PDA

View Full Version : இங்கேயும் இலவசம்!!!

aren
19-10-2007, 12:45 PM
செளகரியமாக காற்று வாங்கலாம்
என்று வெளியே கிளம்பினேன்
காற்றும் வந்தது வாடையும் வந்தது
இலவசமாக!!!

இங்கேயும் ஒன்று வாங்கினால்
ஒன்று இலவசம் போலிருக்கிறது!!!

பென்ஸ்
19-10-2007, 12:49 PM
என்ன ஆரென்...

கவிதையில் இதையும் நீங்கள் விட்டு வைக்கவில்லை போலும்....
கவிதை எழுதுவதை பற்றி நண்பர் ஒருவரிடம் பேசி கொண்டிருந்தேன்... உங்கள் அனுமதியின்றி உங்களை உதாரணத்திற்க்கு எடுக்க வேண்டி இருந்தது. உங்களை பற்றி புகழ்ந்து சொன்னதால் இதை சபையில் சொல்லுறேன்...
(இல்லைனா தனிமடலில் சொல்லி திட்டு வாங்கி இருப்பேன்)

aren
19-10-2007, 12:54 PM

நீங்கள் எப்படி சொன்னாலும் சரிதான் பென்ஸ். ஏனென்றால் எனக்கு கவிதையே எழுதத்தெரியாது, இதுவரை ஒரு கவிதையும் எழுதியதில்லை.

புகழ்ந்து என்று ஒரு வார்த்தை உங்கள் பதிவில் கண்டேன். சந்தோஷமாக இருக்கிறது.

நன்றி வணக்கம்
ஆரென்

பென்ஸ்
19-10-2007, 01:02 PM
புதுகவிதையின் சொளகரியம் அதுதானே ஆரென்...
வார்த்தைகளை கண்டிப்பான இலக்கனத்துக்கு கட்டுபடுத்த வேண்டியது இல்லையே...
ரசிக்க வைக்கும் திறமை உங்களிடம் இருக்கிறது..
ரசிக்கும் திறமையும் மன்றத்தாரிடம் இருக்கிறது...
பின்னூட்டங்களே அதற்க்கு சாட்சி...

4000 பதிவுவரை 1 கவிதை கூட எழுதாத ஆரென், இன்று மன்றத்து சிறந்த கவிகளில் ஒருவர் என்றால் அது மன்றத்திற்க்கு தானே பெருமை...
உங்கள் நண்பர் என்று எனக்கும்...

யவனிகா
19-10-2007, 01:10 PM
4000 பதிவுவரை 1 கவிதை கூட எழுதாத ஆரென், இன்று மன்றத்து சிறந்த கவிகளில் ஒருவர் என்றால் அது மன்றத்திற்க்கு தானே பெருமை...
உங்கள் நண்பர் என்று எனக்கும்...

இது புகழ்ச்சியா? வஞ்சப் புகழ்சியா? பென்ஸ் அவர்களே?

பென்ஸ்
19-10-2007, 01:13 PM
இது புகழ்ச்சியா? வஞ்சப் புகழ்சியா? பென்ஸ் அவர்களே?

ஆதங்கம்... என்னால் முடியவில்லை என்ற ஆதங்கம்...

என்றாவது நானும் கவியாவேன் என்ற நம்பிக்கையுடன்.

யவனிகா
19-10-2007, 01:26 PM
ஆதங்கம்... என்னால் முடியவில்லை என்ற ஆதங்கம்...

என்றாவது நானும் கவியாவேன் என்ற நம்பிக்கையுடன்.

கவிதை எழுதாவிட்டால் என்ன? சுப்புடு என்ன பாடியா பிரபலமானார்?

