PDA

View Full Version : ஹாட்மெயில் - 5 ஜிபி



அறிஞர்
23-10-2007, 02:15 AM
இணையத்தில் இலவச மின்னஞ்சல் சேவையை கொடுத்து ஆரம்ப காலங்களில் அனைவரையும் கவர்ந்தது ஹாட்மெயில்.

அப்பொழுது 2 எம்பி அளவே மின்னஞ்சல் கொள்ளளவு... படித்து விட்டு மின்னஞ்சல்களை அழித்துக்கொண்டே இருப்போம்.

பிறகு யாகூ, ரெட்டிப் போன்ற பல இணைய தளங்கள் இலவச மின்னஞ்சல் சேவையை கொடுத்தது...

படிப்படியாக 6 எம்பி, 10 எம்பி, 250 எம்பி என கொள்ளளவுகளை ஒவ்வொருவரும் உயர்த்தினர்.....

அதிரடியாக ஜிமெயில் 2 ஜிபி கொடுத்து.. புதுமை புகுத்தியது... பிறகு ஒவ்வொருவராக கொள்ளளவை ஜிபியில் அதிகரிக்க ஆரம்பித்தனர்.

சமீபத்தில் ஹாட்மெயில் கொள்ளளவை 5 ஜிபியாக உயர்த்தியுள்ளது...

பைல்களை சேமிக்க சில தளங்கள் 100 ஜிபி, 200 ஜிபி கொள்ளவை இலவசமாக தர ஆரம்பித்துள்ளன...

இன்னும் என்ன என்ன நடக்குமோ...

அக்னி
23-10-2007, 02:57 AM
பயன் விளைவிக்கும் வியாபாரப் போட்டிகள்...
நடக்கட்டும்... நடக்கட்டும்...
தகவலுக்கு நன்றி அறிஞரே...

அன்புரசிகன்
23-10-2007, 04:51 AM
எனது உள்ளம் கவர்ந்த மின்னஞ்சல். தொடக்ககாலத்திலிருந்தே பாவிக்கிறேன்... சில வித்தியாசமான வசதிகள் கொண்டது....

ஷீ-நிசி
23-10-2007, 05:04 AM
ஹாட்மெயிலின் தோற்றத்திற்காகவே நான் ஒருமுறை அதில் அக்கவுண்ட் தொடங்கினேன்.. இன்றும் இருக்கிறது. ஆனால் அதை உபயோகிப்பதில்லை. வரவேற்க வைக்கும் மாற்றங்கள்!

விகடன்
23-10-2007, 05:42 AM
மின்னஞ்சலின் கொள்ளளவை எந்தளவுதான் உயர்த்தினாலும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில்த்தானே கோப்புக்களை அனுப்பக்கூடியதாக உள்ளது.
எதுவாக இருந்தாலும் கிடைக்கப்பெறுவது நன்மையின் உயர்ச்சியே அன்றி வீழ்ச்சி இல்லைத்தானே

தகவலிற்கு நன்றி அறிஞரே.

பூமகள்
23-10-2007, 06:51 AM
மின்னஞ்சல்காரர்களின் போட்டியில் நமக்கு லாபம்.. ஜிபி கணக்கில்..!!
நல்ல செய்தி சொன்னீர்கள் அறிஞர் அண்ணா.
மிகுந்த நன்றிகள்..!!

சூரியன்
23-10-2007, 06:56 AM
நல்ல பயனுள்ள தகவல் அண்ணா.
இன்னும் சில வருடத்தில் இன்னும் பல வசதிகளை கொடுத்தாலும் கொடுக்கலாம்.

மாதவர்
23-10-2007, 04:50 PM
வியாபாரம் நமக்கு நன்மை தந்தால் நலம்

அறிஞர்
24-10-2007, 03:18 PM
ஏல்லா இடங்களிலும் இணைய தள இணைப்புக்களின் வேகம் அதிகரிக்கும்பொழுது.. பைல்களை அனுப்பும் அளவையும் அதிகரிப்பார்கள் என நம்புகிறேன்/

அமரன்
24-10-2007, 03:37 PM
ஹாட்மெயிலின் தோற்றத்திற்காகவே நான் ஒருமுறை அதில் அக்கவுண்ட் தொடங்கினேன்.. இன்றும் இருக்கிறது. ஆனால் அதை உபயோகிப்பதில்லை. வரவேற்க வைக்கும் மாற்றங்கள்!
அதே அதே சபாபதி...!(இது சுட்ட வசனம்)
எப்போதோ துவங்கியது.. மீள தூசு தட்டவேண்டியதுதான்.

praveen
24-10-2007, 04:01 PM
நான் பலவருடமாக ஹாட்மெயில் உபயோகிக்கிறேன். ஆரம்பத்தில் இலவச அவுட்லுக் ஒத்திசைவு வசதி கொடுத்திருந்தார்கள். அதனால், அன்று முதல் இன்று வரை எனக்கு அந்த சேவை இலவசமாகவே தருகிறார்கள், இது போக மெயில் அலர்ட் சேவையை செய்திருக்கிறேன். எனவே ஒரு மெயில் வந்தவுடன் எனது கைதொலைபேசிக்கு இலவசமாக ஒரு குறுந்தகவல் வந்து விடுகிறது. நான் எனது ஜிமெயில் அட்ரஸ்களையும் மெயில்பார்வேடாக இதற்கு செய்து விடுவதால் எனக்கு ஒரு மெயில் (எந்த கணக்கிற்கு வந்தாலும் ஒரு SMS வந்து விடுகிறது) வந்தது உடனே தெரிந்து விடுகிறது.

இந்த வசதிகளை தரும் ஹாட்மெயிலை நான் என்றும் மறக்க மாட்டேன்.

மாதவர்
24-10-2007, 04:34 PM
அய்யா 5 ஜிபி வைத்து என்ன செய்வது?

மனோஜ்
24-10-2007, 04:37 PM
நா இப்பதான் ஹாட்மெயில் முதலில் யாகு தான் இப்ப ஜீதமெயில்
தகவலுக்கு நன்றி அண்ணா