PDA

View Full Version : பூவின் குறும்பாககுண்டாகலாம் வாங்க! - 2

பூமகள்
19-10-2007, 04:31 PM
அன்பு மன்ற உறவுகளே....!!

எனது பூவின் குறும்பாக குண்டாகலாம் வாங்க! - பாகம் 1 (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=12636) திரியை படித்து அதனை மாபெரும் வெற்றித் திரியாக ஆக்கியோருக்கு எனது நன்றி கலந்த வணக்கங்கள்...!!:icon_03: :icon_clap:
அந்த திரியின் மூலம் பலரும் பலப்பல அறிய பலன்களை அடைந்து என்னை மேலும் ஊக்குவித்ததால்... இன்னும் பலர் குண்டாகி நலம்பெறட்டும் என்ற எண்ணத்தில் ஆரம்பிக்கப்பட்டதே இந்த பகுதி மறுபடியும் உங்களுக்காகவே....!:082502now_prv:

பூவின் குறும்பாக குண்டாகலாம் வாங்க...!! - இரண்டாவது முறையாக..!

முதல் பகுதியை பலமுறைப் படித்து படித்து பார்த்தும் குண்டாகாதவர்களுக்காகவே விசேசமாக வெளிநாடுகளிலிருந்து புத்தகங்கள் வரவழைத்து படித்து தயாரிக்கப்பட்டதே இந்த இரண்டாவது பாகம்.
தமிழ் மன்ற மக்களால் அமோக ஆதரவைப் பெற்று எல்லாராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட "பூவின் குறுப்பாக குண்டாகலாம் வாங்க...!! பாகம் 2" இன்று வெளியிடுவதில் பூவிற்கு மட்டற்ற ஆனந்தம்...!!:080402gudl_prv: :D:D:D:D:D

இந்த பகுதிக்கு வருபவர்கள் எல்லாரும் முதலிலேயே இ-பணங்களை எனது கணக்கிற்கு காணிக்கை ஆக்கினால் தான் தாங்கள் குண்டாவீர்கள் என்று 100% உத்தரவாதம் அளிக்கப்படும். அதற்காக பணம் கொடுக்காமல் படித்துச் சென்றால்... அவர்களுக்கு 0% கூட குண்டாக வாய்ப்பில்லை என்று திட்டவட்டமாக எமது ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன...!!:sport-smiley-018:

சரி... முக்கியமான விசயத்துக்கு வருகிறேன். :music-smiley-012:
இனி இ-பணம் கொடுத்து என்னை வாழ்த்திய அன்பு குச்சி குச்சி ராக்கம்மாக்களுக்காகவும், ராக்கையாக்களுக்காகவும்...எனது டிப்ஸ்கள் இதோ.....!!:icon_wink1:

1. முதலிலேயே சொன்னது போல், நீங்க எப்பவும் அழகா "சத்தம் போடாதே" ஹீரோ ப்ரிதிவி ராஜ் மாதிரி இருக்கனுமா...?? தினமும்... நிறைய ஃப்ரஸ் பழங்கள் சாப்பிடுங்க..!!
அப்புறம்... பாருங்க.....!! உங்க உடம்பே ... 10 வயசு குறைஞ்ச மாதிரி சும்மா சூப்பரா யங்கா இருப்பீங்க...!! :nature-smiley-002:

http://img37.picoodle.com/img/img37/6/10/19/poomagal/f_ftcollect19m_36b2a81.jpg

2. அடுத்தவங்களுக்கு 'ஐஸ்' வச்சே பழக்கப்பட்ட நீங்க, அடிக்கடி உங்களுக்குன்னும் 'ஐஸ்' சொந்த செலவில் வாங்கி சாப்பிடுங்கன்னு சொல்ல வந்தேன். எம்புட்டு பாசம் பூவுக்குன்னு நீங்க கண்ணு கலங்கறது தெரியுது.... :aetsch013: ஆங்..................... இந்த 'ஐஸ்' எல்லாம் என்கிட்ட பலிக்காது. நீங்க உங்க காசுல தான் 'ஐஸ்' வாங்கி சாப்பிடனும்.. அப்போ தான் எடை கூடும்... இல்லாட்டி... உங்க எலும்பு எண்ணிக்கை டபுளா ஆகும்... அது என் ஆட்டோ ராசாக்களின் கைப்பக்குவம்....!! :D:D:D:D:nature-smiley-002:

http://img40.picoodle.com/img/img40/6/10/19/poomagal/f_ftcollect19m_be2ed7d.jpg

3. பழைய சூன்யகாரி கதையெல்லாம் கண்ண முழிச்சி படிச்சிட்டு.... பரங்கிக்கா கண்ண முழிச்சி பேசுற மாதிரியும்... சிரிக்கிற மாதிரியும் கனவு கண்டுட்டு... வீட்டில வாங்கி வச்சிருக்கிற பரங்கிக்காயை செதுக்கி கண்ணு வாயி மூக்குன்னு வரைஞ்சி பரங்கிக்காயை நம்ப 'கொண்டாட்டம்' புகழ் S. ராஜா அண்ணாவின் முகம் மாதிரி ஆக்கி வச்சிட்டு.... 'ஏன் பரங்கிக்காய் பேச மாட்டீங்குதுன்னு??' மலங்க மலங்க விழிக்காம..... பரங்கிக்காயை நறுக்கி... கூட்டு செஞ்சு சாப்பிட்டா...... ஆஹா.. இனிக்க இனிக்க நீங்களும் இனிப்பா குண்டாகிடுவீங்க...!!:nature-smiley-002:

http://img36.picoodle.com/img/img36/6/10/19/poomagal/f_ftcollect19m_bd97d46.jpg

4. வீட்டில உங்க ஆத்துக்காரிகிட்ட சப்பாத்தி கட்டையால அடிவாங்கிட்டே அழுத்திட்டு.... சமயம் பார்த்து அடிக்கு பயந்து சப்பாத்திக்கட்டையை ஒளிச்சி வச்சிருப்பீங்க...!!;) :D:D அப்பனா... அதை முதல்ல வெளியே எடுத்து வாரத்துக்கு 4 நாளு சப்பாத்தி தேச்சி.... (அட உங்க கையால தாங்க) 10 சப்பாத்தி அசராம சாப்பிட்டுட்டு வந்தீங்கன்னா... அப்புறம்...நீங்க சப்பாத்திக் கட்டைய பார்த்து பயப்படவேண்டியதில்ல... அந்த சப்பாத்தி கட்ட உங்க உடம்ப பார்த்து ஓடி ஒளிஞ்சிக்கும்...!!:nature-smiley-002:

http://img26.picoodle.com/img/img26/6/10/19/poomagal/f_ftcollect19m_c695d04.jpg

5. குச்சில சொருகி.... கோழியை ஃப்ரை பண்ணுவாங்களே... கடையில... அது மாதிரி... நீங்களும் வெண்ணை, சீஸ் பன்னு எல்லாம் வச்சி... ப்ரை பண்ணி நல்லா காலையில ஒரு வெட்டு வெட்டனும்... (அட... நல்லா சாப்பிடுங்கன்னு சொன்னேங்க...) பக்கதுல சாப்பிட்டுட்டு இருக்குறவர வெட்டிப்புடாதீங்க..... :D:D அப்புறம்... பாருங்க.... சும்மா,..... புட்டு புட்டுன்னு ஆகிடுவீங்க...!!:nature-smiley-002:

http://img26.picoodle.com/img/img26/6/10/19/poomagal/f_ftcollect19m_90f8c6f.jpg

6. "'பூண்டு' சாப்பிட்டா நூறு வருசம் உயிரோட வாழலாம்" என்பது எல்லா மருத்துவர்களும் ஒப்புகிட்டது(அப்படின்னு நினைக்கிறேனுங்க... சண்டைக்கு கீது வந்துறாதீங்க...!!). 'மொழி' படத்துல ப்ரகாஷ் ராஜ் சொன்ன மாதிரி... "வாழ்க்கையில் சில விசயங்களை வெள்ளப்பூண்டால கூட காப்பாத முடியாது" அப்படிங்கறதும்(பூவு முதல்ல உன்னை காப்பாத்திக்கோன்னு நீங்க சொல்றது கேக்குது..!! :D:D) உண்மை தான். அதனால.... ரொம்ப செண்டிமெண்டா... ஃபீல் பண்ணாம நிறைய பூண்டு உணவுல சேர்த்துக்கோங்க... உங்க ரொம்ப ஆரோக்கியமா இருக்கும்.. அப்புறம்... பாருங்க.... 'ஆர்னால்ட்' எல்லாம் அந்த பக்கம் நிக்கனும்.. உங்க முன்னாடி...!!:nature-smiley-002:

