PDA

View Full Version : குழந்தைதான் காதல்..!



யாழ்_அகத்தியன்
21-10-2007, 01:42 PM
காதல் ஒரு
குழந்தைதான்
ஆனால் அதை
காதலி மட்டும்
சுமப்பதில்லை
இருவரும் சுமப்பது

காதல் ஒரு
குழந்தைதான்
ஆனால் அதால்
அழமட்டுமல்ல
பேசாமல் அழவும்
தெரியும்

காதல் ஒரு
குழந்தைதான்
ஆசைப்பட்டால் அது
கிடைக்கும் வரை அழும்

காதல் ஒரு
குழந்தைதான்
எதைக் கொடுத்தாலும்
உடைத்துப் பார்க்கும்

காதல் ஒரு
குழந்தைதான்
சிரிக்கவும்
அழவும்தான்
தெரியும்

காதல் ஒரு
குழந்தைதான்
வேண்டும்
என்றாலும்
அழும்

வேண்டாம்
என்றாலும் அழும்

காதல் ஒரு
குழந்தைதான்
எல்லாராலும் தூக்க முடியும்
எல்லாரலும் அழுவதை
நிறுத்த முடியாது

காதல் ஒரு
குழந்தைதான்

ஆனாலும்
அதை யாராலும்
எறியவும் முடியாது

அதை யாரலும்
அனாதையாக்கவும்
முடியாது

அதற்கு
பெற்றொர்களே
கிடையாது

ஆம்
யாரின் உதவியும் இன்றி
யாரின் உறவும் இன்றி
பிறப்பது இந்தக் காதல்
குழந்தை மட்டும்தான்.

-யாழ்_அகத்தியன்

பூந்தோட்டம்
21-10-2007, 01:47 PM
காதலை குழந்தையுடன் ஒப்பிட்டு எழுதி இருக்கிரீங்க.நன்றாக இருக்கிறது

ஓவியன்
21-10-2007, 01:55 PM
குழந்தையை சுமக்கும்
அன்னைக்கும் வலிகள்
காதலைச் சுமக்கும்
காதலர்களுக்கும் வலிகள்
ஆனால் இரண்டுமே
சுகமான வலிகள் தானே..

நல்ல ஒப்பீடு அகத்தியன்

காதல் ஒரு
குழந்தைதான்
எல்லாராலும் தூக்க முடியும்
எல்லாரலும் அழுவதை
நிறுத்த முடியாது
நிரம்பவே இரசிக்க வைத்தன இந்த வரிகள்..

"குழந்தையும் தெய்வமும் குணத்தாலே ஒன்று, குற்றங்களை மறந்து விடும் மனத்தாலே ஒன்று". இங்கே காதலை அகத்தியன் குழந்தைக்கு ஒப்பிட்ட போது என் மனதின் ஞாபகப் பேழையிலிருந்து மேலெழுந்த வரிகளிவை....

வரிகளை காதலுடன் பொருத்திப் பார்த்தால் பொருத்தமாகத் தானிருக்கிறது, உண்மைக் காதலால் பிணைக்கப்பட்ட உள்ளங்களும் குற்றங்களை மறந்து விடும் மனங்கள் தானே.....

பாராட்டுக்கள் அகத்தியன், மேன் மேலும் கவியில் முன்னேற என் வாழ்த்துக்களும்.....

சூரியன்
21-10-2007, 02:06 PM
பாராட்டுக்கள் நண்பரே காதலையும் குழந்தையையும் ஒப்பிட்டு கவிதை எழுதியதற்கு...