PDA

View Full Version : ஒரு புயலும் சில பூக்களும்



Hayah Roohi
21-10-2007, 01:36 PM
உணர்வின் வேர்கள்
தாகிக்கும்
இரவுக்கர்ப்பத்தில்
என் மெளன விசும்பல்!


புத்தகங்களுக்குள்
வசிக்கும்
விழிகளில்...
யுகங்கள் அழுத வலி!


தொண்டைக்குள்
தூண்டில் முள்ளாய்
என் இதயம்!


பொங்கிப்பிரவகிக்கும்
என்
ஞான சமுத்திரம்
தாளில் இறங்குகிறது...
துளித்துளியாய்...


ஒவ்வொரு வரியும்
சமூகத்தின் முள்வேலிகளில்
கிழியாமல் பிறக்கட்டும்!


சில கனவுகளும்
வானுயர்ந்த இலட்சியங்களும்
நினைவுகளில் மட்டும்
நிரந்தரமாய்....


தயவு செய்து
என்னை
சுவாசிக்க விடுங்கள்!


தளைகள் அறுந்த
கரங்கள் வேண்டும்
அணு அணுவாய்
என்
இதயம் பெயர்க்க...


நினைக்கும் போது மட்டும்
சாப்பிடும்
சுதந்திரம் வேண்டும்!


நீளும் இரவும்
நானும்
ஒரு தொழுகைப் பாயும்
சில விழி நீர்த்துளிகளும் போதும்
என்
உயிர் பூக்க...


ஒவ்வொரு
மொட்டின் மலர்விலும்
ஒவ்வொரு
இலையின் உதிர்விலும்
தேடல்!தேடல்!


வற்றாத நீர்ச்சுனைகளை
உறிஞ்சிக் கொண்டே
ஓடிக் கொண்டிருக்கும்
என் வேர்களில்...
தாகம்!தாகம்!


இடையில் இடறும்
சில`கற்கள்`
`நீ வெறும் வேர் தான்`
உறுத்தும்!


ஓடிக்கொண்டிருக்கும்
வேருக்கு
ஒரு புயலும்
சில பூக்களும் சொந்தம்!


வளைந்தோடும்
நதிக்கு...
கரையோர நாணல்களின்
கேள்விகளுக்கு
பதிலளிக்க நேரமேது?


இது முடிவிலிப் பாதை!!!

பூந்தோட்டம்
21-10-2007, 01:45 PM
நீளமான அழகிய கவிதை.வாழ்த்துக்கள்

பூமகள்
21-10-2007, 02:34 PM
மிக அழகான கவிதை...!!!
வார்த்தையாடல்கள் மிக அற்புதம்..!!

உணர்வின் வேர்கள்
தாகிக்கும்
இரவுக்கர்ப்பத்தில்
என் மெளன விசும்பல்!

புத்தகங்களுக்குள்
வசிக்கும்
விழிகளில்...
யுகங்கள் அழுத வலி!
ஒரு மனத்தின் வலியை இதை விட அழகாய் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை....!! :icon_b:

முடிவிலிப்பாதையில்... ஓடிக்கொண்டிருக்கும் கவிதைப் பயணம் மிக நன்று...!!
வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்..!!
இன்னும் பல படைப்புகள் தாருங்கள் ரூகி..!!

நல்ல கவிக்கு இதோ 300 இ-பணம் அன்பளிப்பு..!!

யவனிகா
22-10-2007, 10:56 AM
[B][COLOR="Plum"]உணர்வின் வேர்கள்
ஒவ்வொரு வரியும்
சமூகத்தின் முள்வேலிகளில்
கிழியாமல் பிறக்கட்டும்!


சில கனவுகளும்
வானுயர்ந்த இலட்சியங்களும்
நினைவுகளில் மட்டும்
நிரந்தரமாய்....


வெறுமனே விரல்களிலிருந்து வழிந்த கவிதையாய் தெரியவில்லை, இதயம் கீறி இரத்த மையால் எழுதியதாய் உணர்கிறேன்.வெகு சில பதிப்புகளிலேயே தெரிந்து விட்டது நீங்கள் தேர்ந்த கவிஞரென்று...தொடருங்கள்...

சுகந்தப்ரீதன்
22-10-2007, 12:33 PM
ஓடிக்கொண்டிருக்கும்
வேருக்கு
ஒரு புயலும்
சில பூக்களும் சொந்தம்!

மிகவும் ரசித்தேன் இந்த வரிகளை...!உங்களின் கவிவரிகள் மெல்லிய மயிலிறகாய் நினைவுகளையும் உணர்வுகளையும் வருடிச் செல்கிறது... முடிவை போலவே முடிவில்லாமல் தங்களின் கவிதைதொடர் பயணிக்க எனது வாழ்த்துக்களும்...பாராட்டுகளுடன்...!

"சொந்தமென்பதும் பந்தமென்பதும் வேருவிட்ட இடம்
இதைவிட்டால் இங்கே பற்றிவாழ வேறு எந்த இடம்?"

கஜினி
22-10-2007, 12:44 PM
கவிதையை ரசித்தேன் தோழி.

ஜெயாஸ்தா
22-10-2007, 01:35 PM
சுந்திரமாய் பறக்கத்துடிக்கும் ஒரு கூண்டுக்குயிலின் கானம் நன்றாக உள்ளது. கடைசி மூன்றி பத்திகள் கவிதையிலிருந்து விலகித் தெரிகிறதே... தோ(ழி)ழா...!

Hayah Roohi
22-10-2007, 06:49 PM
என் எழுத்தில் ஈரமாகிய அனைத்து இதயங்களுக்கும்
என் இனிய நன்றிகள்!!!

அமரன்
22-10-2007, 07:33 PM
அன்பரே உங்கள் இக்கவிதையை புதியகவிதைகள் பாடல்கள் பகுதிக்கு மாற்றுகின்றேன். இதுபோன்ற கவிதைகளை இனி அங்கேயே பதியுங்கள். உங்கள் புரிதலுடனான ஒத்துழைப்புக்கு நன்றி.

அன்புடன்,

அமரன்
24-10-2007, 06:48 AM
வளைந்தோடும்

நதிக்கு...
கரையோர நாணல்களின்
கேள்விகளுக்கு
பதிலளிக்க நேரமேது?

காந்த துகள்களை
சேர்த்து கோர்த்த வரிகள்..

ஓடிக்கொண்டிருக்கும் நதிகள்
தலையாட்டி ரசிக்கும் நாணல்கள்.

வேரடி மண் அரித்தாலும்
வீழாது நிற்கும் விருட்சங்கள்..

துள்ளி தலை நீட்டும் மச்சங்கள்
உலகைக் கண்டு மீள உட்புகும் அச்சம்


நதியைக் கண்ட வறுமை
மறைந்து மலரும் பசுமை..

சொல்லாத மாற்றங்கள் எத்தனையோ
நதிக்கெதற்கு இவைபற்றிய சிந்தனை..

ஆதவா
06-11-2007, 05:05 AM
வெறுமனே விரல்களிலிருந்து வழிந்த கவிதையாய் தெரியவில்லை, இதயம் கீறி இரத்த மையால் எழுதியதாய் உணர்கிறேன்.வெகு சில பதிப்புகளிலேயே தெரிந்து விட்டது நீங்கள் தேர்ந்த கவிஞரென்று...தொடருங்கள்...

இந்த பாராட்டை அப்படியே தருகிறேன்....

உங்களுக்கு இதயம் ந்நோண்டும் மெக்கானிசம் தெரிந்திருக்கிறது...

வாழ்த்துகள்