PDA

View Full Version : கொண்டாட்டம் − பாகம் 3



நுரையீரல்
19-10-2007, 11:33 AM
கொண்டாட்டம் − பாகம் 2

முன்னுரை: கொண்டாட்டம் ஆரம்பப்பகுதியைப் பார்த்து சிரித்தவர்களும், ஆஹா..! நம்ம கதைக்கு ஒரு புது கேரக்டர் கிடைச்சிட்டாண்டா (S. ராஜாவாகிய நான் தான்) என்று சந்தோஷப்பட்டவர்களும் நிம்மதியாய் யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில், எனக்கு நானே முடிவுரை எழுதும் முயற்சி தான் இந்தப்பாகம்.

"கோவை விமான நிலையம் தங்களை இனிதே வரவேற்கிறது" என்று அவினாசி சாலையின் நடுவே வானளாவிய பெயர்ப்பலகை இருக்கும். அதைத்தாண்டி, பீச்சாங்கைப்பக்கம் ஒரு ரோடு போகும், அது தான் காளப்பட்டி ரோடு. இந்த ரோட்டில் ஒரு கிலோமீட்டர் நடந்துபோனா, அதே பீச்சாங்கைப்பக்கம் வருவது தான் நேரு நகர்.

("என்னடா இவன் சிரிப்பு பகுதியில போய் சீரியஸ் கதையச் சொல்றானே, கிறுக்குப்பையன்..." அப்படீனு இதைப்படிக்கும் அமரன், ஓவியன், அக்னி மற்றும் மலர் போன்றவர்கள் மனதிற்குள் நினைக்கலாம்) காலை ஒரு ஏழுமணி இருக்கும். நேருநகர்ல ரெண்டாவது சந்துல, மூணாவது வீட்டுக்கு முன்னாடி ஒரு இளம்பெண் உட்கார்ந்து கோலம் போட்டுக் கொண்டிருக்கிறாள். இடதுபக்கம் பார்த்தால் அசின் போலவும், வலது பக்கம் பார்த்தால் த்ரிஸா போலவும் இருப்பாள். பக்கத்துல போய் பார்த்தால் (??? எப்படி இருப்பாள் என்று நீங்களே நினைத்துக் கொள்ளவும்) அட இது நம்ம பூமகள்.

வீட்டுக்கு உள்ளார ஒரு மரக்கட்டில், அதுல பெட்சீட்ட தலையோட போர்த்திட்டு ஒரு உருவம் படுத்திருக்கு. அது வேறயாருமில்ல நான் தான் (S. ராஜா (வடிவேல்)) அடுப்படில, சமையல் வேலை செஞ்சிட்டிருக்கா எம் பொண்டாட்டி, பேரு பவானி. அந்த ஏரியா பொம்பள ரௌடி. அவ புருஷன (என்னத்தான்) அடிச்சே ஃபேமஸ் ஆயிட்டா.

அடுப்படில இருந்து வெளிய வர்ற பவானி நேரா, நான் (வடிவேல்) படுத்திருக்க கட்டிலுக்கு பக்கத்தில வர்றா. "சனியன் ஊருல உள்ள ஆம்பளக எல்லாம் வேலைக்குப் போயாச்சு, சூரியன் உதிச்சதுக்கப்புறமும் குப்புறப்படுத்து தூங்குறதப்பாரு மூதேவி, மூதேவி..." என்று சொல்லிக்கொண்டே என் அருகில் வந்து, என் பெட்சீட்ட உருவி என்னை எழுப்பப் பார்க்கிறாள். உருவிய வேகத்திலேயே பெட்சீட்டை என் உடம்பில் போர்த்திவிட்டு, குப்புறப்படுத்திருக்கும் என்மேலே ஓங்கி ஒரு உதைவிடுகிறாள்.

"அம்மா..........." என்று அலறிக்கொண்டே நான் எழுந்திரிக்க, "யோவ்.. வெக்கங்கெட்ட மனுஷா.... மொதல்ல லுங்கியப் போடுய்யா.. என் வென்று..." என்று மீண்டும் அதே இடத்தில் உதைக்கிறாள்.

"சனியன் புடிச்சதுக... காலங்காத்தலயே லோளாய் பண்ண ஆரம்பிச்சாச்சா..." என்று பூமகள் உள்ளே வருகிறாள். "அண்ணி... எதுக்கு இப்ப எங்கண்ணன தேவையில்லாம அடிக்கிறீங்க..." என்று பவானியைப் பார்த்து பூமகள் கேட்கிறாள்.

"வந்துட்டா.... தை தைனு ஆட்டிக்கிட்டு... ஏய் என்னடி அண்ணன அடிச்சா ரோஷம் பொத்துக்கிட்டு வருதோ... மொதல்ல இந்தாள ஒழுங்கா வேலைக்குப் போய் நாலு காசு கொண்டு வரச்சொல்லு, வந்திட்டா அண்ணன அடிக்காத, நொண்ணன கடிக்காதேனுட்டு..." என்று பவானி சொன்னாள்.

நான் தலைய தொங்கப்போட்டுக் கொண்டு, "அவகிட்ட பதிலுக்கு பதில் பேசாதே... நீ பேசுற ஒவ்வொரு வார்த்தைக்கும், எனக்குத்தான் பூச கெடக்கும்.." என்று பூமகளை சன்னமாய் பார்த்துச் சொன்னேன்.

"ஏன்னா, அண்ணி சொல்றதுலயும் ஞாயமிருக்குதுல்ல... போ, போ ஒழுங்கா வேலைக்குப் போய் நாலு காசு சம்பாதிச்சிட்டு வா... நீ எப்ப சம்பாதிச்சு நான் எப்ப கரையேறி...." என்று பூமகள் ஏக்கப்பெருமூச்சுடன் சொன்னாள்.

நான் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு "சரி தங்கச்சி, நீ சொல்றதுனால வேலைக்குப் போறேன், சரி அண்ணனுக்கு பஸ்ஸுக்கு ஒரு பத்துருவா காசு இருந்தாக்குடு.." என்று பூமகளிடம் கேட்க, அடுத்த சீனில் பூமகள் எஸ்கேப்.

"இந்தாய்யா... பஸ்ஸுக்கு காசு... என்னமோ அண்ணனுக்கு சப்போர்ட் பண்ணிட்டு வந்தா.. காசு கேட்டவுடனே பார்த்தியா எப்படி ஓட்டம் கட்டுறா.. இதுக்குத்தேன் அடிச்சாலும் புடிச்சாலும் ஒம்பொண்டாட்டி வேணுங்குறது..." என்று சொல்லி பவானி பத்து ரூவா தந்தாள்.

"என் செல்லம்.... மச்சான் மேல எவ்வளவு பாசமா இருக்குது புள்ள... எப்பவும் வெளிய போகும்போது மச்சானுக்கு ஆசையா ஒரு இது குடுப்பயே... அதக்குடு.. நான் போறேன்..." என்றேன்.

"ஏய் பூவு.... பூவு..... இவ வேற எங்க போய் தொலஞ்சானு தெரியலயே.. இருய்யா... நானே போய் எடுத்துட்டுவந்து அத தரேன்..." என்று உள்ளே சென்ற பவானி, கையில் விளக்குமாறுடன் வந்து, அதை என் தலையிலும், உடம்பிலும் நாலு சாத்து சாத்தினாள்.

அன்று இரவு, வேலைக்குப் போனவன் திரும்பி வரவில்லையே என்று வீட்டில் யாரும் கவலைப்பட்டதாக தெரியவில்லை. அந்த நாய் குடிச்சிட்டு மப்புல எங்கயாவது படுத்து எழுந்திரித்து வரும், என்ற வழக்கமிருப்பதால், அன்றைய ராத்திரி அனைவரும் படுத்து உறங்கிவிட்டனர்.

இப்போது மறுநாள் காலையாகிவிட்டது. பூமகளின் எதிர்வீடு தான் மலரின் வீடு. மலர் தன் வீட்டுக்கு முன் அமர்ந்து செவ்வனே கோலம் போட்டுக் கொண்டிருந்தாள். மலர் போடும் கோலத்தை எட்டி எட்டிப்பார்த்து, அதை "ஈயடிச்சான் காபி போல" பூமகளும் தன் வீட்டில் கோலமாய் போட்டுக் கொண்டிருந்தாள்.

மலர் வீட்டிலயும் ஒரு ஒண்ணுக்குமாவாத ஒதவாக்கற பயபுள்ள இருக்கு. அது மலரோட அண்ணன் அன்புரசிகன். இப்போது சீனுக்கு தேவையில்லாததால், அவரை அப்புறமா வம்புக்கு இழுப்போம்.

"ஊஊஊஊஊஊ......" என்ற சங்கொலியும், "ஆ, டண்டண்டண் ணக்கர ணக்கர, டண்டண்டண் ணக்கர ணக்கர..." என்னும் தப்பாட்டத்துடனும், தூரத்திலிருந்து ஒரு பாடை ஊர்வலம் வருகிறது. எதிரெதிரே கோலம் போட்டு, ரோட்டையே நாஸ்தி பண்ணிக் கொண்டிருக்கும் பூமளும், மலரும் காதில் ஒலிக்கும் "டண்டண்டண் ணக்கர ணக்கர, டண்டண்டண் ணக்கர ணக்கர..." இசைக்கேற்ப, மெதுவாக தங்கள் இடுப்பை ஆட்டிக்கொண்டே டான்ஸ் ஆடி கோலம் போடுகின்றனர்.

பாடையை அமரனும், ஓவியனும் தங்கள் தோள்களில் தாங்கிக்கொள்ள, அவர்களுக்கு முன்னால் இடுப்பில் நிற்காமல் இறங்கி, இறங்கிப்போகும் ஆஃப் டவுசரை பிடித்துக் கொண்டே, தப்பாட்டத்திற்கு தப்புத்தப்பாய் டான்ஸ் ஆடுகிறார் அக்னி.

அமரன்: "ஏம்பா, ஓவியன் எவன்யா இந்த பரதேசிக்கெல்லாம் பொறுப்பாளர் போஸ்ட் கொடுத்தது, பாரு.. ட்ரவுஸர் கூட இடுப்பில நிக்கமாட்டேங்குது, இதுல நாய் இடுப்ப வளைச்சி, வளைச்சி பெல்லி டான்ஸ் ஆடுதாம்மா...."

ஓவியன்: "யோவ் ரவுசு, சத்தம் போட்டு பேசாதய்யா... அறிஞர் காதுல வுழுந்து தொலைச்சிடப் போகுது, அப்புறம் நம்ம பொறுப்பாளர் போஸ்டும் சேர்ந்து அம்பேல் ஆயிடும்... நீ கொஞ்சம் வாயப்பொத்தீட்டு வாயா..."

