PDA

View Full Version : உன் பெயரே கவிதை..!



யாழ்_அகத்தியன்
18-10-2007, 06:46 PM
7ம் ஆண்டு வகுப்பறை
மேசையில் முதல் முதலாக
கிறுக்க ஆரம்பித்தேன்

இன்றும் கிறுக்கிக்
கொண்டுதானிருக்கிறேன்

கண்ணில்படும்
கரும்பலகையிலும்
விளம்பர சுவர்களிலும்
பேருந்து இருக்கையிலும்
பிடித்த மரங்களிலும்

ரசித்த உலக
அதிசயங்களிலும்

கிடைக்கும் வெற்றுக்
காகிதங்களிலும்
உன் பெயரோடு
என் பெயரை

எனினும்
இன்றுவரை என் பெயர்
கிறுக்கலாகத்தான் தெரிகிறது
நான் கவிஞனான பிறகும்

ஆனாலும்
உன் பெயரே எனக்கு பிடித்த
கவிதையாகவே இன்றும் இருக்கிறது
-யாழ்_அகத்தியன்

சுகந்தப்ரீதன்
21-10-2007, 09:45 AM
ஆனாலும்
உன் பெயரே எனக்கு பிடித்த
கவிதையாகவே இன்றும் இருக்கிறது
-யாழ்_அகத்தியன்
மிகவும் ரசித்தேன் அகத்தியரே... காதல் கவிதை வரைவதில் நீங்கள் மிகச்சிறந்த ஓவியன் போலிருக்கு... அதுவும் 7-ம் வகுப்பிலிருந்தே ஆரம்பித்துள்ளீர்கள்.. ரொம்ப ஆழமான காதல் போலும் தங்களுடையது... வாழ்த்துக்கள் அகத்தியரே...!

யாழ்_அகத்தியன்
21-10-2007, 01:38 PM
மிகவும் ரசித்தேன் அகத்தியரே... காதல் கவிதை வரைவதில் நீங்கள் மிகச்சிறந்த ஓவியன் போலிருக்கு... அதுவும் 7-ம் வகுப்பிலிருந்தே ஆரம்பித்துள்ளீர்கள்.. ரொம்ப ஆழமான காதல் போலும் தங்களுடையது... வாழ்த்துக்கள் அகத்தியரே...!


நான் இன்னும் யாரையும் காதலிக்கவே இல்லை
இன்னும் காதலி தேடும் வயதுதான் எனக்கு

உங்க வாழ்த்துக்கு மிக்க நன்றிகள்

சூரியன்
21-10-2007, 02:34 PM
நான் இன்னும் யாரையும் காதலிக்கவே இல்லை
இன்னும் காதலி தேடும் வயதுதான் எனக்கு


நண்பரெ ஏன் இப்படி அநியாத்துக்கு போய் சொல்றீங்க..
கவிதைக்கு பாராட்டுக்கள்.

சுகந்தப்ரீதன்
22-10-2007, 07:41 AM
நான் இன்னும் யாரையும் காதலிக்கவே இல்லை
இன்னும் காதலி தேடும் வயதுதான் எனக்கு

உங்க வாழ்த்துக்கு மிக்க நன்றிகள்
அப்படின்னா உட்காந்து யோசிப்பீங்களா.. கவிதை எழுத..?

ஜெயாஸ்தா
22-10-2007, 09:55 AM
நான் இன்னும் யாரையும் காதலிக்கவே இல்லை
இன்னும் காதலி தேடும் வயதுதான் எனக்கு

உங்க வாழ்த்துக்கு மிக்க நன்றிகள்

கவிதைக்கு பொய் அழகு என்று சொல்வார்கள்....! கவிஞருக்குமா பொய் அழகு......!!?

எல்லா காதல்பைத்தியங்களும் தன் காதலியின் பெயரை இப்படித்தான் கிறுக்குகிறார்கள். (நான் உட்பட....! :lachen001:)

கஜினி
22-10-2007, 10:22 AM
கவிதை நல்லாயிருக்குது.

யாழ்_அகத்தியன்
25-10-2007, 11:32 AM
உங்க வாழ்த்துக்கு மிக்க நன்றிகள்