிக்க ராணுவம் கவலை

பாக்தாத் : ஈராக்கில் தற்கொலை படை தாக்குதலுக்கு, பெண்களை பயன்படுத்துவது அதிகரித்துவருகிறது. ஈராக்கில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள அமெரிக்க படையினர் மீது, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

3. 350 ஆண்டுக்கு முந்தைய கடன் : அடைத்தார் சார்லஸ்

லண்டன் : அரச குடும்பத்தாரால், 350 ஆண்டுக்கு முன் வாங்கப்பட்ட கடன் தொகையை, வட்டி இல்லாமல் திரும்பி செலுத்தினார் இங்கிலாந்து இளவரசர் சார்லஸ். மத்திய இங்கிலாந்தில் செயல்பட்டு வரும் குளோதரிஸ் நிறுவனத்திடம்,

4. இந்திய எழுத்தாளர் கைவண்ணத்தில் இம்ரான் கான் வாழ்க்கை வரலாறு

லாகூர் : பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் வாழ்க்கை வரலாற்றை, இந்தியாவைச் சேர்ந்த பிராங் ஹுசூர் என்பவர் எழுதிவருகிறார். அடுத்த மாதம் இந்த புத்தகம் வெளியிடப்பட உள்ளது.

5. முஷாரப்பை அகற்ற நவாஸ் தீவிரம்

கராச்சி : பாக்., முஸ்லிம் கட்சியின் தலைவரும், பெனசிர் புட்டோவின் கணவருமான, ஆசிப் அலி சர்தாரி, பாக்.,அமைச்சர்களுக்கு இரவு விருந்து அளித்தார். அப்போது, முஷாரப்பை வெளியேற்றுவதில் பாக்., மக்கள் கட்சியும் முக்கிய பங்கு வகிக்கும் என்று குறிப்பிட்டார்

6. 47வது மாடியிலிருந்து விழுந்தவர் உயிர் பிழைத்த அதிசயம்

நியூயார்க் : அமெரிக்காவில் 47 வது மாடியிலிருந்து , தலை கீழாக கீழே விழுந்தவர்உயிர் பிழைத்த அதிசயம் நடந்துள்ளது. அமெரிக்காவின் நியூயார்க்கை சேர்ந்தவர் அல்சிடிஸ் மொரினோ (37). இவர், அடுக்கு மாடி குடியிருப்பில் ஜன்னல் களை சுத்தம் செய்யும்போது தலை கீழாக கீழே விழுந்தார்.

7 உயிருடன் ஒசாமா பின்லாடன் : அதிபர் புஷ் பிராயச்சித்தம்

லண்டன் : ஒசாமா பின் லாடன் இன்னும் உயிருடன் இருப்பதாக, அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் கூறியுள்ளார். "அவரை உயிருடனோ, பிணமாகவோ கொண்டு வர வேண்டும் என்று நான் கூறியது, முஸ்லிம் மக்களிடம் தவறான எண்ணத்தை ஏற்படுத்தி விட்டது' என்றும் புஷ் கூறியுள்ளார்.

8. சீனாவில் பயங்கர வெள்ளம்

பெய்ஜிங் : சீனாவில் நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து, அடுத்த பாதிப்பாக பெய்து வரும் கனமழையால் வெள் ளப்பெருக்கு ஏற்பட்டுள் ளது.

mgandhi
18-06-2008, 05:59 PM
19-6-2008

1-சீனாவில் கனமழை: பலி எண்ணிக்கை 171 ஆக உயர்வு

பீஜிங்: சீனாவில் ஏற்பட்டுள்ள கனமழை காரணமாக 171 பேர் பலியாகி உள்ளனர். கடந்த மே மாதம் 12ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக ஆயிரக்கணக்கனோர் உயிரிழந்தனர். இந்நிலையில் மீண்டும் ஒரு பேரடியாக கடந்த பதினோறு நாட்களாக அங்கு கனமழை பெய்து வருகிறது.யூரோ 2008 :

2-யூரோ 2008 : இத்தாலி காலிறுதிக்கு தகுதி

ஜுரிச் : ஸ்விட்சர்லாந்திலுள்ள ஜுரிச்சில் நடந்த லீக் போட்டியில் இத்தாலி பிரான்சு அணிகள் மோதின. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டியில் இத்தாலி அணி 20 என்ற கோல் கணக்கில் பிரான்சு அணியை வீழ்த்தியது. இதனை தொடர்ந்து வருகிற ஞாயிற்று கிழமையன்று இத்தாலி அணி குரூப் டி பிரிவிலுள்ள ஸ்பெயின் அணியை சந்திக்கிறது.

3-ஒலிம்பிக் ஜோதி தொடர் : திபெத் பயணம் 1 நாளாக குறைப்பு

பீஜிங் : ஒலிம்பிக் ஜோதி தொடர் மீண்டும் தொடங்கியுள்ளது. முன்னதாக திபெத் தலைநகர் லாசாவில் ஒலிம்பிக் ஜோதி தொடர் 2 நாட்கள் நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் தொடர் ஒரு நாள் மட்டும் அதாவது, ஜூன் 21ம் தேதி மட்டும் நடைபெறும் *என ஒலிம்பிக் போட்டி ஒருங்கிணைப்பு குழு தெரிவித்துள்ளது.

4-அணுசக்தி ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட அமெரிக்கா வலியுறுத்தல்

வாஷிங்டன் : அணு சக்தி ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட தொடர்ந்து வலியுறுத்து*வோம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதற்காக அடுத்த ஆண்டு ஜனவரி 20ம் தேதி, அதாவது அமெரிக்காவில் புதிய ஆட்சி அமையவிருக்கும் நாள் வரை தொடர்ந்து வலியுறுத்துவோம் என்று தெரிவித்துள்ளது.

5-குவைத்தில் சுய முன்னேற்றப் பயிற்சி முகாம்

குவைத் : குவைத்தில் பெங்களூரைச் சேர்ந்த 'இஸ்லாமிக் வாய்ஸ்' ஆங்கில மாத இதழ் ஆசிரியர் சாதத்துல்லா கான் ஜுன் 18,19,20 ஆகிய தேதிகளில் சுய முன்னேற்றப் பயிற்சி முகாமினை நடத்துகிறார். இம்முகாமினை முஸ்லிம் கல்விச் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது. மேலும் விபரமறிய 00965 7527287.