அமரன்: "சரிங்க பார்ட்னர்... ஆனா இந்த அக்னிய ட்ரவுஸர்ல இருந்து கையெடுக்காம ஆடச்சொல்லுங்க பார்ட்னர்.. அவன் மட்டும் ட்ரவுஸர்ல இருந்து கையெடுத்தான், அந்த கசமாலத்த எவன் பார்க்குறது... அப்புறம் நான் பாடையக் கீழே போட்டுட்டு ஓடிப்போயிருவேன் ஆமா..."

இப்போது பாடை மலரின் வீட்டை நெருங்க, தப்பாட்டத்தின் ஓசை விண்ணைப் பிளக்கிறது. கோலம் போட்டுக்கொண்டிருக்கும் மலர், ஆடிக்கொண்டிருக்கும் அக்னிக்கு கம்பெனி கொடுக்கிறாள்.

"ஆ, டண்டண்டண் ணக்கர ணக்கர, டண்டண்டண் ணக்கர ணக்கர..." என்ற இசைக்கேற்ப, மலர் தனது இரண்டு கைவிரல்களையும் மடக்கி, அவற்றின் பெருவிரல்களை வாயில் வைத்து எச்சியாக்கி, இரண்டு பெருவிரல்களையும் காட்டி, பூமகளுக்கு சவால் விடும் தோணியில் டப்பாங்குத்து டான்ஸ் ஆடுகிறார்.

இதைப்பார்த்துக் கொண்டிருக்கும் அக்னிக்கும், மலர் போன்று ஆட ஆசை தான். அதற்காக இடுப்பில் நழுவும் அரைக்கால் டவுசரிலிருந்து ஒரு கையை எடுத்து வாயில் எச்சில் வைக்கப்போகிறார்.

அமரன்: "டேய் மக்குனி.... டவுசரிலிருந்து கை எடுத்தே மவனே, பின்னாடியே உதச்சுப் போடுவேண்டா..."

ஓவியன்: "விடுங்க பார்ட்னர், பச்சக்கொளந்த ஆடுனா ஆடிட்டு போவுது... ட்ரவுஸர் அவுந்தாலும் யாரும் அக்னியப்பார்த்து, ஷேம் ஷேம் பப்பி ஷேம் சொல்லமாட்டாங்க..."

தன்னைப்பார்த்து நக்கலாய் ஆடும் மலரைப் பார்த்து வேகத்துடன் வந்த பூமகள், "ஆ, டண்டண்டண் ணக்கர ணக்கர, டண்டண்டண் ணக்கர ணக்கர..." என்ற இசைக்கேற்ப, தானும் மலர் போன்று இரண்டு கைவிரல்களையும் மடக்கி, அவற்றின் பெருவிரல்களை வாயில் வைத்து எச்சியாக்கி, அந்த இரண்டு எச்சிப்பெருவிரல்களையும் மலரின் நெற்றியில் வைத்து தேய்த்துக் கொண்டே டப்பாங்குத்து ஆடினாள்.

மலர், அக்னி மற்றும் பூமகளின் டப்பாங்குத்து அந்தப் பகுதியையே அதிரவைத்துக் கொண்டிருந்தது. இதுல கூட்டத்தோட கோவிந்தாவா, நம்ம அன்புரசிகனும் சேர்ந்து கொண்டார்.

அப்போது பாடையில் இருக்கும் பீடை (நானே தான்) "பூவு...... யம்மா பூவு...... அண்ணன் கூப்பிடுறண்டா... இங்கன பாரும்மா ராசாத்தி..." என்று குரல் கொடுத்தேன்.

அவளுக்கு எங்கே காது கேட்கப்போகுது. கேட்டாலும் கேட்காதமாதிரி நடிக்கிறவ இல்ல பூவு. ஆனா, முன்னாடி மட்டும் அண்ணா, நீ இல்லாம நான் இல்ல என்று ஃபிலிம் காட்டுவா.

ஆனா அடிச்சாலும் புடிச்சாலும், எம்பொண்டாட்டி பவானி பாசக்கார பயபுள்ள மக்கா. "டேய், எவண்டா அவன், எம்மவராசன பாடயில போட்டு எடுத்துட்டு வர்றது....... புடிங்.........." என்று கோயமுத்தூரின் அத்தனை கெட்டவார்த்தையும் கவிச்சமராய் வெளிவர, அமரனும், ஓவியனும் பாடையை அந்த இடத்தில் போட்டுவிட்டு, அப்படியே ஓடிவிட்டனர்.

அக்னி மட்டும் ஓடும்போது, கியர் போடுவதற்காக ட்ரவுஸரிலிருந்து கை எடுத்ததினால், ட்ரவுஸர் அவுந்து விழ, அது கூட தெரியாமல் ஓடினார். அவருக்குப் பின்னாடி நாய் துரத்தியது வேறு கதை.

பாடையிலிருந்து கீழே விழுந்த நான், "அம்ம.. யப்பா.. பாடையைக் கீழே போடும்போதுகூட... பலமாக்கீழே போட்டு பின்னாடி பொளக்க வச்சிட்டானுகளே... இந்தப்படுபாவி பசங்க..." என்றேன். எல்லாரும் என்னைக் கைத்தாங்கலாக வீட்டிற்குள் கொண்டு சென்று, ஒத்தடம் கொடுத்தனர்.

அப்போது தனது பரட்டைத்தலையையும், சோக தாடியையும் தடவிக்கொண்டே,
"யாருடா அடிச்சா......
எதுக்குடா அடிச்சா........ என்று டி.ஆர் ஸ்டைலில் அன்புரசிகன் என்னைப்பார்த்துக் கேட்டார்.

"ச்ச்சீ..... வாயமூடு பண்ணாட...... அவனுக இருக்கும்போது கேக்குறதுக்கு துப்பில்ல... அவனுக ஓடுனதுக்கப்புறம் எதுகை, மோனைலையா பேசுற... தொட நடுங்கி பயில்வான்.. என்று அவர் தங்கச்சி மலர் சொன்னாள்.

நான்: அதுவந்துமா........ நேத்து இங்கிருந்து வேலைக்குப் போலாம்னு போய் பஸ்ஸ்டான்டில நின்னேனா... அப்ப ஒரு பஸ் வந்துச்சும்மா... அதுக்குள்ள கண்டக்டர் நம்ம சிவா.ஜி பயபுள்ளமா... அட இவந்தான் "நம்மல்லாம் ஒண்ணுக்குள்ள ஒண்ணுனு.." சொல்லிருக்கானேனு பஸ்ஸில ஏறிட்டம்மா....

சிவா.ஜி: டேய்... சாவுகிராக்கி ஓடுற பஸ்ஸுல தான் நீ ஏறுவியா...

நான்: ரிஸ்க் எடுக்கிறதுனா... நமக்கு ரஸ்க் சாப்பிடுற மாதிரி தெரியுமில்ல..

சிவா.ஜி: சரி, சரி வெட்டி நாயம் பேசாம, டிக்கெட் எடு.

நான்: அதுதான் நேத்தே எடுத்துட்டோமில்ல..


சிவா.ஜி: அதுதான் நேத்தே ஒதச்சமில்ல, இன்னிக்கு மூடிட்டு எடு.


(இப்படியே பேசிக்கொண்டு இருக்கையில், பஸ் சித்ரா ஸ்டாப்பிங் வந்துவிட்டது. நான் டிக்கெட் எடுக்காமலேயே அந்த ஸ்டாப்பிங்கில் இறங்கிவிட்டேன்)

சித்ரா பஸ் ஸ்டாப்பில் தான், இதயத்தின் டீக்கடை இருக்கிறது. கடைக்கு முன்னர் நீளமான இரண்டு பெஞ்ச் போடப்பட்டிருக்கும். அதன் ஒரு பெஞ்சில் வாத்தியார் கையில் டீ கிளாசுடன் உட்கார்ந்திருந்தார். அவருக்கு பின்னால் கையைக் கட்டிக்கொண்டு நேசம் நின்று கொண்டிருந்தார். நான்போய் வாத்தியாருக்கு முன்னாடி போடப்பட்டிருக்கும் பெஞ்சில் கால்மேல் கால் போட்டு உட்கார்ந்தேன்.

வாத்தியார்: "டேய்... உள்ளார ஒண்ணும் போடலையேடா.. கருமம் புடிச்சவனே...

நேசம்: யோவ், இதயம். ஏய்யா எங்க வாத்தியாரு டீயில சர்க்கரை போடாம குடுத்திருக்க

வாத்தியார்: டேய், நான் டீயச் சொல்லடா. முன்னாடி உக்காந்திருக்கான் பாரு.. புள்ளிராஜா, அவன் லுங்கிக்குள்ள ஒண்ணும் போடலடா... அந்த நாய மொதல்ல கால இறக்கி வைக்கச் சொல்லுடா....

(அப்போது தான் எனது தோளில், அக்னி, அமரன் மற்றும் ஓவியன் மூவருடைய கைகள் பிடித்துக் குலுக்கின)

பூமகளிடம் கதை சொல்லிக்கொண்டிருக்கும் நான்: தூக்கிட்டுப்போய் இஷ்டம் போல அடிச்சானுகமா...... ஒருத்தன் மூக்குக்குள்ள கட்டெறும்ப வுட்டான்... இன்னொருத்தன் காதுக்குள்ள கடப்பாறையை வுட்டான்... இந்த அக்னிப்பையன் என் நாக்கப்புடிச்சு செவுத்தல்யெல்லாம் தேய்ச்சான்மா....

பூமகள்: ஏன்னா... இவுளோ அடிச்சிருக்கானுக அந்த ரவுடிப்பசங்க... உன் கையென்ன பூப்பரிச்சிட்டா இருந்துச்சு... நீ என்ன திருப்பி அடிக்கலையா.....

நான்: நானும் திருப்பி அடிக்கலாம்னு தான் நினைச்சேன்... "இவன் எவ்ளோ அடிச்சாலும் தாங்குறான்... இவன் ரொம்ப நல்லவண்டா........." என்று அந்த ஓவியன் ஒரு வார்த்தை சொல்லிட்டாம்மா...... "உவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வும்ம்ம்ம்..... உவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வும்...." என்று அழுதேன்.


பாகம் 1 (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=286879&postcount=1) பாகம் 3 (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=310416&postcount=8)

பூமகள்
19-10-2007, 12:16 PM
S. ராஜா அண்ணா.........
அநியாயத்துக்கு பூவை மலரோட கோலம் காப்பி அடிக்க வைச்சி...(பூ கோலம் போட்டா சும்மா அதிருமில்ல...!! இதுல பூவை காப்பி அடிக்க வைச்சிட்டீங்களே???) மலரையும் என்னையும் விசில் அடிக்க வைச்சி என்னவெல்லாம் பண்றீங்க...??
(இருங்க இருங்க னாவ்..................உங்களுக்கு வைக்கிறேன் ஆப்பு......!!)

ரொம்ப நகைச்சுவையா இருக்கு.... பாவம்...... அக்னி... அன்பு... ஓவியர்...அமரன்...
இங்கே இதயம் டீக்கடையா...??
ஹி ஹி...
ரொம்ப நன்னா இருக்கு.......................
கொண்டாட்டம் களைகட்டுது....
உங்கள பிடிக்க தமிழ் மன்ற சீஐடி கள்.... அ,அ,அ,ஓ வந்திட்டே இருக்காங்கன்னோவ்.............!!

