PDA

View Full Version : அந்நிய முதலீடுகள்:பகற்கொள்ளையின்மறுபெய&



பூமகள்
22-10-2007, 01:29 PM
அந்நிய முதலீடுகள் : பகற்கொள்ளையின் மறுபெயர் - பாகம் 1

நாடு தொழில் வளர்ச்சியில் முன்னேறி வல்லரசாக வேண்டுமா?? அதற்கு அந்நிய நேரடி முதலீடுதான் ஒரே தீர்வு!
வேலை வாய்ப்பு பெருக வேண்டுமா? - அதற்கும் அந்நிய நேரடி முதலீடுதான் ஒரே தீர்வு!
தொழில் நுட்பம், தரமான உற்பத்திப் பொருட்கள், உயரிய சேவை, நிர்வாகத் திறன், ஏற்றுமதிக்கான வாய்ப்பு, பொருளாதார முன்னேற்றம் - என அனைத்திற்கும் ஒரே சர்வரோக நிவாரணியாகச் சித்தரிக்கப்படுகிறது அந்நிய நேரடி முதலீடு.

ஒரே அந்நிய நிறுவனம், நேரடியாகவோ அல்லது இங்குள்ள தரகுப் பெரு முதலாளிகளைப் பங்குதாரர்களாகச் சேர்த்துக் கொண்டோ ஒரு தொழில் நிறுவனத்தைத் தொடங்கினால், அது அந்நிய நேரடி முதலீடு (FDI) எனப்படுகிறது. இதற்கு அந்த அந்நிய நிறுவனம் தனது சொந்தப் பணத்தை மொத்தமாக முதலீடு செய்வதில்லை. இந்திய வங்கிகள் மூலம் அந்நிய நிறுவனங்கள் இதற்காக நிதியைப் பெற்றுக் கொள்கின்றன.

"பிரிட்ஜ் ஸ்டோன்" என்ற ஜப்பானிய டயர் கம்பெனி, அமெரிக்காவின் "ஃப்யர்ஸ்டோ ஸ்டோன்" டயர் கம்பெனியை 1988-இல் கைப்பற்ற அமெரிக்க நிதி நிறுவனங்கள் உதவின. இதே போலத் தான், அமெரிக்க என்ரான் நிறுவனம் மகாராஷ்டிராவில் தபோல் மின் நிலையம் தொடங்க இந்திய வங்கிகள் 40%-க்கு மேல் நிதியுதவி செய்தன. சிறிது காலத்திற்குள் என்ரான் நிறுவனம் அமெரிக்கப் பங்குச் சந்தையில் நடத்திய மோசடியின் காரணமாக திவாலாகி விடவே, அதன் துணை நிறுவனமான தபோல் மின் உற்பத்தி நிலையமும் இழுத்து மூடப்பட்டது. என்ரானுக்கு நிதியளித்த இந்திய வங்கிகளுக்கு ஏற்பட்ட கடன் சுமை, இந்திய மக்களின் தலையில் சுமத்தப்பட்டது.

கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்த கதையாக, இந்திய வங்கிகளிடமிருந்து நிதியைப் பெற்று இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு என்ற பெயரால் சூறையாடியது என்ரான். இப்படித்தான் பல அன்னிய நிறுவனங்கள் இந்திய வங்கிகளிடமிருந்து நிதியைப் பெற்று இந்தியாவில் முதலீடு செய்கின்றனவே தவிர, அன்னிய நாட்டிலிருந்து கோடி கோடியாய் பணத்தை மூட்டை கட்டிக் கொண்டு வந்து இங்கு முதலீடு செய்து தொழில் தொடங்குவதில்லை. ஆனாலும் இந்தப் பித்தலாட்டத்தை மூடி மறைத்துவிட்டு இதுவும் அந்நிய நேரடி முதலீடுதான் என்று தாராளமயதாசர்கள் துதிபாடி வரவேற்கின்றனர்.