6-கடத்தப்பட்ட பிலிப்பைன்ஸ் பத்திரிக்கையாளர்கள் விடுவிப்பு

மணிலா : கடத்தப்பட்ட பிலிப்பைன்ஸ் பத்திரிக்கையாளர்கள் விடுவிக்கப்பட்டனர். பிலிப்பைன்சில் அல்குவைதா தொடர்புடைய தீவிரவாதிகள் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர், கேமராமேன் மற்றும் பல்கலைகழக விரிவுரையாளரை ஒரு வாரத்திற்கு முன் கடத்தி சென்றனர். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் கடத்தப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டதாக போலீஸ் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்

mgandhi
20-06-2008, 05:32 PM
21-6-2008

1-தாய்லாந்தில் ஹெலிகாப்டர் விபத்து : 10 பேர் பலி


பேங்காக் : தாய்லாந்து ராணுவத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 10 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் 8 பேர் காவல் துறையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது விபத்தா இல்லை ஏதேனும் சதி செயலா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

2-ஆப்கனில் தற்கொலை படை தாக்குதல் : 12 பேர் பலி

காந்தஹார் : ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் மீது நடத்தப்பட்ட தற்கொலை படை தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர். அமெரிக்க வீரர்களுடன் வாகனம் ஒன்று கூட்டம் அதிகம் நிறைந்த பகுதி வழியாக சென்று கொண்டிருந்தது. அப்பொழுது அந்த வாகனத்தின் மீது தற்கொலை படையை சேர்ந்த ஒருவர் மோதியதில் வாகனம் முற்றிலுமாக சேதமடைந்தது. இதில் 12 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். இந்த தற்கொலை படை தாக்குதலுக்கு இது வரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

3-ரயில்வே பாலம் வெடி வைத்து தகர்ப்பு : ஜார்கண்டில் தீவிரவாதிகள் அட்டகாசம்


கும்லா : ஜார்கண்டில், தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் ரயில்வே டிராக்கை வெடி வைத்து தகர்த்தனர். ஜார்கண்டில் இந்த அமைப்பினர் இன்று பந்த்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர். இன்று அதிகாலை சுமார் 3 மணி அளவில் நடைபெற்ற இந்த தாக்குதலில் அந்த தடத்தில் சென்று கொண்டிருந்த சரக்கு ரயிலின் 5 பெட்டிகள் தடம் புரண்டன. தண்டவாளத்தை சரி செய்யும் பணி நடைபெற்று வருவதால், அந்த மார்க்கத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

4-யூரோ 2008 : அரையிறுதிக்குள் நுழைந்தது ஜெர்மனி

பேசல் : சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெற்ற யூரோ கோப்பைக்கான கால்பந்து போட்டிகளின் காலிறுதி போட்டியில், போர்சுகலை 32 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஜெர்மனி அரையிறுதிக்குள் நுழைந்தது. இந்த வெற்றியை தொடர்ந்து, இன்று குரேஷியாதுருக்கி அணிகளுக்கு இடையே நடைபெறும் போட்டியில் வெற்றி பெரும் அணியுடன் அரையிறுதி போட்டியில் மோதும்.5-இஸ்லாமிய பெண்களிடம் மன்னிப்பு கேட்டார் ஒபாமா


வாஷிங்டன் : அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான, ஜனநாயக கட்சி வேட்பாளர் ஒபாமா இஸ்லாமிய* பெண்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். கடந்த திங்கட் கிழமையன்று டெட்ராய்ட் மாகாணத்தில் நடைபெற்ற பேரணியின் போது, 2 முஸ்லீம் பெண்கள் ஒபாமாவுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள முயன்றனர். ஆனால், பாதுகாப்பு அதிகாரிகள் அவ்விரு பெண்களும் முக்காடு போட்டிருந்ததால் புகைப்படம் எடுத்து கொள்ள அனுமதிக்கவில்லை. இதனை தொடர்ந்து, அமெரிக்காவுடனான இஸ்லாமியர்களின் உறவு மேம்பாட்டு சங்கம், ஒபாமா இந்த செயலுக்காக தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது. மேலும் ஒபாமா, எதிர்காலத்தில் அமெரிக்காவில் இஸ்லாமிய சமுதாயத்தினருக்கு எதிராக பெருகி வரும் வெறுப்பை போக்க வழிவகை செய்ய வேண்*டும் என்றும் கோரிக்கை வைத்தது. இந்நிலையில் ஒபாமா சம்பந்தப்பட்ட அந்த இரு பெண்களிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, மன்னிப்பு கேட்டதாக ஒபாமாவின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

mgandhi
21-06-2008, 05:41 PM
22-6-2008

*1*சரப்ஜித்சிங்குக்கு தூக்கு தண்டனை ரத்து

இஸ்லாமாபாத் : தூக்கு தண்டனையிலிருந்து தப்பினார் சரப்ஜித்சிங். பாகிஸ்தான் அரசு மரண தண்டனையை ரத்து செய்துள்ளது. இதனால் சரப்ஜித் சிங்கின் தூக்கு தண்டனை ரத்து ஆகியுள்ளது. பாகிஸ்தான் பிரதமரின் பரிந்துரையின் படி சரப்ஜித்தின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது.

*2*யூரோ 2008 : ஸ்பெயின் இத்தாலி அணிகள் காலிறுதியில் மோதல்

பேடன் : யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் நாளை ஸ்பெயின் இத்தாலி அணிகள் மோதுகின்றன. ஸ்பெயின் ,இத்தாலி அணிகள் பலம் வாய்ந்த அணிகள் என்பதால் ரசிகர்களிடையே இந்த போட்டி பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

*3*ஒலிம்பிக் ஜோதி திபெத் வந்தடைந்தது


லாசா : ஒலிம்பிக் ஜோதி திபெத் தலைநகர் லாசா வந்தடைந்தது. பலத்த பாதுகாப்புடன் ஜோதி 9.2 கி.மீ தூரம் பயணம் செய்யும் என தெரிகிறது. முன்னதாக குறிப்பிட்ட தூரத்தை விட குறைவான தூரமே ஜோதி பயணம் செய்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக ஜோதி தொடர் தூரம் குறைக்கப்பட்டுள்ளதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். சுமார் 156 பேர் ஜோதியை எடுத்து செல்கின்றனர், இதில் 75 பேர் திபெத்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