பூ எஸ்கேப்........!!

நேசம்
19-10-2007, 05:29 PM
அட ராசா ! அமரன் ஒவியன் மற்றும் அக்னியை வறுத்து எடுப்பேன்னு பார்த்தா, சேம் சைட் கோல் போட்டு உன்னை நியே........

நி ரொம்ப நல்லவன்ப்பா ?

ஓவியன்
21-10-2007, 04:03 AM
படிச்சதும் ரொம்ப கோபம் வந்திச்சு
ஆனா
தொடர்ந்து படிச்சதும் அது தணிச்சிடுச்சு...

ஏன்னா, நம்மளை பிணம்(?) தூக்க வைத்தாலும் அக்கினியை ஆடு விட்டுறீக்கிங்களே - அதான்.:D

நுரையீரல்
21-10-2007, 04:17 AM
படிச்சதும் ரொம்ப கோபம் வந்திச்சு
ஆனா
தொடர்ந்து படிச்சதும் அது தணிச்சிடுச்சு...

ஏன்னா, நம்மளை பிணம்(?) தூக்க வைத்தாலும் அக்கினியை ஆடு விட்டுறீக்கிங்களே - அதான்.:D
என்ன ஒரு நல்லெண்ணம் :icon_b: :icon_b:

சிவா.ஜி
21-10-2007, 04:31 AM
அடடா..கலாய்ப்புன்னா இதான் கலாய்ப்பு...நெத்தியடி தலைவரே....பிரமாதமா எழுதியிருக்கீங்க...அதுலயும் நம்ம தங்காச்சி மலரு எச்ச்தி தொட்டுக்கிட்டு குத்தாட்டம் போடறத நெனச்சிப் பாத்தாலே சிரிப்பா இருக்கு.பாவம் அக்னியத்தான் பப்பி ஷேம் பண்ணிட்டீங்க.இருந்தாலும் என் தங்கை அதாங்க உங்க மனைவி... உங்களை ரொம்பத்தான் காச்சுறாங்க. ஏம்மா பூமகள் நீயாவது அண்ணனை சப்போர்ட் பண்ணக்கூடாதா. பாரு இப்ப பாடையில படுத்துக்கிட்டு வர்ற ரேஞ்சுக்குப் போய்ட்டார்.

lolluvathiyar
22-10-2007, 01:46 PM
ஆகா புள்ளிராஜா தீடிர் பிரவேசமாக மன்றத்தில் நுழைந்து அத்தனை ஆளுகளையும் ஏதோ ரொம்ப நாள் பழக்கம் போல இழுத்து ஒரு வழி பன்னீட்டீங்களே. அதுலயும் அக்னியை ரொப்ப பாடு படுத்தீட்டீங்க. ஆனா இதயத்தை சும்மா டீகடை பாயாக மட்டும் நிக்க வச்சது நல்லா இல்ல ஆமா, சொல்லிபுட்டேன். இங்கு இக்ராம் நு ஒருத்தரு பிரியானிகடை ஆரம்பிச்சு அதுல தெரியாதனமா இதயத்தை வேலைக்கு வச்சு, கடையையே ஒரு வழி பன்னீட்டாவரு. அவர சாதர்னமா.....
அப்புரம் என் தானை தளபதி சிவா ஜி கன்டக்டராவா பன்னரது.

பாராட்டுகள்

நுரையீரல்
12-12-2007, 07:58 AM
கொண்டாட்டம் - 3 (திரைக்கதை வடிவில்)


மைடியர் கூத்தாண்டன்
காட்சி எண் - 1 / லொள்ளுபுரி அந்தப்புரம்

Point Of View Shot - ஒரு கிழிந்த ஓலைப்பாயின் கீழ்ப்பாகம். அங்கிருந்து கொஞ்சம் கொஞ்சமாக கேமரா மேலே நகரும் போது, கேமராவின் பார்வை விரிந்து அது Mid Shot ஆக மாறுகிறது.

Mid Shot - கிழிந்த ஓலைப்பாயில் மாவீரன் லொள்ளு வாத்தியார் படுத்திருக்கிறார். அந்தப்புர பெண்கள் லொள்ளரைச் சுற்றி நின்று,

"ஊரோரம் புளியமரம்..
உலுப்பிவிட்டா சள சளக்கும்..
நான் பிறந்த மதுரையில..
ஆளுக்காளு நாட்டாமையாம்..."
என்ற பாட்டை பாடிக் கொண்டே அனைவரும் ஆடுகிறார்கள்.

Medium Close Up - மன்னரின் அறைக்கதவு தட்டும் சத்தம்.

Mid Shot - ஓலைப்பாயிலிருந்து அரக்கப் பரக்க எழுந்து உட்காருகிறார் லொள்ளர்.

லொள்ளு : ஏய் நிறுத்துங்கடி.. நிறுத்துங்கடி..

காவலாளி : மன்னர் மன்னா.. எங்கள் பாட்டு சரியில்லையா? இல்லை ஆட்டம் தான் சரியில்லையா? எதற்காக நிறுத்தச் சொல்கிறீர்கள்...

லொள்ளு : காரணம் சொன்னாத் தான் நிறுத்துவியகளோ... அடச்சீ நிறுத்துங்கடினா..

காவலாளி : ஏன் மன்னா... அரசி கருப்பாயியை நினைத்து கலீஜ் ஆயிட்டீங்களா..

லொள்ளு : பயமா.. எனக்கா... அதுவும் அந்த கிழட்டு கருப்பாயியை நினைத்தா... உன் வாயில ஆசிட்டு ஊத்திக் கழுவ.. கடன்காரனுக்கு பொறந்தவனே... (தனது ஒட்டு மீசையை சுருட்டிக் கொண்டே) யாரோ வாயிற்கதவைத் தட்டுகிறார்கள்... அதனால் தான் கும்மாளத்தை நிறுத்தச் சொன்னேன்... யாராவது போய் வாயிற்கதவை திறந்துவிடுங்கள்.

Cutaway \ Top Angle - கூடி நின்று கும்மாளமடித்த காவலாளிகள் அனைவரும் வாயிற்கதவை நோக்கி ஓடுகிறார்கள்.

Wide Shot - வாயிற்கதவு திறக்கப்படுகிறது. உள்ளே நுழைகிறார் கோல் சொல்லி நேசம். (லொள்ளுபுரியிலுள்ள ஒற்றர்களை கோல்சொல்லி என்று தான் அழைப்பார்கள்)

நேசம் : ரா.. ரா.. ரா.... ராஜாதி ராஜ ரா.. ரா.. ரா.. ராஜ (திக்குகிறார்)

லொள்ளு : அந்தப்புரத்தில் நான் ஓய்வெடுக்கும் சமயத்தில் வந்து என்னை disturb பண்ணக் கூடாது என்று எத்தனை முறை சொல்லியிருக்கிறேன் (மன்னர் எட்டாங் கிளாசு வரை மெட்ரிகுலேஷனில் படித்ததால், இடையிடையே இங்கிலீஷ் பேசுவார் கண்டுக்கக் கூடாது).

அடிக்கடி இந்தமாதிரி வந்து disturb பண்ணக் கூடாது என்று தானே, தனி சட்டமே போட்டிருக்கிறேன்!!! மறந்துவிட்டீரா நேசம்...

நேசம் : ஐயோ மன்னா... சட்டம், கட்டம் எல்லாம் மக்களுக்குத் தான்.. நாமெல்லாம் ஒண்ணுக்குள்ள ஒண்ணு... நான் உங்கள் ஒற்றன் (கோல் சொல்லி) என்பதை மறந்துவிட வேண்டாம்...

சரக்குக் கடைக்கு சென்று மூக்கு முட்ட குடிச்சி மட்டை ஆகும்போது, என் தோளில் கையைப் போட்டு, "மாப்பிளை என்னைக் கைத்தாங்கலாக் கொண்டு போய் வூட்டாண்ட வுட்டுரு..." என்று கெஞ்சும் போது எங்கே போனது உங்கள் சட்டம்.

லொள்ளு : பழைய கதை இருக்கட்டும். நேராக மேட்டருக்கு வாருங்கள். தாங்கள் வந்த காரணம் என்னவோ.

நேசம் : வாத்தி... எத்தன நாளைக்குத் தான் இந்த திருநங்கைகள் ஆடிப்பாட, அதப் பார்த்து ஜொள் விட்டுக் கொண்டு இருப்பீர்கள்...

லொள்ளு : என்னது வாத்தியா... என்ன உம்முடைய நா கொஞ்சம் ஓவராக பிரள்கிறது... நான் உனது மன்னன் ஞாபகமிருக்கட்டும்.

நேசம் : வாத்தி தானே உம்ம பேரு.. அதச் சொன்னா கோவம் வருதா.. சரி சரி நான் சொல்ல வந்த குஜ்ஜால் மேட்டரை சொல்லிவிடுகிறேன், அதன் பின் நம் வாக்குவாதத்தை வைத்துக் கொள்வோம்.

லொள்ளு : என்னது குஜ்ஜால் மேட்டரா (சந்தோஷத்தில் புன்னகைத்து வாயைத்திறக்கிறார்)

நேசம் : (மெல்லிய குரலில்) கருமம்.. கருமம்... (மாதத்தில் நாலு நாட்கள் மட்டுமே பல் தேய்க்கும், மன்னரின் வாய் விரிப்பால் ஏற்பட்ட கப் தாங்காமல் மூக்கைப் பொத்திக் கொள்கிறார் நேசம்).

Matrix Shot - பரட்டைத் தலையுடன் வாயைத்திறந்திருக்கும் லொள்ளர் மற்றும் அவரருகில் கப்புத் தாங்காமல் மூக்கைப் பொத்திக் கொண்டிருக்கும் நேசம் - இருவரையும் ஆறு சுற்றுச் சுற்றி Matrix Shot.

Medium Close Up - லொள்ளு மன்னரின் இடுப்பில், நேசத்தின் கை இறுக்கமாக கிள்ளுகிறது.

லொள்ளு : அய்யோ... நான் இல்ல, நான் இல்ல... (அரசி கருப்பாயி தான் கிள்ளுகிறாரோ என்ற அச்சத்தில் முகம் வெளுக்கிறது)

நேசம் : மன்னிச்சுக்கோ தலைவா.. நான் தான் கிள்ளினேன்... அதுவும் தாங்கள் கனவிலிருந்து விடுபடத் தான் கிள்ளினேன்..

லொள்ளு : குஜ்ஜால் மேட்டருனு சொல்ற.. அது தான் கனவுக்கு போயிட்டேன்... இன்னொரு கிள்ளு வேண்டுமானாலும் கிள்ளிக்கோ... அதனால் பரவாயில்லை தோஸ்து...

சரி சரி சட்டு புட்டுனு, நீர் சொல்ல வந்த குஜ்ஜால் மேட்டரு என்ன என்பதைச் சொல்லும் ஓய் முதலில்..

