PDA

View Full Version : மன்றம் மாற்றங்கள்

அறிஞர்
22-10-2007, 03:34 PM
அன்பர்களே,

மன்றத்தில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. அது பற்றி தங்களின் கருத்துக்களை தெளிவாக தெரிவியுங்கள்...

இன்னும் என்ன என்ன மாற்றங்கள் தேவை என்று தெரிவித்தால், தங்களுக்கு உதவ நாங்கள் தயாராக இருக்கிறோம்.

.

ஷீ-நிசி
22-10-2007, 03:56 PM
கடைசி 10 போஸ்ட்களின் அணிவகுப்பு மிக நன்றாக உள்ளது.

தமிழ்மன்றத்தின் தோற்றம் கொஞ்சம் பளிச் என்று மாறவேண்டும். டல்லாக இருப்பது போல் ஒரு உணர்வு!

அன்புரசிகன்
22-10-2007, 04:11 PM
எனக்கு மிகப்பிடித்தது ஒளிப்படங்கள் தம்பினல் தோற்றத்தில் தோன்றி அழுத்தியதும் பொப்பப் ஆக தோன்றுவது....

நன்றாக உள்ளது...

அறிஞர்
22-10-2007, 04:18 PM
கடைசி 10 போஸ்ட்களின் அணிவகுப்பு மிக நன்றாக உள்ளது.

தமிழ்மன்றத்தின் தோற்றம் கொஞ்சம் பளிச் என்று மாறவேண்டும். டல்லாக இருப்பது போல் ஒரு உணர்வு!

கலரை மாற்றவேண்டும் என்கிறீரா....

அறிஞர்
22-10-2007, 04:21 PM
மாதவர் மாற்றம் வேண்டும் வாக்களித்துவிட்டு... கருத்து கூறாமல் சென்றால் எப்படி?

என்ன மாற்றம் வேண்டும் உங்களுக்கு?

பாரதி
22-10-2007, 04:41 PM
மாற்றங்கள் நன்றாகத்தான் இருக்கின்றன. ஒரு சிறிய ஆலோசனை - மன்றத்தின் தலைப்பில் உள்ள இடம் பெரும்பாலான நாட்களில் வெறுமனேதான் இருக்கிறது. அதிகாரபூர்வ அறிவிப்பு நாட்கள், வாழ்த்துக்கள் தரும் நாட்களைத் தவிர்த்து, மற்ற தினங்களில் மன்றத்தின் பக்கத்தை மேலே கொண்டு வரலாம் என நினைக்கிறேன். இது சாத்தியமா..?

மன்றத்தின் வேகத்திற்கும் நிர்வாகத்திற்கும் எந்த வகையிலும் பிரச்சினை வராது என்றால் இன்னும் அதிக தனிமடல்கள் வைத்துக்கொள்ளும் வசதியை ஏற்படுத்தித் தரலாம்.

பூமகள்
22-10-2007, 05:47 PM
அன்பு அறிஞர் அண்ணா,

மன்றத்தில் மிக சமீபத்தில் பதிவிட்ட திரிகளின் தலைப்புகள் அழகாய் வந்து போவது மிகவும் பிடித்திருக்கிறது.

சிற்சில மாற்றங்கள் என் மனதில் படுகின்றன. அதனை உங்களின் பரிசீலனைக்கு உட்படுத்துகிறேன்.

1. மேலே தமிழ் மன்ற லோகோ படம் வேறு அழகாய் மாற்றி புதுப்பிக்கலாம். அதை ஏற்கனவே செய்துக் கொண்டிருப்பதாய் தெரிகிறது.

2. கொஞ்சம் மன்றத்தின் பொலிவை கூட்டலாம். ஷீ-நிசி சொன்னது போல் இன்னும் அழகான வண்ணத்தில் மாற்றி பொலிவாக்கலாம்.

3. தனிமடல் வைத்துக் கொள்ளும் வசதியில் அதிகபட்ச வரம்பு 150-ஐ இன்னும் சற்று கூட்டலாம்.

4. புதிய திரி பதிகையில் அதன் தலைப்பு சில சமயம் சரியாக முழுதுமாக பதிவதில்லை. அதற்கு திரி தலைப்பின் எழுத்துக்களின் வரம்பைக் கூட்டலாம்.

