PDA

View Full Version : (V) எல்லாளன் நடவடிக்கை...அன்புரசிகன்
22-10-2007, 07:52 AM
மீண்டும் ஓரு கரும்புபுலித்தாக்குதல்-அனுராதபுரத்தில்

இலங்கையின் வடமத்திய மாகாணத்திலுள்ள அனுராதபுரத்திலுள்ள இலங்கை அரசின் விமானப்படைவிமான நிலையத்திற்கு விடுதலைப்புலிகளின் விஷேட கொமாண்டோ பயிற்சி பெற்ற 21 தற்கொலைக்கரும்புலிகள் மற்றும் வான்புலிகளின் உக்கிர ஊடுருவல் தாக்குதலுக்குள்ளாகியுள்ளது. இன்று இலங்கை நேரப்படி அதிகாலை 3 மணியிலிருந்து தாக்குதல் நடைபெறுகின்றது. இதுவரை 8 வான் கலங்கள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதாக விடுதலைப்புலிகள் உத்தியோக பூர்வமாக தெரிவித்துள்ளனர்.

இதுபற்றிய மேலதிக தகவலுக்கு இங்கே (http://www.puthinam.com/) செல்லுங்கள்.

அண்மைக்காலமாக தமிழீழ விடுதலைப்புலிகள் அறிவித்த தமிழீழ எல்லைகளுக்கப்பால் ஊடுருவல் தாக்குதல் நடாத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அண்மையில் பாணமை மற்றும் கதிர்காமத்திற்கிடைப்பட்ட யால எனப்படும் பிரதேசத்திற்கும் தாக்குதல் தொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது...
அராதபுரத்தி தரைவழியாகவோ அல்லது கடல் வழியாகவோ விடுதலைப்புலிகள் சாதாரணமாக நுழைய முடியாதென்பது இங்கு விஷேடமாக சுட்டிக்காட்டத்தக்கது...

எல்லாளன் நடவடிக்கை சிறப்புப் பாடல்:
#20 (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=291348&postcount=20)

எல்லாளன் நடவடிக்கை சிறப்பு அறிக்கை:
#21 (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=291357&postcount=21)

எல்லாளன் நடவடிக்கை தொடர்பாக த.தே.தொ. இல் இடம்பெற்ற நிலவரம், காலக்கணிப்பு:
#24 (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=301701&postcount=24)

எல்லாளன் நடவடிக்கை நேரடி ஒளிப்பதிவு:
#25 (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=301703&postcount=25)

ஓவியன்
22-10-2007, 08:16 AM
விடுதலைப் புலிகளை ஒடுக்கிவிட்டோம், இன்னும் சில காலங்களில் வன்னிப்பகுதியிலுள்ளவர்களையும் பூண்டோடு ஒழித்துவிடுவோம் என கூறித் திரிந்தவர்களுக்கு "மரண அடி" கொடுக்கப்பட்டுள்ளது.

அன்புரசிகன்
22-10-2007, 09:36 AM
இது தற்போது நான் படித்த செய்தி...

இன்று தாக்கியழிக்கப்பட்ட விமானங்களில் Beech Craft எனப்படும் அமெரிக்கத்தயாரிப்பு வேவு விமானம் ஒன்றும் உள்ளடங்கியுள்ளது...

ஏழு தொடக்கம் ஒன்பது பேர்வரையில் வானூர்த்தியில் இருந்தவண்ணம் வேவு நடவடிக்கையில் ஈடுபடக்கூடிய வானூர்த்தி. தமிழர் தாயகத்தில் கடந்த வருடம் தொடக்கம் நடத்தப்பட்ட வான் தாக்குதலுக்கு இலக்குகளை மிகவும் துல்லியமாக எடுத்துக் கொடுத்தது இந்த பீச் கிராவ் வேவு வானூர்தி என்பது குறிப்பிடத்தக்கது... இதோ.. நான் கூகிளில் பெற்ற ஒரு படம். உங்களுடன் பகிர்கிறேன்...

http://www.diseno-art.com/images/beechcraft_starship_001.jpg

தங்கவேல்
22-10-2007, 09:38 AM
அப்படியா சேதி. விதி வலியது.

