PDA

View Full Version : எஸ்.எம்.எஸ் கவிதைகள்



யாழ்_அகத்தியன்
21-10-2007, 01:46 PM
எழுதிய கவிதைகளை
கிழித்துக் கொண்டிருக்கிறேன்
உன் பெயரைப் போல் அழகாய்
இல்லை என்பதால்.

*
உன்
கவிதைகளை எல்லாரும்
படிப்பார்கள் நான் மட்டும்
பாடமாக்குவேன்

*
அமாவாசையிலும் நிலாவோடு
வாழ்ந்து கொண்டிருப்பவன்
நான் மட்டும்தான்

*
உனக்கு மாத்திரை
குடிக்க பிடிக்காது
எனக்கோ
உனக்கு காய்ச்சல்
என்றாலே பிடிக்காது

*
நீ
சிலையாய் நிற்கும்
புகைப்படத்தை பார்த்தே
சிலையாகிப் போனேன் நான்

*

நீ என்னை காதலிப்பாய்
என்ற நம்பிக்கையில்தான்
உன்னை காதலித்துக்
கொண்டிருக்கிறேன்

*
நீ
என்ன செய்து கொண்டிருப்பாய்
என்பதை எண்ணிப்பார்பதையே
நான் செய்து கொண்டிருக்கிறேன்

*

இன்று என்னைவிட்டு
விடைபெற்று போகிறாய்
நாளைய உனக்காக நான்
காத்திருக்க ஆரம்பிக்கிறேன்

*
நீ
எனக்கு கிடைக்க வேண்டும்
என்பதற்காகவே உனக்கு
பிடிக்காததை செய்யக்கூடாது
என்பதில் மிகத் தெளிவாய்
இருக்கிறேன்.

*
உனக்கு
பொய் சொல்வது பிடிக்காது
தெரிந்தும் சொல்கிறேன்
பொய்சொல்லாத நீ கிடைக்க
வேண்டுமே எனக்கு

*
உன் புகைப்படத்தில் நீ
யாரோடு நிற்கிறாய் என்பதே
என் கண்ணுக்குத் தெரியவில்லை

என்
கண்ணுக்கு தெரிவது
நீ மட்டும்தானே


-யாழ்_அகத்தியன்

பூந்தோட்டம்
21-10-2007, 01:49 PM
அடடா..எஸ்-எம்-எஸ் அனுப்ப கவிதை கிடைத்திருக்கிறது..யாருக்கு அனுப்ப? நன்றி

ஓவியன்
21-10-2007, 01:59 PM
சின்ன சின்ன வரிகளில்
அலை அலையாக
காதலை அள்ளித்
தெளிக்கும் வரிகள்
அலை பேசிகளுக்காகவா...?

அருமை, அகத்தியன்...! :)

சூரியன்
21-10-2007, 02:03 PM
நண்பரே கவிதைகள் அழகாய் உள்ளன..