5. தமிழ் எழுத்து வகைகளை (Tamil Font Types) இன்னும் கொஞ்சம் அதிகமாக Fonts List-இல் தரலாம்.

.

மனோஜ்
22-10-2007, 05:52 PM
மிகவும் அருமை அண்ணா
ஆனால் தீம் மாற்றினால் நன்றாக இருக்கும்

அறிஞர்
22-10-2007, 06:03 PM
பாரதி சொன்ன விசயங்களை... கருத்தில் கொண்டு.. பரிசோதனை செய்து கொண்டு இருக்கிறோம்..

பூமகளின் கருத்துக்களையும்.. விரைவில் அமலாக்க முயலுகிறோம்.

அறிஞர்
22-10-2007, 06:24 PM
மன்றத்தின் வேகத்திற்கும் நிர்வாகத்திற்கும் எந்த வகையிலும் பிரச்சினை வராது என்றால் இன்னும் அதிக தனிமடல்கள் வைத்துக்கொள்ளும் வசதியை ஏற்படுத்தித்தரலாம்.

அன்பு அறிஞர் அண்ணா,

3. தனிமடல் வைத்துக் கொள்ளும் வசதியில் அதிகபட்ச வரம்பு 150-ஐ இன்னும் சற்று கூட்டலாம்.

கேட்டதற்கு மேல் 200 மடல் வைத்துக்கொள்ள வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.. மகிழ்ச்சிதானே.

வேகப்பிரச்சனை ஏதும் வந்தால்.. 200 என்ற வரம்பு குறைய வாய்ப்பு உள்ளது.

பூமகள்
22-10-2007, 06:31 PM
அன்பின் அறிஞர் அண்ணா,

எமது கோரிக்கைக்கு செவி சாய்த்து உடனே தனிமடலில் அதிகபட்ச வரம்பு 200 ஆக்கியமை கண்டு மட்டற்ற ஆனந்தம்.
மிகுந்த நன்றிகள் அண்ணா.
இன்னுமொரு கோரிக்கை.

6. எழுத்துக்களுக்கான வண்ணங்களின் பட்டியலில் இன்னும் பல வண்ணங்களை சேர்த்துத் தந்தால் இன்னும் பதிவுகளை அழகு வண்ணமுள்ளதாகவும் அறிவான எண்ணமுள்ளதாகவும் ஆக்கலாம் என்று தோன்றுகிறது.

உங்களின் மேலான கருத்தை எதிர்நோக்கியிருக்கிறேன்.

அறிஞர்
22-10-2007, 06:41 PM

அதிக கலர்கள் இருந்தால் நன்றாக இருக்குமா எனத்தெரியவில்லை. இப்பொழுது இருக்கிற... சரியில்லாத கலர்களை நீக்கி.. புதுக்கலர்களை வேண்டுமானால் இணைக்கிறோம்.

பூமகள்
22-10-2007, 06:49 PM
எது வசதியோ அழகாய் தோன்றுமோ அவ்வண்ணமே செய்யுங்கள் அண்ணா.
மிக்க மகிழ்ச்சி.
உடன் பதிலிட்டமைக்கு நன்றிகள் அண்ணா.

அக்னி
22-10-2007, 07:51 PM
புதுப் புது மாற்றங்கள், மனதில் மகிழ்ச்சியைத் தருவதோடு,
தமிழ் இணையத்தில், தமிழ்மன்றத்தின் விரைவான முதன்மை நிலையையும், கட்டியம் கூறுகின்றது.
மிகுந்த நன்றிகள்...

மேலே தோன்றுகின்ற பதிவுகளையும், புதிய திரிகளையும், தடித்த எழுத்துக்களில் தெரியவைக்க இயலுமாயின் இன்னமும் அழுத்தமாகத் தெரியும்.

அறிஞர்
22-10-2007, 10:25 PM
உள்ளே நுழையும் பொழுது எத்தனை பேருக்கு பிரச்சனை வருகிறது...

பாரதி
23-10-2007, 01:25 AM
உள்ளே நுழையும் பொழுது எத்தனை பேருக்கு பிரச்சனை வருகிறது...

