PDA

View Full Version : பங்குச் சந்தை இன்றும் வீழ்ச்சி!



சூரியன்
18-10-2007, 04:17 PM
இன்று காலை வணிகத்தில் அதிகரிகத்த பங்குச் சந்தை குறியீட்டு எண் மதியம் 2 மணிக்குப் பிறகு சரிந்தது.

மும்பை பங்குச் சந்தையில் காலையில் வர்த்தகம் நேற்றைய இறுதி நிலவரத்தை விட 112 புள்ளிகள் அதிகமாக 18,827.46 புள்ளிகளில் தொடங்கியது. (நேற்றைய இறுதி நிலவரம் 18,715.82 புள்ளிகள்).

இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிப்டி குறியீட்டு எண் 80.8 புள்ளிகள் அதிகரித்து 5,640.10 புள்ளிகளில் தொடங்கியது.

சென்செக்ஸ் பட்டியலில் உள்ள பெரும்பாலான நிறுவனங்களின் விலைகள் அதிகரித்தது. இதனால் குறியீட்டு எண் அதிகரித்தது.

ஆனால் மதியம் 2 மணிக்கு பிறகு, நிலைமை தலைகீழாக மாறியது. பங்குகளின் விலை சரிந்து குறியீட்டு எண் இறக்குமுகமானது.

மும்பை சென்செக்ஸ் நேற்றைய இறுதி நிலவரத்தை விட 717.43 புள்ளிகள் சரிந்து சென்செக்ஸ் 17,998 ஆக குறைந்தது.

மற்ற பிரிவுகளில் உள்ள பங்குகளின் விலைகளும் குறைந்தது.
மிட் கேப் பிரிவில் 174.70 புள்ளிகள் குறைந்து 7,426.24 புள்ளிகளாக இறங்கியது. சுமால் கேப் பிரிவில் 174.70 புள்ளிகளும், மற்றும் பி.எஸ்.இ 100, 200, 500 பிரிவு குறியீட்டு எண்களும் சரிந்தன.

தேசிய பங்குச் சந்தையிலும் மதியம் 2 மணிக்கு மேல் பங்குகளின் விலை குறையத் தொடங்கியது. இதனால் நிப்டி 5,513 புள்ளிகளாக குறைந்தது. இது நேற்றைய இறுதி நிலவரத்தை விட 23 புள்ளிகள் குறைந்தது.

எல். அண்ட் டி, மாருதி, என்.டி.பி.சி, ஒ.என்.ஜி.சி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ், ஏ..சி.சி, ஏ.சி.எல், பஜாஜ் ஆட்டோ, பி.ஹெச்.இ,எல், கரசிம், ஹெச்.டி.எப்.சி, ஹெச்.டி.எப்.சி வங்கி, ஹின்டால்கோ, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, இன்போசியஸ், ஐ.டி.சி, டாடா மோட்டார், டாடா ஸ்டீல் ஆகிய நிறுவன பங்குகளின் விலைகள் குறைந்தன.

விப்ரோ, சிப்லா, டாக்டர் ரெட்டி, ஹெச்.யூ..எல் ஆகிய நிறுவனங்களின் பங்குகளின் விலை அதிகரித்து.

இறுதி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 717.43 புள்ளிகள் சரிந்து 17,998.39 புள்ளிகளில் முடிந்தது. மற்ற பிரிவு பங்குகளின் விலைகளும் குறைந்துத. இதனால் இவைகளின் குறியீட்டு எண்களும் சரிந்தன.

தேசிய பங்குச் சந்தையில் நிப்டி 208 புள்ளிகள் சரிந்து 5,351 புள்ளிகளாக முடிந்தது. தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களின் பிரிவான சி.என்.எக்ஸ் ஐ.டி தவிர மறற பிரிவுகளில் உள்ள நிறுவனங்கள்,. வங்கிகளின் பங்கு விலை சரிந்தது. இதனால் இந்த பிரிவுகளின் விலைப்புள்ளிகளும் சரிந்தன.

இந்த தீடீர் விலை உயர்வுக்கும், சரிவுக்கு சில அந்நிய முதலீட்டு நிறுவனங்கள், பரஸ்பர நிதி நிறுவனங்கள் ஊக வணிகத்தில் ஈடுபடுவதே காரணம் என்று பங்குச் சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.

நன்றி:Webdunia