"உலக வங்கியிடம் கடன் வாங்கினால் நாம் வட்டியோடு அசலைத் திருப்பிச் செலுத்த வேண்டியிருப்பதால் நமக்கு இழப்பு ஏற்படுகிறது ஆனால், அந்நிய நேரடி முதலீட்டைப் பொறுத்தவரை நாம் அசலையோ, வட்டியையோ திருப்பிச் செலுத்தப் போவதில்லை. அப்படியிருக்க, நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு சாதகமாக உள்ள அந்நிய நேரடி முதலீட்டை நாம் ஏன் எதிர்க்க வேண்டும்?" என்று ஏகாதிபத்திய எடுபிடிகள் நியாயவாதம் பேசுகின்றனர்.

ஆனால், ஒரு தொழிலில் நுழையும் அந்நிய நேரடி முதலீடானது காப்புரிமைத் தொகை, இலாப ஈட்டுத் தொகை, தொழில் நுட்பக் கட்டணம், ஆதாயப்பங்கு, திறன் கட்டணம் - எனப் பல்வேறு வடிவங்களில் உள்நாட்டுச் செல்வத்தை உறிஞ்சிக் கொழுக்கிறது. மகாராஷ்டிராவில் என்ரான் நிறுவனம் தபோல் மின் நிலையத்தில் உற்பத்தியைத் தொடங்குவதற்கு முன்பே திறன் கட்டணம் என்ற பெயரில் மாதமாதம் ரூ.95 கோடி வீதம் விழுங்கியது. இப்போது பல்வேறு அந்நிய நேரடி முதலீட்டு நிறுவனங்கள் பல வடிவங்களில் உறிஞ்சுவதால் உள்நாட்டின் கையிருப்பான அந்நியச் செலாவணி வெகுவிரைவில் கரைந்து விடுகிறது. இவ்வாறு காலியாக்கப்படும் அந்நியச் செலாவணியின் மதிப்பு, அன்னிய நேரடி முதலீட்டை விட அதிகமாக இருந்தால், அது நாட்டின் வளர்ச்சியா அல்லது வீழ்ச்சியா?

ஆப்பிரிக்க நாடுகளில் நுழைந்த அந்நிய நேரடி முதலீடு இதைத்தான் செய்துள்ளது. போஸ்ட்வானா நாட்டில் 1995-2003 காலகட்டத்தில் போடப்பட்ட அன்னிய நேரடி முதலீடு ஏறத்தாழ 4243 கோடி ரூபாய். ஆனால் இலாப ஈட்டுத் தொகை, தொழில் நுட்பக் கட்டணம், ஆதாயப் பங்கு முதலான வடிவங்களில் வெளியேறிய உள்நாட்டு மூலதனமோ ஏறத்தாழ 25,294 கோடி ரூபாய்! காங்கோ நாட்டில் அதே காலகட்டத்தில் போடப்பட்ட அன்னிய நேரடி முதலீடு ஏறத்தாழ 7,303 கோடி ரூபாய். வெளியேறிய மூலதனமோ 12,478 கோடி ரூபாய். ஆப்பிரிக்க நாடுகள் மட்டுமல்ல; தென்னமெரிக்கக் கண்டத்திலுள்ள பிரேசில் நாட்டிலும் இது தான் நடந்தது. அந்நாட்டில் அந்நிய நேரடி முதலீடு பெருகப் பெருக, அந்நாட்டின் அந்நியச் செலாவணி இருப்பும் கரைந்து கொண்டே போனது. 1993-இல் பிரேசிலை விட்டு வெளியேறிய உள்நாட்டு மூலதனம் ஏறத்தாழ ரூ. 148 கோடியாக இருந்தது. 1998-இலோ இது ரூ. 28,000 கோடியாக உயர்ந்தது. (ஆதாரம்: UNCTAD அறிக்கை, 2005)

இந்திய ரிசர்வ் வங்கி அண்மையில் நடத்திய ஓர் ஆய்வின்படி, ஏறத்தாழ 300 அந்நிய நேரடி முதலீட்டு நிறுவனங்களால் இந்திய அரசுக்குக் கிடைத்த வருவாயை விட, அந்நிறுவனங்களின் தொழில்நுட்பக் கட்டணம், மூலப்பொருள் இறக்குமதி முதலானவற்றுக்காகச் செலவிடப்பட்ட அந்நியச் செலாவணியே அதிகமாக உள்ளது. இவ்வாறு நாட்டின் செலாவணி இருப்பைக் கரைக்கும் நிதிச்சேவை, தொலைத்தொடர்பு, அடிக்கட்டுமான துறை, மின் சக்தி, சில்லறை வணிகம் முதலான துறைகளிலேயே பெருமளவு அந்நிய மூலதனம் நுழைகிறது.