இன்று புக முற்படுகையில், இரண்டு மூன்று முறை ஒரு திரியை முதலில் பார்வையிட வேண்டுமென்று ஒரு பக்கம் வந்தது. அதை துவக்கினால் பார்ப்பதற்கு அனுமதி இல்லை என்று வந்தது. அதற்குப்பின்னரே மன்றத்திற்குள் நுழைய முடிந்தது.

ஜெயாஸ்தா
23-10-2007, 01:52 AM
இன்று புக முற்படுகையில், இரண்டு மூன்று முறை ஒரு திரியை முதலில் பார்வையிட வேண்டுமென்று ஒரு பக்கம் வந்தது. அதை துவக்கினால் பார்ப்பதற்கு அனுமதி இல்லை என்று வந்தது. அதற்குப்பின்னரே மன்றத்திற்குள் நுழைய முடிந்தது.

எனக்கும் பாரதி அண்ணா சொன்னது போல் இந்த பிரச்சினை வந்தது. அதாவது, முதலில் நிர்வாகி இந்தட திரியை நீங்கள் பார்வையிட விரும்புகிறார் என்று ஆங்கிலத்தில் வந்தபின் அந்த திரியைப் பார்த்தேன். பிறகு மற்ற திரியை பார்வையிட வேண்டி மேலே உள்ள தமிழ்மன்றம் என்ற இணைப்பை சுட்டினால் 'தங்களுக்கு அனுமதிஇல்லை' என்ற செய்தி வந்தது. மீண்டும் ஒரு முறை சுட்டிய பிறகுதான் சரியாக வந்தது.

நேசம்
23-10-2007, 02:45 AM
நான் பின்னூட்டம் இட்ட பிறகு அதே பிரச்சனைதான் எனக்கு வந்தது.என்னுடைய பின்னூட்டமும் வரவில்லை.

விகடன்
23-10-2007, 04:06 AM
வணக்கம் அறிஞரே.
மன்றத்தின் மாற்றம் என்ன சற்று நிலைகுலைய வைத்து விட்டது என்றால் மிகையாகாது. வந்ததும் இது நமது தமிழ் மன்றமா அல்லது தள முகவரி தவறுதலாக அடித்ததால் அறிமுகமாகும் புதியதொரு தளமா என்று ஓர் குழப்பத்தின் மத்தியில் மீள ஒருதடவை தள முகவரியை சரிசெய்துகொண்டே எனது அங்கத்துவ பெயரையும் இரகசிய குறியீட்டையும் பொறித்தேன் என்றால் பாருங்களேன்.

முகப்பில் அமைக்கப்பட்டிருக்கும் முத்திரை அளவிலான படங்கள் இன்னும் சிறப்பே.

அன்புரசிகன்
23-10-2007, 05:09 AM
சிறந்த பங்காளர் திரிக்கு அனைவரையும் எடுத்துச்செல்லுமாறு பணிக்கப்பட்டது.... (பண்பட்டவர்களை மட்டும்)... ஆனால் உங்களால் அந்த திரிக்கு போக முடிந்திருக்க வேண்டுமே... காரணம் பண்பட்டவர் அனைவருக்கும் அந்த அனுமதி உண்டு என்று நினைக்கிறேன்... (பாரதி அண்ணா ஜெயாஸ்தா நேசம்)

ஷீ-நிசி
23-10-2007, 05:18 AM
கலரை மாற்றவேண்டும் என்கிறீரா....

தமிழ்மன்றத்தின் ஸ்கின் அதாவது மனோஜ் சொல்வதுபோல தீம் மாற்றினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

Narathar
23-10-2007, 06:46 AM
மன்றம் வளர்ந்துகொண்டு போவதைப்பார்க்க மகிழ்ச்சியாய் உள்ளது......

நான் இன்னும் மாற்றம் தேவை என்றுதான் வாக்களித்துள்ளேன்.... ஏனெனில் நாம் இருப்பதைவைத்து திருப்த்திப்பட்டுக்கொண்டால் வளரமுடியாதே அதனால்...

உண்மையில் மாற்றங்களை முற்று முழுதாக அவதானித்துவிட்டு எனது கருத்துக்களை கூறுகிறேன்

முதல் பார்வைக்கு முன்னேற்றம் தெரிகிறது
நன்றி

Narathar
23-10-2007, 06:51 AM
தமிழ்மன்றத்தின் ஸ்கின் அதாவது மனோஜ் சொல்வதுபோல தீம் மாற்றினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

அறிஞரே..............................

