PDA

View Full Version : தாயுமானவளே..!



யாழ்_அகத்தியன்
23-10-2007, 11:41 AM
நீ வரும்வரை என்னை எவரும்
கவனிப்பதில்லை உன்னோடு இருக்கையில்
கவனிக்காததென்று எதுவும் இல்லை
அதற்காகவாவது உன்னோடு கூட
வரலாம் நான்

*
உன்னோடு பார்க்கவேண்டிய உலக
அதிசயங்கள் எல்லாமே எங்கே என்
அதிசயம் என்று கேக்கிறது அதற்கு
எப்படித் தெரியும் உன்னை நான்
சுற்றிச் சுற்றி ரசிப்பது

*
தினம் நீ சாய்ந்து தூங்கும்
என் தோல்களை தடவித்
தடவித்தான் என்னையே
நான் தூங்க வைக்கிறேன்

*
உன்னை நிற்க வைத்து யார்
புகைப்படம் எடுத்தது அதை
பார்க்கும் போதெல்லாம்
எனக்கல்லவா கால் வலிக்கிறது

*
நீங்க தூங்கவே மாட்டிங்களா
என்கிறாய் நான் தூங்கினால்
என்னை உன் மடியில் இருந்து
தூக்கிவிடுவாயே

-யாழ்_அகத்தியன்

அமரன்
25-10-2007, 05:04 PM
நீங்க தூங்கவே மாட்டிங்களா
என்கிறாய் நான் தூங்கினால்
என்னை உன் மடியில் இருந்து
தூக்கிவிடுவாயே


என்ன ஒரு சிறுபிள்ளைத்தனம்..

ஓவியன்
03-11-2007, 06:44 PM
என்ன ஒரு சிறுபிள்ளைத்தனம்..

அமரன் நாம் காதலித்தாலே சிறுபிள்ளைத் தனமும்
கூடவே வந்து கூடாரம் போட்டு விடும்......!!

அமரன் மேற்கோள் காட்டிய வரிகளே என்னையும் கவர்ந்தன அகத்தியன்...!!

சின்ன சின்ன காதல் ஆசைகளை
ஓசை நயத்துடன்
அழகாக கோர்க்க தெரிந்திருக்கிறீர்கள்....!!

பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் நண்பரே...!!

நேசம்
03-11-2007, 08:15 PM
யாழ் அகத்தியன் தன்னுடைய ஆசைகளை சொல்லி ஒவ்வொருத்தருக்கும் ஆசையை தூண்டிவிட்டார்.நல்ல கவிதை.வாழ்த்துக்கள்

gans5001
08-11-2007, 10:29 AM
[COLOR="Blue"]
தினம் நீ சாய்ந்து தூங்கும்
என் தோல்களை தடவித்
தடவித்தான் என்னையே
நான் தூங்க வைக்கிறேன்

*
உன்னை நிற்க வைத்து யார்
புகைப்படம் எடுத்தது அதை
பார்க்கும் போதெல்லாம்
எனக்கல்லவா கால் வலிக்கிறது




அழகான கற்பனை.

தோலுக்கும், தோளுக்கும் மட்டும் சிறிது கவனம் தேவை.

தோலைத் தேடினால் காதல் பிறக்காது.. காமம்தான் திறக்கும்.

பென்ஸ்
08-11-2007, 11:51 AM
அழகான கற்பனை.

தோலுக்கும், தோளுக்கும் மட்டும் சிறிது கவனம் தேவை.

தோலைத் தேடினால் காதல் பிறக்காது.. காமம்தான் திறக்கும்.
வணக்கம் கண்ஸ்...
உங்கள் மன்ற மீள் வரவு மகிழ்வை கொடுக்கிறது....
இளசு வரிக்கு வரி உங்கள் விமர்சணத்தை சொல்லுவார்...
சில வரிகளாக இருந்தாலும் "நச்" என்று நீங்கள் கொடுத்து வரும் உங்கள் விமர்சணக்களை ரசித்து வருகிறேன்...

gans5001
09-11-2007, 11:22 AM
வணக்கம் கண்ஸ்...
உங்கள் மன்ற மீள் வரவு மகிழ்வை கொடுக்கிறது....
இளசு வரிக்கு வரி உங்கள் விமர்சணத்தை சொல்லுவார்...
சில வரிகளாக இருந்தாலும் "நச்" என்று நீங்கள் கொடுத்து வரும் உங்கள் விமர்சணக்களை ரசித்து வருகிறேன்...

நன்றி பென்ஸ்.. என்னையறியாமலே இத்தனை நண்பர்களைப் பெற்றிருப்பது மகிழ்ச்சி.

தமிழ் மீது கொண்ட ஈடுபாடு காரணமாக குறைகள் தென்படும்போது உடனே சுட்டிக் காட்டி விடுகிறேன் (நண்பர்கள் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்ற நம்பிக்கையில்). அதனால் தான் பாருங்கள் உங்கள் விமர்ச"ண"த்தையும் விமர்ச"ன"ம் செய்திருக்கிறேன். (ஹி..ஹி..)

பாராட்டுக்கும் குறைவிருக்காது (தகுதியானவற்றிற்கு)