PDA

View Full Version : செய்திகள்... சில வரிகளில்..14/8/08.. வியாழன்.ராஜா
24-10-2007, 04:06 PM
தமிழகத்தில் எல்காட் அமைக்கும் 9 'ஐடி பார்க்குகள்'..

http://www.hindu.com/pp/2004/01/24/images/2004012400020101.jpg

திருச்சி: தமிழக அரசின் எல்காட் நிறுவனம் 6.1 கோடி சதுர அடி பரப்பளவில் 9 தகவல் தொழில்நுட்பப் பூங்காக்களை அமைக்கவுள்ளதாக எல்காட் நிர்வாக இயக்குநர் சி.உமாசங்கர் தெரிவித்துள்ளார்.

திருச்சிக்கு வந்த உமாசங்கர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், சென்னை மற்றும் மதுரையில் தலா 2 ஐடி பூங்காக்கள் அமைக்கப்படும். கோவை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, ஓசூர் ஆகிய இடங்களில் தலா ஒரு ஐடி பூங்கா அமைக்கப்படும். இந்த பூங்காக்களின் மொத்தப் பரப்பளவு 6.1 கோடி சதுர அடியாக இருக்கும்.

ராஜா
24-10-2007, 04:07 PM
தேவர் ஜெயந்தி-அரசு விழாவாக கொண்டாட தடை கோரி வழக்கு...


http://www.thevaryouth.com/thevar.gif

சென்னை: முத்துராமலிங்க தேவரின் நூற்றாண்டு விழாவை அரசு விழாவாக கொண்டாட தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஒடுக்கப்பட்டோர் விடுதலை முன்னணியின் அமைப்பாளர் சிம்சன் தாக்கல் செய்துள்ள இந்த பொது நல மனுவில் கூறியிருப்பதாவது:

தேவர் நூற்றாண்டு விழாவை அரசு விழாவாக தமிழக அரசு கொண்டாடுவதை சட்டவிரோதம் என்று அறிவிக்க வேண்டும். தேவர் பிறந்த தினமான 30ம் தேதி தவிர மற்ற நாட்களில் கல்வி நிறுவனங்கள் செயல்பட வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

எதிர்காலத்தில் எந்த சமுதாய தலைவருக்கும் பிறந்த நாள் விழாக்களை கொண்டாட விடுமுறை விடக்கூடாது என்றும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் சிம்சன்.

ராஜா
24-10-2007, 04:07 PM
லாரி ஸ்டிரைக்: 1 கோடி முட்டைகள் தேக்கம்..

http://www.hindu.com/2006/06/14/images/2006061413010301.jpg

நாமக்கல்: கேரளாவில் லாரி ஸ்டிரைக் தீவிரமடைந்திருப்பதால் தொடர்வதால் நாமக்கல் மாவட்டத்திலிருந்து கேரளாவுக்கு அனுப்பபட வேண்டிய சுமார் ஒரு கோடி முட்டைகள் தேக்கமடைந்துள்ளன. இவை அழுகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

சூரியன்
24-10-2007, 04:08 PM
நல்ல பயனுள்ள தகவல்,தந்தமைக்கு நன்றி ராஜா அண்ணா...

மனோஜ்
24-10-2007, 04:08 PM
திருச்சிக்கு இது ஒரு முன்னேற்றமாக அமையும் அண்ணா தகவலுக்கு நன்றி

ராஜா
24-10-2007, 04:08 PM
திரும்பி வந்த கேப்டன்-தேமுதிகவினரால் திணறிய ஏர்போர்ட் ..

http://thatstamil.oneindia.in/img/2007/10/vijayakan-250_24102007.jpg

அரசாங்கம் படப்பிடிப்புக்காக கனடா சென்று திரும்பிய நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த்தை வரவேற்க அவரது கட்சித் தொண்டர்கள் பெருமளவில் விமான நிலையத்தில் குவிந்து விட்டதால் விமான நிலையமே திமிலோகப்பட்டுப் போனது.

ராஜா
24-10-2007, 04:09 PM
சிரஞ்சீவிக்கு சந்திரபாபு நாயுடு ஆறுதல்..

http://thatstamil.oneindia.in/img/2007/10/Chiranjeevi-1_23102007.jpg

மகள் காதலருடன் கல்யாணம் செய்து கொண்ட சோகத்தில் இருக்கும் தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவியையும், அவரது மனைவியையும், முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, தனது மனைவி புவனேஸ்வரியுடன் சென்று ஆறுதல் கூறினார். அவரிடம் கண்ணீர் விட்டு அழுதுள்ளார் சிரஞ்சீவி.

ராஜா
24-10-2007, 04:09 PM
7 வீரர்களுடன் விண்ணில் பாய்ந்தது டிஸ்கவரி..

http://msnbcmedia4.msn.com/j/msnbc/Components/Video/060617/n_barbree_shuttledate_060617.300w.jpg

கேப் கேனவரல்: அமெரிக்க விண்வெளி ஓடம் டிஸ்கவரி நேற்று இரவு விண்ணில் செலுத்தப்பட்டது.

விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தில் சில கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்காக டிஸ்கவரியை அனுப்ப நாசா தீர்மானித்தது. ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கான ஆய்வகங்களை அமைக்கவே இந்த புதிய பணி மேற்கொள்ளப்படவுள்ளது.

ராஜா
24-10-2007, 04:10 PM
சேது- ஆய்வு கமிட்டியை எதிர்த்து சு.சுவாமி வழக்கு!

http://thatstamil.oneindia.in/img/2007/10/SubramanianSwamy250_23102007.jpg

டெல்லி: மத்திய அரசு அமைத்துள்ள 10 உறுப்பினர் கொண்ட சேது சமுத்திர ஆய்வுக் கமிட்டியைக் கலைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமி மனு தாக்கல் செய்துள்ளார்.

ராஜா
24-10-2007, 04:11 PM
பேச்சுவார்த்தைக்கு தயார்-இலங்கை கூறுகிறது..!

http://english.aljazeera.net/mritems/images/2007/7/12/1_224106_1_5.jpg

கொழும்பு: விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக இலங்கை அரசு திடீரென அறிவித்துள்ளது.

"வெளியுறவுத்துறை செயலாளர் பபித கொஹனா கூறுகையில், அனுராதபுரம் விமானப் படை தளத்தின் மீது நேற்று நடந்த தாக்குதலில் 13 பாதுகாப்புப் படையினரும் 20 புலிகளும் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தாலும் கூட பிரச்சனையை பேசித் தீர்ப்பது என்ற அரசின் முடிவில் எந்த மாற்றமும் இல்லை".என்றார்.

ராஜா
24-10-2007, 04:11 PM
பாஷாவுக்கு ஆயுள்-அன்சாரிக்கு இரட்டை ஆயுள் தண்டனை!

http://thatstamil.oneindia.in/img/2007/10/basha-250_24102007.jpg

கோவை: கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் அல் உம்மா தலைவர் எஸ்.ஏ. பாஷாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் பொதுச் செயலாளர் முகம்மது அன்சாரிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ராஜா
24-10-2007, 04:12 PM
அப்துல் கலாமுக்கு கிங் சார்லஸ் விருது..

http://thatstamil.oneindia.in/img/2007/10/kalam-250_24102007.jpg

லண்டன்: முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு லண்டனில் உள்ள ராயல் சொசைட்டி நிறுவனம், இரண்டாம் சார்லஸ் மன்னர் பதக்கம் வழங்கி கெளரவித்துள்ளது.

இந்த நிறுவனம் தோன்றக் காரணமாக இருந்த 2ம் சார்லஸ் மன்னர் பெயரில் சிறந்த விஞ்ஞானிகளுக்கு விருது வழங்க கடந்த 1997ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது.

தற்போது இந்த விருது, அப்துல் கலாமுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக லண்டனில் நடந்த நிகழ்ச்சியில், கலாமுக்கு இந்த விருதை ராயல் சொசைட்டியின் தலைவர் மார்ட்டின் ரீஸ், கவழங்கி கவுரவித்தார்.

மனோஜ்
24-10-2007, 04:12 PM
அனைத்து படத்துடனான தகவல்களுக்கு நன்றி அண்ணா:icon_b:

ராஜா
24-10-2007, 04:12 PM
3வது அணியிலிருந்து கழற்றி விடப்பட்டார் ஜெ!!

http://thatstamil.oneindia.in/img/2007/10/jaya_24102007.jpg

டெல்லி: 3வது அணியான ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணியின் தலைவராக முலாயம் சிங் யாதவும், ஒருங்கிணைப்பாளராக சந்திரபாபு நாயுடுவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு எந்தப் பதவியும் வழங்கப்படவில்லை. இதன் மூலம் அவர் 3வது அணியிலிருந்து கழற்றி விடப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.