உங்களின் நடு நிலை விமர்சனங்களும்,
தேர்ந்த எழுத்து நடையும்,
எதையும் புதிய கோணத்தில் அணுகும் பாங்கும்,
பொடி வைக்கப் பட்ட உங்க*ளின் வரிகளும்,
நிஜத்தை மறைக்காமல் சொல்லும் நேர்மையுமாக
உங்களின் வார்த்தைள் அனைத்தையுமே குட்டிக் கவிதைக*ளாகத்தான்(எங்களின் த*லையில் செல்லமாய் குட்டும்) பரிணமிக்கின்றன.

aren
19-10-2007, 01:56 PM
புதுகவிதையின் சொளகரியம் அதுதானே ஆரென்...
வார்த்தைகளை கண்டிப்பான இலக்கனத்துக்கு கட்டுபடுத்த வேண்டியது இல்லையே...
ரசிக்க வைக்கும் திறமை உங்களிடம் இருக்கிறது..
ரசிக்கும் திறமையும் மன்றத்தாரிடம் இருக்கிறது...
பின்னூட்டங்களே அதற்க்கு சாட்சி...

4000 பதிவுவரை 1 கவிதை கூட எழுதாத ஆரென், இன்று மன்றத்து சிறந்த கவிகளில் ஒருவர் என்றால் அது மன்றத்திற்க்கு தானே பெருமை...
உங்கள் நண்பர் என்று எனக்கும்...

யாரையாவது இதுக்காக அடிக்கனும் நீங்கள் நினைத்தால் ஓவியனையும், ஆதவாவையும்தான் அடிக்கவேண்டும். நான் எந்த தப்பும் செய்யவில்லை.

aren
19-10-2007, 01:57 PM
இது புகழ்ச்சியா? வஞ்சப் புகழ்சியா? பென்ஸ் அவர்களே?

எதுவாக இருந்தாலும் பரவாயில்லை யவனிகா. நம்ம பென்ஸ்தானே.

aren
19-10-2007, 01:57 PM
ஆதங்கம்... என்னால் முடியவில்லை என்ற ஆதங்கம்...

என்றாவது நானும் கவியாவேன் என்ற நம்பிக்கையுடன்.

முடியவில்லையா? உங்களுக்கா? உங்களால் முடியாததா?

aren
19-10-2007, 01:58 PM
கவிதை எழுதாவிட்டால் என்ன? சுப்புடு என்ன பாடியா பிரபலமானார்?

நம்ம மன்றத்தின் சுப்புடு பென்ஸ் என்கிறீர்களா

சூரியன்
19-10-2007, 02:27 PM
கவிதையில் எல்லாத்தையும் உட்டு தூள் கிளப்புறிங்க..
பாராட்டுக்கள் ஆரென் அண்ணா...

ஓவியன்
20-10-2007, 03:27 AM
என்றாவது நானும் கவியாவேன் என்ற நம்பிக்கையுடன்.

ஐயோ, இந்த கொடுமையை எங்கே போய் சொல்ல....??
பென்ஸ் அண்ணாக்கு கவிதையே எழுத வராதாம்....
ஐயோ, ஐயோ....!!! :sprachlos020:

கவிதை எழுதாவிட்டால் என்ன? சுப்புடு என்ன பாடியா பிரபலமானார்?

உங்களின் நடு நிலை விமர்சனங்களும்,
தேர்ந்த எழுத்து நடையும்,
எதையும் புதிய கோணத்தில் அணுகும் பாங்கும்,
பொடி வைக்கப் பட்ட உங்க*ளின் வரிகளும்,
நிஜத்தை மறைக்காமல் சொல்லும் நேர்மையுமாக
உங்களின் வார்த்தைள் அனைத்தையுமே குட்டிக் கவிதைக*ளாகத்தான்(எங்களின் த*லையில் செல்லமாய் குட்டும்) பரிணமிக்கின்றன.

ஹீ,ஹீ!!
யவனிக்கா பென்ஸ் அண்ணாவோட ரீலை நம்பிட்டீங்களா...???
அப்படியே இந்த திரியைச் சொடுக்கிப் பாருங்கள்....