http://img02.picoodle.com/img/img02/6/10/19/poomagal/f_ftcollect19m_1abb0b9.jpg

7. பீஸா மேல இருக்கிற நட்ஸ்-ஐ(அதாங்க... பாதாம் பாதிரி கொட்டைகள்..) மட்டும் பொருக்கி எடுத்து சாப்பிட்டுட்டு பீஸாவ அப்படியே வைக்காம... பீஸாவ முழுசா நல்லா சாப்பிடுங்க... பீப்பா மாதிரி ஆகாட்டியும்... அழகா புஃவ்னு ஆயிடுவீங்க...!!:nature-smiley-002:

http://img26.picoodle.com/img/img26/6/10/19/poomagal/f_ftcollect19m_9d848ab.jpg

8. ப்ரட் ஆம்லட் மாதிரி பன் ஆம்லட்ட வாங்கிட்டு... 'பன்னுக்குள்ள எப்படி கோழி வந்து ஆம்லட் போட்டுதுன்னு?' சாப்பிடாம உட்காந்து யோசிச்சிட்டு இருக்காம..... முழுசா.... 4 மன் ஆம்லட் பட்டர் வச்சி... ப்ராசஸ்ட்டு சீஸ் வச்சி சாப்பிட்டீங்கன்னா... அப்புறம்.. உங்க வீட்டு வாசலை இடிச்சி பெரிசாக்கவேண்டியிருக்கும்னா பார்த்துக்கோங்களே......!! கவனமா சாப்பிடுங்க...!!:nature-smiley-002:

http://img36.picoodle.com/img/img36/6/10/19/poomagal/f_ftcollect19m_ce5096e.jpg

9. எப்போதும் இரவு உணவு சாப்பிட்டுட்டு விட்டு... அப்படியே குறட்டை போட்டு தூங்கிறாம... ஒரு கிளாஸ் பாலும் ஒரு வாழைப்பழமும் சாப்பிடுங்க..!நிம்மதியா தூங்குவீங்க.. கூடவே வைட்டமின் 'ஏ' மற்றும் 'சி' (அப்படின்னு நினைக்கிறேன்.. தப்புன்னா மன்னிச்சிருங்க.. மருத்துவர்களே..!!) வாழைப்பழத்தில் நிறைய இருக்காம்.. பாலும் பழமும் இரவுணவுக்கு பின்
மறக்காதீங்க... மறந்தீங்கண்ணா... நீங்க அப்புறம் குண்டாகறதையும் மறக்க வேண்டியது தான்..!!:nature-smiley-002:

http://img30.picoodle.com/img/img30/6/10/19/poomagal/f_ftcollect19m_b8bacfb.jpg

10. சரி... திவ்யமா சாப்பிட்டாச்சா??? பின்பு என்னங்க.... ஒரு நாளைக்கு 10 மணி நேரம் நல்லா நிம்மதியா தூங்குங்க... சரியான நேரத்துக்கு தூங்க போயிடுங்க... மூளை அதை பதிவு பண்ணி வச்சிக்குமாம்.. நீங்க அலாரம் வைக்காமலே காலையில் சீக்கிரம் எழும்பனுமா... கவலைய விடுங்க... தினமும் குறிப்பிட்ட நேரத்துக்கு உறங்க போயிடுங்க. தூங்கும் முன் காலையில் இத்தன மணிக்கு எழும்பனும்னு மனசுக்குள்ளே சொல்லிக்கோங்க... அப்புறம் பாருங்க..டான்னு... கரக்டா மூளை அலாரம் அடிச்சி.. உங்கள எழுப்பிவிட்டுடும்... நல்ல தூக்கம் நல்லா உடம்பு வாரதுக்கு ஒரு முக்கிய காரணம்னு பெரியவங்க சொல்லியிருக்காங்கங்க...!! (இப்படி சொல்லி பூ எஸ்கேப்...!!):nature-smiley-002:

http://img30.picoodle.com/img/img30/6/10/19/poomagal/f_ftcollect19m_46731e1.jpg

11. காலையில் அவ்வளவு சீக்கிரம் எழுந்து என்ன பண்றதுன்னு நீங்க கேட்பது கேக்குதுங்க.... இருங்க இருங்க.,..பூ இவ்வளவு சொல்லிருக்கு.. இதைச் சொல்லாதா??? அப்படியே சின்ன சின்ன உடற்பயிற்சி செய்யுங்க....!! கையை காலை நீட்டி... உங்க பள்ளிக் கூடத்துல பிடி மாஸ்டர் சொல்லிக் கொடுத்திருப்பாரே..அதை செய்யுங்க...! பார்த்து பக்கத்துல அசந்து தூங்கிட்டு இருக்கறவங்கள ஆர்வக்கோளாறில் உதைத்து உதை வாங்கினா அதுக்கு நா பொறுப்பில்லீங்க....!! இப்படி செஞ்சீங்கன்னா... நிறைய தானாவே சாப்பிடுவீங்க.. விளைவு... வெயிட் தானா போடுவீங்க...!!:nature-smiley-002:

http://img40.picoodle.com/img/img40/6/10/19/poomagal/f_ftcollect19m_996c574.jpg

12. அப்படியும் நேரம் இருக்கா.... அழகா உங்க தோட்டத்துல போயி நின்னு... நேத்து வாங்கிட்டு வந்திருக்க மரம்.. பூச்செடி நாத்துகள ஒன்னொன்னா குழி தோண்டி நட்டுங்க... ஆங்.. .என்ன முனுமுனுப்பு... ஓ... நீங்க ப்ளாட்ஸ்ல இருக்கீங்களா.. கவலைய விடுங்க..
உங்க பால்கனில... பெரிய தொட்டிகள் வாங்கி... அதுல செடிகள நட்டுங்க...!! (எப்படி பதில் சொன்னாலும் ஐடியா கொடுக்கிறா பாரு பூவுன்னு கோபப்படுறீங்களோ...?? எல்லாம் உங்க மேல இருக்க அக்கறை தாங்க..:D:D)
அப்புறம் பாருங்க.. உங்க உடம்பு சும்மா 'சல்மான் கான்' மாதிரி அழகா இல்லீனா... கேளுங்க...!!:nature-smiley-002:

http://img33.picoodle.com/img/img33/6/10/19/poomagal/f_ftcollect19m_f74d969.jpg

13. மரம் வெச்சவன் தான் தண்ணி விடனும்...!! நீங்க பாட்டுக்கு செடிய மட்டும் நட்டுட்டு.... அப்புறம் கண்டுக்காம விட்டுறாதீங்க... தினமும்.. உடற்பயிற்சி செய்துட்டு.. அப்படியே செடிகளுக்கு தண்ணியும் ஊத்துனீங்கன்னா... நீங்க குண்டாகிற மாதிரியே செடியும் குண்டாகி நல்லா வளர்ந்திடும்..!! அது பூவா பூத்து சிரிக்கும் பாருங்க...!! :icon_rollout: அப்போ உங்க கண்ணுல இந்த பூவு தெரிஞ்சா சரிதாங்க...!! :traurig001::nature-smiley-002:

