PDA

View Full Version : செவ்வாய்க்கிழமை−சரியா?தவறா?



யவனிகா
20-10-2007, 06:41 PM
இரண்டு வார்த்தைகளை இணைக்கும் போது எந்த இடத்தில் ஒற்று வர வேண்டும்?அதற்கு விதிகள் உண்டா?

செவ்வாய் கிழமை, செவ்வாய்க்கிழமை. எது சரி?

மெய் எழுத்துகளின் பக்கத்தில் ஒற்று வராதெனில் வாய்ச்சொல், செய்ந்நன்றி என்பவை சரியா?

தங்கவேல்
20-10-2007, 07:38 PM
க ச ட த ப ற எழுத்துகளுக்கு முன்னாள் ஒற்று வறாது என்று படித்த நினைவு ... சரியா தவறா... ? தெரியவில்லை

suraj
22-10-2007, 01:32 PM
ஆம் நண்பரே விதிகள் பல உண்டு.
இந்த விதிகளை " புணர்ச்சி விதிகள்" எனக் கூறுவர்.
நான் +1 -ல் படித்த சில. உங்கள் கேள்விக்கான பதில் சரியாக எனக்கும் தெரியாது.இன்னும் பல விதிகள் உண்டு.. இங்கே சில.
http://i83.photobucket.com/albums/j313/suraj_pic/s027.jpg
http://i83.photobucket.com/albums/j313/suraj_pic/s028.jpg

நன்றி. மேலும் விபரம் தர முயற்ச்சிக்கிறேன்.

யவனிகா
22-10-2007, 01:59 PM
நன்றி நண்பரே...விதிகளை சிரமம் பாராமல் அளித்தமைக்கு...

பூமகள்
22-10-2007, 02:47 PM
நல்ல கேள்வி யவனி அக்கா..!!
எனக்கு இங்கு தான் குழப்பம் வரும் அடிக்கடி!!
இனி பிரச்சனை இல்லை.
விளக்கம் அளித்த சகோதரர்கள் தங்கவேல் மற்றும் சூரஜ்க்கு நன்றிகள்..!!

சாம்பவி
28-10-2007, 07:13 PM
க ச ட த ப ற எழுத்துகளுக்கு முன்னாள் ஒற்று வறாது என்று படித்த நினைவு ... சரியா தவறா... ? தெரியவில்லை


கெட்டது போங்க... இப்படி கதையையே மாத்தி போட்டு போயிட்டீங்களே... !

ஒற்று மிகுந்து உழலுவதே....
வல்லினத்தில் தானே... !

அகத்தியரில் இருந்து
தொல்காப்பியம் வழி வந்து
பவணந்தி முனி வரைக்கும்
அதைத் தானே சொல்கிறார்கள்.. !


வாய்ச் சொல்லே ஆனாலும்
இலக்கணம் உண்டு... !

செய் நன்றி கொன்றார்க்கு
அது இல்லை.. !


இலக்கணத்தில் விளக்கை ஏற்ற
செவ்வாய்க் கிழமையே தகும்..!

;)


.

கஜினி
29-10-2007, 05:35 AM
நல்ல விளக்கம் சூரஜ் அவர்களே நன்றி.

பாரதி
29-10-2007, 02:25 PM
ஒற்று மிகுந்து உழலுவதே....
வல்லினத்தில் தானே... !

அகத்தியரில் இருந்து
தொல்காப்பியம் வழி வந்து
பவணந்தி முனி வரைக்கும்
அதைத் தானே சொல்கிறார்கள்.. !


வாய்ச் சொல்லே ஆனாலும்
இலக்கணம் உண்டு... !

செய் நன்றி கொன்றார்க்கு
அது இல்லை.. !

இலக்கணத்தில் விளக்கை ஏற்ற
செவ்வாய்க் கிழமையே தகும்..!
;)

.

மிக்க நன்றி சாம்பவி. சந்தேகத்திற்கு இடமின்றி பிழை நீக்கும் பணிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

ஓவியன்
29-10-2007, 02:29 PM
உண்மைதான் பாரதி அண்ணா!!!

தமிழ் பற்றிய பிரச்சினைகள் வருமிடத்து அண்மைக் காலங்களிலே மன்றில் சாம்பவி ஆற்றி வரும் பங்கு மகத்தானது.

சாம்பவி உங்கள் பணிக்கு என் நன்றி அறிதலைத் தெரிவிக்கும் அதே வேளை உங்கள் பணி மேன் மேலும் சிறக்க என் வாழ்த்துக்கள். :)

யவனிகா
29-10-2007, 03:19 PM
நன்றி சாம்பவி...உங்கள் பதிலைப் படிக்கும் முன்னே ஊருக்கு அம்மாக்கு போன் போட்டு திட்டும், கொட்டும் வாங்கியபடி விடையையும் வாங்கிக் கொண்டேன்.

சௌதியில் என் மகன் படிக்கும் பள்ளியில் இப்போதுதான் தமிழ் எடுக்கத் துவங்கி இருக்கிறார்கள்.என் தோழி தான் தற்சமயம் தமிழ் எடுத்து வருகிறார்.அவர் தமிழ் மேஜர் அல்லல்.அவர் தமிழைப் பிழையின்றி பிள்ளைகளுக்குக் கற்றுத்தர வேண்டும் என்று விரும்புவதால்,சின்ன சின்ன விசயங்களில் கூட கவனமெடுத்து பயிற்சித் தாள்கள் அமைக்கிறார், அப்போது அவருக்கு வந்த சந்தேகம் தான் இது. சூரஜ் அளித்த விதிகளை மேற்கோள் காட்டி அவருக்கு விளக்கி விட்டேன். நீங்களும் பதில் அளித்தமைக்கு நன்றி தோழியே.