PDA

View Full Version : இன்று மென்பொருள் மேம்படுத்தும் நாள்இராசகுமாரன்
21-10-2007, 09:12 AM
நண்பர்களே,

நாம் புதிய சர்வருக்கு மாறிய பின் சமீபத்தில் ஏற்பட்ட சிற்சிறு பிரச்சனைகளை களைய இன்று (21-அக்டோபர்-2007) நமது மன்ற மென்பொருள் மேம்படுத்தப் படுகிறது.

மன்றத்தை நிறுத்தாமல் இயங்கிக் கொண்டிருக்கும் போதே இந்த மேம்பாட்டை செய்ய உள்ளோம், அதனால் ஒரு சில சமயங்களில் சிறிய தடங்கல்கள் வரலாம் என எதிர்பார்க்கிறோம்.

மன்ற மென்பொருள் மாற்றம் செய்யப் பட்டவுடன், ஒரு சில சிறப்பு வசதிகள் உடனடியாக வேலை செய்யாது. அவை ஒவ்வொன்றாக இன்னும் 2-3 நாட்களில் சேர்க்கப் படும்.

உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி..!

இராசகுமாரன்

மலர்
21-10-2007, 09:21 AM
இதனால் நம் மன்றம் இன்னும் புது பொலிவுடன் மாறிவிடும்..

உங்களின் இத்தகைய முயற்சிக்கு
எங்களின் முழு ஒத்துழைப்பு உண்டு.....

ஓவியன்
21-10-2007, 09:58 AM
நல்லது அண்ணா!

புதிய மாற்றங்கள் மன்றத்துக்கு புதுப் பொலிவூட்டட்டும்.

நேசம்
21-10-2007, 10:13 AM
புது பொலிவுடன் வரபபோகும் மன்றத்தை காண ஆவலாய் இருக்கிறேன்

அக்னி
21-10-2007, 10:34 AM
மன்றம் மெருகூட்டப்படுவது, மகிழ்ச்சிக்குரியதே...
எமது பூரண ஒத்துழைப்பை, மிகுந்த நன்றியறிதலோடு தருகின்றோம்...

சூரியன்
21-10-2007, 02:40 PM
மன்றத்தில் ஏற்படும் தடங்கள்களை பொறுத்துக் கொண்டு..
புதுப்பொலியுடன் வரும் மன்றாத்தை கான ஆவலுடன் காத்திருக்கிறேன்..

தங்கவேல்
22-10-2007, 09:41 AM
ஒரு மாதிரியாத்தான் இருக்கு. ஆனால் நன்றாக இருக்கின்றது.,

பூமகள்
22-10-2007, 09:49 AM
தாங்கள் எங்களின் நிலையறிந்து மன்றத்தை இயக்க நிலையிலே மேம்படுத்த உத்தேசித்து வேலையை மேற்கொண்டது கண்டு மட்டற்ற ஆனந்தம்.
எங்களது முழு ஒத்துழைப்பையும் உங்களுக்கு வழங்குவோம் அண்ணா.
மன்றத்து புதுப் பொலிவிற்காய் காத்திருக்கும்.........

மன்றத்து பாசத் தங்கை,

கஜினி
22-10-2007, 10:25 AM
தகவலுக்கு நன்றி. இப்பொழுது மன்றம் நன்றாக புதுப்பொலிவுடன் இருக்கிறது.

ஷீ-நிசி
22-10-2007, 11:32 AM
இப்பொழுது கடைசி 10 பதிவுகள் அழகாக டிஸ்பிளே ஆகிறதே... இதற்கென உழைத்தவர்கள் அனைவருக்கும் நன்றி!

அன்புரசிகன்
22-10-2007, 11:36 AM
இப்பொழுது கடைசி 10 பதிவுகள் அழகாக டிஸ்பிளே ஆகிறதே... இதற்கென உழைத்தவர்கள் அனைவருக்கும் நன்றி!

ஆம் நிஷி... சூப்பரா இருக்கு... இன்னமும் பல விடையங்கள் வந்து செல்கின்றன. முழுவதும் முடிந்த பிறகுதான் அனைத்தையும் அனுபவிக்க முடியும்...

உழைக்கும் அண்ணலுக்கு நன்றிகள்.

aren
22-10-2007, 11:42 AM
நான் இரண்டு நாட்களாக மன்றம் சரியாக வராததால் இதை கவனிக்கவில்லை. இன்று என்ன பிரச்சனை என்று நினைத்திருந்தேன். உள்ள நுழைந்ததும்தான் புரிந்தது.

நன்றி தலைவரே. நீங்கள் எது செய்தாலும் எங்கள் நன்மைக்கே என்று தெரியும்.

நன்றி வணக்கம்
ஆரென்

சாராகுமார்
22-10-2007, 02:34 PM
மன்றம் புது பொலியுடன் அருமையாக,அழகாக இருக்கிறது.உழைத்த அனைவருக்கும் இனிய வணக்கமும்,நன்றிகளும்.

அறிஞர்
22-10-2007, 02:36 PM
பல பல மாற்றங்கள்... நன்றி இராசகுமாரன்.

Mano.G.
23-10-2007, 08:59 AM
நேற்று மன்றம் நுழையும் போது
உங்கள் cookies கிளியர் செய்து
மறுபடியும் மன்றம் நுழையுங்கள்
என அறிவிப்பு வந்தது, சரி சிறிது நேரம்
சென்று நுழையலால் என் எண்ணி கண்ணயர்ந்தேன்
அப்படியே உறங்கியும் விட்டேன். இப்பொழுது நமது
மன்றத்தை புது பொழிவுடன் பார்க்கும் பொழுது
மனம் குதுகலிக்கரது வாழ்த்துக்கள் தலைவரே,

உங்களது இச்சேவை தொடர வாழ்த்துக்கள்

மனோ.ஜி

leomohan
23-10-2007, 10:19 AM
புதிய வடிவில் மன்றம் ஜொலிக்கிறது. வாழ்த்துக்கள். பாரதியார் படம் சற்று ரெசொல்யூஷன் குறைவாக வருகிறதே.

அறிஞர்
23-10-2007, 10:28 AM
புதிய வடிவில் மன்றம் ஜொலிக்கிறது. வாழ்த்துக்கள். பாரதியார் படம் சற்று ரெசொல்யூஷன் குறைவாக வருகிறதே.

இது தற்காலிகம் தான்.. புதிய படங்கள் தயாராகிக்கொண்டு இருக்கிறது.

மன்மதன்
24-10-2007, 06:04 PM
மன்றம் நன்றாக இருக்கிறது. அவ்வப்போது இது மாதிரியான மாற்றங்கள் கண்டிப்பாக தேவை..

leomohan
25-10-2007, 04:30 AM
புதிய தீம் இருந்தால் நன்றாக இருக்கும். இருப்பினும் இந்த நீல வெள்ளை தீம் சிறந்த தீம் என்பதில் சந்தேகம் இல்லை.