*4*முஷாரப் பதவி விலக வேண்டும் : பாக்., மக்கள் விருப்பம்

வாஷிங்டன் : பாகிஸ்தான் அதிபர் முஷாரப் பதவி விலக வேண்டும் என பெரும்பான்மையான மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். அமெரிக்க ஏஜென்சியின் சர்வேபடி பாகிஸ்தான் மக்களில் நான்கில் மூன்று பேர் அதிபர் முஷாரப் பதவி விலக வேண்டும் என கூறியுள்ளனர். மேலும் தங்களை அச்சுறுத்தும் நாடுகளாக முதலில் அமெரிக்காவையும், அடுத்ததாக இந்தியாவையும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

*5*காலம் தாழ்த்தினால் அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேறுவது கடினம் : அமெரிக்கா


வாஷிங்டன் : அணுசக்தி ஒப்பந்தத்தை காலம் தாழ்த்தாமல் நிறைவேற்ற வேண்டும் என அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. அணுசக்தி ஒப்பந்தம் இடதுசாரி கட்சிகளின் எதிர்ப்பால் இழுபறி நிலையிலேயே உள்ளது. வரும் ஜனவரி மாதத்திற்குள் நிறைவேற்றப்படாவிடில் ஒப்பந்தம் காலாவதியாகி விடும். காலம் தாழ்த்தினால் அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேறுவது கடினமாகிவிடும் என அமெரிக்கா எச்சரித்துளளது.

கலைவேந்தன்
21-06-2008, 05:47 PM
உலகச்செய்திகள் வாசித்தேன்! வழங்குகைக்கு நன்றி அண்ணா!

mgandhi
21-06-2008, 05:58 PM
உலகச்செய்திகள் வாசித்தேன்! வழங்குகைக்கு நன்றி அண்ணா!


மிக்க நன்றி வேந்தரே

mgandhi
22-06-2008, 05:31 PM
23-6-2008

1-கருத்துக் கணிப்பில் ஒபாமா முன்னிலை


2-தூக்கு தண்டனையை குறைக்க பாகிஸ்தான் திட்டம்: சரப்ஜித் சிங் விடுதலையாக வாய்ப்பு3-நேபாள அரசில் யாருக்கு எந்தப் பதவி?: தலைவர்கள் ஆலோசனை


4-ஆப்கன் குண்டுவெடிப்பில் 4 யு.எஸ். வீரர்கள் பலி


5-அரசுடனான பேச்சு: தலிபான்கள் புறக்கணிப்பு6-ஹிட்லர் அளித்த கார் எங்கே?: நேபாளத்தில் சர்ச்சை


7-சிந்திப்பதிலும் ஆண், பெண் வேறுபாடு!


8-சர்வதேச பிரச்னைகளைத் தீர்க்க இந்தியாவுடன் கூட்டு: அமெரிக்கா


9-லண்டனில் ஆயுர்வேத மையம்

கலைவேந்தன்
22-06-2008, 07:24 PM
செய்திகளுக்கு நன்றி அண்ணா! தலைப்பிலே தேதி மாற்றுங்க அண்ணா!

இளசு
22-06-2008, 09:37 PM
செய்திகளுக்கு நன்றி காந்தி அவர்களே!

தேதி மாற்றம் செய்துவிட்டேன் கலை!


இரவில் வாங்கினோம்
இன்னும் விடியவே இல்லை...

வெள்ளைக்காரர்கள் போய்
கொள்ளைக்காரர்கள் வந்தனர்..

இக்கவிதைகள் இந்திய விடுதலைக்காக எழுதப்பட்டன..

நேபாளக் குடியரசாவது - இவ்வகைக் கவிதைகளுக்குத் தப்பிய
நல்லரசாகத் திகழட்டும்..!!!!

அறிஞர்
23-06-2008, 02:56 AM
அமெரிக்க தேர்தல் விறு விறுப்பாக இருக்கும்...

ஓபாமா வெற்றி பெற்றால்.. முதல் கறுப்பின அதிபதியாவார்.

அனுராகவன்
23-06-2008, 05:15 AM
நன்றி R.மோகன் காந்தி.

mgandhi
23-06-2008, 07:24 AM
செய்திகளுக்கு நன்றி அண்ணா! தலைப்பிலே தேதி மாற்றுங்க அண்ணா!

நன்றி வேந்தரே

mgandhi
23-06-2008, 07:26 AM
செய்திகளுக்கு நன்றி காந்தி அவர்களே!

தேதி மாற்றம் செய்துவிட்டேன் கலை!


இரவில் வாங்கினோம்
இன்னும் விடியவே இல்லை...

வெள்ளைக்காரர்கள் போய்
கொள்ளைக்காரர்கள் வந்தனர்..

இக்கவிதைகள் இந்திய விடுதலைக்காக எழுதப்பட்டன..

நேபாளக் குடியரசாவது - இவ்வகைக் கவிதைகளுக்குத் தப்பிய
நல்லரசாகத் திகழட்டும்..!!!!

நன்றி தேதி மாற்றம் செய்ததிற்க்கு இளசு

mgandhi
23-06-2008, 07:27 AM
அமெரிக்க தேர்தல் விறு விறுப்பாக இருக்கும்...

ஓபாமா வெற்றி பெற்றால்.. முதல் கறுப்பின அதிபதியாவார்.

மிக்க நன்றி அறிஞர்

mgandhi
23-06-2008, 07:28 AM
நன்றி R.மோகன் காந்தி.

நன்றி அனு

mgandhi
23-06-2008, 05:52 PM
24-6-2008

1. பள்ளி கிரேடில் மாற்றம் செய்தமாணவனுக்கு 38 ஆண்டு சிறை?

சிலிகான்வேலி:நண்பனுடன் சேர்ந்து பள்ளியின் பூட்டை திறந்து, அங்குள்ள கம்ப்யூட்டரில் தனது கிரேடில் மாற்றம் செய்ததோடு, பரீட்சை பேப்பர்களையும் திருடிய மாணவனுக்கு 38 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப் பட உள்ளது.


