PDA

View Full Version : சிவகங்கை சாமியாரை மணந்த ஆஸ்திரிய பெண்mgandhi
18-10-2007, 11:26 AM
மூலிகை ஆராய்ச்சிக்காக சிவகங்கை வந்த ஆஸ்திரிய நாட்டு பெண் அங்கு சாமியாரை திருமணம் செய்து கொண்டு அவரும் சாமியாராகிவிட்டார்.

ஆஸ்திரிய நாட்டை சேர்ந்தவர் மாரிங்கா(40). இவர் மூலிகை ஆராய்ச்சிக்காக கடந்த 7 வருடங்களுக்கு முன் சிவகங்கை அருகேயுள்ள புதூரில் உள்ள சுருளிகுன்றுக்கு வந்தார்.

அப்போது அங்கு வசிக்கும் சாமியாரை சந்தித்தார். அவரது பெயர் வைத்தியலிங்கசுவாமி (53). இவர் இப்பகுதியில் உள்ள பாலதண்டாயுதபாணி கோவிலின் அருகே வசித்து வருகிறார். கோவிலையும் நிர்வகித்து வருகிறார்.

அது தவிர இவர் அரியவகை மூலிகைகளான ஓரிதழ் தாமரை, சதையொட்டி, கீரிப்பூண்டு, சிவஞானவேம்பு போன்றவற்றையும் வளர்த்து வருகிறார் சாமியார்.

மூலிகை ஆராய்ச்சிக்காக வந்திருக்கும் மாரிங்கா, வைத்தியலிங்க சாமியோடு தங்கி மூலிகைகள் குறித்து ஆராய்ச்சி செய்து வந்தார். இருவரும் இணைந்து அப்பகுதியில் பல மூலிகை செடிகளை வளர்த்துள்ளனர். அப்படியே அவர்களுக்குள் காதலும் வளர்ந்து விட்டதாம். இதனால் மாரிங்கா இந்து மதத்துக்கு மாறி பெயரையும் காளியம்மன் என மாற்றிக் கொண்டுவிட்டார். இருவரும் திருமணமும் செய்து கொண்டனர்.

நன்றாக தமிழும் பேசக் கற்றுக் கொண்டுவிட்ட மாரிங்கா என்ற காளியம்மன் கூறுகையில்,

நான் தற்போது அன்னை தெரசா பல்கலைக்கழகத்தில் அம்மன் பற்றி ஆராய்ச்சி படிப்பை மேற்கொண்டு வருகிறேன். சீனா, இந்தோனேஷியா, தென் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு சென்று வந்துள்ளேன். ஆனால் எனக்கு பிடித்த நாடு இந்தியா தான்.

பாதுகாப்பு காரணங்களுக்காகத் தான் நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். மற்றபடி எங்களுக்குள் எந்தவித தாம்பத்ய உறவும் கிடையாது.

அலோபதி மருத்துவத்தை விட இயற்கை மருத்துவமே சிறந்தது ஆகும். இதில் எந்த பக்க விளைவுகளும் இல்லை. வாதநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறேன்.

அம்மன் புகழைப் பரப்ப இணைய தளமும் ஆரம்பித்துள்ளேன். இந்தப் பகுதியில் முதியோர்கள் பலபேர் ஆதரவின்றி அனாதையாக விடப்படுகிறார்கள். அவர்களைப் பாதுகாக்க முதியோர் இல்லம் கட்டுவதுதான் எனது லட்சியம் என்கிறார்.

அக்னி
18-10-2007, 12:19 PM
மக்கள் சேவைக்காக, திருமணம் செய்தவர்களை நாமும் வாழ்த்துவோம்...
போலிச்சாமியார்களின் லீலைகளால், சாமியார்கள் என்றாலே, ஏற்படும் சந்தேகங்களை,
தமது முன்மாதிரியான சமூகசேவைகளால், இந்தப் புதுமணத் தம்பதியர் களையட்டும்...

alaguraj
18-10-2007, 12:53 PM
சுவாமி விவேகானந்தர் அமெரிக்கா சென்ற பொழுது அவரிடத்தில் அமெரிக்க பெண்மணி ஒருவர் "சுவாமி நீங்கள் என்னைத் திருமணம் செய்து கொள்வீர்களா?" என்று கேட்டார்.

சிறிது குழம்பிப்போன விவேகானந்தர், "எது உங்களை இந்த கேள்வி கேட்க தூண்டியது?" என வினவினார்.

அதற்கு அந்த பெண்மணி, "உங்களது அறிவாற்றல் தான் என்னை அந்த கேள்வி கேட்க தூண்டியது. எனக்கு உங்களைப் போல ஒரு பிள்ளை வேண்டும் அதனால் தான் அப்படி கேட்டேன்" என்று கூறினார்.

விவேகானந்தர் அதற்கு சற்றும் யோசிக்காமல், "ஒரு அறிவாளி பிள்ளைக்காகவா இப்படி வினவினாய், அதற்காக நீ ஒரு பதினைந்து வருடம் காத்திருக்க வேண்டாம் என்னை இப்பொழுதே உன் மகனாக தருகிறேன், ஏற்றுக்கொள் !" என்று கூறினார்.

இவர் எப்படியோ............

அக்னி
18-10-2007, 01:49 PM
சூப்பர் அழகு...
இதுதான் நிறைகுடம் தளம்பாது என்று சொல்வது...

அறிஞர்
18-10-2007, 01:56 PM
அருமையான விசயங்கள்..
அழகுதுரையின் விவேகானந்தர் பதிப்பு வெகு அருமை...

நேசம்
18-10-2007, 01:59 PM
ஆஸ்திரேலியா பெண் நம்ம நாட்டு சாமியாரை திருமணம் செய்தது நமது நாட்டின் பண்பாட்டின் வலிமையை காட்டுகிறது.

ஜோய்ஸ்
23-10-2007, 07:04 AM
பாதுகாப்பு காரணங்களுக்காகத்தான் மணம் செய்தேன்,தாம்பத்தியம் இல்லை என்று அவரே சொன்ன பிறகும்,
நம்மவர்களின் பாராட்டுக்களை பார்த்து வியக்கிறேன்.
மறுபடியும் படித்து பாருங்கள்.