http://img39.picoodle.com/img/img39/6/10/19/poomagal/f_ftcollect19m_ce12e26.jpg

14. காலையில எழுந்து வேக வேகமா கிளம்பி ஆபிஸ் போகனுமா... இருக்கவே இருக்கு நூடில்ஸ் னு எடுத்து 2 நிமிடத்துல உங்களுக்கு நீங்களே ஆப்பு வச்சிக்காதீங்க... !! நூடில்ஸ் அடிக்கடி சாப்பிடுவது நல்லதில்லன்னு பெரிய விஞ்ஞானிகள் கண்டுபிடிச்சி சொல்லியிருக்காங்கங்க... (இப்படித்தான் சொல்லி உங்ககிட்டயிருந்து தப்பிக்க முடியும்.. நான் சொன்னதா சொன்னா கேட்கவா போறீங்க??:icon_ush:)
அதனால கண்டிப்பா... வெறும் வயிற்றில் முளைக்க வச்ச தானியங்கள சாப்பிடுங்க..(பச்சைப்பயிறு, கொண்டைக்கடலை இப்படி..) அப்புறம்... நூடில்ஸ் சாப்பிடுவதை கூடுமானவரை அவாய்ட் பண்ணுங்க...!!
இப்போ.. உங்க உடம்பு மட்டுமில்லீங்க... இதயமும் பலமாகிடும்... சும்மா... சூப்பராயிடுவீங்க..!!:nature-smiley-002:

http://img28.picoodle.com/img/img28/6/10/19/poomagal/f_ftcollect19m_462e5f2.jpg

15. சரி.. இத்தனையும் கஸ்டப்பட்டு வேர்வை சிந்தி சொல்லிய இல்ல இல்ல எழுதிய பூவுக்கு இ-பணத்தோடு உங்க அன்பு வாழ்த்துகளையும் இங்கே சொல்லிட்டு போங்க...!!:nature-smiley-002:

http://img39.picoodle.com/img/img39/6/10/19/poomagal/f_ftcollect19m_4926038.jpg

நன்றி: எனக்கு இந்த படைப்பை எழுத படங்கள் பகிர்ந்து உதவிய மன்றத்து செல்லப்பூ, அன்புத்தங்கை மலருக்கு நன்றிகள்..!!

மலர்
19-10-2007, 04:40 PM
அக்கா உனக்கு நல்ல
அழகான கிரியேட்டிவ் மைண்ட்.....

சூப்பரா குடுத்துருக்க,,,,,,,,,
முதல்ல பிடி என்னோட வாழ்த்தையும் பாராட்டையும்.....

இந்த பகுதிக்கு வருபவர்கள் எல்லாரும் முதலிலேயே இ-பணங்களை எனது கணக்கிற்கு காணிக்கை ஆக்கினால் தான் தாங்கள் குண்டாவீர்கள் என்று 100% உத்தரவாதம் அளிக்கப்படும். அதற்காக பணம் கொடுக்காமல் படித்துச் சென்றால்... அவர்களுக்கு 0% கூட குண்டாக வாய்ப்பில்லை என்று திட்டவட்டமாக எமது ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன...!!

நம்ம மன்ற அண்ணாமார்கிட்ட எல்லாம் ரொம்ப இருக்கு....
இப்படித்தான் புத்திசாலிதனமா பிடுங்கணும் அக்கா..........

praveen
19-10-2007, 04:42 PM
நல்ல விசயம் தான், ஆனா இப்படி சொன்னா தான் எல்லோரும் படிப்பார்கள், ஆனால் பின்பற்றுவார்களான்னு தெரியலை. அப்படி பின்பற்றினா, எல்லோரும் இப்போது உடுத்தியிருக்கும் துணி பத்தாமால் புதிது வாங்க வேண்டியது தான்.

இதெல்லாம் சாப்பிட்டு அந்த அளவிற்கு உடல் உழைப்பு/இயலாதவர்கள் உடல்பயிற்சி செய்தால் ஆரோக்கியமாக இருக்கலாம்.

சொல்லவேண்டியதை கலர்புல்லா சொன்ன தங்கைக்கு ஒரு ஜே. அதற்கு உதவி செய்த தங்கைக்கு ஒரு ஜே.

ஓவியன்
19-10-2007, 04:46 PM
பூ, மலர்!

வர, வர இவங்க குறு, குறு குறும்பாலே மன்றமே களை கட்டுது...!!!:)

அசத்துங்க மாக்ஸ்...!!! :):):)

யவனிகா
19-10-2007, 06:10 PM
பூவு படங்களுடன் உன் அசத்தல் டிப்ஸும் படு கூல் தான். பிரிதிவி உன்னை ரொம்ம்பவே இம்ப்ரெஸ் பண்ணிட்டாரு போல...பாத்துமா ஏற்கனவே சந்தியாவும் மீரா ஜாஸ்மினும் சிண்டைப் புடிச்சு சண்டை போடறாங்கன்னு தகவல்...நீயோ ஒல்லிப் பிச்சான்..முதல்ல நீ இதெல்லாம் சாப்பிட்டு நல்லபடியா உடம்பு போடற வழியப் பாரு...
அருமையான படங்கள்...இதே போல சைனீஸ் செராமிக் டால்ஸ் இங்கே
சவுதியில் நிறைய இருக்கும்...இனி அதைப் பார்க்கும் போதெல்லாம் பூவோட ஞாபகம் தான் வரும்...தொடர்ந்து குண்டாக வாழ்த்தும்
யவனி அக்கா..

ஓவியன்
19-10-2007, 06:16 PM
பூவு படங்களுடன் உன் அசத்தல் டிப்ஸும் படு கூல் தான். பிரிதிவி உன்னை ரொம்ம்பவே இம்ப்ரெஸ் பண்ணிட்டாரு போல...

ஆமா அக்கா!, ஏற்கனவே பருவ நட்சத்திரங்கள் கதையிலும் ப்ருத்வி வருகிறார்.....!!! :D:D:D

நேசம்
19-10-2007, 06:21 PM
அப்படியே பூவின் குறும்பாக இளைக்கலாம் என்ற திரியை ஆரம்பிங்க சகோதரி(ரொம்ப புண்ணியமாக போகும்)

பூமகள்
19-10-2007, 06:25 PM
அக்கா உனக்கு நல்ல
அழகான கிரியேட்டிவ் மைண்ட்.....

சூப்பரா குடுத்துருக்க,,,,,,,,,
முதல்ல பிடி என்னோட வாழ்த்தையும் பாராட்டையும்.....
ரொம்ப நன்றிமா தங்கச்சி மலரு...!!

நம்ம மன்ற அண்ணாமார்கிட்ட எல்லாம் ரொம்ப இருக்கு....இப்படித்தான் புத்திசாலிதனமா பிடுங்கணும் அக்கா..........
யாருமே இன்னும் ஒரு பைசா கூட கொடுக்கலை மலரு...!! :traurig001:

பூமகள்
19-10-2007, 06:29 PM
இதெல்லாம் சாப்பிட்டு அந்த அளவிற்கு உடல் உழைப்பு/இயலாதவர்கள் உடல்பயிற்சி செய்தால் ஆரோக்கியமாக இருக்கலாம்.
சொல்லவேண்டியதை கலர்புல்லா சொன்ன தங்கைக்கு ஒரு ஜே. அதற்கு உதவி செய்த தங்கைக்கு ஒரு ஜே.
ரொம்ப நன்றிகள் ப்ரவீன் அண்ணா...!!:cool:
எங்கே உங்க இ-பண பரிசு அண்ணா?? :icon_rollout:

பூமகள்
19-10-2007, 06:40 PM
பிரிதிவி உன்னை ரொம்ம்பவே இம்ப்ரெஸ் பண்ணிட்டாரு போல...பாத்துமா ஏற்கனவே சந்தியாவும் மீரா ஜாஸ்மினும் சிண்டைப் புடிச்சு சண்டை போடறாங்கன்னு தகவல்...நீயோ ஒல்லிப் பிச்சான்..முதல்ல நீ இதெல்லாம் சாப்பிட்டு நல்லபடியா உடம்பு போடற வழியப் பாரு...
யவனி அக்கா... ப்ரித்வி எல்லாம் வாழ்க்கைக்கு ஒத்து வருமா?? அதெல்லாம்... சும்மா... அக்கா... பார்த்து ரசிச்சிட்டு போயிட்டே இருக்கனும்.. ஹி ஹி..!! சந்தியாவோ ஜாஸ்மினோ ஏதோ நல்லாயிருந்தா சரிதான் ப்ரித்வீ..!!:icon_shades::innocent0002:
என் ப்ரித்வி குதிரையில இல்ல வருவாரு...!! :icon_wink1::icon_blush:

அருமையான படங்கள்...இதே போல சைனீஸ் செராமிக் டால்ஸ் இங்கே சவுதியில் நிறைய இருக்கும்...இனி அதைப் பார்க்கும் போதெல்லாம் பூவோட ஞாபகம் தான் வரும்...தொடர்ந்து குண்டாக வாழ்த்தும்
யவனி அக்கா..
ரொம்ப சந்தோசமா இருக்கு யவனி அக்கா..!! அப்போ... அந்த சனீஸ் செராமிக் டால் மாதிரி பூ அழகா இருக்கேன்னு சொல்றீங்க..!!
சந்தோசமா இருக்கு அக்கா...!!

