PDA

View Full Version : "சலாலா"வில் ஓவியனின் "லாலா","லாலா"...

ஓவியன்
18-10-2007, 09:16 PM
மத்திய கிழக்கு நாடுகளிலே தொடர்சியாக பணி புரிபவர்களுக்கு நீண்ட விடுமுறைகள் வருடத்தில் எப்போதாவது தான் கிடைக்கும். அப்படி கிடைக்கும் விடுமுறைகளில் "ஈத்" பெரு நாளுக்காகக் கிடைக்கும் விடுமுறை மிக முக்கிய(நீள)மானது. அந்த விடுமுறையை எப்படியெல்லாம் பயன் மிக்கதாகக் கழிப்பதென ஒவ்வொருவரும் ஒரு திட்டம் தீட்டி வைத்து அந்த நாட்களுக்காகக் காத்திருப்பது வழமை. அப்படித்தான் இந்த முறை கிடைத்த ஆறு நாள் தொடர்சியான விடுமுறையை அமீரகத்துக்கு சென்று நண்பர்களுடன் கழிக்கலாமென திட்டமிட்டிருந்தேன், ஆனால் என்ன கொடுமை சில சட்ட சிக்கல்களால் அங்கே இந்த விடுமுறைக்கு போக முடியாதென சோகமாக முடிவாக, உள்ளூரிலே எங்களது பயணச் சுற்றுலாவை அமைப்பதென நானும் என் நண்பர்களும் முடிவாக முடிவெடுத்தோம். :)

உடனே எங்கள் கண் முன்னே வந்து நின்றது ஓமானின் தென் நகரமான "சலாலா (Salalah)" தான்...
அது என்னடா "லக லக" என அக்னி முணு முணுப்பதால் :D, சலாலா பற்றி ஒரு சிறு அறிமுகம் இதோ..

இறைவனது படைப்புக்களின் விநோதங்களை அளவிடவே முடியாது போலுள்ளது. ஆரேபிய நாடுகள் என்னும் போது, அந்த நாட்டினைப் பற்றி எமக்கு என்னென்ன எண்ணவோட்டங்கள் மனதிலே எழுகின்றனவென்று சிந்தித்தால் அதில் பின் வருவன தப்பாமல் இருக்கும்.

மத்திய கிழக்கில் கொட்டிக் கிடக்கும் எண்ணெய் மற்றும் தங்கம் போன்ற தாதுப் பொருட்கள்.
மணல் மண்டிக் கிடக்கும் பாலை வனங்கள்.
மனிதரை உயிருடனேயே எரித்துவிடும் வெயில்.

ஆம் இவை உண்மையும் கூட, ஆனால் "இது மத்திய கிழக்கு நாடுகளின் எல்லாப் பகுதிக்கும் பொருந்தா" என்பதே நிஜம். அப்படி வழமைக்கு மாறாக மாறிப் படைக்கப்பட்ட ஒரு அற்புதம் தான் ஓமான் நாட்டின் "சலாலா" பிராந்தியம். நான் இருக்கும் "மஸ்கட்"டுக்கும் "சலாலா"க்கும் இடை கிட்டத்தட்ட 1200 கிலோமீட்டர் இடை வெளி இருக்கும். மஸ்கட்டிலிருந்து தரை வழிப்பயணமாக செல்வதென்றால், பாலை வனங்களிடை 12 மணி நேர நெடி.....ய பயணத்தை மேற்கொள்ள வேண்டி வரும். அதாவது ஓமான் நாட்டின் தலைப்பகுதியில் மஸ்கட் இருந்தால் ஓமானின் கால் பகுதியின் டோஃபார்(Dhofar) மாநிலத்திலே அக்னியின் இந்த "லக லக" அமைந்துள்ளது.

http://i230.photobucket.com/albums/ee210/ooveyan/omcolor.gif

ஓமான் நாட்டிலே மஸ்கட்டுக்கு அடுத்த பெரிய நகரமான "சலாலா" அரேபியாவின் வாசனைத் திரவிய நகரம் (Perfume City of Arabia) எனப்படுகிறது. பொதுவாக ஓமான் மக்கள் வாசனைத் திரவியங்களை அதிகமாக உபயோகிக்கும் பழக்கம் மிக்கவர்கள், அதிலும் இந்த "சலாலா" மிகப் பிரபலமானது. வீட்டுக்கு வீடு தங்களுக்கு தேவையான வாசனைத் திரவியங்களை தாங்களே தயாரித்துக் கொள்வார்கள். "சலாலா" என்றால் கடலும் கடலை எட்டிப் பார்க்கும் மலைகளும் ஆங்காங்கே காடுகளாக பரிணமித்துக் கொண்டிருக்கும் மரங்களுமென வரையறுத்துவிடலாம். அத்துணை இயற்கை வளங்கள் செறிந்தது இந்த "சலாலா". மஸ்கெட்டிலே வெயில் நெருப்பாக சுழன்றடிக்கும் அதே காலப்பகுதியில் இங்கே நிஜமாக மழை பெய்து "சலாலா" வையே பச்சையாக மாற்றுவது தான் அற்புதம். அந்த கால கட்டத்திலே அங்கு நடக்கும் "Khareef Festival" உலகப் பிரசித்தமானது. இந்த பண்டிகைக்காக சுற்றுலாப் பயணிகள் ஜுன் தொடக்கம் செப்டம்பர் மாத காலப் பகுதியில் வந்து குவிவார்கள்.

