PDA

View Full Version : எழுத்து(குறை) பிரசவம்..!!



பூமகள்
18-10-2007, 10:13 AM
http://img32.picoodle.com/img/img32/6/10/18/poomagal/f_handpenm_41c70d4.jpg

ஓவியத்தில்
வண்ணங்களின்
ஒட்டுமொத்தமும் - முழுதும்
தீட்டப்படாமலே அழகாய்
காட்டும் புத்தோவியமாக்கி..!!

முளையாத பால்ப்பல்லின்றி
முத்தாய்ப்பாய் சிரிக்கும்
மூன்றுமாத மழலையின்
முகம்காட்டும்
புன்முறுவலை புன்னகையாக்கி..!!

கார்மேகம் சூழ்ந்து
சாரல் பட்டதே
சிரபுன்ஜி மழையாக
சத்தமில்லாமல்
நினைக்க வைத்து
சங்கடப்படுத்தும்
மழையை சீவி
தூரலாக்கி..!!

எழுத எத்தனிக்கும்
என் எண்ணவோட்டத்தின்
வேகத்தில்
எழுதமுடியா என்
எழுதுகோல் எப்போதும்
பாதி எண்ணங்களையே
முனகலுடன்
பிரசவிக்கும்
குறை பிரசவங்களாக்கி....!!

சுகந்தப்ரீதன்
18-10-2007, 10:25 AM
எழுத நினத்ததை எல்லாம் எழுத முடியாத வருத்தம்..? ஆனாலும் எழுதிவிட்டீர்கள் எழுத நினைத்ததை..! நல்ல கவிதை.. வாழ்த்துக்கள் அக்காவிற்க்கு..!

அக்னி
18-10-2007, 10:31 AM
இதுவும் பாதிக் கவிதைபோல தொக்கி நிற்பதாய் ஒரு உணர்வு...
இன்னமும் கருவை ஆழமாய் விவரித்திருக்கலாம்...

குறையா எழுத்துக்களின்
பிரசவம் குறையாது...

படத்தைப் பார்க்கும்போது, என் மனதில் இன்னொன்று தோன்றுகின்றது...
பத்துவிரல்கள் இருந்த போதும்,
எழுதிட இன்னொரு விரலாய்,
முளைவிடுகின்றது... பேனா...

பாராட்டுக்கள் பூமகள்...

praveen
18-10-2007, 10:32 AM
கவிதை நன்றாக இருப்பதாக நான் அறிகிறேன். இந்த கவிதை முழுபிரசவம் தானே?.

சிவா.ஜி
18-10-2007, 10:41 AM
நான் 10 நிமிடங்களாக தட்டச்சி பதிக்க நினைத்தபோது...இணையத்தின் தடங்கல்...மீண்டும் வந்த போது நான் சொல்ல நினைத்திருந்ததை அக்னி எழுதுயிருக்கிறார்.

கார்மேகம் சூழ்ந்து
சாரல் பட்டதே
சிரபுன்ஜி மழையாக
சத்தமில்லாமல்
நினைக்க வைத்து
சங்கடப்படுத்தும்
மழையை சீவி
தூரலாக்கி..!!

இநதப் பத்தியில் என்ன சொல்ல வருகிறார் என்பது எனக்கு விளங்கவில்லை.

பென்ஸ்
18-10-2007, 11:10 AM
ஒரு எழுத்து
ஒற்றை வரி
ஒரே எண்ணம்..
ஒன்றான சிந்தனை
என்ற வித்தியாசங்கள் இருந்தாலும்

குறைவாக இருந்தால்
குறை குழந்தையாகாது...
பயனாக இருந்தால்
பாரும் வாழ்த்தும்...

கவிதை எல்லோரையும் அடைய வேண்டிய அவசியம் இல்லை
அது செய்ய வேண்டியதை செய்தால் போது, அந்த வகையில் இது முழு கவிதைதானே..!!!