அந்நியச் செலாவணி இருப்பைப் பலவழிகளில் அபகரிப்பதோடு அந்நிய நேரடி முதலீடுகள் நின்று விடுவதில்லை.

(அந்நிய நேரடி முதலீட்டின் விளைவுகள் அடுத்த பகுதியில் நிறைவடையும்..)

நன்றிகள்: புதிய ஜனநாயகம் (செப்டம்பர் 2007) மாத இதழ்

அந்நிய முதலீடுகள்:பகற்கொள்ளையின் மறுபெயர் - நிறைவு பகுதி (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=290066#post290066)

சுகந்தப்ரீதன்
22-10-2007, 01:43 PM
மிகவும் அருமையாக உண்மையை எடுத்துகாட்டியுள்ளது தங்களின் கட்டுரை..! இந்த ஒரு விசயம் மட்டுமல்ல இன்னும் பல விசயங்களில் உண்மை ஊமையாக இருக்க பொய்யே மெய்யாய் வலம் வருகிறது..! இன்னும் பல உண்மைகளை தொகுத்து வழங்குமாறு தங்களை கேட்டு கொள்கிறேன்..! இந்த கட்டுரைக்கு எனது வாழ்த்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்..!

அறிஞர்
22-10-2007, 02:28 PM
அருமையான கட்டுரை...

நம் கரிகாலன் அண்ணா.. இன்னும் கொஞ்சம் விளக்கம் கொடுப்பார் என எண்ணுகிறேன்

அன்புரசிகன்
22-10-2007, 04:27 PM
இவ்வாறான சுத்துமாத்துக்கள் பல நாம் காணக்கூடியதாக இருக்கும்.

எடுத்துரைத்த பூமகளுக்கு நன்றிகள்.

பென்ஸ்
22-10-2007, 04:46 PM
நல்ல பதிவு பூமகள்... ஆனால் கட்டுரையை அப்படியே பதித்தது போல் தெரிகிறது.... மற்ற பத்திரிகையின் கட்டுரைகளை அப்படியே பதிக்காமல்
அது என்ன சொல்லுகிறது???,
அது பற்றி உங்கள் கருத்து என்ன????
போன்ற பதிவுகள் கொடுக்கலாம் என்பது என் கருத்து... இது படைப்பாளர்களை ஊக்குவிக்கும்... எழுத தூண்டும்.....

மேலும்... எனக்கு இந்த பகுதி (வணிகம்) கொஞ்சம் சம்பந்தமில்லாதது எனலாம்.... இருப்பினும் சில கருத்துகள்....
எந்த ஒரு செயலுக்கும் இரு வினை இருக்கும்... ஆனால் அதனால் நமக்கு கிடைக்கும் நன்மை, தீமையை அளவிட்டு அதை ஏற்று கொள்ளுவது அறிவு.... அன்னிய முதலீடு இல்லாமல் நாம் 50 ஆண்டுகளாக பட்ட பாடு போதாதா..???? நம் பணத்தையே நான் சரியாக பயன்படுத்தவில்லையே.....

வணிகத்தில் யாரும் லாபம் கருதி மட்டுமே தொழில் துவங்குவர்.. இங்கு பொது சேவை செய்ய யாவரும் தொழில் துவங்குவது இல்லை, அப்படி முதலீடு செய்பவர்கள் அதிகமாக லாபம் ஈட்டவே செய்வர்.. அது காங்கோவாக இருந்தாலும் கனடவாக இருந்தாலும்.
என்ரான் மோசடியில் நமக்கு நடந்ததை பேசும் நாம் ஹர்சத் மேத்தாவை மறந்து போவது வேடிக்கையே..... (என்ரானில் பாதிக்க பட்டவனில் நானும் ஒருவன்).