பூமகள்
19-10-2007, 06:41 PM
ஆமா அக்கா!, ஏற்கனவே பருவ நட்சத்திரங்கள் கதையிலும் ப்ருத்வி வருகிறார்.....!!! :D:D:D
அண்ணா.... யூ டூ...................????:traurig001:

பூமகள்
19-10-2007, 06:46 PM
அப்படியே பூவின் குறும்பாக இளைக்கலாம் என்ற திரியை ஆரம்பிங்க சகோதரி(ரொம்ப புண்ணியமாக போகும்)
நேசம்... நீங்க இந்த திரிக்கு அப்போ வந்திருக்க கூடாது.. ஹி ஹி..!! யவனி அக்காவின் ஜாலியா இளைக்கலாம் திரி பாருங்க..!!

என் ஐடியா நீங்க இளைக்கனும்னா,
இரண்டு நாளைக்கு ஒரு தடவை சாப்பிடுங்க...! தன்னால இளைச்சிருவீங்க..!!

(அடிக்க வரும் முன் பூ எஸ்கேப்.............!! :auto003:)

ஓவியன்
19-10-2007, 06:47 PM
அண்ணா.... யூ டூ...................????:traurig001:

ஏன் பூ நான் உங்களைக் கலாய்க்கக் கூடாதா...???:frown:

அறிஞர்
19-10-2007, 06:50 PM
அருமையோ அருமை... தொடரட்டும் உம் கல கலப்பான பதிவுகள்..

நேசம்
19-10-2007, 06:52 PM
இரண்டு நாளைக்கு ஒரு தடவை சாப்பிடுங்க...! தன்னால இளைச்சிருவீங்க..!!

(அடிக்க வரும் முன் பூ எஸ்கேப்.............!! :auto003:)

சாப்பாடுக்கு முன்பா ! பின்பா!!

ஓவியன்
19-10-2007, 06:57 PM
சாப்பாடுக்கு முன்பா ! பின்பா!!

கொஞ்சமா சாப்பாட்டுக்கு முன்னர் சாப்பிட்டு மீதமுள்ளதை பின்னர் சாப்பிட வேண்டும் இல்லையா பூமகள்...??? :)

பூமகள்
19-10-2007, 07:09 PM
கொஞ்சமா சாப்பாட்டுக்கு முன்னர் சாப்பிட்டு மீதமுள்ளதை பின்னர் சாப்பிட வேண்டும் இல்லையா பூமகள்...??? :)
அடடா... எனது பதிவைப் பார்த்து ஓவியன் அண்ணா ஓவியத்தை விட டிப்ஸ் வழங்குவதில் நன்றாகவே தேரிவிட்டார்....!! :icon_b:
ஓவியர் சொன்னது ரொம்ப சரி..!! :icon_rollout:
ஓவியர் சொன்னபடி தொடருங்கள் நேசம்...!! நல்லா......................... இளைப்பீங்கன்னு நினைச்சிட்டு குண்டாவீங்க..!!:rolleyes: :D:D

நேசம்
19-10-2007, 07:17 PM
நேசம்...!! நல்லா......................... இளைப்பீங்கன்னு நினைச்சிட்டு குண்டாவீங்க..!!:rolleyes: :D:D

தெரியாமல் கேட்டு புட்டேன் அம்மனி(உங்க ஊர் குசும்பு தெரியாமல்)
நான் எனக்காக கேட்கவில்லை.மத்தவங்களுக்காக கேட்டேன்.அவ்வளவுதான்

பூமகள்
19-10-2007, 07:28 PM
அருமையோ அருமை... தொடரட்டும் உம் கல கலப்பான பதிவுகள்..
நன்றிகள் அறிஞர் அண்ணா..!!
உங்களின் ஊக்கம் சந்தோசத்தைத் தருகிறது. இன்னும் அழகாய் படைக்கத் தூண்டுகிறது.
உங்க 2000 இபணமும் பதிவுக்கான விருதும் பார்த்து மட்டற்ற ஆனந்தம் அண்ணா..
மிகுந்த நன்றிகள்..!!!:icon_03:

ஏன் பூ நான் உங்களைக் கலாய்க்கக் கூடாதா...???:frown:
ஐயய்யோ...!! ஓவியன் அண்ணா..!
என் மன்றத்து முதலான வைர அண்ணாவே...!! உங்களுக்கு தான் கூடவே இருக்கு...உரிமை என்னை கலாய்க்க...!!
நான் உங்கள சும்மா சீண்டி செல்லமா அழுற மாதிரி நடிச்சேன்..! :D:D
நம்பிட்டீங்களா???? :icon_ush: :cool: :rolleyes: :D

தெரியாமல் கேட்டு புட்டேன் அம்மனி(உங்க ஊர் குசும்பு தெரியாமல்)
நான் எனக்காக கேட்கவில்லை.மத்தவங்களுக்காக கேட்டேன்.அவ்வளவுதான்
ஹைய்...........!!:sport-smiley-018: :huepfen024: :music-smiley-009: ஒருத்தர பூ பேசியே பயமுறித்திருச்சி...!!:4_1_8: :D:D

நேசம்
19-10-2007, 07:32 PM
ஒருத்தர பூ பேசியே பயமுறித்திருச்சி

அப்பாவியாக* இருக்கும் போது வேற* என்ன* செய்ய* முடியும்

பூமகள்
19-10-2007, 07:38 PM
அப்பாவியாக இருக்கும் போது வேற என்ன செய்ய முடியும்
என்ன....?? அப்போ... நீங்க 'பாவி'யா???
சரி சரி... சீக்கிரமா சரிபண்ணிரலாம்...!! ஆனால்... கொஞ்சம் ஐ-கேஷ் செலவாகுமே???:icon_ush: பரவாயில்லையா நேசம் அண்ணா??:D:D

மலர்
19-10-2007, 07:41 PM
பாவம்க்கா நேசம்...
இபணம் இருக்கிறதே கம்மி தான்.....

நீ அறிஞர விட்டுட்டு இப்படி
அப்பாவிய மிரட்டுறீயே....

நேசம்
19-10-2007, 07:44 PM
பாவம்க்கா நேசம்...
இபணம் இருக்கிறதே கம்மி தான்.....

நீ அறிஞர விட்டுட்டு இப்படி
அப்பாவிய மிரட்டுறீயே....

நியும் சில நேரத்தில் உண்மை பேசுறே. எழு எட்டு குழந்தைன்னு சந்தோஷமாக இருப்பே மலர்

பூமகள்
19-10-2007, 07:47 PM
பாவம்க்கா நேசம்...
இபணம் இருக்கிறதே கம்மி தான்.....
மலரு... இப்படி கால வாறிவிடுறியே..! வந்தவங்கல்லா..அவரு ஒருத்தர் தான்... ஏதோ ரொம்ப நேரம் இந்த திரியில இருந்து மாட்டினாரு.... அவர்கிட்ட இருந்தும் பணம் வாங்காட்டி...எப்படிடா??

நீ அறிஞர விட்டுட்டு இப்படி
அப்பாவிய மிரட்டுறீயே....
அவரை விடலையே.... அவரு ஏற்கனவே கொடுத்திட்டாரு... வள்ளல் மகாபிரபு அறிஞர் தெரியுமா...!!

மலர்
19-10-2007, 08:01 PM
அவரை விடலையே.... அவரு ஏற்கனவே கொடுத்திட்டாரு... வள்ளல் மகாபிரபு அறிஞர் தெரியுமா...!!

