PDA

View Full Version : பெனாசிரைக் குறிவைத்து குண்டு வெடிப்புத்



mgandhi
19-10-2007, 02:37 AM
பெனாசிரைக் குறிவைத்து குண்டு வெடிப்புத் தாக்குதல்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார், 110 பேர் பலி

பாகிஸ்தானில் பெனாசிர் பூட்டோ சென்ற பாதையில் குண்டு வெடித்தது. எவ்வித காயமுமின்றி பெனாசிர் உயிர்தப்பினார் 110க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 200 பேர் காயம் அடைந்தனர். 8 ஆண்டுகளுக்கு பின்னர் அவர் நாடு திரும்பினார். தலிபான் , அல்குவைதா மிரட்டல் விடுத்திருந்த போதும் அவர் பாகிஸ்தான் வந்தார். இந்நிலையில் அவர் சென்று கொண்டிருந்த கான்வாயில் பலத்த சப்தத்துடன் கூடிய குண்டு வெடித்தது. இதில் அவர் சென்ற கார் மீது எவ்வித சேதமும் ஏற்படவில்லை. அருகில் நின்ற 20 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகியுள்ளனர்.மற்றவர்கள் மருத்துவமனை செல்லும் வழியிலும், மருத்துவ மனையில் சிகிச்சை பலன் இன்றியும் இறந்தனர். மேலும் 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மேலும் உயிர்ப்பலி அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இதனால் பாகிஸ்தானில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

leomohan
19-10-2007, 07:10 AM
கொடுமையான விஷயம். இதில் இறந்தவர்கள் யாருக்கும் பாதகம் செய்யாத அப்பாவிகள். ஒவ்வொரு தீவிரவாத தாக்குதலிலும் இறப்பவர்கள் சாதாரணர்களே. பாகிஸ்தான் தீவிரவாதத்தை தடுக்க முடியாமல் துவண்டுக் கொண்டிருக்கிறது.

இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அனுதாபங்கள். இறந்தவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி.

lolluvathiyar
19-10-2007, 07:35 AM
இந்தியாவுக்கு குண்டு வைக்க தீவிரவாதிகளை உருவாக்கினார்கள். இன்று அதே தீவிரவாதிகள் அங்கேயே குண்டு வைகிறார்கள்.
வளர்த்த கிடா மார்ல பாயுது

நேசம்
19-10-2007, 08:06 AM
அது எப்படி தலைவர்கள் மட்டும் தப்பித்து விடுகிறார்கள்.
இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அனுதாபங்கள்

praveen
19-10-2007, 08:37 AM
இதெல்லாம் முஸ்ரப்பின் வேலை என்று தோன்றுகிறது, நாவாஸ் ஷெரிப்பை பின் தள்ள இருவரும் (பெனாசிர்/முஸ்ரப்) இனைந்து செய்யும் வேலை.

பாகிஸ்தானிய அப்பாவி மக்கள் தான், பாவம்.

அமரன்
19-10-2007, 08:42 AM
ஐரோப்பிய நேரம் நள்ளிரவு, நல்லிரவாக அமையாத கொடுமை தந்தன இச்செய்தி தாங்கிவந்த பி.பி.சியும், யூரோ செய்திகளும். அப்பாவி மக்கள், சடலங்களாகவும் சிதைந்த உடல்களாகவும் நெஞ்சைக்ககனக்க வைத்தனர். இப்படியான சம்பவங்கள் இரு சாரார் மீதும் சந்தேகத்தை ஏற்படுத்துவது இயல்பு.

மீனாகுமார்
19-10-2007, 11:48 AM
அடுத்த ஈராக்காக உருவாகிக் கொண்டிருக்கிறது பாக். மேலும் இப்படியே கட்டுப்பாடில்லாமல் போனால் வன்முறைகளின் தலைமை செயலகமாகும் நாள் வெகு விரைவில் இல்லை.....

உலகில் பொறுத்துக்கொள்ளும் தன்மை டாலரன்ஸ் குறைந்து கொண்டே செல்கிறது.

மாதவர்
22-10-2007, 02:07 AM
பொறுமை போக
பொறாமை பரவுகின்றது

ஜெயாஸ்தா
22-10-2007, 02:20 AM
அரசியல் சித்துவிளையாட்டு.....அப்பாவிகள் பலியானார்கள்..... குற்றவாளிகளுக்கு தண்டனைகொடுப்போர் யார்....?