கஜினி
18-10-2007, 11:25 AM
கவிதை நல்லா இருக்குங்க பூமகள்.

அமரன்
19-10-2007, 08:22 AM
பார்வை முதிர்ச்சி நிறைவாக்கும்
முயற்சி திருவினையாக்கும்.
தொடருங்கள்....

பூமகள்
19-10-2007, 08:25 AM
எழுத நினத்ததை எல்லாம் எழுத முடியாத வருத்தம்..? ஆனாலும் எழுதிவிட்டீர்கள் எழுத நினைத்ததை..! நல்ல கவிதை.. வாழ்த்துக்கள் அக்காவிற்க்கு..!
மிக்க நன்றிகள் ப்ரீதன் அண்ணா.:D

பூமகள்
19-10-2007, 08:30 AM
இதுவும் பாதிக் கவிதைபோல தொக்கி நிற்பதாய் ஒரு உணர்வு...
இன்னமும் கருவை ஆழமாய் விவரித்திருக்கலாம்...

நன்றிகள் அக்னி அண்ணா.
கவிதை நிஜமாவே குறைபிரசவமாகிவிட்டதோ?? :icon_ush::icon_ush:

பூமகள்
19-10-2007, 08:36 AM
கவிதை நன்றாக இருப்பதாக நான் அறிகிறேன். இந்த கவிதை முழுபிரசவம் தானே?.
மிகுந்த நன்றிகள் பிரவீன் அண்ணா. ஆமாம்... இப்படி சந்தேகமாய் கேட்டால் என்ன அர்த்தம்?? நீங்கள் தான் சொல்லனும்...!!


கார்மேகம் சூழ்ந்து
சாரல் பட்டதே
சிரபுன்ஜி மழையாக
சத்தமில்லாமல்
நினைக்க வைத்து
சங்கடப்படுத்தும்
மழையை சீவி
தூரலாக்கி..!!

இநதப் பத்தியில் என்ன சொல்ல வருகிறார் என்பது எனக்கு விளங்கவில்லை.
"சின்ன மழைச் சாரலையே பெரிய மழையாகக் கருத வைத்து மனத்தை சங்கடப்படுத்தி எழுத வைக்கும் மழையை நிஜத்தை அது தூரல் தான் என்று உணர்ந்து......" என்ற பொருள்படும்படி எழுதினேன் சிவா அண்ணா.
இதில் இன்னொரு அர்த்தமும் கொள்ளலாம் என்று நினைக்கிறேன். யாரும்... இதற்கு வேறு பரிணாமத்தில் விளக்கமளிக்க இயலுமா??

உங்க பின்னூட்டத்திற்கு நன்றிகள் சிவா அண்ணா.

பூமகள்
19-10-2007, 08:38 AM
குறைவாக இருந்தால்
குறை குழந்தையாகாது...
பயனாக இருந்தால்
பாரும் வாழ்த்தும்...

கவிதை எல்லோரையும் அடைய வேண்டிய அவசியம் இல்லை
அது செய்ய வேண்டியதை செய்தால் போது, அந்த வகையில் இது முழு கவிதைதானே..!!!
மிகச்சரியாக கூற்று பென்ஸ் அண்ணா.
மிகுந்த நன்றிகள் உங்களின் விளக்கத்திற்கும் பின்னூட்ட ஊக்கத்திற்கும்..!!

பூமகள்
19-10-2007, 08:40 AM
கவிதை நல்லா இருக்குங்க பூமகள்.
நன்றிகள் கஜினி..!!
உங்கள் படையெடுப்பு என் கவிதை வரை வந்தது கண்டு மகிழ்ச்சி..!!

பார்வை முதிர்ச்சி நிறைவாக்கும்
முயற்சி திருவினையாக்கும்.
தொடருங்கள்....
நன்றிகள் அமர் அண்ணா.
உங்களின் சிந்தை பின்னூட்டம் நிறைவாக்கும் என் கவிதையை...!!