PDA

View Full Version : உன்னதமானவளே..!

யாழ்_அகத்தியன்
23-10-2007, 01:05 PM
நீ கேட்கும் போதெல்லாம்
என் கவிதைகளை தந்துகொண்டே
இருக்கிறேன் ஏதாவது ஒரு கவிதையை
படித்துவிட்டாவது என்னைக் கேட்பாய்
என்ற நம்பிக்கையில்

*
தினமும் நீ என்னை பார்த்தும்
பாராமல் போகிறாய் அதையும்
பார்ப்பம் பாரமல் பார்க்காம
எத்தனை மட்டும் பார்க்கப்
போறாயென்று

*
சொன்னா கேக்க மாட்டிங்களா
என்றதை கேக்கிறதற்காகவே
தினமும் மழையில் நனைந்து
வரலாம்

*
ஒரு இரவாவது நீ தூங்குவதை
தூங்காமல் பார்க்க வேண்டும் என்ற
என் ஆசை இன்னும் நிறைவேறவில்லை
ம்ம் கொடுத்து வைத்த கணவன் நான்
கொடுத்து வைக்கப் போகிற அம்மா நீ

*
நான் தொடர்ந்தும் உனக்காகவே
கவிதை எழுத வேண்டும் என்பதில்
எவ்வளவு ஆசை உனக்கு
என் கவிதையை படித்துவிட்டு
யாரு எழுதிய கிறுக்கலுக்கு
வாழ்த்துகிறாயே

-யாழ்_அகத்தியன்

ஓவியன்
03-11-2007, 06:40 PM
ஒரு இரவாவது நீ தூங்குவதை
தூங்காமல் பார்க்க வேண்டும் என்ற
என் ஆசை இன்னும் நிறைவேறவில்லை
ம்ம் கொடுத்து வைத்த கணவன் நான்
கொடுத்து வைக்கப் போகிற அம்மா நீ

அழகோ அழகு அகத்தியன்...!!

நீ அழகாகத் தூங்கத் தொடங்க நான்,
அசந்து தூக்கத்தைத் தொலைத்தேன்.....!!

gans5001
08-11-2007, 10:41 AM
[COLOR="Sienna"]
நீ கேட்கும் போதெல்லாம்
என் கவிதைகளை தந்துகொண்டே
இருக்கிறேன் ஏதாவது ஒரு கவிதையை
படித்துவிட்டாவது என்னைக் கேட்பாய்
என்ற நம்பிக்கையில்

*
ஒரு இரவாவது நீ தூங்குவதை
தூங்காமல் பார்க்க வேண்டும் என்ற
என் ஆசை இன்னும் நிறைவேறவில்லை
ம்ம் கொடுத்து வைத்த கணவன் நான்
கொடுத்து வைக்கப் போகிற அம்மா நீ

இரண்டு விசயங்களை கவனித்தேன் (இளசு கொடுத்த பட்டத்தைக் காப்பாற்ற வேண்டுமே)

1. முதல் பத்தியில் காதலனாய் கவிக்கத் தொடங்கியிருக்கிறீர்கள். ஆனால் பின்பு கணவனாய் காட்டியிருக்கிறீர்கள்.

பின் தூங்கி முன் எழும் மனைவி எப்படி கவிதையை ரசிக்காமல் போவாள். கொஞ்சம் முரண்படுகிறது.

2. ஆங்காங்கே தெரியும் எழுத்துப்பிழைகளும், சந்திப்பிழைகளும் பாயாசத்தில் கல்லாய் நெருடுகிறது.

அதிகமாய் பதிக்கும் ஆசையும், ஆர்வமும் தெரிகிறது.. சிறிது கவனம் செலுத்தினால் மன்றத்தின் நல்ல கவிஞர்களில் ஒருவராய் மாற நிறைய வாய்ப்பு உள்ளது.

யாழ்_அகத்தியன்
08-11-2007, 11:48 AM

மிக்க நன்றி உங்க விமர்சனத்துக்கும்
வாழ்த்துக்கும்

இந்த கவிதைகள் சேர்த்து எலுதபட்ட
கிறுக்கல்கள் அல்ல தனிதனியாய்
எழுதபட்ட கிறுக்கல்கள்

எல்லாவற்றையும் சேர்த்து
பார்த்தால் முரண்படும்

ஒரு தலைப்பின் கீழ் எழுதபட்ட
சில கிறுக்கல்கள்

இதுவரை நான் எழுத்துபிழை விடாமல்
எதையும் எழுதியதில்லை என்று சொல்லலாம்
எழுத்துப் பிழை விடாமல் எழுதத் தெரியாது
என்றே சொல்லலாம்

கவிஞனாகும் தகுதி எனக்கில்லை
என்று நன்றாக தெரியும் இருந்தும்
ஏன் கிறுக்குகிறேன் என்றால்