அன்புரசிகன்
22-10-2007, 10:24 AM
http://www.slcues.net/mantram/pics/anumap.jpg


இந்த வரைபடத்தில் நீங்கள் பார்ப்பதில் புளியங்குளம் பகுதியில் தான் விடுதலைப்புலிகள் நிலைகொண்டுள்ளனர். மிகுதி அனைத்தும் இலங்கை இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுப்பகுதியில் உள்ளவை... கட்டுக்கரைக்குளத்தின் ஒரு கரை இராணுவத்தினரிடமும் மறுகரை விடுதலைப்புலிகளினதும் கட்டுப்பாட்டில் உள்ளதென்பது குறிப்பிடத்தக்கது... வடதமிழீழைத்திலுள்ள குளங்களில் இரணைமடுக்குளம் கொள்ளளவில் பெரியதாகவும் கட்டுக்கரைக்குளம் பரப்பளவில் பெரியதாகவும் கருதப்படுகிறது....

தற்சமயம் தாக்குதல் நடாத்தப்பட்ட பிரதேசம் விமானக்குறியீட்டுடன் இருக்கிறது....

நம்ம ஓவியன் இருப்பது, நான் சொல்லும் இந்த கோர்வையின் ஒரு புறத்தில். அதாவது அநுராதபுரம் > மதவாச்சி > வவுனியா > புளியங்குளம்> இந்த வகையில் செல்லவேண்டும். :D :D :D

praveen
22-10-2007, 12:25 PM
நல்ல தகவல், விரைவில் முழுவெற்றி கிடைக்கும். இரவில் தாக்குதல் நடத்துவதை எதிர்க்கொள்ள இயலாதவர்கள். விரைவில் பதிலடி கொடுக்க முற்படுவர். ஆனால் அது தான் அவர்களின் இறுதி நடவடிக்கையாக இருக்கும்.

சமீபத்தில் ஒரு செய்தி படித்தேன், தரமில்லாத போர்தளவாடங்களை பாகிஸ்தான் இலங்கை அரசிடம் விற்க முயற்சி என்று. இவர்கள் தரம் அவர்களுக்கு தெரிந்து போயிருக்குமோ?.

எப்படி ஆயுதங்கள் கொடுத்தாலும் சண்டை ஆரம்பித்தவுடன் அதை கீழே போட்டு ஓடி ஓளிபவர்கள் எனவே எதை கொடுத்தால் என்ன என்று நினைக்கிறார்களா?.

அன்புரசிகன்
22-10-2007, 12:44 PM
உங்கள் பதில் புது தெம்பைத்தருகிறது பிரவீன்.

பாக்கிஸ்தான் பிரச்சனை நான் நன்கு அறிவேன். இதுவரை எந்த பெரிய சக்தியும் விடுதலைப்புலிகளுக்கு முன்னால் தூசியாகத்தான் தோன்றுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்...

இன்றைய தாக்குதலில் 25 மில்லியன் அமெரிக்க டொலரை இலங்கை அரசு இழந்துள்ளது...

விகடன்
23-10-2007, 05:47 AM
என்னதான் பாரியளவிலான (1987 இற்கு பின்னர் அடுத்த பாரியளவிலான) கரும்பிலித் தாக்குதலாக இருந்தாலும் 21 கரும்புலிகளின் இழப்பினால் பெரியதாக தென்படவில்லை.

mgandhi
23-10-2007, 08:08 AM
மீண்டும் புலிகள் அதிரடி விமானத் தாக்குதல் 3 ஹெலிகாப்டர்கள் சேதம் - கடும் சண்டை

இலங்கையின் அனுராதபுரம் விமான தளத்தில் விடுதலைப் புலிகள் இன்று அதிகாலை விமான தாக்குதல் மேற்கொண்டு குண்டு வீசித் தாக்கினர். இந்த அதிரடித் தாக்குதலில் தளத்தில் நின்று கொண்டிருந்த 2 ஹெலிகாப்டர்கள் சேதமடைந்தன. புலிகளின் ஒரு ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியது.

