PDA

View Full Version : பாக். ஆபத்தான தீவிரவாத நாடு.



ஜோய்ஸ்
23-10-2007, 01:27 PM
நியூயார்க், அக்.22:
தலிபான் மற்றும் அல்கொய்தா தீவிரவாதிகளின் தாராள நடமாட்ட மும், வன்முறைச் செயல்களும் இருப்பதால் பாகிஸ்தான் உலகி லேயே மிகவும் ஆபத்தான நாடாகும் என்று அமெரிக்க பத்திரிகையான "நியூஸ் வீக்' செய்தி வெளியிட்டுள்ளது.
.
கடந்த வாரம் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோ தனது தாயகத்திற்கு திரும்பியபோது மனித வெடிகுண்டு வெடித்து 150க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். இத் தகைய தீவிரவாதிகளின் வன் செயல் பாகிஸ்தானில் அவ்வப்போது நடந்து வருகிறது.
இந்த நிலையில், அமெரிக்காவில் வெளியாகும் "நியூஸ் வீக்' என்ற பத்திரி கைச் செய்தி கூறுவதாவது:

ஆப்கானிஸ்தான், ஈராக் போலன்றி பாகிஸ்தானில் அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின் லேடன் கேட்பதெல்லாம் கிடைக் கிறது. அரசியல் ஸ்திரமின்மை, நம்பிக்கைக் குரிய தீவிரவாத அமைப்பு, மேற்கு நாடுகள் மீது கோபம் என பல்வேறு விஷயங்கள் தீவிரவாதிகளுக்கு சாதக மாக உள்ளது.

பாகிஸ்தானின் பழங்குடி மக்கள் வாழும் எல்லைப்புற பகுதிகளில் தீவிர வாதிகளின் நடமாட்டமும், கட்டுப் பாடும் தாராளமாக அமைந்துள்ளது. இதன் மூலம் பாகிஸ்தானில் சில நகரங் களை தங்களுடைய அடித் தளமாக தீவிரவாதிகள் மாற்றி வருகிறார்கள்.

தாக்குதலில் காயம் அடைந்து வரும் தீவிரவாதிகளுக்கு இங்குள்ள மருத் துவமனைகள் சிகிச்சை அளிக் கின்றன. பாகிஸ்தானில் இருப்பது பாது காப்பாக உள்ளது என்று ஆப்கானிஸ் தானில் பிரிட்டிஷ் வீரர் களுடன் நடந்த சண்டையில் படுகாயம் அடைந்த தாலிபான் தளபதி அப்துல்மஜாத் தெரிவித்தார்.

துப்பாக்கிகளும், வெடிபொருட் களும் பாகிஸ்தானில் தீவிரவாதி களுக்கு தாராளமாக கிடைக்கிறது. ஆப்கானிஸ்தானில் குளிர்காலத்தின் போது சண்டை நடைபெறுவதில்லை என்பதால் ஆயிரக்கணக்கான தீவிர வாதிகள் பாகிஸ்தானுக்கு சென்று மதரஸாக்களில் பயிற்சி பெறு கிறார்கள்.

சிலர் கணிப்பொறி தொழில் நுட்பம், வீடியோ தொழில் நுட்பம் போன்ற விஷயங்களிலும் ஆங்கிலம் பேசுவதற்கும் பயிற்சி பெறுகிறார்கள். பெஷாவர் தலிபான் தீவிரவாதி களுக்கும், பிற மதஅடிப்படைவாதி களுக்கும் முக்கிய மையமாக திகழ்கிறது. இவ்வாறு அந்த பத்திரிகையில் செய்தி வெளியாகி உள்ளது.

நன்றி- மாலை சுடர்.

அறிஞர்
23-10-2007, 01:53 PM
இதை தானே நாம் பல ஆண்டுகளாக சொல்லி வருகிறோம்...