ராஜா
24-10-2007, 04:13 PM
தீவிர அரசியலுக்கு விரைவில் வருவேன் - முத்துலட்சுமி..

http://thatstamil.oneindia.in/img/2007/10/muthu-4_21102007.jpg

கடலூர்:

மலைவாழ் மக்கள் இயக்கம் மூலமாக மலை வாழ் மக்களின் நலனுக்காக தீவிரமாக பாடுபடுவேன். படிப்படியாக தீவிர அரசியலில் நுழைவேன் என்று சந்தனக் கடத்தல் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி கூறியுள்ளார்.

ராஜா
24-10-2007, 04:14 PM
சட்டசபையிலிருந்து வெளிநடப்புச் செய்த புதுவை அமைச்சர்..

http://thatstamil.oneindia.in/img/2007/10/pondy-assembly250_24102007.jpg

புதுச்சேரி: தனக்கு உரிய மரியாதையை அளிக்க அரசு தவறி விட்டதாக கூறி புதுச்சேரி சட்டசபையிலிருந்து சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி வெளிநடப்புச் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அரசுக்கு ஆதரவு தரும் பாமக மற்றும் அதிமுக உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்து பரபரப்பைக் கூட்டினர்.

ராஜா
24-10-2007, 04:14 PM
ஷ்ரியாவின் 'வடிவேலு புராணம்'!

http://thatstamil.oneindia.in/img/2007/10/vadivelu-shreya-25_24102007.jpg

ரஜினி புராணம் பாடி வந்த ஷ்ரியா இப்போது வடிவேலு புராணத்திற்கு மாறி விட்டார். இந்திரலோகத்தில் நா. அழகப்பன் படத்தில் சிங்கிள் பாட்டுக்கு வடிவேலுவுடன் ஆடிய அனுபவத்தால் வடிவேலுவின் தீவிர ரசிகையாகி விட்டாராம் ஷ்ரியா.

வடிவேலு சாருக்கு நல்ல சென்ஸ் ஆப் ஹ்யூமர். அவர் நடித்த காமெடிக் காட்சிகளை இப்போது விழுந்து விழுந்து பார்க்கிறேன். டிவியில் நான் பார்க்கும் காமெடிக் காட்சிகள் பெரும்பாலும் வடிவேலு நடித்த காட்சிகளாகத்தான் இருக்கும். அந்த அளவுக்கு அவரது ரசிகையாகி விட்டேன் என்றார் ஷ்ரியா.

ராஜா
24-10-2007, 04:15 PM
மும்பையில் பில்லா 'மேஜிக்'

http://thatstamil.oneindia.in/img/2007/10/nayantara-02_24102007.jpg

அல்டிமேட் ஸ்டார் அஜீத் நடிக்க, அட்டகாசமாக உருவாகியிருக்கும் பில்லா படத்தின் கிராபிக்ஸ் நகாசு வேலைகள் மும்பையில் உள்ள அதி நவீன ஸ்டுடியோவில் தயாராகி வருகிறதாம்.

ராஜா
24-10-2007, 04:25 PM
சேது கமிட்டியை கலைக்க கோரிய சுவாமி மனு தள்ளுபடி...

டெல்லி: சேது சமுத்திரத் திட்டம் குறித்து ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட 10 உறுப்பினர் கமிட்டியை கலைக்கக் கோரி ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரிக்க மறுத்து தள்ளுபடி செய்து விட்டது.
_________________

அக்னி
24-10-2007, 06:24 PM
பல செய்திகளையும் தொகுத்துத் பகிரும் ராஜா அவர்களுக்கு நன்றிகள்...
பல அம்சங்களும் கலந்து வருவது சிறப்பாகவே இருக்கிறது...

அமரன்
24-10-2007, 06:36 PM
செய்திச்சோலையில் ஒரு செய்திக்கதம்பம்.
வார மலர்களைப் நுகர்ந்த உணர்வு..
நன்றி அண்ணா...!

ராஜா
25-10-2007, 02:11 AM
பாராட்டியோருக்கும், பார்வையிட்டோருக்கும் பணிவான நன்றிகள்..!

ராஜா
25-10-2007, 02:14 AM
தமிழகத்திற்கு நெய்யார் நீர்-கேரளா ஒப்புதல்!

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் நெய்யார் அணையிலிருந்து தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்து விட கேரள அரசு முடிவு செய்துள்ளது. முதலில் தண்ணீர் தர மறுத்து வந்த கேரளா, தற்போது மழை பெய்து வருவதால் உபரி நீரை தமிழகத்திற்குத் திறந்து விட தீர்மானித்துள்ளது.
_________________

ராஜா
25-10-2007, 02:16 AM
தஞ்சையில் ராஜராஜ சோழன் சதய விழா!

http://www.thebigtemple.com/images/emperor_rr.jpg

தஞ்சை: தஞ்சையில் நடைபெற்ற மாமன்னன் ராஜராஜ சோழனின் சதய விழாவில் மத்திய, மாநில அமைச்சர்கள் கலந்து கொண்டனர். தஞ்சை பெரிய கோயிலைக் கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் பிறந்த நாள் விழா சதய விழாவாக கொண்டாடப்படுகிறது.

ராஜா
25-10-2007, 02:17 AM
24-10-07. புதன்.

செய்திகள் முடிவடைந்தன..

ராஜா
25-10-2007, 02:20 AM
பலியான விடுதலைப் புலிகளின் உடல்களை நிர்வாணமாக்கி ஊர்வலம்.. இலங்கை ராணுவத்தின் இழிவுச்செயல்..!

http://thatstamil.oneindia.in/img/2007/10/ltte-bodies-250_24102007.jpg

கொழும்பு: அனுராதபுரம் விமானத் தளத்தின் மீது தாக்குதல் நடத்தி பலியான விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படையினரின் உடல்களை நிர்வாணமாக்கி டிராக்டரில் அள்ளிப் போட்டு சாலைகளில் ஊர்வலமாகக் கொண்டு சென்றுள்ளது இலங்கை ராணுவம்.

இது பெரும் அதிர்ச்சியைப் பரப்பியுள்ளது.

உடைகளுடன் இருந்த புலிகளின் உடல்களை நிர்வாணப்படுத்தி சாலைகளில் ஊர்வலமாகக் கொண்டு சென்றுள்ளனர். இதன் மூலம் போரியல் மரபு முறையினை இலங்கை காற்றில் பறக்கவிட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ராஜா
25-10-2007, 02:34 AM
பாக்.x தெ. ஆப்ரிக்கா. 5வது ஒருநாள் போட்டி. கராச்சியிலிருந்து பாதுகாப்பு காரணங்களுக்காக லாகூருக்கு மாற்றப்பட்டது.

http://newsimg.bbc.co.uk/media/images/42555000/jpg/_42555495_hall203.jpg

ராஜா
25-10-2007, 02:47 AM
வான்படை கண்ட முதல் தமிழன்தான் எமது தேசியத் தலைவர் பிரபாகரன்: கேணல் சூசை பெருமிதம்..

http://www.eelampage.com/d/p/2007/SEP/20070927006.jpg

உலகத் தமிழின வரலாற்றில் வான்படை கண்ட முதல் தமிழன்தான் எமது தேசியத் தலைவர் பிரபாகரன் என்று தமிழீழ கடற்புலிகளின் சிறப்புத் தலைவர் கேணல் சூசை பெருமிதத்துடன் கூறினார்.

ராஜா
25-10-2007, 03:20 AM
திடீர் திருப்பம் :தேர்தலில் போட்டியிட விடுதலை புலிகளுக்கு அனுமதி ..

http://www.dinamalar.com/dinaadmin/PagePhoto/fpn06.jpg

கொழும்பு : இலங்கையில் உள்ளாட்சி அமைப்பு தேர்தல்களில் விடுதலைப் புலிகள், கருணா பிரிவினர் போன்றவர்களும் பதிவு செய்து போட்டியிட வழி வகை செய்யும் சட்டத் திருத்தம், அந்நாட்டு பார்லிமென்ட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ராஜா
25-10-2007, 03:24 AM
http://www.dinamalar.com/dinaadmin/photos/fpn_mix.jpg

ராஜா
25-10-2007, 03:28 AM
http://www.dinamalar.com/dinaadmin/ShareImages/share.jpg

ராஜா
25-10-2007, 03:29 AM
http://www.dinamalar.com/dinaadmin/ShareImages/gold.jpg

அமரன்
25-10-2007, 08:04 AM
பலியான விடுதலைப் புலிகளின் உடல்களை நிர்வாணமாக்கி ஊர்வலம்.. இலங்கை ராணுவத்தின் இழிவுச்செயல்..!

கொழும்பு: அனுராதபுரம் விமானத் தளத்தின் மீது தாக்குதல் நடத்தி பலியான விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படையினரின் உடல்களை நிர்வாணமாக்கி டிராக்டரில் அள்ளிப் போட்டு சாலைகளில் ஊர்வலமாகக் கொண்டு சென்றுள்ளது இலங்கை ராணுவம்.

இது பெரும் அதிர்ச்சியைப் பரப்பியுள்ளது.