நில வழி மற்றும் கடல் வழியில் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்த விடுதலைப் புலிகள் இந்த ஆண்டில் புதிதாக வான் பலத்தையும் பெற்றனர். இலகு ரக விமானங்களைக் கொண்டு

அன்புரசிகன்
23-10-2007, 08:13 AM
உங்களின் இந்த செய்தி இன்றயது அல்ல. சற்றே பிந்திவிட்டீர்கள்... இதுபற்றிய தகவல்கள் நேற்று பதிந்திருக்கிறென்.

மீண்டும் ஓரு கரும்புபுலித்தாக்குதல்-அனு (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=12922)

தவிர வீழ்ந்து நொறுங்கியது புலிகளின் விமானங்கள் எதுவுமல்ல. அதுவும் இலங்கையரசினது தான். இதை இலங்கை அரசின் பாதுகாப்பு செயலகமே ஊர்ஜிதம் செய்துள்ளது.

ஓவியன்
23-10-2007, 09:37 AM
மீண்டும் புலிகள் அதிரடி விமானத் தாக்குதல் 3 ஹெலிகாப்டர்கள் சேதம் - கடும் சண்டை

அண்ணா!!

இதே விடயப்பரப்புடன் ஏற்கனவே ஒரு திரி உள்ளதால் அத்திரியுடன் இத்திரி இணைக்கப்படுகிறது.

அமரன்
23-10-2007, 10:35 AM
துட்டகைமுனுவால் அக்கால போரியல் விதிமீறலால் கொல்லப்பட்ட எல்லாளன் என்னும் தமிழ் மன்னனின் நினைவுத்தூபி இருக்கும் இடத்தில் நடந்த தாக்குதலுக்கு அவர் பெயரை வைத்து (ஆபரேஷன் எல்லாளன்) மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை.. விராடன் கூறுவது போல 21 பெரிதாக தெரிந்தாலும் பெற்ற உளவியல், பொருளாதார வெற்றிக்கு அந்த விலை ஏற்புடையதே..

சூரியன்
23-10-2007, 11:29 AM
இலங்கையில் விடுதலைப்புலிகள் முன்னேறி வருகிறார்களா?

ஓவியன்
25-10-2007, 06:53 AM
இந்த தாக்குதலில் சிங்கள இராணுவம் தான் சந்தித்த இழப்பு, தோல்வி, அவமானம் எல்லாவற்றையும் தாங்கிக் கொள்ள இயலாது மனித நாகரீகத்திற்கே ஒத்து வராத மிலேச்சத் தனத்தினை இந்த தாக்குதலில் வீரகாவியமாகி வித்துடல்களான வீர மறவர்கள் மீது அரங்கேற்றியுள்ளது.

இதுகுறித்து புலிகள் அமைப்பின் மனித உரிமைப் பிரிவு செய்தித் தொடர்பாளர் செல்வி விடுத்துள்ள அறிக்கையில்,

அனுராதபுரம் விமான தள தாக்குதலுக்குப் பின்னர் விடுதலைப் புலிகள் 20 பேரின் உடல்களை கண்டெடுத்துள்ளதாக இலங்கை ராணுவம் கூறியது.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மூலமாக அந்த உடல்களை தருமாறு இலங்கை ராணுவத்தை விடுதலைப் புலிகள் அமைப்பு கேட்டுக் கொண்டது.

சர்வதேச போர் விதிகளை மதித்து உடல்களைத் தருவதற்குப் பதிலாக, மிகவும் அநாகரீகமான முறையில், அதிர்ச்சி தரும் வகையில் இலங்கை ராணுவம் நடந்து கொண்டுள்ளது.