அறிஞர் அண்ணா கொடுத்தால் ஒரு ரூபாய் கொடுப்பாரே....
கொடுத்தாரே

நுரையீரல்
20-10-2007, 05:07 AM
யவனி அக்கா... ப்ரித்வி எல்லாம் வாழ்க்கைக்கு ஒத்து வருமா?? அதெல்லாம்... சும்மா... அக்கா... பார்த்து ரசிச்சிட்டு போயிட்டே இருக்கனும்..
இந்த அண்ணன்கிட்ட சொன்னா ப்ரித்வி என்னமா, டாம் குரூஸ் வேணா அடிச்சு தர, தரனு உனக்காக இழுத்துட்டு வரமாட்டேனா.

ஹி ஹி..!! சந்தியாவோ ஜாஸ்மினோ ஏதோ நல்லாயிருந்தா சரிதான் ப்ரித்வீ..!!:icon_shades::innocent0002:
சந்தியா, ஜாஸ்மிண் நல்லா இருக்காங்களோ என்னவோ... நீ இல்லாம ப்ரித்வீ நல்லா இருப்பான்... :icon_rollout: :icon_rollout:

என் ப்ரித்வி குதிரையில இல்ல வருவாரு...!! :icon_wink1::icon_blush:
நம்ம கொண்டாட்டம் புகழ் பாட்டா சுமோவில் (கழுதை வண்டி) வருவான்

பழைய சூன்யகாரி கதையெல்லாம் கண்ண முழிச்சி படிச்சிட்டு.... பரங்கிக்கா கண்ண முழிச்சி பேசுற மாதிரியும்... சிரிக்கிற மாதிரியும் கனவு கண்டுட்டு... வீட்டில வாங்கி வச்சிருக்கிற பரங்கிக்காயை செதுக்கி கண்ணு வாயி மூக்குன்னு வரைஞ்சி பரங்கிக்காயை நம்ப 'கொண்டாட்டம்' புகழ் S. ராஜா அண்ணாவின் முகம் மாதிரி ஆக்கி வச்சிட்டு.... 'ஏன் பரங்கிக்காய் பேச மாட்டீங்குதுன்னு??' மலங்க மலங்க விழிக்காம..... பரங்கிக்காயை நறுக்கி... கூட்டு செஞ்சு சாப்பிட்டா...... ஆஹா.. இனிக்க இனிக்க நீங்களும் இனிப்பா குண்டாகிடுவீங்க...!!
இது நீயா எழுதினதா இல்ல யாரோ உனக்கு PM அனுப்பி எழுதின மாதிரி தெரியுதே.
நல்ல விஷயங்கள் நிறைய சொல்லிருக்கம்மா பூவு.... படமெல்லாம் போட்டு அசத்துறதுக்கு ரொம்ப பொறுமை வேண்டும். கிரேட்...
தங்கச்சி மலரு (நூறு வயசு) வேற படம் கொடுத்து உதவி பண்ணிருக்கு. மலருக்கும் நாலு நன்றி, அப்புறம் உன்ன பாராட்டிட்டு மலர பாராட்டலேனா கோவிச்சுக்கப் போகுது.

praveen
20-10-2007, 05:56 AM
ரொம்ப நன்றிகள் ப்ரவீன் அண்ணா...!!:cool:
எங்கே உங்க இ-பண பரிசு அண்ணா?? :icon_rollout:

விசயம் தெரியாமல் கருத்து மட்டும் பதித்து விட்டேன், கருத்து பதிந்ததற்கு இபணம் நீங்கள் தருவீர்கள், தங்கையானதால் அதை தராவிடால் போயிற்று என்று நினைத்தேன்.

ஆனால் நான் தரவேண்டுமா? சரி மொத்தம் 101 இபணம் இந்த திரிக்கு கொடுக்க நினைத்துள்ளேன். ஆனால் இரண்டு தங்கைகள் உழைப்பு இதில் இருப்பதால் பூமகளுக்கு பெரும் பங்கும், மலருக்கு மீதியும். 101 ல் முதலில் வரும் 10 பூமகளுக்கும் மலருக்கு மீதி உள்ள 1ம்,, சரி தானா?

பூமகள்
20-10-2007, 09:00 AM
இது நீயா எழுதினதா இல்ல யாரோ உனக்கு PM அனுப்பி எழுதின மாதிரி தெரியுதே.
அண்ணா... இது முழுக்க முழுக்க என் கைபட எழுதியதே..!! இதுக்கு காப்பி ரைட்ஸ் பூமகள் மட்டுமே..!!:icon_rollout::D
பாகம் 2-இன் படங்களின் காப்பி ரைட்ஸ் மலருக்கு மட்டுமே..!!:icon_b:
என் கற்பனையிலேயே சந்தேகப்பட்டுட்டீங்களே ராஜா அண்ணா???:traurig001:

பூமகள்
20-10-2007, 09:48 AM
மொத்தம் 101 இபணம் இந்த திரிக்கு கொடுக்க நினைத்துள்ளேன். ஆனால் இரண்டு தங்கைகள் உழைப்பு இதில் இருப்பதால் பூமகளுக்கு பெரும் பங்கும், மலருக்கு மீதியும். 101 ல் முதலில் வரும் 10 பூமகளுக்கும் மலருக்கு மீதி உள்ள 1ம்,, சரி தானா?
அன்பு ப்ரவீண் அண்ணா...
10 இ பண கொடுப்பதாய் சொல்லி.. .101 கொடுத்த வள்ளலுக்கு மிகுந்த நன்றிகள்..!!

சிவா.ஜி
20-10-2007, 09:52 AM
அய்யோ..அய்யோ....என்னமா...எழுதியிருக்கு இந்த பூவு...கூட மலருமில்ல சேர்ந்து ரவுசு வுட்டுருக்காங்க.....அசத்திட்டீங்கம்மா....ஆனா என்ன என்னால இன்னைக்குவரைக்கும் படத்தை பாக்கமுடியல. பரவாயில்லை...எழுத்து பிரமாதம்.கலக்கல்ஸ்....
ரெண்டு தங்கைகளுக்கும்...ஆளுக்கு 500....இ-பணம்..சரியா...இப்ப ஊருக்கு கிளம்பற அவசரம்...அதிகமா எழுத முடியல. இந்தியா வந்துட்டு அப்புறம் பாக்கலாம். 22-ந் தேதி இந்தியாவுல இருப்பேன்.

பூமகள்
20-10-2007, 09:54 AM
சிவா அண்ணா... ரொம்ப நன்றிகள் அண்ணா.
பத்திரமா சவுக்கியமா ஊருக்கு வாங்க...!!
உங்களின் பயணம் இனிதே அமைய வாழ்த்துகள்...!!

ராஜா
20-10-2007, 10:52 AM
சரியான கலாட்டாத் திரி..!

ரொம்ப நல்லா இருக்கு..

கலக்கி "பூ"ட்டிங்க..!

பூமகள்
20-10-2007, 11:18 AM
சரியான கலாட்டாத் திரி..!
ரொம்ப நல்லா இருக்கு..
கலக்கி "பூ"ட்டிங்க..!
மிகுந்த நன்றிகள் ராஜா அண்ணா.
உங்க பாராட்டு கண்டு மட்டற்ற மகிழ்ச்சி.

சுகந்தப்ரீதன்
20-10-2007, 12:49 PM
அதான பாத்தேன் எங்க அக்கா நோக்கமில்லாம நொங்கு திங்காதேன்னு..! என்னடா நாம ஒல்லியா இருக்கம்ன்னு அக்கறையோட அக்கா டிப்ஸ் கொடுத்து படிக்க சொல்லுதுன்னு பாத்தாக்க... பணம் வேனுமாமில்ல பணம்..! உன்னோட குறும்பு நல்லா இருக்குது ஆனா சல்லிகாசு கூட கிடைக்காது என்கிட்ட இருந்து... ( நான் ஏற்கனவே கொடுத்த சீதனத்த திருப்பி அனுப்பினீங்கள்ள..? அப்புறம் எப்படி இப்ப கொடுப்பாங்களாம்.?)
சரி மலருக்காவது கொடுக்கலாம்ன்னு பாத்தா அது அதுக்கு மேல.. நான் 500 கொடுத்தா 1000 கொடுத்ததா சொல்லி உனக்கு 500 அனுப்பி வச்சுடும் (பாசக்கார புள்ள..) அதனால ரெண்டுபேருக்குமே நயா பைசா கிடையாதுக்கா.. (கொடுத்தவங்களுக்கே இன்னும் திருப்பி கொடுக்கல.. அதுக்குள்ள புடுங்கி திங்க வந்துட்டாங்கய்யா..)