டோஃபார் மாநிலத்தில் ஆட்சி நடாத்தும் பொறுப்பை ஓமானின் தற்போதைய சுல்தான் ஹாபூஸ் பின் சயிட் (Sultan Qaboos bin Said) அவர்களினால் உள்ளூர் தலைவர்களிடம் வழங்கப்பட்டுள்ளது. அதுவரை தலை நகராக இருந்த சலாலாவுக்கு பதில் மஸ்கட்டை தலை நகராக்கிய சுல்தான் ஹாபூஸ் எப்போதாவது ஒரு தடவை தான் சலாலாவுக்கு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

http://zoutenzoetwaterparels.com/travel/Oman/Sultan%20Qaboos%20bin%20Said%20626x800.jpg

சுல்தான் ஹாபூஸ் பின் சயிட் (Sultan Qaboos bin Said)

சலாலா நகரிலே ஓவியன் குழுவினர் சுட்ட சில புகைப்படங்கள் இதோ, உங்களுக்காக....

http://i230.photobucket.com/albums/ee210/ooveyan/CIMG0297.jpg

http://i230.photobucket.com/albums/ee210/ooveyan/DSCN1221.jpg

http://i230.photobucket.com/albums/ee210/ooveyan/CIMG0279-1.jpg

http://i230.photobucket.com/albums/ee210/ooveyan/CIMG0284.jpg

இந்த அற்புத நகரத்தை நோக்கிய எங்கள் பயணத்தின் விளக்கங்கள் இன்னும் விரியும்......

அக்னி
18-10-2007, 09:35 PM
உள்ளூரில் அழகான இடத்தை வைத்துக்கொண்டு வெளிநாடு செல்லவும் வேண்டுமோ...?

உடனே எங்கள் கண் முன்னே வந்து நின்றது ஓமானின் தென் நகரமான "சலாலா (Salalah)" தான்...

அட... ஜன்னலால் எட்டிப் பார்த்தால் தெரியும் ஊருக்கா இவ்ளோ பில்டப்னு பாத்தா...

நான் இருக்கும் "மஸ்கட்"டுக்கும் "சலாலா"க்கும் இடை கிட்டத்தட்ட 1200 கிலோமீட்டர் இடை வெளி இருக்கும்.
என்று சொல்லித் தப்பிவிட்டார்...

கொஞ்சமா வரலாறும் சேர்த்து, சுவையூட்டும், லக லக லாலா தொடரட்டும்...

ஓவியன்
18-10-2007, 09:42 PM
ஹா, ஹா அக்னி!

உண்மையில் என்னால் இப்போது அமைதியாக இருந்து எழுத முன்னர் போல நேரம் கிடைப்பதில்லை என்றாலும் உங்களது அன்புக்கட்டளைக்காகவே இந்த தொடரை எழுதத் தொடங்கினேன். :)
மிக்க நன்றிகள் உங்கள் பின்னூட்டத்திற்கு....

நேசம்
18-10-2007, 09:51 PM
சலாலாவுக்கு போகனும் என்று ஒவ்வொரு வருடமும் முடிவு எடுப்பொம். ஆனால் போக முடியவில்லை. அருமையான் படங்கள். ஒவியன். அங்கே உள்ள ஒரு பிரபலமான மசூதியை பார்த்திங்களா?அதில் காஷ்மிரிலிருந்து வரவழைக்கப்பட்ட கம்பள் விரிப்பு மசூதியில் முழுவதும் இருக்கும். அது ரொம்ப புகழ்பெற்றது.

அறிஞர்
18-10-2007, 10:22 PM
அருமை... நண்பா...

எங்களையும் சேர்த்து அழைத்து சென்றது போல் இருக்கிறது தங்களின் படைப்பு. நன்றி இன்னும் கொடுங்கள்...

மதி
19-10-2007, 03:11 AM
அற்புதம் ஓவியன்...
நன்றாக விடுமுறையை அனுபவிக்கின்றீர்...
பல ஊர்கள் பற்றி பல விடயங்கள் தெரிந்து கொள்வதில் மகிழ்ச்சி..
மேலும் தொடருங்கள்..!

ஜெயாஸ்தா
19-10-2007, 03:21 AM
ஹா, ஹா அக்னி!