உடைகளுடன் இருந்த புலிகளின் உடல்களை நிர்வாணப்படுத்தி சாலைகளில் ஊர்வலமாகக் கொண்டு சென்றுள்ளனர். இதன் மூலம் போரியல் மரபு முறையினை இலங்கை காற்றில் பறக்கவிட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

துட்டகைமுனு என்று ஒரு சிங்கள மன்னன் எல்லாளனை போரியல் விதிகளை மீறி போரிட்டு கொன்றான். பின்னாளில் அவனே எல்லாளனுக்கு அநுராதபுரத்தில் நினைவுத்தூபி கட்டி அதன்முன்னால் போகும் அனைவரும் மரியாதை செலுத்தும் வகையில் விதிகளை அமைத்தான். இன்றும் பலரால் கடைப்பிடிக்கப்பட்டு வரும் அந்த விதிகளுக்கு சொந்தமான நகரத்தில் இப்படி ஒரு கேவலச்செயல்.

அமரன்
25-10-2007, 08:05 AM
இந்திய அணித்தலைவர் தோனியின் புதிய தலை அலங்காரம்...

http://www.dinamalar.com/dinaadmin/photos/fpn_mix.jpg
பல பேட்டிகளில் எனக்கு அதிஸ்டம் தருவது எனது சடை அழகுதான் என்று சொன்னாரே. இப்போ என்ன ஆச்சு. முதல்ல ஜல்லிக்கட்டுக்காளையாட்டம் இருந்ததாக உணர்கின்றேன். இப்போ அந்த கம்பீரம் இல்லை.

ராஜா
25-10-2007, 08:53 AM
மூன்றாவது அணித்தலைவர்களுடன் இடதுசாரிகள் பேச்சு : வீரப்*ப மொய்லி கண்டனம்

http://www.hinduonnet.com/fline/fl2308/images/20060505006400804.jpg

புதுடில்லி : மூன்றாவது அணித்தலைவர்களுடன் இடது சாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதற்கு காங்கிரஸ் செய்தி பிரிவு தலைவர் வீரப்ப மொய்லி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக மத்திய அரசுடன் கருத்து ஒற்றுமை ஏற்படாததால் மூன்றாவது அணியுடன் கூட்டணி வைக்க இடது சாரி கட்சிகள் ஆலோசித்து வருகின்றன. மார்க்சிஸ்ட் கட்சி பொது செயலாளர் பிரகாஷ் காரத் மூன்றாவது அணித்தலைவர்களை சந்தித்து பேசியது இதனை உறுதி படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இடது சாரிகளின் இந்த போக்க*ை காங்கிரஸ் செய்தி பிரிவு தலைவர் வீரப்ப மொய்லி கடுமையாக கண்டனம் செய்துள்ளார்.

ராஜா
25-10-2007, 09:05 AM
காவிரி நீர் பிடிப்பு பகுதியில் தொடர் மழை : மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு..

http://content.answers.com/main/content/wp/en/thumb/d/dc/250px-Mettur_dam.jpg

மேட்டூர் : மழையால் காவிரியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால், மேட்டூர் அணை மீண்டும் நிரம்ப வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ராஜா
25-10-2007, 09:06 AM
கேரளாவில் லாரி ஸ்டிரைக் வாபஸ்..

திருவனந்தபுரம் : கேரளாவில் ஆறு நாட்களாக நீடித்த லாரி ஸ்டிரைக், மாநில அரசு சில சலுகைகள் அளித்ததையடுத்து வாபஸ் பெறப்பட்டது.

ராஜா
25-10-2007, 09:07 AM
தேவர் நூற்றாண்டு விழா-அரசு கொண்டாட தடை இல்லை..

http://upload.wikimedia.org/wikipedia/en/8/84/Thevar_05.gif

சென்னை: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நூற்றாண்டு விழாவை அரசு விழாவாகக் கொண்டாட தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் கூறி விட்டது.

ராஜா
25-10-2007, 09:08 AM
ரஜினிக்கு லண்டனில் மெழுகு சிலை?

http://thatstamil.oneindia.in/img/2007/10/rajinikanth-250_25102007.jpg

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் ரசிகர்களிடமிருந்து பெருமளவில் கோரிக்கைகள் வந்ததால், அவரது முழு உருவ மெழுகுச் சிலையை நிறுவ புகழ் பெற்ற லண்டன் மேடம் டுசாட் மியூசிய நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

ராஜா
25-10-2007, 09:09 AM
நாயை சுட்டுக் கொன்றதாக கனல் கண்ணன் மீது புகார் ..!

http://thatstamil.oneindia.in/img/2007/10/kanalkannan-250_25102007.jpg

சென்னை: ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன், தனது வீட்டுக்குப் பக்கம் திரிந்த நாயை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதுதொடர்பாக நாயின் உடலைக் கைப்பற்றிய போலீஸார் அதை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

ராஜா
25-10-2007, 09:10 AM
இசட் பிளஸ்: புல்லட் புரூப் அம்பாசிடர் காரை நிராகரித்த ஜெ..

http://thatstamil.oneindia.in/img/2007/10/jaya-250_25102007.jpg

சென்னை: குண்டுதுளைக்காத அம்பாசிடர் கார் வழங்கப்பட்டதால் அதை வேண்டாம் என ஜெயலலிதா மறுத்துவிட்டதாக உயர் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் விடுதலை தெரிவித்துள்ளார்.

விடுதலை: ஜெயலலிதாவுக்கு குண்டு துளைக்காத கார் வழங்கப்பட்டது. ஆனால், அவர் முதல்வராக இருந்தபோது அந்த கார் வேண்டாம் என கூறிவிட்டார். பிரதமருக்குக் கூட அம்பாசிடர் கார் தான் வழங்கப்படுகிறது. அதே போல ஜெயலலிதாவுக்கும் அம்பாசிடர் கார் தான் வழங்கப்பட்டது. ஆனால், தனக்கு வழங்கப்பட்டது அம்பாசிடர் கார் என்பதால் அதை வேண்டாம் என ஜெயலலிதா நிராகரித்துவிட்டார் என்றார்.

ராஜா
25-10-2007, 09:11 AM
ஐந்து நாள் பயணமாக சீனா சென்றார் சோனியா..

http://themoderatevoice.com/wordpress-engine/files/sonia_gandhi_2.jpg

பீஜிங் : காங்கிரஸ் தலைவி சோனியா 5 நாள் பயணமாக இன்று காலை டில்லியில் இருந்து சீனா புறப்பட்டு சென்றார். விமானம் மூலம் சீனா சென்றடைந்த அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சீனாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் சோனியா, நாளை சீன அதிபரும், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டவருமான ஹூ ஜிண்டோவை சந்தித்து பேசுகிறார். சோனியாவுடன் காங்கிரஸ் பொதுச்செயலாளரும், எம்.பி.,யுமான ராகுலும் சீனா சென்றுள்ளார்.

ராஜா
25-10-2007, 09:32 AM
தமிழகத்தில் தீவிரமடைகிறது பருவமழை : அமராவதி ஆற்றில் வெள்ள அபாயம் : அடுத்த 48 மணி நேரத்துக்கு மழை எச்சரிக்கை..

http://www.dinamalar.com/dinaadmin/PagePhoto/fpn01.jpg

தமிழகம் மற்றும் புதுவையில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. அமராவதி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ராஜா
25-10-2007, 11:03 AM
கத்தியால் அறுத்துக் கொல்வோம் - பெனாசிருக்கு அல்-கொய்தா மிரட்டல்..

http://thatstamil.oneindia.in/img/2007/10/Benazir-Bhutto-250_25102007.jpg

இஸ்லாமாபாத்: கத்தியால் ஆட்டை அறுப்பது போல அறுத்துக் கொலை செய்வோம் இதற்காக கத்தியுடன் உங்களை பின் தொடர்ந்து எங்களது வீரர்கள் கிளம்பியுள்ளனர் என பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவரும், முன்னாள் பிரதமருமான பெனாசிர் பூட்டோவுக்கு அல் கொய்தா தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ராஜா
25-10-2007, 11:14 AM
மகளை கேலி செய்தவரை அடித்த தந்தை 2 ஆண்டுகளுக்கு பின் படுகொலை..

கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் வீட்டில் தனியாக இருந்த ராஜதுரையின் மகளிடம் ஜெகன் என்பவர் குறும்பு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ராஜதுரையும், அவரது மகனும் சேர்ந்து ஜெகனை தாக்கி உள்ளனர். இது தொடர்பாக தென்தாமரைகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது.

இந்த சம்பவத்திற்கு பழி வாங்கியே தீருவேன் என்று ஜெகன் கூறி வந்துள்ளார். இந்நிலையில் தான் நேற்று ராஜதுரையை ஜெகன் கொலை செய்துள்ளார். தற்போது ஜெகன் தலைமறைவாகிவிட்டார். போலீசார் அவரை வலை வீசி தேடி வருகின்றனர்.

ராஜா
25-10-2007, 11:20 AM
மாணவியை கட்டிப்பிடித்து சில்மிஷம்-யோகா ஆசிரியர் கைது..