நேசம் : மன்னர் மன்னா... பல்லவர்கள் ஆட்சிபுரியும், நமது அண்டை நாடான சென்னை மாநகரத்திலே, இரண்டு பேரழகிகள் இருக்கிறார்களாம்...

லொள்ளு : பேரழகிகள் என்றால், சேர நாட்டு ஃபிகர்களை விட அழகோ? அந்த அழகிகளின் பெயர் மற்றும் வேறு ஏதாவது விபரம் தெரியுமா உமக்கு...

நேசம் : இதயம் என்ற ஒரு பெரும் தொழிலதிபர் தான் அந்தப் பேரழகிகளுக்கு சொந்தக்காரராம்... அழகிகளைப் பராமரிப்பது புள்ளி ராஜா என்ற டுபாக்கூர் ஆசாமியாம்...

லொள்ளு : அதென்ன இதயம், நுரையீரல் என்று வித்தியாசமான பெயர்? (அதிராம்)பட்டணத்துக் காரர்கள் குடல், குந்தாணி என்றெல்லாம் பெயர் வைத்துக் கொள்வார்கள் போலிருக்கிறதே. நல்லவேளை சிறுநீரகம், பெருமூளை, சிறுமூளை என்றெல்லாம் பெயர் வைக்கவில்லை.

நேசம் : இதயத்தை சாதாரணமானவர் என்று நினைக்காதீர்கள்.. அவர் லேசுப்பட்ட மனிதரல்ல மன்னா... ஒரு பொருளை அவ்வளவு சீக்கிரம் வாங்கமாட்டார்.. ஆயிரத்தெட்டு நொண, நொட்ட கேள்விகள் கேட்டு, அதன் தரத்தை ஆராய்ந்த பின்னரே, சவுதி அரேபியாவிலிருந்து அந்த இரு அழகிகளையும் வாங்கி வந்தாராம்... அழகிகளின் பெயர் கூட ஏதோ மும்தாஜ் மற்றும் நமிதா என்று கேள்விப்பட்டேன்...

லொள்ளு : ஓ..... அவர்கள் அரேபியக் குதிரைகளா.. (வாயைத் திறக்கிறார்)

Close Up - தொறந்த வூட்டுக்குள்ள நாய் நுழையுற மாதிரி - மன்னரின் வாய்க்குள் ஒரு ஈ நுழைந்து ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கிறது. அதை நறுக், நறுக்கென்று கடித்து, சவைத்துக் கொன்று தூ, தூ..வென்று துப்புகிறார் லொள்ளர்.

லொள்ளு : சரி, சரி இந்த விஷயம் நம் அரண்மனையில் உள்ள யாருக்கும் தெரிய வேண்டாம்.. நீயும், நானும் மட்டும் சென்னைக்கு செல்வோம்..

நேசம் : ஐயோ... என்ன மன்னா சொல்கிறீர்கள்.. சென்னைக்கா? சென்னை வாசிகள் எல்லாம் பயங்கரமானவர்கள்.. வெறும் வாயிலேயே ஏரோப்ளான் ஓட்டுவார்கள்... நம்மை மாதிரி இளிச்சவாயர்கள் சிக்கினால் - தலையில் மிளகாய் அரைத்து விடுவார்கள்...

எதற்கும் நமது சுகந்தப்ரீதனையும் அழைத்துச் செல்லலாம் மன்னா... அவர் நம்முடன் இருந்தால் எந்த மாதிரி ஆட்களுடனும் நாவாடி, நமக்கு ஏற்படும் அல்லல், துள்ளல்களிலிருந்து நம்மைக் காப்பாற்றுவார்.

லொள்ளு : காரியத்தையே கெடுத்து விடுவாய் போலிருக்கிறதே நேசம்... சுகந்தப்ரீதன் நல்ல வாய்ச்சப்பிடாச்சி தெரிந்தவர் தான் ஒத்துக் கொள்கிறேன்.. ஆனால் அரசி கருப்பாயிக்கும் இவர் கோல்சொல்லி (ஒற்றர்) வேலையை ஓவர்டைமாக பார்க்கிறார்.

சுகந்தன் அரசியிடம் போட்டுக் கொடுத்தால், என்னை தீர்த்துக் கட்டிவிடுவாள் என் தர்மபத்தினி. அதனால் நீயும், நானும் மட்டும் தான் சென்னைக்குப் போகிறோம், அதுவும் ராத்திரியோடு ராத்திரியா...

நேசம் : உங்கள் எண்ணப்படியே ஆகட்டும் மன்னா...


மைடியர் கூத்தாண்டன்
காட்சி எண் - 2 / கூவம் நதிக்கரை

Very Wide Shot - கூவம் நதியின் கரையோரத்தில் மும்தாஜும், நமிதாவும் ஒய்யாரமாக நின்று கொண்டிருக்கிறார்கள். புள்ளி ராஜாவும், இதயமும் அருகருகே அமர்ந்திருக்கிறார்கள்.

Two Shot -
புள்ளி ராஜா : அண்ணே... அண்ணே... ஒரு சந்தேகம் அண்ணே...

இதயம் : எங்கடா... ரொம்ப நாளா சந்தேகத்தையே காணோம்னு பார்த்தேன்... உன் அக்கப் போர ஆரம்பிச்சிட்டியா...

சரி.. இந்த ஆல் ரவுண்டர் அழகு ராஜாகிட்ட.. எதை வேண்ணாலும் கேளு... மவனே... எசகு பிசகா எதாவது கேட்டே.. எட்டி ஒதச்சுப்புடுவேன்..

புள்ளி ராஜா : இல்லண்ணே... அதாவது நீங்க வச்சிருக்கிறது ரெண்டு கழுதை. அதுக்கு ஏண்ணே... மும்தாஜ், நமீதானு பேர் வச்சீங்க...

இதயம் : டேய் டவராத் தலையா... உனக்கு சினிமா நடிகைகள்ல யார ரொம்ப பிடிக்கும்!!??..

புள்ளி ராஜா : எனக்கு.... போன வருஷம் மும்தாஜ் பிடிக்கும். இந்த வருஷம் நமிதாவப் பிடிக்கும்ணே...

இதயம் : பாருங்க மகாஜனங்களே.. இந்தக் கரிமேட்டு கருவாயனுக்கு மும்தாஜையும், நமிதாவையும் புடிக்குமாம... (ஒவ்வேவ்வே.. என வாயில் அடித்துக் கொண்டே)

சரி வுடு.. அவங்களுக்கு உன்ன புடிக்குமா..

புள்ளி ராஜா : அதெப்படிண்ணே புடிக்கும்... அவங்க தான் இன்னும் என்னப் பார்க்கலையே... பார்த்தா, ஒருவேளை புடிக்குமா இருக்கும்...

இதயம் : யாரு உன்னைய... அதாவது மும்தாஜும், நமிதாவும் உன்னையப் பார்த்திட்டா... அப்படியே உன் அழகில மயங்கி பின்னாடி வந்துடுவாங்கனு வேற நெனப்பு இருக்கா மனசுல..

த்தூ.. த்தூ.. எந்திரிடா காட்டெருமை நாயே.. இன்னொரு தடவை இந்த மாதிரி சொன்னே... மவனே கூவத்துக்குள்ள போட்டு முக்கி எடுத்திடுவேன் நாயே...

புள்ளி ராஜா : இவரு பெரிய மைனர் குஞ்சு... (கோபத்தில் முறைக்கிறார்)

இதயம் : டேய்... எலி உருண்டத் தலையா... என்ன தான் கழுதயை கழுவி வுடுற கருவாட்டுத் தலையனா இருந்தாலும், என்னோட வேலைக்கார நாய் நீயு..

உன்ன இந்தக் கழுதைகளுக்க் ரொம்ப பிடிக்கும்.. அதுனால தான் இந்தக் கழுதைகளுக்கு மும்தாஜ், நமிதானு பேர வச்சேன்.

இப்பச் சொல்லு.. மும்தாஜுக்கும், நமிதாவுக்கும் உன்ன புடிக்குமா? இல்லையா....

புள்ளி ராஜா : கிக்கிக்.. கிக்கிக்.. கிக்கிக்.. கீ... (வாயைப் பொத்திக் கொண்டு சிரிக்கிறார்). அண்ணே... இந்த மும்தாஜுக்கும், நமிதாவுக்கும் கூட உங்களப் புடிக்கலையேண்ணே... கிக்கிக்.. கிக்கிக்.. கிக்கிக்.. கீ... (மீண்டும் வாயைப் பொத்திக் கொண்டு சிரிக்கிறார்).

இதயம் : எளக்காரத்தப் பாரு.. பண்ணாட நாயுக்கு... சிரிக்காதடா.. சிரிச்சே... மவனே... இன்னிக்கு ஒரு கொலை விழுந்திடும்...


மைடியர் கூத்தாண்டன்
காட்சி எண் - 3 / கூவம் நதிக்கரை

Very Wide Shot - கூவம் நதியின் கரையோரத்தில் மும்தாஜும், நமிதாவும் ஒய்யாரமாக நின்று கொண்டிருக்கிறார்கள். புள்ளி ராஜாவும், இதயமும் அருகருகே அமர்ந்திருக்கிறார்கள்.

Two Shot - லொள்ளுபுரி மன்னரும், கோல் சொல்லி நேசமும், புள்ளி மற்றும் இதயம் இருக்கும் இடத்திற்கு அருகில் செல்கிறார்கள். (முகமது பின் துக்ளக் சோ போன்று துள்ளிக் குதித்து நடக்கும் லொள்ளர் அரச உடை அணிந்திருக்கிறார், அவரது பின்னால் மன்னரின் பாவாடையைப் பிடித்துக் கொண்டு நேசமும் ஓடுகிறார்).

நேசம் : யாரப்பா... உங்களில் இதயம்??!!

புள்ளி ராஜா : அண்ணே... வி.ஜி.பியில மரக்கட்டை மாதிரி ராஜா வேஷம் போட்டுட்டு நிற்பாரே ஒருத்தர்... அவரு இங்கே வந்திருக்காருண்ணே...

இதயம் : நான் தான் இதயம்... என்ன வேணும் உங்களுக்கு... ஏய்யா... துணியை துவைக்க போடனும்னா நேரா கூவத்துக்கே வந்திடுவீங்களா... உங்க ராஜா உடையெல்லாம் கையில துவைக்க முடியாது.. வேணும்னா பக்கத்துல இருக்கிற டிரைவாஷ் கடையில குடுத்து துவைங்கய்யா...

லொள்ளு : என்ன வாயு கொஞ்சம் ஓவரா நீளுது... நான் தான் லொள்ளுபுரி மன்னன். வார்த்தையை அடக்கி வாசி...