உண்மையில் என்னால் இப்போது அமைதியாக இருந்து எழுத முன்னர் போல நேரம் கிடைப்பதில்லை என்றாலும் உங்களது அன்புக்கட்டளைக்காகவே இந்த தொடரை எழுதத் தொடங்கினேன். :)
மிக்க நன்றிகள் உங்கள் பின்னூட்டத்திற்கு....

அக்னியின் அன்பு கட்டளை மட்டுமல்ல. எங்கள் அன்புக்கட்டளையும் அதுதான். நீங்கள் உங்கள் நேரத்தை ஒதுக்கி இப்படி பயணக்கட்டுரை எழுதாவிடில் நாங்கள் எங்ஙனம் இலவசமாக சுற்றிப்பார்க்கமுடியும்? படங்கள் அருமையாக உள்ளது.

மலர்
19-10-2007, 04:21 AM

அக்னி மட்டும் தான் அன்புகட்டளை கொடுத்தாரா... நாங்கள் எல்லாம் தரலியா.................????:confused:

நான் இருக்கும் "மஸ்கட்"டுக்கும் "சலாலா"க்கும் இடை கிட்டத்தட்ட 1200 கிலோமீட்டர் இடை வெளி இருக்கும்

நோ கமெண்ட்ஸ்.....

சலாலா நகரிலே ஓவியன் குழுவினர் சுட்ட சில புகைப்படங்கள் இதோ, உங்களுக்காக....

புகைப்படங்கள் அருமையாக உள்ளது..அப்படியே அதெல்லாம் என்ன இடம் என்று பக்கத்தில் தந்தால் இன்னும் நல்லாயிருக்கும்....

ஹீ..ஹீ....விசா இல்லாமலே சலாலாலை சுற்ற ஆரம்பித்து விட்டோம்....
சீக்கிரம் அடுத்ததையும் போடுங்கோ............

சிவா.ஜி
19-10-2007, 06:01 AM
சலாலா...அனுபவம் சல..சல..வென்று தெளிந்த நீரோடையில் உடல் நனைத்த சுகத்தை தருகிறது. பாலைக்குள் சோலையாய் இருக்கும் அந்த பிராந்தியத்தின் அழகை அனுபவிக்கும் பாக்கியம் உங்களுக்கு கிடைத்தது குறித்து மகிழ்ச்சி ஓவியன். அந்த பிரதேசத்தைப் பற்றிய ஒரு செய்தி. சலாலா ஏமன் நாட்டைச் சேர்ந்த பகுதி. தற்போதிருக்கும் சுல்தானின் தாயர் ஏமன் நாட்டைச் சேர்ந்தவர். அவருக்கு திருமணமாகி ஓமன் வந்த போது அவருக்கு பரிசாக வழங்கப்பட்ட இடம் இது என்று நான் ஓமனில் இருக்கும்போது சொன்னார்கள். அப்படியா ஓவியன்?

பூமகள்
19-10-2007, 10:05 AM
"சலாலா...சலாலா... ரெட்டை வால் வெண்ணிலா....!!" என்று என்னைப் பாட வைத்து விட்டது சலாலா பற்றிய உங்களின் அனுபவம் அண்ணா...!!
ரொம்ப அழகாக விவரித்திருக்கிறீர்கள்...!! என்னைப் போன்ற புதியவர்களுக்கு உங்களின் ஓமானைச் சுற்றிக் காட்டி அசத்துங்கள்...!!
படங்கள் அற்புதம்..!!
சுல்தான் படம் அற்புதம்....!! இன்னும் கொடுங்கள்....!! முக்கியமா என்னனென்ன சாப்பிட்டீங்கன்னு கொடுங்க...!! (சாப்பாட்டிலேயே குறியா இருக்கே பூவுன்னு தப்ப நினைக்கப்படாது மக்கா...!! ஹி ஹி..!!:D:D:D:D)

யவனிகா
19-10-2007, 10:43 AM
சலாலா பயண அனுபவம் மிகவும் சுவாரசியம் நிறைந்ததாகத் தான் உள்ளது...இது தான் விக்ரம் படத்தில் வரும் சலாமியா நாடோ?நானெல்லாம் ஈத் லீவிலியும் ஓவர் டைம் பாத்து நொந்து நூடுல்ஸ் ஆன வேளையில நீங்க குளு குளுன்னு சலாலா போயிட்டு வந்திட்டீங்க..காதில புகை வருது...சலாலாவைப் பாக்க முடியலைன்னாலும் உங்க பயணக் கட்டுரை படங்களுடன், எங்களை சலாலாவிற்கு அழைத்துச் சென்றது.சலாலா மன்னர் ,மன்னருக்குரிய பந்தா எதுவுமில்லால் அமைதியான முகத்துடன் சீரியல் அப்பா நடிகர் போல இருக்கிறார்.உபயோகமான கட்டுரை.

