PDA

View Full Version : வீட்டைத் தேடி வரும் வங்கி!



mgandhi
20-10-2007, 07:00 PM
வீட்டைத் தேடி வரும் வங்கி!


இந்தியாவின் பெரிய தனியார் துறை வங்கியான ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி வாடிக்கையாளர்களின் வீட்டை தேடிச் சென்று வங்கிச் சேவைகளை அளிக்கும் திட்டத்தை இன்று அறிமுகப்படுத்தி உள்ளது.

பாங்க் அட் ஹோம் என்று அழைக்கப்படும் இந்த திட்டத்தின் கீழ் சேமிப்பு கணக்கு நடப்பு கணக்கு வைத்துள்ள வங்கியாளர்கள் பயன் பெறலாம்.

இனணயத் தளம் அல்லது தொலை பேசி மூலமாக வங்கியை தொடர்பு கொள்ள வேண்டும். வாடிக்கையாளர்கள் ரொக்க பணம், காசோலை, வரைவோலை, பே-ஆர்டர் போன்றவற்றில் தங்களுக்கு தேவையானதை கூறினால் போதும். வங்கி உழியரே அவர்களின் வீட்டை தேடி வந்து கொடுப்பார்.

இதே போல் காசோலை, வரைவோலை, ரொக்கம் போன்றவர்களையும் வங்கியல் செலுத்த இணையம் அல்லது தொலைபேசி மூலம் வங்கிக்கு தகவல் தெரிவித்தால் போதும் வங்கி அதிகாரி வீட்டை தேடி வந்து வாங்கிக் கொள்வார். இந்த சேவை 28 நகரங்களில் உள்ள 294 கிளைகள் மூலம் வழங்கப்படும்.

இது குறித்து வங்கியின் ரீடெய்ல் லயாபிலிட்டி பிரிவின் தலைமை அதிகாரி மகேந்தர் ஜூனிஜா கூறுகையில், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு அதிகளவு சேவைகளை தொடர்ந்து வழங்கி வருகிறது. பாங்க் அட் ஹோம் முறையில் வாடிக்கையாளர்கள் தங்களின் இருப்பிடத்தில் இருந்த படியே ரொக்கம், காசோலை போன்ற சேவைகளை பெறலாம் என்று தெரிவித்தார்.

தங்கவேல்
20-10-2007, 08:00 PM
பார்த்து ஏதாவது மறைமுக கட்டணம் போட போகின்றார்கள். எனது ஊரில் இந்த வங்கி புதிதாக ஆரம்பித்தபோது, குறைந்தது 100 பேரையாவது சேர்த்து விட்டுருப்பேன். ஏடிஎம்மில் பணம் எடுக்க கூட காசு பிடித்தார்கள் பாருங்கள், அதிலிருந்து ஒரு கும்பிடு போட்டு விட்டேன்.

aren
21-10-2007, 02:13 AM
நான் சிறுவனாக இருந்தபொழுது பாங்க் ஆஃப் தமிழ்நாடு இதே மாதிரியான முறையை அறிமுகப்படுத்தியது. ஆனால் அதில் பணம் வங்கியிலிருந்து எடுக்கமுடியாது, பணம் மட்டுமே செலுத்தமுடியும். தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வங்கியிலிருந்து ஆள் வருவார் அவரிடம் பணத்தைக் கொடுத்தால் அவர் வங்கி கணக்கு புத்தகத்தில் வரவு வைத்துக்கொள்வார். இதன்மூலம் சிறு வியாபாரிகள் பலர் பயனடைந்தார்கள்.

இப்பொழுது இருக்கும் போட்டியினால் வங்கிகள் பல புதுமாதிரியான முயற்சிகளை கையாள்கிறார்கள். இது ஒரு நல்ல வளர்ச்சியே.

ஓவியன்
21-10-2007, 02:24 AM
இப்போது "ஒன்லைன் பாங்கிங்" மூலம் காசோலை, ரொக்கம் எல்லாம் அருகிப் போகின்றனவே....

இணையம் மூலம் இருந்த இடத்திலே இருந்து கொண்டே எல்லாமே செய்யலாமே, ஒருவரையும் நாட வேண்டியதில்லையே....

மாதவர்
22-10-2007, 02:11 AM
வாடிக்கையாளர் முகவரியே இப்பொழுதெல்லாம் கேள்விக்குறி
வங்கிகள், அலைபேசிகள் நேரடி தொடர்பு இனி அவசியமே

ஜெயாஸ்தா
22-10-2007, 02:18 AM
இந்த வங்கியும் இதைப்போன்ற வங்கிகளும் வீட்டிற்கேவந்து செய்யும் 'நேர(அ)டிச்' சேவைகள்தான் ஏற்கெனவே மக்களுக்குத் தெரியுமே....!