PDA

View Full Version : என் முதல் கிறுக்கல்

kavingan
03-04-2003, 08:13 AM
அனைவருக்கும் என் அன்பான வணக்கங்கள்.

என் நுழைவு பெயரை (login name) பார்த்த்து என்னை பெரிய கவிஞன் என்று யாரும் நினைத்துவிட வேண்டாம். நான் கவிஞனாக ஆசைப்பட்டேன். ஆனால் இன்று கணிப்பொறி வல்லுனராக உள்ளேன்.

இந்த மன்றத்திலாவது எதையாவது கிறுக்கி, அது கவிதை என்று நான்கு பேர் சொல்ல மாட்டார்களா, என்ற நப்பாசையில் நுழைந்து இருக்கிறேன். பார்க்கலாம்.....

இந்த புதிய முயற்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

மீண்டும் சந்திப்போம்.

Narathar
03-04-2003, 09:33 AM
என்னே ஒரு தன்னடக்கம்......
என்னே ஒரு தன்னடக்கம்......
இங்கிருப்பவர்கள் என்ன அரசவைக்கவிகளா? (நாராயனா!!!!) இல்லை
உங்களைப்போல பல்வேறுபட்ட தொழில் பார்ப்பவர்கள்தான்!!!
ஆனால் அவர்களை இத்தமிழ்மன்றம் உலகத்தமிழ் கவிகளாக மாற்றியிருக்கிறது
மாற்றிக்கொண்டிருக்கிறது............
அந்தப்பட்டியலில் நீங்களும் இணைந்து கொள்ளுங்கள்
வருக கவிஞா.... வந்து தமிழ் மன்றை ஒரு வழி பன்னுங்கள்....

rambal
03-04-2003, 09:44 AM
வாருங்கள் கவிஞனே...
என்னோடு சேரும் இன்னொரு கிறுக்கல் ஆசாமியா நீங்கள்?
வாருங்கள் கிறுக்குவோம் நிறைய..
நான் ஆரம்பித்துவிட்டேன்..
ஆரம்பியுங்கள் உங்கள் கிறுக்கலை..

இளசு
03-04-2003, 01:30 PM
கிறுக்கர்கள் கழக தலைவன் என்ற முறையில் உங்களை
வரவேற்பதில் அகமகிழ்கிறேன் கவிஞனே!
பெயரில்தான் இருக்கு சூட்சுமம்..
தட்சிணாமூர்த்தி
கணேசமூர்த்தி
ரங்கராஜன் *2
சின்னசாமி
முத்தையன்

இவர்கள் பெயர் மாற்றி கண்ட வெற்றிகள் ..அடடா..
நீ யாராக மாற ஆசைப்படுகிறாயோ.. அப்ப்டியே ஆக அன்னை அருளுவாள்!

madhuraikumaran
03-04-2003, 05:11 PM
வாங்கோ வாங்கோ கவிஞரே வாங்கோ ....
கவியள்ளித் தாங்கோ !!!

Narathar
04-04-2003, 10:35 AM
கிறுக்கர்கள் கழக தலைவன் என்ற முறையில் உங்களை
வரவேற்பதில் அகமகிழ்கிறேன் கவிஞனே!

சென்னை சாலைகளில் வழங்கிய பட்டத்தை அன்பர் மறக்கவில்லைபோலும்!!!

பெயரில்தான் இருக்கு சூட்சுமம்..
தட்சிணாமூர்த்தி
கணேசமூர்த்தி
ரங்கராஜன் *2
சின்னசாமி
முத்தையன்

இவர்கள் பெயர் மாற்றி கண்ட வெற்றிகள் ..அடடா..
நீ யாராக மாற ஆசைப்படுகிறாயோ.. அப்ப்டியே ஆக அன்னை அருளுவாள்

யாரு பண்டிட் சேதுராமன் ஜீ பெயர் மாற்றிவிட்டாரா??

aren
04-04-2003, 01:29 PM
அனைவருக்கும் என் அன்பான வணக்கங்கள்.

என் நுழைவு பெயரை (login name) பார்த்த்து என்னை பெரிய கவிஞன் என்று யாரும் நினைத்துவிட வேண்டாம். நான் கவிஞனாக ஆசைப்பட்டேன். ஆனால் இன்று கணிப்பொறி வல்லுனராக உள்ளேன்.

இந்த மன்றத்திலாவது எதையாவது கிறுக்கி, அது கவிதை என்று நான்கு பேர் சொல்ல மாட்டார்களா, என்ற நப்பாசையில் நுழைந்து இருக்கிறேன். பார்க்கலாம்.....

இந்த புதிய முயற்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

மீண்டும் சந்திப்போம்.

வாருங்கள் கவஞரே, உங்களை வருக வருக என்று வரவேற்கிறேன். உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

நீங்கள் உங்கள் கவிதைகளை எழுதுங்கள் நாங்கள் படிப்பதற்கு தயாராக இருக்கிறோம். அதற்கு என் வாழ்த்துக்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

Dinesh
05-04-2003, 11:54 AM
பிறகென்ன கவிஞரே!
கிறுக்கல்கள் கழகதலைவரே உங்களை
வாழ்த்தி வரவேற்றுவிட்டார்..
ம்.. கலக்குங்கள்.

தினேஷ்.

poo
05-04-2003, 12:14 PM
கிறுக்கல்கள்.. உறுப்பினர் என்ற முறையில் உங்களை வரவேற்கிறேன்...

chezhian
06-04-2003, 08:49 PM
நண்பர் கவிஞன் அவர்களே
வருக வருக...
(பெரிய பெரிய கவிஞர்களெல்லாம் உங்களை வரவேற்று இருக்கிறார்கள்...)