மன்மதன்
19-10-2007, 12:52 PM
அறிஞர் சொன்னமாதிரி எங்களையும் நீங்கள் அழைத்து சென்றது மாதிரி அழகான பயணக்கட்டுரை.. ஒரு படத்தில் கூட ஓவியரின் குழுவை காணவில்லையே..:D

அக்னி
19-10-2007, 12:57 PM
ஒரு படத்தில் கூட ஓவியரின் குழுவை காணவில்லையே..:D
போட்ட படங்களில் கூட ஊரே வெறிச் என்று இருக்கிறது...
ஒருவேளை நம்ம ஓவி குழுவைக் கண்டதும், அனைவரும் பயந்து ஒளித்துவிட்டார்களோ..???

பூமகள்
19-10-2007, 01:01 PM
போட்ட படங்களில் கூட ஊரே வெறிச் என்று இருக்கிறது...
ஒருவேளை நம்ம ஓவி குழுவைக் கண்டதும், அனைவரும் பயந்து ஒளித்துவிட்டார்களோ..???
பின்னே..;):p:icon_ush: எங்க ஓவி அண்ணாவை பார்த்தா......... ஓமானே அதிருமில்ல..!!:D:D:D இந்த சலாலா... எல்லாம் எம்மாத்திரம்...!! :icon_b: :rolleyes:

அன்புரசிகன்
19-10-2007, 01:35 PM
நல்லதொரு அனுபவம் கிடைத்தது போல் ஒருபிரமை....

ஓவியன்... ஒரு சந்தேகம்... ஓமான் மன்னன் தலையில் இவ்வாறுதான் கட்டுவாரா??? காரணம் கத்தார் மற்றும் ஐக்கிய அரபு ராச்சியங்களில் வேறுமாதிரி அல்லவா....

ஓவியன்
19-10-2007, 01:50 PM
ஓமான் மன்னன் தலையில் இவ்வாறுதான் கட்டுவாரா??? காரணம் கத்தார் மற்றும் ஐக்கிய அரபு ராச்சியங்களில் வேறுமாதிரி அல்லவா....
உண்மைதான் அன்பு!, சுல்தான் மட்டுமல்ல ஓமான் நாட்டினர் அனைவருமே இப்படித் தலைப்பாகைதான் கட்டுவார்கள், நான் கூட அமீரகத்திலிருந்து மஸ்கட் விமான நிலையத்தில் இறங்கியதும் இது என்னடா எல்லோரும் தலைப்பாகையுடன் நிக்கிறார்களே என்று வியந்தேன்...!!! :)

மலர்
19-10-2007, 02:22 PM
பின்னே..;):p:icon_ush: எங்க ஓவி அண்ணாவை பார்த்தா......... ஓமானே அதிருமில்ல..!!:D:D:D இந்த சலாலா... எல்லாம் எம்மாத்திரம்...!! :icon_b: :rolleyes:

மக்களே என்ன கொடுமை இது.................????
மலர் : (பூமகளின் இந்த பதிலை பார்த்து அழுது கொண்டே)என்னால தாங்க முடியலீங்கோ
பக்கத்துல ஏதாவது நல்ல ஹாஸ்பிடல் இருக்காங்கோ...???
இருந்தா அம்புலன்ஸ கொஞ்சம் வரச்சொல்லுங்கோ.....

(பி.கு := ஓவியண்ணா .... என்னோட பதிலை படிச்சதும் மலருக்கு வயித்தெறிச்சலா இல்லைன்னா காதுல புகை வருதான்னு எடக்கு கேள்வி எல்லாம் கேக்கப்படாது..... )

ஓவியன்
19-10-2007, 03:03 PM
சலாலா ஏமன் நாட்டைச் சேர்ந்த பகுதி. தற்போதிருக்கும் சுல்தானின் தாயர் ஏமன் நாட்டைச் சேர்ந்தவர். அவருக்கு திருமணமாகி ஓமன் வந்த போது அவருக்கு பரிசாக வழங்கப்பட்ட இடம் இது என்று நான் ஓமனில் இருக்கும்போது சொன்னார்கள். அப்படியா ஓவியன்?

"சலாலா" 18ம் நூற்றாண்டிலே ஓமான் சுல்தான் வசம் வந்ததாக ஓமானிய வரலாறுகள் கூறுகின்றன, ஆனால எப்படி வந்ததென தெளிவாக விளக்கவில்லை. நீங்கள் கூறியது சரியாக இருக்கலாம். தகவல்களைத் தேடிக் கொண்டிருக்கின்றேன் கிடைத்ததும் பகிர்ந்து கொள்கின்றேன்.

