PDA

View Full Version : சொல்வாயோ....!



வசீகரன்
21-10-2007, 07:31 AM
http://img40.picoodle.com/img/img40/9/7/11/f_Icraveforyom_7acefcd.jpg
வைகறைப்பொழுதினில்....தென்றலை...கூட்டிக்கொண்டு
தெருவோரம்....நடக்கும்போதும்...

வண்ணங்களில் வாயில் நிறைத்திருக்கும் வடிவழகில் கோலங்களை
காணும்போதும்....

கொலுசோலிகள் சப்திக்க...கோலமயிலாய் கோலமிட்டபடி
இருக்கும் நங்கயர்களை காணும்பொழுதும்.....

அன்றலர்ந்து......அழகாக வீற்றிருக்கும் அடைமலர்களை காணும்போதும்

ஆழ்ந்தஅமைதியை கண்களில் கொண்டு ஆலயம்
வீற்றிருக்கும்... அகிலநாயகனை காணும்போதும்....

ஆரவாரங்களற்ற..அண்டத்தில் அமைதிப்பயணம் ஆட்கொண்ட அற்றைத்திங்கள்
காணும்போதும்...!

மழைநேர மாலைகளில்....மனதோரசோலைகளில்.....
மலர்களாய்.....மாறிட்ட மனங்களில்
மழலையாய் ஆகிட்ட கணங்களில்...
இருகைகள் விரித்து...
திவலைகளில் உடல் நனைத்து உலகை மறந்த ஷனங்களாய்
நான் இருந்தபோதெல்லாம் .....!

என் ஜன்னலோர பயணங்களில்...
கடந்து செல்லும் பொதியமர்ந்த பொழில்களை
காணும்போதெல்லாம்

காதல் பக்கங்களை நான் கடந்த போதெல்லாம்....

கவிதைகளாக நான் கழிந்த பொழுதெல்லாம்....

என் அழகான நேரங்களில் எல்லாம்...
எப்படித்தான் எங்கிருந்துதான் நீ வந்து விடுகிறாயோ....!

மனதோரம் வந்து நினைவோரம் நீந்தி....
இதழ் கடையோரம்... புன்னகையாக.... வெளிப்படுகிறாயோ...!

சுகந்தப்ரீதன்
21-10-2007, 09:32 AM
அழகான கவிதை வசிகரரே... தேர்ந்தெடுத்த வார்தைகள் கொண்டு தொடுத்த பூமாலையாய் உங்களின் கவிதை வரிகள்.. மென்மெலும் படைக்க எனது வாழ்த்துக்கள்..!

வசீகரன்
22-10-2007, 04:33 AM
மிக்க நன்றிகள் சுகந்தரரே....!பாராட்டியமைக்கு...

வசீகரன்

வசீகரன்
22-10-2007, 01:40 PM
இந்த கவிதைக்கு மன்ற நண்பர்களிடமிருந்து நிறைய விமர்சனங்களை
எதிர்பார்த்திருந்தேன்....! நண்பர்கள்... ஏனோ
கண்டுகொள்ளவில்லை....! வருத்தமளிக்கிறது....!

யவனிகா
22-10-2007, 03:13 PM
நல்ல கவிதை. எப்போதும் காதலி நினைவாகவே இருக்கிறீர் போல,மனதில் காதல் வந்தால் எல்லா மணித்துளிகளும் அழகுதான், நினைவுகளில் அவளிருந்தால் நின்ற இடத்திலே கனவுதான்...தொடருங்கள், வாழ்த்துக்கள்.

அமரன்
24-10-2007, 06:43 PM
இந்த கவிதைக்கு மன்ற நண்பர்களிடமிருந்து நிறைய விமர்சனங்களை
எதிர்பார்த்திருந்தேன்....! நண்பர்கள்... ஏனோ
கண்டுகொள்ளவில்லை....! வருத்தமளிக்கிறது....!
பல்வேறு சுமைகள் படிக்கும் காலத்தை அமத்த..
கிடைத்த காலத்தில் படித்து பதிலிட முடியாத..
நிர்ப்பந்தச் சுழலில் பலர் சிக்கியதால்
கண்டுகொள்ளப்படாதது போன்ற மாயை...
வசிகரனின் கவிகளை வாசிப்பவர்களுக்கு பஞ்சமே இல்லை..

யாழ்_அகத்தியன்
25-10-2007, 11:31 AM
வாழ்த்துக்கள் தொடர்ந்தும் எழுதுங்கள்

அமரன்
25-10-2007, 12:45 PM
ஒடுங்(க்)கிய பாதையில்
ஒற்றையில் ஒரு பயணம்..!

பாதையின் கரைகளில்
பார்வை படரும் இடமெல்லாம்
பேதையின் சாயல் சிரிக்க..

போதையை நினைத்து
அரும்பும் ஒரு புன்னகைப்பூ...
கடிபடக் கடினமான கற்கண்டு..
தொடர்ந்து வளம் பெறுங்கள்.

வசீகரன்
26-10-2007, 02:16 PM
என் கவிகளுக்கு மறக்காமல் பின்னூட்டமிடும் அமரர் எங்கே
காணவில்லை...? எண்ணியிருந்தேன்..... தாமதித்தாலும் தளராமல்
வந்து என் கவிக்கு பின்னூட்டம் இட்டது கண்டு மகிழ்ந்தேன்

நன்றி அமரரே...

.....
வசீகரன்
புன்னகை என்னும் பொன்னகை அணிவோம்....
புதுமலர் புணர்ந்திடும் அழகினை கொள்வோம்...
பூக்களாய் மலர்ந்து பூவியை நிரப்புவோம்