சென்னை: தன்னிடம் யோகா கற்க வந்த இளம் பெண்ணை மானபங்கம் செய்ய முயன்ற யோகா ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

ராஜா
25-10-2007, 11:27 AM
திமுக அழிவே இல்லாத ஒரு ஜீவ நதி-கருணாநிதி..

http://thatstamil.oneindia.in/img/2007/10/karunanidhi-250_25102007.jpg

அன்பழகன் போன்ற நல்ல உள்ளம் படைத்த இயக்கப் பற்றுக் கொண்டவர்கள் நம்மோடு இருக்கிறார்கள். திமுக என்ற இந்த இயக்கத்திற்கு என்றைக்கும் முடிவே கிடையாது. இது முடிவில்லாமல் ஓடிக்கொண்டிருக்கின்ற ஜீவ நதி என்றார் கருணாநிதி.

ராஜா
25-10-2007, 01:33 PM
திருநெல்வேலி: நெல்லை-தூத்துக்குடி மாவட்டத்தில் விடிய விடிய மழை பெய்து வருவதால் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

http://www.hindu.com/2005/11/03/images/2005110315570601.jpg

நேற்று இரவு முழுவதும் மழை கொட்டியதால் விளாத்திகுளம் சுற்று வட்டார பகுதிகளில் 6 கண்மாய்கள் உடைந்து பல ஊர்களுக்குள் வெள்ளம் புகுந்ததது. இதனால் அப் பகுதி மக்கள் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கடையநல்லூர் பகுதியில் பெய்த மழையால் பாப்பான் கால், சீவலங்கால் மற்றும் பெரியாற்று படுகையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இன்று அதிகாலை 2 மணி அளவில் பாப்பான்கால் வாயில் திடீரென வெள்ளப்பெருக்கு அதிகமானது.

ராஜா
25-10-2007, 02:25 PM
கோவை சிறுவர் சிறையில் இருந்து 12 பேர் தப்பியோட்டம்..

http://www.prisons.tn.nic.in/images/cbe/cbe-01.jpg

கோவை: கோவை சிறுவர் சிறையில் வார்டனைத் தாக்கிவிட்டு 12 சிறுவர்கள் தப்பியோடிவிட்டனர். இதில் 4 பேர் மட்டும் பிடிபட்டுள்ளனர்.

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் சிறுவர் சீர்திருத்தப் பள்ளி உள்ளது. இங்கு 53 சிறுவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.

இங்கு சாரங்கபாணி (வயது 45) என்பவர் சிறை வார்டனாக உள்ளார். நேற்று இரவு சிறையின் உள்பகுதியில் இருந்த தண்ணீர் குழாயை சில சிறுவர்கள் வேண்டுமென்றே உடைத்துள்ளனர். இந்த நீர் சிறுவர்கள் அடைக்கப்பட்டிருந்த அறைக்குள் தண்ணீர் புகுந்தது.

இதையடுத்து வார்டன் அந்த அறைக்குள் சென்றார். அப்போது மின்சார வினியோகத்தை நிறுத்திய சிறுவர்கள் வார்டன் சாரங்கபாணியின் முகத்தில் போர்வையால் சுற்றி அவரைத் தாக்கி கீழே தள்ளினர்.

அவர் சுதாரித்து எழுவதற்குள் 12 சிறுவர்கள் கதவை திறந்து கொண்டு தப்பியோடிவிட்டனர்.

ராஜா
25-10-2007, 03:11 PM
இந்தியாவின் முதல் சுனாமி எச்சரிக்கை அமைப்பு நிறுவப்பட்டது!

http://tamil.webdunia.com/HPImages/newsworld/0710/15/613071015155234575.jpg

சுனாமி எனும் ஆழிப்பேரலைகள் உருவாவதற்கு காரணமாகும் கடும் நிலநடுக்கங்கள் ஏற்பட்ட 30 நிமிடத்தில் எச்சரிக்கம் இந்தியாவின் முதல் சுனாமி முன்னெச்சரிக்கை அமைப்பு ஹைதராபாத்தில் நிறுவப்பட்டுள்ளது!

ராஜா
25-10-2007, 03:37 PM
பருவ மழை தீவிரம்- பல மாவட்டங்களில் கன மழை: 3 மாவட்டங்களில் வெள்ள அபாயம்..

வியாழக்கிழமை, அக்டோபர் 25, 2007

சென்னை: வட கிழக்குப் பருவமழை தீவிரமடைந்திருப்பதால் திருவாரூர், நாகப்பட்டனம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இங்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
_________________

ராஜா
25-10-2007, 03:39 PM
தேர்தலுக்கு தயாராகிறார் பிரதமர்: பீகார், உ.பி., திட்டங்களில் கவனம்..

http://www.nicci.no/dane/images/20070525_082839_manmohan_singh6.jpg

புதுடில்லி: `லோக்சபா இடைத் தேர்தல்' என்ற எண்ணத்துக்கு மத்திய அரசு வந்து விட்டதாகவே டில்லியில் நடைபெறும் மாற்றங்கள் வெளிப்படுத்துகின்றன.

குறிப்பாக இடைத்தேர்தலை மனதில் வைத்து பல நடவடிக்கைகளை பிரதமர் மன்மோகன் சிங் எடுத்து வருகிறார்.

ராஜா
25-10-2007, 03:40 PM
கி*ரி*க்கெ*ட்டா*ல் *சீர*ழி*வு: ராமதா*ஸ்!

http://sangam.org/taraki/articles/2006/images/DrSRamadoss_PMK.jpg

''கிரிக்கெட் ஆட்டத்தால் சமுதாயம் சீரழிந்து வருகிறது. கிரிக்கெட் மோகத்துக்கு எதிராக நான் மட்டும்தான் குரல் கொடுக்கிறேன். எனக்கு ஆதரவாக யாரும் பின்னால் இல்லை'' எ*ன்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இ*ன்று செ*ன்னை*யி*ல் செ*ய்*தியாள*ர்க*ளிட*ம் கூ*றினா*ர்.

ஓவியன்
25-10-2007, 06:27 PM
மன்றத்தின் செய்திக் கதம்ப திரிக்கு எனது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் ராஜா அண்ணா!

அன்பான அண்ணா, செய்திகளுடன் அந்த செய்தி எங்கே எந்த ஊடகத்திலே எப்போது செய்தியாக வெளியிடப்பட்டது எனவும் குறிப்பிடுவது நலமென்பது எனது பணிவான கருத்து.

ராஜா
26-10-2007, 06:00 AM
26-10-07. வெள்ளி..


http://dinamalar.com/dinaadmin/photos/fpn_mix.jpg

ராஜா
26-10-2007, 06:02 AM
தமிழகம் முழுவதும் வெளுத்து வாங்குகிறது மழை : தண்ணீரில் மிதக்கிறது பயிர்கள், ரோடுகள் துண்டிப்பு..

http://specials.rediff.com/news/2005/oct/27flood4.jpg

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதால், பல மாவட்டங்களில் மூன்று நாட்களாக மழை வெளுத்து வாங்குகிறது. மழையால் ஏற்பட்ட சேத மதிப்பு மிக அதிகமாக இருக்கும் என அஞ்சப்படுகிறது.

ராஜா
26-10-2007, 06:03 AM
திருப்பம் ! மூன்றாவது அணியுடன் இணைந்தனர் இடதுசாரிகள்: மத்திய அரசுக்கு எதிராக செயல்பட கை கோர்ப்பு

புதுடில்லி: தேசிய அரசியலில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணி மற்றும் இடதுசாரி கட்சிகள், பார்லிமென்ட் உள்ளேயும், வெளியேயும், மத்திய அரசுக்கு எதிராக இணைந்து செயல்படுவது என முடிவெடுத்துள்ளன.

ராஜா
26-10-2007, 06:04 AM
இன்டர்நெட் பயன்படுத்துவோர் உஷார்: அடையாளம் திருடி பெரும் மோசடி..

http://dinamalar.com/dinaadmin/PagePhoto/fpn03.jpg

புதுடில்லி: இணையதளங்களை பயன்படுத்துவோர் தங்களின் அடையாளம் திருட்டுப் போவதால், பெரும் பொருள் இழப்புடன், மன உளைச்சலுக்கும் ஆளாக நேரிடுகிறது.

செய்யாத குற்றத்துக்கு சில சமயங்களில் அவர்களே பொறுப்பேற்க நேரிடுகிறது. வளர்ந்த நாடுகளிலும், வளரும் நாடுகளிலும், இணையதளங்களில் அடையாள திருட்டு அதிகரித்து வருகிறது. அடையாள திருட்டு மூலம் மோசடி செய்வதாக, இணையதளம் பயன்படுத்துவோரில் 37 சதவீதம் பேர் புகார் செய்துள்ளனர். இந்தியாவை பொறுத்தவரை, ஆர்குட், டக்கெட், எச்.ஐ., 5 போன்ற இணையதளங்களை சாட்டிங்குக்கு பயன்படுத்துவோர் மற்றும் இ-மெயில் பெறுவோரின் அடையாளங்கள் அதிகளவில் திருடப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

ராஜா
26-10-2007, 06:05 AM
விஷ உணவு: சவூதியில் 3 இந்திய சிறுவர்கள் மரணம்..