கரிகாலன் மற்றும் இராசகுமாரன் போன்றவர்கள் இதில் நல்ல கருத்துகள் கூறமுடியும் என்பது என் கருத்து.

பூமகள்
22-10-2007, 04:59 PM
இந்த ஒரு விசயம் மட்டுமல்ல இன்னும் பல விசயங்களில் உண்மை ஊமையாக இருக்க பொய்யே மெய்யாய் வலம் வருகிறது..! இன்னும் பல உண்மைகளை தொகுத்து வழங்குமாறு தங்களை கேட்டு கொள்கிறேன்..! இந்த கட்டுரைக்கு எனது வாழ்த்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்..!
நன்றிகள் ப்ரீதன் அண்ணா.
உங்களின் வேண்டுகோளை நிச்சயம் என்னால் இயன்ற அளவு நிறைவேற்றுவேன். தங்களின் உடன் பின்னூட்ட ஊக்கத்திற்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் ப்ரீதன் அண்ணா.

பூமகள்
22-10-2007, 05:02 PM
அருமையான கட்டுரை...
நம் கரிகாலன் அண்ணா.. இன்னும் கொஞ்சம் விளக்கம் கொடுப்பார் என எண்ணுகிறேன்
நன்றிகள் அறிஞர் அண்ணா.
நல்ல பின்னூட்ட விளக்கங்களை அவர்களிடமிருந்து எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன்!!

பூமகள்
22-10-2007, 05:07 PM
இவ்வாறான சுத்துமாத்துக்கள் பல நாம் காணக்கூடியதாக இருக்கும். எடுத்துரைத்த பூமகளுக்கு நன்றிகள்.
உங்களின் ஊக்கத்தால் இன்னும் பல விசயங்கள் வெளிச்சம் போட்டு காட்ட ஊக்கமாய் இருக்கிறது.
நன்றிகள் அன்பு அண்ணா.

பூமகள்
22-10-2007, 05:11 PM
நல்ல பதிவு பூமகள்... ஆனால் கட்டுரையை அப்படியே பதித்தது போல் தெரிகிறது.... மற்ற பத்திரிகையின் கட்டுரைகளை அப்படியே பதிக்காமல்
அது என்ன சொல்லுகிறது???,
அது பற்றி உங்கள் கருத்து என்ன????
போன்ற பதிவுகள் கொடுக்கலாம் என்பது என் கருத்து... இது படைப்பாளர்களை ஊக்குவிக்கும்... எழுத தூண்டும்.....

பின்னூட்டத்திற்கு மிகுந்த நன்றிகள் அண்ணா.
மிகச் சரியான கருத்து. அப்படியே தந்தால் ஆதரப்பூர்வமாக இருக்கும் என்று கொடுத்தேன். என் கருத்தையும் இனி இணைத்துத் தருகிறேன் அண்ணா.


என்ரான் மோசடியில் நமக்கு நடந்ததை பேசும் நாம் ஹர்சத் மேத்தாவை மறந்து போவது வேடிக்கையே..... (என்ரானில் பாதிக்க பட்டவனில் நானும் ஒருவன்).
கரிகாலன் மற்றும் இராசகுமாரன் போன்றவர்கள் இதில் நல்ல கருத்துகள் கூறமுடியும் என்பது என் கருத்து.
தாங்களும் இதில் பாதிக்கப்பட்டவர் என்று அறிந்து உள்ளம் வருந்துகிறேன். இது பற்றி மன்ற மூத்தோரின் பதிவையும் எதிர்நோக்கியுள்ளேன்.
உங்களின் கேள்விக்கான விளக்கம் அடுத்த பதிவில் தருகிறேன் பென்ஸ் அண்ணா.