சில செயலிகளில் பார்ப்பவர்கள் தத்தமக்கு விருப்பமான ஸ்கின் களை வைத்துக்கொள்ளலாம் என்று உள்ளதுதானே?

அதாவது ரியல் பிளேயர்.. போன்றவற்றை நமது விருப்பப்படி ஸ்கின்னை மாற்றிக்கொள்ள முடியும் அதுபோல
(நமது அறிவு கனினியில் பாட்டு கேட்பது மட்டும் தான் என்று நீங்கள் சொல்வது தெரிகிறது)

அது போல் மன்றத்தையும் அவரவர்க்கு விருப்பமான ஸ்கின்களில் பார்க்க வசதி செய்ய முடியுமா?

சூரியன்
23-10-2007, 06:53 AM
மன்றத்தில் வளர்ச்சி சொல்லும்படியாக இருக்கிறது..

நிசி சொன்னதை போல மன்றத்தின் தீமை மாற்றம் செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.

மன்றத்தில் புதியதாக ஒரு திரி ஆரம்பிக்கும்போது அதன் தலைப்பு அதிகமாக இருந்தால் பாதி தெரிவதில்லை இதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

மன்றத்தின் கீழே இருக்கும் திஸ்கி மன்றத்தில் நிர்வாக பணிகள் முடிந்து விட்டால் அதை தகுந்த இடத்திக்கு மாற்றி விடலாம்.

மேலும் மன்றத்தில் நுழைவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்கிறது.
நிர்வாகி இதை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்...

aren
23-10-2007, 07:59 AM
இன்னும் சரியாக புரியவில்லை. இரண்டு நாட்கள் உள்ளே சென்று பார்த்துவிட்டு பின்னர் எழுதுகிறேன்.

அறிஞர்
23-10-2007, 10:31 AM
தமிழ்மன்றத்தின் ஸ்கின் அதாவது மனோஜ் சொல்வதுபோல தீம் மாற்றினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

தீம் மாற்ற வேறு படங்கள் தயாராகி வருகிறது...

வேறு கலர் (background) ஏதும் மாற்றவேண்டும் என எண்ணினால் தெரிவியுங்கள்...

சூரியன்
23-10-2007, 10:39 AM
தீம் மாற்ற வேறு படங்கள் தயாராகி வருகிறது...

வேறு கலர் (background) ஏதும் மாற்றவேண்டும் என எண்ணினால் தெரிவியுங்கள்...

background கலர்கள் சிலவற்றை சோதனை முறையில் மாற்றி பார்க்கலாம்..

lolluvathiyar
23-10-2007, 01:06 PM
முக்கியம் மாற்றம் எனக்கு புதிதாக ஒன்றும் கேட்கவில்லை.
தமிழில் நேரடியாக தட்டச்சு செய்து பார்மாட்டிங்க் செய்யும் வசதி முன்பு இருந்தது. அந்த வசதி திரும்ப கிடைத்தால் வசதியாக இருக்கும்.

அறிஞர்
23-10-2007, 01:23 PM
முக்கியம் மாற்றம் எனக்கு புதிதாக ஒன்றும் கேட்கவில்லை.
தமிழில் நேரடியாக தட்டச்சு செய்து பார்மாட்டிங்க் செய்யும் வசதி முன்பு இருந்தது. அந்த வசதி திரும்ப கிடைத்தால் வசதியாக இருக்கும்.

விரைவில் அந்த வசதி வருகிறது.....

மாற்றங்கள் மற்ற மென்பொருட்களை பாதிக்காத வண்ணம்.... படிப்படியாக மாற்றி வருகிறோம்.

மாதவர்
23-10-2007, 04:49 PM
மாற்றங்கள் பிடிபட நாளாகும் என நினைக்கிறேன்

praveen
24-10-2007, 05:16 AM
இன்னும் மாற்றம் தேவை.

என்னென்ன என்று விரைவில் இந்த கருத்திலே பதிகிறேன். சற்று அவகாசம் தேவைப்படுகிறது.

