PDA

View Full Version : பங்குசந்தை நிலவரம்



சூரியன்
24-10-2007, 04:33 PM
நண்பர்களே இத்திரியில் தினசரி பங்குசந்தை நிலவரங்களை வெளியிடலாம் என்று இதை தொடங்கியுள்ளேன்.

சூரியன்
24-10-2007, 04:37 PM
பி.எஸ்.இ. − 18512.91
+20.07



என்.எஸ்.இ − 5496.15
+22.45

சூரியன்
25-10-2007, 03:46 PM
பி.எஸ்.இ. - 18770.89
+257.98


என்.எஸ்.இ - 5568.95
+72.80

சூரியன்
26-10-2007, 04:04 PM
பி.எஸ்.இ - 19243.1
+472.2



என்.எஸ்.இ - 5702.3
+133.3

karikaalan
26-10-2007, 06:35 PM
நண்பரே

நல்ல திரி..

வெறும் புள்ளிகளைக் கொடுக்காமல், என்ன நடந்தது... என்ன காரணத்தால் ஏற்றம்/இறக்கம் என்று ஓரிரு பத்திகள் எழுதலாமே..

===கரிகாலன்

சூரியன்
27-10-2007, 03:12 PM
சரி நண்பரே முயற்சிக்கிறேன்.

சூரியன்
27-10-2007, 03:14 PM
பி.எஸ்.இ - 19243.1
+472.2


என்.எஸ்.இ - 5702.3
+133.3

சூரியன்
27-10-2007, 03:18 PM
http://www.dinamalarbiz.com/admin/news/7378155.jpg
மும்பை பங்குச்சந்தையில் முதலீடு செய்திருப்பவர்களின் மொத்த முதலீடு, ரூ.60 லட்சம் கோடியை தாண்டி விட்டது. பங்குச்சந்தையில் லிஸ்ட் செய்யப்பட்டிருக்கும் எல்லா கம்பெனிகளின் மொத்த முதலீட்டையே, மொத்த பங்கு சந்தை முதலீடாக கணக்கிடுகிறார்கள். அதன் அடிப்படையில் பார்த்தால் வெள்ளி அன்று பங்கு வர்த்தகம் முடிந்ததும் கணக்கிட்டதில் அதில் முதலீடு செய்த மொத்த முதலீட்டின் மதிப்பு ரூ.60,43,188.92 கோடி யாக இருக்கிறது. இது அதற்கு முந்தைய நாளில் ரூ.58,89,943 கோடியாக இருந்தது. வெள்ளி அன்று ஒரு நாளிலேயே முதலீடு ரூ.1,53,000 கோடி உயர்ந்து விட்டது. அதேபோல 16 ம் தேதி பி- நோட்ஸ் முறையில் கட்டுப்பாடு கொண்டு வர வேண்டும் என்று செபி சேர்மன் தாமோதரன் சொன்னதால் 17ம் தேதி பங்கு சந்தையில் வரலாறு காணாத வீழ்ச்சி காணப்பட்டது. அன்றைய தினம் பங்கு சந்தையில் சென்செக்ஸ் சுமார் 1,500 புள்ளிகள் வரை சரிந்து விட்டது. எனவேஅப்போது முதலீட்டாளர்களின் முதலீடு ரூ.4,06,000 கோடி குறைந்து விட்டது. இந்த நிலை நேற்றைய தினம் மாறி, சென்செக்ஸ் 472.28 புள்ளிகள் கூடி வர்த்தக நேர முடிவில் 19,243.17 புள்ளிகளாக இருந்தது. எனவே முதலீட்டாளர்களின் முதலீடும் ரூ.60,43,188.92 கோடியாக உயர்ந்து விட்டது.