யவனிகா
20-10-2007, 12:55 PM

குடுக்க மாட்டேன்னு சொல்ல*த்தான் இத்தனை அலட்டல்...இத்தனை பேச்சா?பாரா பாராவா பேசறதப் பாத்தா எங்க எடுத்துக் குடுத்துடுவியோன்னு பாத்தேன்?அதானே...ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே உனக்கு காரியத்தில் தான் கண்ணடா தாண்டவக்கோனே..பழமொழியா சொல்லுற..நாங்களும் சொல்லுவம் இல்ல*

பூமகள்
20-10-2007, 12:57 PM
இ-காசு கொடுக்காட்டி.. இந்த திரியை எத்தன வாட்டி படிச்சாலும் உடம்பு தம்மட்டூண்டு கூட வராதுன்னு நான் ஏற்கனவே சொல்லிட்டேன். ப்ரீதன் அண்ணா..!!
அப்பவும் கொடுக்க மாட்டேன்னு அடம்பிடிச்சா... அப்புறம்.. ஒல்லிப்பிச்சானாவே இருக்க வேண்டியது தான்..!! (இது சாபம் எல்லாம் இல்லைங்கோவ்....:lachen001:!!)

அதான பாத்தேன் எங்க அக்கா நோக்கமில்லாம நொங்கு திங்காதேன்னு..! ( நான் ஏற்கனவே கொடுத்த சீதனத்த திருப்பி அனுப்பினீங்கள்ள..? அப்புறம் எப்படி இப்ப கொடுப்பாங்களாம்.?)

எப்போ, யாருக்கு, எங்கே கொடுத்தீங்க சீதனம்?? நான் எப்ப திருப்பி அனுப்பிச்சேன் ப்ரீதன் அண்ணா??

யவனிகா
20-10-2007, 01:03 PM
ஆத்தா பூவு சுகந்தனை விடாதே வசூல் ராணி நீங்கிறதை காட்டிப்புடணும் சொல்லிட்டேன்..இப்பத்தைக்கு நான் எஸ்ஸூ...

பூமகள்
20-10-2007, 01:04 PM
குடுக்க மாட்டேன்னு சொல்ல*த்தான் இத்தனை அலட்டல்...இத்தனை பேச்சா?பாரா பாராவா பேசறதப் பாத்தா எங்க எடுத்துக் குடுத்துடுவியோன்னு பாத்தேன்?அதானே...ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே உனக்கு காரியத்தில் தான் கண்ணடா தாண்டவக்கோனே..பழமொழியா சொல்லுற..நாங்களும் சொல்லுவம் இல்ல*
யவனி யக்கா....:icon_rollout:
எனக்கு சாதகமா பேசுறீங்களா?? இல்ல ப்ரீதன் அண்ணாவுக்கு சாதகமா பேசி பழமொழி எடுத்துக் கொடுக்கிறீங்களா??? :icon_ush: :confused: :fragend005:
இப்படி கவுத்துறீங்களே அக்காவ்??? :icon_p:

சுகந்தப்ரீதன்
20-10-2007, 01:12 PM
அப்பவும் கொடுக்க மாட்டேன்னு அடம்பிடிச்சா... அப்புறம்.. ஒல்லிப்பிச்சானாவே இருக்க வேண்டியது தான்..!! (இது சாபம் எல்லாம் இல்லைங்கோவ்....:lachen001:!!)

உன்னாட்டம் பூசிணிகாய இருக்கறத விட ஒல்லிபிச்சனா இருக்கறதுதான் உடம்புக்கு நல்லதுன்னு யவனி அக்கா சொல்லியிருக்கு...!

எப்போ, யாருக்கு, எங்கே கொடுத்தீங்க சீதனம்?? நான் எப்ப திருப்பி அனுப்பிச்சேன் ப்ரீதன் அண்ணா??

கிறுக்கிபட்டம் கொடுத்தப்ப கூடவே தம்பியோட சீதனமும் கொடுத்தமுல்ல திருப்பி அனுப்பிட்டு தெரியாதமாதிரி பேசுனா நான் திரும்பவும் அனுப்புவன்னு நினைச்சியா.. ஆகாது அக்கா ஆகாது..உங்க பருப்பு என்கிட்ட வேகாது..!:icon_rollout:

பூமகள்
20-10-2007, 01:22 PM
உன்னாட்டம் பூசிணிகாய இருக்கறத விட ஒல்லிபிச்சனா இருக்கறதுதான் உடம்புக்கு நல்லதுன்னு யவனி அக்கா சொல்லியிருக்கு...!
ப்ரீதன் அண்ணா,
உங்களுக்கு கண்ணுல ஏதும் கோளாறா?? சீக்கிரமா கூடாரத்துல நல்ல கண் மருத்துவர பாருங்க..!! நான் பூசிணிக்காயா??? இதை ப்ரிதன்னு ஒரு பரங்கிக்கா சொல்லுது...!!:lachen001: ஹி ஹி..!! :D:D :icon_b:

கிறுக்கிபட்டம் கொடுத்தப்ப கூடவே தம்பியோட சீதனமும் கொடுத்தமுல்ல திருப்பி அனுப்பிட்டு தெரியாதமாதிரி பேசுனா நான் திரும்பவும் அனுப்புவன்னு நினைச்சியா.. ஆகாது அக்கா ஆகாது..உங்க பருப்பு என்கிட்ட வேகாது..!:icon_rollout:
ஆஹா.,.... அந்த 1000 இ-காசு சீதனம் வந்தது ப்ரீதன் அண்ணா..!!
ஆனா.. நான் ஏதும் திருப்பி அனுப்பலையே?? :icon_ush:
அது கிறுக்கு பதிலுக்கு சரியா போச்சு...! இது இந்த திரிக்கு...!!

சுகந்தப்ரீதன்
20-10-2007, 01:36 PM
ப்ரீதன் அண்ணா,
உங்களுக்கு கண்ணுல ஏதும் கோளாறா?? சீக்கிரமா கூடாரத்துல நல்ல கண் மருத்துவர பாருங்க..!! நான் பூசிணிக்காயா??? இதை ப்ரிதன்னு ஒரு பரங்கிக்கா சொல்லுது...!!:lachen001: ஹி ஹி..!! :D:D :icon_b:

நான் ஏற்கனவே சொன்னேன் யாருமே கேட்கல.. பாத்திங்களா எங்க அக்கா பழையபடி பெனாத்த ஆரம்பிச்சுடிச்சி.. முதல்ல ஒல்லிபிச்சான்னுது இப்ப பரங்கிகாங்குது... சுரக்காயாட்டாம் இருந்துகிட்டு...!

ஆஹா.,.... அந்த 1000 இ-காசு சீதனம் வந்தது ப்ரீதன் அண்ணா..!!
ஆனா.. நான் ஏதும் திருப்பி அனுப்பலையே?? :icon_ush:
திருப்பி அனுப்பாமா தானா கால்முளச்சா வந்துது என் அக்கவுண்டுக்கு..?

அது கிறுக்கு பதிலுக்கு சரியா போச்சு...! இது இந்த திரிக்கு...!!
இந்த திரிக்கு கெஞ்சுறியேன்னு ஒரு ரூவா வேணா போடுறன் தட்டுல எடுத்துக்க...!:icon_rollout:

மலர்
20-10-2007, 01:38 PM
சுகு நான் நினைக்கிறேன்....

நீ இப்ப அக்காகிட்ட அடி வாங்க போறேன்னு....

சுகந்தப்ரீதன்
20-10-2007, 01:40 PM
சுகு நான் நினைக்கிறேன்....