எனக்கு தெரிந்த எதுவாக இருந்தாலும்
அதை எனக்கு தெரிந்த முறையில்
யாரிடமாவது சொல்லிக் காட்ட வேண்டும்
என்ற அவா மட்டும்தான் காரணம்

அதுதான் நான் இங்கு வந்தவுடனே
சொன்னேன் நான் கவிஞன் அல்ல கிறுக்கன்
என்று

எல்லாரும் என் பெயரை (யாழ்_அகத்தியன்)
பார்த்துவிட்டு நான் பெரிய கவிஞன்
என்று தவறாக நினைக்கிறார்கள்

தயவு செய்து கிறுக்கன் நான்
கிறுக்கியவற்றை கவிஞர்கள்
எழுதும் கவிதைகளோடு சேர்த்து
படித்துப் பார்க்காதீர்கள்

எனக்கு இலக்கணம் இலக்கியம்
என்று எழுதத்தான் தெரியும்
இவைகளை நான் படித்ததே இல்லை

நான் படித்த கவிஞனல்ல
நான் படிக்காத கிறுக்கன்

எனது தவறுகளை சுட்டிக் காட்டியமைக்கு
மிக்க நன்றி தொடர்ந்தும் இவ்வாறான விமர்சனக்களை
எதிர்பார்க்கிறேன் நான் கவிஞனாக வேண்டும் என்ற ஆசையில்
அல்ல தவறு விடாத கிறுக்கனாய் ஆக வேண்டும் என்ற அக்கரையில்
தான் கேக்கிறேன். மிக்க நன்றி

gans5001
09-11-2007, 11:36 AM
நான் படித்த கவிஞனல்ல
நான் படிக்காத கிறுக்கன்

ஞானக்கிறுக்கனாய் ஆகும் அத்தனை தகுதியும் இருக்கிறது.. உங்களை நீங்களே குறைவாக மதிப்பிட வேண்டாம்.

எழுத்துப் பிழைகளை களைவது மிக எளிது. எழுதிய பின்பு ஒரு முறைப் படித்துப்பார்த்து விட்டு பின்பு பதிக்கவும். பிழைகள் சடுதியில் குறையும். ஒரு நாள் காணாமலே போய்விடும்.

ஆதவா
09-11-2007, 11:51 AM
இரண்டு விசயங்களை கவனித்தேன் (இளசு கொடுத்த பட்டத்தைக் காப்பாற்ற வேண்டுமே)

1. முதல் பத்தியில் காதலனாய் கவிக்கத் தொடங்கியிருக்கிறீர்கள். ஆனால் பின்பு கணவனாய் காட்டியிருக்கிறீர்கள்.

பின் தூங்கி முன் எழும் மனைவி எப்படி கவிதையை ரசிக்காமல் போவாள். கொஞ்சம் முரண்படுகிறது.

2. ஆங்காங்கே தெரியும் எழுத்துப்பிழைகளும், சந்திப்பிழைகளும் பாயாசத்தில் கல்லாய் நெருடுகிறது.

அதிகமாய் பதிக்கும் ஆசையும், ஆர்வமும் தெரிகிறது.. சிறிது கவனம் செலுத்தினால் மன்றத்தின் நல்ல கவிஞர்களில் ஒருவராய் மாற நிறைய வாய்ப்பு உள்ளது.

இப்படி ஒருவரைத்தான் தேடிக் கொண்டிருந்தோம்.....

விமர்சனம் அருமை கண்ஸ் அவர்களே!

அமரன்
09-11-2007, 11:57 AM
இப்படி ஒருவரைத்தான் தேடிக் கொண்டிருந்தோம்.....
விமர்சனம் அருமை கண்ஸ் அவர்களே!
ஆமா..ஆதவா..
அப்படி என்றால்தான் எழுதும்போது உன்னிப்பாக இருக்கவேண்டும் என்று தோன்றும்..
எழுத்துகளும் மெருகு பெறும்..குறைவாக ஆனால் நிறைவான விமர்சனங்கள் கண்ஸ் அண்ணாவுடையவை..

யாழ்_அகத்தியன்
10-11-2007, 07:11 PM
மிக்க நன்றி உங்க ஆழமான
விமர்சனங்களுக்கு

விமர்சனம் ஒன்றே என்
எழுதுகோளை தீட்டும்

உங்கள் அனைவருக்கும்
ஒரு மகிழ்ச்சியான செய்தி
ஒன்று

நான் தமிழ்செல்வன் அவர்களுக்கு
எழுதிய இரங்கள் கவிதை

"ஆனந்தவிகடனில்" வந்திருக்கிறது

இதுவே பத்திரிகையில் என் கவிதை
முதல் தடவை வந்திருக்கிறது

முடிந்தால் அனைவரும் வாங்கி படிக்கவும் நன்றி

அமரன்
10-11-2007, 07:14 PM
வாழ்த்துக்கள் யாழ். நிச்சயமாக படிக்கின்றேன்.