இதயம் : யோவ்... என்னய்யா காலங்காத்தால உங்களால பெரிய ரோதனையாப் போச்சுய்யா... மவனே நாடகக் கம்பெனி டிரஸ் போட்டுட்டு வந்ததுமில்லாம.. அரசன், புருஷன் என்று எங்கிட்டயே உன் டகுல் பாச்சா வேலையைக் காட்டுரயா... இன்னும் கொஞ்சம் நேரம் இங்கே நின்ன... பக்கத்துல இருக்குற சொறி நாய்க வந்து தொடையைக் கடிக்கறதுக்குள்ள திரும்பிப் பார்க்காம ஓடிப்போயிரு..

நேசம் : இதயம் அவர்களே... நீங்கள் தவறாகப் புரிந்துவிட்டீர் எம்மன்னரை... அவர் உண்மையாலுமே மன்னர் தான்...

இதயம் : சரி மன்னர் தான்.. நான் தான் உங்க டிரஸ் எல்லாம் கையில துவைக்க முடியாதுனு சொல்றேனே.. சொன்னா கேளுங்கய்யா...

லொள்ளு : நாங்கள் துவைக்க வரவில்லை மானிடா...

இதயம் : அப்புறம் எதுக்கு வந்த? துவைக்கிறத வேடிக்கை பார்க்க வந்தியாக்கும்..

லொள்ளு : இல்லை அன்பரே... அதற்கெல்லாம் வரவில்லை... இதோ என்னுடன் வந்திருக்கிறாரே எம் நாட்டு கோல் சொல்லி நேசம்... இவர் தான் சொன்னார் - உம்மிடம் இரண்டு பேரழகிகள் இருப்பதாகவும், அவர்களுடைய பெயர் கூட மும்தாஜ் மற்றும் நமிதா என்று கூறினார்...

உம்மிடம் இருக்கும் மும்தாஜ் மற்றும் நமிதாவை, நல்ல விலைக்குப் பேசி வாங்கிட்டுப் போகலாம் என்று தான் இங்கே வந்தோம்...

இதயம் : ஏய்யா... நீர் மன்னரா... இல்ல தெரியாமத்தான் கேக்குறேன் நீ மன்னரா... போயும் போயும் இந்தப் பொடிமட்ட நேசம் சொல்ற பேச்சக் கேட்டுட்டு நம்பி வந்திருக்கியே... உம்மை என்ன செய்வது...

லொள்ளு : என்ன சொல்கிறீர், சற்று புரியும்படியா சொல்வீராக...

இதயம் : யோவ்... டமுக்கு டப்பா மன்னா... எங்கிட்ட ரெண்டு கழுதை தான்யா இருக்கு... அதுக்குத்தான் மும்தாஜ், நமிதானு பேர் வச்சிருக்கேன்... கழுதையை வாங்குறதுக்கா... நாடு விட்டு நாடு வந்திருக்கீங்களேய்யா...

பாரு அவன் முளிக்கிற முளியப்பாரு... ஓடுறான் பாரு.. வுடாதே... புடி... புடி...

Extreme Wide Shot - நேசம் துண்டக் காணோம்... துணியக் காணோம் என்று தலை தெறிக்க ஓடுகிறார்..



பாகம் 1 (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=286879&postcount=1) பாகம் 2 (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=287950&postcount=1)

சிவா.ஜி
12-12-2007, 08:59 AM
அசத்தலோ அசத்தல். ராஜா...பின்னிட்டீங்க.செமையா காமிரா ஆன்கிள்லாம் வெச்சு,ஸ்கீரீன் ப்ளேயை அட்டகாசமா பண்ணியிருக்கீங்க.அதுலயும்,இதயமும்,புள்ளிராசாவும் பேசிக்கறது படு பிரமாதம்.அப்படியே கவுண்டரும்,செந்திலும் மாதிரி இருக்கு.
ஆனாலும் உங்களுக்கு ஓவர் குசும்புங்க ராசா.

நுரையீரல்
12-12-2007, 09:43 AM
அசத்தலோ அசத்தல். ராஜா...பின்னிட்டீங்க.செமையா காமிரா ஆன்கிள்லாம் வெச்சு,ஸ்கீரீன் ப்ளேயை அட்டகாசமா பண்ணியிருக்கீங்க.அதுலயும்,இதயமும்,புள்ளிராசாவும் பேசிக்கறது படு பிரமாதம்.அப்படியே கவுண்டரும்,செந்திலும் மாதிரி இருக்கு.
ஆனாலும் உங்களுக்கு ஓவர் குசும்புங்க ராசா.
உங்க வாழ்த்துக்கு நன்றி!!!

இதயத்த நெனச்சாலே கவுண்டரு தாங்க நினைவுக்கு வர்றார்.

தாமரை
12-12-2007, 09:57 AM
அய்யா ராசய்யா! இப்பிடிப் பின்றீரே!

lolluvathiyar
12-12-2007, 11:51 AM
அடபாவமே லொள்ளபுரி வரலாறு மன்றத்தில் பல பகுதிகளில் பரவுகிறது மாவீரன் லொள்ளுவாத்தியாரை எக்கசக்கமானவங்க சகட்டு மேனிக்கும் பயன்படுத்தராங்க ஆனா எனக்கு ராயல்டியா எதுவுமே தர்ரதில்ல.

அதுவும் நம்ம புள்ளிராஜ எழுத ஆரம்பிச்சிட்டா அப்புரம் சொல்லவா வேனும், காமிரா ஆங்கில் திருநங்கை, நமிதா மும்தாஜ் என்ற கழுதை வச்சு கதைய பின்னீட்டீங்க. அதுல இதயத்த இழுத்து

அடடா, ஏன் இதயம் ஏதோ நமிதா மேல ஆசை இருக்கலாம் அதுக்காக கழுதைகளுக்கு கூட இப்படி பேரு வச்சு பயனுள்ள கழுதையின் புனிதத்தை கெடுத்து விட்டீர்களே.
ஆனா அதென்னவோ நம்ம புள்ளிராஜாவுக்கு நேசத்துக்கும் முன் ஜன்ம பகை இருக்கும் போல இருக்கு சும்மா வாரு வாரு வாரராரு நேசத்த, இந்த தடவை மாப்பிளை சுகந்தபிரீத்தன் மேல பாசம் வச்சு விட்டுட்டாரு.
இனி அடுத்தது என்ன கூத்து பன்ன போராரோ அந்த பழனி மலை முருகனுக்கு தான் வெளிச்சம்.
தொடரவும் ராஜா பாராட்டுடன் 100 இபணம்

நுரையீரல்
12-12-2007, 12:18 PM
இனி அடுத்தது என்ன கூத்து பன்ன போராரோ அந்த பழனி மலை முருகனுக்கு தான் வெளிச்சம்.
தொடரவும் ராஜா பாராட்டுடன் 100 இபணம்
மன்னரின் தாராள மணத்தை புரிய வைத்துவிட்டீர்கள்.. கொடை வள்ளல் லொள்ளு வாத்தியார் வாழ்க.. வாழ்க..

யவனிகா
12-12-2007, 12:26 PM
இதெல்லாம் எங்க போய் முடியுமோ...மன்றத்திலயும் தண்ணி தெளிச்சி விட்டுட்டாங்க போல...இதயம் இன்னும் பின்னூட்டம் குடுக்காததப் பாத்தா பயமா இருக்கு....ஏதாவது ஏடாகூடமா நடக்குமோன்னு...

தாமரை
12-12-2007, 12:37 PM
ராஜா! பயப்படாதீங்க.. யார் மறைமுகமா மிரட்டல் விட்டாலும் சரி, நேரா மிரட்டினாலும் சரி, ஆஸ்பிடல்ல நாங்க அட்மிட் பண்ணிடறோம்..!!!

நுரையீரல்
12-12-2007, 12:45 PM
இதெல்லாம் எங்க போய் முடியுமோ...மன்றத்திலயும் தண்ணி தெளிச்சி விட்டுட்டாங்க போல...இதயம் இன்னும் பின்னூட்டம் குடுக்காததப் பாத்தா பயமா இருக்கு....ஏதாவது ஏடாகூடமா நடக்குமோன்னு...
யாருக்கு??!! இதயத்துக்கா??!! :icon_rollout: யவனிகா அவர்களே...

நுரையீரல்
12-12-2007, 12:46 PM
யார் மறைமுகமா மிரட்டல் விட்டாலும் சரி, நேரா மிரட்டினாலும் சரி, ஆஸ்பிடல்ல நாங்க அட்மிட் பண்ணிடறோம்..!!!
யாரை??!! இதயத்தையா??!! :icon_rollout: :icon_rollout:

ஏணுங்க தாமரை நீங்க சொல்றத பார்த்தா... ரவுடிகளுட்டே போய் இப்பத்தான் காசு கொடுத்துட்டு, இதயத்தோட ஃபோட்டோவையும் குடுத்திட்டு வர்ற மாதிரி பேசுறீங்க...

தாமரை
12-12-2007, 12:57 PM
யாரை??!! இதயத்தையா??!! :icon_rollout: :icon_rollout:

ஏணுங்க தாமரை நீங்க சொல்றத பார்த்தா... ரவுடிகளுட்டே போய் இப்பத்தான் காசு கொடுத்துட்டு, இதயத்தோட ஃபோட்டோவையும் குடுத்திட்டு வர்ற மாதிரி பேசுறீங்க...


தமிழ் மன்ற இதயம் அடிபட்டாலும் சரி, இல்லை வேற யாரோட இதயம் அடிபட்டாலும் சரி.. அட்மிட் பண்ணிடறோம்னு சொன்னேன்..


ஆமாம் ஏதாவது ஆயிடுமோன்னு அரசியல்வாதி ஸ்டைல்ல மிரட்டல் விட்டவங்களையே கேப்போமே!

நுரையீரல்
12-12-2007, 01:10 PM
இதயம் அடிபட்டாலும் சரி.. அட்மிட் பண்ணிடறோம்
ஒரு முடிவோட தான் இருக்கிங்க தாமரை... இதயத்தப் பத்தி தெரியாம மோதாதீங்க...

