PDA

View Full Version : குறையவில்லை ஆண் குழந்தை மோகம்



mgandhi
22-10-2007, 06:43 PM
குறையவில்லை ஆண் குழந்தை மோகம்
இந்தியர்களின் குடும்ப அளவு சுருங்கி விட்டது. அதிகபட்சம் இரண்டு குழந்தைகள் மட்டுமே பெறும் குடும்பங்கள் அதிகரித்து வருகின்றன.தேசிய சுகாதார சர்வேயில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.

இந்த சர்வேயில் கூறியிருப்பதாவது:இந்தியாவில் குழந்தை பிறப்பு விகிதம் சராசரியாக ஒரு குடும்பத்தில் 2.9 சதவீதமாக இருந்தது, இப்போது, 2.7 சதவீதமாக குறைந்து விட்டது. அதாவது, நான்கு குழந்தைகள் வரை பெற்றுக் கொண்ட குடும்பங்களில், இப்போது, மிக அதிகபட்சம் மூன்று குழந்தைகளுடன் நிறுத்திக்கொள்கின்றனர். கிராமங்களில் இந்த அளவு மாறுபடுகிறது. மத ரீதியாகவும் வேறுபடுகிறது. நகரங்களில், குழந்தை பிறப்பு வெகுவாக குறைந்து வரும் அதே சமயம், கிராமங்களில் குழந்தை பிறப்பு சதவீதம் அதே நிலையில் உள்ளது. தென் மாநிலங்கள் உட்பட 10 மாநிலங்களில், குழந்தை பிறப்பு சதவீதம், குடும்பத்துக்கு 2.1 சதவீதம் என்ற அளவில் உள்ளது.வட மாநிலங்களில், பீகார், உ.பி.,மேகலயா, நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் குடும்பங்களில் சராசரியாக குழந்தை பிறப்பு, 3.7 சதவீதத்தில் இருந்து 4.0 ஆக உள்ளது.குழந்தை பிறப்பில், பெண் குழந்தை விரும்பாதவர்கள் இன்னமும் அதிகமாக உள்ளனர். பிறக்கப்போகும் குழந்தை ஆணாக இருக்க வேண்டும் என்று 50 சதவீதம் பேருக்கு மேல் எண்ணுகின்றனர்.இரண்டு பெண் குழந்தைகளை பெற்ற தாய்மார்கள் 65 சதவீதம் பேர், "எங்களுக்கு இந்த குழந்தைகளே போதும்; இன்னொரு ஆணுக்காக நாங்கள் முயற்சி செய்யமாட்டோம்' என்று கூறியுள்ளனர். இதுகுறித்து சுகாதார நிபுணர்கள் கூறுகையில்," பல மாநிலங்களில், குடும்ப அளவு சுருங்கி விட்டாலும், பெண் குழந்தையை விட, ஆண் குழந்தையை பெற்றுக்கொள்ளவே அதிகம் விரும்புகின்றனர். கிராமங்களில் இந்த மனப்போக்கு இன்னமும் மாறவில்லை. நகரங்களில், அதிகபட்சம் இரண்டு குழந்தைகள் பெற்றவுடன், ஆண் குழந்தைக்காக மூன்றாவது முறை முயற்சி செய்வதை பலரும் விரும்புவதில்லை' என்று கூறியுள்ளனர்.குழந்தை பிறப்பு சதவீதம் குறைந்ததற்கு காரணம், அதிகமாக காண்டம் மற்றும் கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்துவது தான் என்றும் தெரியவந்துள்ளது. 56 சதவீத பெண்கள், கருத்தடை மாத்திரை பயன்படுத்துகின்றனர். இந்த சதவீதம், நகரங்களில் 64, கிராமங்களில் 53 சதவீதமாக உள்ளது.

அறிஞர்
22-10-2007, 07:01 PM
ஆண் குழந்தை மோகத்தால்... எதிர்காலத்தில்.. திருமணத்திற்காக.. மற்ற நாட்டு பெண்களை.. எதிர்நோக்க வேண்டியிருக்கும்...

ஜோய்ஸ்
23-10-2007, 06:58 AM
தமிழரின் மூட மடமையை பறைசாட்டுகிற மாதிரி இருக்கிறது,
இந்த சம்பவம்.

என்ன செய்ய நம்மவர்களின் அறியாமை அப்படி.

கல்வியறிவு இருந்தும் பகுத்தறிவு இல்லாமையே இது காட்டுகிறது.

சூரியன்
23-10-2007, 07:11 AM
குழந்தையில் ஆண் என்ன, பெண் என்ன, இரண்டுமே குழந்தைதானே,இதை மக்கள் புரிந்து கொள்ள இன்னும் எவ்வளவு காலம் ஆகுமோ?