ஜெட்டா: விஷம் கலந்த உணவை சாப்பிட்ட 3 இந்திய சிறார்கள், சவூதி அரேபியாவில் உயிரிழந்தனர்.

கியூன்புடா என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள பொது மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டபோது அவர்கள் மூன்று பேரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

மருத்துவமனை செய்தித் தொடர்பாளர் முகம்மது இபின் மபோஸ் இதுகுறித்து கூறுகையில், விஷம் கலந்த உணவை சாப்பிட்டதால்தான் இவர்கள் மூன்று பேரும் இறந்திருப்பதாக சந்தேகிக்கிறோம் என்றார்.
_________________[நன்றி : தட்ஸ் தமிழ்]

ஓவியன்
26-10-2007, 06:11 AM
திருப்பம் ! மூன்றாவது அணியுடன் இணைந்தனர் இடதுசாரிகள்: மத்திய அரசுக்கு எதிராக செயல்பட கை கோர்ப்பு
புதுடில்லி: தேசிய அரசியலில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணி மற்றும் இடதுசாரி கட்சிகள், பார்லிமென்ட் உள்ளேயும், வெளியேயும், மத்திய அரசுக்கு எதிராக இணைந்து செயல்படுவது என முடிவெடுத்துள்ளன.

ஆகா!

அப்போது மூன்றாவது கூட்டணியின் எண்ணம், நோக்கம் முன்னேற்றப் பாதையிலே செல்கிறதா...???:smilie_abcfra:

ராஜா
26-10-2007, 06:13 AM
http://dinamalar.com/dinaadmin/ShareImages/share.jpg

ராஜா
26-10-2007, 06:14 AM
http://dinamalar.com/dinaadmin/ShareImages/gold.jpg

ராஜா
26-10-2007, 06:15 AM
இரண்டடுக்கு சூப்பர் ஜம்போ விமானம் : `ஏர் பஸ் ஏ-380' சிட்னிக்கு முதல் பயணம்..சிட்னி: உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானமான ஏர் பஸ் ஏ-380, முதல் முறையாக வர்த்தக ரீதியிலான பயணத்தை துவக்கியது.

சிங்கப்பூரில் புறப்பட்ட இந்த `சூப்பர் ஜம்போ' விமானம், ஏழு மணி நேர பயணத்துக்குப் பிறகு ஆஸ்திரேலிய தலைநகர் சிட்னியில் தரை இறங்கியது. இதுவரை, 40 ஆண்டுகளாக போயிங் 747 ரக விமானம் தான் உலகிலேயே பெரிய விமானமாக இருந்தது.

ராஜா
26-10-2007, 06:27 AM
குருவாயூர் கோவிலில் காளைக்கன்று தானம் ஏற்க மறுப்பு..

http://dinamalar.com/2007oct18/photos/si01.jpg

காளைக் கன்றுக் குட்டி தானத்தை ஏற்க குருவாயூர் கோவில் நிர்வாகம் மறுத்துவிட்டது.
_______________[நன்றி : தினமலர்]

ராஜா
26-10-2007, 06:31 AM
பூமியை நெருங்கி வந்த நிலா- பெரிதாக தெரிந்தது..

http://thatstamil.oneindia.in/img/full_moon-250_26102007.jpg

வானில் ஒரு அரிய நிகழ்வாக, நேற்று இரவு பூமியை மிக அருகில் நெருங்கி வந்தது நிலவு. இதனால் வழக்கத்தை விட 12 சதவீதம் பெரிதாகவும், பிரகாசமாகவும் தெரிந்தது. உலகின் அனைத்துப் பகுதி மக்களும் இதைக் கண்டு மகிழ்ந்தனர்.

நேற்றைவிட இன்று நிலா இன்னும் பெரிதாக தெரியவுள்ளது.
______________________[நன்றி:தட்ஸ் தமிழ்].

ராஜா
26-10-2007, 06:40 AM
டோணிக்கு டொயோடோ கார் - ஜார்க்கண்ட் அரசு வழங்கியது..

http://www.autobytel.com/images/carpics/testDrv/suemead/400/05.toyota.corolla.XRS/05.toyota.corolla.xrs.frpass34.jpg

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில அரசின் சார்பில் இந்திய கிரிக்கெட் கேப்டன் மகேந்திர சிங் டோணிக்கு, டொயோடோ காரை அம்மாநில முதல்வர் மது கோடா பரிசளித்தார்.

நேற்று தலைநகர் ராஞ்சியில் முதல்வர் மது கோடாவின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் டோணிக்குப் பாராட்டு விழா நடந்தது. அப்போது ஆச்சரியப் பரிசாக டொயோடோ கரோலா காரை மது கோடா வழங்கினார். மேலும் ரூ. 5 லட்சம் பரிசுக்கான காசோலையையும் அவர் வழங்கினார்.

காரைப் பெற்றுக் கொண்ட டோணி, பரிசை முதல்வர் நிவாரண நிதிக்கு அளித்து விட்டார்.

lolluvathiyar
26-10-2007, 08:21 AM
அருமையான திரி நிரைய தகவல் கிடைகிறது. ஆனால் சில இடங்களில் படத்துக்கும் செய்திக்கும் தொடர்பில்லாம இருகிறது.

ஓவியன்
26-10-2007, 01:45 PM
[COLOR="Red"]காரைப் பெற்றுக் கொண்ட டோணி, பரிசை முதல்வர் நிவாரண நிதிக்கு அளித்து விட்டார்.
டோனியின் நல் மனதுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்...! :)

ராஜா
26-10-2007, 04:35 PM
இலங்கை வான் பகுதியில் பாதுகாப்பு குறைவு: விமானப்படை அதிகாரி ஒப்புதல்..!

வெள்ளிக்கிழமை, அக்டோபர் 26, 2007

http://www.tamilweek.com/images/LtteAir02.jpg

கொழும்பு: இலங்கை வான் எல்லையின் சில பகுதிகளில் பாதுகாப்பற்ற நிலை நிலவுகிறது. இங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்படும் வரை இந்தப் பகுதிகளில் விடுதலைப் புலிகளின் தாக்குதல் அபாயம் அதிகமாகவே இருக்கும் என்று இலங்கை விமானப்படை அதிகாரி கூறியுள்ளார்.

ஓவியன்
26-10-2007, 04:40 PM
விடுதலைப் புலிகள் போன்ற ஒரு "தற்கொடைப் போராளிகள்" நிறைந்த அமைப்பிடம் இருந்து இலங்கையின் எந்த பகுதியையும் பாதுகாப்பாக வைத்திருக்க முடியாது என்பதே யதார்த்தம். அதனையே கடந்த கால சம்வங்களும் காட்டி நிற்கின்றன.

ராஜா
26-10-2007, 04:40 PM
வாலி எழுதிய "கலைஞர் காவியம்" கவிதை நூல்.. சி.டி யாக வெளிவருகிறது..

http://thatstamil.oneindia.in/img/2007/10/karuna-vali-250_26102007.jpg

வாலிபக் கவிஞர் வாலி கவிதை வடிவில் எழுதிய 'கலைஞர் காவியம்' நூல், சி.டி வடிவம் பெற்றுள்ளது. இதை மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் வெளியிடவுள்ளார்.

ஜெயாஸ்தா
26-10-2007, 04:48 PM
விடுதலைப் புலிகள் போன்ற ஒரு "தற்கொடைப் போராளிகள்" நிறைந்த அமைப்பிடம் இருந்து இலங்கையின் எந்த பகுதியையும் பாதுகாப்பாக வைத்திருக்க முடியாது என்பதே யதார்த்தம். அதனையே கடந்த கால சம்வங்களும் காட்டி நிற்கின்றன.

கரும்புலிகள் என்றாலே தற்பொழுது இலங்கை அரசு அதிரத்தான் செய்கிறது. ஆமாம் தனி நாடாக தமிழீழம் உருவாகப் போகிறதாமே..... பொங்கல் திருநாளில் பிரபகாரன் இந்த அறிவிப்பை விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்ற செய்தியைப் படித்தேன். அது பற்றி மேலதிக விபரம் தெரியுமா நண்பர்களே...?

அன்புரசிகன்
26-10-2007, 05:01 PM
இந்தியாவை பொறுத்தவரை, ஆர்குட், டக்கெட், எச்.ஐ., 5 போன்ற இணையதளங்களை சாட்டிங்குக்கு பயன்படுத்துவோர் மற்றும் இ-மெயில் பெறுவோரின் அடையாளங்கள் அதிகளவில் திருடப்படுவதாக புகார் எழுந்துள்ளது.


நட்புவலையமைப்புப்புக்களை ஏற்படுத்துவதாக கூறி இவ்வகையான மோசடி நடைபெற வாய்ப்பு உள்ளது. காரணம் சில நேரங்களில் பதிவுசெய்தவுடன் மின்னஞ்சல் முகவரி மற்றும் கடவுச்சொல்லைக்கேட்டு நமது மின்னஞ்சலில் உள்ள நண்பர்களின் மின்னஞ்சல் விலாசங்களிற்கு அழைப்புக்களை அனுப்பும். அவ்வகையான நேரங்களில் அவர்கள் கடவுச்சொற்களை அவர்கள் திருடக்கூடும்...

