PDA

View Full Version : சந்தேகம்



சூரியன்
20-10-2007, 07:33 AM
நண்பர்களே எனக்கு ஒரு சந்தேகம்..

ஒரு இனையதளத்தை உருவாக்க நமக்கு சொந்தமாக ஒரு டொமைன் நேம் வேண்டும்.

பிறகு நமக்கு தெரிந்தவரிடம் ஒரு இனைய தளம் உருவாக்கும் மென்பொருள்ளுளது.. அதில் நம்முடைய தளத்தை வடிவமைத்து
டொமைன் உடன் சேர்க்க வேண்டுமா?

suraj
20-10-2007, 09:56 AM
இல்லை நண்பரே.. நீங்கள் இணையதளம் வடிவமைத்ததை சேர்க்க வேண்டிய இடம் வேப் ஹோஸ்டிங் செர்வர் (Hosting Server).

டொமைன் உடன் சேர்க்க வேண்டியது nameserver (DNS). அதாவது hosting server-ன் IP.

நன்றி

சூரியன்
20-10-2007, 04:13 PM
இல்லை நண்பரே.. நீங்கள் இணையதளம் வடிவமைத்ததை சேர்க்க வேண்டிய இடம் வேப் ஹோஸ்டிங் செர்வர் (Hosting Server).

டொமைன் உடன் சேர்க்க வேண்டியது nameserver (DNS). அதாவது hosting server-ன் IP.

நன்றி

நண்பரே ஒரு இனையதளத்தை உருவாக்குவது பற்றி விரிவாக சொல்ல முடியுமா?

suraj
21-10-2007, 02:45 AM
சொல்கிறேன்.
இணையதளம் உருவாக்கும் எண்ணம் நமக்கு தோன்றியவுடன்
நேரக domain name(optional), Hosting Server வாங்கக் கூடாது.
நாம் இணையதள வடிவமைப்பை செய்து முடித்த பிறகே Hosting Server வாங்கவும்.

1. இணையதளத்தை வடிவமைக்கவும்.
வடிவமைக்க:
** HTML உபயோகப் படுத்தலாம். இது ரொம்ப எளிது..நம் தளத்திலே பாடம் உள்ளது.
** Server Side Script
அதாவது jsp,asp(துட்டு செலவாகும்),php(இலவசம்), இவற்றில் நீங்கள் வடிவமைத்தால் பாதுகாப்பு மற்றும் பல அதிசயத்தக்க வசதிகளை பெறலாம்.
ஏன் நம் தளம் போலவே வடிவமைக்கலாம்.

2.Domain Name
** நீங்கள் டொமைன் ரெஜிஸ்ட்டாரிடம் இருந்து வாங்க வேண்டும் (.com ,.org, .net, .in ..........)
** கிட்டத்தட்ட 300-400 ரூ தான்.

3.Hosting Server:
நமக்கு அதிகம் செலவாகுவது இதில் தான்.
இரண்டு வகையுள்ளது.
அ. விண்டோஸ் செர்வர் (asp இணையதளத்திற்கு) - அதிகம் செலவாகும்
ஆ. லினெக்ஸ் செர்வர் (php இணையதளத்திற்கு) - சற்று குறைவு

-----------------------------------------------------------------
நீங்கள் server side ஸ்கிரிப்ட் உபயோகப் படுத்தி வடிவமைக்க நினைத்தால்
உங்கள் கணிப்பொறியை செர்வராக மாற்றி தான் செய்ய முடியும்.

asp -IIS
php -லினக்ஸ் CENT OS, நீங்கள் விண்டோஸ் உபயோகிப்பராக இருந்தால் XAMPP மென்பொருளை முயற்சிக்கவும்,
----------------------------------------------------------------
-----------------------------------------------------------------
தற்போது domain, server வாங்கிவிட்டீர்.

1. நீங்கள் செய்யவேண்டியது டொமைன் நெம் control panel-ல்
உங்கள் செர்வரின் IP யை உள்ளிடுங்கள். இதை nameserver என கூறுவார்கள்.
எ.கா:
இது ns1.ilovetamil.com என இருக்கும். உண்மையில் இது IP address of the server(74.86.120.180).

2.நீங்கள் வடிவமைத்த இணைய தளத்தை FTP அல்லது server CP(சில கண்டுரூல் பனெல் தான் ஆதரிக்கும்) மூலம்
செர்வரில் பதிவேற்றவும்.
மென்பொருள்: FIleZilla, cuteFTP உபயோகப்படுத்துவது சிறந்தது.

3.உங்கள் இணையதளம் தற்போது திறக்கும் உங்கள் வடிவமைப்புடன்.

நன்றி.

ஓவியன்
21-10-2007, 03:01 AM
நன்றி சுரஜ்!

பலருக்கும் உபயோகமாக அமையும், இப்படி உங்கள் துறைகள் சம்மந்தமான விடயங்களை இங்கே தனித் திரிகளாக பகிர்ந்து கொள்ளலாமே, பலருக்கும் உபயோகமாக இருக்கும். :)

suraj
21-10-2007, 01:12 PM
இந்த செம் விடுமுறையில் .எனக்கு தெரிந்த அருமையான தகவல்களை தொகுத்து தருகிறேன்.

ஆகவே சிறிது பொறுத்தருளவும்.
நன்றி

ஜெயாஸ்தா
22-10-2007, 04:33 AM
உபயோகமான தகவல்களுக்கு நன்றி சுராஜ். ஓவியன் சொன்னது போல் இன்னும் விரிவாக தனித்திரியாக கொடுத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

சூரியன்
22-10-2007, 06:40 AM
நன்றி நண்பர் சுராஜ் அவர்களே..