இதயம்
12-12-2007, 01:20 PM
ஏய்... நம்ம ஆளுங்கள்லாம் வாங்கப்பா..! 25 ஆட்டோ எடுத்துக்கங்க... 50 ஆசிட் பாட்டில்.. 100 பெட்ரோல் பாம்... 75 வீச்சருவா.. 2 கிலோ மிளகா பொடி.. 15 சன் டிவி சீரியல் கேஸட்...நம்ம பொண்டாட்டிங்களோட ஃபோட்டோ (திகில் பயங்காட்ட தான்..!) எல்லாம் எடுத்துக்கிட்டு கிளம்புங்கய்யா. இனி புள்ளி ராசாவை விட்டுவச்சா நாம மன்றத்தில ஒழுங்கா பொழைக்க முடியாது. அந்தாளை போய் போட்டாதான் இனி சரியாவும் ஆமா. ..!:sauer028::sauer028:

யோவ் புள்ளி..! நான் தெரியாம தான் கேக்கிறேன்..நான் என்னய்யா பாவம் பண்ணுனேன்..? உம்மகிட்ட இப்படி மாட்டிக்கிட்டு முழிக்கிறேனே.! நான் பாட்டுக்கு ஹெட்மாஸ்டர் கெட்டப்புல, பிரம்பு கையில இல்லாத குறையா எவ்ளோ கமுக்கமா மரியாதையோட மன்றத்துல சுத்திக்கிட்டிருந்தேன்.!! நீர் இங்க வந்த பிறகு தான் எனக்கு சனி பிடிச்சது..! கதை எழுதறேன், அதை எழுதறேன்னு எவ்வளவு கேவலமா என்னப்பத்தி எழுதணுமோ, அவ்வளவு எழுதி, என்னை ஒரு கஞ்சா கருப்பு ரேஞ்சுக்கு ஆக்குனது எதுக்குண்ணேன்..! யண்ணே.. நான் என்னண்ணே பண்ணுனேன்.?? ஏண்ணே இப்படி பண்ணிப்புட்டிய..?!!:traurig001::traurig001:

பயபுள்ள என்னாமா எழுதுது..?? இதுக்காகவே உக்காந்து சோறு, தண்ணிய விட்டுப்புட்டு, சொந்தக்காசு செலவு பண்ணி எழுதும் போலிருக்கு.. ஒரு மனுசனை சாய்க்க இப்புடியா கொலை வெறி புடிச்சி அலைவாங்க.. எனக்கும் தான் உம்ம மேல கோவம். அதுக்காக நான் என்ன இப்படியா.. கதை எழுதி, கழுத்தறுத்து சாவடிக்கிறேன்..? கமுக்கமா காலி பண்ண ப்ளான் பண்றேல..!! நீர் இப்படி எழுதுறதுக்கு, என்னை விஷ ஊசி போட்டு சாவடிச்சிறலாம். அவ்ளோ சித்திரவதையா இருக்குய்யா..! நான் அரபு நாட்டுக்கு போய் கழுதைய வாங்கி வந்தேனாம்.. அதுவும் கழுதைக்கு பேரு.. நமீதா.. மும்தாஜாம்..!! ஏன் ஜோதிலட்சுமி.. ஜெயமாலினி, சில்க் கழுதையெல்லாம் முன்னாடியே வித்துப்போச்சா...? இல்ல.. அதெல்லாம் செத்துப்போச்சா..? நல்ல எழுத்தாளன்லாம் இதைப்படிச்சான்னா நாக்க புடுங்கிக்கிட்டு செத்துப்போவான்..!:eek::eek:

சரி... நீர் இவ்வளவு எழுதினீரே.. பொதுவா கவுண்டர் செந்திலை போட்டு என்னா மிதி... மிதிப்பாரு..? அதை மட்டும் எழுதலையே ஏன்...? செந்திலுக்கு மிதி இல்லாட்டி அதுல சுவராஸியமா இருக்குமா என்ன..? அதனால நான் ஒரு முடிவு பண்ணிட்டேன். இந்த கதையில செந்திலுக்கு மிதி இல்லாத குறைய தீர்க்கிறதுக்காகவே அடுத்த வாரம் செந்தில நேரடியா பார்க்கிறதுக்காகவே ஜுபைல் போறேன்.. அங்க வச்சி மிதிக்கலாம்னு இருக்கேன். ஆனா...செந்திலை ஏதாவது ஏடாகூடமா பண்ணினா தாய்க்குலம் சோத்துல வெஷத்தை வச்சி வேலை காட்டிடுவாங்களோன்னு தான் பயமா இருக்கு..!!:eek: அதனால, சிவாவை வச்சி \"மலர்களைப்போல் தங்கை உறங்குகிறாள்...! அண்ணன் வாளெடுப்பான்(:D!) என்றே அமைதி கொண்டாள்!\"-ன்னு பாட்டுப்பாடச்சொல்லி, பாசமலர தூங்க வச்சி முதல்ல கண்ணக்கட்டிடணும். அதுக்கப்புறம் செந்திலை கோணிப்பைக்குள்ள போட்டு, வாசல்ல கட்டியிருக்கிற கழுதைக்கு பக்கத்துல கொண்டு போய் போட்டா கொள்ளை சந்தோஷத்தோட அது வேலைய காட்ட ஆரம்பிச்சிடும். அப்புறம் கழுதையாச்சி.. புள்ளிராஜாவாச்சி..!! கட்டம் கட்டிட்டேன்ல...? இனி உதை ஆபரேஷன் மட்டும் தாண்டி பாக்கி..!! :D:D

யவனிகா
12-12-2007, 01:33 PM
சிவாவை வச்சி \"மலர்களைப்போல் தங்கை உறங்குகிறாள்...! அண்ணன் வாளெடுப்பான்(:D!) என்றே அமைதி கொண்டாள்!\"-ன்னு பாட்டுப்பாடச்சொல்லி, பாசமலர தூங்க வச்சி முதல்ல கண்ணக்கட்டிடணும்.

சிவாஅண்ணா ஏர்போர்ட்ல வெச்சு...இதயத்துக்கு கண்ணக் கட்டணும்...

இது என்ன....ஒண்ணு
இது என்ன...நாலு
இது என்ன ...ஏழு

அப்படியே ரெண்டு சுத்து சுத்தி விட்டா...ஏர்ப்போர்டுக்குள்ளயே சுத்திக்கிட்டு இருப்பாரு கிசுகிசு மன்னன்...உங்களை மட்டும் பிக் அப் பண்ணிக்கிறோம்...சரியா?

சிவா.ஜி
12-12-2007, 01:38 PM
அவரு ஏற்கனவே அந்த ஏரியாவுல கண்டமேனிக்கு சுத்தியிருக்காரு....எப்படி கட்டி விட்டாலும் கரெக்ட்டா வரவேண்டிய இடத்துக்கு வரவேண்டிய நேரத்துக்கு(பிரியாணி சாப்பிடற நேரம்) வந்துடுவார்.
அதனால அதெல்லாம் சரிப்பட்டு வராது...நேரா குட்டிக்கிட்டு வந்து புள்ளிராசாக்கிட்ட விட்டுடறேன்....அதுக்கப்புறம் மகனே உன் சமத்து....
நாம வெறும் பார்வையாளர்கள்.

இதயம்
12-12-2007, 01:47 PM
அப்படியே ரெண்டு சுத்து சுத்தி விட்டா...ஏர்ப்போர்டுக்குள்ளயே சுத்திக்கிட்டு இருப்பாரு கிசுகிசு மன்னன்...உங்களை மட்டும் பிக் அப் பண்ணிக்கிறோம்...சரியா?

யார்க்கிட்ட என்ன பேசிட்டிருக்கீங்க..? இந்த சதியெல்லாம் எனக்கு நடக்கும்னு முன்னமேயே தெரியும்..! (அதான் ஆஃபிஸ்லயும், எங்க போனாலும் கூடவே ஒரு \\\"பத்த வைக்கிற பரட்டை\\\" இருக்கே..!!). அதனால.. நான் அங்க வர்றது பத்தி் அங்க இருக்கிற என் ஆளுக்கு ஆல்ரெடி சொல்லியாச்சி..! மெயில்ல அடையாளம் கண்டுபுடிக்க என்னோட ஃபோட்டோவும் அனுப்பியாச்சு.. (கூடவே போனஸா ஒரு க்ளூ..! ஏர்ப்போர்ட்டில நிக்கிற ஆளுகள்ல யார் முகத்துல தண்ணி கலக்காத பால் வடியுதோ, அதான் இதயம்.. கப்புன்னு வந்து, கபால்னு கட்டிக்க..!-ன்னு சொல்லிட்டேன். ;);)

அப்படியும் என்னை கண்டு பிடிக்க முடியாட்டி நம்ம தமிழ் சினிமா சொல்லிக்கொடுத்த ஒரு குடும்ப பாட்டையும் ஃபோனில் பாடிக்காட்டிட்டேன். இங்க நான் 2 வரி பாடினா, அடுத்த மூலையிலா நிக்கிற என் ஆளோட அந்த பாட்டு தொடர்ச்சி வரி கேட்கும். உடனே நான் என் ஆளு இருக்கிற இடத்தை கண்டுபிடிச்சிடுவேன்..!! எப்படி என் ஐடியா.??:D:D

யவனிகா
12-12-2007, 01:53 PM
உங்க ஆளு யாருன்னு எனக்குத் தெரியும்...எங்க மேல் மாடி சவூதி வீட்ல* வேலை செய்யற பங்காளா தேஷ் "கதாமா" தான...நீங்க எப்ப வருவீங்க..எப்ப வருவீங்க...அப்பிடின்னு தொந்தரவு தாங்கல....வரும் போது ரெண்டு கிலோ சுறாமீனு வாங்கிட்டு வருவீங்களாமா....அந்தப் பாட்டிக்கு குடுக்க....

இதயம்
12-12-2007, 02:05 PM
அந்தப் பாட்டிக்கு குடுக்க....
உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா..? எழுத்துப்பிழையை சரி செய்யவும்..! அது பாட்டி அல்ல.. பார்ட்டி..!!:D:D

நுரையீரல்
12-12-2007, 02:22 PM
உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா..? எழுத்துப்பிழையை சரி செய்யவும்..! அது பாட்டி அல்ல.. பார்ட்டி..!!:D:D
அது பாட்டி தான் but உஷார் பார்ட்டி

பூமகள்
12-12-2007, 02:40 PM
ராஜா அண்ணா...!
காட்சி விவரிப்பு சூப்பர்...!
கேமிராஆங்கிள் அதை விட சூப்பர்(தமிழ் படம் எடுங்களேன்..! பினான்சியரா நம்ம இதயம் அண்ணா இருப்பாரு..! ஹீரோ சுகந்தப்ரீதன்.. ஹீரோயின் நம்ம ஓம் சாந்தி ஓம் அறிமுக ஹீரோயின் "தீபிகா படுகோன்"...!!:D:D:D என்ன சொல்றீங்க??;) :))
ஆனால்.. என் அன்பு இதயம் அண்ணாவை இப்படி வாரு வாருன்னு வாரிட்டீங்களே....??
அவர் மேல் இருக்கும் கோபத்தை இப்படி முன்னரே வெளியிட்டால் அவர் எப்படி உங்களைப் பார்க்க வருவார்...??(அங்கு வந்தப்புறம் தெரியும்..!! :D:D)

நல்லா எழுதுறீங்க... ஆனால்... நம்ம கோவை கொஞ்சு தமிழில் எழுதலாமே...!!

முயற்சி அருமை. அதற்கு என் வாழ்த்துகள்..!