நேசம்
22-10-2007, 08:17 PM
புதிய ஜனநாயகம் இதழின் கொள்கை நாம் நாடு உலகமாயக்குதலுக்கு எதிராக இருக்கிறது( எனக்கு கூட சரியாக தான் படுகிறது).முதன் முதலாக இந்த பகுதியில் தனது பங்களிப்பை தந்து இருக்கும் சகோதரி பூமகள், (இந்த கட்டுரை சம்பந்தமாக அவருக்கு ஏதும் கருத்து இருக்கும்பட்சத்தில்)தனது கருத்தை பென்ஸ் கூறுவது போல் தந்து இருந்தால் சிறப்பாக இருந்து இருக்கும். மன

தங்கவேல்
23-10-2007, 05:30 AM
வாவ் பூமகள் உங்களின் கட்டுரை அசத்தல்...

பூமகள்
24-10-2007, 03:12 PM
புதிய ஜனநாயகம் இதழின் கொள்கை நாம் நாடு உலகமாயக்குதலுக்கு எதிராக இருக்கிறது( எனக்கு கூட சரியாக தான் படுகிறது).முதன் முதலாக இந்த பகுதியில் தனது பங்களிப்பை தந்து இருக்கும் சகோதரி பூமகள், (இந்த கட்டுரை சம்பந்தமாக அவருக்கு ஏதும் கருத்து இருக்கும்பட்சத்தில்)தனது கருத்தை பென்ஸ் கூறுவது போல் தந்து இருந்தால் சிறப்பாக இருந்து இருக்கும்.
நன்றிகள் சகோதரர் நேசம்.
எனக்கு அத்தனை திறமை இந்த துறையில் இல்லை என்பதை ஒப்புக்கொள்ளவே வேண்டும். நல்லவிசயம் என்று என் மனதில் பட்டதை இங்கு உங்களோடு பகிர விரும்பினேன். என் கருத்தையும் இனி பதிக்க முயல்கிறேன்.
பின்னூட்ட ஊக்கத்திற்கு நன்றிகள் அண்ணா.

வாவ் பூமகள் உங்களின் கட்டுரை அசத்தல்...
மிக்க நன்றிகள் தங்கவேல் அண்ணா.

பூமகள்
10-11-2007, 05:15 PM
அன்னிய முதலீடு இல்லாமல் நாம் 50 ஆண்டுகளாக பட்ட பாடு போதாதா..???? நம் பணத்தையே நான் சரியாக பயன்படுத்தவில்லையே.....
இதற்கான விடை சொல்ல வேண்டின், இந்திய சுதந்திரத்தின் அடிப்படை பற்றி பேசியாக வேண்டும்.
இந்திய சுதந்திரம் எதன் அடிப்படையின் கிடைத்தது?? அந்நிய முதலீடு 50 ஆண்டுகளாக இல்லாமல் இந்தியா பாடு பட்டது என்று சொல்வதை முற்றிலுமாக மறுக்கிறேன்.
சுதந்திரம் கிடைக்கப்பெற்றதன் பின்னணியில் நடந்தது என்ன என்பது பல இந்தியருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
சுதந்திரம் கொடுக்கப்பட்ட அன்றே, ஓர் ஒப்பந்த அடிப்படையில் தான் நம் இந்திய கொடியை ஏற்றிவிட்டு அந்நியர் வெளியேறினர்.
அந்த ஒப்பந்தம், 49 - 51 % அந்நிய - இந்திய முதலீடுகள்.
இந்த 2% முதலீடு வித்தியாசத்தில் இந்தியா எவ்வளவு லாபத்தை ஈட்டிட முடியும் என்று சொல்லுங்களேன்..!
இதற்கு பெயர் பூரண சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று சொல்லி விட முடியுமா??
இந்த 49% அந்நிய முதலீடு தான் இன்று கொஞ்சம் கொஞ்சமாக சுரண்டல் அதிகப்படுத்த 50% 60% என்று இப்போது 100% வரை வளரும் நிலையில் உள்ளது. இந்த மறுகாலனி ஆதிக்கத்தை ஆதரித்து உங்களைப் போல் பலரைப் பேச வைத்துக் கொண்டும் உள்ளது என்பது வேதனை அளிக்கிறது.
உதாரணமாக, இந்திய கோதுமை விவசாயிகளிடமிருந்து இந்திய அரசு
1 குவிண்டால் = 450 முதல் - 500 ரூபாய் வரை கொள்முதல் விலை கொடுத்து வாங்கி நியாயவிலைக் கடைகளுக்கு அனுப்பிவந்தது.