2. 'ஸ்கார்ப்' அணிய மறுப்பதா?மகளை கொலை செய்தார் தந்தை

டொரண்டோ:"ஸ்கார்ப்'அணிய மறுத்த மகளை, கொலை செய்த பாகிஸ்தான் நபரை, கனடா போலீசார் கைது செய்தனர்.பாகிஸ்தானை சேர்ந்தவர் முகமது பர்வேஸ். பல ஆண்டுகளாக குடும்பத்துடன் கனடாவில் வசித்து வருகிறார். இவரது மகள் அக்ஷா (16) பள்ளியில் படித்துவருகிறாள்.


3. தற்கொலை செய்வோரின் புகலிடமாகிறது ஜப்பான்* தினமும் 500 பேர் பலியாவதால் போலீசார் கவலை

டோக்கியோ:ஜப்பானில் கடந்தாண்டில் மட்டும் 33 ஆயிரம் பேர் தற்கொலை செய்து கொண்டதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது. தினமும் 500 பேர் தற்கொலை மூலம், உயிரை மாய்த்துக் கொள்வதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.உலகில்

4. ஒபாமாவின் செய்தி தொடர்பாளராக இந்திய அமெரிக்கர் நியமனம்

வாஷிங்டன்:அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட உள்ள பராக் ஒபாமாவின், வேட்பாளர் தேர்வு பிரச்சாரத்தின் போது, மூத்த செய்தித் தொடர்பாளராக செயல்பட்டவர், அமெரிக்க இந்தியரான இளம் அட்டர்னி ஜெனரல் ஹரி சேவுகன்.


5. இந்தியா வருகிறார் பாக்., அமைச்சர்

இஸ்லாமாபாத்:பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் முகமது குரேஷி, வரும் 27ம் தேதி நான்கு நாள் பயணமாக இந்தியா வருகிறார். இவருடன் ஆறு பேர் கொண்ட உயர்மட்டக் குழுவும் வருகிறது.


6. பல்கலைக்கு ரூ.45 கோடி அமெரிக்க இந்தியர் தாராளம்

வாஷிங்டன்:மேல்படிப்புக்காக உதவித் தொகை வழங்கிய கல்வி நிறுவனத்துக்கு, படிப் படியாக வாழ்க்கையில் உயர்ந்த, அமெரிக்க இந்தியர் ரூ.45 கோடி நன்கொடை அளித்து, கைம்மாறு செய்துள்ளார். தனிப்பட்ட நபர் அளித்த அதிக நன்கொடை இது.

கலைவேந்தன்
23-06-2008, 06:21 PM
முதல் இரண்டு செய்திகளும் மிகவும் பயங்கரமானவை அண்ணா!

செய்திகளுக்கு நன்றி அண்ணா!

mgandhi
24-06-2008, 05:05 PM
முதல் இரண்டு செய்திகளும் மிகவும் பயங்கரமானவை அண்ணா!

செய்திகளுக்கு நன்றி அண்ணா!

நன்றி வேந்தரே

mgandhi
24-06-2008, 05:37 PM
25-6-2008


1-ஆசிய கோப்பை கிரிக்கெட்: ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 172/6லாகூர்: ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 39 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 172 ரன் எடுத்துள்ளது. முன்னதாக களமிறங்கிய வங்கதேச அணி 8 விக்கெட் இழப்பிற்கு 300 ரன் எடுத்தது.

2-ஆசிய கோப்பை கிரிக்கெட்: ஹாங்காங் 133 /8கராச்சி: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான், ஹாங்காங் அணிகள் விளையாடுகின்றன. முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் 50 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 288 ரன் எடுத்தது. இதனையடுத்து விளையாட தொடங்கிய ஹாங்காங் அணி, 37 ஓவரில் 8 விக்கெட் இழந்து 133 ரன் எடுத்து விளையாடி வருகிறது


3-விம்பிள்டன் டென்னிஸ் : சானியா வெற்றி


லண்டன் : விள்பிள்டன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றுப் போட்டியில் இந்திய வீராங்கனை சானியா மிர்சா வெற்றி பெற்றுள்ளார். கிராண்ட் ஸ்லாம் பட்டமான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் துவங்கி முதல் சுற்றுப் போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த போட்டியில் இந்திய வீராங்கனை சானியா மிர்சா, கொலம்பிய வீராங்கனை காட்டலீனா கேஸ்டானோவை எதிர்கொண்டார். இந்த போட்டியில் சானியா 76, 36, 64 என்ற செட் கணக்கில் கேஸ்டானோவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். சர்வதேச தரவரிசைப்பட்டியலில் சானியா 32வது ரேங்க் முன்னேறியிருக்கும் நிலையில் இந்த வெற்றி குறிப்பிடத்தக்கது.


4-பாகிஸ்தானில் 19 பேர் சுட்டுக்கொலை


இஸ்லாமாபாத் : ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள பாகிஸ்தானில் தாலிபன்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 19 பேர் பலியாகினார்கள். தாலிபன் படையின் கமாண்டர் கான்ஆகாவும் சுட்டுக்கொல்லப்பட்டார். தாலிபன் தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரின் வாகனத்தை தகர்த்ததை தொடர்ந்து, தாக்குதல் ஆரம்பமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

5-அமெரிக்காவில் செயற்கை கொழுப்பு உணவிற்கு தடை


நியூயார்க் : அமெரிக்காவில் உணவகங்களில் வழங்கப்படும் உணவில் பயன்படுத்தப்படும் கொழுப்பை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொழுப்பு உணவுகளை சாப்பிடுவதால் இதய நோய், உடல் பருமன் போன்ற பல நோய்கள் ஏற்படுகின்றன. இதனால் மக்கள் நலனுக்காக முதலில் நியூயார்க் நகரத்தில் உணவகங்களில் செயற்கை கொழுப்பை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு ஜூலை 6ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும்.

அனுராகவன்
25-06-2008, 05:14 AM
நன்றி R.மோகன் காந்தி.

mgandhi
25-06-2008, 08:09 AM
நன்றி R.மோகன் காந்தி.
நன்றி அனு

mgandhi
25-06-2008, 05:35 PM
26-6-2008

1-அணுசக்தி ஒப்பந்தம்: இந்தியாவுக்கு அமெரிக்காவின் நெருக்கடி அதிகரிப்பு

வாஷ’ங்டன்,அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக இந்தியாவுக்கு அமெரிக்காவின் நெருக்கடி அதிகரித்துள்ளது. புஷ், அமெரிக்க அதிபராக இருக்கும்போதே ஒப்பந்தத்தை அமலுக்கு கொண்டு வருவதில் அமெரிக்கா தீவிரமாக இருக்கிறது.