கவிஞர் அறிமுகம் : பென்ஸ் (http://tamilmantram.com/vb/showthread.php?t=9040)

:icon_rollout: :icon_rollout: :icon_rollout: :icon_rollout: :icon_rollout: :icon_rollout: :icon_rollout: :icon_rollout:

ஓவியன்
20-10-2007, 03:31 AM
யாரையாவது இதுக்காக அடிக்கனும் நீங்கள் நினைத்தால் ஓவியனையும், ஆதவாவையும்தான் அடிக்கவேண்டும். நான் எந்த தப்பும் செய்யவில்லை.

நீங்கள் என்ன சொன்னாலும் சந்தோசம் தான் அண்ணா, கவிதையே தெரியாமல் மன்றம் வந்து இளசு அண்ணா, பூ அண்ணா, பென்ஸ் அண்ணா, ஆதவன், ஷீ இவர்களினால் கவிதை என சொல்லும் படி எழுதத் தொடங்கிய என்னால் நீங்கள் தூண்டப்பட்டு கவிதை எழுதியிருந்தால் அது எனக்கும் மன்றத்துக்கும் பெருமை தானே அண்ணா...!!! :)

ஓவியன்
20-10-2007, 03:34 AM
இங்கேயும் ஒன்று வாங்கினால்
ஒன்று இலவசம் போலிருக்கிறது!!!

இலவசம் என்றால் என்ன எதுவென சிந்தித்துக் கூடப் பார்காமல் வாயைப் பிளப்போர் நம்மிடை இருக்கும் வரை, இலவசம் என்ற மாயைக் காட்டி நம்மை ஏமாற்றுவோர் இருக்கத் தான் செய்வார்கள்.

நல்ல வரிகளும் கருவும் அண்ணா!.

யவனிகா
20-10-2007, 04:21 AM
[COLOR="DarkRed"][FONT="Latha"]

[COLOR="DarkRed"][FONT="Latha"]ஹீ,ஹீ!!
யவனிக்கா பென்ஸ் அண்ணாவோட ரீலை நம்பிட்டீங்களா...???
அப்படியே இந்த திரியைச் சொடுக்கிப் பாருங்கள்....:

அப்ப நான் தான் நம்பிட்டனா? சொன்னதையெல்லாம் அப்படிடியே நம்புற பச்ச்ப் புள்ளயா இருக்கிறதுனால என்னையே எல்லாரும் ஏமாத்துறாங்க ஓவியன்...

ஓவியன்
20-10-2007, 04:32 AM
அப்ப* நான் தான் ந*ம்பிட்ட*னா? சொன்ன*தையெல்லாம் அப்ப*டிடியே ந*ம்புற* ப*ச்ச*ப் புள்ள*யா இருக்கிற*துனால* என்னையே எல்லாரும் ஏமாத்துறாங்க* ஓவிய*ன்...

வேறு யார் உங்களை ஏமாத்தினாங்க சொல்லுங்க...
நம்ம ஆட்டோ பசங்க வேலை இல்லாம இருக்காங்க...!:D:D:D

சிவா.ஜி
20-10-2007, 09:00 AM
எல்லா இலவசங்களும் இப்படித்தான் ஒருநாள் கெட்ட வாடையடிக்கும்...அது தெரியாத நம் ஜனங்கள் இலவசங்களின் பின்னால் ஓடுகிறார்கள்...சின்ன கவிதை யோசிக்க வைக்கும் கவிதை.வாழ்த்துகள் ஆரென்.

நேசம்
20-10-2007, 10:15 AM
இந்த கவிதைக்கும் இலவசமாக வேறு கவிதை இல்லையா?

சிவா.ஜி
20-10-2007, 10:18 AM
இலவசமாய் காற்று
வாங்கப்போனால் கூடவே வாடை..
இலவசமாய் வேட்டி சேலை
வாங்கப்போனால் அப்பவே பாடை!