ஓவியன்
19-10-2007, 03:23 PM
சலாலாவுக்கு போகனும் என்று ஒவ்வொரு வருடமும் முடிவு எடுப்பொம். ஆனால் போக முடியவில்லை. அருமையான் படங்கள். ஒவியன். அங்கே உள்ள ஒரு பிரபலமான மசூதியை பார்த்திங்களா?அதில் காஷ்மிரிலிருந்து வரவழைக்கப்பட்ட கம்பள் விரிப்பு மசூதியில் முழுவதும் இருக்கும். அது ரொம்ப புகழ்பெற்றது.
மிக்க நன்றி நேசம்!, உண்மையிலே நாம் சலாலாவுக்கு போன போது அங்கு என்னென்ன விசேடமான விடயங்களேன தெரியாமலேயே போனோம் அதனால் நிறைய அருமையான விடயங்களைப் பார்க்க தவரிவிட்டோம், அதில் இதுவும் ஒன்று அடுத்த தடவை எல்லாவற்றையும் பார்த்துவிட்டால் போச்சு!. :)

அருமை... நண்பா...
எங்களையும் சேர்த்து அழைத்து சென்றது போல் இருக்கிறது தங்களின் படைப்பு. நன்றி இன்னும் கொடுங்கள்...
நன்றி அண்ணா இன்னும் நல்ல புகைப் படங்களும் தகவல்களும் உள்ளன, கொஞ்சம் கொஞ்சமாக பகிர்ந்து கொள்வேன். :)

அற்புதம் ஓவியன்...
நன்றாக விடுமுறையை அனுபவிக்கின்றீர்...
பல ஊர்கள் பற்றி பல விடயங்கள் தெரிந்து கொள்வதில் மகிழ்ச்சி..
மேலும் தொடருங்கள்..!
உண்மைதான் மதி எனக்கும் அந்த ஆவல் இருப்பதனால் தான் புது இடங்களுக்கு போக விரும்புகிறேன். :)
உங்கள் ஊக்கத்திற்கு நன்றி!.

அக்னியின் அன்பு கட்டளை மட்டுமல்ல. எங்கள் அன்புக்கட்டளையும் அதுதான். நீங்கள் உங்கள் நேரத்தை ஒதுக்கி இப்படி பயணக்கட்டுரை எழுதாவிடில் நாங்கள் எங்ஙனம் இலவசமாக சுற்றிப்பார்க்கமுடியும்? படங்கள் அருமையாக உள்ளது.
சரிங்க தலைவா, நீங்க சொன்னால் மறுக்கவா முடியும், மிகுதியையும் எழுதுகிறேன். :)

புகைப்படங்கள் அருமையாக உள்ளது..அப்படியே அதெல்லாம் என்ன இடம் என்று பக்கத்தில் தந்தால் இன்னும் நல்லாயிருக்கும்....
ஹீ..ஹீ....விசா இல்லாமலே சலாலாலை சுற்ற ஆரம்பித்து விட்டோம்....
சீக்கிரம் அடுத்ததையும் போடுங்கோ............
மலர்!, அந்த புகைப்படங்கள் வாகனத்தில் இருந்து கொண்டு சுட்ட படங்கள், நாம் சென்ற இடங்களில்லை. நாம் போன இடங்களை ஒவ்வொன்றாக படங்களுடன் விளக்குவேன், கொஞ்சம் பொறுத்திருங்கள்.

உங்கள் ஆர்வத்துக்கு நன்றிகள்!.

படங்கள் அற்புதம்..!!
சுல்தான் படம் அற்புதம்....!! இன்னும் கொடுங்கள்....!! முக்கியமா என்னனென்ன சாப்பிட்டீங்கன்னு கொடுங்க...!! (சாப்பாட்டிலேயே குறியா இருக்கே பூவுன்னு தப்ப நினைக்கப்படாது மக்கா...!! ஹி ஹி..!!:D:D:D:D)
சரிங்க, சாப்பாட்டைப் பற்றியும் எழுதுகிறேன்...!!!
உங்கள் ஆர்வத்துக்கு நன்றிகள்!. :)

சலாலா பயண அனுபவம் மிகவும் சுவாரசியம் நிறைந்ததாகத் தான் உள்ளது...இது தான் விக்ரம் படத்தில் வரும் சலாமியா நாடோ?நானெல்லாம் ஈத் லீவிலியும் ஓவர் டைம் பாத்து நொந்து நூடுல்ஸ் ஆன வேளையில நீங்க குளு குளுன்னு சலாலா போயிட்டு வந்திட்டீங்க..காதில புகை வருது...சலாலாவைப் பாக்க முடியலைன்னாலும் உங்க பயணக் கட்டுரை படங்களுடன், எங்களை சலாலாவிற்கு அழைத்துச் சென்றது.சலாலா மன்னர் ,மன்னருக்குரிய பந்தா எதுவுமில்லால் அமைதியான முகத்துடன் சீரியல் அப்பா நடிகர் போல இருக்கிறார்.உபயோகமான கட்டுரை.
விக்ரம் படத்தின் சலாமியோ அப்படியே துபாயை ஞாபகத்தில் வைத்துக் கொண்டு காட்சியாக்கப்பட்டது. சலாலாவாக இருக்க சந்தர்பமில்லை. சலாலா மன்னர் அமைதியானவர் தான் ஆனால் மிகத் திறமையானவர், தந்தை ஆட்சியை கவிழ்த்து ஆட்சிப் பீடமேறியவர். இங்கிலாந்து இராணவத்தினால் "ஜெனரல்" பட்டம் பெற்றவர். ஓமான் ரோயல் இராணவத்தினரால் "பீல்ட் மாஸ்டர்" கெளரவம் பெற்றவர். 1970ம் ஆண்டிலிருந்து ஓமானை நவீன பாதைக்கு இட்டு சென்ற பெருமை சுல்தான் ஹாபூசையே சாரும்.