2- பாகிஸ்தானில் முஷரப் பதவி விலகத்தயார் -

இஸ்லாமாபாத், ஜூன். நான் சர்வாதிகாரியாக இருந்தபோது எடுத்த நடவடிக்கைகளுக்காக என் மீது வழக்கு தொடர்வதற்கு அரசாங்கம் தடை விதித்தால் நான் ஜனாதிபதி பதவியில் இருந்து விலகத்தயாராக இருப்பதாக அவர் தன் உதவியாளர்களிடம் கூறி இருக்கிறார்.

3- கச்சா எண்ணை விலை உயர்வு பிரச்சினைக்கு ஒரேநாளில் தீர்வு காணமுடியாது: அமெரிக்கா -

வாஷ’ங்டன், கச்சா எண்ணை விலை உயர்வு பிரச்சினைக்கு ஒரே நாளில் தீர்வு காணமுடியாது. அப்படி ஒரே நாளில் அந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு எந்த மாஜிக்கும் கிடையாது என்று அமெரிக்கா கூறி உள்ளது.

4- வெளிநாட்டுப் பயணிகளுக்கு திபெத்தில் 25-6-2008 முதல் அனுமதி -

பெய்ஜிங், சுமார் 3 மாதங்களுக்குப் பிறகு, திபெத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு 25-6-2008 புதன்கிழமை முதல் அனுமதி அளிக்கப்படுகிறது.

5-இந்தியாவுக்கு யுரேனியம் விற்பனை செய்ய முடியாது: ஆஸ்திரேலியா -

கான்பெரா, அணு ஆயுத பரவல் தடை சட்டத்தில் கையெழுத்து போடாததால் இந்தியாவுக்கு யுரேனியம் சப்ளை செய்ய முடியாது என்று ஆஸ்திரேலிய வெளியுறவு மந்திரி ஸ்டீபன் ஸ்மித் தெரிவித்தார்.


6-நவாஸ் ஷெரீப் தகுதி இழந்ததாக கோர்ட்டு தீர்ப்பு -

லாகூர், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு தகுதி அற்றவர் என லாகூர் ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்து உள்ளது.

கலைவேந்தன்
25-06-2008, 05:47 PM
செய்திகளுக்கு நன்றி அண்ணா!

mgandhi
25-06-2008, 05:50 PM
செய்திகளுக்கு நன்றி அண்ணா!

மிக்க நன்றி வேந்தரே

mgandhi
27-06-2008, 07:14 PM
28-6-2008

1-காம்பீருக்கு சிறந்த 2020 ஆட்டக்காரர் விருது


கராச்சி : காஸ்ட்ரோல் நிறுவனம் சார்பில் வழங்கப்படும் ஆசிய கிரிக்கெட் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி கராச்சியில் நடைபெற்றது. சச்சின் டெண்டுல்கர் சிறந்த ஒருநாள் ஆட்டக்காரர் விருதையும், சிறந்த ஆசிய ஆட்டக்காரர் விருதினை சவுரவ் கங்குலியும் பெற்றனர்.


2-மைக்ரோ சாப்ட்வேர் நிறுவன தலைமை பொறுப்பிலிருந்து பில்கேட்ஸ் விலகல்


கலிபோர்னியா: மைக்ரோ சாப்ட்வேர் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகப் போவதாக அந்நிறுவத்தின் அதிபர் பில்கேட்ஸ் அறிவித்துள்ளார். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக கணிணி மென்பொருள் தயாரிப்பின் மூலம் உலகப் பணக்காரர்கள் வரிசையில் முன்னணி வகிப்பவர் பில்கேட்ஸ். இவர் தற்போது மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் தலைமை பொறுப்பிலிருந்து விலகப் போவதாக அறிவித்துள்ளார். இதற்காக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக பொறுப்புக்களை பிரித்து கொத்துள்ளார். இனி தான் முழு நேர சமூக சேவை செய்யப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் தனது பங்குதாரர் நிலை தொடரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

3-கச்சா எண்ணெய் விலை 140 டாலரைத் தாண்டியதுநியூயார்க்: கச்சா எண்ணெய் விலை பாரல் ஒன்றுக்கு 140 டாலராக உயர்ந்துள்ளது. இது மேலும் உயரும் என்று கூறப்படுகிறது. இதனால் பெட்ரோல்,டீசல் விலை மேலும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது


4-இந்தோனேசியாவில் ராணுவ விமானம் மாயம்


ஜகார்த்தா : இந்தோனேசியாவில் 18 பேருடன் சென்ற விமானப்படை விமானம் காணாமல் போயுள்ளது. இந்தோனேசிய விமானப்படையை சேர்ந்த காசா212 ராணுவ விமானம் ஜகார்த்தா விமானநிலையத்தில் இருந்து 13 பயணிகள் மற்றும் 5 விமானிகளுடன் நேற்று கிளம்பியது.பின்னர் விமானத்துடன் தொடர்பு துண்டிக்கப்பட்டதை அடுத்து விமானத்தை ராணுவத்தினர் தேடி வருகின்றனர். விமானத்தில் பயணம் செய்தவர்களில் இந்தியர்களும் உள்ளனர்.


5-யூரோ கால்பந்து: இறுதி போட்டியில் ஸ்பெயின் ஜெர்மனி மோதுகிறது

பாசல்: யூரோ கால்பந்துஇறுதி போட்டியில் ஜெர்மனியும், ஸ்பெயினும் *மோதுகிறது. ஜரோப்பிய அணிகள் மோதும் 2008ம் ஆண்டு கால்பந்து போட்டிகள் ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து நாடுகளில் நடைபெற்று வருகிறது. அரையிறுதி போட்டியில் ஜெர்மனி, துருக்கி, ரஷ்யா, ஸ்பெயின் அணிகள் தகுதி பெற்றன.

mgandhi
30-06-2008, 05:15 AM
.30-6-2008

1-மலேசியாவில் இந்து திருமணத்தில் திடீர் தாக்குதல்


2-.இந்து கோயிலைப் பாதுகாக்க அணைத் திட்டத்தை நிறுத்த வேண்டும்


3-.ஒபாமா, ஹிலாரி கூட்டாக பிரசாரம்


4-.காஷ்மீருக்கு தன்னாட்சி: ஜர்தாரி யோசனை


5-.17,200 பேரை பணியிலிருந்து நீக்க ஜெர்மன் சீமென்ஸ் நிறுவனம் முடிவு


6-."ஓரினச் சேர்க்கையாளருக்காக போராடுவார் ஒபாமா'


.7-போதை மருந்து விற்பனை: மேலும் 6 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்


.8-இராக், ஆப்கானிஸ்தான் போருக்கு நிதி: யு.எஸ். நாடாளுமன்றம் ஒப்புதல்


.9-பால் குடித்தால் மாரடைப்பு வராது?