சூரியன்
28-10-2007, 01:39 PM
பி.எஸ்.இ. - 19243.1
+472.2



என்.எஸ்.இ -702.3
+133.3

சூரியன்
29-10-2007, 04:18 PM
பி.எஸ்.இ - 19977.67
+734.50


என்.எஸ்.இ - 5905.9
+203.6

சூரியன்
29-10-2007, 04:22 PM
http://www.dinamalarbiz.com/admin/news/4318616.jpg

இந்திய பங்கு சந்தை வரலாற்றில் முதல் முறையாக சென்செக்ஸ் 20 ஆயிரம் புள்ளிகளை தொட்டு சாதனை புரிந்துள்ளது. கடந்த சில நாட்களாக மும்பை பங்கு சந்தையில் நல்ல முன்னேற்றம் கண்டு வந்த நிலையில், இன்று சென்செக்ஸ் 20 ஆயிரம் புள்ளிகளை தொட்டது.இதனால் பங்கு முதலீட்டாளர்களும் வர்த்தகர்களும் பெரும் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். இன்று மட்டும் 761 புள்ளிகள் உயர்ந்துள்ளது. அக்டோபர் 15 அன்று 19 ஆயிரம் புள்ளிகளாக இருந்த சென்செக்ஸ், 10 வர்த்தக நாட்களில் ஆயிரம் புள்ளிகள் உயர்ந்து 20 ஆயிரம் புள்ளிகளை தொட்டுள்ளது. இன்றைய வர்த்தகத்தில் லார்சன் அன்ட் டியூப்ரோவின் பங்கு 9 சதவீதம் உயர்ந்து ரூ.4,222 ஆக இருந்தது. பெல் பங்குகள் 7.5 சதவீதம் உயர்ந்து ரூ.2,615 ஆக இருந்தது. ஓ.என்.ஜி.சி.மற்றும் ஹெச்.டி.எப்.சி. பங்குகள் 7 சதவீதம் உயர்ந்து முறையே ரூ.1,238 ஆகவும் ரூ.2,744 ஆகவும் இருந்தது. ரிலையன்ஸ் பங்கு 5 சதவீதம் உயர்ந்து ரூ.2,829 ஆகவும், ரிலையன்ஸ் எனர்ஜி 3.5 சதவீதம் உயர்ந்து ரூ.1,729 ஆகவும், ஐ.சி.ஐ.சி.ஐ. பங்குகள் 3சதவீதம் உயர்ந்து ரூ.1,220 ஆகவும் இருந்தது. இன்று வர்த்தகத்தில் ஈடுபட்ட 2,807 கம்பெனிகளில், 1,576 கம்பெனி பங்குகள் விலை உயர்ந்தும் 1,161 கம்பெனி பங்குகள் விலை குறைந்தும் காணப்பட்டது. 70 கம்பெனி பங்கு விலையில் மாற்றமில்லை.

சூரியன்
29-10-2007, 04:30 PM
http://www.dinamalarbiz.com/admin/news/1455914.jpg

பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி இந்தியா நிறுவனம், நடப்பாண்டின் இரண்டாவது காலாண்டில் ரூ.466.5 கோடி நிகர லாபம் ஈட்டியது. இது கடந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டை விட ரூ.99.06 கோடி அதிகம் ஆகும். இது 26.95 சதவீத வளர்ச்சியாகும். இதைப்போல் அதன் மொத்த வருமானம் ரூ.4,735.8 கோடி ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டின் மொத்த வருமானத்தை விட ரூ.1194.94 கோடி அதிகமாகும். இது 33.74 சதவீத வளர்ச்சியாகும். இவ்வாறு மாருதி சுசுகி நிறுவனம் தனது அறிக்கையில் கூறியுள்ளது.

ஆஸ்கார்பாரதி
18-11-2007, 08:31 PM
இப்போது உள்ள நிலமையுல் எந்த பங்குனை வாங்கலாம்

இளசு
18-11-2007, 08:33 PM
பல திரிகள் உள்ளன நண்பரே

இங்கே ஒன்று -

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=12971

(மேற்பார்வையாளரிடம் சொல்லி இத்திரியை அதனுடன் இணைக்கச் சம்மதமெனில் செய்யுங்கள்.. நன்றி)

இணைக்கப்பட்டது அண்ணா...
அன்புரசிகன்.

karikaalan
20-11-2007, 06:14 AM
நண்பரே இன்னின்ன பங்குகளை வாங்கலாம் என்று யாராவது சொல்லிவிட்டால் உடனே அதனைக் கேட்டு நடக்காதீர்கள்.

சுயமாக சிந்தியுங்கள்... பற்பல செய்தித்தாள்களைப் படியுங்கள். கம்பெனிகளின் ரிப்போர்ட்களை அலசுங்கள்.

அல்லது கடந்த ஐந்து ஆண்டுகளில் வளர்ச்சிகண்டுள்ள ம்யூச்சுவல் ஃபண்ட்களில் முதல் ஐந்தைத் தேர்ந்தெடுத்து, தங்களுடைய சக்திக்கேற்ப, வயதிற்கேற்ப, சந்திக்கப்போகும் செலவுகளுக்கேற்ப, முதலீடு செய்யுங்கள்.

சிறிது சிறிதாக முதலீடு செய்யுங்கள், ஒவ்வொரு மாதமும்.

வாழ்த்துக்கள்.

===கரிகாலன்

இளஞ்சூரியன்
26-01-2008, 07:20 PM
மேற்கூறிய கரிகாலனின் அறிவுறுத்தலை நான் முழு மனதுடன் ஆமோதிக்கிறேன். ஒரே ஒரு திருத்தம் மட்டும் கூறலாம். ம்யூச்சுவல் ஃபண்ட்களை ஏதோ தேவன் அனுப்பி வைத்தது போல் எண்ணாதீர்கள். சரியான நேரத்தில் இதிலிருந்து விலகி காசு பார்த்து விட்டு, பின்பு NAV குறைந்த நேரத்தில் திரும்பவும் சேர்ந்து என இதிலும், பங்குச் சந்தையின் அத்துணை சூதாட்டங்களும் உள்ளன. எனவே உங்கள் சேமிப்பின் ஒரு பகுதியை, (நான் என்னுடைய சேமிப்பில் 40%), இவ்வாறு முதலீடு செய்யலாம்.

இந்த 'சரியான நேரம்' தேர்ந்தெடுப்பதில்தான் சிக்கலே!! எனவே இது போன்ற volatile தருணங்களில் கவனத்துடன் செயல் படவும்.