மனோஜ்
12-12-2007, 02:40 PM
கவுன்டமணி செந்தில் நகைசுவைகண்ணில் பார்தபடி உள்ளது ராஜா நன்றாக எழுதிஉள்ளீர்கள் நன்றி

நுரையீரல்
12-12-2007, 05:43 PM
நல்ல எழுத்தாளன்லாம் இதைப்படிச்சான்னா நாக்க புடுங்கிக்கிட்டு செத்துப்போவான்..!
நீங்க கூட நல்ல்ல்ல எழுத்தாளர்னு ஊரெல்லாம் பேசிக்கிறாங்க... அதுக்குனு நாக்க புடுங்கிக்கிட்டு செத்துப்போகவெல்லாம் சொல்லமாட்டோம்.. :icon_p: :icon_p: உங்களுக்கே புரிந்தால் சரி தான். :D :D :confused: :confused:

நுரையீரல்
12-12-2007, 05:45 PM
ராஜா அண்ணா...!
காட்சி விவரிப்பு சூப்பர்...!
கேமிராஆங்கிள் அதை விட சூப்பர்(தமிழ் படம் எடுங்களேன்..! பினான்சியரா நம்ம இதயம் அண்ணா இருப்பாரு..! ஹீரோ சுகந்தப்ரீதன்.. ஹீரோயின் நம்ம ஓம் சாந்தி ஓம் அறிமுக ஹீரோயின் "தீபிகா படுகோன்"...!! என்ன சொல்றீங்க?? )
வாழ்த்துக்கு நன்றிம்மா...

ரொம்ப நாளா படத்துல நடிக்கணும்... படத்துல நடிக்கணும்னு... இதயம் நச்சரிச்சிட்டே இருந்தார்... அதான் திரைப்பட வடிவில் ஒரு கதை...

புள்ளி ராஜா : இவர வச்சு, ரியலா யாரு படம் எடுப்பா??? :mini023: :mini023:

சிவா.ஜி : அவர வச்சு படம் எடுத்தா... யாரு பார்க்க வருவா? :icon_rollout: :icon_rollout:

நுரையீரல்
12-12-2007, 05:48 PM
கவுன்டமணி செந்தில் நகைசுவைகண்ணில் பார்தபடி உள்ளது ராஜா நன்றாக எழுதிஉள்ளீர்கள் நன்றி
நன்றிங்க மனோஜ்..

கவுண்டர், செந்தில் நகைச்சுவை ரொம்ப பிடிக்கும்... அதன் பிரதிபலிப்பே கொண்டாட்டம்..

அமரன்
12-12-2007, 05:51 PM
என்னையக் காணலை...அழுகாச்சி அழுகாச்சியாக வருது

நுரையீரல்
12-12-2007, 05:59 PM
என்னையக் காணலை...அழுகாச்சி அழுகாச்சியாக வருது
ஐய்யோ... ஏன் இந்தக் கவலை அமரன்...

அடுத்த கொண்டாட்டத்தில சூப்பராக் கலாய்ச்சிருவோம்.. இப்பவே சொல்லுங்க அதுல நீங்க நாயகனா இல்லை காமெடியனா?

அமரன்
12-12-2007, 06:01 PM
நமக்கு ஏத்தது காமெடிதாங்கோ

நுரையீரல்
12-12-2007, 07:00 PM
நமக்கு ஏத்தது காமெடிதாங்கோ
துன்பம் நேர்கையில் யாழெடுத்து (உங்க அவதார்ல இருக்கிற கிதார்) நீ
இன்பம் சேர்க்க மாட்டாயா?

இதயம்
13-12-2007, 05:02 AM
எங்க மேல் மாடி சவூதி வீட்ல* வேலை செய்யற பங்காளா தேஷ் \\\"கதாமா\\\" தான.

அது பாட்டி தான் but உஷார் பார்ட்டி
யவனிகா வீட்டு மேல் மாடில கத்தாமா (வீட்டு வேலைக்காரப்பெண்) இருக்கிறதா சொன்னது, ராஜா அந்த கத்தாமாவை ரொம்ப உஷார் பார்ட்டின்னு சொன்னது. இது ரெண்டுக்கும் இடையில ஏதோ விஷயம் இருக்கிற மாதிரி இருக்கே..!!:D:D

யவனியக்கா.. பிரம்பெடுக்க வேண்டிய அவசியம் வந்தாச்சுன்னு நினைக்கிறேன். கத்தாமா வந்து கம்ப்ளெய்ண்ட் பண்ற அளவுக்கு வச்சிக்காதீங்க.. நான் சொல்றத சொல்லிட்டேன்.. ஆமா..!!!!:cool::cool: (புள்ளி எங்கிட்டயவா உங்க வேலைய காட்டுறீங்க..?! இனி உப்பில்லாத கஞ்சி தான் வூட்டுல கிடைக்கும்..!!:D:D)

இதயம்
13-12-2007, 05:04 AM
நீங்க கூட நல்ல்ல்ல எழுத்தாளர்னு ஊரெல்லாம் பேசிக்கிறாங்க... அதுக்குனு நாக்க புடுங்கிக்கிட்டு செத்துப்போகவெல்லாம் சொல்லமாட்டோம்.. :icon_p: :icon_p: உங்களுக்கே புரிந்தால் சரி தான். :D :D :confused: :confused:
அடுத்தவங்க சொன்னா நான் ஒத்துக்கணுமா..? இப்ப உங்க வூட்டுக்காரம்மா கூட உங்களை நல்ல பிள்ளைன்னு தான் சொல்றாங்க.. அதையெல்லாம் நாங்க நம்பிக்கிட்டா இருக்கோம்..??!! :D:D

lolluvathiyar
13-12-2007, 06:01 AM
25 ஆட்டோ எடுத்துக்கங்க... 50 ஆசிட் பாட்டில்.. 100 பெட்ரோல் பாம்... 75 வீச்சருவா.. 2 கிலோ மிளகா பொடி.. 15 சன் டிவி சீரியல் கேஸட்...நம்ம பொண்டாட்டிங்களோட ஃபோட்டோ (திகில் பயங்காட்ட தான்..!) எல்லாம் எடுத்துக்கிட்டு கிளம்புங்கய்யா.புள்ளி ராசாவை போட்டாதான் இனி சரியாவும் ஆமா. ..

புள்ளிராசாவ அடிக்க இந்த அளவுக்கு ஆயுதம் தேவையில்ல. சும்மா உங்க பெருங்காயத்த மூக்கல வச்சா போதும்.


கோணிப்பைக்குள்ள போட்டு, வாசல்ல கட்டியிருக்கிற கழுதைக்கு பக்கத்துல கொண்டு போய் போட்டா கொள்ளை சந்தோஷத்தோட அது வேலைய காட்ட ஆரம்பிச்சிடும். அப்புறம் கழுதையாச்சி.. புள்ளிராஜாவாச்சி.

அந்த வேலை நாம செய்ய கூடாது யவனிகாகிட்ட விட்டுருவோம், அவரு தானே கழுதை மிதி வைத்தியத்துல நிபுனர் என்று யாரோ சொன்னார்கள்.

நுரையீரல்
13-12-2007, 09:15 AM
புள்ளிராசாவ அடிக்க இந்த அளவுக்கு ஆயுதம் தேவையில்ல. சும்மா உங்க பெருங்காயத்த மூக்கல வச்சா போதும்.
எல்லாம் அண்ணிகிட்ட பெற்ற அனுபவமா வாத்தியாரே...

இன்னிக்கு வூட்டுக்கு போவிங்கதானே... பெருங்காயத்துக்கு பதிலா கண்ணுல சின்ன வெங்காயம் தேய்ப்பாங்க அண்ணி, போங்க, போங்க...


அந்த வேலை நாம செய்ய கூடாது யவனிகாகிட்ட விட்டுருவோம், அவரு தானே கழுதை மிதி வைத்தியத்துல நிபுனர் என்று யாரோ சொன்னார்கள்.
எனக்காவது லொள்ளுபுரி அரச வைத்தியர் யவனிகாவின் கழுதை மிதி வைத்தியம் தான்.

மும்தாஜ் மற்றும் நமிதாவை தேடிப்போன மன்னரைப் பற்றி, அரசியார் கருப்பாயிகிட்ட போட்டுக் கொடுத்துவிட்டாராம் கோல்சொல்லி சுகந்தன். அங்கே உங்களுக்கு யானை மிதி வைத்தியம் தயாராக இருப்பதாக மருங்காபுரி மனோஜ் ஊரெல்லாம் டம்மாரம் அடிப்பதாக தகவல்..

மலர்
13-12-2007, 09:45 AM
S.ராஜா அண்ணா...இப்படியெல்லாம் எழுத ரூம் போட்டு யோசிப்பீங்களோ..
என்னம்மா யோசிக்கிறாங்கையா....

மலர்
13-12-2007, 09:47 AM
சரி... நீர் இவ்வளவு எழுதினீரே.. பொதுவா கவுண்டர் செந்திலை போட்டு என்னா மிதி... மிதிப்பாரு..? அதை மட்டும் எழுதலையே ஏன்...?:D:D நேக்கும் இதயம் அண்ணாவுக்கு வந்த அதே சந்தேகம் தான்

இதயம்
13-12-2007, 09:53 AM
S.ராஜா அண்ணா...இப்படியெல்லாம் எழுத ரூம் போட்டு யோசிப்பீங்களோ.
என்னம்மா யோசிக்கிறாங்கையா....

ரூம் போட்டு எழுதுனாலும் பரவாயில்லையே..! கேமரா Zoom போட்டுல்ல எழுதியிருக்கு..!! மலர் எனக்கு சப்போர்ட் பண்ணி எழுதியிருக்கிறதால எதிரணியில் இன்னொரு இளம்புயல் புகுந்திருக்குன்னு புள்ளிக்கு புரிஞ்சி, வயித்துல புளிய கரைச்சிருக்கும்..!!:D:D

சுகந்தப்ரீதன்
13-12-2007, 10:06 AM
நேசம் அண்ணா பாசமா என்னை பரிந்துரை செஞ்சும்.. இந்த வாத்தியாரு நமீதாவையும் மும்தாஜையும் நேர்ல பாக்கனும்கிற என் வாழ்நாள் கனவ கவுத்துட்டாரேன்னு வருத்தப்பட்டுகிட்டு இருந்தேன்.. நல்லவேலை கடைசியில நேசம் அண்ணா ஓடிவந்து சொன்னப்பதான் நினைச்சேன்.. இனி உலக அழகி கருப்பாயி விட்டுட்டு எங்கயும் போகக்கூடாதுன்னு...!

நுரையீரல்
13-12-2007, 11:17 AM
S.ராஜா அண்ணா...இப்படியெல்லாம் எழுத ரூம் போட்டு யோசிப்பீங்களோ..
என்னம்மா யோசிக்கிறாங்கையா....
இதயத்தோட வண்டவாளத்தயெல்லாம் தண்டவாளத்துக்கு ஏத்த ரூம் போட்டு வேற யோசிக்கணுமா??

