PDA

View Full Version : தேவதையானவளே..!



யாழ்_அகத்தியன்
21-10-2007, 01:50 PM
எல்லாரும் வெக்கப்பட
கவிதை எழுதுவார்கள்_ நான்
வெக்கப்படும் கவிதைக்காய்
கிறுக்கிக்கொண்டிருக்கிறேன்

*
நீ
மட்டும் சேலை கட்ட
நேரம் எடுப்பதில்லை
சேலை உன்னைக்
கட்டுவதால்

*
நீ
கவிதை
படிக்கிறாயா

இல்லை

உன்னைக்
கவிதை
படிக்கிறதா

பார் மறுபக்கம்
போக பஞ்சிப்படுவதை

*
உன்னைச் சேரும்
ஒவ்வொன்றும்
என்னை ரசிகனாக்கிறது

இசைக்கும் உன் கால்
கொலுசு முதல்

*
துணிக் கடையிலாவது
என் கையை விடாது
பிடித்துக் கொள்

நீயென்று நினைத்து
நான் பொம்மை கைகளை
பிடித்துவிடுகிறேன்

-யாழ்_அகத்தியன்

ஓவியன்
21-10-2007, 02:18 PM
உங்கள் கவிதை
உங்கள் காதலியைப்
படித்து
பஞ்சியால் பக்கம்
தாவ மறுக்கிறது.

பக்கம் தாவ மறுக்கும்
உங்கள் கவிதையைப்
படிக்கும் நம் மனம்
பக்கம் தாவ மறுக்கிறது.

பாராட்டுக்கள் அகத்தியன்.

சூரியன்
21-10-2007, 02:24 PM
நண்பரே அழகான வஎணிப்பு..
காதலியை நினைத்து இப்படி கவிதை எழுதுறீங்க...