அன்புரசிகன்
26-10-2007, 05:05 PM
கரும்புலிகள் என்றாலே தற்பொழுது இலங்கை அரசு அதிரத்தான் செய்கிறது. ஆமாம் தனி நாடாக தமிழீழம் உருவாகப் போகிறதாமே..... பொங்கல் திருநாளில் பிரபகாரன் இந்த அறிவிப்பை விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்ற செய்தியைப் படித்தேன். அது பற்றி மேலதிக விபரம் தெரியுமா நண்பர்களே...?

இவையெல்லாம் ஊகங்கள் தான்... பொறுத்திருந்து பார்ப்போம்...

ஆனால் இன்று விமானப்படைத்தளபதி கூறியதாவது தமது விமானப்படை புலிகளின் விமானப்படையை எதிர்கொள்ள குறைந்தது 4 லிருந்து 5 வருடங்கள் ஆகலாம் என....

இதில் வேடிக்கை என்னவென்றால் அந்த காலகட்டத்தில் பறக்கும் புலிகள் எத்தகைய சாதனைகளை படைத்திருப்பார்கள் இலங்கை அரசால் ஊகிக்க முடியாதிருக்குமா ஏன்ன....

தொடர்புபட்ட செய்தி:


சிறிலங்காவின் பாதுகாப்பு கட்டமைப்பை சீரமைக்க சிறிது காலம் ஆகும். அப்பணிகள் முடிவடையும் வரை சில பகுதிகள் புலிகளின் தாக்குதலுக்கு உட்படக் கூடியதாகத்தான் இருக்கும். குறிப்பிட்ட பகுதிகளைப் பாதுகாக்கிறோம். ஆனால் எமக்கான தேவைகளை நாம் பெறும் வரை ஒட்டுமொத்த சிறிலங்காவையும் பாதுகாக்க முடியாது.
எமது தாக்குதலின் வலிமை எந்த வகையிலும் குறையவில்லை. அதே நேரத்தில் இழந்துவிட்ட வானூர்திகளை மிக மிக விரைவில் பெற முடியும் என்ற நம்பிக்கையும் உள்ளது என்றார் அவர்.

நன்றி: புதினம் இணையம்... (http://www.puthinam.com/full.php?2eYUr100bud6Z2edOB9x3ackcIL4d4BYj3cc28sH3d432XG3b02vTQ3e)

ராஜா
27-10-2007, 07:24 AM
நன்றி நண்பர்களே..!

இனி இன்றைய செய்திகளைப் பார்ப்போம்..!

ராஜா
27-10-2007, 07:35 AM
http://dinamalar.com/dinaadmin/photos/fpn_mix.jpg

ராஜா
27-10-2007, 07:35 AM
பயங்கரவாத சக்திகளை ஒழித்துக் கட்டுவோம் : வாய் திறந்தார் ராஜபக்சே..!

http://www.voanews.com/hindi/images/ap_Sri_Lanka_pres_rajapakse_210.jpg

அனுராதபுரம் விமான நிலையத்தின் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலுக்கு பின்னர், முதல் முதலாக நேற்று முன்தினம் இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே அதுபற்றி பேட்டியளித்தார். அவர் கூறியதாவது: விடுதலைப் புலிகளை தோல்வியடையச் செய்வதன் மூலமே நாட்டு மக்களுக்கு விடுதலை கிடைக்கும். இது எங்களின் முக்கிய பணி. அதை நிறைவேற்றிக் காட்டுவோம்.

ராஜா
27-10-2007, 07:36 AM
பாக்., தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிப்பு!

http://www.nipissingu.ca/department/history/muhlberger/histdem/india%20cricket%20team.jpg

ஆமதாபாத்: மிகவும் எதிர்பார்க்கப்படும் பாகிஸ்தான் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட உள்ளது.

முதல் இரண்டு ஒரு நாள் போட்டிகளுக்கான அணியில் இடம் பிடிக்க வீரர்கள் இடையே கடும் போட்டி காணப்படுகிறது. சேவக் மீண்டும் வாய்ப்பு பெறுவாரா? டிராவிட் உள்ளிட்ட சீனியர்களுக்கு ஓய்வு அளிக்கப்படுமா? இளமைக்கு முக்கியத்துவம் தரப்படுமா? என்று ஏராளமான கேள்விகள் எழுந்துள்ளன. இந்திய வரும் பாகிஸ்தான் அணி, 5 ஒரு நாள், 3 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது. முதல் இரண்டு ஒரு நாள் போட்டிக்கான(நவ.5, நவ.8) இந்திய அணி இன்று அறிவிக்கப்படுகிறது.

ராஜா
27-10-2007, 07:37 AM
ராணுவ வீரர்கள், அதிகாரிகளுக்கு ஐந்து மடங்கு! இளைஞர்களை கவர புதிய திட்டம்..!

http://www.chinadaily.com.cn/english/doc/2005-11/07/xin_531102071355441836418.jpg

புதுடில்லி: ராணுவத்தில், இளம் அதிகாரிகள், பைலட்கள் வெளியேறாமல் இருக்க, அவர்களுக்கு ஐந்து மடங்கு சம்பள உயர்வு அளிக்க கோரிக்கை விடப்பட்டுள்ளது.

ராஜா
27-10-2007, 07:39 AM
http://dinamalar.com/dinaadmin/ShareImages/share.jpg

ராஜா
27-10-2007, 07:41 AM
http://dinamalar.com/dinaadmin/ShareImages/gold.jpg

ராஜா
27-10-2007, 07:45 AM
பயங்கரவாதி பிலால் மீண்டும் நடமாட்டம் * அடுத்த அதிர்ச்சி! குண்டு வெடிப்புக்கு சதி திட்டம்?

http://www.orientalarchitecture.com/hyderabad/charminar03.jpg

புதுடில்லி: ஐதராபாத் இரட்டை குண்டு வெடிப்பு வழக்கு உட்பட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வரும் ஹர்கத்-உல்- ஜிகாதி-இ-இஸ்லாமி என்ற பயங்கரவாத அமைப்பின் தென்னிந்திய கமாண்டராகச் செயல்பட்டு வரும் பிலால் உயிருடன் இருக்கிறான் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ராஜா
27-10-2007, 07:56 AM
உடன்குடியில் அமைகிறது புதிய மின் உற்பத்தி நிலையம் : முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம்..

http://www.industcards.com/karuppur.jpg

சென்னை: `பெல்' நிறுவனத்துடன் இணைந்து தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் ஆயிரத்து 600 மெகாவாட் திறனுள்ள புதிய மின் உற்பத்தி நிலையத்தை தமிழக மின் வாரியம் அமைப்பதற்கான ஒப்பந்தம்

முதல்வர் கருணாநிதி மற்றும் மத்திய அமைச்சர் சந்தோஷ் மோகன் தேவ் ஆகியோர் முன்னிலையில் நேற்று கையெழுத்தானது.

ராஜா
27-10-2007, 08:05 AM
சிறைக்குள் 40 அடி நீள சுரங்கம்..!

மீரட்: உ.பி. மாநிலம் மீரட் நகரில் உள்ள மத்திய சிறையில் 40 அடி நீளமுள்ள சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மீரட் நகரில் உள்ள மத்திய சிறைக்குள் 40 அடி நீளமும், 4 அடி அகலமும் கொண்ட சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிறையின் 17 மற்றும் 18வது சிறை அறைப் பகுதியில் இந்த சுரங்கம் வெட்டப்பட்டுள்ளது.

சிறைக் கண்காணிப்பாளர் மேற்கொண்ட ஆய்வின்போது இந்த சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. சிறையிலிருந்து தப்புவதற்காக சிறைக் கைதிகள் இந்த சுரங்கத்தைத் தோண்டியுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

இதையடுத்து சிறைக் கைதிகளிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். உயர் போலீஸ் மற்றும் சிறை அதிகாரிகள் சிறைக்குச் சென்று அந்த சுரங்கத்தைப் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மீரட் சிறையில் பெரிய அளவில் சுரங்கம் தோண்டப்பட்டிருப்பது உ.பி. மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
___________________ நன்றி : தட்ஸ் தமிழ்.