10-.அணு உலைக் கோபுரத்தை அழித்தது வடகொரியா


.11-மரண தண்டனையை ரத்து செய்ய இஸ்லாமிய தலைவர்கள் எதிர்ப்பு


.12-30 ஆயிரம் மியான்மர் அகதிகளுக்கு புது வாழ்வு


.13-பெட்ரோல் விலை உயர்வு: நேபாளத்தில் வேலைநிறுத்தம்


.14-பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குரேஷி இன்று இந்தியா வருகை


.15-ஊழல் மலிந்த நாடுகளில் இந்தியாவுக்கு 74-வது இடம்

mgandhi
30-06-2008, 06:05 PM
1-7-2008

1-ராவல்பிண்டியில் இரட்டை வெடிகுண்டு தாக்குதல் : 10 பேர் பலி


இஸ்லாமாபாத் : ராவல்பிண்டியில் இரண்டு சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் வெடித்தன. இந்த தாக்குதலில் வருமானவரி அலுவலகம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த கோர சம்பவத்தில் இது வரை 10 பேர் பலியாகியுள்ளனர். படுகாயமடைந்தவர்கள் மருத்து*வமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

2-பிலிப்பைன்சில் நிலச்சரிவு : 4 பேர் மரணம், 26 பேர் படுகாயம்


மணிலா : பிலிப்பைன்சில் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கி 4 பேர் பரிதாபமாக மரணமடைந்துள்ளனர். இதில் 3 பேர் குழந்தைகள். 26 பேர் படுகாயமடைந்துள்ளனர்

3-ஜிம்பாப்வே தேர்தல் முடிவு செல்லாது : ஐ.நா., அறிவிப்பு


நியூயார்க் : ஐ.நா., சபை பொது செயலாளர் பான் கி மூன், ஜிம்பாப்வேயின் தேர்தல் முடிவுகள் செல்லாது என அறிவித்துள்ளார். ஜிம்பாப்வேயில் , அதிபர் ராபர்ட் முகாபே அதிபர் தேர்தலில் தான் வெற்றி பெற்றுள்ளதாக, தன்னிச்சையாக அறிவித்துள்ளார்.

4-அமெரிக்காவில் 2 ஹெலிகாப்டர்கள் நடுவானில் மோதல்: 7 பேர் பலி

அரிசோனா,அமெரிக்காவில் 2 ஹெலிகாப்டர்கள் நடுவானில் மோதிக் கொண்டன. இதில் 7 பேர் பலியானார்கள்.

5- காஷ்மீருக்கு தன்னாட்சி வழங்க வேண்டும்: சர்தாரி

லண்டன், காஷ்மீருக்கு தன்னாட்சி வழங்குவதே நீண்டகால பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வாக அமையும் என, பாகிஸ்தான் மக்கள் கட்சி இணைத் தலைவர் ஆசிப் அலி சர்தாரி தெரிவித்துள்ளார்.

6- பாகிஸ்தானில் கோயிலைப் பாதுகாக்க அணைத் திட்டத்தை நிறுத்த கோரிக்கை

இஸ்லாமாபாத்,பாகிஸ்தானில் உள்ள இந்துக் கோயில் ஒன்றை பாதுகாக்க வலியுறுத்தி அந்நாட்டின் தென்மேற்கு மாநிலமான பலுசிஸ்தான் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

7- அந்தமானில் 3 வது நாளாக நிலநடுக்கம்

நிகோபார், அந்தமானில் நேற்று 3 வது நாளாக நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் பீதி அடைந்தனர்.

mgandhi
01-07-2008, 05:34 PM
2-7-2008

1- திபெத் பிரச்சினை குறித்து இன்று பேச்சுவார்த்தை

பெய்ஜிங், சர்ச்சைக்குரிய திபெத் பிரச்சினை குறித்து žன தலைநகர் பெய்ஜிங் நகரில் இன்று முதல் 2 நாட்கள் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

2- இலங்கையில் ரயில் தடம்புரண்டதில் 3 பேர் பலி: 20 பேர் காயம்

அனுராதபுரம், சிறிலங்காவின் வடமத்திய மாகாணத்தில் உள்ள அனுராதபுரத்திலிருந்து மாத்தறை நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயில் ஹ’க்கடுவ பாலத்தில் நேற்று தடம்புரண்டு விபத்தில் சிக்கியதால் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 20 பேர் காயமடைந்துள்ளனர்.

3-ராவல்பிண்டியில் இரண்டு குண்டுவெடிப்பு

இஸ்லாபாத், பாகிஸ்தானின் முன்னாள் தலைநகரான ராவல்பிண்டியில் உள்ள ராணுவ கண்டோன்மன்ட் பகுதியில் நேற்று இரண்டு சக்திவாய்ந்த குண்டுகள் வெடித்தன.

4- பிலிப்பைன்ஸ’ல் நிலச்சரிவு: 4 பேர் பலி

மணிலா, பிலிப்பைன்ஸ’ல் ஏற்பட்ட நிலச்சரிவில் 4 பேர் உயிரிழந்தனர், 26 பேர் காயமடைந்தனர்.

5-பாகிஸ்தானுக்குள் அமெரிக்கா ஏவுகணை தாக்குதல் 9 பேர் பலி

இஸ்லாமாபாத், பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கப்பட்ட போர் விமானம் ஒன்று வீசிய ஏவுகணை வெடித்ததில் 9 பேர் பலியானார்கள்.