முழுச் சீருடையுடன் இறந்து கிடந்த விடுதலைப் புலிகளின் உடல்களை இலங்கை பாதுகாப்புத் துறையின் இணைய தளம் புகைப்படமாக வெளியிட்டுள்ளது. ஆனால், அடுத்த நாளே, தனது மிருகத்தனமான அராஜகத்தை இலங்கை ராணுவம் அரங்கேற்றியுள்ளது.

உடைகள் அகற்றப்பட்ட நிலையில் விடுதலைப் புலிகளின் உடல்களை ராணுவ டிரக்கில் போட்டு ஊர்வலமாக கொண்டு சென்றுள்ளது இலங்கை ராணுவம். இது ஜெனீவா போர் விதி உடன்பாட்டை மீறிய செயலாகும். மனித சமுதாயம் வெறுக்கத்தக்க செயலாகும்.

ஜெனீவா ஒப்பந்தப்படி, போரின்போது இறந்தவர்களின் உடல்களை முழு மரியாதைகளுடன் சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

எந்த நிலையில் வீரர்கள் இறந்தார்களோ அதே நிலையில்தான் அவர்களின் உடல்களை ஒப்படைக்க வேண்டும்.

ஆனால் இதற்கு முற்றிலும் மாறாக இலங்கை ராணுவம் நடந்து கொண்டுள்ளது. இந்த செயலால் இறந்த வீரர்களின் குடும்பத்தினர் பெரும அதிர்ச்சி அடைந்துள்ளனர். தாங்கள் மிகவும் நேசித்தவர்களின் உடல்களை இப்படி அநாகரீகமாக, அசிங்கமான முறையில் ஊர்வலமாக கொண்டு சென்ற இலங்கை ராணுவத்தின் செயலை எண்ணி பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மாறாக, போரின்போது உயிரிழந்த இலங்கை ராணுவ வீரர்களின் உடல்களை உரிய மரியாதைகளுடன் விடுதலைப் புலிகள் திரும்பி ஒப்படைத்திருப்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறோம் என்று கூறியுள்ளார் செல்வி.

இந்த செய்தியின் மேலதிக விளக்கத்திற்கு...! (http://thatstamil.oneindia.in/news/2007/10/24/sri-lanka-parades-bodies-of-tigers-nude.html)

விகடன்
25-10-2007, 07:03 AM
இலங்கையில் விடுதலைப்புலிகள் முன்னேறி வருகிறார்களா?

ஐயா சூரியன்!
இது நகைச்சுவை இல்லைத்தானே :confused:

praveen
25-10-2007, 07:11 AM
ஐயா சூரியன்!
இது நகைச்சுவை இல்லைத்தானே :confused:

நண்பரே, அவர் கேட்பது, முன்னர் விடுதலைபுலிகள் வசம் இருந்த பகுதிகளை இழந்த பின்னர் அதை மீட்பதில் முன்னேறி வருகிறார்களா அல்லது இலங்கை ராணுவ தாக்குதலை தடுப்பது மட்டுமில்லாமல் தாமகவே முன்னேற்றமாக அவர்களது நிலைகளை தாக்குகிறார்களா என்று வைத்து பாருங்கள்.

புலிகள் முன்னேறினால் மிகவும் சந்தோப்படுவது நம்மையன்றி வேறு யார்?

விகடன்
25-10-2007, 07:32 AM
நன்றி பிரவீன்.
------------------------------
அதுதான் சூரியனின் ஐயமாக இருந்தால்.....

விடுதலைப்புலிகள் வசமிருந்த எல்லைப் பரப்புக்கள் ஏதோ இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருப்பது உண்மைதான். ஆனால் அந்த பகுதிகள் பாரியளவில் உயிர் இழப்புக்களின்றி பெறப்பட்டனவே.

ஆகையால் சிந்தித்து பாருங்கள்,
அவை கைப்பற்றப்பட்டனவா அல்லது தளர்த்தப்பட்டனவா என்பதை....

அத்துடன் உங்களின் கேள்விக்கிணங்க எனது பதில்,
இல்லை, அவை இப்போதும் இராணுவக் கட்டுப்பாட்டில்த்தான் உள்ளன.