ராஜா
27-10-2007, 08:12 AM
சென்னையில் 550 நட்சத்திர ஆமைகளுடன் ஒருவர் கைது..!

http://www.asianturtlenetwork.org/library/news_articles/images_news_2006/star_tortoises.jpg

சென்னை: சென்னையில் 550 நட்சத்திர ஆமைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.சென்னையில் இருந்து மலேசியா முற்பட்ட ஒருவரிடம் *கஸ்டம்ஸ் அதிகாரிகள் சோதனையிட்டபோது அவர் நட்சத்திர ஆமைகளை பதுக்கி வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இவரிடம் இருந்து 550 ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு 4. 77 லட்சம் ஆகும். தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

ராஜா
27-10-2007, 12:39 PM
பாகிஸ்தானுக்கெதிரான போட்டி : இந்திய வீரர்கள் அணி அறிவிப்பு : சேவக் சேர்ப்பு
புதுடில்லி: பாகிஸ்தானுக்கெதிரான ஒரு நாள் போட்டியில்விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதன்படி தோனி ( கேப்டன்), யுவராஜ்சிங், சேவக், கங்குலி, சச்சின், கவுதம்காம்பீர், உத்தப்பா, ராகித்ஷர்மா, ஹர்பஜன்சிங், முரளிகார்த்திக், ஷாகீர்கான், ஆர். பி. ,சிங், இர்பான்பதான் , ஸ்ரீசாந்த், பிரவீன்குமார் ஆகியோர் அடங்குவர். ராகுல் டிராவிட் இடம் பெறவில்லை. கடந்த போட்டிகளில் இல்லாத சேவக் தற்போது சேர்க்கப்பட்டுள்ளார். இதனை இந்திய கிரிக்கெட் கவுன்சில்செயலர் நிரஞ்சன்ஷா *அறிவித்துள்ளார். டெஸ்ட் போட்டிக்கான கேப்டன் பின்னர் அறிவிக்கப்படும்.

ஓவியன்
27-10-2007, 02:18 PM
விடுதலைப் புலிகளை தோல்வியடையச் செய்வதன் மூலமே நாட்டு மக்களுக்கு விடுதலை கிடைக்கும். இது எங்களின் முக்கிய பணி. அதை நிறைவேற்றிக் காட்டுவோம்.

பாவம் மகிந்த இப்படித்தான் அடிக்கடி சொல்லிக்கொண்டிருக்கிறார் மனுஷர். :D

சூரியன்
27-10-2007, 03:47 PM
இந்தியஅணி இன்று அறிவிக்கப்படுகிறாதா..

ராஜா
29-10-2007, 05:27 AM
29-10-07 . திங்கட்கிழமை.. இன்றைய செய்திகள்..

சிங்கத்திற்கு இணையான அதிமுக தொண்டர்கள்: ஜெ.

http://thatstamil.oneindia.in/img/2007/10/jayalalitha_new248_28102007.jpg

சென்னையில், நடந்த அதிமுக நிர்வாகிகளின் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டு ஜெயலலிதா பேசுகையில், ஒரு கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களின் அசைக்க முடியாத அன்பாலும், பாசத்தாலும் பிணைக்கப்பட்டு வலுவாக இருப்பதுதான் நமது உறவு.

பிடறி சிலிர்த்து கர்ஜிக்கும் சிங்கத்திற்கு இணையான தொண்டர் படை கூட்டமும், வீரர் பட்டாளங்களையும், பொய்மையை தோற்கடித்து உண்மை என்னும் ஆயுதம் ஏந்தி தேர்தல் களத்தில் சலிக்காது போர் தொடுக்கும் போராளிகளாகவும் நமது தொண்டர்கள் விளங்கி வருகிறார்கள் என்று பேசினார்.

ராஜா
29-10-2007, 05:28 AM
அமைச்சர் ஆவாரா கனிமொழி?

http://thatstamil.oneindia.in/img/2007/10/kanimolirr_28102007.jpg

சென்னை: திமுக எம்.பியும், முதல்வர் கருணாநிதியின் மகளுமான கனிமொழி மத்திய அமைச்சராகக் கூடும் என்பதை முதல்வர் கருணாநிதி சூசகமாக உணர்த்தியுள்ளார்.

இதுகுறித்த கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், எப்போதாவது ஆகலாம் என்று புன்னகையுடன் கூறியுள்ளார். இதன் மூலம் விரைவில் கனிமொழி அமைச்சர் ஆகக் கூடும் என்பதை முதல்வர் கருணாநிதி சூசகமாக தெரிவித்துள்ளதாக கருதப்படுகிறது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தனது சீனப் பயணத்தை முடித்து விட்டு நாடு திரும்பியதும், பிரதமர் மன்மோகன் சிங் அமைச்சரவையில் மாற்றம் செய்வார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வரும் சூழ்நிலையில் முதல்வர் கருணாநிதியின் இந்த பதில், கனிமொழிக்கு விரைவில் அமைச்சர் பதவி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.
________________________ நன்றி : தட்ஸ் தமிழ்.

ராஜா
29-10-2007, 05:29 AM
அமைச்சர் பதவி மீது ஆசை இல்லை - கனிமொழி

http://thatstamil.oneindia.in/img/2007/10/kanimozhi250_28102007.jpg

செய்தியாளர்களிடம் கனிமொழி பேசுகையில், எனக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும் என்று சிலர் கணிப்பதை நான் நம்பவில்லை. எனக்கு ஜோதிடத்தின் மீது நம்பிக்கை கிடையாது. எனக்கு அமைச்சர் பதவி கிடைக்குமா, கிடைக்காதா என்பது குறித்து தெரியாது.

எப்போது நான் அமைச்சர் ஆவேன் என்று கூற முடியாது. அமைச்சர் பதவி மீது எனக்கு ஆசை இல்லை.இப்போது நான் உள்ள நிலையிலேயே மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறேன் என்றார்.

ராஜா
29-10-2007, 05:30 AM
சின்னத்திரை பிரபலம் சுஜிதா திடீர் கல்யாணம் ..

http://thatstamil.oneindia.in/img/2007/10/sujitha_pictures_337_9_28102007.jpg

விளம்பரப் பட இயக்குநர் தனுஷுக்கும், நடிகை சுஜிதாவுக்கும் பொள்ளாச்சியில் திருமணம் நடந்தது.இது பெற்றோர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணமாகும். திருமண வரவேற்பு சென்னையில் வருகிற நவம்பர் 11ம் தேதி பாம்குரோவ் ஹோட்டலில் நடைபெறுகிறது.

ராஜா
29-10-2007, 05:31 AM
ஒண்டர்புல் கமல்! - ரஜினி பாராட்டு ..!

http://thatstamil.oneindia.in/img/2007/10/kamal_28102007.jpg

தசாவதாரத்தில் கமல்ஹாசன் போட்டுள்ள வேடங்களையும், அவரது நடிப்பையும் பார்த்து சூப்பர் ஸ்டார் ரஜினி மெய் சிலிர்த்து அவரை வாயார பாராட்டியுள்ளார்.

ராஜா
29-10-2007, 05:32 AM
கும்பகோணத்தில் சுவர் இடிந்து 4 குழந்தைகள் பலி: தமிழகம் முழுவதும் 22 பேர் பலி..

கும்பகோணம் அருகே கன மழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில், வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருந்த 3 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மழை காரணமாக நெய்வேலி, கோவை, சென்னை, ஈரோடு, பண்ருட்டி, கன்னியாகுமரி உட்பட தமிழகம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 22 பேர் பலியாகியுள்ளனர்.

ராஜா
29-10-2007, 05:32 AM
http://www.dinamalar.com/dinaadmin/photos/pic2.jpg

ராஜா
29-10-2007, 05:33 AM
புயல் இன்று பிற்பகலில் கரையை கடக்கும்...

http://www.thehindubusinessline.com/2007/05/14/images/2007051401531701.jpg

சென்னை : வங்க கடலில் உருவாகியுள்ள புயல் இன்று பிற்பகலில் கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் ஆந்திர மாநிலத்தின் காவாளிக்கும் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் சின்னம் மற்றும் மழை வெள்ளத்தை கருத்தில் கொண்டு இன்று தமிழகம் முழுவதும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ராஜா
29-10-2007, 05:34 AM
நெல்லை அருகே காற்றாலை தீப்பிடித்து எரிந்தது..!

http://www.wandfluh-us.com/images/Wind%20mill.jpg

திருநெல்வேலி: நெல்லை அருகே நேற்று மாலை மின்சாரம் தயாரிக்கக்கூடிய காற்றாலை திடீரென தீப்பிடித்து எரிந்தது. நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகேயுள்ள பெத்துரெங்கபுரத்தில் மின்சாரம் தயாரிக்கக் கூடிய தனியாருக்கு சொந்தமான காற்றாலைகள் அதிக அளவில் உள்ளன. நேற்று மாலை அக்காற்றாலைகளில் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. மளமளவென பரவிய தீயால் அந்த காற்றாலையும், அதன் மேல் சென்ற வயர்களும் முற்றிலுமாக கருகின. வள்ளியூரிலிருந்து சிதம்பரம் தலைமையில் வந்த தீயணைப்பு வீரர்கள் மற்ற பகுதிகளுக்கு பரவாமல் தீயை கட்டுப்படுத்தினர். மின்கசிவு காரணமாக காற்றாலை எரிந்திருக்கலாம் எனத் தெரிவித்த போலீசார் சேதமதிப்பு குறித்து கணக்கிட்டு வருகின்றனர்.

நுரையீரல்
29-10-2007, 07:39 AM
ராஜா அண்ணனின் செய்திகள் சில வரிகளில் படித்தால் போதும், டி.வி நியூஸ் பார்க்க வேண்டிய கட்டாயமில்லை.