பின்னர் பதிந்தது

1) நமது தளத்தில் தற்போது செய்த மாற்றங்கள் படி PM வந்தால் அது பாப்-அப் ஆவதோடு(இது முன்னரே இருந்த வசதி) திரியின் முக்கிய தலைப்பின் மேல்பக்கத்தில் தெரிகிறது, ஆனால் அது சரியான பாண்டில் தெரியாமல் ஆஸ்கி போன்று உள்ளது. அதை மாற்ற வேண்டும்.

2) நமது தளத்தில் இபுத்தகம் ஏற்றும் இடத்தில் ஏற்றியபின் அதை பிழை திருத்தும் வசதி செய்ய அனுமதி வேண்டும். (அந்த புத்தக லிங்கை மாற்றுவது தேவையில்லை-அப்படி இருக்கும் பட்சத்தில் யாராவது தவறான லிங்கை அப்ரூவ் செய்தவுடன் மாற்றி வைத்து விட கூடும்)

3) நம் மன்றத்தில் தேடு பொறி இல்லாதது சற்று பிரச்சினையாக உள்ளது. இது பற்றி ஆராயப்பட்டு வருவதால் அதனையும் சேர்த்து கொள்கிறேன்.

4) நமது மன்றத்தில் PMல் வரும் இன்பாக்ஸ் மடல்கள் பற்றிய விவரம் இமெயிலுக்கு தெரிவிக்கப்படுவதால் அது ஒரு பேக்கப் - ஆக இமெயிலில் சேர்ந்து விடுகிறது. பின் ஒரு ரெபரண்ஸ்க்கு அது பயன்படும். அதே போல அனுப்பும் மடலும் மெயிலுக்கு ஒரு காப்பி செல்லும் வசதி இருந்தால் நன்றாக இருக்கும்.

5)மற்ற தளங்களில் இருப்பது போல பல குழுவுக்குள் (கவிதையாளர் குழு, கட்டூரையாளார் குழு, சிரிப்பு\துணுக்காளர் குழு, படிப்பாளர்கள் குழு) ஒருவர் தன்னை வைத்து கொள்ள ஏற்பாடு செய்தல் வேண்டும். இப்படி இருப்பவர்கள் குழுவுக்குள் குரூப் PM கொடுக்கும் வசதி வேண்டும்.

6)புதிதாக பதியப்பட்ட திரிகள் அதன் நுனியில் (பாரம் இண்டக்ஸ்-ல்) New என்ற எழுத்து 3 நாள்களுக்காவது மின்னி கொண்டிருத்தால் நல்லது.

இன்னும் உள்ளது, நேரம் கிடைக்கும் போது தருகிறேன்.

மேலே உள்ளவைகளில் முடிந்தது, நம் மன்றத்திற்கு தீங்கு இல்லாதவற்றை அறிமுகப்படுத்த வேண்டுகிறேன்.

.

அறிஞர்
24-10-2007, 01:24 PM
பிரவீன் தங்களின் எண்ணங்களுக்கு நன்றி... இன்னும் கொடுங்கள்... எல்லாவற்றையும்... சரிசெய்து கொடுக்க முயலுகிறோம்.

தென்னவன்
24-10-2007, 02:09 PM
மாற்றம் நன்றாக உள்ளது...
ஆனால் புரிந்து கொள்ள நேரம் எடுக்கிறது..
விரைவில் புரிந்து கொள்கிறோம்!!! :icon_b::icon_b:

அறிஞர்
24-10-2007, 03:19 PM
மாற்றம் நன்றாக உள்ளது...
ஆனால் புரிந்து கொள்ள நேரம் எடுக்கிறது..
விரைவில் புரிந்து கொள்கிறோம்!!! :icon_b::icon_b:

இன்னும் சில மாற்றங்கள் உள்ளது... விரைவில் புரிந்துக்கொள்வீர்கள் என எண்ணுகிறேன்.

சூரியன்
24-10-2007, 03:23 PM
மேலும் மன்றத்தில் என்னென்ன மாற்றங்கள் நடந்துள்ளன என்பதை ஒரு தனி திரியில் தெரிவிக்கலாம்,இது அனைவருக்கும் பயன்படும் என நம்புகிறேன்.

அறிஞர்
24-10-2007, 03:25 PM
மேலும் மன்றத்தில் என்னென்ன மாற்றங்கள் நடந்துள்ளன என்பதை ஒரு தனி திரியில் தெரிவிக்கலாம்,இது அனைவருக்கும் பயன்படும் என நம்புகிறேன்.
நீங்களே செய்யலாமே..