6- தேர்தலில் போட்டியிட தடை: நவாஸ் வழக்கு ஒத்திவைப்பு

இஸ்லாமாபாத்,தேர்தலில் போட்டியிட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீபுக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் இரு வாரங்களுக்கு ஒத்திவைத்தது.

mgandhi
02-07-2008, 05:50 PM
3-7-2008

1-மறைந்த முன்னாள் பீல்டு மார்ஷல் மானெக்சாவுக்கு ஒபாமா இரங்கல்


வாஷிங்டன் : மறைந்த, ராணுவ முன்னாள் பீல்டு மார்ஷல் சாம் மா*னெக்சாவுக்கு, அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் ஒபாமா இரங்கல் தெரிவித்துள்ளார். மானெக்சா சிறந்த தேசபக்தர் என்றும் 1971ம் ஆண்டு இந்தியாபாக்., போரில் இந்தியாவை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றவர் என்றும் தன் இரங்கல் செய்தியில், மானெக்சாவுக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.


2-ராஜபக்சே உயிர் தப்பினார்

கொழும்பு : இலஙகையின் அம்பாறையில் நடைபெற்ற புதிய பாலம் திறப்பு விழாவில் கலந்து கொண்ட அதிபர் மகிந்தா ராஜபக்சே பயணம் செய்த ஹெலிகாப்டர் மீது விடுதலைப்புலிகள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். ஆனால் அதிர்ஷ்டவசமாக அந்த ஹெலிகாப்டரில் ராஜபக்சே பயணம் செய்யாத காரணத்தினால் அவர் உயிர் பிழைத்ததாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. விடுதலைப்புலிகள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் சிக்கி அந்த ஹெலிகாப்டர் சின்னாபின்னாமானதாகவும், இலங்கை தரப்பில் 3 பேர் கொல்லப்பட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3-ஜமைக்காவில் துப்பாக்கி முனையில் 39 பேர் கடத்தல்


கிங்ஸ்டன் : வெஸ்ட் இண்டீஸ் நாட்டின் ஜமைக்கா நகரில் அமெரிக்க தொண்டு நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த தொண்டு நிறுவனத்தில் ஜார்ஜியா நாட்டைச் சேர்ந்தவர்களும் ஊழியம் செய்து வருகின்றனர். இந்த தொண்டு நிறுவனத்தின் கீழ் பார்வையற்றோர் பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் புகுந்த மர்ம மனிதர்கள் 2 பேர் துப்பாக்கி முனையில் 39 பேரை கடத்திச் சென்றுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏறபட்டுள்ளது.


4-லண்டனில் போக்குவரத்து நெரிசலை குறைக்க விரைவில் பறக்கும் கார்கள் அறிமுகம்

லண்டன், ஜுலை. 2-உலகம் முழுவதிலும் தற்போது போக்குவரத்து நெரிசல் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. சாலைகளை எவ்வளவு அகலப்படுத்தினாலும் தினந்தோறும் பெருகி வரும் வாகனங்களால் நெரிசல் ஏற்படத்தான் செய்கிறது.இத்தகைய நெரிசலில் இருந்து தப்பிக் பறக்கும் கார்கள் அறிமுகம்

5-மங்கோலியாவில் அவசர நிலை

உலன்படோர், மங்கோலியாவின் உலன் படோர் நகரில் 5-ந்தேதி நடைபெற இருந்த தேர்தல் திடீரென நிறுத்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்குள்ள மக்கள் போராட் டத்தில் குதித்தனர். போராட் டக்காரர்கள் நேற்று திடீரென கலவரத்தில்இடு பட்டனர்.


6-இங்கிலாந்தில் பெண்களை பேராயராக நியமிப்பதற்கு எதிர்ப்பு; கிறிஸ்தவ சபையில் மோதல்

லண்டன், இங்கிலாந்து கிறிஸ்தவ சபையின் கீழ் 1300 தேவால யங்கள் உள்ளன. இச்சபையில் தற்போது ஆண்கள் மட்டுமே பேராயர்களாக உள்ளனர்.சமீபத்தில் இங்கிலாந்து கிறிஸ்தவ சபையின் தலைமை பேராயர் பெண்களை பேரா யர்களாக நியமிக்க எதிர்ப்பு .

பாலகன்
02-07-2008, 06:04 PM
தகவல் பொக்கிசம் மோகன் அவர்களே................. அயராது செய்திகளை சேகரித்து எமக்களிக்கும் பகலவனே நீவீர் வாழ்க............

பிரதிபலன் எதிர்பாராமல் நீர் இத்தொன்டு மென்மேலும் சிறக்க இந்த பில்லாவின் வாழ்த்துக்கள் மற்றும் பில்லாவின் அன்பும் உமக்கு பரிசாக

அன்புடன்
பில்லா

mgandhi
02-07-2008, 06:23 PM
தகவல் பொக்கிசம் மோகன் அவர்களே................. அயராது செய்திகளை சேகரித்து எமக்களிக்கும் பகலவனே நீவீர் வாழ்க............

பிரதிபலன் எதிர்பாராமல் நீர் இத்தொன்டு மென்மேலும் சிறக்க இந்த பில்லாவின் வாழ்த்துக்கள் மற்றும் பில்லாவின் அன்பும் உமக்கு பரிசாக

அன்புடன்
பில்லா

மிக்க நன்றி பில்லா

mgandhi
04-07-2008, 05:41 PM
5-7-2008

1--விமானங்களில் Aisle seats தான் பாதுகாப்பானவைஆய்வில் தகவல்
லண்டன்: விமான பயணத்தின்போது, விமானத்தின் பக்கவாட்டு இருக்கைகளில் அடிண்டூஞு ண்ஞுச்tண் பயணம் செய்வதே பாதுகாப்பானது என்று சர்வதேச அளவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.


2-மெழுகுவர்த்தி பேரணி : சிம்லாவில் திபெத்தியர்கள் ஆர்ப்பாட்டம்
ஷிம்லா : திபெத் மக்களின் உரிமை காக்கப்பட வேண்டி சிம்லாவில் அந்நாட்டவர்கள் நேற்று மெழுகுவர்த்தி ஏந்தியவாறு அமைதிப் பேரணியில் ஈடுபட்டனர்.

