PDA

View Full Version : தூங்காத நினைவுகள்.....Hayah Roohi
18-10-2007, 01:03 PM
தூங்காத நினைவுகள்
மெல்லிய தாலாட்டாய்....

விம்மி விம்மி
வெளிவராது...
உள்ளுக்குள் அடங்கிப் போகிறது
பெருமூச்சு!!!


விழி கீறி
குபுக்கென வெளிவரப்பார்க்கும்
நீர்த்துளி
தணிக்கை செய்யப்படுகிறது!!!


ஒட்ட வைத்த
சிரிப்பு...

உலர்த்திவைத்த
விழியோரங்கள்...

என்ன
வாழ்க்கை இது!


இன்னும்
ஏற வேண்டிய
இலக்குகள்
இதயம் பிராண்டும்!!!

`நான்`
எனக்கில்லாத அவலம்
அவசரமாய்
நினைவுக்கு வரும்!!!என் நேற்றுக்கள்....
என் இன்றுகள்....
என் நாளைகள்....
யாரிடம்
அடகு வைக்கப்பட்டிருக்கின்றன???


என்
மெளனமே...
என் செவிகளுக்கு
இரைச்சலாயிருக்கிறது!!


இறைவா!!
எனக்கேன்
இத்தனை `சிறகுகள்`
தநதாய்
தங்கக் கூண்டில்
அடைத்து விட்டு???

Narathar
18-10-2007, 01:07 PM
இறைவா!!
எனக்கேன்
இத்த*னை `சிற*குக*ள்`
த*நதாய்
த*ங்க*க் கூண்டில்
அடைத்து விட்டு???

உங்கள் கடைசிவரிகள் உணர்த்தி நிற்கிறது உங்கள் வலியை

கவிதைக்கு வாழ்த்துக்கள்

சிவா.ஜி
18-10-2007, 01:12 PM
சுயம் இழந்துவிட்டு....கூண்டுக்கிளியாய் வாழ்க்கை நகர்த்தும் சுய சிந்தனயுள்ல பெண்னின் மனக்குரல்...அழகான கவியாய் அவதரித்திருக்கிறது. தங்கமே ஆனாலும் கூண்டு...கூண்டுதானே....சிறகுகள் ஆயிரம் இருந்தாலும்....விரிப்பது ஒரு.எல்லை வரைதானே....
அறிமுகக் கவிதையிலேயே அருமையாய் கலக்கிய ஹயா ரூஹிக்கு வாழ்த்துக்கள்...பாராட்டுக்கள்

சுகந்தப்ரீதன்
18-10-2007, 01:23 PM
ஒட்ட வைத்த
சிரிப்பு...

உலர்த்திவைத்த
விழியோரங்கள்...

என்ன
வாழ்க்கை இது!

இன்னும்
ஏற வேண்டிய
இலக்குகள்
இதயம் பிராண்டும்!!!

`நான்`
எனக்கில்லாத அவலம்
அவசரமாய்
நினைவுக்கு வரும்!!!

என் நேற்றுக்கள்....
என் இன்றுகள்....
என் நாளைகள்....
யாரிடம்
அடகு வைக்கப்பட்டிருக்கின்றன???


ரொம்ப பிடிச்சிருக்கு இந்த கவிதை எனக்கு.. காரணம் பெரும்பாலோனோரின் வாழ்வை சித்தரிப்பதாலா? இல்லை சொந்த நிலையை சொல்லில் காண்பதாலா?-என்று தெரியவில்லை.. ஆரம்ப கவிதையே அசத்தலாய் கொடுத்த உங்களுக்கு எனது பாராட்டுகளும் வாழ்த்துக்களும்...!

அக்னி
18-10-2007, 01:39 PM
தங்கக் கூண்டில்
இருப்பதிலும் விட...
தங்கக் கூடு
இல்லையென்றாலும்
சுதந்திரவாழ்வு.., மகிழ்வு...

பாராட்டுக்கள் ஹயா ரூஹி அவர்களே...

மன்றத்தின் முதற்படைப்புக்காக 200 iCash.