உங்களுக்கு தெரிந்து என்ன என்ன மாற்றங்கள் நடைபெற்றுள்ளது.. என தொகுத்துக்கொடுங்கள்...

சூரியன்
24-10-2007, 03:29 PM
விரைவில் கொடுக்கிறேன் அறிஞர் அண்ணா..

அறிஞர்
24-10-2007, 03:36 PM
விரைவில் கொடுக்கிறேன் அறிஞர் அண்ணா..
நன்றி சூரியன்...

ipsudhan
24-10-2007, 05:15 PM
தற்போதைய நீல வண்ணம் நன்றாக உள்ளது ஆனால் இன்னும் கொஞ்சம் brightness தேவை, பட்டன்களும் இன்னும் கொஞ்சம் stylish ஆக இருந்தால் நன்றாக இருக்கும் , என்னிடம் சில மாடல்கள் உள்ளன , அனுப்பட்டுமா?

ஏன் UserCP கருத்துகள் பதித்த திரிகளை காண முடிவதில்லை?.

அமரன்
24-10-2007, 05:26 PM
தற்போதைய நீல வண்ணம் நன்றாக உள்ளது ஆனால் இன்னும் கொஞ்சம் brightness தேவை, பட்டன்களும் இன்னும் கொஞ்சம் stylish ஆக இருந்தால் நன்றாக இருக்கும் , என்னிடம் சில மாடல்கள் உள்ளன , அனுப்பட்டுமா?

ஏன் UserCP கருத்துகள் பதித்த திரிகளை காண முடிவதில்லை?.
அனுப்புங்கள் சுதன்..
உங்கள் கேள்வி எனக்குப் புரியவில்லை..

அறிஞர்
24-10-2007, 06:19 PM
சுதன் அனுப்புங்கள்.. யாருக்கு எங்கு அனுப்புகிறீர்கள் என்பதை தெரிவியுங்கள்.

அக்னி
24-10-2007, 06:42 PM
6)புதிதாக பதியப்பட்ட திரிகள் அதன் நுனியில் (பாரம் இண்டக்ஸ்-ல்) New என்ற எழுத்து 3 நாள்களுக்காவது மின்னி கொண்டிருத்தால் நல்லது.

திரிகள் ஆரம்பிக்கப்பட்ட திகதி தெரியும் வசதி அண்மைக்காலாமாக மன்றத்தில் இருந்தது. தற்போது இல்லை.
மேம்படுத்தும் பணிகள் பூர்த்த்தியாகும்போது, பூரணமாக்கப்படும் என்று நினைக்கின்றேன்.
அதனுடன் உங்கள் ஆலோசனையும் சேர்ந்தால், புதியவற்றை இனம் காணுதல் இன்னமும் இலகுவாகும்.

விகடன்
25-10-2007, 03:45 AM
Unicode Converter இற்கு கொடுக்கப்பட்டிருக்கும் நீல நிற வர்ணம் சற்றேனும் பொருத்தமற்றதுபோல் தோன்றுகிறது. கண்ணை குத்தும் வர்ணத்தில் இருக்கிறது. தற்சமயத்திற்கு அதனை மாற்றி அமைக்க முடியுமா?

கஜினி
25-10-2007, 06:23 AM
போகும்போது பூட்டாமல் சென்றால், மறுநாள் திறக்கும்போது தானாகத் திறந்து கொள்கிறது. இது எனக்கு வசதிதான் என்றாலும், மற்ற பிற நெட் கபேயில் உபயோகிப்பவர்கள் விட்டுச் சென்றால் அடுத்துவரும் சிலர் அதைக் குலைக்க முயலலாம்.

இது மற்றவர்களுக்கும் வருகிறதா என்று தெரியவில்லை. குறிப்பிட்ட நேரம், குறைந்தது அரை மணிநேரம் இயக்கவில்லையென்றால் வெளியேற்றம் செய்துவிடும்படி செய்யுங்கள். நன்றி.

praveen
25-10-2007, 07:04 AM

என்ன நண்பரே, இப்படி கேட்டு விட்டீர்கள், தளத்தை பொது கணினியில் உபயோகித்து முடிந்தவுடன் மேலே பட்டையின் இறுதியில் உள்ள logout கிளிக் செய்தால் முடிந்தது.