அன்புரசிகன்
25-10-2007, 08:12 AM
துரோகியோ அல்லது எதிரியோ.... இறந்த பின் அவற்றிற்கு மரியாதை வழங்கப்பட வேண்டியது மனித இயல்பு... இதை இலங்கை அரசிடம் எதிர்பார்ப்பது கடினம். காரணம் இது முதல் தடவை அல்ல. முன்பு ஒருமுறை அவர்கள் கைப்பற்றிய பெண்புலிப்போராளியின் இறந்த உடலை மிகவும் அருவருக்கத்தக்க மிருகத்தனத்திலும் மேலான ஒரு வேலை செய்து அனுப்பியிருந்தனர்...

மனிதத்தை இலங்கை அரசிடம் எதிர்பார்த்தது புலிகளின் தவறு.... ஐநாவும் ஒன்றும் செய்யாது. அமெரிக்காவும் எதுவும் சொல்லாது. தற்போது இலங்கை அரசுக்கு வக்காளத்து வாங்கும் எந்த ஒரு நாடும் இதைக்கண்டுக்காது... காரணம் அது அரசாங்கம். இதற்கு மானங்கெட்ட ஜனநாயக குடியரசு என்று பெயர் வேறு வைத்துக்கொண்டு இலங்கை இருக்கிறது.....

ஓவியன்
25-10-2007, 06:37 PM
இந்த தாக்குதல் அணியினை நேரடியாக நெறிப்படுத்தி வீரகாவியமான லெப்.கேணல் இளங்கோ அவர்களின் இறுதி மடல் இதோ...

என் அன்பான மக்களுக்கு,

சிங்கள வெறியன் என்ன செய்கின்றான் என நீங்கள் அனைவரும் கண்ணால் பார்க்கிறீர்கள். இருந்தும் சில விடயங்களை சொல்லிவிட்டு போறன்.

தலைவர் இருக்கிற காலத்திலேயே நாங்கள் நிச்சயம் தமிழீழம் மீட்போம். இது உறுதி. அதற்கு உங்கட பங்களிப்பும்தான் மிகவும் முக்கியம். அண்ணைக்கு நீங்கள் தான் தோள் கொடுக்க வேணும். உங்கட பங்களிப்பிலதான் எங்கட மண்ணை மீட்க முடியும்.

அதனால் தான் நாங்கள் கரும்புலி என்ற வடிவம் எடுத்தனாங்கள். வானேறி வந்து குண்டு போடுகிற சிங்கங்களை அவையிட குகைக்கையே சந்திக்கப் போறம். அவைக்கு தமிழன் படுகிற அவலத்தை புரிய வைக்கப் போறம். நிச்சயம் அவைக்கு உணர்த்தியே தீருவம். தமிழர் படையில முப்படையும் வளர்ந்து நிற்குது. இனி நீங்கள்தான் சிங்களவனுக்கு எதிராக எழுந்து நிற்க வேணும்.

எங்களுக்கும் அழிக்க வேண்டிய இடத்தில அழிக்கத் தெரியும் என அடிச்சுக் காட்டியிருக்கிறம். இதே மாதிரி தொடர்ந்து அடிப்பம் அடிச்சுக் கொண்டே இருப்பம் என அடிச்சுச் செல்லுங்கோ சிங்கள வெறியர்களுக்கு.

வழிகாட்டத் தலைவர் இருக்கிறார். நீங்கள் எழுந்து மூச்சாக நின்றால் போதும் தமிழீழம் விரைவாக வந்து சேரும்.

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்

தலைவர் கவனம்.
தலைவர் எங்கட வழிகாட்டி.
தலைவர்தான் எங்கட அப்பா.
தலைவர்தான் எங்கட அம்மா.
அவருக்கு ஒன்றும் நடந்திடக் கூடாது.