இந்தக் கால விலைவாசி ஏற்றத்தைத் தாக்குபிடிக்க முடியாத ஏழை விவசாயிகள் கொள்முதல் விலையை ஒரு குவிண்டாலுக்கு ரூபாய் 550 முதல் 600 வரை கொடுக்கும்படி போராட்டம் நடத்தினர்.

இதை தர மறுத்த இந்திய அரசு, ஒரு குவிண்டாலுக்கு ரூபாய் 800 கொடுத்து ரிலயன்ஸ் என்னும் பன்னாட்டு கூட்டு முதலாளியிடமிருந்து கோதுமை வாங்கி, நியாயவிலைக் கடைக்கு அனுப்பிக் கொண்டிருந்தது அரசு.

இப்போது அரசே அதிக விலை கொடுத்து கோதுமை விவசாயிகளிடம் கோதுமை வாங்க கேட்டாலும் எந்த விவசாயியிடமும் கோதுமை இல்லை. காரணம், ஏற்கனவே அனைத்து விவசாயிகளிடமிருந்தும் கோதுமையை ரிலையன்ஸ் போன்ற சில பன்னாட்டு கூட்டு நிறுவனங்கள் ரூபாய் 550 கொடுத்து வாங்கி அரசுக்கு 800 ரூபாய்க்கு விற்று பெருத்த லாபம் ஈட்டிக் கொண்டன.

ஆஜ் தக் அலைவரிசை சில மாதங்களுக்கு முன் அம்பலப்படுத்திய மக்கள் பிரதிநிதிகளின் கோர முகம் அனைவருக்கும் நினைவிருக்குமென்று நினைக்கிறேன்.
மக்களுக்காய் பாராளுமன்றத்தில் கேள்வி கேட்கவே, கேள்விக்கு இத்தனை லட்சம் லஞ்சமாக தரவேண்டும் என்று பேரம் பேசி பணம் வாங்கியதை ஆஜ் தக் வெளியிட்டது அனைவரும் அறிந்த ஒன்று.
இப்படி மக்களுக்காக பேசவே பணம் லஞ்சம் கேட்கும் மக்கள் பிரதிநிதிகள் நிறைந்த நாட்டில் அந்நிய முதலீடுகள் வந்தால் என்ன நடக்கும் என்று தாங்களே சொல்லுங்களேன்...!!
இந்தியராக இருக்கும் மக்கள் பிரதிநிதியே இப்படியாக இருக்கையில் அந்நிய முதலீடுகள் இந்தியாவில் போடும் அந்நியருக்கு எப்படி இந்தியரின் மேல் வணிகம் நோக்கமில்லாத பற்று வரும்.???

வணிகத்தில் யாரும் லாபம் கருதி மட்டுமே தொழில் துவங்குவர்.. இங்கு பொது சேவை செய்ய யாவரும் தொழில் துவங்குவது இல்லை, அப்படி முதலீடு செய்பவர்கள் அதிகமாக லாபம் ஈட்டவே செய்வர்.. அது காங்கோவாக இருந்தாலும் கனடவாக இருந்தாலும்.
இந்த வகையில் தங்களின் கருத்தை நான் ஆமோதிக்கிறேன்.

என்ரான் மோசடியில் நமக்கு நடந்ததை பேசும் நாம் ஹர்சத் மேத்தாவை மறந்து போவது வேடிக்கையே..... (என்ரானில் பாதிக்க பட்டவனில் நானும் ஒருவன்).

இங்கே அந்நிய முதலீடு பற்றி மட்டும் பேசியதால் ஹர்சத் மேத்தாவை பற்றி சொல்ல இடம் இல்லாமல் போகிவிட்டது.
ஹர்சத் மேத்தாவும் அந்நிய செலாவணி மோசடி செய்தார் என்று யாவரும் அறிவோம்.
அவரை மறக்கவில்லை. அது பற்றிய தங்களின் கருத்தையும் சொல்லுங்கள். மேலும் விவாதிக்கலாம்.