உங்கள் (சோம்பலுக்காக - கோவித்து கொள்ளாதீர்கள்) வசதிக்காக இருப்பவர் அனைவரையும் ஒவ்வொரு முறையும் லாகின் பாஸ்வேர்டு டைப் செய்ய வைத்து விடாதீர்கள்.

நேசம்
25-10-2007, 10:08 AM
மன்றத்தில் இருந்து கொண்டு சில நிமிடங்கள் கழித்து திரி பார்க்க விரும்பினால் மிண்டும் நுழைவுச்சிடு கேட்கிறது.ஏன் .?

அன்புரசிகன்
25-10-2007, 10:39 AM
மன்றத்தில் இருந்து கொண்டு சில நிமிடங்கள் கழித்து திரி பார்க்க விரும்பினால் மிண்டும் நுழைவுச்சிடு கேட்கிறது.ஏன் .?

அது மன்றத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த cookied time out ற்கான நேரத்தை குறைத்திருப்பார்... நீங்கள் பாவிப்பது சொந்தக்கணிணி அல்லது நீங்கள் மறக்காமல் signout செய்பவர் என்றால் remember password ஐ தெரிவுசெய்து உள்நுழையுங்கள்... எந்த பிரச்சனையும் வராது...

மன்மதன்
25-10-2007, 01:26 PM
நண்பர் பிரவீன் சொன்ன கருத்துகள் அருமை.. நன்றி பிரவீன்..

சூரியன்
25-10-2007, 04:32 PM
போகும்போது பூட்டாமல் சென்றால், மறுநாள் திறக்கும்போது தானாகத் திறந்து கொள்கிறது. இது எனக்கு வசதிதான் என்றாலும், மற்ற பிற நெட் கபேயில் உபயோகிப்பவர்கள் விட்டுச் சென்றால் அடுத்துவரும் சிலர் அதைக் குலைக்க முயலலாம்.

இது மற்றவர்களுக்கும் வருகிறதா என்று தெரியவில்லை. குறிப்பிட்ட நேரம், குறைந்தது அரை மணிநேரம் இயக்கவில்லையென்றால் வெளியேற்றம் செய்துவிடும்படி செய்யுங்கள். நன்றி.

இந்த பிரச்சனை எனக்கு இருக்கிறது.
நேற்று இரவு பூட்டிச்சென்றேனா என்பது நினைவில்லை,இன்று வந்து தமிழ்மன்றத்தை திறக்கும் போது எனது கணக்கு திறந்தநிலையிலே உள்ளது,

சாராகுமார்
25-10-2007, 05:59 PM
மாற்றங்கள் அருமையாக உள்ளது.வாழ்த்துக்கள்.என் மூத்தவர்கள் அனைவரும் ஐடியா கொடுத்து விட்டதால் அனைவருக்கும் நன்றி...நன்றி.

இன்பா
26-10-2007, 10:53 AM
சில நாட்க்கள் கழித்து வந்து பார்கிறேன், ஏக மாற்றங்க... தளத்தின் முகப்பு பக்கம் அருமையான மாற்றங்களும் நன்றாக இருக்கிறது...

வேகம் சற்று குறைந்திருப்பதாக உணர்கிறேன்...

மேலும் தலைப்பு flash அனிமேஷனில் background color ஆக்வா அவ்வளவாக எடுப்பாக இல்லை, அதனை ஸ்கை ப்ளூ அல்லது வேறு கலரோ மாற்றினால் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து...

மேலும் பல மாற்றங்கள் கண்டு வளர்திட வாழ்த்துவோம்

.

பட்டாம்பூச்சி
27-10-2007, 03:15 PM
நம் மன்றத்தின் புதிய தோரணை நன்றாக இருக்கிறது. அற்புதமான மாற்றங்கள். பிரம்மாண்டமான ஒரு விழாப்பந்தலுக்குள் நுழையும் உணர்வு வருகிறது. வேகமும் அதிகரித்துள்ளது.

.

mathura
30-10-2007, 09:21 AM
மன்றத்தில் மாற்றங்கள் மிகவும் நன்றாக உள்ளன. எவ்வித சிரமும் இல்லாமல் வளைய வர முடிகிறது

.