அறிஞர் சொன்னமாதிரி எங்களையும் நீங்கள் அழைத்து சென்றது மாதிரி அழகான பயணக்கட்டுரை.. ஒரு படத்தில் கூட ஓவியரின் குழுவை காணவில்லையே..:D
நன்றிங்கோ!!
ஓவியன் குழுவை, தனி மடலில் அனுப்புகிறேன்...!!! :D

நல்லதொரு அனுபவம் கிடைத்தது போல் ஒருபிரமை....
அட வெறும் பிரமை மட்டும் தானா...??? :D:D:D

மிக்க நன்றி அன்பு!.

ipsudhan
19-10-2007, 03:41 PM
பயண கட்டுரைக்கு நல்ல முன்னோட்டம் ஓவியன்,

ஒருவர் மற்றொரு நண்பரின் ஊரினை அறிந்து கொள்ள எளிதாக உதவும்.

நேசம்
19-10-2007, 06:08 PM
என்னடா எல்லோரும் தலைப்பாகையுடன் நிக்கிறார்களே என்று வியந்தேன்...!!! :)

துபை வரும் ஒமன் பசங்க எல்லாம் தொப்பிதான் போட்டிருப்பார்கள்.பதவியில் இருப்பவர்கள் மட்டும்தான் தலைப்பாகை கட்ட்ணும் என்று விதி இருக்கிறாதா.

ஓவியன்
19-10-2007, 07:04 PM
துபை வரும் ஒமன் பசங்க எல்லாம் தொப்பிதான் போட்டிருப்பார்கள்.பதவியில் இருப்பவர்கள் மட்டும்தான் தலைப்பாகை கட்ட்ணும் என்று விதி இருக்கிறாதா.

இப்போது இளைஞர்கள் சிலர் இலகுவென்பதால் தொப்பியும் பாவிக்கின்றனர், ஆனால் கலாச்சார உடை, அலுவலகங்களுக்கு செல்வது என்று வந்து விட்டால் எல்லோரும் தலைப் பாகைதான் அணிவார்கள். இதில் பெரியோர், சிறுவர், அதிகாரம் மிக்கவர், அதிகாரம் இல்லாதவர் என ஒன்றுமே பார்ப்பதில்லை.

நேசம்
19-10-2007, 07:12 PM
அமிரகத்தில் எல்லா நாட்டினரும் கந்துரா(அவர்களது பாரம்பரிய உடை) அணியலாம். ஆனால் தலைக்கு கட்டும் வளையத்தை கட்ட கூடாது என்பது சட்டமாக இருக்கிறது என் நினைக்கிறேன். (வெளிநாட்டினரும் அதை கட்டுவதில்லை.)

அமரன்
20-10-2007, 08:22 AM
ஓவியா... மாற்றி எழுதி மனற மக்களை ஏமாத்துகின்றீர்களே... உண்மைகளை எழுத இன்னும் ஏன் தயக்கம் .

பிரியமான நண்பன்

ஓவியன்
20-10-2007, 08:25 AM
ஓவியா... மாற்றி எழுதி மனற மக்களை ஏமாத்துகின்றீர்களே... உண்மைகளை எழுத இன்னும் ஏன் தயக்கம் .

பிரியமான நண்பன்

என்னப்பா சொல்லுறீர்...?
ஒண்ணுமே புரியலையே...???!!!:D:D:D

சூரியன்
20-10-2007, 02:00 PM
நண்பரே படத்தில் தெரியும் இடங்கள் அழகாக இருக்கிறது..
மீதியை தொடர்வீரா?

மலர்
20-10-2007, 02:02 PM
நண்பரே படத்தில் தெரியும் இடங்கள் அழகாக இருக்கிறது..
மீதியை தொடர்வீரா?

தொடராது போனால்
விட்டு விடுவோமா என்ன.......??

சூரியன்
20-10-2007, 04:15 PM
அப்படியே விட்டு விட்டால் என்ன செய்வது என்றுதான் சொன்னேன்..

அமரன்
20-10-2007, 06:19 PM
நல்லதொரு அனுபவம் கிடைத்தது போல் ஒருபிரமை.......
வெறும் பிரமைதானா...?:rolleyes::rolleyes::rolleyes:

அன்புரசிகன்
20-10-2007, 06:30 PM
வெறும் பிரமைதானா...?:rolleyes::rolleyes::rolleyes:

நான் என்னா ஓமானிலா இருக்கிறேன்.