நேசம்
10-11-2007, 05:53 PM
நல்ல விளக்கம்.அஜினொமோட்டா சமையலுக்கு பயன்படுத்தும் இப்பொருள் உடல் நலத்துக்கு கெடு விளைக்க கூடியது.மத்திய அமைச்சர் அன்புமனி அவர்கள் தடை செய்ய முயற்சி எடுத்தும் அவரால் முடிய வில்லை.இதற்கு காரணம் உலகமாயமக்கல்.அது போல ரிலையன்ஸ் சூப்பர் மார்கெட் தொழில் நுழைவதால் லட்சக்கனக்கான சிறுவியாபாரிகள் அதிலும் தெருவில் காய்கறி விற்பவர்கள் வாழ்க்கை பாதிக்க படும் தெரிந்தும் அரசு அனுமதிள்ளது.ரிலையன்ஸ் தொடர்ந்து வால் மார்ட் மற்றும் கெரி பொர் நுழைய இருக்கிறது.அது போல பெப்ஸி கோலா போன்றவற்றால் காளிமார்க் போன்ற உள்நாட்டு பானங்கள் காணமல் போய்விட்டன.அந்நிய மூதலிடுகள் சிலரை பணக்காரர்கள் ஆக்கும்.பலரது வாழ்க்கை பாதிக்க ப்படும்.பிரெசில் நாடெ உதராணம்.அந்த நாடு இப்பொழுது பொருளாதரா நெருக்கடியில் இருக்கிறது.

பூமகள்
10-11-2007, 06:02 PM
மிகச் சரியான உதாரணங்கள் நேசம் அண்ணா.

ஹெல்த் கேர் என்ற பெயரில் மருத்துவர்கள் ஆலோசனை வழங்கும் அமைப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது ரிலையன்ஸ். இங்கு இலவசமாக நோய் வராமல் காக்க மருத்துவ ஆலோசனை வழங்கி அதன் மூலம் மருந்துகள், ஆரோக்கியத்துக்கு தேவைப்படும் பல பொருட்களை விற்பனை செய்யும் புதுவித உத்தியைக் கையாண்டு சந்தைப்படுத்த துவங்கியுள்ளது ரிலையன்ஸ்.
இது பற்றி தினமணி கதிரில் அண்மையில் வெளிவந்த கட்டுரையில் படித்தேன்.

எனக்கு கோலி சோடா குடிக்க ஆசை. ஆனால் கிராமங்களுக்குச் சென்றாலும் அவற்றைப் பார்ப்பது அரிதாகிவிட்டது. அந்நிய பன்னாட்டு சந்தை எந்த அளவு சிறு வியாபாரிகளைப் பதம் பார்க்கிறது என்று கொஞ்சம் கொஞ்சமாக பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
ஒவ்வொரு துறையாக தாரை வார்த்து வருகிறது அரசு.

பின்னூட்ட கருத்துக்கு நன்றிகள் நேசம் அண்ணா.

நேசம்
10-11-2007, 06:10 PM
அது மட்டுமில்லை.இவர்களின் நோக்கம் இந்தியர்களையும் நுகர்வோர்களாக ஆக்குவது தான்.அதில் அதிகமாக பாதிக்கப்படுவது நடுத்தர மக்கள் தான்.pizza - mcdonalட் பெப்ஸி போன்றவை இல்லை என்றால் இளைய சமுதாயம் இல்லை என்ற அளவுக்கு கொண்டு வந்தது உலகமாயமக்கள் என்ற பணக்கார நாடுகளின் திட்டத்துக்கு நம் நாடு பணிந்தது.யாரும் ஆட்சிக்கு வந்தாலும் இதை ஒன்றும் செய்ய முடியாது.க்ம்யூனிஸ்ட் வந்தாலும் கூட !

karikaalan
11-11-2007, 01:59 PM
நண்பர்களே

இங்கே இதனைப் பற்றிப் பதிந்திருக்கிறேன்−−−−

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=12985

===கரிகாலன்