ராஜா
29-10-2007, 11:12 AM
பந்த் விவகாரம் : முதல்வர் கருணாநிதிக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்..!

http://im.sify.com/sifycmsimg/may2006/Entertainment/Movies/Tamil/14203072_Karunanidhi1_400.jpg

புதுடில்லி : கடந்த 1ம் தேதி தமிழகத்தில் நடந்த பந்த் குறித்து விளக்கம் கேட்டு முதல்வர் கருணாநிதி, மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோருக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தலைமை செயலாளர், தமிழக போலீஸ் டி.ஜி.பி. ஆகியோருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டது.

ராஜா
29-10-2007, 11:13 AM
தேவகவுடா கட்சி உடைகிறது? 40 எம்.எல்.ஏ.,க்கள் சிறைவைப்பு.

http://www.chennaionline.com/newsimages/Oct2007/aa1b879e-7ef0-484f-a222-3f7247de794f1.jpg

பெங்களூரு: கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியில் பிளவு ஏற்படுவதை தடுக்க முன்னாள் முதல்வர் குமாரசாமி அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.

கட்சியின் 40 எம்.எல்.ஏ.,க்களை தனது கட்டுப்பாட்டின் கீழ் பெங்களூரு புறநகர் பகுதியில் உள்ள தனியார் சுற்றுலா விடுதியில் சிறை வைத்துள்ளார்.

ராஜா
29-10-2007, 11:14 AM
சென்செக்ஸ் 20 ஆயிரம் புள்ளிகளை தொட்டது..!

மும்பை : மும்பை பங்குச்சந்தையில் இன்று சென்செக்ஸ் 20 ஆயிரம் புள்ளிகளை தொட்டு வரலாற்று சாதனை புரிந்தது. காலையில் பங்குச்சந்தை துவங்கியதும் 19,754 புள்ளிகளாக இருந்த சென்செக்ஸ் மெல்ல மெல்ல உயர்ந்து பிற்பகலில் 20 ஆயிரம் புள்ளிகளை தொட்டது. பங்குச்சந்தை வரலாற்றில் முதன் முறையாக சென்செக்ஸ் 20 ஆயிரம் புள்ளிகளை தாண்டி சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் பங்கு வர்த்தகர்கள் மகிழ்ச்சியடைந்தனர். 19 ஆயிரம் புள்ளிகளை தாண்டியிருந்த சென்செக்ஸ் கடந்த 17ம் தேதி 1,700 புள்ளிகள் சரிந்து கடும் வீழ்ச்சியை சந்தித்தது. இதன் மூலம் ஒரே நாளில் ரூ.4 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்பட்டது என்பதும், அடுத்த நாளே மீண்டும் சென்செக்ஸ் 19 ஆயிரம் புள்ளிகளை கடந்ததும் குறிப்பிடத்தக்கது.

ராஜா
29-10-2007, 12:44 PM
கோவையில் மகிந்த ராஜபக்ச நிர்வாண கொடும்பாவி எரிப்பு முயற்சி: 30 பெரியார் தி.க.வினர் கைது

அனுராதபுரம் சிறிலங்கா வான் படைத் தளம் மீது தாக்குதல் நடத்திய சிறப்புக் கரும்புலி மாவீரர்களின் வித்துடல்களை நிர்வாணப்படுத்திய சிறிலங்கா அரசாங்கத்தின் காட்டுமிராண்டித்தனத்தைக் கண்டித்து தமிழ்நாட்டின் கோவையில் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் நிர்வாணக் கொடும்பாவியை எரிக்க முயன்ற பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த 30 பேர் கைது செய்யப்பட்டனர்.

அறிஞர்
29-10-2007, 03:09 PM
இலங்கையில் சண்டைகள் என்றுதான் முடிவுக்கு வருமோ....

இந்திய பங்கு சந்தை வளர்ச்சி அபாரம்.. இன்னும் வளரட்டும்.

ஓவியன்
29-10-2007, 03:12 PM
இலங்கையில் சண்டைகள் தீர வேண்டுமென்பதே எல்லோருடைய ஏக்கமும் எதிர்பார்ப்புக்களும், ஆனால் என்ன செய்ய தொட்ட குறை விட்ட குறை கணக்காகத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

ராஜா
14-08-2008, 04:51 AM
14 / 08 / 2008.

http://thatstamil.oneindia.in/img/2008/08/jayalalitha-250_14082008.jpg


பாமக, கம்யூ. முன்வந்தால் கூட்டணிக்குத் தயார் - ஜெ.

பாட்டாளி மக்கள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணிக்கு முன்வந்தால் பேச்சுவார்த்தைக்கு அதிமுக தயாராகவே இருக்கிறது. விஜயகாந்த், சரத்குமார் போன்றவர்களுடன் கூட்டணி குறித்து அவர்கள்தான் கூற வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார். ..

ராஜா
14-08-2008, 04:54 AM
நாடு திரும்பினார் தங்க மகன் அபினவ் பிந்த்ரா - உற்சாக வரவேற்பு..!

டெல்லி: ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்று நாட்டு மக்களின் நூற்றாண்டு கனவை நனவாக்கியுள்ள தங்க மகன் அபினவ் பிந்த்ரா இன்று அதிகாலையில் நாடு திரும்பினார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிந்த்ராவை அவரது தாயார் பப்லி பிந்த்ரா உச்சி முகர்ந்து வாழ்த்தி வரவேற்றார். குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை இன்று பிந்த்ரா சந்தித்து பதக்கத்தைக் காட்டி வாழ்த்து பெறவுள்ளார்.

ராஜா
14-08-2008, 04:56 AM
நெல்லைக்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீஸ்காரர் எழுதியதாக சந்தேகம்.

நெல்லை: நெல்லை மாநகரில் 5 இடங்களில் குண்டுகள் வெடிக்கும் என மாநகர காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் வந்துள்ளது. போலீஸ்காரர் ஒருவரே இதை எழுதியிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

ராஜா
14-08-2008, 04:58 AM
இலவச கலர் டிவி: தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்..

டெல்லி: இலவச கலர் டிவி வழங்கும் திட்டம் குறித்து விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தேர்தல் இலவசங்கள் சட்டப்படி அனுமதிக்கப்பட்டதா என்பது குறித்து ஆராயப்படும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ராஜா
14-08-2008, 05:00 AM
சென்னை: கொடிகள் அகற்றம்: வைகோ கண்டனம்

சென்னை: சென்னையில் கட்சிகளின் கொடிக் கம்பங்கள் மற்றும் விளம்பர பலகைகளை அகற்றுவதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சென்னை மாநகரில் சாலையோரங்களில் உள்ள கட்சிக்கொடி கம்பங்கள், கட்சிகளின் அறிவிப்பு பலகைகளை அகற்றி மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருவது கண்டனத்துக்குரியது.

மதுரையில் நடந்த விழாவில் விளம்பர பலகைகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அது மட்டுமில்லாமல் விளம்பர பலகைகள் முறிந்து விழுந்ததில் 3 பேர் காயம் அடைந்தனர்.

ஆனால், சென்னையில் சாலையோரங்களில் உள்ள கட்சி கொடிகளாலோ, விளம்பர பலகையாலோ பொது மக்களுக்கு எந்த இடையூறும் கிடையாது. எனவே கட்சி கொடி கம்பம், விளம்பர பலகைகளை அகற்றுவதை கைவிட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

ராஜா
14-08-2008, 05:25 AM
'காயின் பாக்ஸ்'களுக்கு 15ம் தேதி வரை தடை

நெல்லை: நெல்லையில் வரும் 15ம் வரை காயின் பாக்ஸ் போன்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தீவிரவாதிகள் அப்துல் கபூர், ஹீரா மற்றும் அலி அப்துல்லா கைது செய்யப்பட்டு நெல்லை விசாரிக்கப்பட்டனர். நெல்லையிலும் சென்னையிலும் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று வெடிகுண்டு தாக்கதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து நெல்லையில் வெடிகுண்டு பீதி ஏற்பட்டது. நெல்லை மாவட்டத்திலுள்ள பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் தொடர்ந்து வந்தது. அது புரளி என்று தெரிந்த பிறகும் அங்கு பதட்டம் நிலவி வருகிறது.

இந்நிலையில் காயின் பாக்ஸ் போனுக்கு போலீசார் 3 நாள் தடை விதித்துள்ளனர். நெல்லை மாவட்டம் முழுவதும் இன்று முதல் வரும் 15ம் தேதி வரை காயின் பாக்ஸ் போன்களை வைக்க வேண்டாம் என்றும் அப்படி வைத்தால் போன் செய்ய வருபவர்களை கண்காணிக்க வேண்டும் என்றும் நெல்லை காவல் துறை உத்தரவிட்டுள்ளது.

அந்தந்த பகுதியில் உள்ள காவல் நிலையங்கள் மூலம் அப்பகுதிகளில் உள்ள தொலைபேசி உரிமையாளர்களுக்கு இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.