PDA

View Full Version : உன் நினைவில்



பூந்தோட்டம்
19-10-2007, 10:17 AM
உன் நினைவில்


என் இதய தேவதையே
என்னை விட்டு போனதேனோ?
உன் நினைவில் நானிருக்கேன்

நீ தான் முதல் முதல்
என்னில் காதல் கொண்டாய்
நான் சந்தோச மழையில்
நனைந்தேன்

நீயே
காதல் வேண்டாம் என்று
போய்விட்டாய்

நீ என்னை மறந்து விட்டாய்
ஆனால் - என்றும்
உன் நினைவில் நானிருக்கேன்

அமரன்
20-10-2007, 06:03 PM
கவி புனைய முனையும் உங்கள் ஆக்கபூர்வ முயற்சிக்கு எனது மனமுவந்த வாழ்த்துகள் பூந்தோட்டம். அப்படியே கவிதைக்கும் எனது பாராட்டுதல். தொடர்ந்து எழுதி மேம்படுங்கள்.

பூந்தோட்டம்
20-10-2007, 06:56 PM
நன்றி அமரன் அவர்களே.பிழைகள் இருந்தால் சுட்டி காட்டுங்கள்.

சுகந்தப்ரீதன்
21-10-2007, 09:34 AM
உங்களின் கவிதை இன்னும் மெருகுபெற நம் மன்ற கவிகள் உதவுவார்கள் நண்பரே... முதல் முயற்ச்சிக்கு எனது பாராட்டுகள்...!

பூந்தோட்டம்
21-10-2007, 01:29 PM
நன்றி.தோழரே..அந்த நம்பிகையில் தான் எழுதுகிறேன்

சூரியன்
21-10-2007, 02:36 PM
நண்பரே விரைவில் நீங்களும் ஒரு கவிஞனாக வாழ்த்துக்கள்...