3-பாகிஸ்தான் அரசியல் கட்சிகளுக்கு அமெரிக்கா யோசனை
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் உள்ள அரசியல் கட்சிகள், அந்நாட்டின் முக்கிய பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று அமெரிக்க அரசின் துணைச் செயலர் ரிச்சர்ட் பௌச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்

4-இந்தியாவுக்கு ரஷ’ய அணு நீர்மூழ்கிக் கப்பல்

மாஸ்கோ, ரஷ’யாவின் அகுலா வகை அணு நீர்மூழ்கிக் கப்பல் அடுத்த ஆண்டு இந்தியக் கடற்படையில் இணைக்கப்படும். அந்தக் கப்பலுக்கு "ஐஎன்எஸ் சக்ரா" என்று பெயரிடப்பட்டுள்ளது.

5- மங்கோலியாவில் மக்கள் புரட்சிக் கட்சி வெற்றி

உலன், மங்கோலியா நாட்டில் அண்மையில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் மங்கோலியா மக்கள் புரட்சிக் கட்சி வெற்றி பெற்றதாக, அந்நாட்டு தேர்தல் ஆணையம் நேற்று வியாழக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

mgandhi
05-07-2008, 05:46 PM
6-7-2008

1-விம்பிள்டன் டென்னிஸ் : சாம்பியன் பட்டம் வென்றார் வீனஸ் வில்லியம்ஸ்


லண்டன் : விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பட்டத்தை வீனஸ் வில்லியம்ஸ் வென்றுள்ளார். நான்கு கிராண்ட் ஸ்லாம் போட்டிகளுள் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. பரபரப்பான நிலையை எட்டியிருக்கும் இந்நேரத்தில் பெண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டியில் அமெரிக்காவின் வீனஸ் மற்றும் செரீனா சகோதரிகள் மோதினர் பரபரப்பாக நடந்த இப்போட்டியில் என்ற 75, 64 செட்களில் வென்று வீனஸ் வில்லியம்ஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.
2-ஜப்பானில் நிலநடுக்கம்


டோக்கியோ : ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடும் நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகி இருந்தது. ஐபராக்கி பகுதியை மையமாகக் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஏஜன்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.உயிர்ச்சேதம் மற்றும் பொருட்சேதம் பற்றிய தகவல் வெளியிடப்படவில்லை.


3-ஆசிய கோப்பை: பைனலில் இந்தியாஇலங்கை அணிகள் நாளை மோதல்கராச்சி: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் பைனலில் இந்திய அணி, இலங்கை அணியை நாளை சந்திக்கிறது. இந்தியா, வங்கதேசம் உள்ளிட்ட ஆறு நாடுகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடக்கிறது.

4-பாக்., சாம்பியன் கோப்பைக்கு முழு ஆதரவு : பி.சி.சி.ஐ அறிவிப்பு


கராச்சி: பாகிஸ்தானில் சாம்பியன் கோப்பை கிரிக்கெட் போட்டி நடத்துவதற்கு முழு ஆதரவளிப்பதாக இந்தியன் கிரிக்கெட் போர்டு( பி.சி.சி.ஐ) தெரிவித்துள்ளது.

5-உலகின் டாப் இருபது அறிவாளிகள் பட்டியலில் இரண்டு இந்தியர்கள்


நியூயார்க் : உலகின் தலைசிறந்த இருபது அறிவாளிகளின் பட்டியலை நியூயார்க் பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ளது. இதில் இரண்டு இடங்களை இந்தியர்கள் பிடித்துள்ளனர். அமெரிக்காவின் பிரபல பத்திரிகையான பாரின் பாலிசி உலகின் தலைசிறந்த 20 அறிவாளிகள் பட்டியலை தங்கள் வாசகர்கள் அளித்த ஆன்லைன் வாக்குகளின் அடிப்படையில் தேர்ந்தெடுத்துள்ளது. இந்த தரவரிசையில் இந்தியாவை சேர்ந்த நோபெல் பரிசு பெற்ற அமர்தியாசென்னும், நியூஸ் வீக் பத்திரிகையின் பதிப்பாசிரியர் பரீத்ஜக்காரியாவும் முறையே 16 மற்றும் 17வது இடத்தை பிடித்துள்ளனர்.


6-யாருடனும் பேச்சுவார்த்தை இல்லை : ஜிம்பாப்வே அதிபர்


ஹராரே : ஜிம்பாப்வே அதிபராக தன்னை ஏற்காவிட்டால் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்தப்போவதில்லை என ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபே கூறியுள்ளார். ஜிம்பாப்வேயில் நடைபெற்ற தேர்தலில் அதிபர் முகாபே போட்டியிட்டார். எதிர்கட்சியினர் யாரும் போட்டியிடாததால் அவரே அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.


7-அணுசக்தி பற்றி படிக்க ஈரான் மாணவர்களுக்கு நெதர்லாந்து தடை


தி ஹாக் : அணுசக்தி பற்றி படிக்க ஈரான் மாணவர்களுக்கு நெதர்லாந்து தடை விதித்துள்ளது. ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபடுவதாக வல்லரசு நாடுகள் குறை கூறி வருகின்றன. அணு ஆயுத தயாரிப்பை நிறுத்தவும் வலியுறுத்தி வருகின்றன. இதனால் நெதர்லாந்தில் படித்து வரும் ஈரான் மாணவர்கள் அணுசக்தி பற்றி படிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

mgandhi
06-07-2008, 05:31 PM
7-7-2008

.1-ஜி-8 உச்சி மாநாட்டுக்கு எதிர்ப்பு: ஜப்பானில் விவசாயிகள் குவிந்தனர்


.2-உலக பொருளாதார சிக்கல்: தீர்வு காணுமா ஜி-8 உச்சி மாநாடு?


.3-விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸýக்கு வழங்கப்பட்டது பத்மபூஷண் விருது


.4-ஓமனில் மருத்துவமனைகளை அமைக்க இந்தியாவுக்கு அழைப்பு


.5-சீனாவில் மிதமான நிலநடுக்கம்


.6-ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படை தாக்குதல்: 22 பேர் பலி


.7-ஈரானின் தாக்குதலை சமாளிக்க நேட்டோ தயாராக இருக்க வேண்டும்: அமெரிக்க கடற்படை அதிகாரி


.8-விவசாயத்துறைக்கு முக்கியத்துவம் தரவில்லை: ஐ.நா. பொதுச்செயலர்


.9-சுகப்பிரசவத்தில் குழந்தை பெற்ற இளைஞர்

அகத்தியன்
07-07-2008, 12:09 PM
7-7-2008
.9-சுகப்பிரசவத்தில் குழந்தை பெற்ற இளைஞர்


:c