நீ இப்ப அக்காகிட்ட அடி வாங்க போறேன்னு....
அக்காவ பத்தி உனக்கு இன்னும் தெரியல... கால்ரூபா போட்டாகூட கபுக்குன்னு பிடிச்சிக்கும்.. (சும்மா கில்லி கில்லி மாதிரி..):icon_rollout:

பூமகள்
20-10-2007, 01:44 PM
நான் ஏற்கனவே சொன்னேன் யாருமே கேட்கல.. பாத்திங்களா எங்க அக்கா பழையபடி பெனாத்த ஆரம்பிச்சுடிச்சி.. முதல்ல ஒல்லிபிச்சான்னுது இப்ப பரங்கிகாங்குது... சுரக்காயாட்டாம் இருந்துகிட்டு...!
:sauer028::sauer028::icon_nono::icon_nono::sport-smiley-005::sport-smiley-005::sport-smiley-005::sport-smiley-005:

திருப்பி அனுப்பாமா தானா கால்முளச்சா வந்துது என் அக்கவுண்டுக்கு..?
நான் அனுப்பலை... எதையும்... இருங்க இன்னும் கொஞ்ச நேரத்தில் ஓவியக்காட்ட சொல்லி ஆட்டோ அனுப்புறேன்...!!:sport-smiley-002:

இந்த திரிக்கு கெஞ்சுறியேன்னு ஒரு ரூவா வேணா போடுறன் தட்டுல எடுத்துக்க...!:icon_rollout:
:waffen093::waffen093::waffen093::waffen093: :waffen093::waffen093::waffen093::waffen093: :waffen093:
:violent-smiley-010::violent-smiley-010::violent-smiley-010::violent-smiley-010::violent-smiley-010::violent-smiley-010::violent-smiley-010:

மலர்
20-10-2007, 01:46 PM
அக்கா நீ போட்ட போடுல பிள்ளை பயந்து போய்
திரிக்கு வெளியில நிக்குது......

பூமகள்
20-10-2007, 01:46 PM
சுகு நான் நினைக்கிறேன்....
நீ இப்ப அக்காகிட்ட அடி வாங்க போறேன்னு....
ரொம்ப சரிம்மா மலரு... !!:icon_b:
ஏற்கனவே ஆட்டோ அனுப்பியாச்சி....ஓவிக்காட்ட சொல்லி...!!:rolleyes::cool:

சுகந்தப்ரீதன்
20-10-2007, 01:52 PM
ரொம்ப சரிம்மா மலரு... !!:icon_b:
ஏற்கனவே ஆட்டோ அனுப்பியாச்சி....ஓவிக்காட்ட சொல்லி...!!:rolleyes::cool:
அதுசரி ஓவியாக்கா ஆட்டோ ஓட்ட போய்டாங்கலா.. என்கிட்ட சொல்லவே இல்லியே..? (இரு இரு நீ எங்க ஓட்டோட கிளம்பிட்ட..?)

அமரன்
20-10-2007, 02:04 PM
என்னத்தை சொல்ல. பூவு தொடங்கிய இத்திரி எனக்கும் அக்னிக்கும் ரசிகனுக்கும் தேவை இல்லைப்போல இருக்கே. என்ன்மோ போங்க..நாமளும் யாருக்காச்சும் சொந்த இபணம் கொடுக்கலாம்னு பார்த்தா சந்தர்ப்பம் அமைய மாட்டேங்குதே..

மலர்
20-10-2007, 02:07 PM
என்னத்தை சொல்ல. பூவு தொடங்கிய இத்திரி எனக்கும் அக்னிக்கும் ரசிகனுக்கும் தேவை இல்லைப்போல இருக்கே.

அப்படின்னா நீங்க மூணு பேரும் இருக்க வேண்டியது..
யவனி அக்காவோட திரி....

திரும்பி கூட பாக்காம ஓடியே போயிருங்க

அக்னி
20-10-2007, 02:08 PM
என்னத்தை சொல்ல. பூவு தொடங்கிய இத்திரி எனக்கும் அக்னிக்கும் ரசிகனுக்கும் தேவை இல்லைப்போல இருக்கே. என்ன்மோ போங்க..நாமளும் யாருக்காச்சும் சொந்த இபணம் கொடுக்கலாம்னு பார்த்தா சந்தர்ப்பம் அமைய மாட்டேங்குதே..
ஆமா... ஆமா... இதனை நான் வழிமொழிகின்றேன்...

அதுசரி... நாம குண்டு என்கிறீரோ... மெல்லிசு என்கிறீரோ...???

பூமகள்
20-10-2007, 02:09 PM

அன்பு அமர் அண்ணா...
இப்படி சொல்லியெல்லாம் தப்பிக்க முடியாது பூகிட்ட இருந்து...!! :icon_shok: :icon_nono: :grin:
நீங்க கண்டிப்பா இ காசு கொடுத்து தான் ஆகனும்..!!
படிச்சிட்டு சும்மா போகலாம்னு பார்த்தீங்களா??? :rolleyes::082502now_prv:

மலர்
20-10-2007, 02:13 PM
அதுசரி... நாம குண்டு என்கிறீரோ... மெல்லிசு என்கிறீரோ...???

செல்லமா பூசணிக்காய் என்று சொன்னார்...

அமரன்
20-10-2007, 02:13 PM
ஆமா... ஆமா... இதனை நான் வழிமொழிகின்றேன்...
அதுசரி... நாம குண்டு என்கிறீரோ... மெல்லிசு என்கிறீரோ...???
...
என்ங்கபத்தா சொல்லும். கள்ளம் கபடமில்லாத வெல்ல வெள்ளை மனசுக்காரப் பயலுவ பூசினாப்போல இருப்பாய்ங்களாம்.. ஒல்லியாக இருப்பவர்கள்.. வேண்டாம் என் நண்பன் ஒருத்தன் அந்த குரூப்பில இருக்கிறதால அது வேண்டாமே..

அக்னி
20-10-2007, 02:18 PM
செல்லமா பூசணிக்காய் என்று சொன்னார்...
அப்படியா...
சரி மலர் செல்லம்மா...

அமரன்
20-10-2007, 02:26 PM
செல்லமா பூசணிக்காய் என்று சொன்னார்...
எத்தனையோ பளுவுகளுக்கு மத்தியில் வந்திட்டுப்போயிட்டு இருக்கேன். வீம்புக்கு வம்பிழுக்காதே.. அப்புறம் நானில்லைன்னாலும் என் நலன்விரும்பிகளால் வருத்தப்படவேண்டி வரும். ஆமா சொல்லிப்புட்டேன்.

மலர்
20-10-2007, 02:39 PM
எத்தனையோ பளுவுகளுக்கு மத்தியில் வந்திட்டுப்போயிட்டு இருக்கேன். வீம்புக்கு வம்பிழுக்காதே.. அப்புறம் நானில்லைன்னாலும் என் நலன்விரும்பிகளால் வருத்தப்படவேண்டி வரும். ஆமா சொல்லிப்புட்டேன்.

அய்யையோ... அமரு
நான் இப்ப நல்ல பிள்ளையாயிட்டேன்.... :icon_rollout::icon_rollout:

என்னை அந்த அக்னி தான் முதல்ல வம்புக்கு இழுத்தார்.... :traurig001::traurig001:

என் வாலை கூட நல்லா சுருட்டி வச்சிருக்கேன்...
நிஜமா......... :D:D

ஓவியன்
21-10-2007, 04:04 AM
என் வாலை கூட நல்லா சுருட்டி வச்சிருக்கேன்...
நிஜமா......... :D:D

வாலைச் சுருட்டி வைத்திருக்கும் போதே இவ்வளவு வம்புனா....!!!
முழு வாலோட வந்தால்............!!! :D

சுகந்தப்ரீதன்
21-10-2007, 08:39 AM
வாலைச் சுருட்டி வைத்திருக்கும் போதே இவ்வளவு வம்புனா....!!!
முழு வாலோட வந்தால்............!!! :D
வாலை சுருட்டி வக்கல.. மலரு பொய் சொல்லுது... யாரொ அறுத்துட்டாங்கா அதோட வால... அதனாலதான் எல்லோரும் அறுந்தவாலுன்னு மலர சொல்லுராங்க..:wuerg019::icon_rollout:

மலர்
21-10-2007, 08:53 AM
வாலை சுருட்டி வக்கல.. மலரு பொய் சொல்லுது... யாரொ அறுத்துட்டாங்கா அதோட வால... அதனாலதான் எல்லோரும் அறுந்தவாலுன்னு மலர சொல்லுராங்க..:wuerg019::icon_rollout:

உங்க கிட்ட கேட்டாங்களாங்கும்.....
ஆமா எங்க இருந்து வாரீங்க......(கவுக்குறதுக்குன்னு)

அமரன்
21-10-2007, 09:03 AM
உங்க கிட்ட கேட்டாங்களாங்கும்.....
ஆமா எங்க இருந்து வாரீங்க......(கவுக்குறதுக்குன்னு)
உனக்கு எல்லாம் சொல்லித்தரணும்போல..வாலு வாலு.