நுரையீரல்
13-12-2007, 11:32 AM
நேசம் அண்ணா பாசமா என்னை பரிந்துரை செஞ்சும்.. இந்த வாத்தியாரு நமீதாவையும் மும்தாஜையும் நேர்ல பாக்கனும்கிற என் வாழ்நாள் கனவ கவுத்துட்டாரேன்னு வருத்தப்பட்டுகிட்டு இருந்தேன்.. நல்லவேலை கடைசியில நேசம் அண்ணா ஓடிவந்து சொன்னப்பதான் நினைச்சேன்.. இனி உலக அழகி கருப்பாயி விட்டுட்டு எங்கயும் போகக்கூடாதுன்னு...!
உன் கவலையெல்லாம் இருக்கட்டும்.. உலக அழகி கருப்பாயிகிட்ட எக்ஸ்ட்ராவா ஓவர்டைம்ல ஒற்றர் வேலை செய்றதா மன்னர் சொன்னாரே... அரசி ஓவர்டைம் பணத்த ஒழுங்காத் தருகிறாரா? இல்லை மன்னரைப் போல சாக்குப் போக்கு காட்டி இழுத்தடிக்கிறாரா??

நுரையீரல்
13-12-2007, 11:34 AM
சரி... நீர் இவ்வளவு எழுதினீரே.. பொதுவா கவுண்டர் செந்திலை போட்டு என்னா மிதி... மிதிப்பாரு..? அதை மட்டும் எழுதலையே ஏன்...?
நேக்கும் இதயம் அண்ணாவுக்கு வந்த அதே சந்தேகம் தான்
வேலிக்கு ஓணான் சாட்சினு சும்மாவா சொன்னாங்க பெரியவங்க...

நுரையீரல்
13-12-2007, 11:38 AM
சரிS.ராஜா அண்ணா...இப்படியெல்லாம் எழுத ரூம் போட்டு யோசிப்பீங்களோ.
என்னம்மா யோசிக்கிறாங்கையா....
ரூம் போட்டு எழுதுனாலும் பரவாயில்லையே..! கேமரா Zoom போட்டுல்ல எழுதியிருக்கு..!! மலர் எனக்கு சப்போர்ட் பண்ணி எழுதியிருக்கிறதால எதிரணியில் இன்னொரு இளம்புயல் புகுந்திருக்குன்னு புள்ளிக்கு புரிஞ்சி, வயித்துல புளிய கரைச்சிருக்கும்..!!
எனக்கு வயித்துல புளிய கரைக்கிறது இருக்கட்டும் ஓய்.. உமக்கு ஆயில் சீல் புடிங்கி வயித்துல, வாயில போகாம இருந்தா சரி தேன்..

ஏன்னா... லொள்ளுபுரி அரசவையில் இருக்கும் மலர் "கூட இருந்தே குழிய பறிக்கும்னு" மன்னரே பயப்பட்டார் ஒரு காலத்துல.. அந்த சேதி நோக்கு தெரியுமோ? ஹேய்... இப்ப என்ன செய்வீங்க... இப்ப என்ன செய்வீங்க... :icon_rollout: :icon_rollout:

சுகந்தப்ரீதன்
13-12-2007, 11:44 AM
உன் கவலையெல்லாம் இருக்கட்டும்.. உலக அழகி கருப்பாயிகிட்ட எக்ஸ்ட்ராவா ஓவர்டைம்ல ஒற்றர் வேலை செய்றதா மன்னர் சொன்னாரே... அரசி ஓவர்டைம் பணத்த ஒழுங்காத் தருகிறாரா? இல்லை மன்னரைப் போல சாக்குப் போக்கு காட்டி இழுத்தடிக்கிறாரா??
யோவ்..மாமா.. வாத்தியாருக்கும் எனக்கும் வம்ப உண்டாக்கி விடுவிங்க போலிருக்கே..? நாங்கெல்லாம் ஒரே குடும்பமய்யா.. ஒரே குடும்பம்..!:fragend005:

நுரையீரல்
13-12-2007, 11:49 AM
யோவ்..மாமா.. வாத்தியாருக்கும் எனக்கும் வம்ப உண்டாக்கி விடுவிங்க போலிருக்கே..? நாங்கெல்லாம் ஒரே குடும்பமய்யா.. ஒரே குடும்பம்..!:fragend005:
அப்புறம் ஏன் உன்ன விட்டுட்டு மும்தாஜ், நமிதா (கழுதைகள்) பார்க்க நேசத்தக் கூட்டிட்டு போனாரு..

சுகந்தப்ரீதன்
13-12-2007, 12:34 PM
அப்புறம் ஏன் உன்ன விட்டுட்டு மும்தாஜ், நமிதா (கழுதைகள்) பார்க்க நேசத்தக் கூட்டிட்டு போனாரு..
வேற என்ன.. எல்லாத்துக்கும் பொறாமைதான் காரணம்..?!:sprachlos020:

நுரையீரல்
13-12-2007, 01:24 PM
வேற என்ன.. எல்லாத்துக்கும் பொறாமைதான் காரணம்..?!:sprachlos020:
பாருங்க வாத்தியாரே... சுகந்தனின் முகத்திரை கிழிந்துவிட்டது... அந்தப்புரத்திற்குள் அனுமதிக்காதீர்கள்..

மலர்
13-12-2007, 03:03 PM
பாருங்க வாத்தியாரே... சுகந்தனின் முகத்திரை கிழிந்துவிட்டது... அந்தப்புரத்திற்குள் அனுமதிக்காதீர்கள்..
அடேங்கப்பா...

S.ராஜா வுக்கு பதிலா நாரதர் என்று வைத்திருக்கலாம்...
பொருத்தமா இருந்திருக்கும்..
என்ன ஒரு வில்லத்தனம்...:eek::eek:

சுகந்தப்ரீதன்
15-12-2007, 08:47 AM
பாருங்க வாத்தியாரே... சுகந்தனின் முகத்திரை கிழிந்துவிட்டது... அந்தப்புரத்திற்குள் அனுமதிக்காதீர்கள்..
என் முகத்திரை கிழியல.. உங்க புத்திதான் எல்லாத்துக்கும் தெரிஞ்சு போச்சு.. எல்லாத்தையும் ஒரே(அதே) கண்ணோட்டத்துல உங்கள தவிர உலகத்துல வேற யாராலயும் பாக்க முடியாதுன்னு தெரிஞ்சு போச்சு மாமா.. நான் பொறாமைன்னு சொன்னது உங்கள மாதிரி ஆளுங்க இவ்வளவு அழகான கறுப்பாயி நமக்கு கிடைக்கலையே.. இந்த கிழட்டு வாத்திக்கு கிடைச்சிட்டுதேன்னு உள்ளுக்குள்ள கருவிக்கிட்டு இருக்குறது தெரிஞ்சுதான் எங்க வாத்தியாரு காவலுக்கு என்ன விட்டுட்டு கழுதைய பாக்க போனாரு.. அதுக்குள்ள உங்க குறுக்கு புத்தி என்னமா யோசிக்குது... இட்ஸ் சோ பேட் மாம்ஸ்..!

அடேங்கப்பா...

S.ராஜா வுக்கு பதிலா நாரதர் என்று வைத்திருக்கலாம்...
பொருத்தமா இருந்திருக்கும்..
என்ன ஒரு வில்லத்தனம்...:eek::eek:
நாரதரா...? மலரு உனக்குதான் என்ன ஒரு வில்லத்தனம்.. நாதாரிக்கெல்லாம் நாரதர்ன்னு பேரு வைக்ககிறதா..?:wuerg019:

இதயம்
15-12-2007, 09:12 AM
நாரதரா...? மலரு உனக்குதான் என்ன ஒரு வில்லத்தனம்..நாதாரிக்கெல்லாம் நாரதர்ன்னு பேரு வைக்ககிறதா..?:wuerg019:

சுகு.. நம்ம அலைவரிசை இந்த அளவுக்கு ஒத்துப்போகுமா.?! நினைக்கவே ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப சந்தோஷமா இருக்கு..!!:icon_rollout::icon_rollout:

நுரையீரல்
15-12-2007, 09:57 AM
சுகு.. நம்ம அலைவரிசை இந்த அளவுக்கு ஒத்துப்போகுமா.?! நினைக்கவே ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப சந்தோஷமா இருக்கு..!!:icon_rollout::icon_rollout:
ஆமாமா... சுகு விடாக்கொண்டனா, நீங்க கொடாக்கொண்டனல்லோ அப்படித்தான் இருக்கும்...

எங்கக்கா மலரு வலிய வந்து என்ன திட்டீட்டு போகுறாங்க... தவளை தன் வாயால் கெடும்னு சும்மாவா சொன்னாங்க... அடுத்த கொண்டாத்துல நான் யாருன்னு காமிக்கிறேன்....

சுகந்தப்ரீதன்
15-12-2007, 10:44 AM
அடுத்த கொண்டாத்துல நான் யாருன்னு காமிக்கிறேன்....
ஊரே நாறுது.. நீங்க யாருன்னு..? இதுல புதுசா என்னத்த காமிக்க போறிங்க... புள்ளி மாமா..?:mad:

lolluvathiyar
16-12-2007, 07:08 AM
அடுத்த கொண்டாத்துல நான் யாருன்னு காமிக்கிறேன்....

ஆமாம் நான் இதயம் நேசம் யாருனு காட்டியாச்சு இனி நீங்க யாருனு காட்டரது தான் பாக்கி அத சீக்கரம் காட்டிருங்க.

நுரையீரல்
16-12-2007, 09:55 AM
ஆமாம் நான் இதயம் நேசம் யாருனு காட்டியாச்சு இனி நீங்க யாருனு காட்டரது தான் பாக்கி அத சீக்கரம் காட்டிருங்க.
ஏங்க வாத்தியார்?!!... கொண்டாட்டம் - 2 ல அடிவாங்கி பாடையில வருவேன். 3 ல தொழிலதிபர் இதயத்துகிட்ட வேலைக்காரன்.. இதுக்கும் கீழ இறக்கி கேவலமா காமிக்கணும்னு ஆசைப்படுறீங்களா...

வேணும்னா அடுத்ததுக்கு பிச்சைக்காரன் வேஷம் போடலாம், உங்ககிட்ட வந்து பிச்சை கேட்பேனாமா, நீங்க தராம டபாய்ப்பீங்கலாமா.. அதை வச்சு பிண்ணிடலாமா அடுத்த கொண்டாட்டத்தை..?

lolluvathiyar
16-12-2007, 11:40 AM
அடுத்ததுக்கு பிச்சைக்காரன் வேஷம் போடலாம்

இருக்கிறத வச்சுகிட்டு மன நிம்மதியா ஜாலியா பொழுத கழிக்கரவன் தான் பனகாரன். அந்த பார்த்தால் என்ன வேசம் போட்டாலும் நீங்க எப்பவுமே கோடீஸ்வரன் தானுங்க.


உங்ககிட்ட வந்து பிச்சை கேட்பேனாமா,

இபணமே ஒழுங்கா கொடுக்காத கஞ்சன் நான் எங்கிட்ட வந்து கேட்டா என்ன கிடைக்கும். அடுத்த பாகத்துல இன்னும் லிஸ்டில மாட்டாதவங்கள இழுத்து விடுங்க. அப்படி பாத்தா இன்னும் ஜெயஸ்தா மாட்டாம இருக்காரு.