அமரன்
20-10-2007, 06:32 PM
என்ன சொல்லவர்ரீங்க நீங்க..வாருகின்றீர்களா..,

அன்புரசிகன்
20-10-2007, 06:39 PM
என்ன சொல்லவர்ரீங்க நீங்க..வாருகின்றீர்களா..,

நீங்க கவிதை எழுத தொடங்கினீங்க.. அதுக்கப்புறமா நீங்க சாதாரணமா சொல்லுறது கூட எனக்கு புரியலிங்க....

ஓவியன்
21-10-2007, 02:26 AM
நண்பரே படத்தில் தெரியும் இடங்கள் அழகாக இருக்கிறது..
மீதியை தொடர்வீரா?

நிச்சயமாகத் தொடர்வேன் நண்பரே, ஆனால் இப்போது கொஞ்சம் வேலைப் பளுவிலே உள்ளேன்.....

அதனால் தான் கொஞ்சம் தாமதமாகிறது.....

ஓவியன்
21-10-2007, 02:27 AM
தொடராது போனால்
விட்டு விடுவோமா என்ன.......??

ஆமா என்னதான் செய்வீங்க எங்கிறேன்...??? :)

ஓவியன்
21-10-2007, 02:28 AM
நீங்க கவிதை எழுத தொடங்கினீங்க.. அதுக்கப்புறமா நீங்க சாதாரணமா சொல்லுறது கூட எனக்கு புரியலிங்க....
ஹீ,ஹீ!
இப்போது எனக்கு புரிகிறது...........!!! :icon_rollout:

அமரன்
21-10-2007, 07:03 AM
ஹீ,ஹீ!
இப்போது எனக்கு புரிகிறது...........!!! :icon_rollout:
இனி ஆச்சும் உண்மையைச் சொல்றது..

ஓவியன்
21-10-2007, 07:07 AM
இனி ஆச்சும் உண்மையைச் சொல்றது..

சரிங்க சொல்லுறேன்....:D

உண்மை...! :icon_good:

அமரன்
21-10-2007, 07:09 AM
சரிங்க சொல்லுறேன்....:D

உண்மை...! :icon_good:

தப்பு உண்மையைச் சொல்லுங்கன்னுதானே சொன்னேன்.

ஓவியன்
21-10-2007, 07:11 AM
தப்பு உண்மையைச் சொல்லுங்கன்னுதானே சொன்னேன்.சொன்னேனே கேட்கலையா...?
உங்க காது தப்பு போலிருக்கு...!! :D

அமரன்
21-10-2007, 07:14 AM
சொன்னேனே கேட்கலையா...?
உங்க காது தப்பு போலிருக்கு...!! :D
நீங்கள் பிக்னிக் போனீங்களா?:confused::confused::D:D

ஓவியன்
21-10-2007, 07:17 AM
நீங்கள் பிக்னிக் போனீங்களா?:confused::confused::D:Dஇல்லை...!!
சலாலாக்குத் தான் போனேன்..!! :)

அமரன்
21-10-2007, 07:21 AM
இல்லை...!!
சலாலாக்குத் தான் போனேன்..!! :)
ஏன் போனீங்க..

ஓவியன்
21-10-2007, 07:24 AM
ஏன் போனீங்க..ஒரு இளிச்சவாயன் அமரனு இருக்காராம், அவர் ஏன் போனிங்க என்று கேட்கட்டும் என்றுதான்...! :icon_rollout:

kampan
21-10-2007, 07:41 AM
நன்றி ஓவியனே நாங்களும் நெடுநாளாக சலாலா செல்ல வேண்டுமென ஆவலாக இருக்கிறோம் அந்த ஆவலை உங்கள் இந்த படைப்பு மேலும் தூண்டி விட்டது. மிக விரைவில் நாம் வருவோம்.

ஓவியன்
21-10-2007, 07:58 AM
நன்றி ஓவியனே நாங்களும் நெடுநாளாக சலாலா செல்ல வேண்டுமென ஆவலாக இருக்கிறோம் அந்த ஆவலை உங்கள் இந்த படைப்பு மேலும் தூண்டி விட்டது. மிக விரைவில் நாம் வருவோம்.
வாங்க, வாங்க!

ங்கே வம்பு பண்ண நிறைய இடமிருக்கு..:D

அமரன்
21-10-2007, 08:01 AM
ஒரு இளிச்சவாயன் அமரனு இருக்காராம், அவர் ஏன் போனிங்க என்று கேட்கட்டும் என்றுதான்...! :icon_rollout:

வாங்க, வாங்க!
ங்கே வம்பு பண்ண நிறைய இடமிருக்கு..:D
:icon_p::icon_p::icon_p::icon_p:

lolluvathiyar
26-10-2007, 08:06 AM
பாலைவன நாட்டில் ஒரு சோலைவனமா? வித்தியாசமான அனுபவங்கள் தொடரட்டும் தொடர்ந்து படிக்க ஆவலாய் இருகிறேன்.

