PDA

View Full Version : இதயத்தில் நீ..!



யாழ்_அகத்தியன்
22-10-2007, 07:09 PM
நீ சிரித்துக் கொண்டே
இருந்த உன் நிழல்படம்

அழகான கையெழுத்தோடு
உன் வாழ்த்து அட்டைகள்

எழுத்துக்களை மிச்சம்பிடித்து
நீ எழுதியனுப்பிய கடிதங்கள்

ஆழமாக அழுத்தி அழகாக
எழுதிய உன் கவிதைகள்

உன் அவசர மின்னஞ்சல்கள்
உன் ஆறுதல் குறுந்தகவல்கள்

இப்படி நீ அனுப்பிய
அத்தனையும் அன்று
நான் அழித்துவிட்டு
வீரானாய் பெருமை
கொண்டபோதும்

இன்றும் என்னால் உன்னை
என் இதயத்தில் இருந்து
இறக்கமுடியாமல் போவதில்
கோழையாய்த்தான் வாழ்கிறேன்


-யாழ்_அகத்தியன்

அமரன்
22-10-2007, 07:14 PM
நிழல்கள் அழியலாம்
வெளிச்சம் காணும்போது
இது இயற்கை..
ஆனால் நிஜம்????

காதலில்
வெளிச்சம் வேண்டி
நிழல்களை அழிக்கலாம்.
ஆனால்
நிஜமான நினைவுகள்?????

காதலின் சிறப்பு அது
உங்கள்
கவிதைக்கும் சிறப்பு இது..

மனோஜ்
22-10-2007, 07:59 PM
ஆழ்மனதில் அடிப்படையாய் அமைந்தவள் அழிப்து கடினம்
அருமை கவிதை அழுகு

சுகந்தப்ரீதன்
23-10-2007, 10:25 AM
காலங்கள் நீளும்
கனவுகளும் நீளும்
எல்லாமே மாறும்..!
ஏனோ நினைவுகள் மட்டும்
நீங்காது தொடரும் என்
நெஞ்சத்தின் ஓரம்...?!

அழகிய கவிதந்த அகத்தியருக்கு வாழ்த்துக்கள்..!

யாழ்_அகத்தியன்
25-10-2007, 11:32 AM
உங்க வாழ்த்துக்கு மிக்க நன்றிகள்

james
05-12-2007, 10:12 AM
மிகவும் ரசித்தேன் நண்பரே அழகு கவிதை பாராட்டுக்கள்...

யாழ்_அகத்தியன்
05-12-2007, 01:47 PM
மிகவும் ரசித்தேன் நண்பரே அழகு கவிதை பாராட்டுக்கள்...

உங்க வாழ்த்துக்கு மிக்க நன்றிகள்

ஆர்.ஈஸ்வரன்
15-01-2008, 09:30 AM
அழகு கவிதை பாராட்டுக்கள்