(ஆரெனின் கவிதைக்கு இலவசமாய் இந்த கவிதை)

சுகந்தப்ரீதன்
21-10-2007, 10:03 AM
அரேன் அண்ணா... சிங்கையிலும் இந்த நிலையா..? கலக்கலா இருக்குது கவிதை.. வாழ்த்துக்கள் அண்ணா..!

ஆதவா
06-11-2007, 04:56 AM
செளகரியமாக காற்று வாங்கலாம்
என்று வெளியே கிளம்பினேன்
காற்றும் வந்தது வாடையும் வந்தது
இலவசமாக!!!

இங்கேயும் ஒன்று வாங்கினால்
ஒன்று இலவசம் போலிருக்கிறது!!!

நாங்கள் இருக்க்கும் வீட்டுக்குச் செல்லவேண்டுமானால் பல கழிவுத் தெருக்களையும் கழிவுத் தொட்டிகளையும், கழிவுக் காடுகளையும் தாண்டி செல்லவேண்டும்.... இது இந்தியாவின் நிலை.... சுத்தம் சுகாதாரமற்ற "தூய்மையான இடம்".

தினமும் வாக்கிங் செல்லும் பழக்கம் எனக்கு. காலை எழுந்து சென்றால் ஒரே கம,கம தான்..

மூச்சிழுக்கும் நாற்றம் எனை வேறுலோகத்திற்குக் கொண்டு செல்லும்...

மிக யதார்த்தமான கவிதை.. உண்மையை இவ்வழியே ஊருக்குச் சொல்லவேண்டியிருக்கிறது..

வளர்ந்துகொண்டே கெடும் இந்தியாவில் தான் இந்த நிலை என்றால்
வளர்ந்து கெட்ட சிங்கப்பூரிலும் இதே நிலையா?

என்ன கொடுமை ஆரென் அண்ணா இது??

தாமரை
13-11-2007, 03:58 AM
செளகரியமாக காற்று வாங்கலாம்
என்று வெளியே கிளம்பினேன்
காற்றும் வந்தது வாடையும் வந்தது
இலவசமாக!!!

இங்கேயும் ஒன்று வாங்கினால்
ஒன்று இலவசம் போலிருக்கிறது!!!

அதுதான் வாடைக் காற்று.

அக்னி
13-11-2007, 05:16 AM
வாசமாக வந்தால் வசமாகலாம்...
துர்வாசமாக வந்தால் இலவசமானாலும் வேண்டாம்...

சவம் நாற்றமெடுப்பது இயல்பு...
ஆனால்... இன்று,
உலகை நாறவைத்து
முகர்வதே மனித இயல்பாகிவிட்டது...

பாராட்டுக்கள் ஆரென் அவர்களே...

அதுதான் வாடைக் காற்று.
சூப்பர் டைமிங் பஞ்ச்...

மன்மதன்
13-11-2007, 09:09 AM
காற்றையும் அரசியல் விட்டுவைக்கவில்லை போலிருக்கு,,

அமரன்
13-11-2007, 10:12 AM
கவித்தென்றலுக்காக வந்தேன்
இலவசமாகப் பெற்றேன் பலதேன்...
நன்றி.

ஆதவா
13-11-2007, 05:13 PM
அதுதான் வாடைக் காற்று.

:D:D:D:D:D

இளசு
13-11-2007, 06:57 PM
புதிய களங்களில் எளிய வரிகளால் மனதை வசீகரிக்கும்
என் நண்பர் அன்பின் ஆரென்....

இந்தக்கவிதையிலும் வென்றுவிட்டார்...

பென்ஸின் பின்னூட்டம், யவனிகாவின் ஏ-மாற்றம், சிவாவின் இலவச இணைப்பு, சொல்லின் செல்வரின் ஒரு வரி ''பஞ்ச்'' - எல்லாமும் இணைந்து ... அமர்க்களம்!