PDA

View Full Version : அமைச்சர்கள் இலாகா மாற்றம்



mgandhi
23-10-2007, 01:11 PM
அமைச்சர்கள் இலாகா மாற்றம்: எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்- சுகாதாரம்; கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்- பிற்பட்டோர் நலம்


அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வத் திடம் இருந்த பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர். ராமச்சந்திரனுக்கு மாற்றப்பட்டுள்ளது.

பிற்பட்டோர் நலன், மிகவும் பிற்பட்டோர் நலன், சீர் மரபினர் நலன், வெளிநாடு வாழ் இந்தியர் கள், அகதிகள் மற்றும் வெளியேற்றப்பட்டவர்கள் நலன் ஆகிய இலாகாக்களை அவர் கவனிப்பார்.

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனிடம் இருந்த சுகாதாரத்துறை, அமைச்சர் எம்ஆர்.கே. பன்னீர்செல்வத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர் சுகாதாரம், மருத்துவக்கல்வி, குடும்ப நலன் ஆகிய இலாகாக் களை கவனிப்பார்.

இனி எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் சுகாதாரத்துறை அமைச்சராகவும், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராகவும் செயல் படுவார்கள்.

அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வத்திடம் இருந்த பத்திரப்பதிவு, முத்திரைத்தாள் சட்டம் ஆகிய இலாகாக்கள் சுற்றுலாத்துறை அமைச்சர் சுரேஷ்ராஜனுக்கு கூடுதலாக வழங்கப்படுகிறது. இனி அவர் சுற்றுலா மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் என்று அழைக்கப்படுவார். முதல்-அமைச்சர் பரிந் துரை யின்படி கவர்னர் பர்னாலா இந்த மாற்றத்தை செய்துள்ளார்.

முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமையில் 31 பேர் தமிழக அமைச்சரவை யில் பதவி வகிக்கிறார்கள்.

அறிஞர்
23-10-2007, 01:26 PM
அமைச்சரவை மாற்றத்தின் பின்னனியில் ஏது செய்திகள் இருக்கிறதா... விகடன் படிக்கவேண்டும்.