PDA

View Full Version : இரக்கமில்லாத குண்டுவிமானமே..!



யாழ்_அகத்தியன்
18-10-2007, 08:26 PM
தும்மலுக்கு மருந்தெடுக்க
போனவன் குண்டுமழையில்
நனைந்தபடி வீடு வந்து
சேர்ந்தான் பிணமாக

*
கொள்ளி வைக்க யாரும்
மிஞ்சவில்லை ஒரே
குண்டில் குடும்பமே பலி

*
குழந்தையில் வீட்டில்
ஊர்ந்து பழகியது உதவி
செய்கிறது குண்டுவிமானம்
வருகையில் தெருக்களில் ஊர

*
பத்து மாதம் சுமந்தவளும்
இறந்து போகிறாள் பதினைந்து
நிமிடம் சுமக்க முடியாத
விமானத்தின் குண்டுகளால்
*
எனக்கும் யோதிடம் தெரியும்
என் சாவும் குண்டுகளால்தான்
எந்த குண்டால் என்பதைத்தான்
கணிக்கமுடியவில்லை

*
குண்டுகளை தயாரிப்பவர்களே
நீங்கள் அக்கா,அண்ணா,தம்பி,
தங்கையோடு பிறந்ததில்லையா...?


-யாழ்_அகத்தியன்

ஓவியன்
18-10-2007, 09:28 PM
அகத்தியன் உயிரை ஊடுறுவும் வலிகள் உங்கள் எழுத்திலே அதனை அனுபவித்தவர்களுள் ஒருவன் என்பதால் இன்னும் வலிகளுடன் உணர்ச்சிக் கொந்தளிப்பும் எழத் தவறவில்லை....



இறக்கை வைத்த விரியன்கள்
கண் கொத்தும் கழுகுகள்
பிணந்தின்னிப் பேய்கள்
உயிர் காவும் வேதாளங்கள்
இன்னும் பல பெயர் தெரியா
பிரகிருதிகள் - எல்லோருக்கும்
வேணுமாம் விளையாட
எம் குழந்தைகள்[/COLOR]

முன்னர் நான் எழுதிய வரிகளிவை, இனிமேலும் நம் உறவுகளை இந்த பிணந்தின்னி பேய்களிடம் நாம் கொடுக்க தயாரில்லை அகத்தியன்...!

எல்லாவற்றுக்கும் முடிவு பிறக்கும் வெகு விரைவிலேயே...

நேசம்
18-10-2007, 10:06 PM
எல்லாவற்றுக்கும் முடிவு பிறக்கும் வெகு விரைவிலேயே...

இன்ஷா அல்லாஹ் நல்ல முடிவு பிறக்கும்

சுகந்தப்ரீதன்
22-10-2007, 01:20 PM
*
எனக்கும் யோதிடம் தெரியும்
என் சாவும் குண்டுகளால்தான்
எந்த குண்டால் என்பதைத்தான்
கணிக்கமுடியவில்லை

-யாழ்_அகத்தியன்
தங்களின் காதல் கவிதைகளை படித்த எனக்கு தாங்கள் இப்படியொரு உண்மையான உணர்வு கவிதையை படைப்பீர்கள் என்று எண்ணியதில்லை... காதல் கவிதைகளில் மென்மையாய் மனதை வருடிய தங்களின் வரிகள் இங்கே வன்மையாய் மனதை வாட்டுகின்றன...! என் நண்பன் கூறியதை போல இழந்தவனுக்குதான் தெரியும் இழப்பின் மதிப்பு... ஆகையால் எத்தனைதான் எழுதினாலும் துயர் துடைக்க முடியாத துயரம்தான் எனக்கு..!

வாழ்வோடு போராடும் உலகில் சாவோடு போராடும் சங்கடம்..! இந்த நிலை விரைவில் மாறட்டும்...தமிழீழத்தில் சுதந்திர காற்று வீசட்டும்.. அதை எம்தமிழ் மக்கள் சுவாசமாய் சுவாசிக்கட்டும்...! இந்த கவிதையை தந்த யாழ்-அகத்தியருக்கு என் நன்றிகளும் பாராட்டுகளும்..!

யாழ்_அகத்தியன்
25-10-2007, 11:35 AM
உங்க வாழ்த்துக்கு மிக்க நன்றிகள்

இனியவள்
25-10-2007, 01:44 PM
இரக்கமில்லா குண்டு விமானமே
உறக்கம் கொன்று
உணர்வு புதைத்து
எம் உயிர் கொடுத்து
அப்பாவி உயிர்களைப்
பறிக்கும் உன் உயிரைப்
பறிக்க விதை கொண்ட
விடியலாய் புறப்பட்டு
விட்டோம் நாங்கள்

அழகு யாழ் அகதியன் வாழ்த்துக்கள்

அமரன்
25-10-2007, 02:42 PM
ஈழந்தமிழர் அவலம் இயம்பும் கவிதை.
அவலம் கண்டு இனியவள் பொங்கியபோது விழுந்த கவிதை

தீருமா யுத்தம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10810)

iniya
25-10-2007, 02:48 PM
ஈழத் தமிழரின் அவலங்களை உங்கள் கவிதை
அழகாகப் படம் பிடித்துக் காட்டுகின்றன
உங்கள் உண்ர்வுகளை தொடர்க கவி மூலம்