இ.இளங்கோ
நன்றி - பதிவு.கொம்

இந்த மடலிலே எழுதப்பட்ட அவரது உறுதி, அனுராதபுர மண்ணிலே வெடியோசையாகக் கேட்டது.

அன்புரசிகன்
29-10-2007, 03:57 PM
விடுதலைப்புலிகளால் அநுராதபுரத்தில் நடாத்தப்பட்ட எல்லாளன் தாக்குதலிற்காக இயற்றப்பட்ட பாடல்....

தேசக்காற்றே... ஒரு நிமிடம்.....

http://www.pathivu.com/files/sirappuparvai/si261007.flv

நன்றி: பதிவு இணையம் மற்றும் தமிழீழ தேசிய தொலைக்காட்சி.

அன்புரசிகன்
29-10-2007, 04:16 PM
அவசிய அறிக்கை

http://www.pathivu.com/files/avasiya_arikkai/aa261007.flv

அதிகாலை 3 மணியிலிருந்து மதியம் வரை அநுராதபுரம் நகரில் இருந்த வான் படைத்தளத்தை விடுதலைப்புலிகளின் கரும்புலிகள் அணி கைவசம் வைத்திருந்தது ஒரு சிறப்பம்சம் எனஇந்த அவசிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது...

நன்றி: பதிவு இணையம் மற்றும் தமிழீழ தேசிய தொலைக்காட்சி.

விகடன்
30-10-2007, 10:54 AM
தகவல்களிற்கு நன்றி அன்பு மற்றும் ஓவியன்.

இதில் என்ன ஒரு வியத்தகு விடயமென்றால், எங்களுடைய மின்னஞ்சல் முகவரிகளை வைத்திருக்கும் பௌத்தமத நண்பர்கள் நண்பிகள் எல்லோரும் அநுராதபுர விடயத்தை எடுத்து அதற்கு தங்களால் தகுந்த அளவில் கருத்துக்களை உருவாக்கி படத்துடன் மின்னஞ்சலாக அனுப்பிவைப்பதுதான்.

இதை தாக்குதலில் வெற்றி என்பதா? அல்லது அவர்களின் இயலாமையை மறைக்க முற்படும் செயலென்பதா?

நாட்டில் எத்தனையோ அக்கிரமங்களும் உதாசீனங்களும் நடைபெறும் காலங்களில் எல்லாம் தூங்கி இருந்த அவர்கள் மின்னஞ்சல் முகவரிகளிற்கெல்லாம் இந்த செயற்பாட்டின் பின்னர் எவ்வாறு எமது மின்னஞ்சல் முகவரிகளை ஞாபகப்படுத்தின...

அன்புரசிகன்
30-10-2007, 10:57 AM
அதை நானும் படித்தேன். அரசாங்கத்தின் கையோங்கும் போது இவ்வகையான அஞ்சல்கள் வராது..... அது இயலாமையே அன்றி வேறில்லை....

அக்னி
22-11-2007, 04:57 PM
எல்லாளன் படை நடவடிக்கை தொடர்பாக,
தமிழீழ தேசிய தொலைக்காட்சியில் இடம்பெற்ற நிலவரம் கலந்துரையாடல்...

http://www.pathivu.com/files/nilavaram/nil281007.wmv

எல்லாளன் படை நடவடிக்கை தொடர்பாக,
தமிழீழ தேசிய தொலைக்காட்சியில் இடம்பெற்ற காலக்கணிப்பு...

http://www.pathivu.com/files/sirappuparvai/si241007.wmv

அக்னி
22-11-2007, 05:13 PM
எல்லாளன் படை நடவடிக்கையின் நேரடி ஒளிப்பதிவின் ஒரு பகுதி,
தமிழீழ தேசிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.

http://www.ltte.tv/wintv.asx

ஓவியன்
22-11-2007, 11:09 PM
கொஞ்சம் தாமதமாக வந்த காணொளிக் காட்சி...
வெடித்துச் சிதறும் எண்ணைக் குதம்
தாயக விடியலுக்கு கட்டியம் கூறுகிறதோ....!!