Join Date: 23 Jun 2007
Location: கூடாரம்
Posts: 610

iCash Credits: 4,138

சுகந்தப்ரீதன்
21-10-2007, 09:04 AM
உங்க கிட்ட கேட்டாங்களாங்கும்.....
ஆமா எங்க இருந்து வாரீங்க......(கவுக்குறதுக்குன்னு)
யாரும் கேட்கல.. ந்மக்கு தெரிஞ்சத நாலு பேர்கிட்ட சொல்லலாம்கிர நல்ல எண்ணம்தான்...:mini023:

திருநெல்வெலில இருந்து வந்தா அல்வா கொடுக்கலாம்.. ஏதோ எங்களுக்கு தெரிஞ்சது :icon_rollout: மட்டும்தான்..!

நுரையீரல்
21-10-2007, 09:15 AM
ஏம்மா பூவு........ நீ எத்தினி நாளைக்குத்தான் இப்படி இ-பணம் அன்பளிப்பு கொடுக்கலையோனு கூவி கூவி எல்லார்கிட்டயும் ........... (யாசகம்) கேட்பே????
அண்ணனுக்கு எதையும் கேட்டு பழக்கமில்லீம்மா... அல்லாரும் வூட்டாண்ட போய் தூங்கும்போது அலேக்கா அமுக்கிகினு வந்து நாளைக்கு உனக்கு கொடுக்கறேம்மா...

மலர்
21-10-2007, 09:17 AM
இனி யார்கிட்டேயும் பேச்சே கிடையாது....
அக்ஷன் ஒன்லி ................

அறுந்தவாலு மலரன்னு சொன்ன சுகுவோட நல்ல எண்ணத்துக்கு நறுக்குன்னு கொட்டு

:sport-smiley-019::sport-smiley-019::sport-smiley-019::sport-smiley-019::sport-smiley-019::sport-smiley-019::sport-smiley-019::sport-smiley-019::sport-smiley-019::sport-smiley-019::sport-smiley-019::sport-smiley-019::sport-smiley-019::sport-smiley-019::sport-smiley-019::sport-smiley-019::sport-smiley-019::sport-smiley-019::sport-smiley-019::sport-smiley-019:

இன்னும் ஏதாவது பேசினால் ஓவியாக்காவிடம் சொல்லி ஆட்டோ அனுப்பியிருவேன்

தாதாவோட தங்கச்சி
மலர் :Christo_pancho::medium-smiley-044:

மலர்
21-10-2007, 09:18 AM
அல்லாரும் வூட்டாண்ட போய் தூங்கும்போது அலேக்கா அமுக்கிகினு வந்து நாளைக்கு உனக்கு கொடுக்கறேம்மா...

அண்ணாத்தே...
அதுக்குள்ள உங்க ஐகேஷ யாரும்
ஆட்டைய போட்டுறாம........ பாத்து வச்சிக்கோங்கோ...:icon_rollout:

சுகந்தப்ரீதன்
21-10-2007, 11:21 AM
இனி யார்கிட்டேயும் பேச்சே கிடையாது....
அக்ஷன் ஒன்லி ................

இன்னும் ஏதாவது பேசினால் ஓவியாக்காவிடம் சொல்லி ஆட்டோ அனுப்பியிருவேன்

தாதாவோட தங்கச்சி
மலர் :Christo_pancho::medium-smiley-044:
அதென்ன உனக்கு மட்டும் மூஞ்சியில மீசை முளைச்சிருக்கு...?

மாதவர்
21-10-2007, 02:19 PM
குண்டர் படை சார்பாக 500 கிலோ நெய் வழங்கலாம்
உங்களுக்கு.

பூமகள்
21-10-2007, 02:21 PM
அதென்ன உனக்கு மட்டும் மூஞ்சியில மீசை முளைச்சிருக்கு...?
இப்படியெல்லாம் என் தங்கையை கிண்டல் செய்யும் ப்ரீதன் அண்ணாவை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.:sauer028::sauer028:
:violent-smiley-010::violent-smiley-010:
(ஆட்டோ வந்திட்டு இருக்கு... முடிஞ்சா ப்ரீதன் அண்ணா தப்பிச்சிக்கோங்க...!! :080402gudl_prv:)

சுகந்தப்ரீதன்
22-10-2007, 05:52 AM
இப்படியெல்லாம் என் தங்கையை கிண்டல் செய்யும் ப்ரீதன் அண்ணாவை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.:sauer028::sauer028:
:violent-smiley-010::violent-smiley-010:
(ஆட்டோ வந்திட்டு இருக்கு... முடிஞ்சா ப்ரீதன் அண்ணா தப்பிச்சிக்கோங்க...!! :080402gudl_prv:)
நான் கிண்டல் பண்ணல அக்கா. உண்மையத்தான் சொன்னேன். நீயே பாரு உன் தங்கச்சி முகத்துல மீசை இருக்குறத..:Christo_pancho::medium-smiley-044:

சூரியன்
22-10-2007, 07:26 AM
இந்த பகுதிக்கு வருபவர்கள் எல்லாரும் முதலிலேயே இ-பணங்களை எனது கணக்கிற்கு காணிக்கை ஆக்கினால் தான் தாங்கள் குண்டாவீர்கள் என்று 100% உத்தரவாதம் அளிக்கப்படும். அதற்காக பணம் கொடுக்காமல் படித்துச் சென்றால்... அவர்களுக்கு 0% கூட குண்டாக வாய்ப்பில்லை என்று திட்டவட்டமாக எமது ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன...!!

அக்கா இருக்கறாவங்க குடுப்பாங்க இல்லாதவங்க இன்னா செய்யறது..?

பூமகள்
22-10-2007, 07:35 AM
அக்கா இருக்கறாவங்க குடுப்பாங்க இல்லாதவங்க இன்னா செய்யறது..?
மன்றத்தில் இ-காசு இல்லாதவர்னு யாரும் இல்லார் தம்பி...!!:icon_b:
எல்லாரிடமும் இ-பணம் இருக்கே...!!:icon_p:
இ-பணம் '0' என்று ஒருவரைக் காட்டுங்க பார்க்கலாம்?? :lachen001::lachen001:

சூரியன்
22-10-2007, 07:38 AM
எல்லார் கிட்டேயும் வசூல் பண்ணாம விடருதில்ல..:smilie_abcfra:

பூமகள்
22-10-2007, 07:56 AM
ஆம்..விடுவதாய் இல்லை சகோதரர் சூரியன்..!!
எங்கே உங்களின் இ-பண அன்பளிப்பு??

சூரியன்
22-10-2007, 08:08 AM
இதோ வந்துட்டே இருக்கு.
(எவ்வளவு வேணும்.)

பூமகள்
22-10-2007, 08:15 AM
அன்புக்கு உண்டோ அளவு சகோதரரே??
நிறைய இ-பணம் குடுங்கள்...!! :D:D:D

சூரியன்
22-10-2007, 08:17 AM
குடுத்துட்டா போச்சு,..
அப்பறம் தேவைப்படும் போது கேட்ட தரப்போறீங்க..

பூமகள்
07-11-2007, 02:18 PM
நன்றிகள் தம்பி சூரியன்..!! :)

நேசம்
07-11-2007, 02:27 PM
ஆமாம் சூரியன் எவ்வளவு கொடுத்தாலும் ஆகும் தங்கையின் படைப்புகளுக்கு
(காதுல புகை வருது தெரியாதுன்னு நினைக்கிறென்

பூமகள்
07-08-2008, 07:34 AM
சூரியன் தான் கொடுக்கனுமா...
நேசமான இந்த நேசமண்ணா கொடுத்தா வேணாம்னா சொல்லப் போறோம்..!!

எங்கே போயிட்டீங்க....!!
பூவுக்கு ஐ-கேஷ் கொடுங்க நேசம் அண்ணா...!! :)