நேசம்
18-10-2007, 02:28 PM
முதல் படைப்பில் உங்கள் முத்திரை பதித்து வீட்டிர்கள்

சாராகுமார்
18-10-2007, 02:46 PM
அருமையான கவிதை.வாழ்த்துக்கள்.

யவனிகா
18-10-2007, 03:05 PM
அடி தூள்...மீண்டுமொரு தங்கக் கூண்டு கிளியா?...மஃப்தா தரித்த மலரோ நீங்கள்...மன்றத்தில் நீங்கள் சுதந்திரக் காற்றை சுவாசிக்கலாம்.கவலை விட்டு சிறகு விரியுங்கள்...வானமே எல்லை...தடைகள் இங்கு இல்லை..

இனியவள்
18-10-2007, 03:50 PM
ஆரம்பக் கவியே
அழகாய் அர்த்தங்கள்
பல பொதிந்து எம்மையும்
அதற்குள் மூழ்க வைத்து விட்டது
வாழ்த்துக்கள் ஹயா ரூஹி

அழகிய கவிக்கு அன்பாய் 500 இ-பணம்

பூந்தோட்டம்
18-10-2007, 07:39 PM
முதல் படைப்பே அழகாக இருக்கிறது.வாழ்த்துக்கள்

Hayah Roohi
23-10-2007, 01:11 PM
:icon_08::icon_08:


இனிய நன்றிகள்!!!
உங்கள் ஊக்கவிப்பு என் கவிதைகளுக்குச் சிறகு தருகிறது!!!

அமரன்
23-10-2007, 03:02 PM
உணர்ச்சிகள் பல
சுயம் அறிய உதவுகிறன.

உணர்வுகளைக் கொன்று
சுயம் இழந்து தவிக்கும்
மனிதர்களைக் காணும்போது
எனக்குள் தோன்றுவது.

யாருக்காக
தாண்டும் தூரத்திலிருக்கும்
இந்த எல்லைக் கோடு..

யாரையும் மனிதன் யாருமிங்கே
வலுக்கட்டாயமாக
கையகப்படுத்துவது கிடையாது.

கட்டாயப்படுத்துவோருக்கு
இக்கவியின் வேதனைச் சுமை
காட்டமானதாக அமையட்டும்.

ஆதவா
06-11-2007, 05:03 AM
என் நிலையின் நகலாய் ஒரு கவிதை....

மிகவும் பிடித்திருக்கிறது..

எண்ணக் காலடியில் மிதிபட்ட நினைவுகள் அடக்கி வைக்கப்பட்டிருந்தால்,


விம்மி வெளிவராது..

உண்மைதான் ஹயாத்.. கண்களின் ஈரம் வெளித்தோற்றம், அதன் விளைவு, மனத் தண்மை..


என் நேற்றுக்கள்....
என் இன்றுகள்....
என் நாளைகள்....
யாரிடம்
அடகு வைக்கப்பட்டிருக்கின்றன???

என்னுள்ளே சென்று இதய அறையின் சுவர்களில் தீட்டிய ஓவியமாகவே திகழ்கின்றன வரிகள்..

துன்பமின்றி வாழ்வல்ல, துன்பம் நாமே ஏற்படுத்திக் கொண்டால்??

எமக்கு எத்தனையோ சிறகுகளுண்டு.. (திற்மை முதலியன)
பறந்து செல்ல வழியில்லை....
எமது கூடு, தங்கமுமல்ல, சுரண்டியாவது எடுத்துச் செல்ல.

கவிதையின் கரு அபாரம்... உணர்வுகளைப் போர்த்திப் படுத்த குளிர்நாட்டு மங்கை.. :D

சிந்தனை அருமை...

ஓவியன்
23-11-2007, 06:22 AM
சில விடயங்களுக்கு
சில சந்தர்பங்களில்
விடை கிடைப்பதில்லை தான்

காலத்தோடு
பயணப்படு விளக்கங்கள்
விபரணமாய் விரியும்
ஒரு நாள்.....

அந்த நாள் விரைவில் கிட்ட
என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்..