அமரன்
26-10-2007, 08:11 AM
வாத்தியாரே! அது பாச்சுலர் பாட்டி..(ஓவியனின் கடைசி பாட்டி) தணிக்கை செய்துதான் சொல்றார். இல்லைன்னா மக்கள் போட்டுக் கொடுத்து விடுவார்களே.

ஓவியன்
26-10-2007, 10:30 AM
ஓவியனின் கடைசி பாட்டிஇதென்னப்பா எனக்கு அம்மா வழியில் ஒரு "பாட்டி", அப்பா வழியில் ஒரு "பாட்டி" என மொத்தம் இருவர் தான் உள்ளனர். ஆனால் நீரோ ஏதோ சகோதரர்களைக் கூறுவது போல முதல் பாட்டி, கடைசிப் பாட்டி எங்கிறீரே....???

உமக்கு என்னாச்சு...???? :lachen001::lachen001::lachen001:

அமரன்
26-10-2007, 10:34 AM
உமக்கு என்னாச்சு...???? :lachen001::lachen001::lachen001:
உங்களுக்குத்தான் ஆகப்போகுதாமே. உங்கள் தங்கை சொன்னாங்க..

ஓவியன்
26-10-2007, 10:38 AM
உங்களுக்குத்தான் ஆகப்போகுதாமே. உங்கள் தங்கை சொன்னாங்க..

இதென்னங்க என்னென்னமோ சொல்லுறீங்க, ஒண்ணுமே புரியலையே...??? :icon_rollout:

அமரன்
26-10-2007, 10:40 AM
இதென்னங்க என்னென்னமோ சொல்லுறீங்க, ஒண்ணுமே புரியலையே...??? :icon_rollout:
அப்போ சேதி நிசம்தான்

ஓவியன்
26-10-2007, 10:48 AM
சரிங்க உங்களுக்கும் விரைவில் சேதி வரும்...!!! :)

அக்னி
26-10-2007, 11:03 AM
அக்னி::whistling:
என்னமோ நடக்குது ஓமானில...
மர்மமாய் இருக்குது மன்றத்தில...

அமரன்
26-10-2007, 11:44 AM
அக்னி அண்ணா...!
இது வயசுப்பசங்க சமாச்சாரம்..
உங்களுக்கு மர்மமாகத்தான் இருக்கும் ..

ஓவியன்
26-10-2007, 12:05 PM
அக்னி::whistling:
என்னமோ நடக்குது ஓமானில...
மர்மமாய் இருக்குது மன்றத்தில...

ஒட்டகம் நடக்குது :sport009: ஓமானிலே...
மர்மமாய் இல்லையே மன்றத்திலே...! :icon_shout:

ஓவியன்
26-10-2007, 12:09 PM
அக்னி அண்ணா...! ..

அக்னியோட அண்ணனா....????
யாருங்க அது, ஒருத்தரும் எனக்கு சொல்லலையே...??? :icon_rollout:

சூரியன்
01-05-2008, 10:47 AM
நிச்சயமாகத் தொடர்வேன் நண்பரே, ஆனால் இப்போது கொஞ்சம் வேலைப் பளுவிலே உள்ளேன்.....

அதனால் தான் கொஞ்சம் தாமதமாகிறது.....

ஓவியன் அண்ணா இதை தொடரும் என்னம் உள்ளதா? :rolleyes:

அனுராகவன்
02-05-2008, 01:19 AM
ஓவியன் அவர்களே!!
தொடருங்கள் உங்கள் தொடரே!!
நாங்கள் பின்தொடர்கிறோம்..

விகடன்
02-05-2008, 01:34 AM
எப்படித்தான் இந்த மாதிரியான இடங்களெல்லாம் உமது கண்ணுக்கு புலப்படுகிறதோ!!

எங்களையும் சலாலாவிற்கு அழைத்துப் போவதாக முடிவெடுத்துவிட்டீர். இனி என்ன தாமதம். சீக்கிரமாக அடுத்தடுத்த இடங்களையும் காட்டவேண்டியதுதானே.

அமீரகத்திலிருக்கும்வரை இபன் பதுதா மோலை விட்டு வைக்கவில்லை. இப்ப சலாலாவா?

சூரியன்
11-05-2008, 02:21 PM

உங்களுக்கு ஒரு டிக்கெட் அனுப்பி வைக்க சொல்லட்டா.:mini023:

விகடன்
11-05-2008, 04:06 PM
உங்களுக்கு ஒரு டிக்கெட் அனுப்பி வைக்க சொல்லட்டா.:mini023:

அங்கு செல்வதற்கெல்லாம் அனுமதிச் சீட்டு தேவையில்லை சூரியன்.
உலகத்தை வலம் வருகிறீர்கள் (சூரியன், பூமியின் சட்டத்தில்/ சார்பில் :D). அங்கங்கே என்ன நடைபெறுகிறது என்று கவனிக்கத் தவறிவிட்டீர்களே...